Wednesday, 13 March 2013

நோயற்ற வாழ்வைத்தா இறைவா!




அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஆரோக்கியமான வாழ்வே கிடைப்பதற்கரிய மாபெரும் பொக்கிஷமாகும்.ஆனால் மனிதன் இதைப்பற்றிய தெளிவான விழிப்புணர்வுடன் நடந்துகொள்வதில்லை.


பொதுவாக அல்லாஹ் நமக்கு அருளிய எந்த நிஃமத்தையும் நாம் தக்கவைத்
துக்கொள்வதற்கும்,அவன் வழங்கிய அருளே அதாபாக மாறிவிடாமல் பாதுகா
த்துக்கொள்வதற்கும்  மூன்று நிபந்தனைகள் கவனிக்கப்படவேண்டும்.

முதலாவது:அதை நிஃமத் என்று விளங்குவது
இரண்டாவது:அதற்காக நன்றி செலுத்துவது
மூன்றாவது:அதை பாதுகாப்பது.


عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ
بخارى


ஆரோக்கியமும்,ஓய்வும் மனிதன் பெற்றுள்ள பெரும் அருளாகும்.ஆனால் மக்களில் அதிகமானோர் அதை விளங்கிக்கொள்வதில்லை என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.(புகாரி)

ஆரோக்கியமான வாழ்வை அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.அவன் அதை தருகிறபோது நன்றி செலுத்தவேண்டும்.நோயை அல்லாஹ்விடம் கேட்கக் கூடாது.ஆனால் நோயை அவன் தருகிறபோது பொருத்து   க்கொள்ளவேண்டும்.இதுவே ஒரு முஸ்லிமின் நிலைபாடாகும்.

நோயும் நன்மையே

அனைத்திலும் உனக்கு நன்மை உண்டு என மிக ஆளமான தூரநோக்குப்பார்வையுடன் பெருமானார் ஸல் அவர்கள் கூறிய வரிகள் இங்கே கூர்ந்து கவனிக்கப்படவேண்டும்.

عن أبي هريرة - رضى الله عنه - قال: "دخل أعرابي على رسول الله - صلى الله عليه وسلم - فقال له رسول الله - صلى الله عليه وسلم -: هل أخذتك أم ملدم قط؟ قال وما أم ملدم؟ قال: حر يكون بين الجلد واللحم، قال: ما وجدت هذا قط. قال: فهل أخذك هذا الصداع قط؟ قال:  وما هذا الصداع؟ قال: عرق يضرب على الإنسان في رأسه. قال: ما وجدت هذا قط. فلما ولى قال النبي- صلى الله عليه وسلم -: من أحب أن ينظر إلى رجل من أهل النار فلينظر إلى هذا" رواه أحمد، وصححه الألباني
ஒரு கிராமவாசி நபி ஸல் அவர்களிடம் வருகிறார்.அவரிடம் நபி ஸல் அவர்கள் உனக்கு காய்ச்சல் வந்திருக்கிறதா?என்று வினவினார்கள்.அதற்கு அவர் காய்ச்சலா?அப்படியென்றால் என்ன?என்று ஆச்சரியமாக கேட்டார்.   தோலுக்கும் சதைக்கும் இடையில் ஏற்படும் சூடு என்று நபியவர்கள் பதில் கூறினார்கள்.
உனக்கு தலைவலி வந்திருக்கிறதா?என மீண்டும் கேட்டார்கள்.அதற்கும் அக்கிராமவாசி தலைவலியா?அப்படியென்றால் என்ன?என கேட்டார்.அப்போது நபி ஸல் அவர்கள் தலைவலி என்றால் தலையில் உள்ள நரம்பின் மூலம் ஏற்படும் ஒருவகையான வேதனை என்றார்கள்.
அப்படி எந்த வலியையும் நான் உணர்ந்ததில்லை என்றார்.அக்கிராமவாசி சென்றபின்னர்,நபி சல் அவர்கள் தம் தோழர்களிடம்-நரகவாசியை பார்க்க விரும்பினால் இவரை பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.

காய்ச்சலும்,தலைவலியும் ஒரு முஃமினின் அடையாளமாகும்.அது சுவனவாதிகளின் அடையாளம் என்றும் நமக்கு தெளிவுபடுத்தினார்கள்.


فيُبْتَلى الرجل على حَسب دينه، فإن كان دينه صُلبًا، اشتدَّ بلاؤه، وإن كان في دينه رِقَّة، ابْتُلي على حسب دينه.
رواه الترمذي (2893)


ஒவ்வொரு மனிதனும் அவன் தீனை கவனித்து சோதிக்கப்படுவான்.அவன் தீனில் அதிகமான பிடிப்புள்ளவனாக இருந்தால் கடுமையாக சோதிக்கப்படு  வான்.அவன் தீனில் பலஹீனமாக இருந்தால் குறைவாக சோதிக்கப்படுவான் என்று நபி சல் அவர்கள் கூறிதாக ஸஃது இப்னு அபீவகாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த பின்னனியில்தால் நபிமார்களும் நல்லோர்களும் உலகில் மற்ற
யாவரைவிடவும் அதிகமான சோதனைகளை சந்தித்தார்கள்.


 عن جابر رضي الله عنه قال استأذنت الحمى على رسول الله صلى الله عليه وسلم فقال من هذه قالت أم ملدم فأمر بها إلى أهل قباء فلقوا منها ما يعلم الله فأتوه فشكوا ذلك إليه فقال ما شئتم إن شئتم دعوت الله فكشفها عنكم وإن شئتم أن تكون لكم طهورا قالوا أوتفعله ؟ قال نعم قالوا فدعها .رواه أحمد ورواته رواة الصحيح وأبو يعلى وابن حبان في صحيحه " صحيح الترغيب والترهيب "

மதீனாவில் தங்கியிருந்த காய்ச்சல் நபி ஸல் அவர்களிடம் வந்து- தான் மதீனாவை விட்டும் வெளியேறப்போவதாகவும்,எங்கு செல்லவேண்டும்?என்று அனுமதி கேட்கிறது.
குபாவாசிகளிடம் செல் என்று அதற்கு உத்தரவிட்டார்கள்.சிலநாட்கள் குபாவில் தங்கியிருந்தது.அப்போது குபாவாசிகள் நபி சல் அவர்களிடம் வந்து  அல்லாஹ்வின் தூதரே!எங்கள் ஊர்வாசிகள் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.என்று முறையிட்டனர்.
அதற்கு நபி ஸல் அவர்கள்-நீங்கள் விரும்பினால் அல்லாஹ்விடம் துஆச்செய்கிறேன்.அல்லாஹ் உங்களை விட்டும் அந்த நோயை தூரப்படுத்துவான்.  அல்லது நீங்கள் பொருத்துக்கொள்ளுங்கள்.அதன் மூலம் அல்லாஹ் உங்களை பாவங்களை விட்டும் சுத்தமாக்குவான் எப்படி செய்கிறீர்கள்?என வினவினார்கள்.
அதற்கு பதிலளித்த குபாவாசிகள்-நாங்கள் பொருத்துக்கொள்கிறோம்.என்று கூறினார்கள்.
எந்த நோயாளியை நலம் விசாரிக்கச்செல்லும்போதும் இன்ஷாஅல்லாஹ் தஹூர் (அதாவது அல்லாஹ் உங்களை பாவங்களை விட்டும் சுத்தப்படுத்து வான்) என்று சொல்வது நபியின் வழக்கமாக இருந்தது.



قال أبو هريرة: "ما مِن وَجَعٍ يُصيبني أحبَّ إليّ من الْحُمَّى؛ إنَّها تدخلُ في كلِّ مَفْصِل من ابن آدمَ، وإنَّ الله ليُعْطِي كلَّ مَفْصِل قِسْطًا من الأجْر"؛ رواه ابن أبي شَيْبة (10922)، والبخاري في الأدب المفْرَد (503) بإسناد صحيح.


காய்ச்சல் எனக்கு பிரியமானது.காரணம் அது மனிதனின் ஒவ்வொரு எழும்பு இணைப்புகளிலும் நுழைகிறது.அதற்காக அல்லாஹுத்தஆலா ஒவ்வொரு மூட்டிற்கும் ஒருபகுதி நன்மை வழங்குகிறான் என்று அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

எனவே நோய் அல்லாஹ்வின் வெறுப்பின் அடையாளமல்ல.அவன் விரும்பிய பலர்களுக்கு நோயை கொடுத்திருக்கிறான்.

لما قطعت رجل عروة بن الزبير -رحمه الله-، ومات ولده في نفس اليوم، قال: "اللهم لك الحمد أعطيتني من الولد سبعة فأخذت واحدًا وأبقيت ستة، وأعطيتني أربعة أطراف فأخذت واحدة وأبقيت لي ثلاثة ".

ஹழ்ரத் உர்வத் இப்னு ஸுபைர் ரஹ் அவர்களின் பிந்தியகாலத்தில் அவர்களின் ஒரு கால் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.கால் துண்டிக்கப்பட்ட அன்றே அவர்களின் ஒரு மகனும் இறந்துபோய்விட்டார்.அந்த சோதையான கட்டத்தில் உர்வா ரஹ் அவர்கள் கேட்ட துஆ:
யா அல்லாஹ்!எனக்கு ஏழு குழந்தைகளை கொடுத்து ஒன்றை மட்டும் எடுத்து கொண்டு, மீத ஆறு குழந்தைகளை ஹயாத்தாக தந்துள்ளாய். மேலும் எனக்கு இருகைகளையும் இரு கால்களையும் தந்து,அதில் ஒரு காலை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை தந்திருக்கிற உனக்கே புகழ் அனைத்தும் என்று புகழ்ந்தார்களாம்.

நோயில் நன்மைகள் இருந்தாலும் ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்பதும் ஆரோக்கியமுடன் வாழும் வழிமுறைகளைகளை தேர்ந்தெடுத்துக்கொள்வதும் ஒரு முஸ்லிமின் பிரதான கடமையாக இஸ்லாம் வலியுறுத்துகிறது.


நோயிலிருந்து ஒரு முஸ்லிம் தன்னை தற்காத்துக்கொள்வதற்கு மூன்று வழிமுறைகளை இஸ்லாம் கூறுகிறது.

1.மருத்துவம் செய்வது.2.நோய் வராமல் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது.  3.ஓதிப்பார்ப்பதின் மூலம் ஷிபாவை தேடுவது.


روى الإمام أحمد، وابن ماجه، والترمذي، عن أبي خزامةَ قال: قلت: يا رسول الله، أرأيتَ رُقى نسترقيها، ودواءً نتداوى به، وتقاة نتقيها، فهل تَرُدُّ مِن قَدَرِ الله شيئًا؟ قال: ((هي مِن قَدَرِ الله

நாங்கள் மருத்துவம் செய்துகொள்வதோ அல்லது ஓதிப்பார்ப்பதோ,அல்லது எச்சரிக்கையாக இருப்பதோ அல்லாஹ்வின் விதியை மாற்றிவிடுமா?என நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டது.அதற்கு நபி ஸல் அவர்கள்- நீங்கள் கூறிய இம்மூன்றும் அல்லாஹ்வின் விதிதான் (அதாவது இதன் மூலம் தான் உங்கள் நோய் குணமாகும் என்று அல்லாஹ்வின் விதி இருக்கும்) என்றார்கள்.
இம்மூன்று வழிமுறைகளில் ஓதிப்பார்ப்பதின் மூலம் ஆரோக்கியத்தை நாடுவது முஸ்லிம்களின் வாழ்விலிருந்து தூரமாகிவிட்டது.


ஓதிப்பார்ப்பது இஸ்லாத்தில் கூடுமா?பலன் தருமா?


يجيب الشيخ عبدالله صديق على هذا فيقول: "إنَّ الله - سبحانه وتعالى - أنزل كتابَه لحِكمٍ؛ ومنها: إخراجُ النَّاس من الظُّلمات إلى النُّور، ومنها بيانُ الشرائع والأحكامِ التي كلَّف الله بها عبادَه، ومنها قراءَتُه في الصَّلاة، والتعبُّد بتلاوته، ومنها التداوي به؛


இதற்கு பதிலளித்த ஷைக் அப்துல்லாஹ் ரஹ் அவர்கள்-
அல்லாஹுத்தஆலா தன் வேதத்தை பல்வேறு நுட்பமான காரணங்களுக்காக இறக்கிவைத்துள்ளான்.
இருளில் இருப்பவர்களுக்கு வழிகாட்டுவதற்கும்,மார்க்கச்சட்டங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தவும்,தொழுகையில் ஓதுவதற்கும்,அதன் மூலம் நோயாளிகள் மருத்துவம் செய்து கொள்வதற்கும் தான் இறக்கினான்.என்று கூறுகிறார்கள்


قال - تعالى -: {وَنُنَزِّلُ مِنَ الْقُرْآَنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلاَ يَزِيدُ الظَّالِمِينَ إِلاَّ خَسَارًا} [الإسراء: 82]

திருமறையை நாம் இறக்கியிருக்கிறோம்,அதில் ஈமான் கொண்டவர்களுக்கு அருளும் ஆரோக்கியமும் உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபி ஸல் அவர்கள் நோயுற்றிருந்தபோது அவர்களுக்கு மற்றவர்கள் ஓதிப்பார்த்தது:


عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنَّهَا قَالَتْ كَانَ إِذَا اشْتَكَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقَاهُ جِبْرِيلُ قَالَ بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ
صحيح مسلم

நபி ஸல் அவர்கள் நோயுற்றிருந்தபோது ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் நபிக்கு بِاسْمِ اللَّهِ يُبْرِيكَ وَمِنْ كُلِّ دَاءٍ يَشْفِيكَ وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَشَرِّ كُلِّ ذِي عَيْنٍ என்று ஓதிப்பார்த்தார்கள்  என்று ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
(கண்திருஷ்டியின் தீங்கை விட்டும்,பொறாமையின் தீங்கை விட்டும்,ஒவ்வொர்  நோயைவிட்டும் அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஷிபாவை வேண்டுகிறேன்)


أَخْبَرَنِي عُرْوَةُ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَخْبَرَتْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اشْتَكَى نَفَثَ عَلَى نَفْسِهِ بِالْمُعَوِّذَاتِ وَمَسَحَ عَنْهُ بِيَدِهِ
بخارى

நபி ஸல் அவர்கள் நோயுறும்போது குல் அஊது பிரப்பில் பலக் மற்றும் குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை கொண்டு தாங்களே ஓதி ஊதி,தங்களின் கரத்தால் உடலில் தடவிக்கொள்வார்கள். என்று ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்


நபி ஸல் அவர்கள் நோயாளிகளை நலம் விசாரிக்கச்சென்றபோது நோயாளிகளுக்கு நாயகம் ஓதிப்பார்த்தது:

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي فَقَالَ لِي أَلَا أَرْقِيكَ بِرُقْيَةٍ جَاءَنِي بِهَا جِبْرَائِيلُ قُلْتُ بِأَبِي وَأُمِّي بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ وَاللَّهُ يَشْفِيكَ مِنْ كُلِّ دَاءٍ فِيكَ
ابن ماجه
நபி ஸல் அவர்கள், நான் நோயுற்றிருந்தபோது நலம் விசாரிக்க வந்தார்கள்.   எனக்கு ஜிப்ரயீல் எதைக்கொண்டு ஓதிப்பார்த்தாரோ அதைக்கொண்டு உனக்கு ஓதிப்பார்க்கட்டுமா?என்றபோது-அவசியம் ஓதுங்கள் என்று நான் கூறினேன்.  அப்போது நபி ஸல் அவர்கள் بِسْمِ اللَّهِ أَرْقِيكَ وَاللَّهُ يَشْفِيكَ مِنْ كُلِّ دَاءٍ فِيكَ என்று ஓதினார்கள்.என அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
(பொருள்:அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு உனக்கு நான் ஓதிப்பார்க்கிறேன்.  அல்லாஹ் எல்லா நோயை விட்டும் உமக்கு ஷிபாவை அளிப்பானாக)


عن عائشةَ بنتِ سعدٍ أنَّ أباها قال: تشكَّيت بمكَّة شكوى شديدة، فجاءني النبيُّ - صلَّى الله عليه وسلَّم - يعودني، قلت: يا نبيَّ الله، إنِّي أترك مالاً، وإنِّي لم أتركْ إلاَّ بنتًا واحدة، فأوصي بثُلثي مالي، وأترك الثلث؟ فقال: ((لا))، قلت: فأوصي بالنِّصف، وأترك النِّصف؟ قال: ((لا)) قلت: فأوصي بالثُّلث، وأترك الثُّلثَين؟ قال: ((الثلث، والثلث كثير))، ثم وضع يدَه على جبهته، ثم مسح يدَه على وجهي وبطني، ثم قال: ((اللهمَّ اشف سعدًا، وأتممْ له هِجرتَه))؛ أخرجه البخاري في صحيحه

மக்காவில் கடும் நோயால் நான் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னை விசாரிக்க நபி ஸல் அவர்கள் வந்தார்கள்.அல்லாஹ்வின் தூதரே! எனக்கு பொருள் நிறைய உண்டு.ஒரேஒரு பெண்மகள் தான் உண்டு,எனவே என் பொருளில் மூன்றில் இரண்டு பகுதியை மார்க்கத்திற்கு அளிக்கிறேன்.என்றபோது நபி ஸல் அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
என் சொத்தில் பாதியை தர்மம் செய்கிறேன்.என்றபோது அதற்கும் மறுத்து விட்டார்கள்.
பின்னர், நான் மூன்றில் ஒரு பகுதியை தர்ம்ம் செய்கிறேன் என்றபோது –
மூன்றில் ஒரு பகுதியும் அதிகம் தான் என்று சொல்லி ஏற்றுக்கொண்டார்கள்.
பின்னர் நபி ஸல் அவர்கள் தங்களின் கரத்தை தன் நெற்றியில் வைத்து,பின்னர் என் முகத்திலும்,வயிற்றிலும் தங்களின் முபாரக்கான கையை வைத்து யா அல்லாஹ் !சஃதுக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக!  அவரின் ஹிஜ்ரத்தை பூர்த்தியாக்குவாயாக என்று ஓதினார்கள். என சஃது ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி ஸல் அவர்கள் நோயாளிகளுக்கு ஓதிப்பார்க்கச்சொன்னார்கள்.


عن عثمان بن أبي العاص - رضي الله عنه - أنَّه قال: أتاني رسول الله - صلَّى الله عليه وسلَّم - وبي وجعٌ قد كاد يُهلكني، فقال: ((امسح بيمينك سبعَ مرَّات، وقل: أعوذ بعزَّة الله وقُدرتِه وسُلطانه مِن شرِّ ما أجد))، قال: ففعلت فأذهبَ اللهُ ما كان بي، فلم أَزلْ آمرُ به أهلي وغيرَهم؛ أخرجه الإمام مسلم في صحيحه

ஹழ்ரத் உஸ்மான் இப்னு அபுல் ஆஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் கடுமையான வேதனையால் அவதிப்பட்டபோது நபி ஸல் அவர்கள் என்னை சந்திக்க வந்தார்கள்.
أعوذ بعزَّة الله وقُدرتِه وسُلطانه مِن شرِّ ما أجد (அல்லாஹ்வின் கண்ணியத்தை கொண்டும்,அவனின் வல்லமையை கொண்டும்,அவனின் ஆற்றலைக்
கொண்டும் நான் அனுபவிக்கும் வேதனையின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்)என்று ஏழு தடவை ஓதி உன் வலது கையால் உன் உடலில் தடவிக்கொள் என்று எனக்கு உபதேசம் செய்தார்கள்.
நானும் அவ்வாறு செய்தேன்.அல்லாஹ் என்னுடைய வலியை போக்கினான்.
அன்றுமுதல் என் குடும்பத்தினர்களுக்கும்,மற்றவர்களுக்கும் இதை ஏவிக்கொண்டே இருந்தேன்.


عن ابن عبَّاس - رضي الله عنهما - قال: قال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((ما مِن مُسلمٍ يعود مريضًا لم يحضرْ أجلُه، فيقول - سبعَ مرَّات -: أسألُ الله العظيم، ربَّ العرش العظيم، أن يَشفيَك - إلاَّ عُوفِي))؛ صحيح الجامع (5766).

எந்த ஒரு முஸ்லிம் ஒரு நோயாளியை சந்திக்கும்போது ஏழு தடவை
 أسألُ الله العظيم، ربَّ العرش العظيم، أن يَشفيَك( கண்ணியமான அர்ஷுடைய ரப்பான அல்லாஹ்விடம் உனக்கு ஷிபாவை கேட்கிறேன்) என்று ஓதினால் அந்த நோயாளி ஆரோக்கியம் பெறுவார் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபித்தோழர்களும்,நல்லோர்களும் ஓதிப்பார்ப்பதை வலியுறுத்தி கூறியுள்ளனர்.


قال ابن كثير - رحمه الله -: "وقد ورد أنَّ أمير المؤمنين عمر - رضي الله عنه - كان يُرقى ويحصَّن بالفاتحة... وقد سمَّاها رسول الله - صلَّى الله عليه وسلَّم -: " بالرَّاقية والشَّافية"؛ "تفسير القرآن العظيم، تفسير سورة الفاتحة".

உமர் ரலி அவர்கள் சூரதுல் பாத்திஹாவை கொண்டு ஓதிப்பார்ப்பார்கள்.
நபி ஸல் அவர்கள் அதற்கு ஷிபா தரக்கூடியது என்று பெயர் வைத்தார்கள்.
என இப்னு கஸீர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

والقرطبي في "الجامع لأحكام القرآن" (9/316)، وغيرهم، وذكروا في تأييد رأيهم بأنَّ القرآن شفاءٌ من الأمراض الجسمانيَّة؛ لأنَّ التبرك بقراءته يدفع كثيرًا من الأمراض.

குர்ஆனில் உடலியல் நோய்கள் அனைத்திற்கும் ஆரோக்கியம் உண்டு என்று அல்லாமா குர்துபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال الأستاذ الدكتور يوسف القرضاوي - حفظه الله - تحت عنوان: مِن أيِّ شيء تكون الرُّقية؟ ما نصُّه: "أثبتتِ الأحاديث الصِّحاح: أنَّ الرُّقية مشروعةٌ من كلِّ الآلام والأمراض التي تُصيب المسلم"؛ "موقف الإسلام من الإلهام والكشف والرؤى ومن التمائم والكهانة والرُّقى" (ص: 167).

ஒரு முஸ்லிமை தாக்குகின்ற அனைத்துநோய்களுக்கும் ஓதிப்பார்ப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட்து என அல்லாமா யூஸுப் அல் கர்ளாவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

روى الخطيب أبو بكر البغدادي - رحمه الله - بإسناده قال: إنَّ الرماوي الحافظ الحُجَّة أبا بكر بن منصور كان إذا اشتكى شيئًا، قال: هاتوا أصحاب الحديث، فإذا حضروا، قال: اقرؤوا عليَّ الحديث"، قال الإمام النووي: "فهذا في الحديث، فالقرآن أولى"؛ تذكرة الحافظ (2/546)، وقد ذكره النووي في " التبيان في آداب حملة القرآن ".

அபூபக்ர் இப்னு மன்ஸூர் ரஹ் அவர்கள் நோயுறும்போது முஹத்திஸீன்க  ளை அழைத்து எனக்கு ஹதீஸை படியுங்கள் என்று கூறுவார்கள் என கதீபுல் பஃதாதி ரஹ் கூறுகிறார்கள்.
ஹதீஸுக்கே இவ்வளவு சிறப்பு இருக்குமானால் குர்ஆனுக்கு எவ்வளவு சிறப்பு இருக்கும் என இமாம் நவவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
யா அல்லாஹ்!நோயில்லாத வாழ்வை தருவாயாக!
நோயுற்றவர்களுக்கு ஆரோக்கியத்தை தருவாயாக!
நோயில் பொருமையை தருவாயாக!

Wednesday, 6 March 2013

மது ஒழிப்பு சாத்தியமே



மனித சமூகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தீமைகளில் மது முதலிடம் பிடித்திருக்கிறது.அதன்மூலம் தனி மனிதன்,குடும்பம்,சமூகம் எண்ணற்ற துய ரங்களை சந்தித்து வருவதை அன்றாடம் பார்த்துவருகிறோம்-படித்து வருகிறோம்.அதை ஒழித்துக்கட்டி,ஆரோக்கியமான,நிம்மதியான ஒரு சமூகத்தை கட்டமைக்க கடமைப்பட்ட அரசுகள் மதுவை மேலும் ஊக்கப்படுத்தும் வேலை களையே தொடர்ந்து செய்து வருவதை பார்க்கிறோம். அதன் மூலம் அரசு அடைந்து வரும் இலாபமே அதற்கு பிரதான காரணமாகும்.

மதுவை தடைசெய்து, மக்களை காப்பாற்றவேண்டிய அரசு அதை ஒரு இலாபம் தரும் வியாபாரமாக மட்டுமே பார்க்கிறது.அதன் விளைவாக ஒரு ஆரோக்கியமற்ற சமூகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

மதுவை ஒழிக்க அரசு சொல்லும் காரணங்கள் அனைத்தும் சிறுபிள்ளைத்தனமானதும் கேலிக்குறியதாகும்.

மதுபானங்களின் விலையை உயர்த்துவதாலோ அவற்றின் மீதான வரிகளை உயர்த்துவதாலோ மது குடிப்பதைக் குறைத்துவிடுவார்கள் அல்லது விட்டுவிடுவார்கள் என்று அரசு கூறும் காரணம் வெறும் மாயை என்பது புள்ளிவிவரங்களிலிருந்து தெளிவாகிறது.

இந்திய ஆல்கஹால் கொள்கை கூட்டணி வெளியிட்ட ஆய்வின் படி கடந்த 15 ஆண்டுகளில் மது உற்பத்தி நாட்டில் அபரிமிதமாகப் பெருகியிருக்கிறது.

இதை விடவும் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவெனில், தெற்காசிய நாடுகள் மொத்தமாகத் தயாரிக்கும் மதுவில் இந்தியாவில் தயாராகும் அளவு மட்டும் 65 சதவீதம்! உள்நாட்டில் தயாரிப்பது போதாதென்று வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் இந்தியாவின் பங்கு 7 சதவீதம்.

இந்தியா விளையாட்டில் சாதனை படைக்குதோ இல்லையோ வெகு விரைவில் போதை பொருட்களை உற்பத்தி செய்வதிலும்,அதை விற்பனை செய்வதிலும் சாதனை படைக்கும்.

1992-93-இல் இந்தியாவின் மது உற்பத்தி அளவு 8,872 லட்சம் லிட்டர்கள். 1999 - 2000-த்தில் இது 16,540 லட்சம் லிட்டர்கள்! இவ்வாண்டு 70,000 லட்சம் லிட்டர்கள் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.ஆண்டுக்கு ஆண்டு மிகப்பெரும் முன்னேற்றம்.

அசோசேம்' அமைப்பு சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மதுபானம் குடிப்பது ஆண்டுதோறும் 30 சதவீதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

நாட்டின் பாதுகாப்பை கேல்விக்குறியாக்கும் பயங்கர குற்றங்களுக்கு மது தான் முக்கிய காரணம் என்பதை யாரும் மறுத்து கூற முடியாது.

கொலை,கொள்ளை,கற்பழிப்பு,திருட்டு போன்ற குற்றங்களில் மதுவே பிரதான காரணமாக பதிவு செய்யப்படுகிறது.

மது மயமாகி விட்ட ஒரு சமூகத்தில் ஒழுக்கத்தை,நல்ல பண்பாட்டை எதிர் பார்க்க முடியாது.

ஒரு காலத்தில் எங்காவது கூட்டமாக மக்கள் நிற்பதை கண்டால் ரேஷன் கடையாக இருக்கும் என்பார்கள்.ஆனால் இன்று எங்காவது கூட்டத்தை பார்த்தால் கண்ணை மூடிக்கொண்டு டாஸ்மாக் கடை என்று சொல்லிவிட முடியும்.

மதுப்பழக்கத்திற்கு  தன் தந்தையை பறிகொடுத்துவிட்டு அனாதையாக நிற்கும் குழந்தைகளை தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் பார்க்க முடியும்.
தன் கனவனை இழந்து விதவையாக வாழ போராடிக்கொண்டிருக்கும் பெண்களை  பார்க்க முடியும்.
படிக்கும் வயதில்,ஆரோக்கியத்தை வளர்க்க வேண்டிய வயதில் போதைக்கு அடிமையாகி தன் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் இளைஞர்களையும் பார்க்கலாம்.

கடந்த பத்தாண்டுகளில் "டீன்-ஏஜ்' (13 வயது முதல் 19 வயதுவரையில் உள்ளவர்கள்) குடிகாரர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பெருநகரங்களில் பனிரெண்டாவது வகுப்பு படிக்கும் மாணவர்களில் 45 சதவீதம் பேர் "அளவுக்கு அதிகமாகவே' குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று ஒரு "சர்வே' தெரிவிக்கிறது. அதைப்பற்றியெல்லாம் அரசுக்கு கவலை இல்லை.அரசாங்கம் கல்லா நிறைந்தால் சரி என்பது போல மேலும் மேலும் மது உற்பத்தியை அதிகரிக்கும் வேலையை செய்துகொண்டிருக்கிறது.

குடிப்பதை மக்கள் குறைக்கவேண்டும் என்கிற உண்மையான அக்கறை அரசுக்கு இருந்தால் சாராய உற்பத்தியைக் குறைக்க வேண்டும். விற்பனையகங்களின் எண்ணிக்கையையும் விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும். மது விற்பனை மூலம் வரும் வருவாயைக் கைவிடத் தயாராக வேண்டும்.

அது எப்படி கைவிடுவார்கள்?

அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்கும் மொத்த வரி வருவாயில் 13 சதவீதம், மதுபானங்களிலிருந்து மட்டும் கிடைத்துவிடுகிறது.

தங்க முட்டையிடும் வாத்தை அவ்வளவு சீக்கிரம் அறுத்துவிடுவார்களா என்ன?

சமூகநல திட்டங்களுக்கு நிதிதிரட்டத்தான் இந்த வருவாயைப் பயன்படுத்துகிறோம் என்று  மாநில அரசுகள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
 சமூகத்தின் ஒட்டுமொத்த நலனை சீரழித்துக்கொண்டு ஏதோ ஒரு சில தாற்காலிக நன்மைகளை அளிப்பதற்காக இதை ஊக்குவிப்பது பெருங்கேடான செயலாகும். மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிட வேண்டிய அவசிமில்லை.


மதுவைப்பற்றி இஸ்லாம்



மது மதிக்கு ஆபத்தானது:


{يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَآ أَكْبَرُ مِن نَّفْعِهِمَا} [سورة البقرة: آية 219

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2:
 219)

மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விடவும் அதன்மூலம் ஏற்படும் தீமைகள் தான் அதிகம் என்று அழகாக எடுத்துரைக்கிறது.

மது மனித மூளையை செயல்பட விடாமல் தடுத்துவிடுகிறது.அதனால் தான் மதுவுக்கு அரபியில் கம்ர் என்ற வார்த்தையை பயன்படுத்தப்படுகிறது.
கம்ர் என்றால் அறிவுக்கு திரையிடும் அனைத்துக்கும் சொல்லப்படும்.

மதுவின் மூலம் மனிதன் தன் உயர்ந்த அறிவுச்செல்வத்தை இழக்கிறான்.   அறிவை இழந்தவன் அனைத்தையும் இழப்பான்.என்பார்கள்.


وهذا سيدنا أبو بكر الصديق - رضي الله عنه - في ذات يوم سُئل: هل شربْتَ الخمر في الجاهلية؟ قال: أعوذ بالله! فقيل له: ولِمَ؟ قال: كنتُ أَصُون عرضي، وأحفظ مروءتي، فإن مَن شرب الخمر كان مُضيعًا في عرضه ومروءته، وصدق - رضي الله عنه

அபூபக்கர் ரலி அவர்களிடம் உங்களுக்கு அறியாமை காலத்தில் மது குடிக்கும் பழக்கம் உண்டா?என்று கேட்டபோது-அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்றார்களாம்.அதற்கான காரணம் கேட்டபோது,நான் என் மானத்தையும் மனித தன்மையையும் பாதுகாத்தேன்.
யார் மது அருந்துகிறார்களோ அவர் தன் மானத்தையும் மனிதத்தன்மையை யும் இழந்துவிடுவான் என்றார்கள்.


قال الضحاك بن مزاحم -رحمه الله-لرجل: ما تصنع بالخمر؟ قال: يهضم طعامي، قال: أما إنه يهضم من دينك وعقلك أكثر.

இமாம் ழஹ்ஹாக் ரஹ் அவர்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ள ஒருவரிடம் ஏன் மது குடிக்கிறீர்?என்று கேட்டபோது-என் நான் சாப்பிடும் உணவு ஜீரனமா  குவதற்கு என்று கூறினார்.
அப்போது ழஹ்ஹாக் ரஹ் அவர்கள், மது உன் தீனையும் அறிவையும் ஜீரனித்துவிடுமே அது பற்றி கவலையில்லையா?என்றார்களாம்.


وقال الحسن البصري رحمه الله: لو كان العقل يشترى لتغالى الناس في ثمنه، فالعجب ممن يشتري بماله ما يفسده.

அறிவுக்கு மக்களிடம் விலை அதிகம் தான்.ஆனால் அதைவிட ஆச்சரியம் என்ன தெரியுமா? அந்த அறிவை அழிக்கிற மதுவுக்கு மக்கள் தன் பணத்தை செலவு செய்கின்றனர்.என இமாம் ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ولقد روى القرطبي رحمه الله في تفسيره : أن أحد السكارى جعل يبول ويأخذ بوله بيديه ويغسل به وجهه وهو يقول: اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين.

இமாம் குர்துபீ ரஹ் ரஹ் அவர்கள் தங்களின் தப்ஸீரில் மதுவால் மனிதன் மடையனாகிறான் என்பதற்கு தான் கண்ட ஒரு காட்சியை குறிப்பிடுகிறார்.
போதையில் ஒருவன் தன் சிறுநீரை பிடித்து தன் கையையும் முகத்தையும் கழுகியதை பார்த்தேன்.அவ்வாறு செய்து முடித்து ஒழுச்செய்து முடித்துவிட்டு ஓதும் துஆவான அல்லாஹும்மஜ்அல்னீ மினத்தவ்வாபீன்.வஜ்அல்னீ மினல் முத்தஹ்ஹிரீன் என்று ஓதினான்.


மது குற்றங்களின் பிறப்பிடம்

மது எல்லா தீமைகளுக்கும் ஆணிவேரானது என்று மார்க்கம் கூறுகிறது.
மது ஒருவனை திருடனாக்கும்.கொலைகாரனாக்கும்.பாவத்தின் பக்கம் தூண்டுகிற எந்த செயலையும் இஸ்லாம் அனுமதிக்காது.

மது விலக்கு கொண்டுவரப்படாதவரை சட்ட ஒழுங்கு சாத்தியமில்லை என்பதை சத்தியமிட்டு சொல்ல முடியும்.

எந்த நாடுகளில் குற்றங்கள் குறைவாக நடக்குமோ அங்கெல்லாம் மதுவிலக்குச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படும்.


يقول سيدنا عثمان بن عفان - رضي الله عنه -: "كان رجلٌ فيمن كان قبلَكم متعبِّدًا زاهدًا، فأحبَّتْه امرأةٌ بغِيٌّ، فأرسلَتْ إليه جاريةً لها تدعوه للشهادة، فجاء العابد الزاهد الراهب إلى البيت، ودَخل معها، فكانت كلما دخل بابًا أغلقتْه دونه حتى وصل إلى امرأة وَضِيئة (أي: حسناء جميلة) جالسة، عندها غلامٌ وإناءُ خمر، فقالت له: ما دعوناك لشهادة، وإنما دعوناك لإحدى ثلاث: إما أن تزْنِي - أي: بها - وإما أن تشرب الخمر، وإما أن تقتل الغلام".

ففكَّر هذا الراهب الجاهل، وظنَّ أن الخمر أقلُّ هذه الثلاثة جُرمًا، فقال لها: أشربُ الخمر، فشرب، فقال: اسقيني، فشرب حتى عملت الخمر فيه، فقام وقتل الغلام، وزنى بالمرأة، فقال عثمان - رضي الله عنه -: "فاجتنبوا الخمر؛ فإنها أم الخبائث، وإنها لا تجتمع هي والإيمان في قلب واحد، إذا جاء أحدهما طرَدَ الآخر".
أخرج النسائي و ابن حبان في صحيحه

உஸ்மான் ரலி அவர்கள் ஒரு நாள் மக்களுக்கு குத்பா பிரசங்கம் செய்யும்போது-உங்கள் முன்னோர்களில் ஒரு வணக்கசாலி இருந்தார்.அவரை ஒரு விபச்சாரி நேசித்தாள்.ஒரு நாள் தன் வேலைக்காரியை அந்த ஆபிதிடம் அனுப்பி, தான் ஈமான் கொள்வதாகவும் தனக்கு கலிமா சொல்லித்தர தன் இல்லம் வரவேண்டும் எனவும் அவ்விபச்சாரி கூறி அனுப்பினாள்.
அந்த வணக்கசாலியும் அதை நம்பி அவளின் இல்லம் சென்றார்.

உள்ளே நுழைந்தவுடன் அவ்விபச்சாரி கதவை சாத்திவிட்டாள்.

அவளுக்கு அருகில் ஒரு சிறுகுழந்தையும் ஒரு கிளாஸில் மதுவும் இருந்தது.
நான் உங்களை கலிமா சொல்லித்தர அழைக்கவில்லை.மாறாக மூன்று நிபந்தனைகளில் ஏதாவது நீங்கள் செய்யவேண்டும்.

ஒன்று:என்னுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவது.அல்லது:மது குடிப்பது அல்லது இந்த குழந்தையை கொலை செய்வது.
மூன்று குற்றங்களில் ஏதாவது செய்யவேண்டும்.இல்லையானால் உங்களின் பழிசுமத்திவிடுவேன் என்றாள்.

இப்போது அந்த ஆபித் மூன்றில் மதுவை சிறிய குற்றமாக கருதி மது குடித் தார்.பின்பு மது போதையில் அந்த குழந்தையை கொலை செய்ததுடன் அவளுடன் விபச்சார உறவிலும் ஈடுபட்டார்.

இதை சொன்ன ஹழ்ரத் உஸ்மான் ரலி அவர்கள்,மதுவை தவிர்ந்து கொள்ளுங்கள்.அது பாவங்களுக்கெல்லாம் தலையான பாவமாகும்,நிச்சயமாக மதுவும் ஈமானும் ஒரு உள்ளத்தில் ஒன்று சேராது என எச்சரித்தார்கள்.

மதுவில் மருத்துவம் கிடையாது


மது குடிப்பவர்கள் அதை மருந்துக்காக குடிக்கிறோம் என்றும் அவ்வாறு குடிப்பதால் வேலை செய்த உடல் வலி தெரியாது என்றும் மன அமைதி கிடைக்கிறது என்றும் பொய்யான காரணங்களை சொல்லி தங்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

وعن ابن مسعود -رضي الله عنه- أنه قال: "إن الله لم يجعل شفاءكم فيما حرم عليكم].
 صحيح البخاري

அல்லாஹ் ஹராமாக்கிய எந்த பொருளிலும் ஆரோக்கியம் கிடையாது.இதை அழுத்தமாக இப்னு மஸ்வூத ரலி அவர்கள் பதிவு செய்கிறார்கள்.

وعن طارق بن سويد الخضرمي قال: قلت يا رسول الله: إن بأرضنا أعنابا نعصرها أفنشرب منها، قال: (لا)، فراجعته فقال: (لا) لا ثم راجعته فقال (لا) فقلت: إنا نستشفي بها للمريض، قال: (إنه ليس بشفاء ولكنه داء)[].
رواه أحمد في مسنده

ஹழ்ரத் தாரிக் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
நான் நபி ஸல் அவர்களிடம்-அல்லாஹ்வின் தூதரே!எங்கள் ஊரில் திராட்சையில் இருந்து ஒருவித பானம் தயார் செய்கிறோம் அதை குடிக்கலாமா?என்று கேட்டான்.
அப்போது நபி ஸல் அவர்கள்,வேண்டாம் என்றார்கள்.மீண்டும் கேட்டேன்.   வேண்டாம் என்றார்கள்.பின்பு மீண்டும் கேட்டேன்,வேண்டாம் என்றார்கள்.
நாங்கள் அதை குடிப்பதால் ஆரோக்கியமாக இருப்பதை உணர்கிறோம் என்றேன்.அப்போது நபி ஸல் அவர்கள்-அது ஆரோக்கியமல்ல,நோய் என்றார்கள்.

فعن ديلم الحميري قال سألت رسول الله -صلى الله عليه وسلم- فقلت يا رسول الله إنا بأرض باردة نعالج فيها عملا شديدا وإنا نتخذ شرابا من هذا القمح نتقوى به على أعمالنا وعلى برد بلادنا قال: (هل يسكر؟) قلت: نعم. قال: (فاجتنبوه) قلت فإن الناس غير تاركيه قال: (فإن لم يتركوه فقاتلوهم)[].
رواه أبو داود

தைலமி ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
நான் நபி ஸல் அவர்களிடம் வந்து,அல்லாஹ்வின் தூதரே!
எங்கள் ஊர் கடும் குளிர் பிரதேசம்.நாங்கள் கடுமையாக உழைப்பவர்கள்.  என்வே நாங்கள் சோர்வின்றி உழைக்கவும்,எங்கள் ஊரின் குளிரை தாங்குவத  ற்கும் கோதுமையிலிருந்து ஒருவித பானம் தயார் செய்து குடிக்கிறோம்.என்ற போது-அது போதை தருகிறதா?என்று கேட்டார்கள்.நான் ஆம் என்றேன்.அப்படி   யானல் அது ஹராம் என்றார்கள்.
மக்கள் அதை விட மறுக்கிறார்கள் என்று நான் சொன்னபோது-அவர்களுடன் சண்டைபோடுங்கள் என்றார்கள்.


عن الفضيل بن عياض - رحمه الله - أنه حضر عند تلميذ له حضَرَه الموتُ، فجعل يلقِّنه الشهادة، ولسانه لا ينطق بها، فكرَّرها عليه، فقال: لا أقولها وأنا بريء منها، ثم مات.
فخرج الفُضَيل مِن عنده وهو يَبكي، ثم رآه بعد مدةٍ في مَنامه وهو يُسحب به في النار، فقال له: يا مسكين، بم نُزِعَت منك المعرفة؟ فقال: يا أستاذ، كان بي علةٌ، فأتيتُ بعض الأطباء، فقال لي: تشرب في كل سنَةٍ قَدحًا مِن الخمر، وإن لم تفعل تبْقَ بك علَّتُك، فكنتُ أشربها في كل سنة لأجل التداوي!

புழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் தங்களின் மாணவர் ஒருவரின் மரண தருவாயில் கலிமா சொல்லிக்கொடுத்தபோது அவர் சொல்லாமல் மரணித்து விட்டார்.
பின்பு ஒருநாள் அந்த மாணவரை நரகில் இழுத்துச்செல்லப்படுவதாக கனவு கண்ட புழைல் ரஹ் அவர்கள் காரணம் கேட்டார்கள்.
அதற்கு அவர்-எனக்கு ஒரு நோய் வந்தது,ஒரு மருத்துவரிடம் சென்றேன்.  அவரோ இந்த நோயிக்கு மருந்து ஒரு கிளாஸ் மது குடிப்பது,ஆண்டுக்கு ஒரு முறை இதை செய்ய வேண்டும் என்றார்.நானும் அதை செய்து வந்தேன் என்றார்கள்.

மது குடிப்பவனுக்கு இஸ்லாம் உலக தண்டனை

1.அவனின் ஈமான் பிடுங்கப்படலாம்.

ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن } رواه البخاري  
       
ஒரு முஃமின் மது அருந்த மாட்டான்.

2.இஸ்லாமிய தண்டனை வழங்கப்படுதல்.

. ما رواه مُسْلِمٍ ( 3281 ) عَنْ أَنَسٍ رضي الله عنه  : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم : { جَلَدَ فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ }

நபி ஸல் அவர்கள், மது குடிப்பவர்களை  பேரித்த மட்டைகளாலும்,செருப்புகளாலும் அடிக்க உத்தரவிட்டார்கள்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِرَجُلٍ قَدْ شَرِبَ الْخَمْرَ فَجَلَدَهُ بِجَرِيدَتَيْنِ نَحْوَ أَرْبَعِينَ

மது குடித்த ஒருவருக்கு நாற்பது சவுக்கடி கொடுத்த்தாக ஹதீஸில் வருகிறது

3.அவனின் நாற்பதுநாள் தொழுகை ஏற்கப்படாது.

لا يَشْرَبُ الْخَمْرَ رَجُلٌ مِنْ أُمَّتِي فَيَقْبَلُ اللَّهُ مِنْهُ صَلاةً أَرْبَعِينَ يَوْمًا
سنن النسائي
என் உம்மத்தில் மது குடித்த ஒருவனின் நாற்பதுநாள் தொழுகை ஏற்கப்படாது

4.அவனுக்கு சலாம் சொல்லக்கூடாது

، قال البخاري رحمه الله تعالى في الأدب المفرد : باب لا يسلَّم على شارب الخمر ... وساق إسناده إلى عبد الله بن عمرو بن العاص أنه قال: [[لا تسلموا على شراب الخمر

மது குடித்தவனுக்கு சலாம் சொல்லாதீர் என அப்துல்லா இப்னு அம்ர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

5.அவன் நோயுற்றால் நலம் விசாரிக்கக்கூடாது

وقال أيضاً رضي الله تعالى عنه: [[لا تعودوا شراب الخمر إذا مرضوا

அவன் நோயுற்றால் நலம் விசாரிக்காதீர் என்றும் கூறினார்கள்.

மது குடிப்பவனின் மறுமை தண்டனை

1.அவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவன்

2.நாளை அல்லாஹ் அவனை ஏரிட்டும் பார்க்க மாட்டான்.
3.கெட்ட பானம் புகட்டப்படும்

إن على الله عز وجل عهداً لمن يشرب المسكر أن يسقيه من طينة الخبال! قالوا: يا رسول الله! وما طينة الخبال؟ قال: عرق أهل النار، أو عصارة أهل النار } رواه مسلم .

போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

4.அவன் சில வணக்கம் செய்தவனை போல அல்லாஹ்வை சந்திப்பான்.

وقال صلى الله عليه وسلم: {مدمن الخمر إن مات لقي الله كعابد وثن } رواه أحمد

மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போல அல்லாஹ்வை சந்திப்பான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

மது தீமையிலிருந்து அல்லாஹ் மனிதசமூகத்தை பாதுகாப்பானாக.