Wednesday, 12 June 2013

அதிகாலை நேரத்தொழுகையும் அபிவிருத்தியான வாழ்க்கையும்




அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்திலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு.அந்த ஏற்றத்
தாழ்வுகள்தான் படைப்புக்களுக்கிடையில் சமன் செய்கிறது.அல்லாஹ்  தன் படைப்புக்க
ளுக்கிடையில் அமைத்த இந்த ஏற்றத்தாழ்வுகள் எனும் விதிக்கோட்பாட்டிலிருந்து எதுவும் தப்பாது.

வானவர்கள்,தூதர்கள்,நபித்தோழர்கள்,அவ்லியாக்கள் இவர்களில் எல்லோரும் அல்லாஹ்விடம் ஒரே அந்தஸ்தை பெற்றவர்களல்ல.

மலக்குமார்களுக்கிடையிலும் பெரிய வித்தியா
சங்கள் இருப்பதாக அல்லாஹ் தன் வான்மறையில் கூறுகிறான்.

اللَّهُ يَصْطَفِي مِنَ الْمَلَائِكَةِ رُسُلاً وَمِنَ النَّاسِ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ } [ الحج75 ] .

அல்லாஹ் வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களை அவனே தேர்வுசெய்கிறான். என்று கூறுகிறான்.

மலக்குமார்கள் அத்தனைபேரும் பரிசுத்தமானவர்கள் தான்,எனினும் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருக்கும் நெருக்கத்தை வேறுஎவரும் பெறவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம்.

இறைவனால் தூதர்களாக அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களும் பாவமன்னிப்பு பெற்றவர்கள்தான், எனினும் நபி ஸல் அவர்களின் அந்தஸ்தை வேறுஎவரும் கனவில்கூட நினைத்துப்பார்க்க இயலாது என்பதை நாம் அறிவோம்.

இவ்வாறே ஐங்கால தொழுகைகளில் அதிகாலை தொழுகையான பஜ்ர் தொழுகைக்கு அல்லாஹ்விடம் இருக்கும் மரியாதையும் கண்ணியமும் வேறு எந்த தொழுகைக்கும் இல்லை,காரணம் வணக்கங்களில் நாம் ஏற்றுக்கொள்கிற சிரமங்கள் அளவுக்கு கூலிகிடைக்கும் என்பது அல்லாஹ்வின் நியதியாகும்.
அன்னை ஆயிஷா ரலி அவர்களை நோக்கி நபி ஸல் அவர்கள் கூறிய வார்த்தைகள் இங்கு சிந்திக்கத்தக்கதாகும்.

قال النبي صلى الله عليه وسلم لعائشة رضي الله عنها : ( إن لك من الأجر على قدر 

نصبك ونفقتك ) رواه الحاكم

உன் சிறமத்தின் அளவே உனக்கு கூலி கிடைக்கும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

பொதுவாக தொழுகை ஒரு முஃமினின் ஈமானிய சாட்சியாகும்.நீங்கள் பள்ளிவாசலில் வழமையாக ஒருவரை கண்டால் அவரின் ஈமானுக்கு சாட்சியாயிருங்கள் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.

ஈமானுக்கும் இறைமறுப்புக்கும் இடையில் வேறுபாடு தொழுகை மூலமே பார்க்கப்படுகிறது.காரணம் அது இந்த மார்க்கத்தின் அசைக்க முடியா தூனாகும்.

முதலாவதாக கடமையாக்கப்பட்டது தொழுகை.முதலாவதாக உயர்த்தப்படும் அமலும் தொழுகையே,அவ்வாறே நாளை மறுமையில் முதல்விசாரணையும் தொழுகையைபற்றியே என ஸல் அவர்கள் கூறினார்கள்.

பயணத்திலும் போர்களத்திலும் தொழுகையின் முறைகள் மாறுபடுமே தவிர தொழுகை தவிர்க்கப்படாது.அது இந்த உம்மத்தின் விலைமதிப்பில்லா செல்வமாகும்.அதனால் தான் அல்லாஹ்வுக்கும் அவனின் அன்புத்தூதருக்கும் இடையில் யாருமின்றி நேரடியாக மிஃராஜில் தொழுகை வழங்கப்பட்டது.

சுக துக்கங்களில்,வெற்றி தோல்விகளில்,ஏற்ற இறக்கங்களில் வாழ்வின் அத்தனை நொடியிலும் ஒரு உற்ற நண்பனைப்போல ஒரு முஃமினின் வாழ்வில் தொழுகைக்கு இடமுண்டு.


كان رسول الله صلى الله عليه وسلم إذا أهمه أمر قام إلى الصلاة لأن الله يقول ( واستعينوا بالصبر والصلاة )

நபி ஸல் அவர்களுக்கு கவலைதரும் விஷயம் எதுவும் நடந்துவிட்டால் உடனே தொழுகையின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்புவார்கள்.ஏனெனில் பொருமையை கொண்டும்,தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபி ஸல் அவர்கள் தங்களின் வாழ்நாளின் இறுதிமூச்சை எண்ணிக்கொண்டிருக்கும்போது தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.

தொழுகையில் நிற்கிறபோது இஸ்லாமிய எதிரியால் கொலைசெய்யப்பட்டு மயங்கி விழுந்த உமர் ரலி அவர்கள் மயக்கம் தெளிந்த போது-தொழுகையின் நேரம் முடிந்துவிட்டதா? என்று கேட்டார்களாம்.

தொழுகையில் பேணுதல் இல்லாத ஒரு முஸ்லிமால் எதையும் சரியாக செய்ய முடியாது என்பது உமர் ரலி அவர்களின் அபிப்ராயமாகும்.அதனால் தான் தன் ஆட்சியில் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கான முதல் தகுதியாக அவர் தொழுகையில் பேணுதல் உள்ளவராக இருக்கவேண்டும் என்று கடைபி டித்துவந்தார்கள்.

ஸாலிஹீன்களான நல்லோர்கள் தொழுகையில் கடைபிடித்த பேனுதல்:

عن برد مولى سعيد بن المسيب قال : ما نودي بالصلاة منذ أربعين سنة إلا وسعيد في
المسجد .
நாற்பதாண்டுகளாக பாங்கு சொல்லப்படும்போது இமாம் ஸயீத் இப்னுல் முஸய்யப் ரஹ் அவர்கள் பள்ளிவாசலில் இருப்பார்கள்.

كان الأعمش قريباً من سبعين سنة لم تفته التكبيرة الأولى

இமாம் அஃமஷ் ரஹ் அவர்கள் ஏறத்தாள எழுபதாண்டு காலமாக முதல் தக்பீரை தவறவிட்டதில்லை.

وروي عن أحد السلف أنه كان به وجع الخاصرة ، فكان إذا أصابه أقعده عن الحركة ، فكان إذا نودي بالصلاة يحمل على ظهر رجل ، فقيل له : لو خففت على نفسك ؟ قال : إذا سمعتم حي على الصلاة ، ولم تروني في الصف ، فاطلبوني في المقبرة .

நம் முன்னோர்களில் ஒருவர் கடுமையான இடுப்பு வலியால் அவதிப்பட்டார். அந்த வலி வரும்போது அவரால் அசையக்கூட முடியாது.இந்நிலையில் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டுவிட்டால் யாராவது அவரை சுமந்து சென்று பள்ளியில் அமரவைப்பார்கள்.
இவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டுமா?என அவரிடம் கேட்கப்பட்ட போது-ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டு தொழுகையின் ஸஃப்பில் என்னை காணாவிட்டால் என்னை கப்ரில் தேடுங்கள் என்றார்கள்.

وسمع عامر بن عبد الله بن الزبير المؤذن وهو يجود بنفسه فقال : خذوا بيدي ، فقيل
: إنك عليل ، قال : أسمع داعي الله فلا أجيبه ؟! فأخذوا بيده فدخل مع الإمام في المغرب 
 ، فركع ركعة ثم مات

ஆமிர் இப்னு அப்துல்லாஹ் ரஹ் அவர்கள் கடுமையான நோயில் பீடிக்கப்பட்டிருந்த போது தொழுகைக்காக தன் கரம்பிடித்து அழைத்துச்
செல்லச்சொன்னார்கள்.
நீங்கள் கடுமையான நோயில் அவதிப்படு
கிறீர்கள்.இந்நிலையில் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?என்றபோது-
அல்லாஹ்வின் அழைப்பாளரின் அழைப்பை கேட்டும் என்னை பதில் கூறாமல் இருக்கச்சொல்கிறீர்களா?என்று கேட்டார்கள்.

உடனே அவரின் நண்பர்கள் அவர் கரம்பிடித்து மங்ரிப் தொழுகைக்கு அழைத்து வந்தபோது இமாமுடன் சேர்ந்துகொண்டார்.
அத்தொழுகையிலேயே அவரின் உயிர் பிரிந்தது.

தொழுகை விஷயத்தில் சுலைமான் அலை அவர்களின் பேனுதல்

قال تعالى : { فَطَفِقَ مَسْحاً بالسوق والأعناق } أي فجعل سليمان عليه السلام يمسح سوقها وأعناقها ، قال الأكثرون معناه أنه مسح السيف بسوقها وأعناقها أي قطعها ، قالوا إنه عليه السلام لما فاتته صلاة العصر بسبب اشتغاله بالنظر إلى تلك الخيل استردها 
وعقر سوقها وأعناقها تقرباً إلى الله تعالى

நபி சுலைமான் அலை அவர்கள் ஒருநாள் தன் படையை பார்வையிடும்போது அதில் அணிவகுத்துநின்ற குதிரைகளின் காட்சி அவர்களை கவர்ந்திழுத்தது.  அந்த காட்சிகளை இரசித்துக்கொண்டிருந்ததால் அஸர் தொழுகை களாவாகிப்போனது.
தனக்கு தொழுகை களாவாகிப்போனதை பொருத்துக்கொள்ள முடியாத நபி சுலைமான் அலை அவர்கள் அத்தனை குதிரைகளின் க்கலையும் கழுத்தையும் துண்டித்து அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தார்கள் என அல்குர்ஆன் கூறுகிறது.

عن إبراهيم التيمي قال: كانت الخيل التي شغلت سليمان، عليه الصلاة والسلام عشرين 
ألف فرس، فعقرها

(இப்னு கஸீர்)

அவர்கள் பலியிட்ட குதிரைகள் இருபதாயிரம் என இப்ராஹீம் அத்தைமி அவர்கள் கூறுகிறார்கள்.



عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ الْعَبْسِيِّ قَالَ سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ
لَمَّا كَانَ يَوْمُ الْأَحْزَابِ صَلَّيْنَا الْعَصْرَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَغَلُونَا عَنْ الصَّلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ وَأَجْوَافَهُمْ نَارًا

கந்தக் போரில் நாங்கள் அஸர் தொழுகையை- மக்ரிபுக்கும் இஷாவுக்கு இடைப்பட்ட நேரத்தில் தொழுதோம்,தொழுகையை முடித்த நபி ஸல் அவர்கள்,அஸர் தொழுகையை களாவாக்க வைத்துவிட்டார்கள்.அல்லாஹ் அவர்களின் கப்ர்களையும்,வயிறுகளையும் நெருப்பால் நிறப்புவானாக என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அலி ரலி.அஹ்மத்-1182


عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَفَلَ مِنْ غَزْوَةِ خَيْبَرَ سَارَ لَيْلَهُ حَتَّى إِذَا أَدْرَكَهُ الْكَرَى عَرَّسَ وَقَالَ لِبِلَالٍ اكْلَأْ لَنَا اللَّيْلَ فَصَلَّى بِلَالٌ مَا قُدِّرَ لَهُ وَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ فَلَمَّا تَقَارَبَ الْفَجْرُ اسْتَنَدَ بِلَالٌ إِلَى رَاحِلَتِهِ مُوَاجِهَ الْفَجْرِ فَغَلَبَتْ بِلَالًا عَيْنَاهُ وَهُوَ مُسْتَنِدٌ إِلَى رَاحِلَتِهِ فَلَمْ يَسْتَيْقِظْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا بِلَالٌ وَلَا أَحَدٌ مِنْ أَصْحَابِهِ حَتَّى ضَرَبَتْهُمْ الشَّمْسُ فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَهُمْ اسْتِيقَاظًا فَفَزِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيْ بِلَالُ فَقَالَ بِلَالٌ أَخَذَ بِنَفْسِي الَّذِي أَخَذَ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ بِنَفْسِكَ قَالَ اقْتَادُوا فَاقْتَادُوا رَوَاحِلَهُمْ شَيْئًا ثُمَّ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَ بِلَالًا فَأَقَامَ الصَّلَاةَ فَصَلَّى بِهِمْ الصُّبْحَ فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ مَنْ نَسِيَ الصَّلَاةَ فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ قَالَ

{ أَقِمْ الصَّلَاةَ لِذِكْرِي
நபி ஸல் அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பும்போது தூக்கம் மிகைத்த காரணத்தால் ஓரிடத்தில்  இரவு தங்க முடிவு செய்தார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள் ஹழ்ரத் பிலால் ரலி அவர்களை அழைத்து இரவில் நீங்கள் பாதுகாப்பு பொறுப்பை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

ஹழ்ரத் பிலால் ரலி அவர்கள் தொழுகையில் ஈடுபட்டார்கள்.நபி ஸல் அவர்களும், நபித்தோழர்களும் தூங்கிவிட்டனர்.

பஜ்ர் நேரம் நெருங்கியபோது பிலால் ரலி அவர்களுக்கு தூக்கம் மிகைக்கவே தன் வாகனத்தில் சாய்ந்தவர்களாக தூங்கிவிட்டார்கள்.
சூரியன் சுட்டெரிக்கும்வரை நபியும், நபித்தோழர்களும்,பிலால் ரலி அவர்களும் நன்றாக தூங்கிவிட்டனர்.

முதலாவதாக திடுக்கிட்டு எழுந்த நபி ஸல் அவர்கள்,பிலாலே!என சப்தமிட்டார்கள்.திடுக்கிட்டு எழுந்த பிலால் ரலி அவர்கள்-அல்லாஹ்வின் தூதரே!உங்களை மிகைத்த தூக்கம் என்னையும் மிகைத்து விட்டது என்றார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள் தம் தோழர்களை நோக்கி,இந்த இடத்தை விட்டு வாகனத்தை கிளப்புங்கள் என்று உத்தரவிட்டார்கள்.

பின்பு சிறிதுதூரம் சென்று நபி ஸல் அவர்கள் ஒழுச்செய்து,பிலால் ரலி அவர்களை பாங்கு சொல்ல சொன்னார்கள்.பின்பு பஜ்ர் தொழுகையை ஜமாத்துடன் களாச்செய்தார்கள்.தொழுகையை முடித்த நபியவர்கள்-
யாரேனும் மறதியின் காரணமாக (உரிய நேரத்தில்) தொழத் தவறிவிட்டால் அவனுக்கு நினைவு வரும்போது, (விழித்தவுடன்) அதைத் தொழட்டும்!என்று கூறினார்கள்.
அபூஹுரைரா ரலி :முஸ்லிம்:1097

நபி இப்ராஹீம் அலை அவர்கள் தொழுகைக்காக அல்லாஹ்விடம் இப்படி துஆச்செய்தார்கள்

 رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"

அல்லாஹுத்தஆலா இந்த துஆவை ஒப்புக்கொண்டான் என்பதை இன்னொரு வசனம் உணர்த்துகிறது.

وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا

அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார் தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.

பஜ்ரும் பரக்கத்தும்

ஐங்காலத்தொழுகைகளில் பஜ்ர் தொழுகை தனிப்பெரும் அந்தஸ்தை பெறுகிறது.

1.வானவர்கள் சங்கமிக்கும் தொழுகை பஜ்ர்

 إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُوداً } [ الإسراء
78 ] 

நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.
அதாவது மலக்குகளால் அந்த தொழுகைக்கு சாட்சி சொல்லப்படும்.

عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " تَجْتَمِعُ مَلاَئِكَةُ اللَّيْلِ وَمَلاَئِكَةُ النَّهَارِ فِي صَلاَةِ الْفَجْرِ " ، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ : فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ : { إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُوداً } [ متفق عليه ] 

பஜ்ர் தொழுகையில் பகல் மலக்குகளும் இரவு மலக்குகளும் ஒன்றுசேர்கின்ற னர் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அறிவித்த அபூஹுரைரா ரலி அவர்கள் மேல்வசனத்தை மேற்கோள்காட்டினார்கள்.

2.அல்லாஹ்வை சந்திக்கும் அருள்கிடைக்கும்

عَنْ جَرِيرٍ بن عبد الله رضي الله عنه قَالَ : كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةً - يَعْنِى الْبَدْرَ - فَقَالَ : " إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُّونَ _ تضارون _ فِي رُؤْيَتِهِ ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا " يعني الفجر والعصر ، ثُمَّ قَرَأَ : { وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ } [ متفق عليه
  ]
ஒரு பதினான்காம் இரவில் நாங்கள் நபி ஸல் அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம்.
அப்போது நபி ஸல் அவர்கள் –
நீங்கள் இன்றைய இரவில் சந்திரனைப்பார்ப்பது போல நாளை மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பீர்கள்.அதற்கு நீங்கள் முடிந்தவரை பஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளில் பேனுதலாக இருங்கள் என்று கூறினார்கள் என ஜரீர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்

3.அல்லாஹ்வின் பொருப்பில் வருவார்

مَنْ صَلَّى صَلاَةَ الصُّبْحِ فَهْوَ فِي ذِمَّةِ اللَّهِ
 رواه مسلم ]

பஜ்ர் தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற்றுவிட்டார் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

4.இரவு வணங்கிய கூலி வழங்கப்படும்

عن عُثْمَانُ بْنُ عَفَّانَ رضي الله عنه قال : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ ، وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ " [ رواه مسلم ] .

இஷாவை ஜமாஅத்துடன் தொழுதவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப்  போலாவார்.எவர் பஜ்ரை ஜமாஅத்துடன் தொழுதாரோ அவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவரைப்போலாவார்

5.வானவர்களின் துஆ கிடைக்கிறது

عَنْ علي بن أبي طالب رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " مَنْ صَلَّى الْفَجْرَ ثُمَّ جَلَسَ فِي مُصَلاَّهُ ، صَلَّتْ عَلَيْهِ الْمَلاَئِكَةُ ، وَصَلاَتُهُمْ عَلَيْهِ : اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، اللَّهُمَّ ارْحَمْهُ " [ رواه أحمد ] .

யார் பஜ்ர் தொழுதுவிட்டு அந்த இட்த்தில் சிறிதுநேரம் உட்கார்ந்திருப்பாரோ அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.
யா அல்லாஹ் இவரை மன்னித்து இரக்கம் காட்டுவாயாக என துஆச்செய்கின்றனர்.
6.பஜ்ரை விடுவது நயவஞ்சகர்களின் அடையாளம்.

نْ أُبَىِّ بْنِ كَعْبٍ رضي الله عنه قَالَ : صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ : " أَشَاهِدٌ فُلاَنٌ ؟ " فَقَالُوا لاَ ، فَقَالَ : " أَشَاهِدٌ فُلاَنٌ " فَقَالُوا لاَ ، لِنَفَرٍ مِنَ الْمُنَافِقِينَ لَمْ يَشْهَدُوا الصَّلاَةَ فَقَالَ : " إِنَّ هَاتَيْنِ الصَّلاَتَيْنِ _ الفجر والعشاء _ أَثْقَلُ الصَّلاَةِ عَلَى الْمُنَافِقِينَ 

நபி ஸல் அவர்கள் பஜ்ர் தொழுகையை எங்களுக்கு தொழவைத்துவிட்டு சில முனாபிக்குகளை கவனத்தில் வைத்து இவர் வந்தாரா?இவர் வந்துள்ளாரா? என கேட்டுவிட்டு ,இவர்கள் யாவரும் வரவில்லை என்பதை புரிந்துகொண்டுச்சொன்னார்கள்.
பஜ்ரும் இஷாவும் நயவஞ்சகாலுக்கு க்அஷ்டமான தொழுகை என்றார்கள். 

7.பரக்கத்தை பெற்றுத்தரும்.


قال صلى الله عليه وسلم \اللهم بارك لأمتي في بكورها

யா அல்லாஹ் அதிகாலையில் என் உம்மத்திற்கு பரக்கத் செய்வாயாக என நபி ஸல் அவர்கள் துஆச்செய்தாரகள்.

قال ابن القيم \ونومة الصبح تمنع الرزق لانه وقت تقسم فيه الأرزاق
  
சுபுஹ் தொழாமல் தூங்குவது ரிஸ்கை தடுத்துவிடும்,ஏனெனில் அந்த நேரத்தில்தான் அன்றைய தினத்தின் ரிஸ்குகள் பங்கு வைக்கப்படுகிறது என இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
 மனிதா!துர்க்குறியை வெளியே தேடாதே,என்றைக்கு நீ பஜ்ர் தொழவில்லையோ அன்றைய தினம் உனக்கு துர்க்குறிதான்.



Thursday, 6 June 2013

அமல்களில் தூய்மை அதுதான் மேன்மை


فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.
நாம் செய்யும் வணக்கங்கள் வீணாகுவதற்கான காரணங்களில் முதன்மையானது முகஸ்துதி தான்.

முடியை விடவும் மெல்லிய தன்மை கொண்ட இந்த முகஸ்துதியால் விளையும் தீங்குகள் எண்ணிக்கையில் அடங்காது.

எனக்கு பின்னால் என் உம்மத்தினர் முகஸ்துதி மூலம் இணைவைப்பின் வாசலை திறந்துவைத்து விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன் என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்.

ஈமான், இஸ்லாமுக்கு பின்னால் தீனின் அடிப்படை இகலாஸ் தான்.இதை தான் நபி சல் அவர்களுக்கு இந்த தீனை கற்றுக்கொடுக்க வந்த ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் நபி ஸல் அவர்களுக்கு இந்த தீனை மூன்று பிரிவுகளாக சொல்லி கொடுத்தார்கள்.

1:ஈமான்   2.இஸ்லாம்   3.இஹ்ஸான்.

இஹ்ஸான் என்றால் அல்லாஹ்வை பார்க்கும் உணர்வு அல்லது அல்லாஹ் நம்மை பார்க்கிறான் என்ற உணர்வு.

அதிகமான அமல்கள் செய்வதை விடவும் அல்லாஹ்வுக்காக தூய்மையாக செய்யப்படும் குறைவான அமல் அல்லாஹ்விடம் பெரும் நெருக்கத்தை பெற்றுத்தரும்.

ஸாலிஹீன்களான நல்லோர்கள் தங்களின் நற்காரியங்களில் இக்லாஸை கடைபிடித்து வந்தார்கள்.

وقف عبد الله بن عمر مع أبيه عمر على جبل الصفا، فلما رأوا كثرة الناس والحجاج رأوا كثرة الملبين والمكبرين استبشر عمر بكثرتهم وفرح في عهده رضي الله عنه وقد كثر المسلمين وامتلأ الحرم بالحجاج..فرح.. فقال عبدالله بن عمر لأبيه: يا أبتِ ما أكثر الحاج! فقال له عمر: يا بني: الركب كثير لكن الحاج قليل..
لكن الله أعلم بالقلوب والنيات "لكن الحاج قليل "

ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் தன் தந்தை உமர் ரலி அவர்களுடன் ஹஜ்ஜுக்கு சென்றார்கள்.

அங்கு ஸபா மலையில் நின்று ஹாஜிகளின் பிரமாண்டமான கூட்டத்தை கண்டு அளவிலா ஆனந்தமடைந்த இப்னு உமர் ரலி அவர்கள் தம் தந்தையிடம்-
எவ்வளவு ஹாஜிகள்!  என்றார்கள்.
அதை கேட்ட உமர் ரலி அவர்கள், மகனே! ஹஜ்ஜுக்கு வந்த கூட்டம் அதிகம் தான் ஆனால் இதில் இக்லாஸாக ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் குறைவு என்றார் கள்.
பின்னொரு காலத்தில் ஹஜ்ஜின் நோக்கம் மாறிப்போகும் என்று நபி ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.



صلى أبو أمامة الباهلي رضي الله تعالى عنه صلى يومًا في المسجد، والمسجد مليء فقام رجل يصلي ركعتين فسجد واشتد بكاؤه، بكاء هذا الرجل فلما انتهى من صلاته وجعل يمسح دمعه بطرف عمامته قال له أبو أمامة رضي الله عنه: "ما أحسن بكاؤك لو كان في بيتك".

ஹழ்ரத் அபூ உமாமா ரலி அவர்கள் ஒருநாள் பள்ளியில் தொழுதுகொண்டிருந்தார்கள்.
பள்ளிவாசல் மக்கள் கூட்டத்தால் நிறம்பி இருந்தது.
அச்சபையில் மக்கள் பார்வையில் ஒருவர் நின்று தொழ ஆரம்பித்தார்.தன்னுடைய ஸஜ்தாவில் கடுமையாக அழுதார்.

தொழுகையை முடித்த அம்மனிதர் தன் தலைப்பாகையால் தன் கண்ணீரை துடைத்தார்கள்.
இம்மனிதரிடம் வந்த ஹழ்ரத் அபூ உமாமா ரலி அவர்கள் ,நீர் உம் வீட்டில் தொழும்போது அழுதுகொள்ளும்.அதுதான் உமக்கு நல்லது.ஏனெனில் பொது இடத்தில் இவ்வாறு செய்வது உமக்கு முகஸ்துதியை ஏற்படுத்தி
விடும்.என்று கூறினார்கள்.

தனிமையில் வணக்கம் செய்யும்போது சோம்பேரித்தனமும்,மக்களுக்கு மத்தியில் அமல்செய்யும்போது உற்சாகமும் ஏற்படுவது முனாபிக்கீன்களின் அடையாளமாகும் என அலி ரலி அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் தன் திருமறையில் முனாபிகீன்களின் மூன்று அடையாளத்தை கூறுகிறான்.

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّـهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّـهَ إِلَّا قَلِيلًا

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான். தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்). இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.


ابن المبارك التقي مرة بالعدو وخرج رجل من أقوى العدو بأسًا، وجعل يجول بين الصفين ويصيح بالمسلمين من يبارز؟ من يقاتل؟ فلم يخرج إليه أحد..
فوضع ابن المبارك طرف العمامة على وجهه ولبس الخوذة على رأسه، ثم استل سيفه وخرج وقاتله حتى قتله، قتل ابن المبارك ذلك الرومي، فخرج رجل من الروم إلى ابن المبارك فقتله ابن المبارك، ثم خرج ثالث فقتله ابن المبارك..
ثم أقبل إليه الناس إلى هذا الملثم -ابن المبارك- لا يدرون من هو؟ من هو هذا الرجل الذي رفع راية الله وأعلى كلمة الإسلام وأعز الدين وأذل المشركين من هو؟
فجعلوا يحاولون أن يعرفوه وهو يصد بوجهه عنهم ليدخل في غمار الناس فيختفي فأقبل إليه أبو عمر أحد أصحابه، وقد شك أنه صاحبه، أقبل إليه ووضع طرف أصبعه على عمامته ثم كشف اللثام فغطاه ابن المبارك مباشرة، وقال: "حتى أنت يا أبا عمر ممن يشنّع علينا" ممن يريد فضحنا، ممن يريد أن يظهر عملنا.. يعني لا يُظن بك، حتى أنت يا أبا عمر ممن يشنع علينا، فَعَدَّ كشف عمله فضيحة..
يقول أنا أريد العمل الذي عملته ألا يقصد قلبي أن يشكرني أحد أو يثني عليّ أحد أبدًا، أنا أريده لله، أريد الجهاد لله، ألا يعلم به أحد..

ரோமர்களை எதிர்த்து நடைபெற்ற போர்களத்தில் எதிரிகளில் ஒருவன் முஸ்லிம்களை நோக்கி என்னுடன் உங்களின் யார் சண்டைக்கு வருகிறீர்?  என கூச்சலிட்டான்.என்னை எதிர்கொள்ள உங்களில் யாருக்கு தைரியம் இல்லையா?என கொக்கரித்தான்.
முஸ்லிம்களில் அவனை எதிர்கள்ள யாரும் தயாரில்லை.
அப்போது முஸ்லிம்களின் படையில் இருந்த அப்துல்லா இப்னு முபாரக் ரஹ் அவர்கள் தன் தைலைப்பாகையை கொண்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டு வாளுடன் களத்தில் அந்த எதிரியை எதிர்கொண்டார்கள்.
அவனுடன் சண்டையிட்டு அவனை கொலை
செய்துவிட்டார்கள்.

பின்பு இன்னொருவன் வந்தான்.அவனையும் அவர்களே எதிர்கொண்டு கொன்று விட்டார்கள்.பின்பு மூன்றாவது ஒருவன் வந்தான்.அவனையும் எதிர்கொண்டு இப்னுல்முபாரக் ரஹ் அவர்கள் அவன் கதையையும் முடித்தார்கள்.
இறுதியில் மக்கள் யார் அந்த மகா பெரிய வீரர்? என பார்க்க ஆவல் கொண்டனர்.இந்த தீனின் கண்ணியத்தை நிலைநிறுத்திய அப்போராளி யார் என மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
மக்கள் முட்டிமோதி அவரை காண முற்பட்டபோதும் முடியவில்லை. அக்கூட்டத்தில் இருந்த அபூஉமர் அவர்களுக்கு இவர் நம் நண்பர்  அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்காக இருக்குமோ என சந்தேகம் வந்து அவரை பின் தொடர்ந்து சென்றார்.
இறுதியாக வலுக்கட்டாயமாக அவரிம் முகத்திரையை நீக்கி பார்த்து விட்டார்கள்.
மக்களிடமிருந்து ஏன் உங்களை மறைக்கிறீர்கள்?என இமாமிடம் காரணம் கேட்டபோது,நான் அல்லாஹ்வுக்காக ஜிஹாத் செய்ய வந்தேன்.வேறு யாரும் என்னை புகழவேண்டுமென்றோ,நன்றி சொல்லவேண்டுமென்றோ வரவில்லை.  என் அமல் அல்லாஹ்வுக்காகவே ஒப்படைக்கப்படவேண்டும்.என்று பதில் கூறினார்கள்.

قال أبو إسماعيل الصائغ: كان أبي ومشيخة الحي إذا كان يوم صوم أحدهم، إذا أحدهم صاحب يوم الخميس والاثنين ادهن – دهن شفته حتى لا يظهر عليه أثر الصوم – ادهن وتطيب ثم خرج إلى الناس حتى لا يعلم الناس عليه أي أمارة تدل أنه صائم

அபூ இஸ்மாயீல் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
என் தந்தையும் அவர்களின் நண்பர்களும் திங்கள்,வியாழன் ஆகிய தினங்களில் நோன்புநோற்பதை வழமையாக்கி கொண்டவர்கள்.
அவ்வாறு அவர்கள் நோன்புவைக்கும்போது தங்களின் உதட்டில் எண்ணை தேய்த்துக்கொள்வார்கள்.அவ்வாறு செய்வது அவர்களை உற்சாகமாக காட்டும்.
மற்றும் நோன்பின் அடையாளத்தை மக்காளால் உணர்ந்துகொள்ள முடியாது.


وداود بن أبي هند لبث سنين يصوم يومًا ويفطر يومًا، ولم يعلم به أحد حتى أهله لم يعلموا به، كان يخرج إلى دكانه في الصباح فيأخذ من أهله طعامًا ليكون له فطورًا، فإذا كان يوم فطره أفطر عليه، وإذا كان يوم صومه تصدق به، ثم رجع بعد المغرب إلى بيته من دكانه فأكل معه فهم يظنونه يتغدى إذا رجع أو يتعشى وهو في الحقيقة إنما يفطر لأنه كان صائمًا.

தாவூத் ரஹ் அவர்கள் தங்களின் குடும்பத்தினர்களுக்கு கூட தெரியாமல் பல ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.
ஒரு நாள் நோன்பு வைப்பார்கள்.மறுநாள் விட்டுவிடுவார்கள்.
தன் இல்லத்திலிருந்து காலை உணவை எடுத்துக்க்ண்டு கடைக்கு புறப்பட்டு விடுவார்கள்.அன்று நோன்பு இல்லையானால் அதை சாப்பிடுவார்கள். நோன்பாக இருந்தால் அதை ஸதகா செய்து விடுவார்கள்.பின்பு மக்ரிபுக்கு தன் இல்லம் திரும்பிய பின் இரவு உணவை சாப்பிடுவார்கள்.இவ்வாறு தன் குடிம்பத்தினர்களுக்கு கூட தெரியாமல் நோன்பில் இக்லாஸை கடைபித்து வந்தார்கள்.

Wednesday, 5 June 2013

மிஃராஜ் கனவல்ல


நபிமார்களின் நம்பகத்தன்மைக்கு ஆதாரமாக அற்புதங்களை நிகழ்த்திக்காட்டுவது உலகில் வந்த அத்துனை நபிமார்களும் செய்த ஒன்றே,ஆனாலும் நபி ஸல் அவர்கள் தங்கள் வாழ்வில் வெளியிட்ட அற்புதங்கள் ஒவ்வொன்றும் மற்றெல்லா அற்புதங்களை
விடவும் எல்லாவகையிலும் தனித்துவம் பெற்றதாகும்.

நபி ஸல் அவர்களது வாழ்வில் நடந்த மிகப்பெரும் அற்புத நிகழ்வாக இஸ்ராவும் மிஃராஜும் அமைகிறது.நபி ஸல் அவர்கள் ஓர் இரவில் மக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு அற்புதமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். இது இஸ்ராஃஎன்று கூறப்படும். பின்னர் அங்கிருந்து ஏழு வானங்களையும் தாண்டி விண்ணுலகப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப் பட்டார்கள். இது மிஃராஜ்என்று கூறப்படும்.

மிஃராஜ் நிகழ்வு கனவல்ல,நிஜம்.


மிஃராஜை ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒருசிலர்கள் அது கனவுதான்.என்று கூறுகிறார்கள்.

மிஃராஜ் கனவல்ல என்று நிறுபிக்கும் ஆதாரங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு.

1.கனவாக இருந்தால் அது ஒருபெரும் அற்புதமாக இருக்காது.காரணம் கனவில் இதுபோன்ற நிகழ்வை கானுவது நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு கூட சாத்தியம் தான்.ஆனால் இஸ்லாம் அதை மாபெரும் அற்புதமாக முன்வைக்கிறது.

" سبحان الذي أسرى بعبده ليلاً من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير " [ الإسراء 1 ] .


“(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, நாம் சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக ஆக்கிய அந்த மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் அழைத்துச் சென்றவன் தூய்மையானவன். நமது அத்தாட்சிகளிலிருந்து அவருக்கு நாம் காண்பிக்கவே (இவ்வாறே செய்தோம்) நிச்சயமாக அவன் செவியுறுபவன் பார்ப்பவன்.” (17:1)

இங்கு இரு பயணங்கள் நடைபெற்றுள்ளது.ஒன்று இஸ்ரா.இதைப்பற்றியே மேல்கூறிய வசனம் பேசுகிறது.இன்னொரு பயணம் மிஃராஜ். இதுகுறித்து சூரா நஜ்மின் துவக்கத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் எங்கெல்லாம் சுப்ஹான எனும் சொல்லை பயன்படுத்துகிறானோ அங்கெல்லாம் அல்லாஹ்வின் மாபெரும் அற்புதத்தை சொல்லப் போகிறான் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அவ்வாறே இங்கும் அந்த வார்த்தையை கூறியபின்னே இந்த இஸ்ரா மிஃராஜ் நிகழ்வை குறித்து பேசுகிறான்.

2.அது கனவாக இருந்திருந்தால் அதை மக்கா காஃபிர்கள் இவ்வளவு கடுமையாக மறுத்தி ருக்கமாட்டார்கள்.மற்றும் ஈமான் கொண்ட சிலர்கள் மீண்டும் முர்தத்தாகி இருக்கமாட்டா ர்கள்.

أنه  لما رجع إلى مكة من ليلته أخبر بمسراه أم هانىء بنت أبي طالب أخت علي رضي الله عنه وأنه يريد أن يخرج إلى قومه ويخبرهم بذلك لأنه ما أحب أن يكتم قدرة الله وما هو دليل على علو مقامه  فتعلقت بردائه أم هانىء وقالت: أنشدك الله يا ابن عم ألا تحدث بها قريشا فيكذبك من صدقك فضرب بيده على ردائه فانتزعه منها، قالت: وسطع نور عند فؤاده كاد يخطف بصري فخررت ساجدة فلما رفعت رأسي فإذا هو قد خرج، قال: فقلت لجاريتي نبعة وكانت حبشية: اتبعيه وانظري ماذا يقول، فلما رجعت أخبرتني أن رسول الله  انتهى إلى نفر من قريش في الحطيم وفيهم مطعم بن عدي وأبو جهل بن هشام فأخبرهم بمسراه.
ولما قص رسول الله خبر الإسراء على جمع من قريش أعظموا ذلك الإسراء وصار بعضهم يصفق وبعضهم يضع يده على رأسه تعجبا - فلو كان الإسراء رؤيا منامية لما كانت مستغربة ولما أحدثت تلك الضجة وكذبه المسلمون اللهم إلا من كان منهم قوي العقيدة ثابت الإيمان - قال مطعم بن عدي: إن أمرك قبل اليوم كان أمرا يسيرا غير قولك اليوم، هو يشهد أنك كاذب، نحن نضرب أكباد الإبل إلى بيت المقدس مصعدا شهرا ومنحدرا شهرا، أتزعم أنك أتيته في ليلة واحدة؟ واللات والعزى لا أصدقك وما كان هذا الذي تقول قط، فقال مطعم: يا محمد صف لنا بيت المقدس، فقال أبو بكر رضي الله عنه: صف لي يا رسول الله فإني قد جئته، فجاءه جبريل بصورته ومثاله فجعل يقول باب منه في موضع كذا وباب منه في موضع كذا، وأبو بكر رضي الله عنه يقول: أشهد أنك رسول الله حتى أتى على أوصافه.
وهذه هي الأحاديث الواردة في «صحيح البخاري» الخاصة بالإسراء مشروحة في الهامش شرحا موجزا نقلا عن القسطلاني:

மிஃராஜ் பயணத்தை முடித்த நபி ஸல் அவர்கள் மக்கா திரும்பியபோது,  முதலாவதாக அச்செய்தியை குறித்து அபூ தாலிப் அவர்களின் மகள் உம்முஹானீ ரலி அவர்களிடம் கூறினார்கள்.நான் அல்லாஹ்வின் வல்லமையை மறைக்க விரும்பவில்லை,எனவே இதை மக்களிடம் சொல்லப்போகிறேன் என்றார்கள்.

அப்போது உம்முஹானீ ரலி அவர்கள் -என் சச்சாவின் மகனாரே! நீங்கள் இதைப்பற்றி குரைஷிகளிடம் சொல்லத்தான் வேண்டுமா? உங்களை உண்மைப்படுத்திவர்கள் கூட பொய்யாக்கிவிடுவார்களே! என்று அவர்களின் துண்டைபிடித்து தடுத்து நிறுத்தினார்கள்.

அதைப்பற்றி உம்மு ஹானீ ரலி அவர்கள்
நான் தடுத்தபோது என் பக்கம் வேகமாக திரும்பிய பெருமானாரின் கல்பிலிருந்து ஒரு ஒளி என் பார்வையை மயக்கியது,உடனே நான் ஸஜ்தாவில் விழுந்துவிட்டேன்.
மயக்கம் தெளிந்து நான் எழுந்தபோது நாயகம் அங்கு இல்லை.
உடனே என் வேலைக்கார பெண்ணிடம், நபி ஸல் அவர்களை பின் தொடர்ந்து செல்,அங்கு நடக்கும் செய்தியை என்னிடம் கொண்டுவா என்று கூறி அனுப்பினேன்.
குறைஷிகளின் ஒரு கூட்டம் ஹதீமில் அமர்ந்திருந்தனர்.அதில் அபூ ஜஹ்ல்,முத்யிம் போன்ற தலைவர்களும் இருந்தனர்.
அங்கு சென்ற நபி ஸல் அவர்கள் தன் மிஃராஜ் நிகழ்வை துணிச்சலுடன் கூறியது தான் தாமதம்.அங்கிருந்தவர்கள் திகைத்துப்போய்
விட்டனர்.

சிலர்கள் தங்களின் தலையில் கைவைத்து உட்கார்ந்து விட்டனர்.
உண்மையிம் மிஃராஜ் ஒரு கனவாக மட்டும் இருந்திருந்தால் இதை இவ்வளவு பெரிய விஷயமாக மக்கா காஃபிர்கள் எடுத்திருக்கமாட்டார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.
ஈமான் பழுதுபட்டவர்களெல்லாம் இதில் தடம் புரண்டுபோய்விட்டனர்.
எதிரிகளின் தலைவர்களில் ஒருவரான முத்யிம் இப்னு அதிய் நபி ஸல் அவர்களிடம் வந்து இன்றைக்கு நீர் சொல்லியிருக்கும் இந்த விஷயம் நீர் பொய்யர் என்பதற்கு போதுமான சாட்சியாகும்.ஏனெனில் ஒரு ஒட்டகப்பயணியால் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸை அடைய ஒரு மாத காலம் தேவைப்படும்.ஆனால் நீர் ஒரே இரவில் சென்றுவந்துவிட்டதாக கூறுகிறீர்.
பைத்துல் முகத்தஸைபற்றி எங்களுக்கு கூறுங்கள் என்றார்.அச்சபையில் இருந்த அபூபக்கர் ரலி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!நீங்கள் சொல்லுங்கள்.எனக்கு தெரியும் நான் அங்கு சென்று வந்துள்ளேன் என்றார்கள்.
அப்போது ஜிப்ரயீல் அலை அவர்கள் அங்கு வந்து பைத்துல் முகத்தஸின் தோற்றத்தை உயர்த்திகாட்டினார்கள்.அதைப்பார்த்த நபி ஸல் அவர்கள்அதன் கதவு,ஜன்னல் பற்றி கூறினார்கள்.  நபி ஸல் அவர்கள் சொல்லச்சொல்ல அபூபக்கர் ரலி நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன் என்றார்கள்.


عن جابر بن عبد الله رضي الله عنهما أنه سمع رسول الله  يقول: «لما كذبني قريش قمت في الحجر فجلا الله لي بيت المقدس فطفقت أخبرهم عن آياته وأنا أنظر إليه».

குரைஷிகள் என்னை பொய்படுத்தியபோது நான் ஹிஜ்ர் எனும் இட்த்தில் நின்றேன். அப்போது அல்லாஹ் எனக்கு பைத்துல்முகத்தஸை காட்டினான்.நான் அதை பார்த்து அதன் அடையாளங்களை கூறினேன் என்று நபி ஸல் அவர்கள் கூறுவதாக ஜாபிர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

3. இந்த பயணத்தில் ஜிப்ரயீல் அலை அவர்கள் என் கையை பிடித்துக்கொண்டு அழைத்துச்சென்றார்கள் என தெளிவாகவே வருகிறது.

كَانَ أَبُو ذَرٍّ يُحَدِّثُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فُرِجَ عَنْ سَقْفِ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ فَنَزَلَ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَرَجَ صَدْرِي ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَأَفْرَغَهُ فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ الدُّنْيَا

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின்  முகட்டை பிரித்து ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கினார்கள்.என் நெஞ்சை பிழந்து இருதயத்தை எடுத்து,அதை ஸம்ஸம் நீரால் கழுகி,பின்பு ஞானமும்,ஈமானும் நிரப்பிய ஒரு தங்க கோப்பையை கொண்டுவந்து அதை என் நெஞ்சில் நிறப்பி அதை மூடிவிட்டார்கள்.
பின்னர் என் கையை பிடித்துக்கொண்டு முதல் வானம் நோக்கி உயர்ந்துச்சென்றார்கள்.
அறிவிப்பவர்:அபூதர் ரலியல்லாஹு அன்ஹு:
புஹாரி:336

4.இந்த பயணம் கனவாக இருந்தால் இதில் நபியின் நெஞ்சு பிளக்கப்பட்ட அடையாளம்  எப்படி இருக்கும்?

عَنْ أَنَسٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ فَأَتَاهُ آتٍ فَأَخَذَهُ فَشَقَّ صَدْرَهُ فَاسْتَخْرَجَ مِنْهُ عَلَقَةً فَرَمَى بِهَا وَقَالَ هَذِهِ نَصِيبُ الشَّيْطَانِ مِنْكَ ثُمَّ غَسَلَهُ فِي طَشْتٍ مِنْ ذَهَبٍ مِنْ مَاءِ زَمْزَمَ ثُمَّ لَأَمَهُ قَالَ أَنَسٌ فَلَقَدْ كُنَّا نَرَى أَثَرَ الْمَخِيطِ فِي صَدْرِهِ

நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்க
ள்.அப்போது ஒருவர் வந்தார்.நாயகத்தை பிடித்தார்.அவர்களின் நெஞ்சைப்பிழந்தார்.
அதிலிருந்து ஒரு சதைத்துண்டை எடுத்து வெளியே வீசிவிட்டு, இதுதான் உங்களை ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாகும் என்று கூறினார்.

பின்னர் தங்கக்கோப்பையில் ஸம்ஸம் நீரை கொண்டுவந்து நாயகம் ஸல் லல்லாஹு அலைஹி அவர்களின் இருதயத்தை கழுகி அதை மீண்டும் உள்ளே வைத்து சேர்த்துவி ட்டார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்ட அடையாளத்தை பார்த்தோம் என்று இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பளர் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.
அஹ்மத்:11771

5.இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வை தன் கண்ணால் (கனவால் அல்ல) பார்த்தார்கள் என்பதில் மிகவும் உறுதியாக கூறுகிறார்கள்.
நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு அல்லாஹ் தன் நட்பை கொடுத்தான். நபி மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் தன் கலாமை (பேச்சை) தந்தான்.நபி ஸல் அவர்களுக்கு தன்னை பார்க்கும் நஸீபை தந்த்தில் உங்களுக்கு என்ன ஆச்சரியம் இருக்கிறது?என கேட்கிறார்கள்.

وقال ابن عباس في تفسير الآية: إنها رؤية عين، كما رواه البخاري
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
{ وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلَّا فِتْنَةً لِلنَّاسِ }
قَالَ هِيَ رُؤْيَا عَيْنٍ أُرِيَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ

மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியை மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை.என்ற வசனத்தின் விரிவுரையில் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்-மிஃராஜ் இரவில் நபி ஸல் லல்லாஹு அலைஹி அவர்கள் பார்த்த காட்சி (புறக்)கண்ணால் பார்த்ததாகும் என்று கூறுகிறார்கள்.
புகாரி.3599

உண்மையில் மிஃராஜ் படைத்தவனின் வல்லைமை மட்டுமே வெளிப்பட்ட இடமாகும். அதனால் தான் மிஃராஜ் பற்றி கூறும்போது தன் அடியாரை அழைத்துச்சென்றான் என்று கூறுகிறான்.

நபி ஸல் அவர்களும் இந்த நிகழ்வைபற்றி நான் சென்றேன் என்று எங்கும் கூற பார்க்க முடியவில்லை ,மாறாக நான் அழைத்துச்செல்லப்பட்டேன் என்று தான் கூறுகிறார்கள்.

மிஃராஜ் இந்த உம்மத்துக்கு சொல்லும் பாடம் நிறைய உண்டு.

முதலாவது:இஸ்லாம் கூறும் நம்பிக்கை அறிவை மிஞ்சியது.
இஸ்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மார்க்கமல்ல, அதேசமயம் சில விஷயங்கலில் அறிவை தாண்டி பக்தி முன்னிலைப்படுத்தப்படும்.
மிஃராஜை அறிவால் அளக்க நினைத்து, தடுமாறி ஈமானை பறிகொடுத்தவர்கள் நிறைய உண்டு.

وعن عمرو بن شعيب عن أبيه عن جده قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : أي الخلق أعجب إليكم إيمانا ؟ قالوا : الملائكة . قال : وما لهم لا يؤمنون وهم عند ربهم ؟ قالوا : فالنبيون . قال : وما لهم لا يؤمنون والوحي ينزل عليهم ؟ قالوا : فنحن . قال : وما لكم لا تؤمنون وأنا بين أظهركم . قال : فقال رسول الله - صلى الله عليه وسلم - : إن أعجب الخلق إلي إيمانا لقوم يكونون من بعدي يجدون صحفا فيها كتاب يؤمنون بما فيها .

ஈமானில் ஆச்சரியமான ஈமான் எது?என நபித்தோழர்களிடம் நபி ஸல் அவர்கள் கேட்ட போது-வானவர்களின் ஈமான் என பதில் கூறினார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள் அவர்களின் ஈமானில் என்ன ஆச்சரியம் உள்ளது,அவர்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தில் இருக்கின்றனர்.அப்படியானால் நபிமார்களின் ஈமான் மிகவும் ஆச்சரியமான ஈமான் என்று அடுத்து கூறினார்கள்.

அதைக்கேட்ட பூமான் நபி ஸல் அவர்கள்,நபிமார்களுக்கு நேரடியாக வஹி இறங்கி க்கொண்டிருக்கிறது.அப்படியிருக்க அது எப்படி உயர்வான ஈமானாகும்?

அப்படியானால் உங்களின் தோழர்களான எங்களின் ஈமான் ஆச்சரியமான ஈமான் என்று ஸஹாபாக்கள் கூறினார்கள்.அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள்,உங்கள் ஈமானில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.நான் உங்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.என்னை நேரடியாக நீங்கள் காணுகிறீர்கள்.
இறுதியாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
படைப்புக்களில் என்னிடம் ஆச்சரியமான ஈமானுக்கு சொந்தக்கரர்கள் எனக்கு பின்னால் வருவார்கள்.வேதத்தை கொண்டு நம்பிக்கைகொள்வார்கள்.
மறைவானதை கொண்டு நம்பிக்கை கொள்வது தான் ஈமானில் மிக உயர்ந்த நிலை என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.அதனால் தான் அபூபக்கர் ரலி அவர்களை பற்றி நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.


قال رسول الله صلى الله عليه وسلم بقوله: {وما عرضت الإسلام على أحد إلا كانت له كبوة إلا أبا بكر فإنه لم يتلعثم}.

நான் இஸ்லாத்தின் பக்கம் அழைப்புகொடுத்தபோது என்னை சந்தேகம் கொள்ளாத எவருமில்லை,ஆனால் அபூபக்கரை தவிர.அவர் மட்டும் தான் எந்த சந்தேகமுமின்றி நம்பிவிட்டார்.
அதுபோல மிஃராஜ் விஷயத்தில் அவர்களின் நம்பிக்கையே அவர்களுக்கு ஸித்தீக் எனும் பெயரை பெற்றுத்தந்தது.

فحينما عاد النبي صلى الله عليه وسلم من رحلة الإسراء والمعراج وقص على قريش ما حدث , انطلق نفرٌ منهم إلى أبي بكر رضي الله عنه يسألونه عن موقفه من الخبر ، فقال لهم : \" لئن كان قال ذلك لقد صدق \" ، فتعجّبوا وقالوا : \" أو تصدقه أنه ذهب الليلة إلى بيت المقدس وجاء قبل أن يصبح ؟ \" ، فقال : \" نعم ؛ إني لأصدقه فيما هو أبعد من ذلك ، أصدقه بخبر السماء في غدوة أو روحة \" ، فأطلق عليه من يومها لقب \" الصديق \" . عيون الأثر , ابن سيد الناس 471.
நபி ஸல் அவர்கள் மிஃராஜ் பயணத்தை முடித்து மக்கத்து காபிர்களிடம் அதைப்பற்றி எடுத்துகூறியபோது அவர்களில் ஒரு கூட்டத்தினர் ஹழ்ரத் அபூபக்கர் ரலி அவர்களிடம் சென்று, உம் தோழர் இவ்வாறு சொல்கிறார் என்றதும் கொஞ்சமும் யோசிக்காமல் ஸித்தீக் ரலி அவர்கள் அவர் சொல்லியிருந்தால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்றார்கள்.,
திகைத்துப்போன ம்க்காவாசிகள் ஒரே இரவில் பைத்துல் முகத்தஸ் சென்று திரும்பிவிட்டதாக கூறுகிறாறே அதையுமா நம்புகிறீர்?என்றனர்.அதை கேட்ட அபூபக்கர் ரலி அவர்கள் இதைவிடவும் பாரதூரமான விஷயத்தையும் நான் நம்பிக்கொண்டிருக்கிறே ன்.ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் வானத்திலிருந்து அவருக்கு வஹி வந்துகொண்டிருக்கிறது என்று நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார்கள்.

இரண்டாவது:சத்தியப்பாதையில் சோதனைகள் வரும்போது அதில் தளராமல் உறுதியாக இருக்க வேண்டும் என்ற அழுத்தமான பாட்த்தை நபி ஸல் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வே இந்த பயணத்தில் பின்வரும் காட்சியை பார்த்தார்கள்.

ويتضح ذلك من المشهد الذي رآه النبي صلى الله عليه وسلم لماشطة ابنة فرعون , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:لَمَّا كَانَ اللَّيْلَةُ الَّتِى أُسْرِىَ بِى فِيهَا أَتَتْ عَلَىَّ رَائِحَةٌ طَيِّبَةٌ فَقُلْتُ يَا جِبْرِيلُ مَا هَذِهِ الرَّائِحَةُ الطَّيِّبَةُ فَقَالَ هَذِهِ رَائِحَةُ مَاشِطَةِ ابْنَةِ فِرْعَوْنَ وَأَوْلاَدِهَا. قَالَ قُلْتُ وَمَا شَأْنُهَا قَالَ بَيْنَا هِىَ تَمْشُطُ ابْنَةَ فِرْعَوْنَ ذَاتَ يَوْمٍ إِذْ سَقَطَتِ الْمِدْرَى مِنْ يَدَيْهَا فَقَالَتْ بِسْمِ اللَّهِ. فَقَالَتْ لَهَا ابْنَةُ فِرْعَوْنَ أَبِى قَالَتْ لاَ وَلَكِنْ رَبِّى وَرَبُّ أَبِيكِ اللَّهُ. قَالَتْ أُخْبِرُهُ بِذَلِكَ قَالَتْ نَعَمْ. فَأَخْبَرَتْهُ فَدَعَاهَا فَقَالَ يَا فُلاَنَةُ وَإِنَّ لَكَ رَبًّا غَيْرِى قَالَتْ نَعَمْ رَبِّى وَرَبُّكَ اللَّهُ. فَأَمَرَ بِبَقَرَةٍ مِنْ نُحَاسٍ فَأُحْمِيَتْ ثُمَّ أَمَرَ بِهَا أَنْ تُلْقَى هِىَ وَأَوْلاَدُهَا فِيهَا قَالَتْ لَهُ إِنَّ لِى إِلَيْكَ حَاجَةً. قَالَ وَمَا حَاجَتُكِ قَالَتْ أُحِبُّ أَنْ تَجْمَعَ عِظَامِى وَعِظَامَ وَلَدِى فِى ثَوْبٍ وَاحِدٍ وَتَدْفِنَنَا. قَالَ ذَلِكَ لَكِ عَلَيْنَا مِنَ الْحَقِّ. قَالَ فَأَمَرَ بِأَوْلاَدِهَا فَأُلْقُوا بَيْنَ يَدَيْهَا وَاحِدًا وَاحِدًا إِلَى أَنِ انْتَهَى ذَلِكَ إِلَى صَبِىٍّ لَهَا مُرْضَعٍ وَكَأَنَّهَا تَقَاعَسَتْ مِنْ أَجْلِهِ قَالَ يَا أُمَّهْ اقْتَحِمِى فَإِنَّ عَذَابَ الدُّنْيَا أَهْوَنُ مِنْ عَذَابِ الآخِرَةِ فَاقْتَحَمَتْ. أخرجه أحمد 1/309(2822) .

மிஃராஜ் பயணத்தில் ஒரு அழகிய நறுமணத்தை நுகர்ந்தார்கள்.அதற்கான காரணம் என்ன?என ஜிப்ரயீல் அலை அவர்களிடம் கேட்டபோது-இது பிர்அவ்னின் மகளிடம் பணி செய்த ஒரு ஈமானிய பெண்னின் இன்னும் அவளின் பிள்ளைகளின் கப்ரிலிருந்தும் வரும் நறுமணமாகும் என்றார்கள்.
அப்பெண்ணைப்பற்றிய விபரத்தை நபி ஸல் அவர்கள் கேட்டபோது
பிர்அவ்னின் மகளுக்கு தலைவாரிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் கையிலிருந்து சீப்பு நழுவி கீழே விழுந்து விட்டது. அதை  பிஸ்மில்லாஹ் என்று கூறி அப்பெண் எடுத்த போது அதை கேட்ட பிர்அவ்னின் மகள் திடுக்கிட்டாள்.
என் தந்தை தானே ரப்பு,அப்படியிருக்க வேறு யாரின் பெயரை நீசொல்கிறாய் என கேட்டபோது –அப்பெண், எனக்கும்,உன் தந்தைக்கும் ரப்பு அல்லாஹ் தான் என்று கூரினாள்.இதை பிரவ்னிடம் அவள் தெரியப்ப்டுத்தியபோது பிர்அவ்ன் அப்பெண்ணையும் அவளின் குழந்தையையும் கொதிக்கும் பாத்திரத்தில் போட்டு துன்புறுத்தி கொலை செய்ய திட்டமிட்டான்.

அப்போது அப்பெண்-என்னையும் என் பிள்ளைகளையும் ஒரே சட்டியில் போட்டு கொன்று விடு என்று மட்டும் கோரிக்கை வைத்தாள்.
இறுதியாக அவளின் முன்னிலையில் ஒவ்வொரு குழந்தையாக சட்டியில் போட்டு கொலை செய்தான்.
கடைசி குழந்தை,பால்குடிக்கும் குழந்தையை அவன் பிடுங்கியபோது அத்தாயின் உறுதி கொஞ்சம் குறைந்தது.
அப்போது அக்குழந்தை தன் தாயிடம் தாயே!நரகத்தின் வேதைனையைவிட துன்யாவின் வேதனை மிக இலகுவானது எனவே பொருமையாயிருங்கள் என்று உபதேசம் செய்தது.  மக்காவாசிகளின் சோதனை உச்சத்தை தொட்டபோது ஸல் அவர்களுக்கு இந்த காட்சியை ஒரு பாடமாக காட்டினான்.

மூன்றாவது:பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் சொத்து என்பதை முழு உம்மத்துக்கும் புரியவைக்கவே அல்லாஹ்வின் இந்த மிஃராஜ் ஏற்பாடு.
16 மாதங்கள் முஸ்லிம்களின் கிப்லா மாத்திரமல்ல முஸ்லிம்களின் முதல் கிப்லாவும் அதுவே.
பயணம் செய்வதற்கான மூன்று பள்ளிவாசல்களில் அதுவும் ஒன்று என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நான்காவது:வாழ்வின் எந்த சோதனைக்குப்பின்னும் மகிழ்ச்சி கிடைக்கும்.எந்த கஷ்டமும் நிறந்தரமில்லை.எனும் உண்மையை அழுத்தமாக புரியவைக்கிறது மிஃராஜ்.
இந்த தீனுக்கு அரணாகவும்,நபி ஸல் அவர்களுக்கு பாதுகாப்பாகவும் இருந்த அபூதாலிபும் அன்னை கதிஜா ரலி அவர்களும் ஏக காலத்தில் மரணித்தார்கள்.அந்த துக்கத்திற்கு ஆறுதலாகவும்,மக்காவும் தாயிபும் நாயகத்தை துரத்தியடித்து வேட்டையாடியபோது அல்லாஹ் தன் இல்லத்துக்கு அழைத்தான்.