Thursday 28 August 2014

மாணவர்களை தேடும் அரபி பாடசாலை




கியாமத்தின் அடையாளம் குறித்து கூறுகின்ற பொழுது பெருமானார் (ஸல்) அவர்கள்  சில செய்திகளை, தீமைகளை குறிப்பிட்டு  சொன்னார்கள் அவற்றில் மி முக்கியமாக ஒரு செய்தியை சொன்னார்கள்.  

وأخرج أحمد والبخاري ومسلم وابن ماجة عن ابن مسعود رضي الله عنه : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : « يكون بين يدي الساعة أيام فيرفع فيها العلم وينزل فيها الجهل ويكثر في الهرج » .

கியாமத்திற்கு முன் சில நாட்கள வரும் அந்த நாட்களில் உலகத்தில் அறியாமை இறங்கும் மார்க்க கல்வியை உயர்த்தப்பட்டு விடும் கொலை அதிகமாகிவிடும் நாயகம் (ஸல்) அவர்கள்  சொன் அபாயமான ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

நூல். துர்ருல் மன்ஸூர். 

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வரை  எத்தனையோ மதரஸாக்களில் இட வசதி குறைவாக இருந்தது மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது  ஆனால் இந்த காலத்தில் மதரஸாக்கள் அதிகமாக இருகின்றது மாணவர்களின் எண்ணிக்கையோ சொல்வதற்கே வேதனைப்படும் அளவிற்கு மிக குறைவாக இருக்கிறது. இந்த போக்கு மாற வேண்டும் இதே நிலை தொடர்ந்தாள்.

இந்த சமுதாயம் மீண்டும் பழைய அறியாமை காலத்தின் பக்கம் சென்றுவிடும். நம் சமுதாய மக்கள் இதை பொருட்படுத்தாமல் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. 

ஊசலாடும் சமுதாயத்தின் உயிர் நாடி

وعماد هذا الدين الفقه وقال رسول الله صلى الله عليه وسلم

பெருமானார் (ஸல்) அவர்கள்  சொன்னார்கள்.  

மார்ர்க்கக் கல்வி இஸ்லாத்தின் உயிர் நாடியாகும் ஈமானின் தூணாகும்.

நூல். இஹ்யா 


யார் பிறருக்கு கற்று கொடுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் கியாமத் வரை நன்மைகள் வளர்த்து கொண்டே இருப்பான் 

'யார் கல்வியை கற்று அதன் படி அமல் செய்கின்றாரோ அவனுக்கு அறியாதவற்றை கற்று கொடுப்பது' அல்லாஹ்வின் மீது கடமையாகும்.


பரக்கத் எது கல்வியா ? செல்வமா?

நாம் பணத்தையும் நகைகளையும் வீடு வாசல்களையும், சொத்துக்களையும் பரக்கத் என்று சொல்கின்றோம் ஆனால்நாயகம் (ஸல்) அவர்கள்  அவர்கள் கல்வியை தான் பரக்கத் என்று சொன்னார்கள்

وقال عليه السلام " إذا أتى علي يوم لا أزداد فيه علماً يقربني إلى الله عز وجل فلا بورك لي في طلوع شمس ذلك اليوم

இறை நெருக்கத்தை தரும் ஒரு புதிய கல்வியியை நான் எந்த நாளில் அதிகமாக்கி கொள்ளவில்லையோ அந்நாள் என் வாழ்வின் பரக்கத் அற்ற நாள்.

நூல். இஹ்யா.
   

அறம் வளர்க்கும் மதரசாக்களே அரண் காக்கும் ஆலயம்.


وعن حذيفة بن اليمان قال : قال رسول الله صلى الله عليه وسلم أن القوم ليبعث الله عليهم العذاب حتماً مقضياً فيقرأ صبي من صبيانهم في المكتب { الحمد للَّهِ رَبّ العالمين } فيسمعه الله تعالى فيرفع عنهم بسببه العذاب أربعين سنة 

நாயகம் (ஸல்) அவர்கள்  சொன்னார்கள் வரம்பு மீறி                      நடந்த ஒரு கூட்டத்தார் மீது அல்லாஹ் தீர்மானிக்கப்பட்ட வேதனையை இறக்க நாடினான்.  அந்த சமயத்தில் அந்த ஊரின் மக்தப் மதரஸாவில் ஒரு சிறுவன் வாய் திறந்து 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்ற வேத வரிகளை ஓத ஆரம்பித்தான் அதை கேட்ட அல்லாஹ் அந்த  ஊரை விட்டும் தனது வேதனையை 40 வருடங்க்கள் தள்ளி வைத்தான்.

நூல். தப்ஸீர் ராஸி
  
ஊரை பாது காக்கும் மதரசாக்களுக்கு தங்கள் பிள்ளைகளில் ஒருவரையாவது அனுப்பி மதரஸாக்களை பலப்படுத்துவது தான் இந்த சமுதாயம் அவசரமாகவும் அவசியமாகவும் செய்ய வேண்டிய பணியாகும். 


கல்விக்கு கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன கண்ணியம்.

عن أبي الطفيل عامر بن واثلة، أن نافع بن عبد الحارث لقي عمر بن الخطاب بعسفان، وكان عمر استعمله على مكة، فقال له عمر: من استخلفت على أهل الوادي؟ قال: استخلفت عليهم ابن أبزي. قال: وما ابن أبزي؟ فقال: رجل من موالينا. فقال عمر [بن الخطاب] (1) استخلفت عليهم مولى؟. فقال: يا أمير المؤمنين، إنه قارئ لكتاب الله، عالم بالفرائض، قاض. فقال عمر، رضي الله عنه: أما إن نبيكم صلى الله عليه وسلم قد قال: "إن الله يرفع بهذا الكتاب قومًا ويضع به آخرين" (2

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களால் மக்காவின் கவர்னராக நியமிக்கப்பட்ட நாபிஹ் பின் அப்துல் ஹாரிஸ் அவர்கள் உஸ்பான் என்ற மக்காவிற்கு அருகில் உள்ள இடத்தில் கலிபா உமர் (ரலி) அவர்களை சந்தித்தார்கள். அவரிடம் உமர் கேட்டார்கள் இப்பொழுது மக்காவின் கவர்னராக யாரை நியமித்து விட்டு இங்கு வந்தீர்கள் என்று கேட்டப் பொழுது நாபிஹ் சொன்னார் இப்னு ஹப்ஸா என்பவரை நியமித்துள்ளேன் உமர் கேட்டார்கள் .அவர் யார் ? நாபிஹ் சொன்னார் அவர் எங்களிடம் முன்பு அடிமையாக இருந்த ஒருவர் . அப்பொழுது உமர் கேட்டார் அடிமையாக இருந்த ஒருவரையா அந்த மக்களுக்கு கவர்னாராக ஆக்கினீர்கள் அவருக்கு மக்கள் எப்படி கட்டுப்படுவார்கள் என்று கேட்ட போது நாபிஹ் சொன்னார் அந்த ஹப்ஸா என்பவர் குர்ஆனை அழகிய முறையில் ஓத தெரிந்தவராகவும் பாகப்பிரிவினையின் சட்டங்கள் அறிந்த ஆலிமாகவும் இருகின்ரார் என்று சொன்னார் அதை கேட்ட உம்ர் சொன்னார்கள் இப்பொழுது நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு ஹதீஸ் எனக்கு நினைவுக்கு வருகின்றது (ஸல்) சொன்னார்கள் நிச்சயமாக அல்லா இந்த வேதத்தை கொண்டு ஒரு கூட்டத்தாருக்கு அந்தஸ்தை உயர்த்துவான். வேறு சிலரை தாழ்த்துவான் என்று சொன்னார்கள்.

நூல். தப்ஸீர் இப்னு கஸீர். 


மார்க்கக் கல்வியை போற்றிய மாண்பான காலம்.


கலீபா ஹாரூன் ரஷீத் அவர்கள் தனது மகனை மாமேதை அஸ்மயீ  (ரஹ்) அவர்களிடம் மார்க்க கல்வியையும் நல் ஒழுக்கத்தையும் போதிக்க அவர்களின் மதரஸாவுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள் ஒருநாள் தனது மகனை சந்திக்க மதரஸாவுக்கு வந்தவர்கள் அப்பொழுது அங்கு ஒரு காட்சியை கண்டார்கள் ஆசிரியர் அஸ்மயீ ஒழு செய்து கொண்டிருக்கிறார்கள் கலீபாவின் மகன் ஆசிரியருக்கு உதவியாக தண்ணீரை ஊற்றிக் கொண்டு இருந்தான் இதைக் கண்ட கலீபா அஸ்மயீ அவர்களிடம் கொஞ்சம் கடுமையுடன் கேட்டார்கள் நான் எனது மகனை உங்களிடம் நீங்கள் அவனுக்கு கல்வியையும்  ஒழுக்கத்தையும் கற்று கொடுக்கத்தானே அனுப்பினேன் 
நீங்கள் அவனை இவ்வாறு ஏவி இருக்கலாம் எவ்வாறெனில் அவன் தனது ஒரு கையால் தங்களின் காலை பிடிக்க வேண்டும் மற்றொரு  கையால் காலை கழுவ வேண்டும் இப்படி செய்ய நீங்கள் ஏன்?  அவனை    ஏவவில்லை என்று கேட்டார்கள். 

கல்வியைத்தேடி கலிபாக்களும் அவர்களின் பிள்ளைகளும் மரியாதையுடன் மதரஸா சென்ற அந்த காலம் பொற்காலமாகும். ஆனால் இன்று இஸ்லாமிய சமுதாயம் உலக கல்வியின் அளவற்ற மோகம் கொண்டு தங்கள் மக்களை தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்க்கும் நோக்கத்தில் அதற்காக ஆயிரங்களையும், லட்ச்சங்களையும் செலவு செய்து சிபாரிசிற்கு ஆட்களையும் தேடித் பிடித்து வரிசையில் காத்திருந்து விரும்பும் இடங்களில் சேர்க்கின்றனர். ஆனால் மனிதை மாசற்றவனாக மாற்றும் வலிமைக் கொண்ட  மார்க்கக் கல்வியை பிள்ளைகளுக்கு போதிப்பதில் மிகவும் அலட்சியம் காட்டுகின்றனர். இதனுடைய விளைவு என்னவென்றால் இன்று மதரஸாக்களில் மாணவர்கள் மிக குறைவாக இருக்கின்றனர். நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கக் கல்வியை தேடி பிள்ளைகள் போக வேண்டும் என்று சொன்னார்கள். இன்று பிள்ளைகளை தேடி மார்க்கக் கல்வி ஊர் ஊராக செல்வது உலமாக்களின் உள்ளங்களில் நிம்மதியை தொலைத்து விட்டது சமுதாயத்தின் சீரான எதிர்காலம்  குறித்து மிகப் பெரிய அச்சத்தை எற்ப்படுத்தி விட்டது 

இறை கல்வியும் இறை அச்சமும் 

மக்களை சீரழிக்கும் சூழ்நிலைகள் நம் வீடுகளில் புகுந்துவிட்ட இந்த காலத்தில் நம் பிள்ளைகள் மோசமாகி விடாமலும். நாசமாகி விடாமலும் பாதுகாக்கப்படுவதற்கு நமது கைகளில் இருக்கும் ஒரே வழி தான் மதரஸாக்கள். மதர்  (தாய்) போன்று பாதுகாக்கும்  அந்த மதரஸாக்களை இந்த சமுதாயம் புறக்கனிப்பது தான் இன்றைய உலகத்தின் மிகப்பெரிய ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது .

மேலும் மூஸா (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய செல்வந்தன் காரூன். அவன் கர்வமுடையவனாக இருந்தான். அவன் ஜக்காத் கொடுக்க மறுப்பவனாக இருந்தான் அவன் குறித்து  குர்ஆனில் அல்லாஹ் அல் கஸல் - சூராவில் வசனம் 79 முதல் 82 முடிய உள்ள இடத்தில் சொல்லும் - கருத்துக்கள் மறுமைக்கு எந்த வகையிலும் பயன்படாத அவனுடைய செல்வங்களை கண்டு மார்க்க அறிவற்ற பாமர மக்கள் ஏங்கிய பொழுது அதைக் கண்டு ஆலிம்கள் ஏங்காமல் உலகத்தின் மாய சூழ்ச்சியை புரிந்து கொண்டதை சொல்கின்றான் 

நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ஷைத்தானின் சூழ்ச்சிகளை புரிந்து கொள்வதில் ஆயிரம் வணக்கசாளிகளை விட ஒரு மார்க்க மேதை மிக திறமையானவர் .

இறை நேசர் பத்ஹீல் மூசிலி (ரஹ்) அவர்கள் மக்களிடம் கேட்டார்கள் நோயாளிக்கு உணவு, குடிபானம், மருந்து கொடுக்காமல் தடுக்கப்பட்டால் அவன் மரணிப்பதில்லையா இதே போன்று தான் உள்ளம்.  3 நாட்கள் கல்வியும் அறிவுஞானமும் இல்லாமல் ஒதுக்கப்பட்டால்  அந்த உள்ளம் மரணித்து விடும் 


அறியாமையின் ஆபத்துக்கள் 

நாயகம் சொன்னார்கள் கியாமத்திற்கு முன் இந்த உலகில் அறியாமை தங்கிவிடும் மார்க்க கல்வி உயர்த்தப்பட்டுவிடும் அந்த நேரத்தில் அறியாமையின் காரணமாக மனிதன் வாளைக் கொண்டு பெற்ற தாயை வெட்டுவதற்காக அவளை நோக்கி செல்வான்.




சிறந்த ஒழுக்கத்தையும் நல் அறத்தையும் போதிக்கு அழகிய கல்வி  மங்கிப் போனதால் உலகில் ஏற்ப்பட்ட தீய விளைவுகள் கீழே தரப்படுகின்றது இவை அனைத்தும் பத்திரிககைகளில் நாம் பல்வேறு காலங்களில் படித்த  செய்திகள் 

1. ஆஸ்துமாவின் காரணமாக தொடர்ந்து இருமிக் கொண்டிருந்த தந்தையை அந்த இருமல் தூக்கத்திற்கு இடையூறாக இருக்கின்றது என்பதற்காக கொலை செய்த மகன் 
2. சமீபத்தில் ஒரு காம கொடூரன் தான் பெற்ற மகளை கற்பழித்ததற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டான் 
3. மது குடித்து மனைவியுடன் சண்டையிட்டு போதையின் விளைவால் தன் பச்சிளம் குழந்தையை சுவற்றில் அடித்து  கொன்றான் 
4. கள்ளக் காதல் மோகத்தால் தன்னை நம்பி வாழும் குழந்தைகளை தவிக்க விட்டு கண்டவனுடன்  ஓடும் பெண்கள் கலிமா சொன்ன பெண்களும் சேர்ந்து தான் 

இனிய இஸ்லாமிய பெற்றோரிடத்தில் உடைந்த உள்ளத்துடன் சில  கேள்விகள்  

நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உலகில் வசதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ  வேண்டும் என்பதற்காக வேண்டி உங்களின் எல்லா பிள்ளைகளையும் உலக கல்வியை முழுமையாக படிக்க வைத்து கை நிறைய சம்பாதிக்க வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தோ அல்லது உயர்ந்த வேலையில் சேர்த்தோ  ஆனந்தம் அடைகிறீர்களே உங்களுடைய மறுமையை மணம் பெற செய்யவும், உங்களை இறை தண்டனையை விட்டும் காப்பாற்றுவதற்கும், ஆகிரத்துகு உதவவும் உங்களின் ஒரு பிள்ளையையாவது மதரஸாவில் சேர்க்கமாட்டீர்களா ?  நிச்சயமாக மார்க்க கல்வி கற்ற பிள்ளைகள் தங்கள் தந்தையின் மண்ணறைகாக துஆ செய்வார்கள். இன்று  நாங்கள் துஆ செய்து வருகின்றோம். இந்த கல்வியை படிக்காத பிள்ளை தன தந்தைக்கு துஆ செய்வான் என நாங்கள் உத்தரவாதம் தர முடியாது எனவே நீங்கள் மறுமையையும் மண்ணறையையும் ஈமான் கொண்டது உண்மையானால் அதற்கு உதவும் மார்க்க கல்வியை படிக்க ஒரு மகனையாவது மதரஸாவிற்கு அனுப்புங்கள். 

உங்கள் சொத்துக்களை பாதுகாக்கவும் அதை வளர்க்கவும் உங்கள் மக்களை உயர் கல்வி படிக்க வைக்கின்றீர்களே  - நமது நாயகம் (ஸல்) அவர்களின்  சொத்தான இந்த கல்வியை அவர்கள் விரும்பியபடி பாதுகாக்க ஒரு பிள்ளையாவது மதரசாவிற்கு தரமாட்டீர்களா ?

இறை இல்ல நிர்வாகிகளிடம் சாந்ததுடனும் சமுதாயத்திற்காக ஒரு வேண்டுகோள் 

உலமாக்களுக்கு கால சூழ்நிலைக்கு ஏற்ப ஊதியம் கொடுங்கள். இது எங்களுக்காக நாங்கள் வைக்கும் கோரிக்கை அல்ல - ஏனெனில் எங்களுக்கு பணத்தின் பேராசை இல்லை காரணம் நாங்களும் சரி. எங்களை ஓத வைத்த பெற்றோரும் சரி. இந்த கல்வியை கற்றால் உலக லாபம் எதுவும் கிடைக்காது என்பதை நன்கு அறிந்து தான் இந்த கல்வியை தேர்வு  செய்தோம் அத்துடன்  உலக ஆதாயத்திற்காக இந்த கல்வியை கற்றால் சுவனத்தின் வாடையை கூட நுகர முடியாது என்பதையும் நாங்கள் அறிந்து இருக்கிறோம். ஆனாலும் ஊதியத்தை உயர்த்த சொல்ல காரணம் என்னவெனில் இன்றைய பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நிறைய பணத்தை எதிர்பார்கிறார்கள். கால சூழ்நிலையும் அப்படி தான் இருக்கின்றது. அந்த பெற்றோர்களிடம் பிள்ளைகளை மதரஸாவில்  சேருங்கள் என்று நாங்கள் சொன்னால் அவர்கள் எங்களிடம் நீங்கள் படும் சிரமங்களை எங்கள் பிள்ளைகள்   படக்கூடாது என்று பகிரங்கமாகவே சொல்கின்றார்கள். எனவே ஓத வைக்க வேண்டிய இன்றைய பெற்றோர் பணத்தை விரும்புவதாலும் அந்த பணம் கிடைத்தால் தான் மார்க்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் எனவே அவர்கள் தங்கள் மக்களை மதரஸாவில் சேர்த்து மார்க்க கல்வியை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் இந்த கோரிக்கையை சமூகத்திற்கு முன் வைக்கிறோம் இந்த காலத்தில் முஸ்லிம்கள் இஸ்லாத்திற்கு செய்யும் மாபெரும் உதவியும் கடமையும் என்னவென்றால் அவர்கள் தங்கள் பிள்ளைகளில் அல்லது பேரப் பிள்ளைகளில்  ஒருவரையாவது மார்க்க கல்வி முழுமையாக கற்று ஆலிமாக ஆக காலம் தாழ்த்தாமல் மதரஸாவிற்கு  அனுப்பி வைக்க வேண்டும்..