Thursday 5 March 2015

தடைகளை சாதனைகளாக மாற்றுவோம்.



فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

நீங்கள் உறுதி கொண்டு விட்டால் அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டுவீராக நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பு சாட்டுபவர்களை பிரியப்படுகின்றான்.

 அல் குர் ஆன் - 3: 159.

عن عمر بن الخطاب رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : " إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى

நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் நாடியதே உண்டு – என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல். மிஸ்காத்

நமது அன்பான மாணவ மாணவியர் பொதுத் தேர்வை எதிர் நோக்கிஉள்ள இந்த நேரத்தில் அந்த தேர்வை தனது எதிர் காலத்தின் வெற்றி படிக்கட்டுகளாக அமைத்து கொள்வதற்கு தேவையான அறவுரைகள் சொல்வது நமது கடமை என்பதால் அது குறித்த சில விஷயங்கள் இப்போது நாம் பகிர்ந்து கொள்ளலாம்.

    வெற்றி வானில் பறக்க உதவும் சிறகுகள்.


قال عمر بن عبد العزيز يا رجاء إن لي نفساً تواقة تاقت إلى فاطمة بنت عبد الملك فتزوجتها، وتاقت إلى الإمارة فوليتها، وتاقت إلى الخلافة فأدركتها، وقد تاقت إلى الجنة فأرجو أن أدركها إن 


வெற்றி குறித்த ஆசை வேண்டும்.

 உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) சொன்னார்கள் மன்னர் அப்துல் மலிக்கின் மகள் பாத்திமாவை திருமணம் செய்ய என் மனம் ஆசைப்பட்டது அப்பெண்ணை நான் நிக்காஹ் செய்தேன் அதற்கு பின் அதிகாரியாக வேண்டும் என்று என் மனம் ஆசைப்பட்டது நான் அதிகாரியாக ஆனேன் அதற்கு பின் கலீபாவாக ஆக ஆசைபட்டேன் என்று என் மனம் விரும்பியது அப்பதவியும் எனக்கு கிடைத்தது இப்போது என் மனம் சுவனம் செல்ல ஆசைபடுகிறது இன்ஷா அல்லாஹ் அதையும் நான் அடைவேன் என்று நான் நம்பிக்கையுடன் உள்ளேன்.

நூல். வ பிய்யதுள் அஹ்யான்  

ஜனவரி 4 ம் தேதி அமெரிக்காவில் புகழ் பெற்ற குத்துச் சண்டை நடைபெறுகிறது அதில் இரண்டு வீரர்கள் போட்டியிட்டனர் ஒருவரின் பெயர் - ஜிம் ஜெப்ரீஸ், மற்றொருவரின் பெயர் ஜேக் ஜான்சன்  இக்குத்துச் சண்டையில் வெற்றி பெறுபவர் உலகின் மிக பெரிய வீராக அறிவிக்கப்படுவார் அதை பதினைந்து இளைஞன் ஒருவனும் மக்களுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் அப்போது அவன் உள்ளத்தில் ஒரு உறுதி கொண்டான் இன்று போட்டியில் வெல்லும் வீரனுடன் நான் ஒரு காலத்தில் போட்டியிட்டு அவனை ஜெயிப்பேன். ஜேக் ஜான்சன் தான் அன்றைய போட்டியில் வென்றான் அன்று முதல் குத்து சண்டை பழகிய அந்த வாலிபன் ஜேக் ஜான்சனின் படத்தை பயிற்சி எடுக்கும் மூட்டையில் வரைந்தான் அதில் தினமும் குத்தி குத்தி மன உறுதியுடன் பயிற்சி எடுத்தான் தொடர் பயிற்ச்சி யின் மூலம் பலம் பெற்று 9 வருடங்கள் கழிந்து அந்த ஜேக் ஜான்சனுடன் மோதி போட்டியில் வென்று முதல் தார் வீரன் என்று பெயர் புகழ் பெற்றான் அவனுடைய பெயர் ஜேக் டேம்ப்சே –

 நூல் வாழ்க்கையில் வெற்றி

 எல்லா காலமும் அல்லாஹ்வை பயந்து பாவம் செய்யாமல் வாழனும் 
குறிப்பாக நிச்சயமாக தேர்வு கலாத்தில் டி வி, ஆன் லைன் செல்போனே கிரிக்கெட் பார்த்தல் நண்பர்களுடன் சுற்றுதல் தீ செயல்களில் ஈடுபடுதல் இப்படி எல்லா வகையான பாவங்களை விட்டும் விலகி கொள்ள வேண்டும் மரதில் பாதிக்கப்பட்டு கல்வியில் பின் தங்கிய ஒருவர் வகீஹ் என்ற அறிஞரிடம் தன்னுடைய மறதியை குறித்து முறையிட்ட போது அவர் சொன்னார் நீ பாவங்களை விட்டும் விலகி கொள் ஏனெனில் மனன ஆற்றல் என்பது இறைவனிடம் பெறும் அருட்கொடையாகும் அதை அவள் பாவம் செய்பவர்களுக்கு கொடுப்பது இல்லை என்றார்.

நூல் : தஃலீமுல் முதஅல்லிம்

    தேர்வு அறையில் பயமின்றி தைரியத்துடன் இருக்க வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களை கொன்று குவித்த ஜெர்மநீன் ஹிட்லர் படையினர் அப்போது இரு யூதர்களை வித்தியாசமாக கொலை செய்ய விரும்பினர் எனவே அந்த யூதர்களிடம் சொன்னார்கள் உங்கள் உடம்பில் இருந்து முழுமையாக இரத்தத்தை வெளியாக்கி கொல்லப் போகிறோம் என்றனர் பிறகு அந்த இருவரையும் தரையில் படுக்க போட்டனர் அவர்களின் உடம்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இரத்ததை வெளியக்கினர் அதை அவர்களுக்கு அருகில் இருந்த பாட்டல்களில் டக் டக் என்று சப்தத்துடன் விழ ஏற்பாடு செய்தனர் இதை அறியாத அந்த கைதி தன உடம்பில் இருந்த இரத்தம் வெளியாகிறது  இன்னும் கொஞ்சம் நேரத்தில் மரணத்தை நாம் தழுவ இருக்கிறோம் என்று பயந்தான் அந்த பயம் உச்சத்தை அடைந்து இறுதியில் அவன் உடம்பில் இரத்தம் இருந்தும், கூட அச்சத்தினால் அவனும் இறந்தான் உண்மையில் இரத்தம் முழுமையாக வெளியாகி கைதியும் இறந்தான்.

நூல் : மனசுக்குள் வரலாமா?

பெற்றோர்களின் ஒத்துழைப்பு தேவை.

 தலித் சமுதாயத்தில் பிறந்த நம் நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை அமைத்த டாக்டர் அம்பேத்கார் அவர்கள் படித்த காலத்தி அவர்களின் வீடு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மீனவர்களின் பகுதியில் தான் இருந்தது எனவே அவர் மன ஓர்மையுடன் படிக்க சிரமமாக இருந்தது எனவே அவருடைய தந்தை அதற்கு ஒரு வழியை கண்டிபிடித்தார் மலையிலேயே மகனுக்கு உணவு கொடுத்தார் பின்பு இரவு இரண்டு மணி வரை தூங்க செய்தார் அதுவரை அவர் தூங்கி விடுவார் இப்படிபட்ட பெற்றோர்களின் ஒத்துழைப்பால் அவர் உயர்ந்தார் 

 பிள்ளைகள் பாடம் படிக்காமல் - விளையாட்டிலும் சுற்றுவதிலும் கவனம் செலுத்தினால் அப்போது பெற்றோர் பிள்ளைகளை திட்டாமல் அன்புடன் பக்குவத்துடன் அவர்களை அறிவுறுத்த வேண்டும்.

لَا تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ وَلَا تَدْعُوا عَلَى أَوْلَادِكُمْ وَلَا تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ لَا تُوَافِقُوا مِنْ اللَّهِ سَاعَةً يُسْأَلُ فِيهَا عَطَاءٌ فَيَسْتَجِيبُ لَكُمْ 

நாயகம் (ஸல்)  அவர்கள் சொன்னார்கள் :
நீங்கள் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எதிராக பிராத்தனை செய்யாதீர்கள் ஏனெனில் அந்த நேரம் துஆ ஏற்கப்படும் நேரத்துக்கு நேர் பட்டுவிட்டால் அது பலித்துவிடும் என்றார்கள்.
  
நூல் : முஸ்லிம் .

وكان الزمخشرىّ- رحمه الله- مقطوع الرجل، قد جعل له رجلا من خشب يستعين بها فى المشى، ولما دخل بغداذ سأله الدامغانىّ [3] الفقيه الحنفىّ عن سبب قطعها، فقال: دعاء الوالدة؛ وذلك أننى فى صباى أمسكت عصفورا وربطته بخيط فى رجله، وانفلت من يدى، فأدركته وقد دخل فى خرق، فجذبته، فآنقطعت رجله فى الخيط، فتألمت أمّى لذلك وقالت: قطع الله رجل الأبعد كما قطع رجله، فلما وصلت إلى سن الطّلب رحلت إلى بخارى لطلب العلم، فسقطت عن الدابة فانكسرت الرجل، وعملت عملا أوجب قطعها


மிகப்பெரும் மேதை இமாம் ஸமக் ஷரிய்யி அவர்கள் ஒரு கால் உடைந்தவராக இருந்தார் அவர்களிடம் இமாம் தாமஙர்னி அவர்கள் காரணம் கேட்டபோது  சொன்னார்கள் எனது தாயின் துஆவில் இப்படி ஆனது நான் சிறுவனாக இருந்தபோது குருவியை பிடித்து அதன் காலில் கயிற்றை கட்டி விளையாடினேன் அது ஒரு பொந்தில் நுழைந்தது அதை கயிற்றை பிடித்து வேகமாக நான் இழுத்தேன் அதனால் வேதனை பெற்ற என் தாய் என்னை திட்டினார்கள் அதனுடைய கால் ஒடிந்தது போன்று முடவனான அவனுடைய காலையும் அல்லாஹ் ஓடிப்பானாக என்று சொல்லி விட்டார்கள் இதற்கு பின் நான் ரஷ்யாவின் புகாராவுக்கு கல்வி தேடி வாகனத்தில் சென்ற போது கீழே விழுந்தேன் என் கால் உடைந்தது என்றார்கள் .

மேற்கூறிய இந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பெற்றோரும் பிள்ளைகளும் செயல்பட வேண்டும் அத்துடன் தனமும் ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும் 100 தடவை ரப்பி ஸித்தனி இல்மா என்று ஓத வேண்டும் பின் துஆ நிச்சயமாக ஏற்க்கப்படும் அந்த நேரத்தில் துஆ செய்துவிட்டு படிக்க தொடங்கலாம்