Thursday 26 December 2013

பாதுகாக்க வேண்டிய பெண்கள்..



எல்லாம் வல்ல இறைவன் பெண்களுக்கு மகத்தான வலிமையை கொடுத்திருக்கின்றான் அவர்கள் தங்கள் பிள்ளைகளை இறை அச்சத்துடனும் பொறுப்புடனும் வளர்த்தால் சிறந்த சமுதாயத்தையும் பிரகாசமான எதிர்காலத்தையும் கட்டமைக்க முடியும் ஆனால் இந்த காலத்தில் அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒழுக்கத்துடன் வளர்ப்பதில் அலட்சியத்துடன் இருக்கின்றனர் இதை விடவும் மிகப் பெரிய வேதனை இன்று சில பெண்களின் வாழ்க்கை இஸ்லாமிய சமூகத்திற்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது என்பதற்கு நிகழ்காலமே சாட்சியாகும் இக்கால பெண்களிடம் சிறந்த ஒழுக்கமும் உயர்ந்த பண்பாடும் வர வேண்டுமானால் அவர்களுக்கு நபி(ஸல்) அவர்களின்   சஹாபியத்தான பெண்களின் வரலாறு சொல்லப்பட வேண்டும்..
 
அக்கால பெண்களிடம் காணப்பட்ட இறை வணக்கத்தின் ஈடுபாடு

وعن جويرية أن النبي صلى الله عليه وسلم خرج من عندها بكرة حين صلى الصبح وهي في مسجدها ثم رجع بعد أن أضحى وهي جالسة قال : " ما زلت على الحال التي فارقتك عليها ؟ " قالت : نعم قال النبي صلى الله عليه وسلم : " لقد قلت بعدك أربع كلمات ثلاث مرات لو وزنت بما قلت منذ اليوم لوزنتهن : سبحان الله وبحمده عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته " . رواه مسلم

ஜூவைரிய்யா (ரலி) அவர்களின் வீட்டில் இருந்து ஒரு நாள் நபி அவர்கள் பஜ்ர் தொழுகைக்கு புறப்பட்ட பொழுது ஜூவைரிய்யா நாயகி தனது தொழுமிடத்தில் தொழுகைக்காக அமர்ந்திருந்தார்.

நபி அவர்கள் தொழுகையை நிறைவு செய்து விட்டு லுஹா நேரத்திற்குப் பின் திரும்பி வந்த பொழுது அன்னை அவர்கள் அதே இடத்தில் அமர்ந்திருப்பதை கண்டு பஜ்ரிலிருந்து அவர்கள் தொடர்ந்து அதே இடத்தில் இருப்பதை கேட்டு தெரிந்து கொண்டு நமது அன்னை இடம் சொன்னார்கள் நான் இன்று பள்ளிக்கு சென்ற பிறகு நான்கு வார்த்தைகளை மூன்று தடவை சொன்னேன் அதனுடைய சிறப்பு என்னவென்றால்.

இன்று முலுவதும் நீ ஓது கின்ற வார்த்தைகளின் நன்மைகளை நான் ஓதிய இந்த வார்த்தைகளுடன் நிறுக்கப்பட்டால் இதனுடைய நன்மை அதை மிகைத்து விடும் என்று கூறி விட்டு மேற்கூரிய அந்த திக்ரை அவர்க்ளுக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

.நூல்.   மிஸ்காத்  பக்கம். 201

இன்று நமது பென்களிடம் டிவியில் தொடர் நாடகங்கள் பார்ப்பதிலும் வீண் பேச்சுக்கள் பேசுவதிலும் இருக்கின்ற இன்பத்தால் கடமையான வனக்கங்கள் செய்வதற்கு கூட நேரங்களை ஒதுக்க முடியவில்லை.

ஹதிஸ் கலையில் சஹாபியத்தான பெண்களின் திறமையும் ஆர்வமும்

عن
 أبي موسى قال : ما أشكل علينا أصحاب رسول الله صلى الله عليه وسلم حديث قط فسألنا عائشة إلا وجدنا عندها منه علما . رواه الترمذي .

அபூ மூஸா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் நபி தோழர்களான எங்களுக்கு நபியின் எந்த ஒரு ஹதீஸில் சந்தேகம் ஏற்பட்டாலும் அதற்கான விளக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் தான் கேட்டு தெரிந்து கொள்வோம்.

நூல்.  மிஸ்காத். பக்கம். 574

இக்கால பெண்களுக்கு மார்க்கத்தின் அடிப்படையான கல்வி கூட இல்லை என்பதுடன் உலக கல்வியின் மோகம் மிகைத்து விட்டது

ஆன்மீக கல்வியில் அன்றைய பெண்களின் அந்தஸ்து

وقال الثوري يوماً عن رابعة: اللهم ارض عني، فقالت: أما تستحي من الله أن تسأله الرضا وأنت غير راض؟ فقال: أستغفر الله، فقال جعفر بن سليمان الضبعي: فمتى يكون العبد راضياً عن الله تعالى؟ قالت: إذا كان سروره بالمصيبة مثل سروره بالنعمة.

ஜாபர் இப்னு சுலைமான் அவர்கள்  ராபியத்துல் பஸரிய்யா அவர்களிடம் ஒரு அடியான் எப்பொழுது அல்லாவை பொருந்திக் கொண்டவனாக ஆகின்றான் என்று கேட்ட பொழுது அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் வழங்கும் அருட் கொடைகளை கொண்டு மகிழ்வது போன்று அவன் தரும் துன்பங்களை கொண்டும் மகிழ்கின்ற பொழுது என்றார்கள் 
    
நூல் . இஹ்யா    பாகம். 4

ويقال إن امرأة فتح الموصلي عثرت فانقطع ظفرها فضحكت، فقيل لها: أما تجدين الوجع؟ فقالت: إن لذة ثوابه أزالت عن قلبي مرارة وجعه

 அல்லாமா பத்ஹுல் மூஸிலி அவர்களின் இறை நேசம் பெற்ற மனைவி கால் இடறி கீழே விழுந்து கால் நகம் பெயர்ந்தப் பொழுது சிரித்தார்கள். அவர்களிடம் உங்களுக்கு வலிக்கவில்லையா? என்று கேட்ட பொழுது அவர்கள் சொன்னார்கள் இந்த சோதனைக்கு இறைவன் தரும் உயர்ந்த நற்கூலியை எண்ணிப் பார்த்த பொழுது அது இந்த வேதனையின் கசப்பை என் இதயத்தை விட்டு நீக்கி விட்டது என்றார்கள்

நூல். இஹ்யா..

இந்த செய்திகள் சின்ன சின்ன துன்பங்களுக்கு பதறுகின்ற மனம் உடைந்து போகின்ற பெண்களிடம் சொல்லப்பட வேண்டும்

 இறைவனுக்காகவும் இஸ்லாத்திற்காகவும் தனது நாட்டில் இருந்தும் வீட்டில் இருந்தும் வெளியேறிய நபி காலத்தின் பெண்கள்..

حدثنا هشام بن حسان، عن عثمان بن القاسم، قال: خرجت أم أيمن مهاجرة إلى رسول الله صلى الله عليه وسلم من مكة إلى المدينة وهي ماشية ليس معها زاد، وهي صائمة في يوم شديد الحر، فأصابها عطش شديد حتى كادت أن تموت من شدة العطش، قال: وهي بالروحاء أو قريباً منها فلما غابت الشمس قالت: إذ أنا بحفيف شيء فوق رأسي، فرفعت رأسي فإذا أنا بدلو من السماء مدلى برشاء أبيض، قالت: فدنا مني حتى إذا كان حيث أستمكن منه تناولته فشربت منه حتى رويت، قالت: فلقد كنت بعد ذلك اليوم الحار أطوف في الشمس كي أعطش وما عطشت بعدها.

நபியின் ஹிஜ்ரத்திற்கு பின் மக்காவில் இஸ்லாத்தையும் ஈமானையும் பேணுவதும் பாதுகாப்பதும் சிரமமன பொழுது உம்மு அய்மன்(ரலி) அவர்கள் வீட்டிலிருந்து கால் நடையாக உணவின்றி நோன்பு நோற்ற நிலையில் கடுமையான கோடை காலத்தில் வெளியேறினார்கள்.

உயிர் போகும் அளவு கடுமையான தண்ணீர் தாகம் ஏற்பட்டு சூரியன் மறைந்த நேரத்தில் ரவ்வாஹ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பொழுது அவர்களின் தலையின் மேல் சலசலக்கும் சப்தம் கேட்டு அவர்கள் தலையை உயர்த்தி பார்த்தப் பொழுது ஒரு வெண்மையான கயிற்றில் தலைக்கு மேல் ஒரு வாலி தண்ணீருடன்   கைக்கு சமீபத்தில் தொங்கி கொண்டு இருந்தது அப்பெண்மனி சொல்கின்றார்கள் நான் அதை குடித்து தாகம் தீர்ந்தேன் இந்த நிகழ்வுக்கு பின் நான் எப்படி பட்ட கோடையில் வெளியில் சுற்றினாலும் எனக்கு தாகமே ஏற்ப்பட்டதில்லை என்றார்கள்..

நூல். ஹுல்யதுல் அவ்லியா.

இந்த அற்புத சம்பவத்தை காதல் மோகத்தால் பெற்றோரை விட்டும் ஈமான் இழந்து      மாற்றாருடன் ஓடிப் போகின்ற பெண்களையும் ஒப்பிட்டு பார்த்து நினைக்கின்ற பொழுது  நம்மால் வேதனைபடாமல் இருக்க முடிய வில்லை இன்று உலகில் இஸ்லாம் வேகமாக பரவுவது நமக்கு கிடைத்த பெருமை இல்லை அது இஸ்லாத்தின் தனிச் சிறப்புக்கு கிடைத்த பெருமையாகும்.

ஆனால் இன்று காதலுக்காகவும் தீய தொடர்பின் காரணமாகவும் மேலான ஒழுக்கத்தை விட்டும் இஸ்லாத்தை விட்டும் நமது பெண்கள் வெளியேறுவதை நினைத்து வெட்கப் பட வேண்டிய வேதனை பட வேண்டிய இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரனுக்கும் இருக்கின்றது..

 நபிக்கு கட்டுப் படுவதில் அக்கால பெண்களின் உணர்வு..

، عن أسماء بنت يزيد، قالت: أتيت النبي صلى الله عليه وسلم، فدنوت وعلي سواران من ذهب، فبصر ببصيصهما، فقال: " ألقي السوارين يا أسماء أما تخافين أن يسورك الله بأساور من نار " ، قالت: فألقيتهما فما أدري من أخذهما

 அஸ்மா பின் யசீத்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நான் எனது கையில் தங்க வளையல்களை அணிந்த நிலையில் நபியிடம் சென்றேன் அவ்விரண்டும் மின்னுவதை கண்ட நபி என்னிடம் அஸ்மாவே இறைவன் உனக்கு நரகத்தின் வளையல்களை போட்டுவிடுவான் என்று நீ பயப்பட வில்லையா? அந்த வளையல்களை கலற்றி போட்டு விடு என்றார்கள் உடனே அந்த இடத்திலேயே வலையல்களை கலற்றி எரிந்து விட்டேன் அது எங்கே போனது எவர் எடுத்தார்கள் என்று கூட எனக்கு தெரியவில்லை என்றார்கள்

நூல். ஹுல்யதுல் அவ்லியா..

الإمام أحمد: حدثنا عفان، حدثنا حماد -يعني: ابن سلمة -عن ثابت، عن كنانة بن نعيم العدوي، عن أبي برزة الأسلمي أن جليبيبا كان امرأ يدخل على النساء يَمُرّ بهن ويلاعبهن، فقلت لامرأتي: لا يدخلن اليوم عليكم  جُليبيبُ، فإنه إن دخل عليكم  لأفعلن ولأفعلن. قال: وكانت الأنصار إذا كان لأحدهم أيّم لم يزوجها حتى يعلم: هل لنبي الله صلى الله عليه وسلم فيها حاجة أم لا ؟ فقال رسول الله صلى الله عليه وسلم لرجل من الأنصار: "زوجني ابنتك". قال: نعم، وكرامة يا رسول الله  ، ونُعْمَة عين. فقال: إني لست أريدها لنفسي. قال: فلمن يا رسول الله؟ قال: لجليبيب
فقال: يا رسول الله، أشاور أمها. فأتى أمها فقال: رسول الله صلى الله عليه وسلم يخطب ابنتك؟ فقالت: نعم ونُعمة عين. فقال: إنه ليس يخطبها لنفسه، إنما يخطبها لجليبيب. فقالت: أَجُلَيبيب إنيه  ؟ أجليبيب إنيِه  ؟ لا لعمر الله لا تزَوّجُه. فلما أراد أن يقوم ليأتي رسول الله صلى الله عليه وسلم فيخبره بما قالت أمها، قالت الجارية: مَنْ خطبني إليكم؟ فأخبرتها أمها. قالت: أتردون على رسول الله صلى الله عليه وسلم أمره؟! ادفعوني إليه، فإنه لن يضيعني. فانطلق أبوها إلى رسول الله صلى الله عليه وسلم فقال: شأنَك بها. فَزَوّجها جليبيبا. قال: فخرج رسول الله صلى الله عليه وسلم في غزاة له، فلما أفاء الله عليه قال لأصحابه: "هل تفقدون من أحد"؟ قالوا: نفقد فلانا ونفقد فلانا. قال: "انظروا هل تفقدون من أحد؟" قالوا: لا. قال: "لكني أفقد جليبيبا" . قال: "فاطلبوه في القتلى". فطلبوه فوجدوه إلى جنب سبعة قد قتلهم ثم قتلوه. [قالوا: يا رسول الله، ها هو ذا إلى جنب سبعة قد قتلهم ثم قتلوه] . فأتاه رسول الله صلى الله عليه وسلم فقام عليه، فقال: قتل سبعة [وقتلوه] ، هذا مني وأنا منه. مرتين أو ثلاثا، ثم وضعه رسول الله صلى الله عليه وسلم على ساعديه [وحفر له، ما له سرير إلا ساعد النبي صلى الله عليه وسلم] . ثم وضعه في قبره، ولم يذكر أنه غسله، رضي الله عنه. قال ثابت: فما كان في الأنصار أيّم أنفق منها. وحدث إسحاق بن عبد الله بن أبي طلحة ثابتا: هل تعلم ما دعا لها رسول الله صلى الله عليه وسلم؟ فقال: "اللهم، صب عليها [الخير] صبا، ولا تجعل عيشها كدا" كذا قال، فما كان في الأنصار أيم أنفق منها

நபி {ஸல்} அவர்களின் அருமைத்தோழர்களில் ஒருவர் ஜுலைபீப் {ரலி} அவர்கள். தன்னைப் பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தார்.காரணம் அவ்வளவாக அழகாக இருக்கமாட்டார்.
.
ஒரு முறை நபி {ஸல்} அவர்கள்,ஜுலைபீப் அவர்களை அழைத்து என்ன திருமணம் செய்து கொள்ளவில்லையா? என்று கேட்டார்கள்.அதற்கு ஜுலைபீப் அவர்கள் அருவருப்பான தோற்றம் கொண்ட எனக்கு இந்த மதீனாவில் யார் பெண் கொடுப்பார்? என்று விரக்தியுடன் கேட்டார். தோழரே! அல்லாஹ்விடத்தில் நீர் ஒன்றும் அருவெறுப்பானவர் இல்லை. ஊரின் இந்த பகுதியில் உள்ள {ஒரு இடத்தை சுட்டிக்காட்டி}இன்ன மனிதரிடம் சென்று நான் உமக்கு பெண் கேட்டதாக சொல்லுங்கள்.என்று கூறி அனுப்பி வைத்தார்கள் நபி {ஸல்} அவர்கள்.

அந்த வீட்டிற்குச் சென்று நபிகளார் சொன்ன அந்த விஷயத்தைக் கூறினார்கள். அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக மறுக்கவும் முடியாமல், ஆமோதிக்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தனர்.

அவருக்கு பெண் தர அவர்களின் மனம் இடம் தர வில்லை.  அப்போது உள்ளிருந்தவாரே தமது பெற்றோரின் உரையாடலையும் ஜுலைபீப் அவர்களின் உரையாடலையும் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி தமது பெற்றோரை அழைத்து, வந்திருப்பவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களே எனக்காக அனுப்பிய மணாளன், நீங்கள் எப்படி எனக்காக மாப்பிள்ளை பார்ப்பீர்களோ அதை விட பன்மடங்கு அக்கறையோடு தான் மா நபி {ஸல்} அவர்கள் எனக்கான மணாளனை தேர்ந்தெடுத்து அனுப்பியிருப்பார்கள்.என்று கூறிவிட்டு

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனுமொரு விவகாரத்தில் முடிவு செய்துவிட்டால் பிறகு அந்த விவகாரத்தில் மாற்று முடிவு எடுக்கும் அதிகாரம் இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும்,இறை நம்பிக்கை கொண்டுள்ள எந்தப் பெண்ணுக்கும் கிடையாது.எனும் இறை வசனத்தை தம் பெற்றோரிடம் ஓதிக் காண்பித்துவிட்டு என் விஷயத்தில் நபிகளாரின் முடிவையே நான் திருப்தி அடைகிறேன். ஜுலைபீப் அவர்களை என் மணாளராக்க மனப்பூர்வமாக சம்மதிக்கின்றேன்.என்று கூறினார்கள்

நபி {ஸல்} அவர்களின் முன்னே அமர்ந்து அந்த வீட்டில் நடை பெற்ற அத்துனை நிகழ்வினையும் ஜுலைபீப் {ரலி} விவரித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி உதிர்த்த வார்த்தைகளை கேட்ட மாநபி {ஸல்} அவர்கள்

فقال: "اللهم، صب عليها [الخير] صبا، ولا تجعل عيشها كدا" كذا

இறைவா! அப்பெண்மணியின் வாழ்க்கையில் அனைத்து வகையான நலவுகளையும் கொட்டுவாயாக! கேடுகளும்,சோதனைகளும் நிறைந்த வாழ்வை கொடுத்து விடாதே! என்று அகம் மகிழ துஆ செய்தார்கள். இந்த செய்தியை அறிவிக்கின்ற அபூ பர்ஸா {ரலி} அவர்கள் மதீனாவிலேயே,அன்ஸாரிப்பெண்களிலேயே இந்தப் பெண்மணியை விட செல்வச் சீமாட்டியை நாங்கள் கண்டதில்லை.என்று கூறுகின்றார்கள்

பின்னர் ஜுலைபீப் {ரலி} அவர்களை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருந்தார்கள் அப் பெண்மணி.
பெருமானார் {ஸல்} அவர்களோடு ஒரு போரில் கலந்து கொள்ள ஜுலைபீப் அவர்கள் புறப்பட்டுச்சென்றார்கள். அந்தப் போரில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெற்றியை நல்கினான். இறுதியாக ஷஹீதானவர்களை கணக்கிடும் பணியில் நபிகளாரும்,தோழர்களும் ஈடுபட்டிருந்தனர்.

 எவரையாவது விட்டு விட்டீர்களா?என நபியவர்கள் வினவ,ஆம் இன்னின்னாரை விட்டு விட்டோம். என தோழர்கள் கூறினார்கள்.மீண்டும் நபியவர்கள் வினவ, முன்பு போலவே தோழர்கள் பதில் கூறினர். மூன்றாம் முறையும் நபியவர்கள் கேட்டுவிட்டு ஜுலைபீபை காணவில்லையே? சென்று போர்க்களம் முழுவதும் நன்றாக தேடுங்கள் என்றார்கள்.

ஓரிடத்தில் ஜுலைபீப் ஷஹீதாக்கப்பட்டு கிடப்பதாக நபியிடத்தில் வந்து தோழர்கள் கூறினார்கள்.உடனடியாக கிளம்பி அந்த இடத்திற்கு வந்த நபி {ஸல்} அவர்கள் அங்கே ஜுலைபீபை சுற்றி ஏழு இறை மறுப்பாளர்கள் கொல்லப்பட்டுக்கிடந்ததை பார்த்தார்கள். நபி{ஸல்} அவர்கள் கூறினார்கள்:இதோ இங்கு ஷஹீதான ஜுலைபீப் ஏழு காஃபிர்களுடன் கடுமையாக போரிட்டு பின்னர் அவர்களை கொன்றுவிட்டு பிறகு அவர் ஷஹீதாகி இருக்கிறார். அறிந்து கொள்ளுங்கள்! ஜுலைபீப் என்னைச் சார்ந்தவர், நான் அவரைச் சார்ந்தவர்! என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் அவரை தம் இரு கைகளாலும் வாரி அணைத்து தூக்கிச் சென்று தாமே கப்ரில் அடக்கம் செய்தார்கள் மா நபி {ஸல்} அவர்கள்.
                       நூல்:இப்னு ஹிப்பான்,பாகம்:9,பக்கம்:334,இஸ்தீஆப்,பாகம்:1,பக்கம்:155,156,முஸ்னத் அஹ்மத்,பாகம்:4,பக்கம்:422.

تاவர்களின்  துஆவிற்கு அல்லாவிடம்  இருந்த அங்கீகாரம்.

أخرج الطبراني عن أسماء بنت أبي بكر رضي الله عنهما قالت: كنتغ
مرة في أرض أقطعها النبي صلى الله عليه وسلم لأبي سَلَمة، والزبير في أرض بني النضير. فخرج الزبير مع رسول الله صلى الله عليه وسلم ولنا جار من اليهود، فذبح شاة فطُبخت، فوجدت ريحها فدخلني ما لم يدخلني من شيء قط، وأنا حامل بابنتي خديجة فلم أصبر. فانطلقت فدخلت على إمرأة اليهودي أقتبس منها ناراً لعلها تطعمني، وما بي من حاجة إلى النار. فلما شمِمتُ الريح ورأيته ازددت شرهاً فأطفأته، ثم جئت ثانياً أقتبس؛ ثم ثالثه؛ ثم قعدت أبكي وأدعو الله. فجاء زوج اليهودي فقال: أدخل عليكم أحد؟ قالت: العربية تقتبس ناراً قال: فلا آكل منها أبداً أو ترسلي إليها منها. فأرسل إليَّ بقَدحة - يعني غَرْفة -، لم يكن شيء في الأرض أعجب إليَّ من تلك الأُكلة كذا في الإِصابة

 அஸ்மா(ரலி) அவர்கள் சொன்னார்கள் எனது கணவர் சுபைர் (ரலி) அவர்கள் ஒரு நாள் நபியுடன் வெளியே சென்று விட்டார்கள் எனது வீட்டுக்கு அருகில் ஒரு யூதரின் வீடு இருந்தது அன்று அவ்வீட்டில் ஆட்டிறைச்சி சமைக்கப்பட்ட்து அதனுடைய வாடையும் விருப்பமும் என் மனதில் இடம் பிடித்து விட்டது அப்போது கர்ப்பிணியகவும் கடும் பசியுடனும் இருந்தேன் அப்பொழுது நான் நெருப்பின் தேவையில்லாத அந்நேரத்தில் உணவை நோக்கமாக்க் கொண்டு அவ்வீட்டுக்கு நெருப்பு கேட்டு சென்றேன் அவள்
நெருப்பு தான் கொடுத்தாள் என் எதிர்பார்ப்பு நடக்கவில்லை இப்படியே அன்று  3 முறை ஏற்பட்டது இதற்கு பின் நான் வீட்டில் அமர்ந்து எனது நிலையை இறைவனிடம் கூறி அழுது துஆசெய்தேன் இந்நிலையில் வெளியே சென்றிருந்த அந்த யூத பெண்ணின் கணவர் இதில் எதையும் அறியாத நிலையில் தனது வீட்டிற்கு திரும்பினார் அவர் தன் மனைவியிடம் உன்னிடம் யாராவது வந்தார்களா? என்று கேட்ட பொழுது மனைவி சொன்னாள் நமக்கு அருகில் வாழும் இஸ்லாமிய பெண்மனி ஒருவர் நெருப்பு கேட்டு வந்தார் நான் அதை கொடுத்தேன் என்றாள் அவர் சொன்னார் அப்பெண் உணவு தேவைக்குத்தான் வந்திருக்கின்றாள் இந்த இறைச்சியை அப்பெண்ணுக்கு கொடுக்கும் வரை நான் சாப்பிடமாட்டேன் என்றார் உடனே அந்த யூதப் பெண் அஸ்மாவுக்கு உணவு கொடுத்து அனுப்பினார்


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَاجَرَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام بِسَارَةَ فَدَخَلَ بِهَا قَرْيَةً فِيهَا مَلِكٌ مِنْ الْمُلُوكِ أَوْ جَبَّارٌ مِنْ الْجَبَابِرَةِ فَقِيلَ دَخَلَ إِبْرَاهِيمُ بِامْرَأَةٍ هِيَ مِنْ أَحْسَنِ النِّسَاءِ فَأَرْسَلَ إِلَيْهِ أَنْ يَا إِبْرَاهِيمُ مَنْ هَذِهِ الَّتِي مَعَكَ قَالَ أُخْتِي ثُمَّ رَجَعَ إِلَيْهَا فَقَالَ لَا تُكَذِّبِي حَدِيثِي فَإِنِّي أَخْبَرْتُهُمْ أَنَّكِ أُخْتِي وَاللَّهِ إِنْ عَلَى الْأَرْضِ مُؤْمِنٌ غَيْرِي وَغَيْرُكِ فَأَرْسَلَ بِهَا إِلَيْهِ فَقَامَ إِلَيْهَا فَقَامَتْ تَوَضَّأُ وَتُصَلِّي فَقَالَتْ اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ وَأَحْصَنْتُ فَرْجِي إِلَّا عَلَى زَوْجِي فَلَا تُسَلِّطْ عَلَيَّ الْكَافِرَ فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ
قَالَ الْأَعْرَجُ قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ إِنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ قَالَتْ اللَّهُمَّ إِنْ يَمُتْ يُقَالُ هِيَ قَتَلَتْهُ فَأُرْسِلَ ثُمَّ قَامَ إِلَيْهَا فَقَامَتْ تَوَضَّأُ تُصَلِّي وَتَقُولُ اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ وَأَحْصَنْتُ فَرْجِي إِلَّا عَلَى زَوْجِي فَلَا تُسَلِّطْ عَلَيَّ هَذَا الْكَافِرَ فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ قَالَ عَبْدُ الرَّحْمَنِ قَالَ أَبُو سَلَمَةَ قَالَ أَبُو هُرَيْرَةَ فَقَالَتْ اللَّهُمَّ إِنْ يَمُتْ فَيُقَالُ هِيَ قَتَلَتْهُ فَأُرْسِلَ فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ فَقَالَ وَاللَّهِ مَا أَرْسَلْتُمْ إِلَيَّ إِلَّا شَيْطَانًا ارْجِعُوهَا إِلَى إِبْرَاهِيمَ وَأَعْطُوهَا آجَرَ فَرَجَعَتْ إِلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَام فَقَالَتْ أَشَعَرْتَ أَنَّ اللَّهَ كَبَتَ الْكَافِرَ وَأَخْدَمَ وَلِيدَةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவி) சாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்! என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன் இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் செய்து இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்? எனக் கேட்டான். இப்ராஹீம் (அலை) என் சகோதரி என்று சொன்னார்கள்.

பிறகு சாராவிடம் திரும்பிய இராப்ராஹீம் (அலை) அவர்கள் நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் ஓரிறை விசுவாசி (மூமின்) யாரும் இல்லை என்று சொன்னார்கள். பிறகு சாராவை மன்னனிடம் அனுப்பினார்கள். அவன் அவரை நோக்கி எழுந்தான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால் எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே! என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்கள் உதைத்துக் கொண்டான்.

மன்னனின் நிலையைக் கண்ட சாரா இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் சாராவை நெருங்கினான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுது விட்டு இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால் எனது பெண்மையை கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்துக் கொண்டான்.

மன்னனின் நிலையைக் கண்ட சாரா இறைவா! இவன் செத்து விட்டால் நான் தான் இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று பிரார்த்தித்தார். இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத் தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப் பெண்ணான) ஹாஜரைக் கொடுங்கள் என்று (அவையோரிடம்) சொன்னான். சாரா இப்ராஹீம் (அலை) அவர்களிம் திரும்பி வந்து அல்லாஹ் இந்த காஃபிரை வீழ்த்தி நமக்குப் பணி புரிய ஒரு அடிமைப் பெண்ணையும் தந்து விட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்.
நூல். புகாரி 2217)

அல்லாஹ் நமது பெண்மக்களை கல்வியில் ஆயிஷா (ரலி) யைப்போன்றும் ஒழுக்கத்தில் பாத்திமா(ரலி) யைப்போன்றும். திருமணத்தை தேர்வு செய்வதில் உம்மு சுலைம்(ரலி) அவர்களைப்போன்றும். இஸ்லாமிய பற்றில் அன்னை கதிஜா (ரலி) அவர்களைப்போன்றும் . இன்னும் எல்லா நிலைகளிலும் நபி தோழியர்களை பின் பற்றி வாழச்செய்வானாக  ஆமீன்…