Wednesday 10 December 2014

பேனுதல்


இஸ்லாம் மனித வாழ்வின் அத்துனை பகுதிகளிலும் ஒழுக்கத்தை போதனை செய்கிறது.ஆதாபுகள் எனும் ஒழுக்க பண்புகளையே வணக்கங்களின் பிரதான மானதாக எடுத்துரைக்கிறது.கடமைகளை செய்யச்சொல்லும் இஸ்லாம் அதை கவனமாகவும் செய்யச்சொல்கிறது.கவனம் தவறினால் காலப்போக்கில் அது கடமை தவற காரணமாகிவிடும்.கடமைகளை அலட்சியம் செய்பவர்கள் அதை ஒரே நாளில் கற்றுக்கொள்ளவில்லை.

இப்லீஸ் ஒரு முஸ்லிமிடம் பாவத்தை நன்மையாக ஒருபோதும் காட்டி ஏமாற்ற முடியாது, ஆனால் நன்மையை அலட்சியமாகவும், பாவத்தை பொழுதுபோக்காகவும் காட்டிட முடியும்.வழிபாடுகளில் அலட்சியமும் பாவம் செய்வதில்பொடுபோக்குத்தனமும் இப்லீஸின் மிகப்பெரும் ஆயுதம்.ஆகையால்தான் பெருமக்கள் இவ்வாறு சொல்வார்கள்

إنّ آدم عليه السلام خرج من الجنّة بذنبٍ واحد

وإبليس صار خالداً في النار بذنبٍ واحد

فما يُأمِّنُكَ أن تُأخذ بالذنب الواحد ؟
!
لا تحقِرنّ ذنباً تفعله ولا تحقِرنّ معروفاً تفعله

أنت تحتاج كل شئ وانت لا تدري الموازين كيف هي

ஆதம் அலை அவர்கள் ஒரு பாவத்தால் சுவனத்திலிருந்து வெளியானார்கள்.   இப்லீஸ் ஒரு பாவத்தால் நிரந்தர நரகவாதியாகிவிட்டான்.எனவே ஒரு பாவம்தானே என்று அலட்சியத்துடன் துணிந்துவிடாதே.நீ செய்யும் எந்த பாவத்தையும் சாதாரணமாக கருதி செய்துவிடாதே.நீ செய்யும் எந்த நன்மையையும் சாதாரணமாக கருதி விட்டுவிடாதே.
நாளை உன் மீஸானுக்கு எதுவும் தேவையாக இருக்கலாம்.
ஒழுக்கங்களே முஸ்தஹப்புக்களை பாதுகாக்கிறது.முஸ்தஹப்புக்கள் சுன்னத்துக்களை பாதுகாக்கிறது.சுன்னத்துக்கள் பர்ழான கடமைகளை பாதுகாக்கிறது.

இஸ்லாம் எந்த ஒரு காரியத்தையும் தூரநோக்குடன் பார்க்கிறது.

பெரும் பாவத்திலிருந்து விலகி வாழவேண்டுமானால் கட்டாயமாக சிறுபாவத்தை விட்டும் முதலில் தூரமாகவேண்டும்.

விபச்சாரத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள விரும்பும் ஒரு முஃமின் பார்வையை பேணவேண்டியதின் அவசியத்தை முதலாவதாக இஸ்லாம் போதனை செய்கிறது.

அதிகாரத்திலிருக்கும் ஒருவர் ஊழல்,லஞ்சம் போன்ற சமூகதீங்குகளிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட அன்பளிப்புக்களையும் தவிர்க்கச்சொல்கிறது.

வட்டியின் விபரீதத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள விரும்பும் ஒரு முஃமின் கடனைக்கூட மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளச்சொல்கிறது.
ஒருபடி மேலே சொல்லவேண்டுமானால், ஹராமை தவிர்ந்துகொள்ள தேவைப்பட்டால் ஹலாலையும் தள்ளிவைப்போம் என்பதே இஸ்லாத்தின் அடிப்படைவாதம்.

قال عمر - رضي الله عنه -: "تركنا تسعة أعشار الحلال مخافة الربا

مصنف عبد الرزاق

வட்டியை பயந்து ஹலாலில் பத்தில் ஒன்பதை நாங்கள் விட்டு விடுவோம் என ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
இது பேனுதலின் உச்சநிலையாகும்.
ஸஹாபாக்கள் தங்கள் வாழ்வில் மிகப்பெரும் தேவையுள்ளவர்களாக இருந்தாலும் யாரிடமும் கையேந்திவிடாமல் அவர்களின் பேனுதல் அவர்களை பாதுகாத்ததாக அல்லாஹ் தன் திருமறையில் புகழ்ந்து கூறுகிறான்.


يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُم بِسِيمَاهُمْ لَا يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا ۗ وَمَا تُنفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّـهَ بِهِ عَلِيمٌ

(பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டுஅறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள் (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும்அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் (அல் குர்ஆன் 2:273)

            பேனுதலில் மூன்றுவகை உண்டு

ஹராமை விட்டுவிடுவது.இது முதல் நிலை.ஹராமாக இருக்குமோ எனும் சந்தேகம் வந்துவிட்ட விஷயங்களையும் ஓரம்கட்டுவது.இது இரண்டாம் நிலை.ஹராமுக்கு பயந்து ஹலாலையே விடுவது. இது மூன்றாம் நிலை.

பேனுதல் என்றால் என்ன வென்று விளக்கம் தரும் பெருமக்கள் இந்த மூன்றாம் கருத்தையே வலியுறுத்தி கூறுகின்றனர்.

الوَرَع في الشرع ليس هو الكف عن المحارم والتحرُّج منها فقط، بل هو بمعنى الكف عن كثيرٍ من المباح، والانقباض عن بعض الحلال خشية الوقوع في الحرام

மார்க்கத்தில் பேனுதல் என்பது ஹராமான காரியங்களை தவிர்ந்துகொள்வது மட்டுமல்ல,மாறாக ஹராமை பயந்து பல ஆகுமான காரியங்களையும்,சில தெளிவான ஹலாலையும் கூட விட்டுவிடவேண்டும்.இந்த அடிப்படையில் தான்  حسنات الابرار سیئات المقربین
நல்லோர்களின் சில நன்மையான காரியங்கள் கூட இறைநெருக்கம் பெற்ற ஸாலிஹீன்களிடம் குற்றத்திற்குரியவையே! என்று கூறப்படும்.

قال إبراهيم بن أدهم رحمه الله: هو ترك كل شبهة
பேனுதலுக்கு விளக்கமளிக்கும் ஹழ்ரத் இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹ் அவர்கள் சந்தேகம் வந்துவிட்ட காரியங்களை விட்டுவிடுவது என்று கூறுகிறார்கள்.
உண்மைதான்! பரிசுத்தமான அந்த மனிதப்புனிதர்களான ஸஹாபாக்களுக்கு அப்படிப்பட்ட பாடங்களையே நபி ஸல் அவர்கள் போதனை செய்தார்கள்.

أخرج الشيخان البخاري ومسلم عن أبي هريرة -رضي الله عنه- عن النبي -صلى الله

 عليه وسلم- قال: "اشترى رجلٌ من رجل عقارًا، فوجد الذي اشترى العقار في عقاره 

جَرَّة فيها ذهب، فقال الذي اشترى العقار للبائع: خذ ذهبك، أنا اشتريت منك الأرض، ولم

أشترِ الذهب؛ وقال الذي باع له الأرض: إنما بعتُك الأرض وما فيها؛ فتحاكما إلى رجل، 

فقال الذي تحاكما إليه: ألكما ولد؟! قال أحدُهما: نعم؛ وقال الآخر: لي جارية -أي بنت-؛

قال: أنكحا الغلام الجارية، وأنفقا على أنفسهما منه؛ فانصرفا"
.
முன் வாழ்ந்த பனீஇஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் ஒரு நிலத்தை வாங்கினார்.நிலம் வாங்கியவர் தன் நிலத்தின் கீழே ஒரு தங்க புதையலை பெற்றுக்கொண்டார்.உடனே அதை நிலம் விற்றவரிடம் கொண்டு வந்து கொடுத்து, நான் உங்களிடம் காலிமனையைதான் வாங்கினேன்.இந்த தங்கத்தை அல்ல.எனவே இது உங்களுக்கே பாத்தியப்பட்டது என்று கூறினார்.   அதற்கு நிலம் விற்பனையாளர் தோழரே!நான் உங்களுக்கு அந்த நிலத்தை விற்றுவிட்டேன்.எனவே அதற்கு கீழ் இருப்பதும் உங்களுக்கே சொந்தமானது.என்று கூறி அதை வாங்க மறுத்துவிட்டார்.இறுதியாக அவ்விருவரும் நீதிபதியிடம் முறையிட்டபோது வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள்- உங்கள் இருவருக்கும் குழந்தைகள் உண்டா?என கேட்டபோது அவ்விருவரில் ஒருவர் தனக்கு ஆண்மகன் உண்டு எனவும்,மற்றொருவர் தனக்கு பெண்மகள் உண்டு என்றும் கூறினர்.
அப்படியானால் நீங்கள் இருவரும் சம்பந்திகளாக ஆகிவிடுங்கள்.உங்களில் ஒருவரின் மகனுக்கு மகளை நிகாஹ் செய்துவைத்துவிடுங்கள்.அந்த புதைய  லை அவ்விருவருக்கு சொந்தமாக்கிவிடுங்கள் என்றும் அற்புதமான தீர்ப்பொ ன்றை செய்தார் என்று நபி ஸல் அவர்கள் தங்களின் தோழர்களுக்கு கூறினா  ர்கள்.

இதோ நம் முன்னோர்களான நல்லோர்கள் தங்கள் வாழ்வில் கடைபிடித்த பேனுதலை சற்று உற்றுநோக்குங்கள்.

பிறரை விமர்சிப்பதில் பேனுதல்

عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم حين قال لها أهل الإفك... الحديث، وفي آخره: ) وكان رسول الله صلى الله عليه وسلم يسأل زينب بنت جحش عن أمري، فقال: يا زينب، ما علمت؟ ما رأيت؟ فقالت: يا رسول الله أحمي سمعي وبصري، والله ما علمتُ عليها إلا خيرًا. قالت: وهي التي كانت تساميني، فعصمها الله بالورع
رواه البخاري ومسلم

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் பற்றி இட்டுக்கட்டுபவர்கள் அவதூறுகளை பரப்பியபோது நபி ஸல் அவர்கள் தன் குடும்பத்தினர்கள் சிலரிடம் அதுபற்றி அபிப்ராயம் கேட்டார்கள்.அவர்களில் ஜைனப் பிந்த் ஜஹ்ஷ் அவர்களும் ஒருவர்.
ஜைனபே! ஆயிஷாவைப்பற்றி உன் அபிப்ராயம் என்ன?நீ தெரிந்து வைத்திருப்பது என்ன? என வினவியபோது,அன்னை ஜைனப் ரலி அவர்கள்   அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இப்படிப்பட்ட அவதூறுகளை விட்டும் என் செவியையும் பார்வையையும் பாதுகாத்துக்கொள்கிறேன்.அல்லாஹ்வின் மீது சத்தியமாக ஆயிஷா நல்ல பெண் என்று நான் அறிவேன் என்று கூறினார்கள்.    ஜைனப் ரலி அவர்களிடம் இருந்த பேனுதலால் இப்படிப்பட்ட அவதூறுகளிலி  ருந்து அல்லாஹ் அவர்களை பாதுகாத்தான் என அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பணம் சம்பாதிப்பதில் பேனுதல்

عن يوسف بن أسباط، أن الثوري وابن المبارك اختلفا في رجل خلف متاعه عند غلامه، فباع ثوبًا ممن يكره مبايعته، قال: قال الثوري: يخرج قيمته، يعني قيمة الثوب. وقال ابن المبارك: يتصدق بالربح.
فقال الرجل: ما أجد قلبي يسكن إلا أن أتصدق بالكيس. وقد كان ألقى الدراهم في الكيس. فقال أبو عبد الله بارك الله فيه
أحمد بن حنبل: الورع ص23.
ஒருவர் தன் அடிமையிடம் சில பொருட்களை கொடுத்து விற்று வரச்சொன் னார்.அதில் குறையுள்ள ஆடையும் இருந்தது,அந்த ஆடையை வாங்குபவரிட  ம் தெளிவாகச்சொல்லாமல் விற்பனை செய்துவிட்டார்.இப்போது அந்த ஆடையை விற்ற பணம் இவருக்கு ஹலாலா?என்ற விஷயத்தில் இமாம் சுஃப்யான் ஸவ்ரி ரஹ் அவர்களுக்கும், இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ் அவர்களுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
அந்த ஆடையின் விலை என்னவோ அதை தர்மம் செய்துவிடவேண்டும் என்று சுஃப்யான் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.இல்லை இல்லை அதன் இலாபத்தை மட்டும்தர்மம் செய்தால் போதுமானது என்று இப்னுல்முபாரக் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் அந்த பிரச்சனைக்கு சொந்தக்காரரான அந்த மனிதர் அந்த ஆடையை இவ்வாறு விற்பனை செய்ததை கேள்விப்பட்டது முதல் என் உள்ளத்தில் உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது.அதனால் அந்த ஆடையின் விலை,அதன் இலாபம் மட்டுமல்ல அந்த பணத்தை போட்டு வைத்திருந்த பையையும் ஸதகா செய்தால் தான் என் உள்ளத்தில் உறுத்தல் நீங்கும் என்று கூறினாராம்.

சுருக்கமாகச்சொன்னால் நம்முடைய ஒவ்வொரு காரியங்களிலும் பேனுதல் கடைபிடிப்பது அவசியமாகும்.அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் ஃபத்வா  வை விட தக்வாவுக்கே முன்னுரிமை தருகின்றான்.பேனுதலுக்கு மறுபெயர் தக்வா.
இன்றைக்கு நம்முடைய பெரிய பளஹீனம் உலக காரியங்களில் நம்மிடம் இருக்கும் பேனுதல் தீனுடையகாரியங்களில் இல்லை.
பத்து மணிக்கு இரயில் என்றால் ஒரு மணிநேரம் முன்னர் அங்கு இருக்க முயற்சி செய்கிறோம்.நம் இல்லத்திற்கு ஐந்து விருந்தாளிகள் வருகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் ஏழுபேருக்கு தேவையான உணவை தயார் செய்யச்சொல்வோம்.இந்த முன் எச்சரிக்கை உணர்வு மார்க்க காரியங்களில் ஏன் இல்லாமல் போனது?
குழந்தை வளர்ப்பில் பேனுதல்

ஒரு பேனுதல் உள்ள தாயால் மட்டும் தான் பேனுதல் நிறைந்த குழந்தையை இந்த சமூகத்திற்கு உருவாக்கித்தர முடியும்
இமாம் ஷாபிஈ ஏழு வயதில் முழு குர்ஆனையும் மனனம் செய்து ஹாபிழாக ஆனார்கள்.பத்து வயதில் முஅத்தா எனும் ஹதீஸ் நூலை மனனம் செய்து முடித்து பதிமூன்றாவது வயதில் மக்காவின் மிகப்பெரும் பகீஹாக உயர்ந்தார் கள்.அவர்களின் அசாதாரணமான மனன திறமைக்கு காரணத்தை அவர்களிடம் வினவப்பட்டபோது
குழந்தையாக நான் இருந்தபோது என் தாய் எனக்கு ஒரு நாளும் ஒழு இல்லாமல் பாலூட்டியதில்லை என்று கூறினார்கள்
ஒரு தாயின் பேனுதல்,ஒழுக்கம் ஒரு மாமனிதரை இந்த உம்மத்துக்கு பெற்று  த்தந்தது.

கல்விக்கடல் என்றும் ஆண்மீக ஊற்று என்றும் நாமெல்லாம் கொண்டாடும் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் ஒரு தாயின் பேனுதலான வளர்ப்பில் உருவானவர்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களின் தாயாருக்கு இரண்டு மகன்கள்.ஒருவர் முஹம்மத் அல்கஸ்ஸாலி- இன்னொருவர் அஹ்மத் அல் கஸ்ஸாலி.இவர்களின் தாயார் இவ்விருவரையும் மிகச்சிறந்த அறிஞர்களாகவும் வணக்கசாலிக  ளாகவும் உருவாக்கினார்கள்.
இதில் முஹம்மத் அல்கஸ்ஸாலி ரஹ் அவர்கள் மிகப்பெரும் அங்கீகாரம் பெற்று மக்களுக்கு இமாமத் செய்யும் மகத்தான பணியில் ஈடுபட்டார்கள்.இவர் சகோதரர் அஹ்மத் அல் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் மாபெரும் வணக்கசாலி என்றாலும் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களுக்கு பின்னால் தொழமாட்டார்.இது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவர்களின் தாயாரிடம் முறையிடுகிறார்கள்.அவர்களின் தாயாரும் அஹ்மத் அவர்களை அழைத்து நீ உன் சகோதரருக்குப்பின்தான் தொழவேண்டுமென கண்டிப்புடன் கூறவே அதை ஏற்றுக்கொள்கிறார்.

ஒருநாள் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களுக்கு பின் தக்பீர் கட்டி தொழ ஆரம்பித்தார்.இரண்டு இரக்கஅத் தொழுகையில் முதல் இரக்கஅத்தை இமாம் அவர்கள் நிறைவு செய்தபோது அவர்களின் சகோதரர்  தக்பீரை அவிழ்த்து  விட்டு இடையிலேயே சென்றுவிட்டார். இது இமாம் கஸ்ஸாலிக்கு இன்னும் மிகுதியான வேதனையளித்தது.

மீண்டும் அவர்களின் தாயாரிடம் முறையிட்டபோது, அவ்விருவரையும் அழைத்து அவர்களின் தாயார் விசாரித்தார்கள்.
அப்போது  இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களின் சகோதரர் - தாயார் அவர்களே! என் சகோதரர் முதல் இரக்கஅத்தில் இறைச்சிந்தனையுடன் தொழுதார்.இரண்டாவது இரக்கஅத்தில் அல்லாஹ்வின் சிந்தனை அவருக்கு தவறிவிட்டது.இதை நான் கஷ்பின் மூலம் த்ரிந்துகொண்டேன் எனவே நான் தக்பீரை அவிழ்த்துவிட்டு தனியாக தொழுதேன் என்று கூறினார்கள்.

இது குறித்து இமாம் கஸ்ஸாலி அவர்களிடம் விசாரித்தபோது மறுக்காமல் உண்மைதான் என ஒப்புக்கொண்டார்கள்.நான் தொழுகைக்கு முன் நிபாஸ் எனும் மார்க்கச்சட்டம் குறித்து கிதாபை ஆய்வு செய்துகொண்டிருந்தேன்.   இந்நிலையில் தொழுகையின் நேரம் வரவே கிதாபை மூடிவைத்து தொழ வந்துவிட்டேன்.எனவே தான் இரண்டாவது இரக்கஅத்தில் நிபாஸ் பற்றிய சட்டங்களில் கவனம் வந்துவிட்டது.என்றார்கள்.
அப்போது அவர்களின் தாயார், நீங்கள் இருவரும் தவறு செய்தவர்கள்.இமாம் கஸ்ஸாலி அவர்களை நோக்கி அல்லாஹ்வின் சிந்தனை தொழுகையில் தப்பிப்போக என்ன காரணத்தை நீ சொன்னாலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்கள்.
இமாம் அஹ்மத் ரஹ் அவர்களை நோக்கி நீ முதல் இரக்கஅத்தில் அல்லாஹ் வின் சிந்தனையுடன் தொழுதாய்.ஆனால் இரண்டாவது இரக்கஅத்தில்   உன்சகோதரரின் குறையின் பக்கம் உன்கவனத்தை திருப்பிவிட்டாய்.எனவே நீங்கள் இருவரும் நான் விரும்பிய பிள்ளைகளாக இல்லை என்று எச்சரித்ததும் அவ்விருவரும் அதற்காக மன்னிப்பு கேட்டனர்.(குதுபாத் துல்பிகார்)

மார்க்கத்தீர்ப்பு வழங்குவதில் பேனுதல்

سئل الشعبي عن مسألة، فقال: لا أدري، قيل له: ألا تستحي من قول "لا أدري" وأنت فقيه العراق؟ فقال: لكن الملائكة لم تستح حين قالوا: "سبحانك لا علم لنا إلا ما علمتنا"..
இமாம் ஷுஃபி ரஹ் அவர்களிடம் ஒரு மஸ்அலாவை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் தெரியாது என்று பதில் கூறினார்கள்.இராக்கின் மிகச்சிறந்த பகீஹாக இருக்கும் நீங்கள் தெரியாது என்று சொல்ல வெட்கமாக இல்லையா என கேட்கப்பட்டபோது -
سبحانك لا علم لنا إلا ما علمتنا
என்று சொல்ல மலக்குகளே வெட்கப்படவில்லை.நான் ஏன் வெட்கப்படவேண்டும்?என்று கேட்டார்களாம்.
வணக்கமானாலும் வாழ்க்கையானாலும் அதில் பேனுதலை கடைபிடித்து வாழ வேண்டுமென நபி சல் அவர்கள் போதிக்கிறார்கள்.

ركعتان من ورع خيرٌ من ألف ركعة من مخلط))
الجامع الصغير عن أنس
பேனுதலுடன் தொழும் இரண்டு இரக்கஅத் பேனுதல் இல்லாமல் தொழும் ஆயிரம் இரக்கஅத்தை விட சிறந்தது என நபி ஸல் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ் நம்முடைய காரியங்கள் அனைத்திலும் பேனுதலை கடைபிடித்து வாழ தவ்ஃபீக் செய்வானாக

Wednesday 3 December 2014

மஷ்வரா


முஸ்லிம்கள் தங்கள் வாழ்வில் ஒரு காரியத்தை செய்யலாமா?வேண்டாமா?என்ற தடுமாற்றம் வரும்போது அதிலிருந்து தெளிவான முடிவு எடுப்பதற்கு இரண்டு வழிமுறைகளை இஸ்லாம் கற்றுத்தருகிறது.
ஒன்று:இஸ்திகாரா மற்றொன்று இஸ்திஷாரா (அதாவது மஷ்வரா)

அல்லாஹ் திருக்குர்ஆனில் நபி ஸல் அவர்களின் மகத்தான வெற்றிக்கு பின் இருக்கும் செயல்பாடுகளை கூறும்போதும்,முஸ்லிம்களின் தனித்துவங்களை விவரிக்கும் போதும் மஷ்வராவை பிரதானமாக எடுத்துரைக்கின்றான்

. وَشَاوِرْهُمْ فِي الْأَمْرَ

சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக என நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் உதரவிடுகின்றான்.

وَالَّذِينَ اسْتَجَابُوا
 لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ 

இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.
இல்முல் அவ்வலீன் வல் ஆகரீன் கொடுக்கப்பட்ட நபி ஸல் அவர்களை தங்களின் காரியங்களில் மஷ்வரா செய்துகொள்ளும்படி அல்லாஹ் உத்தரவிடும்போது நம்மைப்போன்ற குறுமதிகொண்டவர்கள் கட்டாயமாக ஆலோசனை செய்துகொள்ளவேண்டும் என்பதை இந்த வசனம் அழுத்தமாக பேசுகின்றது.

يقول أبو هريرة _رضي الله عنه_: "ما رأيت أكثر مشورة لأصحابه من رسول الله _صلى الله عليه وسلم_ لأصحابه
நபி ஸல் அவர்கள் தம் தோழர்களிடம் மஷ்வரா செய்ததுபோல வேறு யாரும் தம் தோழர்களிடம் மஷ்வரா செய்ய நான் கண்டதில்லை என ஹழ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் மீது நயவஞ்சகர்கள் இட்டுக்கட்டியபோது ஹழ்ரத் அலி ரலி.உஸாமா ரலி போன்ற சின்னவயதினர்களிடம் நபி ஸல் அவர்கள் ஆலோசனை செய்தார்களென்பதை ஹதீஸ்களில் காணக்கிடைக்கிறது.

وشاور علياً وأسامة فيما رمى به أهل الإفك عائشة رضي الله عنها، فسمع منهما

குழந்தையின் பால் குடியை நிறுத்துவது போன்ற சின்ன விஷயங்களில் கூட ஆலோசனை அவசியம் என்று திருக்குர்ஆன் போதிப்பதை பார்க்க முடிகின்றது.

إِنْ أَرَادَا فِصَالاً عَنْ تَرَاضٍ مِنْهُمَا وَتَشَاوُرٍ فَلا جُنَاحَ عَلَيْهِمَا"(البقرة: من الآية
233)
தன் மகனை அறுக்கச்சொல்லி கனவின் முலம் இறைக்கட்டளையை அறிந்துகொண்ட நபி இப்றாஹீம் அலை அவர்கள்-
மகனே! கனவில் உன்னை அறுக்கக்கண்டேன்,உன் அபிப்ராயம் என்ன? என்று  தன் மகனிடம் ஆலோசனை செய்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.

وإبراهيم _عليه السلام_ عندما رأى في الرؤيا الأمر بذبح ابنه ـ ورؤيا الأنبياء حق ـ 

استشار ابنه فقال: "... يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قَالَ يَا 

أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ"(الصافات: من الآية102).

ஸபா நாட்டின் அரசி தம் அமைச்சர்களிடம் நபி ஸுலைமான் அலை அவர்கள் விஷயத்தில் ஆலோசனை செய்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது

فإن ملكة سبأ قالت لقومها: "يَا أَيُّهَا الْمَلَأُ أَفْتُونِي فِي أَمْرِي مَا كُنْتُ قَاطِعَةً أَمْراً حَتَّى تَشْهَدُونِ"(النمل: من الآية32).

எனவே பிரமுகர்களே! "என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல" என்று கூறினாள்.
அதற்கு பதில் கூறிய அமைச்சர்கள் இவ்வாறு சொன்னார்கள்

 "قَالُوا نَحْنُ أُولُو قُوَّةٍ وَأُولُو بَأْسٍ شَدِيدٍ وَالْأَمْرُ إِلَيْكِ فَانْظُرِي مَاذَا تَأْمُرِينَ" (النمل:33)

"நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்;(ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்" என்று அவர்கள் சொன்னார்கள்.
அவர்களின் ஆலோசனை திருப்தியளிக்காதபோது அந்த அரசி இப்படிச்சொன்னாள்

"قَالَتْ إِنَّ الْمُلُوكَ إِذَا دَخَلُوا قَرْيَةً أَفْسَدُوهَا وَجَعَلُوا أَعِزَّةَ أَهْلِهَا أَذِلَّةً

وَكَذَلِكَ يَفْعَلُونَ" (النمل:34)

அவள் கூறினாள்; "அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப்படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.
அந்த அரசியின் ஆலோசனையின் பரக்கத்தால் அவளுக்கு ஈமான் கிடைக்கிறது.

 فأنجاها الله من الكفر والضلال إلى الإسلام والهداية

இந்த மஷ்வரா முறை இஸ்லாத்தின் தனித்துவமாகும்.
இன்று உலகில் நடைமுறையில் இருக்கும் ஜனநாயக முறைக்கும் இஸ்லாமிய ஆட்சித்தேர்வு முறைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் மஷ்வரா தான்.இஸ்லாமிய ஆட்சித்தேர்வுமுறை மஷ்வராவை அடிப்படை  யாக கொண்டது.
ஜனநாயகத்தில் பெரும்பான்மைக்கு முதலிடம் வழங்கப்படும் .மஷ்வரா முறையில் அறிவுக்கே முதலிடம்வழங்கப்படும்.

            மஷ்வராவின் ஒழுங்குகள்

1.மஷ்வராவின் முதலாவது ஒழுங்கு துறைசார்ந்த அறிஞர்களிடம் ஆலோசனை தேடுவது.மருத்துவம் பற்றி டாக்டரிடமும் மார்க்கம் பற்றி ஆலிம்களிடமும் ஆலோசனை தேடவேண்டும்.சுறுக்கக்கூறின் நாம் ஆலோசனை தேடுபவர் அதற்கு தகுதியானவராக இருக்க வேண்டும்.தீனு  டைய காரியங்களில் கண்டிப்பாக உலமாக்களிடம் தான் மஷ்வரா செய்ய வேண்டும்.ஏனெனில் பொறியியல் துறைச்சார்ந்த வேலைகளுக்கு டாக்டரை யோ,நோயாளிகளை குணப்படுத்த இஞ்சினியரோ நாம் அனுகுவதில்லை.அப்படி செய்தால் அது எவ்வளவு பெரும் மடத்தனம் என்பதை புரிந்து வைத்திருக்கின்றோம்.

2.ஷரீஅத்தில் எது பர்ள்,வாஜிப்,ஹராம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளதோ அவைகளில் மஷ்வரா கூடாது.
தொழலாமா?வேண்டாமா? மதுவை நிறுத்தலாமா?வேண்டாமா? போன்ற விஷயங்களில் ஆலோசனை அவசியம் இல்லை.ஏனெனில் அல்லாஹ்வும் ரசூலும் முடிவு செய்துவிட்ட விஷயத்தில் முஃமினகளுக்கு எந்த விருப்ப மும் கிடையாது என்று அல்லாஹ் கூறிவிட்டான்.

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّـهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை

3.எவரிடம் ஆலோசனை செய்யப்படுகிறதோ அவர் நம்பிக்கைக்குரியவராக இருக்கவேண்டும்.
ஆலோசனை செய்யப்பட்ட அந்த விஷயம் அமானிதம் என்பதை விளங்க வேண்டும்.
மஷ்வராவின் போது சில நன்மைகளை கருத்தில்கொண்டு புறம்பேசுவது கூடும் என மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர்.அதேசமயம் ஒருவரைப்பற்றி அபிப்ராயம் கூறும்போது கூடுதல் குறைவின்றி உள்ளதை உள்ளபடி கூற வேண்டும்.

4.எவரிடம் மஷ்வரா தேடப்படுகிறதோ அவர் தேடுபவரின் நன்மையை கருத்தில்கொண்டு சரியான ஆலோசனை வழங்க முற்படவேண்டும்.எந்த ஒரு மனிதன் தன் சகோதர முஸ்லிமிடம் ஆலோசனை தேடி,அவருக்கு தவறான ஆலோசனை வழங்குவாரானால் அவர் அவருக்கு மோசடி செய்துவிட்டார் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

5.ஆலோசனை கேட்கப்படுபவர் கேட்பவரைவிட வயதில் அல்லது அறிவில் மூத்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை.
6.மஷ்வராவை முடிவு செய்யும் உரிமை கேட்பவருக்குச்சொந்தமானது. நான் வழங்கிய மஷ்வராவை தான் முடிவு செய்ய வேண்டுமென நிர்பந்தி க்க கூடாது.

ما خاب من استخار ولا ندم من استشار، ولا عال من اقتصد.
 رواه الطبراني

இஸ்திகாரா செய்தவன் நஷ்டப்படமாட்டான்.ஆலோசனை செய்தவன் வருத்தப்படமாட்டான்.பொருளை நடுநிலையாக செலவு செய்தவன் ஏழையாக மாட்டான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

في قصة الحديبية لما صالح النبي صلى الله عليه وسلم قريشاً على الرجوع وعدم دخول مكة عامهم هذا، ثم قال لأصحابه: "قوموا فانحروا" حتى قال ذلك ثلاث مرات فلم يقم أحد منهم، فدخل صلى الله عليه وسلم على أم سلمة رضي الله عنها فذكر لها ما لقي من الناس، فقالت له: يا نبي الله، اخرج ثم لا تكلم أحداً منهم كلمة حتى تنحر بدنك وتدعو حالقك فيحلقك. فلما فعل ذلك قاموا فنحرو

ஹுதைபிய்யாவில் நபி ஸல் அவர்கள் இஹ்ராமை தாங்கள் இவ்வாண்டு மக்காவின் உள்ளே நுழையாமல் திரும்பிச்செல்வதாக குரைஷிகளிடம் உடன்படிக்கை செய்தபோது- அதை தம் தோழர்களிடம் பலிப்பிராணியை அறுத்துவிட்டு இஹ்ராமை கலைந்துவிடுங்கள் என மூன்று தடவை கூறினார்கள்.ஆனாலும் அவர்களில் யாரும் தயாராக இல்லை.இந்நிலை யில் இது பற்றி தம் மனைவி உம்மு ஸலமா ரலி அவர்களிடம் ஆலோசனை தேடுகிறார்கள்.அல்லாஹ்வின் நபி அவர்களே! நான் ஒரு மஷ்வரா கூறுகின்றேன்.நீங்கள் யாரிடமும் எதுவும் கூறாமல் உங்களின் பலிப்பிராணியை அறுத்து உங்களின் முடியையும் கலைந்துவிடுங்கள் என்று கூறினார்கள்.
நபி ஸல் அவர்களும் அவ்வாறு செய்தபோது எதுவும் பேசாமல் அனைத்து ஸஹாபாக்களும் அவ்வாறு இஹ்ராமை கலைந்துவிட்டனர்.
மனைவிமார்களிடம் ஆலோசனைசெய்வது நபி ஸல் அவர்களின் சுன்னத் என்பதை இதன் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.அதைப்போல சில நேரங்களில் நம்மை விட சின்னவர்களிடமும்  நல்ல ஆலோசனைகள் பெற முடியும்.இதுவே மஷ்வராவின் பரக்கத்.