Wednesday 27 March 2013

வட்டியின் புதிய வடிவங்கள்



ثبت في مسند الإمام أحمد رحمه الله من حديث عقبة بن عامر رضي الله عنه ’أنه سمع النبي صلى الله عليه وسلم يقول : ( لا تُخيفوا أنفسكم بعد أمنها ) قالوا : وما ذاك يارسول الله ؟ قال : ( الدين ) .

அல்லாஹுத்தஆலா உங்களுக்கு அச்சமில்லாத வாழ்க்கையை தந்ததற்குபின் அதை நீங்கள் கெடுத்து உங்களுக்கு நீங்களே பயமுள்ள சூழலை உருவாக்கிக்கொள்ளாதீர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அது என்ன?என நபித்தோழர்கள் விளக்கம் கேட்டபோது,கடன் என்று பதில் கூறினார்கள்.

கடனுடன் வாழ்க்கை நடத்தும் ஒருவனின் வாழ்வு நிம்மதியில்லாத வாழ்க்கை என்று நபி ஸல் அவர்கள் உணர்த்துகிறார்கள்.

கடன் கெளரவமாக பார்க்கப்படுகிற காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

அவசியமான தேவைகளுக்கு மட்டும் தான் கடன் என்ற மனநிலையை மாறி ஆடம்பரமான வாழ்க்கைக்கும், அனாச்சாரமான செலவினங்களுக்கும் கடன் இன்றைக்கு அவசியமான ஒன்றாகிப்போனது.

இன்றைய இளைஞர்களின் பர்ஸை நிறப்பிக்கொண்டிருக்கும் கடன் அட்டை கூட கெளரவ அட்டையாகிப்போனது.

கடன் வாங்கி வியாபாரம் செய்யும் காலம் கடந்து கடனையே வியாபாரம் செய்யும் காலமிது.

கல்விக்கடன்,மருத்துவக்கடன்,வியாபாரக்கடன்,வாகனக்கடன்,வீட்டுகடன் என்று எங்கும் கடன் மயமாகவே காட்சியளிக்கிறது.

ஏழை,பணக்காரன் எனும் பாகுபாடின்றி எல்லோருடைய வாழ்வையும் ஆக்கிரமித்திருக்கிறது.
இஸ்லாத்தை பொருத்தவரையில் கடனை உதவியாக மட்டுமே பார்க்கிறது. அது வியாபாத்திற்கான மூலதனம் அல்ல.அதனால் தான் கஷ்டப்படும் ஒருவருக்கு கடன் கொடுப்பதை நன்மைக்குறிய காரியமாகவும், மார்க்க அடிப்படையில் அது முஸ்தஹப்பு என்ற அந்தஸ்தையும் பெறுகிறது.


وعند ابن ماجه بسند حسن أن النبي قال: (ما من مسلم يقرض مسلما قرضا مرتين إلا كان كصدقتها مرَّة

கஷ்டப்படும் முஸ்லிமான மனிதருக்கு எந்த முஸ்லிம் இரண்டு தடவை கடன் கொடுப்பாரோ அவருக்கு ஒரு தடவை ஸதகா செய்த நன்மை வழங்கப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.


: (رأيت ليلة أسري بي على باب الجنة مكتوبا الصدقة بعشر أمثالها والقرض بثمانية عشر، فقلت يا جبريل ما بال القرض أفضل من الصدقة؟ قال: لأن السائل يسأل وعنده، والمستقرض لا يستقرض إلا من حاجة
سنن ابن ماجة

ஸதகா செய்தால் பத்து மடங்கு நன்மையும்,கடன் கொடுத்தால் பதினெட்டு மடங்கு நன்மையும் வழங்கப்படும் என்று சுவனத்தின் வாசலில் எழுதப்பட்டிருந்ததை நான் மிஃராஜ் இரவில் பார்த்தேன்.கடன் ஸதகாவை விட சிறந்ததா?என்று ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜிப்ரயீல் அலை அவர்கள்,தர்ம்ம் கேட்பவன் தன்னிடம் இருந்தாலும் கேட்பான்.ஆனால் கடன் கேட்பவன் தனக்கு தேவையான போது மட்டும் தான் கேட்பான் என்று பதில் கூறினார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

தன் அவசியமான தேவைக்காக கடன் வாங்கிய ஒருவர் கடும் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவருக்கு கடனை நிறவேற்ற கால அவகாசம் தரவேண்டும் என அல்குர்ஆன் வலியுறுத்துகிறது.

وَإِن كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ ۚ وَأَن تَصَدَّقُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ

கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்;. இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.


கடன் வழங்கியவர் அவர் கொடுக்கும் அவகாசத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஸதகாவின் நன்மையை பெறுவார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இன்னும் ஒரு படிமேலே, அந்த கடனை பெருந்தன்மையுடன் தள்ளுபடி செய்துவிட்டால் அல்லாஹ் அவருக்கு நிழலில்லாத அந்த மறுமை நாளில் நிழல் கொடுப்பான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

கடன் கொடுப்பவர் விஷயத்தில் தாராள தன்மையுடனும்,விசாலமான மனதுடனும் நடந்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தும் இஸ்லாம், கடன் வாங்குபவர் விஷயத்தில் உச்ச கட்ட எச்சரிக்கை உணர்வை கடைபிடிக்கச்  சொல்கிறது.

கடன் பற்றிய விரிவான ஒழுங்குமுறைகளை கொண்ட வசனமே திருக்குர்ஆனின் மிகவும் பெரிய வசனமாகும்.

அவசியத்திற்காக கடன் வாங்கினாலும் கால தாமதம் செய்யாமல் அதை நிறைவேற்றுவதே சாலச்சிறந்ததாகும்.

கடன் அன்பை முறிக்கும் என்பார்கள்,ஆனால் இஸ்லாம் கடன் அமலை முறிக்கும் என்று கூறுகிறது.

மிகவும் சர்வசாதாரணமாகிப்போன கடன் விஷயத்தில் கடும் எச்சரிக்கையை இஸ்லாம் கடைபிடிக்கிறது.

இறந்தவரின் சொத்தை பங்கு வைக்கும் முன் அவரின் கடனை நிறைவேற்றச் சொல்கிறது.தகப்பனின் சொத்துக்கு பங்கு கேட்கும் மகன் அவரின் கடனுக்கு முதலாவதாக பொறுப்பெடுக்கச்சொல்கிறது,காரணம் கடன் அவரை மறுமையில் சிறைபிடிக்கும்


عَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
كُنَّا جُلُوسًا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أُتِيَ بِجَنَازَةٍ فَقَالُوا صَلِّ عَلَيْهَا فَقَالَ هَلْ عَلَيْهِ دَيْنٌ قَالُوا لَا قَالَ فَهَلْ تَرَكَ شَيْئًا قَالُوا لَا فَصَلَّى عَلَيْهِ ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ صَلِّ عَلَيْهَا قَالَ هَلْ عَلَيْهِ دَيْنٌ قِيلَ نَعَمْ قَالَ فَهَلْ تَرَكَ شَيْئًا قَالُوا ثَلَاثَةَ دَنَانِيرَ فَصَلَّى عَلَيْهَا ثُمَّ أُتِيَ بِالثَّالِثَةِ فَقَالُوا صَلِّ عَلَيْهَا قَالَ هَلْ تَرَكَ شَيْئًا قَالُوا لَا قَالَ فَهَلْ عَلَيْهِ دَيْنٌ قَالُوا ثَلَاثَةُ دَنَانِيرَ قَالَ صَلُّوا عَلَى صَاحِبِكُمْ قَالَ أَبُو قَتَادَةَ صَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ وَعَلَيَّ دَيْنُهُ فَصَلَّى عَلَيْهِ

فجعل رسول الله إذا لقيني يسألني هل قضيت الدين عن أخيك، حتى قلت له يا رسول الله قضيتهما فقال قال أبو قتادة
الآن بردت عليه جلدته

ஹழ்ரத் ஸல்மத்திப்னு அக்வஃ ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாங்கள் நபி ஸல் அவர்களுடன் அமர்ந்திருந்தோம்.அப்போது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டு அல்லாஹ்வின் தூதரே!இதற்கு தொழவையுங்கள் என்றனர்  உடனே நபி ஸல் அவர்கள்,இவர் மீது கடன் ஏதும் உள்ளதா?என்று கேட்டபோது, அவர்கள் இல்லை என்றனர்.இவர் ஏதேனும் விட்டுச்சென்றுள்ளாரா?என்று கேட்டபோது அதற்கும் இல்லை என்றனர். நபி ஸல் அவர்கள் அந்த மையித்துக்கு தொழ வைத்தார்கள்.
பின்பு இன்னொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டு தொழவைக்கச்சொன்னபோது நபி ஸல் அவர்கள் இவர் மீது கடன் உள்ளதா?என்று கேட்டபோது ஆம்!.என்றனர்.இவரின் கடனை நிறைவேற்ற ஏதும் விட்டுச்சென்றுள்ளாரா? என்று நபி ஸல் அவர்கள் கேட்டபோது,ஆம் மூன்று தீனார்கள் விட்டுச் சென்றுள்ளார்கள் என்று கூறியபோது அவருக்கும் நபி சல் அவர்கள் தொழ வைத்தார்கள்.

பின்பு மூன்றாவது ஒரு ஜனாஸா கொண்டு
வரப்பட்டது. 
  
அவர் மீது கடன் உள்ளதா?என்று கேட்டபோது ஆம்! என்று பதில் கூறினர்.  அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள் இவர் தன் கடனை நிறைவேற்ற வேறு ஏதேனும் விட்டுச்சென்றுள்ளாரா?என்று கேட்டபோது, அவர்கள் இல்லை என்று பதில் கூறினார்கள்.

அப்போது நபி ஸல் அவர்கள் உங்கள் தோழருக்கு நீங்களே தொழவைத்துக்  கொள்ளுங்கள்.என்றார்கள்.அப்போது அந்த சபையில் இருந்த அபூ கதாதா ரலி அவர்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தாங்கள் தொழவையுங்கள்.இவர் கடனுக்கு நான் பொருப்பேற்றுக்கொள்கிறேன்.என்றதும் -நபி ஸல் அவர்கள் தொழவைத்தார்கள்.

புகாரி.

அபூ கதாதா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருநாள் நபி ஸல் அவர்கள் என்னை சந்தித்தபோது-அபூ கதாதாவே! நீ வாக்களித்த அந்த கடனை நிறைவேற்றிவிட்டாயா?என்று கேட்டார்கள்.    அதற்கு நான் ஆம்!நிறைவேற்றிவிட்டேன் என்றதும் இப்போது இப்போது தான் அந்த மையித்தின் தோள் குளிர்ந்தது என்றார்கள்.

கடனுடன் மரணித்த ஒருவருக்கு நபி ஸல் அவர்கள் தொழவைக்க மறுத்துள்ளார்கள்.இதன்மூலம் கடனாளிக்கு தொழ வைக்க கூடாது என்று அர்த்தப்படுத்திவிடக்கூடாது.
நான் தொழவைக்கமாட்டேன் என்று தான் சொன்னார்கள்,நீங்கள் தொழவையுங்கள் என்று தெளிவாகச்சொல்லியுள்ளார்கள்.


وفي جامع الترمذي بسند صحيح عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم أنه قال:" من فارق الروحُ الجسدَ وهو برئ من ثلاث دخل الجنة من الكبر،والغلول،والدين

உடலை விட்டும் உயிர் பிரிந்து விட்ட ஒருவர் பெருமை,மோசடி,கடன் இந்த மூன்றை விட்டும் நீங்கியிருந்தால் மட்டுமே சுவனம் நுழைவார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

وفي رواية الحاكم ( إن صاحبكم حُبس على باب الجنة بدين كان عليه

கடனுக்காக சுவனத்தின் வாசலில் உங்கள் தோழர் ஒருவர் தடுக்கப்பட்டிருக்கி  றார் என்று நபியின் சொல் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

روى النسائي في سننه بسند حسن، عن محمد بن عبدالله بن جحش رضي الله عنه قال : كان رسول الله صلى الله عليه وسلم قاعداً حيث توضع الجنائز فرفع رأسه قبل السماء ، ثم خفض بصره ، فوضع يده على جبهته.
فقال : سبحان الله ‍‍‍!‍ سبحان الله ما أنزل من التشديد‍
قال : ففرقنا وسكتنا ’ حتى إذا كان الغد سألت رسول الله صلى الله عليه وسلم فقلت : ما التشديد الذي أنزل ؟
قال : في الدين، والذي نفسي بيده لو قتل رجل في سبيل الله ثم عاش، ثم قتل ثم عاش،ثم قتل وعليه دين ما أدخل الجنة حتى يُقضى دينه  .

நபி ஸல் அவர்கள் உட்கார்ந்திருந்தபோது பல ஜனாஸாக்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டது.அப்போது தங்களின் பார்வையை வானத்தின் பக்கம் உயர்த்தி, பின்பு தாழ்த்திவிட்டு, தங்களின் கையை நெற்றியில் வைத்து-
சுப்ஹானல்லாஹ்!என்ன கடுமையான எச்சரிக்கை இறங்கிவிட்டது! என்றார்கள்.
மறுநாள் நபி ஸல் அவர்களை சந்தித்து அதற்கான விளக்கம் கேட்டபோது-  அல்லாஹ்வின் பாதையில் கொலைசெய்யப்பட்ட ஒருவர்,மீண்டும் உயிர் பெற்று அல்லாஹ்வுக்காக கொல்லப்பட்டு,மீண்டும் உயிர்பெற்று அல்லாஹ்வுக்காக கொல்லப்பட்டு, இப்படி மூன்று தடவை அல்லாஹ்வின் பாதையில் தன் உயிரை தியாகம் செய்தாலும் அவர் மீது கடன் இருந்தால் அல்லாஹ் அவரை சுவனத்தில் நுழைக்கமாட்டான் என்று வஹி இறங்கியது என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் ரலி
இதற்காகத்தான் நபி ஸல் அவர்கள் கடனை விட்டும் அதிகமாக அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடியுள்ளார்கள்.
அதைப்பற்றி காரணம் கேட்டபோது இப்படி சொன்னார்கள்


روى الشيخان من حديث عائشة رضي الله عنها أن رسول الله كان يدعو في الصلاة:
" اللهم أني أعوذ بك من المغرم والمأثم " فقال له قائل:ما أكثر ما تستعيذ من المغرم ؟ فقال:" إن الرجل إذا غرم حدث فكذب ووعد فأخلف

கடன் வாங்கியவன் பொய்பேசுவான்.வாக்குறுதிக்கு மாற்றம் செய்வான் என்றார்கள்.

இரவில் கவலையை பகலில் கேவலத்தை பெற்றுத்தரும் கடனை விட்டும் எச்சரிக்கையாய் இரு என்று ஸலபீன்களான நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

கடன் இன்று உலகமயமாக்களாக ஆக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம்களின் வாழ்வில் வட்டி நுழைவதற்கு வழியில்லை,நுழைவாசல் வழியாக நுழையமுடியாத வட்டி- கடன் என்ற கொல்லப்புறவழியாக உள்ளே நுழைந்திருக்கிறது.அதை அடையாளம் கண்டு வேரறுப்பது முஸ்லிம்களின் மீது பிரதான கடமையாகும்.

வட்டிக்கும் கடனுக்கும் இடையில் உள்ள வேறுபாடு மிகவும் மெல்லியதே!  கடன் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக பெறுகிற எதுவும் வட்டியே!

வட்டிக்கு இலக்கணம் சொல்லும்போது நபி ஸல் அவர்கள் இப்படிச்சொன்னார்கள்

كل قرض جر منفعة فهو ربا

பலன் தரும் எந்த கடனும் வட்டியாகும்.என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்
.

المطالب العالية بزوائد المسانيد المانية لابن حجر (1/411)
وقد أخرجه: البيهقي في الكبرى، كتاب البيوع

அதனால் தான் கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரிடமிருந்து எந்த உதவியையும் பெறுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது.

حديث أنس بن مالك - رضي الله عنه - قال: قال رسول اللّه صلى الله عليه وسلم: «إذا أقرض أحدكم قرضاً فأهدى إليه أو حمله على الدابة فلا يركبها ولا يقبله، إلا أن يكون جرى بينه وبينه قبل ذلك
أخرجه ابن ماجة، كتاب الأحكام، باب: القرض، والبيهقي في السنن الكبرى كتاب البيوع


உங்களில் ஒருவர் மற்றவருக்கு கடன் கொடுத்திருந்து,கடன் பெற்றவர் இவருக்கு அன்பளிப்பு கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டாம்.மேலும் அவரின் வாகனத்தில் ஏறச்சொன்னால் ஏறவேண்டாம்.அவர்கள் இருவருக்கும் முன்னாலிலிருந்து இப்படிப்பட்ட கொடுக்கல் வாங்கல் இருந்தால் அப்போது அதை ஏற்பது தவறில்லை என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்.

இன்று வட்டி வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு பெயர்களில் வடிவம் தருகிறது.வட்டியை தவிர்த்துவிட்டு வாழ முடியாது என்று முரட்டு தைரியம் கொண்டவர்கள் அல்லாஹ்,ரசூலின் எச்சரிக்கையை பையந்து கொள்ளட்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَبْقَى أَحَدٌ إِلَّا أَكَلَ الرِّبَا فَإِنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ بُخَارِهِ

ஒரு காலம் வரும் அதில் வட்டிபொருளை சாப்பிடாத யாரும் இருக்க மாட்டார்கள்.வட்டியை பேனுதலுடன் தவிர்ந்து கொண்டாலும் அதன் புழுதியா வது அவன் மீது படியும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அபூ தாவூது

அதற்கொப்ப வட்டி புதியவடிவங்கள் பெற்றிருக்கிறது.

credit card கிரிடிட் கார்ட் பற்றி இஸ்லாம்

இளைஞர்களில் அதிகமானோர் இந்த கிரிடிட் கார்டை பயன்படுத்திவருகின்றனர்.
இதில் விசா கார்ட்,மாஸ்டர் கார்ட்.அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற பலபெயர்களில் பேங்க் மூலம் விணியோகிக்கப்படுகிறது.
ஷரீஅத் கண்ணோட்டத்தில் இதுவும் ஒருவகை வட்டியை சார்ந்ததாகும்.

கிரிடிட் கார்ட் என்றால் என்ன?

பேங்க் மூலம் வழங்கப்படும் இந்த கார்ட்டை பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்கு இவரின் கணக்கில் தொகை இருக்கவேண்டிய அவசியம் இல்லை.சுருங்கச்சொல்லவேண்டுமானால் இது பேங்க் நமக்கு வழங்கும் கடன் +வட்டி-

முப்பது நாட்கள் அல்லது நாற்பத்தி ஐந்து நாட்கள் என்று வங்கி நமக்கு வழங்கும் காலத்தவணைக்குள் நாம் வாங்கிய பொருட்களுக்கான பணத்தை செலுத்திவிட்டால் வட்டிகட்டத்தேவையில்லை,அதே சமயம் காலம் தாமதித்தால் நாம் வாங்கிய கடனுடன் வட்டியும் செலுத்தியாக வேண்டும்.

சுமார் 1970 முதல் இந்த கிரிடிட் கார்டை பயபடுத்துவது நடைமுறைக்கு வருகிறது.
இஸ்லாமிய பார்வையில் இதை பயன்படுத்துவது தெளிவான ஹராமாகும், காரணம் உரிய தவணைக்குள் வட்டியின்றி செலுத்தமுடியும் தானெ என்று சொல்லலாம்.

முதலில்:இந்த ஒப்பந்தம் வட்டியுடன் உள்ள ஒப்பந்தமாகும்.காலம் தவறினால் நான் வட்டி கட்டுவேன் என்று ஒருவர் ஏற்றுக்கொள்வதும்,அதில் கையெழுத்  திடுவதும்,அதை ஒப்பந்தம் செய்துகொள்வதும் ஹராமாகும்.

இரண்டாவது:மனிதன் தன் எதிர்காலத்தைப்பற்றி உறுதியாக சொல்ல முடியாது.ஒருவேளை இவனால் தவணைக்குள் செலுத்த முடியாமல் போனாலோ,அல்லது மரணித்து விட்டாலோ வட்டி கட்டும் நிர்பந்தத்திற்கு ஆளாகுவான்.

இதைப்பற்றி ஆய்வு செய்த சவூதியின்
مجلس مجمع الفقه الإسلامي என்ற அமைப்பு செப்டம்பர்,2000 த்தில் தனது 12 வது சுற்றில் -இது தெள்ளத்தெளி   வான ஹராமாகும் என்று தீர்ப்பு வழங்கியது.அதே சமயம் டெபிட் கார்டை பயன்படுத்துவதில் எந்த ஆட்சேபனையுமில்லை என்று கூறியது.
இதைப் போல ஒரு முறை அறியாமக்கால அன்றைய அரபுகளிடமும் இருக்கவே செய்தது.

وصورته هي عين صورة الربا في الجاهلية ربا النسيئة حيث كانت العرب في الجاهلية تقرض فإذا حل الأجل قالوا إما إن تقضي وإما أن تربي. كما قال رسول الله صلى الله عليه وسلم: (ألا إنما الربا في النسيئة). متفق عليه.

அந்த காலத்தில், ஒருவர் கடன் கொடுப்பார்.அதற்கு குறிப்பிட்ட தவணையும் கொடுப்பார்.குறிப்பிட்ட தவனைக்குள் பணத்தை திருப்பி செலுத்த முடியாத போது கடன் கொடுத்தவர் இவருக்கு இரண்டு நிபந்தனைகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ளச்சொல்வார்.ஒன்று உடனே கடனை திருப்பிக்கொடு,அல்லது வட்டியுடன் கொடுப்பதாக வாக்கு கொடு என்பார்கள்.
இந்த முறைக்கு ரிபன்னஸீஅத் (தாமத்த்தால் விளையும் வட்டி) என்று சொல்லப்படும்.இதையும் நபி ஸல் அவர்கள் தடை செய்தார்கள்.

ஒத்திக்கு இருக்கும் முறையும் வட்டியே

2 அல்லது 3 வருடங்களுக்கு குறிப்பிட்ட தொகையை வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு வீட்டை எந்த வாடகையும் கொடுக்காமல் பயன்படுத்துவது, அந்த தவணை முடியும் போது வீட்டுச் சொந்தக்காரர் பெற்ற தொகையை திருப்பித் தந்து விட்டால் வீட்டை காலி செய்து விடுவது  இந்த முறையை முஸ்லிம்கள் பலரும்,குறிப்பாக மார்க்கப்பற்றுள்ள சிலரும் கூட ஹலால் என்று நினைத்துக்கொண்டு பயன்படுத்துகின்றனர்.
பொருட்களை அடைமானமாக வைத்து உதவி பெற்றுக் கொள்வது ரஸுல் (ஸல்) அவர்கள் காலத்திலேயே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அவ்வகையில் அசையா மற்றும் அசையும் சொத்துக்களை அடைமானமாகக் கொடுத்து, வாங்கி அதற்கு ஈடான உதவியை (பொருளாதாரமாகவோ, பண்டமாற்றாகவோ) பெறலாம், கொடுக்கலாம்.
இந்த இடத்தில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அடைமானமாக ஒன்றைப் பெறுபவர். அதனைக் கொடுத்தவர் மீட்டுச் செல்லும் வரை, அதனைப் பாதுகாக்கும் உரிமையைத்தான் பெறுகிறாரே தவிர பயன்படுத்தும் உரிமையை அல்ல. இதனைப் புரிந்து கொள்ளாமல் பலர் அடைமானமாகப் பெற்றவற்றை பயன்படுத்துகின்றனர். இது தவறாகும். . இது ரஸுல் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைக்கு மாற்றமானதாகும். தவிர இதனை வட்டி என்றே ரஸுல் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.


فانتفاع المرتهن بالسكنى في البيت أجمع أهل العلم ، لأنه من باب القرض الذي يجر نفعا ، قال ابن قدامة ( المغني : 4/431) : ( فإن أذن الراهن للمرتهن في الانتفاع بغير عوض ، وكان دين الرهن من قرض ،لم يجز ، لأنه يحصل قرضا يجر منفعة ، وذلك حرام)

அடமானமாக வைக்கப்பட்ட வீட்டை பயன்படுத்துவது பலனை அடிப்படையாக கொண்ட கடனாகும்.என்று மார்க்க அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.
இருவர்களும் சம்மதித்துக்கொண்டாலும் இது ஹராமாகும் என்று இப்னு குத்தாமா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.


وذكر ابن قدامة أيضا أن أحمد رحمه الله كان يقول عن الدور إذا كانت رهنا في قرض ينتفع بها المرتهن هو الربا المحض.

மேலும் அவர்கள் கூறும் போது இது மிகத்தெளிவான வட்டியாகும் என்று இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ஏலச்சீட்டு வட்டியாகுமா?:

ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும்.
இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும்.
அதே சமயம் குலுக்கல் சீட்டு முறை வட்டியாகாது,காரணம், குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது.
அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே.
இது போன்று இன்னும் பல்வேறு நவீன வட்டியை மையமாக கொண்ட கொடுக்கல் வாங்கல் சமகாலப்பிரச்சனையாக தலைதூக்கியிருக்கிறது.   இது போன்ற சட்டங்களில் மார்க்க அறிஞர்களை அனுகி தெரிந்த பிறகே செயல்படவேண்டும்.
ஹலால் தெளிவானது-ஹராம் தெளிவானது-இவ்விரண்டையும் தான்டி சில விஷயங்கள் சந்தேகத்திற்கு இடமானது,அப்படிப்பட்ட சந்தேகத்திற்கு சாத்தியமான விஷயங்களை விட்டும் விலகிக்கொள்ளுங்கள்(.நபி மொழி)

Wednesday 20 March 2013

அச்சம் தவிர்


அல்லாஹ்வின் அருட்கொடைகளில் மாபெரும் அருட்கொடையான ஆரோக்கியத்தைக்குறித்து கடந்தவாரம் பார்த்தோம்.

ஆரோக்கியத்தை விடவும் அவசியமான ஒரு பேருபகாரம் குறித்து இவ்வாரம் பார்ப்போம்.

அதுவே பயமற்ற அமைதியான வாழ்க்கை.

அரபியில் இதை அம்ன் الأمن என்றுச்சொல்வார்கள்.
அமைதியும், பாதுகாப்பும் இல்லாத வாழ்வில் எந்த நிஃமத்தும் பலன் தராது.   அதனால் தான் ஒவ்வொரு படைப்பும் தன்னை பாதுகாப்பதில்,தன் இருப்பிடத்தை பாதுகாப்பதில், தன்னைச்சார்ந்தவர்களை பாதுகாப்பதில் அதிக கவனம் எடுத்துக்கொள்கிறது.

இறைவன் படைப்பில் எறும்பு போன்ற ஊர்வணங்கள் தனக்கான இருப்பிடத்தை பூமியின் அடிபாகத்தில் பாதுகாப்புடன் அமைத்துக்கொள்கிறது.மனிதர்கள்,  மற்ற உயிரிணங்களை விட்டும் தன்னையும் தன் இனத்தையும் பாதுகாப்பதில் எறும்புக்கு அதிகமாக எச்சரிக்கை உணர்வு உண்டு என அல்குர்ஆன் கூறுகிற  வசனத்தை இங்கு சிந்திக்கவேண்டும்.

பறவைகள் தனக்கான கூடுகளை யாருடைய தீங்குகளிலிருந்து தன்னை பாதுகாக்கவே மரத்தின் உச்சியில் கட்டுகிறது.

விலங்கினங்கள் மனிதநடமாட்டம் இல்லாத காடுகளை தனக்கான பாதுகாப்
புள்ள வசிப்பிடமாக தேர்வு செய்கிறது.
அந்த அடிப்படையில் மனிதனும் தனக்கான பாதுகாப்பில் அதிக அக்கரை எடுத்துக்கொள்கிறான்.

ஒருநாட்டின் பொருளாதாரத்தில் அதிக பகுதி பாதுகாப்பிற்காகவே செலவிடப்படுகிறது.எனவே பயமின்றி வாழ்வது பசியுடன் வாழ்வதை விடவும் அவசியமானதாகும்.

نعمة الأمن التي كانت أولَ دعوةٍ لأبينا الخليل إبراهيم عليه الصلاة والسلام ، حينما قال: (رَبِّ اجْعَلْ هَـَذَا بَلَداً آمِناً وارزق أهله من الثمرات) .. فقدّم إبراهيم نعمة الأمن ، على نعمة الطعام والغذاء ، لعظمها وخطر زوالها . و والله وتالله إن أشهى المأكولات ، وأطيبَ الثمرات ، لا تُستساغ مع ذهابِ الأمن ونزولِ الخوف

நபி இப்ராஹீம் அலை அவர்கள் தன் குடும்பத்தை விவசாயம் இல்லாத பாலைவனபூமியில் விட்டுவிட்டு தன் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக அல்லாஹ்விடம்  கேட்ட துஆ-

ரப்பே!இந்த ஊரை அச்சமில்லாத ஊராக ஆக்கிவைப்பாயாக!இந்த ஊர் மக்களுக்கு உணவளிப்பாயாக.

உணவை விடவும் அமைதியை முன்னிலைப்படுத்தி கேட்டதற்கான காரணத்  தை விளக்கும் முபஸ்ஸிரீன்கள்,
அச்சமும், ஆபத்தும் சூழ்ந்திருக்கும்போது ஆசையான உணவுகள் இருந்தாலும் அதை அனுபவிக்க முடியாது.என்று கூறுகிறார்கள்.


ونعمة الأمن أعظم من نعمة الصحة. قال الرازي رحمه الله: "سئل بعض العلماء: الأمن أفضل أم الصحة؟ فقال: الأمن أفضل، والدليل عليه أن شاة لو انكسرت رجلها فإنها تصح بعد زمان، ثم إنها تقبل على الرعي والأكل. ولو أنها ربطت في موضع وربط بالقرب منها ذئب فإنها تمسك عن العلف ولا تتناوله إلى أن تموت، وذلك يدل على أن الضرر الحاصل من الخوف أشد من الضرر الحاصل من ألم الجَسَد

உடல் ஆரோக்கியத்தை விடவும் அச்சமில்லாத வாழ்க்கை மிகப்பெரும் பாக்கியம் என்று இமாம் ராஸி ரஹ் அவர்கள் தங்களின் தப்ஸீரில் ஒரு செய்தியை கூறுகிறார்கள்.

அச்சமற்ற வாழ்வா?ஆரோக்கியமா?எது சிறந்தது?என சில அறிஞர்களிடம் கேட்கப்பட்டபோது-அச்சமற்ற வாழ்வே அனைத்தை விடவும் சிறந்தது,எப்படி என்றால்,ஒரு ஆடு கால் ஒடிந்து வேதனையான நிலையிலும் அது தனக்கான ரிஸ்கை தேடி மேயசென்றுவிடும்.

அதே நேரம் ஒரு ஆரோக்கியமான ஆட்டை கட்டிப்போட்டு அதன் பக்கத்தில் அதற்கு தேவையான உணவையும் வைத்துவிட்டு, ஒரு ஓநாயை விட்டுப்பாருங்கள்.உயிர் போகும்வரை அந்த உணவை அது திரும்பியும் பார்க்காது.காரணம் ஓநாயின் மீது அதுகொண்டிருக்கும் பயமே காரணம்.

أن النبي صلى الله عليه وسلم لما خرج إلى الحديبية كان معه خمسمائة وألف من أصحابه، فلمَّا انعقد الصُّلح وكان من بنوده: وقف الحرب عشر سنوات يأمن فيها الناس، دخل كثير منهم في دين الله، فبعد عامين وبضعة أشهر خرج مع النبي صلى الله عليه وسلم لفتح مكة عشرة آلاف من المسلمين.

நபி ஸல் அவர்கள் 1500 ஸஹாபாக்களுடன் உம்ராச்செய்யும் எண்ணத்துடன் மக்கா நோக்கி வந்தபோது ஹுதைபிய்யா எனும் இடத்தில் மக்கத்து காபிர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

அப்போது தான் வரலாற்று சிறப்புமிக்க அந்த அமைதி உடன்படிக்கை நடைபெற்றது.

அந்த அமைதி உடன்பாட்டில் எழுதப்பட்ட அனைத்தும் முஸ்லிம்களுக்கு பாதகமாக இருந்தாலும் நபி ஸல் அவர்கள் அதை ஏற்று ஒப்புக்கொண்டார்கள்.

இந்த ஒப்பந்தம் பத்தாண்டுக்கான ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தத்தை அல்லாஹ் மகத்தான வெற்றி என்று கூறுகிறான்.காரணம் அதன் மூலம் அமைதி நிலவியது.அதுவே மக்கள் இஸ்லாத்தின் பக்கம் கூட்டம் கூட்டமாக வருவதற்கு காரணமானது.

பக்கத்து நாடுகளுக்கு இஸ்லாத்தின் பக்கம் அழைப்புக்கொடுத்து கடிதம் எழுதவும் துணை செய்தது.
மக்களுக்கு இஸ்லாத்தை பற்றிய பாதுகாப்பு நம்பிக்கை வந்தபோது கூட்டம் கூட்டமாக முஸ்லிமானார்கள்.

இரண்டே ஆண்டுகளில் மக்காவாசிகள் அந்த ஒப்பந்தத்தை முறித்தபோது நபி ஸல் அவர்கள் பத்தாயிரம் பேர்களுடன் மக்காவின் மீது படையெடுத்தார்கள்.

1500 பேர்கள் இருந்த முஸ்லிம்கள் இரண்டு ஆண்டுகளில் பத்தாயிரமாக மாறியது இஸ்லாத்தை பற்றிய அச்சமற்ற நம்பிக்கையே காரணமாகும்.

மக்காவை வெற்றி கொண்ட ஸல் அவர்களின் வரலாற்றை உலகம் வியந்து போனது.நீங்கள் சப்தமிட்டுக்கொண்டு மக்காவில் நுழையக்கூடாது,மேடான பகுதி வழியாக உள்ளே நுழையக்கூடாது.காரணம் இதுவெல்லாம் அம்மக்களை அச்சப்படுத்திவிடும் என்றார்கள்.மேலும்

فقال: «من دخَل دارَ أبي سفيان فهو آمن، ومن ألقَى السّلاحَ فهو آمن، ومن دخل المسجدَ فهو آمن» رواه مسلم.

அபூஸுப்யான் வீட்டில் நுழைந்தவர் பாதுகாப்பு பெறுவார்.
ஆயுதங்களை கேழே போட்டவர் பாதுகாப்பு பெறுவார்
மஸ்ஜித் ஹராமில் நுழைந்தவர் பாதுகாப்பு பெறுவார் என்று அம்மக்களின் அச்சத்தை போக்க இவ்வாறு அறிவிப்புச்செய்தார்கள்.

இதில் அபூ ஸுப்யான் அவர்களின் இல்லத்தை சேர்த்து சொன்னதற்கு காரணம்,நபி ஸல் அவர்களின் மிகப்பெரும் எதிரியான அபூஸுப்யானையே மன்னித்து விட்டார்கள் என்று மக்கள் தைரியமாக இருப்பார்கள் என்பதே காரணமாகும்.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் தன் நிஃமத்துக்களை சொல்லும் இடங்களில் பாதுகாப்பையே முற்படுத்திக்கூறுகிறான்.

சபா நகர மக்களுக்கு அல்லாஹுத்தஆலா அவனின் அருட்கொடைகளை அள வின்றி அள்ளிவீசியிருந்தான்.திரும்பிய பக்கமெல்லாம் பசுமையான தோட்டங்கள்,நீரூற்றுக்கள் என்று பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் காட்சிகள்.  அதை விவரிக்கும்போது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்த அச்சமற்ற வாழ்வையே பிரதானமாக கூறுகிறான்.

سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ

அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்" (என்று கூறினோம்)

அவ்வாறு நபி யூஸுப் அலை அவர்களின் சகோதரர்கள் மிஸ்ர் தேசத்தில் யூஸுப் அலை அவர்களை சந்திக்க வந்தபோது -

فَلَمَّا دَخَلُواْ عَلَى يُوسُفَ آوَى إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ادْخُلُواْ مِصْرَ إِن شَاء اللّهُ آمِنِينَ { (يوسف: 99).

(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் "அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்" என்றும் கூறினார்.


மக்காவிலிருந்து துறத்தப்பட்ட முஸ்லிம்கள் உம்ராவுக்கு வந்தபோது திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.அந்த நேரத்தில் அவர்களுக்கு அல்லாஹ் சொன்ன ஆறுதலான வார்த்தைகள்.

لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ إِن شَاء اللَّهُ آمِنِينَ

அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள்.என்று கூறுகிறான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையாக பாதுகாப்பான வாழ்க்கை அவசியம்.
அதனால் தான் தனக்கோ,தன் குடும்பத்திற்கோ,தன் தீனுக்கோ பாதுகாப்பில்லா   ஊரிலிருந்து இடம்பெயர்ந்து ஹிஜ்ரத் செய்வதை மார்க்கம் அனுமதிக்கிறது.

مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ، مُعَافًى فِي جَسَدِهِ، عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا» رواه الترمذي.

அமைதியான இல்லம்,ஆரோக்கியமான உடல்,அன்றைய நாளை கழிக்க உணவு இம்மூன்றும் பெற்றவர் துன்யா அனைத்தையும் பெற்றவராவார் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
எந்த சூழலிலும் தொழுகையின் முறைகள் மாறாது.பயணத்தில் தொழுகை சுறுக்கப்படுமே தவிர அதன் தன்மைகளில் மாற்றம் ஏற்படாது.ஆனால் அச்சமான சூழலில் தொழுகையின் தன்மைகள் கூட மாறும்.

அச்சகாலங்களில் தொழுகும் முறை பற்றி


وَإِذَا كُنتَ فِيهِمْ فَأَقَمْتَ لَهُمُ الصَّلاَةَ فَلْتَقُمْ طَآئِفَةٌ مِّنْهُم مَّعَكَ وَلْيَأْخُذُواْ أَسْلِحَتَهُمْ فَإِذَا سَجَدُواْ فَلْيَكُونُواْ مِن وَرَآئِكُمْ وَلْتَأْتِ طَآئِفَةٌ أُخْرَى لَمْ يُصَلُّواْ فَلْيُصَلُّواْ مَعَكَ وَلْيَأْخُذُواْ حِذْرَهُمْ وَأَسْلِحَتَهُمْ وَدَّ الَّذِينَ كَفَرُواْ لَوْ تَغْفُلُونَ عَنْ أَسْلِحَتِكُمْ وَأَمْتِعَتِكُمْ فَيَمِيلُونَ عَلَيْكُم مَّيْلَةً وَاحِدَةً

(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும்;. அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்;


فَإنْ خِفْتُمْ فَرِجَالاً أَوْ رُكْبَانًا

ஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்;


انَ نبينا صلى الله عليه وسلم إِذَا رَأَى الْهِلَالَ قَالَ: «اللَّهُ أَكْبَرُ. اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ، رواه الترمذي.

நபி ஸல் அவர்கள் பிறையை காணும்போது ஓதும் துஆவில் அமைதியை கேட்டுள்ளார்கள்.
இஸ்லாம் அமைதியை நிலைநிறுத்த வந்த மார்க்கமாகும்.


وقال صلى الله عليه وسلم: «وَاللَّهِ لَا يُؤْمِنُ، وَاللَّهِ لَا يُؤْمِنُ، وَاللَّهِ لَا يُؤْمِنُ». قِيلَ: وَمَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «الَّذِي لَا يَأْمَنُ جَارُهُ بَوَائقَه» رواه البخاري ومسلم.

தன் பக்கத்து வீட்டாருக்கு அமைதி தராது ஒருவன் உண்மையான முஃமினாக இருக்க முடியாது என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

لا يحل لمسلم أن يروع مسلماً

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை பயம் காட்ட வேண்டாம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

لا يأخذن أحدكم متاع أخيه لاعباً ولا جاداً

விளையாட்டுக்காக அல்லது உண்மையாக உங்களில் ஒருவர் மற்றவரின் பொருளை எடுத்து பயம் காட்டவேண்டாம் என்றார்கள்.

குழப்பம் செய்து முஸ்லிம்களின் அமைதியை குழைப்பது கொலையை விட பெரும்பாவமாகும் என்று அல்குர்ஆன் கூறுகிறது.


حديث أنس بن مالك رضي الله عنه أنهم كانوا في المدينة فسمعوا صريخاً من قِبَلِ سلع، وسلع هو الجبل الذي في غرب المدينة، فكان رسول الله صلى الله عليه وسلم أشجع الناس فخرج إلى الصريخ يشتد، فمر بفرسٍ لأبي طلحة يسمى المندوب كان يبطأ فنزع قيده وعلاه فأجراه حتى عرق، ثم جاء باديةً فخذه يقول: "لن تراعوا لن تراعوا، إنها جارية لكعب بن مالك كانت ترعى غنماً على سلع فتردت عليها شاة فذبحتها" الحديث أصله في الصحيحين، وفيه روايات كثيرة جداً، وأخرجه البخاري


மதீனாவில் ஒரு நாள் கடும்சப்தம் கேட்டு மக்கள் பயத்தில் ஆழ்ந்தனர்.
அப்போது நபி ஸல் அவர்கள் அபூ தல்ஹா ரலி அவர்களின் குதிரை மீது ஏறி சப்தம் வந்த திசைநோக்கி புறப்பட்டார்கள்.
திரும்பி வந்த நபி ஸல் அவர்கள் மக்களே!பயப்படாதீர்கள்.ஸில்வு என்ற மலையில் கஃபின் அடிமைப்பெண் ஆடுமேய்த்துக்கொண்டிருக்கிறாள். அதில் ஒரு ஆட்டை அவள் அறுத்தபோது அந்த ஆடு போட்ட சப்தம் அது என்று கூறி மக்களின் அச்சத்தை போக்கினார்கள்.


وَقَالَ يَزِيدُ فِي حَدِيثِهِ حَدَّثَنِي الْقَاسِمُ بْنُ عَوْفٍ الشَّيْبَانِيُّ عَنْ رَجُلٍ قَالَ
كُنَّا قَدْ حَمَلْنَا لِأَبِي ذَرٍّ شَيْئًا نُرِيدُ أَنْ نُعْطِيَهُ إِيَّاهُ فَأَتَيْنَا الرَّبَذَةَ فَسَأَلْنَا عَنْهُ فَلَمْ نَجِدْهُ قِيلَ اسْتَأْذَنَ فِي الْحَجِّ فَأُذِنَ لَهُ فَأَتَيْنَاهُ بِالْبَلْدَةِ وَهِيَ مِنًى فَبَيْنَا نَحْنُ عِنْدَهُ إِذْ قِيلَ لَهُ إِنَّ عُثْمَانَ صَلَّى أَرْبَعًا فَاشْتَدَّ ذَلِكَ عَلَى أَبِي ذَرٍّ وَقَالَ قَوْلًا شَدِيدًا وَقَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَ أَبِي بَكْرٍ وَعُمَرَ ثُمَّ قَامَ أَبُو ذَرٍّ فَصَلَّى أَرْبَعًا فَقِيلَ لَهُ عِبْتَ عَلَى أَمِيرِ الْمُؤْمِنِينَ شَيْئًا ثُمَّ صَنَعْتَ قَالَ الْخِلَافُ أَشَدُّ


 ரபதா எனும் இடத்தில் தங்கியிருந்த ஹழ்ரத் அபூதர் ரலி அவர்களை சந்தித்து,அவர்களுக்கு ஏதாவது அன்பளிப்பு கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் நாங்கள் சென்றோம்.ஆனால் அவர்கள் அங்கு இல்லை.விசாரித்தபோது அவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றிருப்பதாக கேள்விப்பட்டு நாங்களும் சென்றோம்.அவர்களை மினாவில் சந்தித்தோம்.
அப்போது அவர்களிடம்,கலிபா உஸ்மான் ரலி அவர்கள் மினாவில் நான்கு இரக்கஅத்துள்ள தொழுகைகளை கஸ்ர் செய்யாமல் நான்காகவே நிறைவேற்றினார்கள் என்று சொல்லப்பட்டது.அதைக்கேட்ட அபூதர் ரலி அவர்கள் கண்டிப்பான வார்த்தையுடன் -நான் நபி ஸல் அவர்களுக்கு பின் தொழுதுள்ளேன்.அபூபக்கர் ரலி அவர்களுக்கு பின்னால் தொழுதுள்ளேன்.உமர் ரலி அவர்களுக்கும் பின்னாலும் தொழுதுள்ளேன்.இவர்கள் அனைவர்களும் மினாவில் நான்கு இரக்கஅத் தொழுகையை இரண்டு இரக்கஅத்தாக கஸ்ர் செய்து தான் தொழுதார்கள். என்றார்கள்.
பின்பு தொழுகையின் நேரம் வந்ததும் அவர்கள் நான்கு இரக்கஅத் தொழுதார்கள்.இதை பார்த்த அவர்களின் தோழர்கள்,இது விஷயத்தில் கலீபா உஸ்மான் ரலி அவர்களை கண்டித்துவிட்டு தாங்களே அவ்வாறு தொழ காரணம் என்ன?வென கேட்கப்பட்டபோது- குழப்பத்தை உண்டாக்கும் கருத்து வேறுபாடு ஆபத்தானது (அதன் மூலம் மக்கள் அமைதி கெட்டுப்போகும்) என்றார்கள்.
காஸிம் இப்னு அவ்ப்.
அஹ்மது:20487
முஸ்லிம்களுக்கு மத்தியில் அமைதியை பாதுகாப்பதற்காக தங்களின் ஆட்சியை ஹழ்ரத் ஹஸன் ரலி அவர்கள் விட்டுக்கொடுத்தார்கள்.என்பது வரலாறு.
யா அல்லாஹ்!ஆரோக்கியமான வாழ்வத்தா!
அந்த ஆரோக்கியத்தை அனுபவிக்க அச்சமற்ற வாழ்வைத்தா!