Wednesday, 17 October 2012

துல்ஹஜ்ஜும் குர்பானியும்



அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் பேரருட்கொடை காலங்கள்.இந்த உண்மையை மனிதன் உணர்ந்து கொள்கிறபோது காலங்கள் அவனுக்கு கிடைப்பதில்லை.
حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.
لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلاَّ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ
 “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.

வாழும்காலங்களில் இதை சரியாக புரிந்துகொண்டவர்கள் பயனுள்ள வாழ்வை வாழ்ந்துவிட்டுச்செல்கிறார்கள்.
நேரங்கள் அல்லாஹ்விடமிருந்து மனிதன் பெற்றுக்கொண்ட அமானிதமாகும்.   ஒரு நாள் அந்த அமானிதத்துக்கு முழுமையாக பொருப்பு ஒப்படைக்க வேண்டும்.
இஸ்லாத்தின் வணக்கங்கள் காலங்களைக்கொண்டும் நேரங்களைக்கொண்டும் அமைக்கப்பட்டிருக்கிறது. விலைமதிப்பில்லா அந்தகாலத்தை வீண்விரயம் செய்வதை ஒருபோதும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

 كم لبثتم في الأرض عدد سنين

  பூமியில் நீங்கள் எத்தனை ஆண்டு தங்கினீர்கள்? இது நரகவாசிகளிடம் நாளை மறுமையில் கேட்கப்படும் கேள்வி என குர்ஆன் கூறுகிறது.

திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹுத்தஆலா காலங்களின் மீது சத்தியம் செய்யும் அளவுக்கு காலம் கண்ணியமானவையாகும்.

எனவே பணத்தால் காலத்தை சம்பாதிக்க முடியாது ஆனால் அதை பயனுள்ளதாக ஆக்குவதின் மூலம் சேமிக்க முடியும்.

நேரங்களையும் காலங்களையும் நல்லமல்களால் வென்றெடுத்து,இறை       நேசத்தையும் நெருக்கத்தையும் பெற்ற அறிநர்களின் அனுபவவார்த்தையை செவிதாழ்த்தி கேளுங்கள்:

قال عمر -رضي الله تعالى عنه-: "إني لَأكره أن أرى الرجل سبهللا - فارغا- ليس في شيء من أمر دينه ولا من أمر دنياه
தீனுக்கும் துன்யாவுக்கும் பயனற்றதாக காலத்தை கழிக்கிற மனிதனை நான் பார்க்கவே வெறுக்கிறேன் என்று ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

قال ابن مسعود -رضي الله تعالى عنه-:إني لا أحزن على شيء حزني على يوم تغرب عليه فيه شمسه فينقص فيه عمري، ولا يزيد فيه عملي
என் வாழ்நாளில் ஒருநாள் குறைந்து,அதில் என் அமல் அதிகமாகவில்லையானால் அந்தநாள் எனக்கு கவலை தரும் நாள்.என இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

يقول الحسن البصري -رحمه الله تعالى-: "يا ابن آدم، انما أنت أيام"، تعيش في هذه الدنيا ألف يوم، الفي يوم، عشرة آلاف يوم، بقدر ما يقدر الله -تعالى- لك في الحياة، قال: "يا ابن آدم، إنما أنت أيام، كلما مضى يوم ذهب بعضك"
ஆதமின் மகனே! நீ உலகில் சில நாட்கள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறாய்.       ஒருநாள் கழிந்தால் உன் இருப்பில் குறைகிறது என்பதை புறிந்து கொள் என ஹஸனுல் பஸரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்

அப்படி அல்லாஹ்வினால் இந்த உம்மத்துக்கு தரப்பட்ட பொக்கிஷமான  பரக்கத்தான காலங்கள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்துநாட்கள்.
அதன் சிறப்பு குறித்த ஹதீஸ்:

عن ابن عباس رضي الله عنه أن النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: " مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ اْلأيَّامِ الْعَشْرِ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ! وَلا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟! فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: وَلا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ " [صحيح : صحيح سنن الترمذي، (757)؛ صحيح سنن أبي داود، (2438)؛ صحيح سنن ابن ماجه (1753) ] .

துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்தநாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும்அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

عن جابر بن عبد الله رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال: أفضل أيام الدنيا أيام العشر " [صحيح : صحيح الجامع الصغير، (1133

துன்யாவின் நாட்களில் மிகச்சிறந்தது அந்த பத்துநாட்களாகும்.
துல்ஹஜ் முதல் பத்துநாட்கள் நமக்கு தரப்பட்டதற்கான காரணம் நான்கு என பெருமக்கள் கூறுகின்றனர்.

1.ரமலானை தொடர்ந்து இந்தநாட்கள் வருவதால் ரமலானுடைய காலங்களில் செய்யவேண்டிய அமல்களில் குறைவு செய்திருந்தால் அதை சரிசெய்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு.

2.வசதிபடைத்தவர்கள் ஹஜ்ஜுக்கு சென்று அதிகமாக வணக்கங்கள் செய்து நன்மைகளை சம்பாதிக்கிறார்கள்.வசதியற்றவர்களும் தங்களின் இல்லங்களில் இருந்துகொண்டே அந்தநாட்களில் நிறைவாக வணக்கங்கள் புரிந்து நன்மைகளை பெற்றுக்கொள்ள.

3.இஸ்லாமிய கணக்கில் துல்ஹஜ் மாதம், ஆண்டின் இறுதிமாதமாக இருப்பதால் ஆண்டின் முடிவு வணக்கங்களால் அலங்கரிக்கப்படவேண்டு  ம் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக தரப்பட்டது.

4.இந்த தீன் நிறைவு பெற்றமாதம் துல்ஹஜ்மாதமாகும்.அல்லாஹுத்தஆ  லா அவனுடைய அருட்கொடையை நிறைவுசெய்துவிட்டு அதன் நினைவு  பரிசாக இந்த பத்துநாட்களை நமக்கு வழங்கியிருக்கிறான்.

சுருக்கமாகக்கூறினால்-இந்தபத்து நாட்கள் ரமலானுடைய இறுதிபத்துநாட்களுக்கு ஒப்பானதாகும்.

قال أبو عثمانَ النهديُ رحمه الله عن السلف: كانوا يعظمون ثلاثَ عشراتٍ: العشرَ الأخيرَ من رمضان، والعشرَ الأول من ذي الحجة، والعشرَ الأول من المحرم

முன்னோர்களான நல்லோர்கள் மூன்று பத்துக்ககளை கண்ணியப்படுத் துவர்.1.ரமலானின் இறுதிபத்து  2.துல்ஹஜ்ஜின் முதல்பத்து  3.முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து.என்று அபூஉஸ்மான் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்

துல்ஹஜ் 10 நாட்களின் சிறப்பிற்கான காரணம் என்ன?

قال الحافظ ابن حجر العسقلاني والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة لمكان اجتماع أمهات العبادة فيه, وهي الصلاة والصيام والصدقة والحج, ولا يتأتى ذلك في غيره. [ فتح الباري بشرح صحيح البخاري، 2/534

இதில் முக்கிய வணக்கங்களான தொழுகை,நோன்பு,சதகா,ஹஜ்,(குர்பானி) போன்ற வணக்கங்கள் சங்கமிக்கிறது என அல்லாமா இப்னுஹஜர் ரஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


இந்த பத்துநாட்களில் செய்யவேண்டிய வணக்கங்கள்:

1.அதிகமாக தஸ்பீஹ்,தஹ்மீத்,தஹ்லீல்.தக்பீர் போன்ற திக்ர்களில் ஈடுபடுவது.

، ففي هذه العشر يستحب الإكثار من ذكر الله تعالى والتكبير والتحميد والتهليل، فربنا سبحانه يقول: (وَيَذْكُرُواْ اسْمَ اللَّهِ فِى أَيَّامٍ مَّعْلُومَـاتٍ) [الحج:28]، وقد فسرت بأنها أيام عشر ذي الحجة، وقد استحب العلماء كثرة الذكر في هذه العشر، فقد كان ابن عمر يخرج إلى السوق في العشر فيكبر ويكبر الناس بتكبيره. فيستحب رفع الصوت بالتكبير في الأسواق والدور والطرق وغيرها؛ إعلانًا بحمد الله، وشكرًا على نعمه: (وَلِتُكَبّرُواْ اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ) [البقرة:185].

அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரை திக்ர்செய்யுங்கள் என குர்ஆன் கூறுகிறது.இந்தவசனத்தில் குறிப்பிடப்படும் நாட்கள் துல்ஹஜ்ஜின் பத்துநாட்கள் என முபஸ்ஸிரீன்கள் கூறுகின்றனர்.

மேலும் ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் கடைவீதிக்குச்சென்றால் இந்த நாளில் தக்பீர் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.அவர்களுடன் மக்களும் தக்பீர் கூறுவர்.

இன்னும் ஒரு அறிவிப்பில்,இப்னு உமர் ரலி,அபூஹுரைரா ரலி ஆகிய இருவரும் தக்பீர் சொல்லுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.


وكان ابنُ عُمَرَ وأبو هُرَيْرَةَ يَخْرُجَانِ إلى السُّوقِ في أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ وَيُكَبِّرُ الناس بِتَكْبِيرِهِمَا) رواه البخاري معلقا.

2.அரபாவுடைய நாளில் நோன்பு வைப்பது.

عن أبي قتادةَ الأنصاري رضي الله عنه أنَ رسولَ الله سُئلَ عن صوم يوم عرفة فقال: "يكفر السنة الماضية والسنة القابلة" رواه مسلم

நபி ஸல் அவர்களிடம் அரபாவுடையநாளின் நோன்புபற்றி கேட்கப்பட்டது?
அது கடந்த ஆண்டின் பாவத்திற்கும்,வரும் ஆண்டின் பாவத்திற்கும் குற்றப்பரிகாரமாகும் என்று பதில் கூறினார்கள்.
அரபாவுடைய நோன்பு ஹாஜிகளுக்கு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3.துல்ஹஜ் பத்தாம் நாள் குர்பானி கொடுப்பது.
ரமலானில் குரஆன் திலாவத் முக்கியத்துவம் பெறும்,மக்காவில் தவாப் முக்கியத்துவம் பெறும்,மதீனாவில் ஸலவாத் முக்கியத்துவம் பெறும்,அதைப்போலவே,துல்ஹஜ்ஜில் குர்பானி முக்கியத்துவம் பெறும்.


فعن عائشة - رضي الله عنها - قالت: قال رسول الله - صلى الله عليه وسلم -: (( ما عمل ابن آدم يوم النحر أحب إلى الله من إهراق الدم، وإنه ليؤتى يوم القيامة بقرونها وأشعارها وأظلافها، وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض، فطيبوا بها نفسا)). روى الترمذي وابن ماجه وصححه الألباني.

துல்ஹஜ் பத்தில் மனிதன் செய்யும் அமல்களில் அல்லாஹ்வுக்கு பிரியமானது குர்பானி கொடுப்பதாகும்.அந்த பிராணி நாளை மறுமையில் அதன் கொம்புகளுடன்,முடிகளுடன்,அதன் கால் குழம்புகளுடன் கொண்டுவரப்படும்.குர்பானி பிராணியின் இரத்தம் பூமில் விழும்முன் அல்லாஹ்விடம் அந்தஸ்து பெறும்.எனவே மனமகிழ்ந்து குர்பானி கொடுங்கள்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.



குர்பானி

உள்ஹிய்யா எனும் இந்த இபாதத்- மனிதன் இறைநெருக்கம் பெறுவதற்கும்,தியாக மனப்பான்மையை தன்னுள் வளர்த்துக்கொள்வதற்கு ம்,அல்லாஹ் தனக்கு வழங்கிய பொருளில் விசாலத்தன்மையை கடைபிடிப்பதற்கும்,அதை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கும், -இந்த உம்மத்துக்கு தரப்பட்டிருக்கிறது.

அல்லஹுத்தஆலா திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் உள்ஹிய்யா வை முதன்மை வணக்கமான தொழுகையுடன் சேர்த்து கூறுகிறான்.

يقول تعالى: (فَصَلّ لِرَبّكَ وَنْحَرْ) [التكاثر:2]،
ويقول -جل شأنه-: (قُلْ إِنَّ صَلاَتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى للَّهِ رَبّ الْعَـالَمِينَ * لاَ شَرِيكَ لَهُ) [الأنعام:162، 163

அது இந்த தீனின் அடையாளச்சின்னம் மாத்திரமல்ல,நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கும் இந்த உம்மதுக்கும் இருக்கிற ஆத்மார்த்த தொடர்பின் வெளிப்பாடாகும்.
இப்ராஹீம் அலை அவர்களின் ஷரீஅத்தில் இருந்த 40 சட்டங்கள், நபி ஸல் அவர்களின் உம்மத்துக்கும் சட்டமாக்கப்பட்டிருக்கிறது,அதில் குர்பானியும் ஒன்று என அல்லாமா பத்ர் ஆலம் தங்களின் தர்ஜுமான் சுன்னா என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்

அதனால்தான் ஸஹாபிகள் நபி ஸல் அவர்களிடம் இந்த உள்ஹிய்யா என்ன?என்று கேட்கிறார்கள்,இது உங்கள்தந்தை இப்ராஹீம் அலை அவர்க ளின் வழிமுறை என்றார்கள்.அதில் எங்களுக்கு என்ன? என மீண்டும் கேட்டபோது அதன் ஒவ்வொரு முடிக்கும் ஒரு நன்மை உண்டு என்றார்கள்

وقد أخرجه ابن ماجه و البيهقي في " سننه " و ابن عدي في " الكامل "  من طريق عائذ الله عن أبي داود عن زيد بن أرقم قال :" قال أصحاب رسول الله صلى الله عليه وسلم : يا رسول الله ما هذه الأضاحي ؟ قال : سنة أبيكم إبراهيم ، قالوا : فما لنا فيها يا رسول الله ؟ قال : بكل شعرة حسنة ، قال : فالصوف يا رسول الله ؟ قال : بكل شعرة من الصوف حسنة 

 குர்பானியின் முறைகளில் சிறிது மாற்றம் இருந்தாலும் எல்லா சமூகத்திலும் இந்த அமல் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதை திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا

(22:34)
குர்பானியின் வரலாறு நபி ஆதம் அலை அவர்களின் காலத்திலிருந்து துவங்குகிறது.
ஹாபிலுக்கும் காபிலுக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் தீர்வுக்கு அவ்விருவரும் குர்பானி கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقّ إِذْ قَرّبَا قُرْبَاناً فَتُقُبّلَ مِن أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبّلْ مِنَ الاَخَرِ

ஆதமின் இரு மகன்கள் குர்பானி கொடுத்தபோது அவர்களில் ஒருவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது,மற்றவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அதைப்போல,ஹழ்ரத் சுலைமான் அலை அவர்கள் 22ஆயிரம் மாடுகளும் 1லட்சத்து இருபதாயிரம் ஆடுகளும் குர்பானி கொடுத்ததாக தஸ்கிரதுத்தவ்ராத் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி ஸல் அவர்கள் மதீனாவில் இருந்த பத்து ஆண்டுகளும் குர்பானி கொடுத்தார்கள்.

தங்களின் இறுதி ஹஜ்ஜில் 100 ஒட்டகங்கள் குர்பானி கொடுத்தார்கள் அதில் 63 தாங்களே அறுத்தார்கள்.மீதியை அலி ரலி அவர்களை அறுக்கச்சொன்னார்கள்

. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில்) இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்து வந்தார்கள். நானும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்துவந்தேன். (புகாரி)
வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவர் நம்முடைய ஈத்காவுக்கு  வர வேண்டாம் என எச்சரித்தார்கள்.

من وجد سعة ولم يضح فلا يقربن مصلانا" رواه أحمد وابن ماجه وحسنه الألباني

இந்த ஹதீஸை ஆதாரமாக கொண்டு இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் குர்பானி வசதிபடைத்தவர்களின் மீது வாஜிப் என்று கூறுகிறார்கள்.
 இமாம் ஷாபிஈ அவர்களிடத்தில் குர்பானி கொடுத்தல் சுன்னத்தே முஅக்கதாவாகும்.

உள்ஹிய்யாவின் சட்டங்கள்

உள்ஹிய்யாவில் நான்கு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

முதலாவது: உள்ஹிய்யா கொடுப்பவரின் வசதி.அதாவது ஜகாதின் நிஸாப் அளவை பெற்றிருக்கும் ஒவ்வருவரின்மீதும் குர்பானி வாஜிபாகும்.இதில் ஓராண்டு கழிந்திருக்கவேண்டும் என்பதை கவனிக்கப்படாது.
குர்பானி கொடுப்பவர் 'துல்ஹஜ்மாதம்' பிறை பார்த்ததிலிருந்து  குர்பானி கொடுக்கும் வரை தலைமுடி இறக்குவதோ, முடியை வெட்டுவதோ, நகம் தரிப்பதோ கூடாது.

இரண்டாவது:மார்க்கம் அனுமதித்த பிராணிகளை குர்பானி கொடுத்தல்.அதாவது ஒட்டகம்,மாடு,ஆடு,ஆகியவை.
இவைகளில் வயது கவனிக்கப்படவேண்டும்.ஒட்டகம் 5 வயது பூர்த்தியானது,மாடு 2 வயது பூர்த்தியானது,ஆடு 1 வயது முழுமை பெற்றது.
ஆறுமாத செம்மறியாடு நன்கு கொழுத்ததாக இருந்து அதை ஒரு வருடத்திய ஆடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு வருடத்திய ஆடு போல் தெரிந்தால் குர்பானி கொடுக்கலாம்.

மூன்றாவது:அறுக்கப்படும் பிராணிகள் குறைகளை விட்டும் நீங்கி இருக்க வேண்டும்.

“நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்குஏற்றவையல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை, நோய்,ஊனம், கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! கொம்பிலும்,பல்லிலும் ஒருகுறை இருப்பதால் அதைக் கொடுக்க நான்விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,“உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு! மற்றவருக்கு ஹராமாக்கி விடாதே என்றுகூறினார்கள். அறிவிப்பவர்: பரா(ரலி) நூல்: நஸயீ 4293

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத்தெரியக்கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நான்காவது:ஷரீஅத் ஆகுமாக்கிய நேரத்தில் குர்பானி கொடுப்பது.            
ஈதுல் ளுஹாவின் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சூரியன் உதயமான நேரத்திலிருந்து குர்பானி கொடுத்தல் துவங்குகிறது.
பெருநாள் தொழுகையை அடுத்து குத்பா ஓதி முடிந்தபின் குர்பானி கொடுத்தல் சிறந்ததாகும்.
                                                                                                                                       நூல்:
 மிஷ்காத்.

தல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய மூன்று நாட்களிலும் குர்பானி கொடுக்கலாம். இதில் குர்பானி கொடுக்க முதல் (பெரு) நாளே சிறந்ததென ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலீ, ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹும் போன்ற நபித் தோழர்கள் அறிவிக்கின்றனர்.
                                                                                                                                         நூல்: ஹிதாயா.

உள்ஹிய்யாவின் சுன்னத்துக்கள்,மற்றும் ஒழுக்கங்கள்:

1.குர்பானி பிராணிக்கு வேதனை தராமல் இருக்க கூர்மையான கத்தியை தேர்வு செய்தல்,ஒரு பிராணி கண் முன் இன்னொரு பிராணியை அறுக்கக்கூடாது,மேலும் அதற்கு முன் கத்தியை தீட்டக்கூடாது.

وفي الحديث الّذي رواه مسلم عن شدّاد بن أوس رضي الله عنه أنّ النبيّ صلّى الله عليه وسلّم قال:
(( إِنَّ اللهَ كَتَبَ الإِحْسَانَ فِي كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا القِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذِّبْحَةَ

" مَرَّ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم بِرَجُلٍ يَشْحَذُ سِكِّينَهُ أَمَامَ الأُضْحِيَةِ، فَقَالَ: (( أَفَلاَ قَبْلَ هَذَا ؟ أَتُرِيدُ أَنْ تُمِيتَهَا مَوْتَـَتيْنِ، هَلاَّ حَدَدْتَ شَفْرَتَكَ قَبْلَ أَنْ تُضْجِعَهَا ؟)).

நபி ஸல் அவர்கள் ஒரு மனிதரை கடந்து சென்றார்கள்.அவர் உள்ஹிய்யா பிராணிக்கு முன் கத்தியை தீட்டிக்கொண்டிருந்தார்.அப்போது நபி ஸல் அவர்கள்,முன்னரே இதைச்செய்திருக்க வேண்டாமா?அதற்கு இரண்டு மரணத்தை கொடுக்கிறீரா?என கண்டித்தார்கள்.

2.குர்பானி பிராணியை இடது பக்கமாக படுக்கவைத்து,அதன் முகத்தை கிப்லாவை நோக்கி திருப்புதல்.
كما يشير إليه حديث جابر رضي الله عنه عند أبي داود حين قال:" كَانَ النَّبِيُّ صلّى الله عليه وسلّم إِذَاأَرَادَ أَنْ يَذْبَحَ ذَبِيحَتَهُ وَجَّهَهَا

3.அறுக்கும்போது பின்வரும் துஆவை ஓதுதல்
:" بسم الله، والله أكبر، اللهمّ هذا منك ولك، اللهمّ تقبّل منّي 

4.உயிர் முழுமையாக வெளியாகும் வரை காத்திருத்தல்.
، قال عمر بن الخطّاب رضي الله عنه:

" لاَ تَعْجَلُوا الأَنْفُسَ حَتَّى تُزْهَقَ " [انظر " فتح الباري "(9/526)].

5.குர்பானி கொடுப்பவரே அறுத்தல்.

Thursday, 11 October 2012

முஸ்லீம்கள் கண்ணியமானவர்கள்


அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்கிய இஸ்லாமிய மார்க்கம் கண்ணியமானது
.முஸ்லீம்கள் கண்ணியமானவர்கள்.அவர்களின் ஈமான் உயர்வானது.அல்லாஹுத்தஆலா முஸ்லீம்களை சில காலம் சோத்தித்த  துண்டு.ஆனால் இழிவுபடுத்தியதில்லை.ஒரு முஸ்லிம் இந்த உண்மையை புரிந்துகொண்டால் தன் முகவரியை தெரிந்துகொள்ளலாம்.
யூதர்களின் மீது இழிவு விதியாக்கப்பட்டது என குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹுத்தஆலா திருமறையில் தன்னை العزيزஎன்று வர்ணிக்கிறான்.       அல்லாஹுத்தஆலா குர்ஆனில் 90 இடங்களில் இந்த வார்த்தையை கூறுகிறான்.சில இடங்களில் العزة والرحمةம் சேர்த்து கூறுகிறான்.

முஃமின்கள் குறித்து வர்ணிக்கிறபோதும் கண்ணியத்தை அவர்களுடன் சம்பந்தப்படுத்தி பேசுகிறான்.

ولله العزة ولرسوله وللمؤمنين 
கண்ணியம் அல்லாஹ்வுக்கும்,அவனின் தூதருக்கும்,  முஃமின்களுக்கும் சொந்தமானது என்று கூறுகிறான்.

பிர்அவ்னின் சூனியக்காரர்கள் நபி மூஸா அலை அவர்களின் முன்பு சூனியம் செய்து மிரட்டியபோது,அதை கண்ட மூஸா அலை அவர்கள் பயந்து பின்வாங்கினார்கள். 
                                     قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنْتَ الْأَعْلَى

 அப்போது அல்லாஹுத்தஆலா, மூஸாவே! நீ பயப்படக்கூடாது.ஏனெனில் நீ கண்ணியமானவர் என்று கூறினான்.

அதாவது உன் ஈமான் கண்ணியமானது.உன் மார்க்கம் கண்ணியமானது.நீ ஏற்றுக்கொண்டிருக்கிற உன் இறைவன் கண்ணியமானவன்.

ஒரு முஸ்லிம் எந்த சூழ்நிலையிலும் இறைமறுப்பாளர்களைப்பற்றி உயர்வாகவும்,முஸ்லீம்கள் பற்றி தாழ்வாகவும் எண்ணக்கூடாது.
நபி ஸல் அவர்கள் தங்களின் தோழர்கள் காபிர்களின் இடைவிடாது சோத  னையில் மனம் தளர்கிறபோதும்,நம்பிக்கை இழக்கிறபோதும் அவர்களுக்கு  ஆறுதல் கூறுவதுடன் எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையையும் முஸ்லீம்களைப்பற்றிய கண்ணியத்தையும் புரியவைப்பார்கள்.

சம்பவம்:1

، يأتي إليه خباب رضي الله تعالى عنه وقد تفلت يوما من العذاب يقول:{ يا رسول الله ألا تدعو الله لنا، ألا تستنصر لنا؟؟؟} فيقوم النبي صل الله عليه وسلم ويقول له:{ يا خباب لقد كان من كان قبلكم يوضع المنشار على مفرق رأسه ويشق باثنين ما يصده ذلك عن دينه ويمشط بأمشاط الحديد ما دون عظمه من لحم أو عصب ما يصده ذلك عن دينه والله ليتمن الله هذا الأمر حتى يسير الراكب من صنعاء إلى حذر موت ما يخاف إلا الله والذئب على غنمه ولكنكم تستعجلون
البخاري


ஹழ்ரத் கப்பாப் ரலி அவர்கள் எதிரிகளின் கடுமையான வேதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ஒரு நாள் நபி ஸல் அவர்களை சந்தித்து யா ரசூல்ல்லாஹ்!அல்லாஹ்விடம் எங்களுக்காக துஆ செய்யுங்கள்.     அல்லாஹ்விடம் எங்களுக்காக உதவி தேடுங்கள் என்று வேண்டிக்கொண் டார்.அதை கேட்ட நபி ஸல் அவர்கள்,கப்பாபே!பொருமையாயிருங்கள்.    உங்களுக்கு முன்னர் உள்ள முஃமின்கள் இதைவிடவும் கடுமையாக சோதிக்கப்பட்டார்கள்.எந்தளவென்றால் அவர்களின் தலையில் இரும்பு அறம் கொண்டு இரண்டாக பிளக்கப்படும்.ஆனாலும் அவர் தீனை விட மாட்டார்.அவர்களின் சதையும் எழும்பும் நரம்பும் துண்டிக்கப்படும்.      ஆனாலும் அது அவர்களின் தீனில் எந்தமாற்றத்தையும் ஏற்படுத்த    முடியாது.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக!அல்லாஹ் இந்த தீனை முழுமைப்படுத் துவான்.சன்ஆ நகரத்திலிருந்து ஹழ்ரமவ்த் வரை ஒரு பயணி அல்லாஹ்வை தவிர யாருக்கும் பயமின்றி பயணம் செய்வார்.அப்படிப் பட்ட அமைதியான ஆட்சியை முஸ்லீம்கள் நிறுவார்கள்.ஆனாலும் நீங்கள் அவசரப்படுகிறீர்கள்.
எனவே ஸஹாபாக்கள் பொருளாதாரத்தில் பலம் குன்றியிருந்தாலும் ,எண்ணிக்கையில் பலகீனமாக இருந்தாலும் ஈமானிய உணர்வால் தங்களின் கண்ணியத்தை புரிந்து இருந்தனர்.

சம்பவம்:2

ألم ترى إلى الصحابة رضي الله تعالى عنهم لما حاصرهم الكفار في معركة الأحزاب واجتمعوا لهم من كل موطن وبلغت القلوب الحناجر وظنت بعض الناس بالله الظنون فإذا بالنبي صل الله عليه وسلم يحاول أن يقلل عدد الكفار الذين يرابطون وكانوا عشرة آلاف، يحاول أن يقلل عددهم وأن يصرف بعضهم فإذا به عليه الصلاة والسلام يدعوا رأسا من رؤوس الكفار قد جاء قومه بثلث الجيش ثلاثة آلاف مقاتل تحت يده فيقول له:{ أريدك أن ترجع بقومك على أن أعطيك ثلث ثمر المدينه إذا جاء الحصاد}، رجاءا منه عليه الصلاة والسلام أن يخفف الوطأة عن المدينه، فلما كاد أن يمضي الكتاب بينه وبين النبي عليه الصلاة والسلام قال النبي عليه الصلاة والسلام :{ إني أستشير السعدين }سعد بن معاذ وسعد بن عباده فدعاهما صل الله عليه وسلم وأخبرهما قال نعطيهم ثلث ثمار المدينه على أن يرجع بقومه فقال له السعدان وهما يشعران بما يشعر به النبي صل الله عليه وسلم من وطأت الكفار عليهم قالوا:{ يا رسول الله أهو أمر أمرك الله تعالى به فنسمع ونطيع...}دون اعتراض { أم أنه أمر تفعله لنا فلنا فيه الرأي والمشوره؟؟؟}، فقال النبي صل الله عليه وسلم:{ بل هو أمر أفعله لكم } أنا إنما أخاف على المدينه، إنما أخاف عليكم وعلى دراريكم وإنما دعوتكما لأستشيركما لو كان الأمر من الله لما استشارهم فقال سعد :{ يا رسول الله إنا كنا نحن وأولئك في الجاهليه لا يؤمل أحد أن يأكل تمرة من تمر المدينه إلا بشراء أو قرى... } إما أن يشتري بماله أو أن يدخل ضيفا عندنا ثم نقريه إطعاما وكرما وجودا وسخاءا من أنفسنا برضانا لا بإكراهنا {...أفلما أكرمنا الله بالإسلام وأعزنا الله بالإسلام ننزل عن ثمارنا رغما عنا لا والله يا رسول الله لا نعطيهم إلا السيف } ثم أخذ سعد الصحيفة وهو ينظر إلى النبي عليه الصلاة والسلام هل يمنعه أم لا ومزقها بين يدي ذلك الكافر الذي كان شاهدا للمكان وقال:{ اذهب فاجهد علينا}اذهب واجمع جهدك وقوتك وعتادك وعدتك { اذهب فاجهد علينا } حتى رابط الصحابة الكرام ونصرهم العزيز الحكيم جل في علا

(حياة محمد صلى الله عليه وسلم)

  

அகழ் யுத்தம்.எதிரிகள் மதீனாவை முற்றுக்கையிட்டபோது ஸஹாபாக்கள் தங்களை சூழ்ந்த ஆபத்தை கண்டு பயந்தனர்.ஏனெனில் களத்தில் காபிர்கள் 10 ஆயிரம்.முஸ்லீம்கள் வெறும் 3000 தான். முஸ்லீம்கள் இதுவரை எண்ணிக்கையைக்கொண்டு வெற்றிபெற்றதில்லை.ஈமானிய பலத்தைக் கொண்டே வெற்றிபெற்றனர்.ஆனாலும் இந்த போரில் மதீனாவின் பெண்கள்,மற்றும் குழந்தைகளையும் கவனத்தில் கொண்டே முஸ்லீம்கள் அச்சப்பட்டனர்.
அப்போது நபி ஸல் அவர்கள் எதிரிகளின் தலைவர்களில் ஒருவரை அழைத்து சமாதான ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார்கள்.
அந்த ஒப்பந்தம் இது தான்:மதீனாவின் விளைச்சல்களில் மூன்றில் ஒருபகுதியை தருகிறோம்.போரை உடனடியாக நிறுத்தவேண்டும்.
அந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமுன்னர் மதீனாவின் தலைவர்களில் முக்கியமான இருவர் சஃது இப்னு முஆத் ரலி,சஃது இப்னு உப்பாதா ரலி ஆகியோரிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று கூறி,அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள்.
அவர்கள் வந்தபோது நபி ஸல் அவர்கள் தங்களின் அபிப்ராயத்தை கூறினார்கள்.
மதீனாவின் நலன்கருதி நபி ஸல் அவர்கள் இந்தமுடிவை எடுத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொண்ட அவ்விருவர்,அல்லாஹ்வின் தூதரே!இது அல்லாஹ்வின் முடிவு என்றால் கட்டுப்படுகிறோம்.தங்களின் முடிவு என்றால் எங்களுக்கு அபிப்ராயம் சொல்ல அனுமதி உண்டா?என கேட்டனர்.
அதற்கு நபி ஸல் அவர்கள்,இது அல்லாஹ்வின் உத்தரவு எனில் நான் மஷ்வரா செய்யவேமாட்டேன்.இது நான் எடுத்த முடிவு எனவே ஆலோசனை கூறுங்கள் என்றார்கள்.
அப்போது அவ்விருவரும், அல்லாஹ்வின் தூதர் அவர்களே!
அறியாமை காலத்தில் எங்கள் மதீனாவின் விளைச்சளை இரு காரணங்களுக்காக மட்டுமே கொடுப்போம்.ஒன்று, விலைக்கு அல்லது விருந்தாளிக்கு,இதை தவிர்த்து நிர்பந்தப்படுத்தி யாரும் எங்கள் விளைச்சளை பறித்துவிட முடியாது.
இப்போது அல்லாஹ் இஸ்லாம் என்ற மரியாதையை வழங்கியிருக்கிறா ன்.மேலும் இஸ்லாத்தைக்கொண்டு எங்களை கண்ணியபடுத்திவிட்டான்
எனவே நாம் யாருக்கும் பணிந்துபோகவேண்டாம் போர் செய்யலாம் என்றபோது நபி ஸல் அவர்கள் அதை சரிகண்டார்கள்.
உடனே நபி ஸல் அவர்களின் முன்னிலையில் சஃது ரலி அவர்கள், அந்த ஒப்பந்த பேப்பரை கிழித்து வீசி,அந்த காபிர்களிடம் போருக்கு தயாராகுங்கள் என்று கூறினார்கள்.
இதன் மூலம் மஷ்வராவே இஸ்லாத்தின் தனித்துவம் என்றும்,சுதந்திரமாக ஆலோசனை சொல்லும் உரிமையை  நபி ஸல் அவர்கள் தங்களின் தோழர்களுக்கு வழங்கியிருந்தார்கள் என்றும் விளங்குகிறது.மத்திரமல்ல இஸ்லாத்தின் கண்ணியம் குறித்து ஸஹாபாக்களின் எண்ணவோட்டம் தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

சம்பவம்:3

ألم ترى إلى حكيم بن حزام وقد كان في الجاهليه يحب رسول الله صل الله عليه وآله وسلم وطالما أهدى إليه وقبل هديته فرأى حكيم بن حزام يوما حلة ذي يزن وهو ملك من أعظم ملوك اليمن، رأى حلة ذي يزن تباع في السوق فاشتراها حكيم بن حزام ثم مضى من لحظته إلى المدينه وكان لم يسلم بعد مضى من لحظته إلى المدينه وأهداها إلى رسول الله صل الله عليه وسلم فقال له النبي عليه الصلاة والسلام:{ إني لا أقبلها إلا بالثمن } فأبى حكيم قال إنما هو إهداء قال:{ لا آخذها منك إلا بثمنها} فأعطاه النبي صل الله عليه وسلم ثمنها وأخذ حلة ذي يزن وصعد المنبر وخطب الناس وجعل حكيم من خارج المسجد ينظر إلى النبي عليه الصلاة والسلام وهو معجب بالحلة على كتفيه الشريفتين، ثم لما نزل النبي صل الله عليه وسلم أهداها لحِبِّه وابن حِبِّه لأسامة بن زيد وكان أسامة مولى عندهم لم يكن من أنسابهم ولا من أشرافهم في النسب وفي الرفعه وفي الحسب، كان من مواليهم فأهداها النبي صل الله عليه وسلم إليه، فلما مشى أسامة في السوق رآه حكيم بن حزام وعليه الحلة فقال حكيم: "عجبا أسامة بن زيد.." محتقرا له "أسامة بن زيد يلبس حلة ذي يزن " فالتفت إليه أسامة وانظر إلى العزة قال:"نعم ومالي لا ألبسها فوالله إني خير من ذي يزن وإن أبي خير من أبي ذي يزن" أنا مسلم وهو كافر فأنا خير منه هو الذي له الشرف أن ألبسها أنا وإن أبي مسلم وأبوه كافر فأبي خير منه، فعجب حكيم بن حزام
  رواه الحاكم في مستدركه 

அறியாமை காலத்தில் ஹகீம் இப்னு ஹிசாம் என்ற நாயகத்துக்கு பிரியமான மனிதர் இருந்தார்.                                                                  இவரும் நபி ஸல் அவர்களை மிகவும் நேசித்தார்.எந்தளவென்றால் பல நேரங்களில் பெருமானாருக்கு அன்பளிப்பு கொடுப்பார்.நாயகமும் அதை பெற்றுக்கொள்வார்கள்.இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் நாயகத்துடன் இவருக்கு நெருக்கமான உறவு உண்டு.
ஒரு நாள் இவர் கடைவீதியில் நடந்து சென்றபோது எமன் நாட்டு அரசர் ஸீயசின் அணியும் ஆடை விற்கப்படுவதை காண்கிறார்.உடனே அதை விலை கொடுத்துவாங்கி நாயகத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தபோது, நபி ஸல் அதை வாங்க மறுத்துவிட்டார்கள்.நான் இதை வாங்கிக்கொள்ள வேண்டுமென்றால் அதன் விலையை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறி பணம் கொடுத்து அதை வாங்கிக்கொள்கிறார்கள்.
நபி ஸல் அவர்கள் அந்த ஆடையை அணிந்து கொண்டு மின்பர்மீது ஏறி பிரசங்கம் செய்வதை ஹகீம் பள்ளிக்கு வெளியிலிருந்து பார்த்து ரசித்தார்.
குத்பா பிரசங்கத்தை முடித்த நபி ஸல் அவர்கள் அந்த ஆடையை கழட்டி தன் பிரியத்திற்குறிய உஸாமா ரலி அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள்.(உஸாமா இவர் ஒரு அடிமை).
ஹழ்ரத் உஸாமா ரலி அவர்கள், அந்த ஆடையை அணிந்து கடைவீதில் வலம் வந்தபோது,அதைபார்த்த ஹகீம் இப்னு ஹிஸாம் இழிவாக கருதி யமன் நாட்டு அரசரின் ஆடை உஸாமின் உடலிலா?என்று கூறினார்.
அதைக்கேட்ட உஸாமா ரலி அவர்கள்,ஹகீமின் பக்கம் திரும்பி,
இந்த ஆடையை அணிவதற்கு எனக்கு ஏன் தகுதியில்லை.? நீங்கள்  சொல்கிற ஸீயசினை விட நானும்,அவரின் தந்தையை விட என் தந்தையும் சிறந்தவர்களாகும்.ஏனெனில் நானும் என் தந்தையும் முஸ்லீம்கள்,ஸீயசினும் அவரின் தந்தையும் காபிர்கள்.என்று கூறினார்கள்.
இதைக்கேட்ட ஹகீம் இஸ்லாத்தின் மீது முஸ்லீம்கள் கொண்டிருக்கிற கண்ணியத்தை புரிந்து கொள்கிறார்கள்.

 وقال عليه الصلاة والسلام : " لا ينبغي للمؤمن أن يذل نفسه. قالوا: وكيف يذل نفسه؟!. قال : يتعرض من البلاء مالا يطيق

உங்களில் எவரும் தன்னை இழிவாக கருதவேண்டாம் என்று நபி ஸல் அவர்கள் கூறியதுடன் அந்த உணர்விலேயே ஸஹாபாக்களை வார்த்தெடுத்தார்கள்.








Wednesday, 3 October 2012

அமலும் அகீதாவும்


இஸ்லாத்தின் கொள்கைகள்,கோட்பாடுகள் சுத்தமானதும் தெளிவானதுமாகும்.எந்தவிதமான குழப்பத்திற்கும் தடுமாற்றத்திற்கும் அதில் இடமில்லை.
அகீதாக்கள் எனப்படும் கொள்கைகள் தான் இஸ்லாத்தின் அடித்தளம்.         அமல்களில் குறைவு ஏற்படலாம்.ஆனால் கொள்கையில் குழப்பம் வரக்கூடாது.
ஒரு முஃமின் எந்த சூழ்நிலையிலும் தன் கொள்கையை இழக்கக்கூடாது. 

 ஈமான் மூன்று பிரிவுகளை கொண்டது.

الإيمان اصطلاحًا: "اعتقاد بالجنان، وإقرار باللِّسان، وعمل بالأركان"؛ ينظر: "شرح الطحاوية"

அதில் முதன்மையானது கொள்கையுடன் சம்பந்தப்பட்டது.ஈமானின் சொல்வடிவமும் செயல்வடிவமும் நாம் ஏற்றிருக்கிற அகீதாவைக்கொண்டு முடிவு செய்யப்படுகிறது.அதனால் தான் அகீதாக்கள் கெட்டுப்போனால் அமல்களும் கெட்டுப்போகும் என்று குர்ஆன் எச்சரிக்கிறது.

قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا (103) الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا (الكهف: 103 104)

செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த முனாபிகீன்களிடம் ஈமானும் வணக்கமும் இருந்தது.ஆனால் அவர்களிடம் கொள்கை கெட்டுப்போய்விட்  டது.எனவே அவர்களின் ஈமானும் அமலும் அவர்களுக்கு எந்த பலனும் அளிக்கவில்லை.
அதைபோலவே இறைமறுப்பளர்களின் நல்ல காரியங்கள் நாளை மறுமையில் அவர்களுக்கு எந்தபலனையும் தரப்போவதில்லை, காரணம் அடிப்படையான ஈமானிய கொள்கையில் அவர்கள் கோட்டைவிட்டுவிட்டார்கள்.

وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا} [الفرقان: 23]،
இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.

வணக்கமும் ஷிர்க்கும்

مر أبو بكر -رضي الله تعالى عنه- براهب يتعبد في كنيسة وقد ترك الناس وزهد في الدنيا؛ لكنه يعتقد أن الله
ثالث ثلاثة، يتقرب إلى عيسى وإلى روح القدس كما يتقرب إلى ربنا -جل وعلا- يعمل وينصب؛ لكنه على
الشرك. فلما رآه أبو بكر دمعت عيناه وقال: صدق الله! (عَامِلَةٌ نَاصِبَةٌ * تَصْلَى نَارًا حَامِي

ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒரு கிருஸ்துவ ஆலயத்தை கடந்துசெல்கிறபோது அதில் மிகுந்த பக்தியுடன் வணக்கம் செய்யும் ஒரு பாதிரியை கண்டார்கள்.மக்களிடமிருந்து தனிமை,உலகில் பற்றின்மை.  வணக்கம்.எல்லாம் இருக்கிறது ஆனாலும் கொள்கை கெட்டுப்போய்விட்ட து.காரணம் மூன்று தெய்வ கொள்கை மூலம் ஷிர்க்கும் கலந்துவிட்டது. அவரைப்பார்த்து கண்ணீர் வடித்த அபூபக்கர் (ரலி) அவர்கள்,

“அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்”  88:3,4

என்ற அல்லாஹ்வின் வார்த்தை உணமைதான் என்று கூறினார்கள்.


உலகில் முதலாவதாக கொள்கை கெட்டவன் இப்லீஸ்தான்.அவன் அல்லாஹ்வையும்,மறுமையையும்,சுவர்க்கத்தையும்,நரகத்தையும் நம்பிக்கை கொண்டவன்.அவன் கெட்டுப்போனது கொள்கையில் தான்.

الحجر:35]،: (قَالَ رَبِّ فَأَنْظِرْنِي إِلَى يَوْمِ يُبْعَثُونَ)

“என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான்

இதில் இப்லீஸ் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிக்கை கொண்டிருந்தான் என்று தெளிவாக விளங்குகிறது.

எனவே ஒரு முஸ்லிம் தன் ஈமானை பாதுகாக்க இஸ்லாத்தின் கொள்கை களை அடிப்படையாக தெரிந்துவைத்துக்கொள்வது அவசியமாகும்.

இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

اعْلَمْ أنَّ الفِقْهَ في الدّينِ أفضَلُ مِنَ الفِقْهِ في الأحْكام

மார்க்கத்தின் கொள்கைகளை தெரிந்துகொள்வது இஸ்லாத்தின் சட்டங்களை தெரிந்துகொள்வதைவிட முக்கியமானது.

அதனால்தான் அகீதாக்கள் பற்றிய சரியான அறிவு யாருக்கு இல்லையோ அவர்கள் அதுபற்றி விவாதம் செய்வதோ,விமர்சனம் செய்வதோகூடாது,மாத் திரமல்ல அதுபோன்ற சபைகளை தவிர்க்கவேண்டும்.    

وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا

4:140. (முஃமின்களே!) “அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் ஒன்றாகச் சேர்த்துவிடுவான்.


             மேலும் தீர்க்கமான அறிவு பெற்றவர்கள் கூட

وَالرَّاسِخُونَ فىِ الْعِلْمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِ كلُ‏ٌّ مِّنْ عِندِ رَبِّنَا

கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். 3:7 என குர்ஆன் கூறுகிறது.


أقبل رجل إلى الإمام مالك رحمه الله تعالى، وقال له: يا إمام (الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى) [طه: 6]، كيف استوى؟ قالوا: فتغير الإمام مالك حتى علته الرحباء يعني أخذه شعور بالهيبة والخوف والرعب من السؤال وعظمته حتى تصبب منه العرق، تغير الإمام ثم التفت إلى الرجل وقال ويحك أتدري ما تقول ؟ أنت تسأل عن أمر عظيم، الاستواء معلوم والكيف مجهول .. نحن نعلم أن الله استوى على عرشه جل وعلا لكن طريقة الاستواء لم يخبرنا بها جل وعلا فلا نتكلم بها بغير علم فإنها تختص بأمر يخص العظيم جل وعلا
قال: "الاستواء معلوم، والكيف مجهول، والسؤال عنه بدعة، والإيمان به واجب"، ثم أمر بإخراج الرجل بين يديه .
 الأسماء والصفات للبيهقي (ج2 ص305-306)،


இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து,இமாம் அவர்களே!  அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.என்று அல்லாஹ் கூறுகிறான் அவன் அர்ஷில் எப்படி அமர்ந்திருக்கிறான்?என்று கேட்டார்.அப்போது அந்த கேள்வியின் பயத்தால் இமாம் அவர்களுக்கு தன்னிலைமாறி வியர்க்க ஆரம்பித்தது.

பின்னர் அந்த மனிதர் பக்கம் திரும்பி, நீ எதைப்பற்றி கேள்வி கேட்கிறாய் என்று தெரிகிறதா?மிகப்பெரிய விஷயம் பற்றி கேட்கிறாய். 
   அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்தான் என்று தெரியும் ஆனால் எப்படி அமர்ந்திருக்கிறான் என்று தெரியாது.ஏனெனில் அதைப்பற்றி அவன் கூறவில்லை.அவன் கூறாத விஷயம் பற்றி நாம் பேசமாட்டோம்.

ஆகவே இதைப்பற்றிய நம்முடைய கொள்கை இது தான்:
அவன் அர்ஷில் அமர்ந்தான் என்பது தெரியும்.எப்படி அமர்ந்தான் என்று தெரியாது.அதைப்பற்றி கேள்வி கேட்பது பித்அத்.அதை ஈமான் கொள்வது கட்டாயக்கடமையாகும்.


لما ترجم الذهبي لعمرو بن عبيد في كتابه سير أعلام النبلاءكان عمرو بن عبيد مع ضلاله وكثرة الشبهات في قلبه إلا أنه كان عابدا حتى إنه مرة التقى بالخليفة فقال له الخليفة وهم في الحرم قال: هل لك إلي حاجة؟ فقال له عمرو: هذا مقام لا يسأل فيه إلا الله. وتركه وذهب، مع أنه ضال في عقيدته ينكر أن الله في السماء، أن الله مستو على العرش، ينكر أن الله يتكلم وأنه سميع بصير، يسجد ويقول: سبحان ربي الأسفل!
لما ترجم له الذهبي قال: عمرو بن عبيد الزاهد العابد الورع الزنديق الفاجر، فكان زاهد في الدنيا، ورعا عن المحرمات، كان متعبداً، لكن لما أكثر السماع لأهل البدع ومجالستهم وأكثر الاستماع والنظر إلى شبهاتهم خلصت إلى قلبه حتى ضل ضلالا عظيما.ا.


இமாம் சஹபி (ரஹ்) அவர்கள் தங்களின் சியரு அஃலாமிந்நுபலா என்ற நூலில், அம்ர் இப்னு உபைத் என்பவர்  பற்றி விமர்சனம் செய்கிறபோது, அவர் உலக மோகம் இல்லாதவர்,மிகவும் பேனுதலுள்ளவர்,மிகச்சிறந்த வணக்கசாலி.
.ஒரு தடவை ஹறம் ஷரீபில் வைத்து அக்காலத்து கலீபா அவர்கள் அம்ரை சந்தித்து,உங்களுக்கு என்ன தேவை சொல்லுங்கள் நான் நிறைவேற்றுகிறேன் என்றார்.அப்போது அம்ர் அவர்கள், இது அல்லாஹ்விடம் கேட்கும் இடம்.வேறு யாரிடமும் நான் தேவையாகமாட்டேன் என்று பதில் கூறினார்கள்.
அந்தளவுக்கு பேனுதளுல்லவர் இறுதியில் கொள்கை கெட்டுப்போய் அல்லாஹ் வானத்தில் இல்லை,அவன் அர்ஷிலும் இல்லை,பூமியில் தான் இருக்கிறான்,அவன் பேசுவதில்லை,கேட்பதில்லை,   பார்ப்பதில்லை என்று உளற ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலைக்கு அவர் சென்றதற்கு காரணம் அகீதாக்கள் பற்றி அதிகம் விவாதம் செய்ததும்,அதுபோன்ற சபைகளில் பங்கெடுத்ததும்,வஹ்ஹாபிகளின் நட்புமே அவரின் வழிகேட்டிற்கு காரணம் என்று இமாம் சஹபி குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் அறிவுக்கு சுதந்திரம் கொடுக்கிறது,ஆனால் அந்த சுதந்திரத்திற்கு ஒரு எல்லை உண்டு.
எந்த இடத்தில் அறிவு தடுமாறுமோ  அந்த இடத்தில் ஈமான் முன்னிலைப்படுத்தப்படும்.

இதுநாள்வரை முஸ்லீம்களுக்கிடையில் சட்டஙக்குழப்பங்கள் செய்துவந்த வஹ்ஹாபிகள் கொள்கை குழப்பங்களில் இறங்கியுள்ளனர்.
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்றும்,குர்ஆனில் பிழை உண்டு என்றும் கூற ஆரம்பித்துள்ளனர்.

இது போன்று குர்ஆனில் கொள்கை குழப்பம் செய்த வஹ்ஹாபிகள் மீது உமர் ரலி அவர்கள் எடுத்த நடவடிக்கை இங்கு கவனத்தில் கொள்ளப்பட  வேண்டும்.

في عهد عمر -رضي الله تعالى عنه- أقبل رجل من العراق، رجل تخصصه طرح شبهات، لم يذهب ويجلس في مجلس لأحد أئمة العلم ويطلب العلم، لا، يبحث في القرآن عن شبهات ويطرحها للناس؛ فأقبل ودخل المدينة يعرف أين موضع عمر وأين موضع عثمان وعلي وغيرهم من الصحابة -رضي لله عنهم-، يعرف أن يسأل عن عبد الله بن عمر طالب علم، عن أبي هريرة، عن عبد الله بن عمرو، عن ابن عباس، يعرف أين يتوجه إليهم؛ لكنه لم يفعل، مضى إلى مجالس الناس ونواديهم!.
، فلما وقف إليهم قال: عندي مسألة؟ قال ما عندك؟ قال: إن الله يقول في القرآن: (فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنْبِهِ إِنْسٌ وَلَا جَانٌّ) [الرحمان:39]، ويقول في القرآن: (فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ * عَمَّا كَانُوا يَعْمَلُونَ) [الحجر:92-93]، هل الله يسألنا أم لا يسألنا؟! فجعل الناس يضطربون! فعلا؛ قرآن متناقض! هل يسألنا أم لا يسألنا! ثم يدعهم في حيرتهم ويذهب إلى مجموعة أخرى ويطرح عليهم سؤالا مثله أو قريبا منه، ثم يذهب إلى مجموعة ثالثة حتى بدأ الناس يتشككون في القرآن، فرفع أمره إلى عمر رضي الله -تعالى- عنه.

فدعاه عمر فجيء به إليه، وهو صبيغ بن عسل، قال له عمر: أنت من أين؟ قال: أنا من العراق، قال ما عندك؟ قال: عندي مسائل، قال هات مسائلك، فقال إن الله يقول: (فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنْبِهِ إِنْسٌ وَلَا جَانٌّ)، ويقول: (فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ * عَمَّا كَانُوا يَعْمَلُونَ)، نبئنا يا عمر هل يسألنا الله أم لا يسألنا؟.

فقال له عمر إن يوم القيامة يوم طويل، (يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ) [المعارج:4]، قال: إن يوم القيامة يوم طويل، ففي موطن يعنف الناس، يُقال لأحدهم: زنيت، سرقت، عققت، ولا يطلب منه أن يجيب عن ذلك؛ لأنه ثابت عليه، وفي موطن تعرض عليهم صحفهم ويُسأل، يقال له: لماذا زنيت؟ لماذا سرقت؟ لماذا فعلت؟ فهو في مواطن يعنف ليعرف جلالة شره وفجوره، وفي موطن آخر يحاسب، هل فهمت؟ قال: نعم، قال فما عندك من مسائل، فجعل يطرح شبهة تلو شبهة وعمر يجيب عليه، فلما انتهى قال له عمر: انتهت مسائلك؟ ما عندك شبهات؟ قال نعم.

قال له عمر: لماذا لم تذهب إلي؟ تأتي إلي أو تذهب إلى عثمان وعلي وإلى الصحابة العلماء إن كنت باحثاً عن الحق؟ فسكت الرجل. فقال عمر: اجلدوه. فجلدوا ظهره، ثم قال: اكشفوا عمامته، فضربه بالعصا على رأسه ضربات، ثم قال له عمر: هل بقي في رأسك شيء؟ والله يا أمير المؤمنين ما بقي في رأسي شيء

قال اذهب إلى العراق، والله لو بلغني عنك شيء لأقطعن رأسك، فذهب الرجل
!.
 تاريخ دمشق لابن عساكر

உமர் (ரலி) அவர்களின் காலத்தில் சபீக் இப்னு அசல் என்பவர் இராக்கிலிருந்து  மதீனா வந்தார்.
குர்ஆனைப்பற்றிய நிறைய சந்தேகங்களை கிளப்பினார்.அவருக்கு தெரியும் உமர் (ரலி),உஸ்மான் (ரலி),அலி (ரலி),இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) போன்ற பெரிய பெரிய சஹாபிளெல்லாம் இருக்கிறார்கள்.
தன் சந்தேகங்களை பெரும் சஹாபிகளிடம் கொண்டு செல்லாமல் மக்கள் மன்றத்துக்கு கொண்டு சென்றார்.
மக்களே!குர்ஆனில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு என்றார்.
என்னவென்று மக்கள் வினவியபோது அவர், அல்லஹுத்தஆலா குர்ஆனில் 55:39 ல் நாளை மறுமையில் கேள்வி கணக்கு இல்லை என்று கூறுகிறான்.ஆனால் 15:92 ல் கேள்வி கணக்கு உண்டு என்று சொல்கிறான்.
அல்லாஹ் கேட்பானா?கேட்கமாட்டானா?மக்கள் குழம்ப ஆரம்பித்தனர்,

இன்னொரு கூட்டத்திடம் வந்து வேறொரு சந்தேகத்தை கிள்ப்பினார்.
விஷயம் உமர் ரலி அவர்களின் கவனத்திற்கு வந்தபோது அவரை தன்னிடம் அழைத்து வரச்சொல்லி விசாரித்தார்கள்.

நீ எங்கிருந்து வருகிறீர்? உன் பிரச்சனை என்ன?என்று கேட்டபோது,அவர் -நான் இராகிலிருந்து வருகிறேன்.என் சந்தேகம் இது தான் என்று கூறினார்.அப்போது உமர் ரலி அவர்கள்,
அல்குர்ஆன் 70:4 ல் மறுமையில் ஒரு நாள் என்பது 50 ஆயிரம் வருடம் என்று கூறுகிறது.எனவே நீண்ட அந்தநாளில் பல கட்டங்களாக விசாரணை நடைபெறும்.

ஒரு கட்டத்தில் -நீ திருடினாய்,நீ விபச்சாரம் செய்தாய்,நீ கொலை செய்தாய் என்றுமட்டும் கூறுவான். ஏன் செய்தாய்? என இப்போது கேட்கமாட்டான்.
இன்னொரு கட்டத்தில், ஏன் செய்தாய்? என விசாரிப்பான்.புரிந்து விட்டதா? என்று கேட்டபோது ஆம் என்று அவர் பதில் கூறினார்.

அப்போது உமர் ரலி அவர்கள்,உனக்கு உண்மையில் இந்த தீனில் சந்தேகமிருக்குமானால் என்னிடம் வந்திருக்க வேண்டும்,அல்லது பெரிய சஹாப்பாக்களிடம் சென்றிருக்க வேண்டும்,அதைவிட்டுவிட்டு மக்களின் ஈமானில் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறீர் என்று கூறி, அவருக்கு சவுக்கடி கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் தலைப்பாகயை கழட்டச்சொல்லி தலையில் அடித்து இனி இது போன்ற சந்தேகத்தை உன் அறிவு கிளப்புமா என்று கேட்டு,நீ மதீனாவில் இருக்க கூடாது, இராக் செல்!உன்னை பற்றி இனியொரு செய்தி வந்தால் உன் தலையை துண்டித்து விடுவேன் என் எச்சரித்து அனுப்பினார்கள்.
அல்லஹுத்தஆலா நம்முடய அகீதாவில் தெளிவையும் உறுதியையும் தருவானாக!