Thursday, 7 August 2014

இல்லங்களை இஸ்லாமயமாக்குவோம்..ஒவ்வொரு மனிதனுக்கும் பல லட்சியங்களும் ஆசைகளும் உண்டுஅவற்றில் மிக முக்கியமானது என்னெவெனில் வாழ்க்கை முடிவதற்கு முன் எப்பாடுபட்டாவது தன் குடும்பத்திற்கும் சந்ததிகளுக்கும் ஒரு வீட்டை கட்டியாக வேண்டும் என்பது தான் அந்த ஆசை நம்மில் பலரும் இந்த லட்சியத்தை அடைந்து கொள்கின்றனர் ஆனால் ஒரு பெரிய வேதனை என்னவென்றால்அந்த வீட்டின் கட்டிய அமைப்பும் அதற்கு பூசப்பட்ட வண்ணங்களும் சுக வாழ்வுக்கு வேண்டிய எல்லா உயர்ந்த பொருட்களும் இருக்கின்றன என்றாலும் வீட்டில் நிம்மதியோ மகிழ்ச்சியோ இல்லை..

 வீடெல்லாம் வீடல்ல நிம்மதியான வீடு தான் சிறந்த வீடு நமது இல்லங்கள் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு நிரப்ப நாம் என்ன செய்ய வேண்டும் இதை அறிந்து கொள்வது தான் இன்றைய ஜூம்ஆவின் நோக்கமாகும் மனிதன் சுற்றுலா.  நண்பர்கள் சந்திப்பு.  விளையாட்டின் மூலம் நிம்மதியை தேடி வீட்டை விட்டு வெளியேறுகின்றான்..

நிம்மதி எங்கே..

أنس بن مالك قال: أوصاني رسول الله صلى الله عليه وسلم بخمس خصال، قال لي
يا أنس أسبغ الوضوء يزد في عمرك، وسلم على من لقيت من أمتي تكثر حسناتك، وإذا دخلت فسلم على أهل بيتك يكثر خير أهل بيتك، وصل صلاة الضحى؛ فإنها صلاة الأوابين قبلك، يا أنس، ارحم الصغير ووقر الكبير تكن من رفقائي يوم القيامة

அனஸ்(ரலி) அவர்கள் சொல்கின்றார்கள் எனக்கு வஸிய்யத் செய்கின்ற போது நாயகம் (ஸல்) சொன்னார்கள். ஒழுவை பரிபூரணமாக செய்யுங்கள் அது உங்களுக்கு ஆயுளை அதிகப்படுத்தும் என் உம்மத்தில் நீ சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஸலாம் சொல்லுங்கள் அது உனக்கு நன்மைகளை அதிகப்படுத்தும் வீட்டில் உள்ளே நுழைகின்ற பொழுது உனது வீட்டில் உள்ளோருக்கும் ஸலாம் சொல் அது உனது வீட்டில் நலவுகளை அதிகப்படுத்தும் நீ லுஹா தொழுகையை தொழுது கொள் அது இறைவனின் பக்கம் மீள்பவர்களின் தொழுகையாகும் என்றார்கள் சிறுவருக்கு கருணை காட்டு பெரியவரை கண்ணியப்படுத்து நீ மறுமையில் எனது நண்பர்களில் ஒருவனாக ஆகி விடுவாய் என்றார்கள்.

நூல். தப்ஸீர் இப்னு கஸீர்.

ஒரு மனிதர் நபி இடம் வந்து தனது வறுமையை பற்றி முறையிட்ட போது நபி அவர்கள் சொன்னார்கள் நீங்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைகின்ற போது ஆட்கள் இருந்தால் அவர்களுக்கும் எந்த ஒருவரும் இல்லாவிட்டால் உங்களை நீங்களே ஸலாம் சொல்லுங்கள் பிறகு சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுங்கள் என்றார்கள் நாயகம் சொன்னதை அந்த மனிதர் செய்தார் அதனால் அல்லாஹ் அவருக்கு ரிஸ்கை விசாலமாக்கினான் அந்த ரிஸ்கை அவருடைய அண்டை வீட்டாருக்கும் பொழிந்தான்.

நூல். ரூஹுல் பயான்.

ஆயிஷா (ரலி) அவர்களின் வீடே சிறந்த வீடு..

ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள் எனது அறையில் 3 சந்திரன்கள் வந்து விழுவதாக நான் கனவு கண்டேன் அதற்கு விளக்கம் என்னவென்று அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் சொன்னார்கள் உனது கனவு பலித்தால் அதனுடைய விளக்கம் இது தான் இந்த பூமியில் மிகச் சிறந்தவர்களான 3 பேர் உனது வீட்டில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்றார்கள் நபி மரணித்த பொழுது அபூபக்கர் ஆயிஷாவிடம் உனது 3 சந்திரன்களில் இது மிகச் சிறந்தது என்றார்கள் இதற்கு பின் அபூபக்கர் உமர் இருவரும் ஆயிஷா வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார்கள் ஹயாத்துன் நபியான நாயகத்தையும் மண்ணறையிலும் உயிருடன் வாழும் தகுதி பெற்ற ஷஹீத்களான அபூபக்கர் உமர் (ரலி) இருவரையும் ஆயிஷாவின் வீடு சுமந்திருப்பதுடன் ஹஜ் மற்றும் ஸியாரத்தின் மூலம் தினமும் எண்ணற்ற மக்களின் ஸலாமை கேட்கும் பாக்கியத்தை பெற்றிருப்பதாலும் அந்த வீடு பாக்கியம் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது..

நூல். தப்ரானி.

இல்லத்திற்கு நிம்மதியை சுமந்துவரும் இனிய செயல்கள்.

رسول الله (صلى الله عليه وآله) (3):
إجعلوا لبيوتكم نصيباً من القرآن ، فإِن البيت إِذا قرىءَ فيه القرآن يستع على أَهله وكثر خيره ، وكان سكانه في زيادة ، وإِذا لم يقرأ فيه القرآن ضُيِّق على أَهله ، وقلَّ خيره ، وكان سكانه في نقصان.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். எந்த வீட்டில் குர்ஆன் ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் நலவுகள் அதிகமாகும்.எந்த வீட்டில் குர் ஆன் ஓதப்படவில்லையோ அந்த வீட்டில் நலவுகள் குறைந்துபோகும்.

நூல். துர்ருல் மன்ஸூர்

உம்மு ஹானி (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
என் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். வந்ததும் என்னிடம் உன் வீட்டில் பரக்கத்தை என்னால் காண முடியவில்லையே ஏன் என்றார்கள். அப்போது நான் நபியிடம் எனது வீட்டில் எந்த பரக்கத்தை நீங்கள் மறுத்தீர்களோ அந்த பரக்கத் என்று கேட்ட பொழுது நாயகம் சொன்னார்கள் உனது வீட்டில் நான் ஆடுகளை காணவில்லையே என்றார்கள்.

நூல். தப்ரானி.

கஸ்ராவே (பெண்) உனது பெற்றோருக்கு உபகாரம் செய்வாயாக அது உனது வீட்டில் நலவுகளை அதிகப்படுத்தும்
பெற்றோருக்கு கொடுமை செய்து அவர்களின் இதயங்களை இடிந்து போக செய்யும் இல்லங்கள் இறை சாபத்திற்கு ஆளாகும்..

நூல். உஸ்துல் கஃபா

أما صلاة الرجل في بيته تطوعاً فنور فنور بيتك ما استطعت
நபி (ஸல்)  அவர்கள் சொன்னார்கள்.  வீட்டில் தொழுகின்ற மனிதனுடைய நபில் தொழுகையாகிறது வீட்டிற்கு ஒளியாக இருக்கின்றது எனவே முடிந்தவரை வணங்கி வீட்டை ஒளிமயமாக்கு.

நூல். மஜ்மவுஸ் ஸவாயித்

ومن جلس في بيته لم يغتب أحداً بسوء كان ضامناً على الله عز وجل فيريد أن يخرجني عدو الله من بيتي إلى المجلس. رواه الطبراني في الأوسط

நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். யார் எவரையும் பற்றி புறம் பேசாத நிலையில் வீட்டில் இருக்கின்றாரோ அவனை காப்பாற்றுவது அல்லாவின் மீது பொறுப்பாகி விட்டது..

நூல். மஜ்மவுஸ் ஸவாயித்.

நிம்மதியை மன அமைதியை காப்பதில் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு.

وعن أنس قال : كان النبي صلى الله عليه وسلم عند بعض نسائه فأرسلت إحدى أمهات المؤمنين بصحفة فيها طعام فضربت التي النبي صلى الله عليه وسلم في بيتها يد الخادم فسقطت الصحفة فانفلقت فجمع النبي صلى الله عليه وسلم فلق الصحفة ثم جعل يجمع فيها الطعام الذي كان في الصحفة ويقول : " غارت أمكم " ثم حبس الخادم حتى أتي بصحفة من عند التي هو في بيتها فدفع الصحفة الصحيحة إلى التي كسرت صحفتها وأمسك المكسورة في بيت التي كسرت . رواه البخاري


நாயகம் அவர்கள் தன்னுடைய ஒரு மனைவியின் வீட்டில் இருந்தார்கள் அது உம்மு சலமா வின் வீடு என்றும் சொல்லப்படுகிறது அப்பொழுது மற்றொரு மனைவி அது மற்றொரு மனைவி ஸைனப் என்று சொல்லப்படுகிறது அவர்கள் ஒரு உணவு தட்டை நபி இடம் பணியாளர்கள் மூலம் அனுப்பி வைத்தார்கள் இதனால் கோபம் கொண்ட நபியின் மனைவி பணியாளர்களின் கையை தட்டினார்கள் அந்த தட்டு கீழே விழுந்தது உணவும் சிதரியது உடனே நாயகம் பொறுமையுடன் அந்த தட்டின் உடைந்த துண்டுகளை சேர்த்து ஒன்றாக்கி அதில் சிந்திய உணவுகளை எடுத்து வைத்து விட்டு உங்கள் தாயிக்கு ரோஷம் வந்து விட்டதுஎன்று மட்டும் சொல்லி விட்டு தான் இருந்த மனைவி இடம் நல்ல தட்டை பெற்று உடைந்த தட்டுக்கு பகரமாக பணியாளரிடம் வழங்கி விட்டு உடைந்த தட்டை இருந்த வீட்டில் வைத்துக் கொண்டார்கள்.

நூல். புகாரி. மிஸ்காத். பக்கம். 255

இந்த நிகழ்வை போன்று நபியின் வாழ்வை பின் பற்றி விட்டு கொடுத்தல் சகித்தல் மன்னித்தல் புரிந்து வாழ்தல் இப்படிப்பட்ட குணங்கள் பெறாத மனிதர்கள் வாழும் வீடு  மன அமைதியை விட்டு தூரமாகிவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் ஒரு வீட்டாரை பிரியப்பட்டால் அவர்களின் உள்ளத்தில் மென்மையை நுழைப்பான்.

நூல். மிஸ்காத்.

أبو إمامة إن رسول الله صلى الله عليه وسلم قال " إن إبليس لما نزل إلى الأرض قال
اجعل لي مؤذناً قال المزامير،

ஷைத்தானை அல்லாஹ் பூமிக்கு விரட்டிய போது அவன் அல்லாஹ்விடம் நீ எனக்கு ஒரு அழைப்பாளரை கொடு என்று கேட்டபோது இசைக்கருவிதான் உனது அழைப்பாளன் என்று அல்லாஹ் சொன்னான்.

நூல். இஹ்யா.

இறைத்தூதர்களையும் இறைநேசர்களையும் பழித்துப்பேசுவதும் அதை கேட்பதும் அவர்களுக்கு துணையாக இருப்பதும் அமைதிக்கு ஆபத்தானதாகும்.

ابن جرير وابن أبي حاتم وأبو الشيخ عن السدي في قوله { وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعباً } قال : كان رجل من النصارى بالمدينة إذا سمع المنادي ينادي : أشهد أن محمداً رسول الله . قال : أحرق الله الكاذب ، فدخل خادمه ذات ليلة من الليالي بنار وهو قائم وأهله نيام ، فسقطت شرارة فاحرقت البيت واحترق هو وأهله .

மதினாவில் ஒரு கிருஸ்தவன் வாழ்ந்தான் அவன் பாங்கு சப்தத்தை கேட்கும்போதெல்லாம் அல்லாஹ் பொய்யரான முஹம்மது (ஸல்) அவர்களை கரிப்பானாக என்று சொல்வான் ஒரு நாள் அவனுடைய பணியளன் இரவு வேலையில் நெருப்புடன் அந்த கிருஸ்தவனின் வீட்டுக்கு வந்தான் அவனுடைய கையில் இருந்த நெருப்பு கங்கு கீழே விழுந்தது எனவே வீடு முற்றிலும் எரிந்தது அந்த கிறிஸ்தவனும் அவனுடைய வீட்டாரும் எரிந்தனர்.

நூல். துர்ருல் மன்ஸூர்.

இறை தூதர்களையும் சஹாபாக்களையும் இறை நேசர்களையும் இழிவாக பேசக்கூடிய வஹ்ஹாபிகளின் பேச்சை நேரடியகவோ டிவி கேசட் பத்திரிக்கை போன்ற ஊடகங்களின் வழியாகவோ கேட்பவர்களும் இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்   
      

Thursday, 31 July 2014

சுன்னத்துக்கள் உம்மத்தின் முகவரிقُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ) [آل عمران31


''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆனுக்கும் நபி ஸல் அவர்களுக்கும் உள்ள தொடர்பை இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

குர்ஆனில் சுமார் 25 இடங்களுக்கு மேலாக அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள் என்பதுடன் சேர்த்து பெருமானாருக்கும் கட்டுப்படுங் கள் என்ற வாசகத்தை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

நாயகத்துக்கு கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதாகவே ஆகும்.ஏனெனில் குர்ஆனை மட்டும் இந்த உம்மத்துக்கு தந்திருந்தால் அதைமட்டுமே வைத்துக்கொண்டு இந்த சமுதாயம் ஒன்றும் செய்ய முடியாது.

அதை கற்றுக்கொடுப்பதற்கும்,வாழ்கையாக வடிவமைத்து கொடுப்பதற்கும் நபி ஸல் அவர்கள் இந்த உம்மத்துக்கு தேவைப்பட் டார்கள்.

இதை அல்லாஹ் தன் வேதத்தில் தெளிவுபடுத்துகிறான்.

وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ) [النحل: 44],

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அதனால் தான் வேதங்களுடன் நபிமார்களும் மனித சமூகத்திற்கு தேவைப்பட்டனர்.

நபி ஸல் அவர்களின் சுன்னாவை ஒதுக்கிவைத்துவிட்டு திருக்குர்ஆ ன் மட்டும் போதும் என்று சொல்பவர்கள், மருத்துவம் பற்றிய நூலை படித்துவிட்டு அறுவைசிகிச்சை செய்யமுடியுமா?என்று யோசிக்க வேண்டும்.சட்ட நூட்களை படித்துவிட்டு கோர்ட்டில் வாதம் செய்ய முடியுமா? என்று யோசிக்க வேண்டும்.அப்படி செய்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?

روى البيهقي أن عمران بن حصين -رضي الله عنه- ذكر الشفاعة, فقال رجل من القوم: يا أبا نُجيد: إنكم تحدثوننا بأحاديث لم نجد لها أصلاً في القرآن, فغضب عمران وقال للرجل: قرأت القرآن؟! قال: نعم. قال: فهل وجدت فيه صلاة العشاء أربعًا والعصر أربعًا؟! قال: لا. قال: فعمن أخذتم ذلك؟! أخذتموه عنا -أي الصحابة- وأخذناه عن رسول الله -صلى الله عليه وسلم-؟! أوجدتم فيه من كل أربعين شاة شاة -يعني في الزكاة- وفي كل كذا بعيرًا كذا، وفي كل كذا درهمًا كذا؟! قال: لا. قال: فعمن أخذتم ذلك؟! ألستم عنا أخذتموه، وأخذناه عن النبي -صلى الله عليه وسلم-؟! أوجدتم في القرآن: (وَلْيَطَّوَّفُوا بِالْبَيْتِ الْعَتِيقِ) [الحج: 29] أوجدتم فيه: فطوفوا سبعًا واركعوا ركعتين خلف المقام؟! أما سمعتم الله قال في كتابه: (وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا) [الحشر: 7]؟!

ஹழ்ரத் இம்ரான் இப்னு ஹசீன் ரலி அவர்கள் ஷபாஅத்தை பற்றிய சில செய்திகளை கூறியபோது, கூட்டத்தில் இருந்த ஒரு மனிதர்,குர்ஆனில் இல்லாத சில செய்திகளை நீங்கள் கூறுகிறீர்கள் என்றார்.அப்போது கடும் கோபம் கொண்ட இம்ரான் ரலி அவர்கள் அந்த மனிதரிடம்,நீங்கள் குர்ஆனை படித்திருக்கிறீர்களா?என்று கேட்டார்கள்.ஆம் என்று பதில் கூறினார் அவர்.

குர்ஆனில் எங்காவது அஸர் தொழுகை நான்கு ரக்கஅத் என்றும் இஷா தொழுகை நான்கு ரக்கஅத் என்றும் வருகிறதா?என்று கேட்டபோது இல்லை என்று அவர் கூறினார்.

அப்படியானால் அதை எப்படி நீங்கள் தெரிந்து கொண்டீர்கள்? ஸஹாபாக்களான எங்களின் மூலம் தான்.
நாங்கள் எங்களின் நாயகத்தின் மூலம் தெரிந்துகொண்டோம்.                 அவ்வாறு ஜகாத் விஷயத்தில் 40 ஆட்டுக்கு ஒரு ஆடு என்றும் ஒட்டகத்தில் இவ்வளவு என்றும் நீங்கள் குர்ஆன் மூலம் தெரியவில்லை காரணம் குர்ஆனில் இல்லை.அதை நீங்கள் எங்களின் மூலமும் நாங்கள் நபி ஸல் அவர்களின் மூலமும் தெரிந்து கொண்டோம்.
தவாப் செய்யுங்கள் என்று குர்ஆனில் உண்டு.ஆனால் அதில் 7 சுற்றுக்கள் உண்டு என்றும் தவாபிர்க்கு பின் 2 ரக்கஅத் தொழவேண்டுமென்றும் நபி ஸல் அவர்கள் தான் நமக்கு சொல்லி தந்தார்கள்.
                                                               எனவே இந்த தூதரான நபி ஸல் அவர்கள் எதை சொன்னார்களோ அதை  எடுத்துநடக்கவேண்டும்,எதை தடுத்தாரோ அதைவிட்டும் விலகி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் சொல்லவில்லையா? என்று கேட்டார்கள். 
                                
எனவே நாயகத்தை விட்டு குர்ஆனை தனித்து பார்க்க இயலாது.     அதனால் தான் அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் நாயகம் வாழ்வு குறித்து கேட்கப்பட்டபோது அவர்களின் குணம் குர்ஆன் என்றார்கள்.

அல்லாஹ்வின் வார்த்தைகள் மட்டும் வஹியல்ல, நாயகத்தின் சுன்னதுக்களும் தான். ஆனால் இரண்டுக்குமிடையில் ஒரு வித்தியாசம் உண்டு.

 குர்ஆன், வார்த்தையும் கருத்தும் அல்லாஹ்வுக்கு சொந்தம்.சுன்னாவை பொருத்தவரையில் வார்த்தை நாயத்துக்கு சொந்தம்,கருத்து அல்லாஹ்வுக்கு சொந்தம்.அதை வஹ் ஙய்ர மத்லு என்று சொல்வார்கள்.

அதனால் தான் சுன்னத்தை விடுபவன் பாவியாக இருக்கலாம் அதை மறுப்பவன் காபிர் என்பது இமாம்களின் யோகோபித்த முடிவாகும்.

மஸ்ஜித் நபவியில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதரை எழுப்பி விடசொல்லி நபி ஸல் அவர்கள், ஹழ்ரத் அலி ரலி அவர்களுக்கு உத்தரவிட்டபோது,நன்மையான காரியங்களில் தாங்களே முந்திக்கொள்வீர்கள் ஆனால் இவர் விஷயத்தில் தாங்கள் என்னிடம் சொல்ல காரணம் என்ன வென்று அலி ரலி அவர்கள் நாயகத்திடம் கேட்டபோது.
அதற்கு பதிலளித்த நாயகம்,அலியே!நீர் எழுப்பிவிட்டு அதை அவர் மறுத்தால் ஒன்றுமில்லை.நான் எழுப்பி அவர் மறுத்தால் காபிராகிவிடுவார் என்று கூறினார்கள்.
நபிமார்களுக்குப்பின் இந்த உலகில் மிகச்சிறந்த மனிதரான ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

يقول أبو بكر الصديق -رضي الله عنه- أفضل هذه الأمة بعد نبيها: لست تاركا شيئا كان رسول الله -صلى الله عليه وسلم- يعمل به إلا عملت به، وإني لأخشى إن تركت شيئا من أمره أن أزيغ.

நபி ஸல் அவர்கள் எதைச்செய்தாலும் அதை நான் விட்டதேயில்லை.அவர்களின் உத்தரவில் எதையேனும் நான் விட்டால் நான் வழிகெட்டுப்போகிவிடுவேன்.

சுன்னத்துக்கள் தான் இந்த உம்மத்தின் முகவரி.எந்த சமூகமும் அதன் தனித்துவத்தை இழந்தால் தன் கடந்த கால வரலாற்றை இழந்துவிடும். 

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற சமூகங்களுக்கு மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டவர்கள் நாம்.

நபி ஸல் அவர்களின் சுன்னத்தை தம் வாழ்வில் கடைபிடிக்கும் விஷயத்தில் ஸஹாபாக்களிடத்திலும்,தாபியீன்களிட்த்திளும் இருந்த பேனுதல் நமக்கு அழகிய முன்மாதிரியாகும்.

واستلم عمر بن الخطاب -رضي الله عنه- الحجر الأسود وقال: والله إني أعلم أنك حجر لا تضر ولا تنفع ولولا أني رأيت النبي -صلى الله عليه وسلم- يقبلك ما قبلتك. رواه مسلم

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை மூத்தமிட்டு  நீ ஒரு கல் என்றும் எந்த பயனையும்,இடையூரையும் உன்னால் தர முடியாது என்றும் நான் அறிவேன்.நபி ஸல் அவர்கள் உன்னை முத்தமிட நான் பார்த்திருக்காவிட்டால் உன்னை நான் முத்தமிட்டிருக்கமாட்டேன்.என்று கூறினார்கள்.


وقال علي بن أبي طالب: لو كان الدين بالرأي لكان باطن الخفين أحق بالمسح من ظاهرهما، وقد مسح رسول الله -صلى الله عليه وسلم- على ظاهر خفيه.

மார்க்கம் என்பது அறிவை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கு மானால் மோஸாவுக்கு மேல்பாகத்தில் மஸஹ் செய்வதை விட உள்பாகத்தில் மஸஹ் செய்வது தகுதியானது என்று சொல்லியிருப்பேன்.ஆனால் நபி ஸல் அவர்கள் மோஸாவின் மேல்பாகத்தில் தான் மசஹ் செய்தார்கள்.எனவே அதுவே சுன்னத்தாகும்.என்று ஹழ்ரத் அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.


بلغ من اتباع عبد الله ابن عمر سنة رسول الله عليه الصلاة والسلام انه إذا سافر من المدينة إلى مكة وقد كان في عهد رسول الله عليه الصلاة والسلام كان ابن عمر صغيرا اصغر من غيره ,وكان إذا سافر بعد ما كبر , بعد وفاة رسول الله عليه الصلاة والسلام كان ابن عمر يسأل الصحابة الكبار كان يقول من ايي مكان سارة ناقة النبي عليه الصلاة والسلام فيشيرون له إلى مواضع
يقولون نظن أن ناقته مشت من هنا أو من هنا , فكان ابن عمر يسير بناقته فوق هذا الطريق ويقول لعل خفا يقع على خف "لعل خف ناقتي يقع على خف ناقة رسول الله صل الله عليه وسلم " وكان ابن عمر في اثناء الطريق يسألهم اين كان النبي صل الله عليه وسلم يستريح , تحت أي شجرة ,فربما اشاروا له إلى بعض الشجر فيأتي ابن عمر وينزل ويستريح تحتها فعلا لفعل رسول الله عليه الصلاة والسلام

ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களின் சுன்னத்தை பின்பற்றுவதில் மிகவும் பேனுதல் உள்ளவர்கள்.நபி ஸல் அவர்களின் வபாத்திற்கு பிறகு மதீனாவிலிருந்து மக்கா பயணம் செய்தபோது பெரிய ஸஹாபிகளிடம் நாயகத்தின் பயணம் குறித்து கேட்பார்கள்.
பெருமானாரின் ஒட்டகம் எங்கெல்லாம் நின்றதோ அங்கெல்லாம் தங்களின் ஒட்டகத்தை நிறுத்துவார்கள்.எந்த இடங்களிலெல்லாம் நாயகம் ஒய்வெடுத்தார்களோ அங்கு தாங்களும் ஓய்வெடுப்பார்கள்.
எந்த பாதை வழியாக நாயகத்தின் ஒட்டகம் சென்றதோ அந்த வழியாக செல்வார்கள்.
மக்கா வெற்றி பெற்றபோது கஃபாவின் கதவை திறந்து உள்ளே சென்ற நபி ஸல் அவர்கள் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.
அதைபார்த்த இப்னு உமர் ரலி அவர்கள் கஃபாவின் உள்ளே சென்று பிலால் ரலி அவர்களிடம் நாயகம் எங்கே தொழுதார்கள்?என்பதை கேட்டறிந்து தாங்களும் அந்த இடத்தில் இரண்டு ரக்கஅத் 
தொழுதார்கள்.

عند البخاري من حديث ام حبيبة رضي الله عنها قالت سمعت النبي صل الله عليه وسلم يقول [ من صلى اثنتي عشرةَ ركعة في يومٍ وليلةٍ ، بني له بهن بيتٌ في الجنةِ .] تعني السنن الرواتب وهما الركعتان قبل الفجر ,واربع قبل الظهر ,وركعتان بعدها ,وركعتان بعد المغرب ,وركعتان بعد العشاء , قالت ام حبيبة : فما تركتهن منذ سمعتُهن من رسولِ اللهِ صلى اللهُ عليهِ وسلَّمَ . وقال ابنُ عنبسةَ : فما تركتُهن منذ سمعتُهن من أمِّ حبيبةَ . وقال عمروُ بنُ أوسٍ : ما تركتُهن منذ سمعتُهن من عنبسةَ . وقال النعمانُ بنُ سالمٍ : ما تركتُهن منذ سمعتُهن من عمروِ بنِ أوسٍ .]
الراوي: أم حبيبة رملة بنت أبي سفيان المحدث: مسلم - المصدر: صحيح مسلم - الصفحة أو
 الرقم: 728

எவர் ஒரு நாளில் 12 ரக்கஅத் தொழுவாரோ (அதாவது பஜ்ருக்கு முன் 2, ழுஹருக்குமுன் 4, ழுஹருக்கு பின் 2, மங்ரிபுக்கு பின் 2, இஷாவுக்கு பின் 2,)அவருக்கு  சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படும்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸை அறிவிக்கும் உம்மு ஹபீபா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.இந்த ஹதீஸை நாயகத்திடக் கேட்ட்திலிருந்து அந்த 12 ரக்கஅத்தை விட்டதில்லை.

உம்மு ஹபீபா ரலி அவர்களிடம் இதை கேட்டதிலிருந்து தான் விட்டதில்லை என இப்னு அன்பஸா ராவி கூறுகிறார்.
இவரிடம் கேட்டு அறிவிக்கும் அம்ரும்,அம்ரிடம் கேட்டு அறிவிக்கும் நுஃமானும் இவ்வாரே கூறுகின்றனர்.

من يعش منكم بعدي فسيرى اختلافاً كثيراً، فعليكم بسنتي

எனவே குழப்பமான காலத்தில் என் சுன்னத்தை வலுவாக பிடித்துக் கொள்ளுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

قال -صلى الله عليه وسلم-: "إن من ورائكم زمان صبر، للمتمسك فيه أجر خمسين شهيداً منكم" الطبراني وصححه الألباني.

பின்னால் ஒரு காலம் வரும்,அதில் சுன்னத்தை பற்றி பிடிப்பவருக்கு 50 ஷஹீத்களின் நன்மை கிடைக்கும்.என்று நபி ஸல் அவர்கள் 
கூறினார்கள்.
قال عبد الله الديلمي: إن أول ذهاب الدين ترك السنة، يذهب الدين سُنةً سُنةً كما يذهب الحبل قوة قوة.

இந்த தீனின் அழிவு சுன்னதை விடுவதிலிருந்து ஆரம்பிக்கும் என அப்துல்லாஹ் தைலமி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
பிறப்பு முதல் இறப்பு வரை மிகச்சிறந்த வழிகாட்டுதலை தரப்பட்ட இந்த உம்மத் தன் சுய முகவரியை இழந்துவிடாமல் இருக்க சுன்னத்துக்களை பின் பற்றி நடப்போமாக!

என் வழிமுறையை நேசிப்பவர் என்னை நேசிப்பவர்.
என்னை நேசிப்பவர் என்னுடன் சுவனத்தில் இருப்பார். (நபி ஸல் அவர்கள்)