Wednesday, 19 June 2013

நல்ல வாய்ப்புக்கள்

அல்லாஹுத்தஆலா மனிதவாழ்வில் நல்ல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் எப்போதும் வழங்குவதில்லை,அது எப்போதாவது கிடைக்கும். அப்படி கிடைப்பதற்கரிய வாய்ப்பை அவன் சரியாகவும் பயனுள்ளதாகவும் கழிக்க தவறிவிட்டால் இனி எப்போதும் அதை பெறமுடியாது.

வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்
கொண்டவர்கள் உலகில் மிக உயரமான இடத்தை அடைந்திருக்கிறார்கள்.


வாய்ப்பை பயன்படுத்திய அபூஹுரைரா ரலி


عن إسماعيل بن أمية ، أن محمد بن قيس بن مخرمة ، حدثه ، أن رجلا جاء زيد بن ثابت فسأله عن شيء ، فقال له زيد : عليك بأبي هريرة ، فإنه بينا أنا وأبو هريرة وفلان في المسجد ذات يوم ندعو الله تعالى ، ونذكر ربنا خرج علينا رسول الله صلى الله عليه وسلم حتى جلس إلينا ، قال : فجلس وسكتنا ، فقال : « عودوا للذي كنتم فيه » . قال زيد : فدعوت أنا وصاحبي قبل أبي هريرة ، وجعل رسول الله صلى الله عليه وسلم يؤمن على دعائنا ، قال : ثم دعا أبو هريرة فقال : اللهم إني أسألك مثل الذي سألك صاحباي هذان ، وأسألك علما لا ينسى ، فقال رسول الله صلى الله عليه وسلم : « آمين » ، فقلنا : يا رسول الله ، ونحن نسأل الله علما لا ينسى فقال : « سبقكما بها الدوسي
المستدرك على الصحيحين

ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:

நீங்கள் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் இன்னொருவரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.

அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு ஆமீன் சொன்னார்கள்.

பிறகு அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆமீன் என்று கூறினார்கள்.

உடனே நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்' என்று கூறினோம். அதற்கு நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு) உங்களை முந்திவிட்டார்' என்றார்கள்.
ஹாகிம்:6215

பயன்படுத்த தெரியாத கிராமவாசி

நபி ஸல் அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பியபோது ஒரு பாலை
வனத்தில் வசித்த ஒரு கிராமவாசியின் இல்லத்தில் தங்கினார்கள்,அந்த கிராமவாசி நாயகத்தை கண்னியப்படுத்தி உணவளித்தார்
அவரிடமிருந்து விடைபெறும்போது நீங்கள் மதீனா வந்தால் நம்மிடம் வாருங்கள் என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்.

சிலநாட்கள் கழித்து அந்த கிராமவாசி மதீனா வந்தார்.அண்ணலாரை சந்தித்தபோது அவரை கண்ணியப்படுத்தி உணவளித்தார்கள்.

பின்பு எதேனும் கேளுங்கள் தருகிறேன் என்றார்கள்,அவர் சுவனத்தை கேட்டிருக்கலாம்,
அல்லது ஷஹாதத்தை கேட்டிருக்கலாம்,அல்லது மக்பூலான துஆவை கேட்டிருக்கலாம் ஆனால் அவரோ-எனக்கு வாகனம் வேண்டும் என்றார்.
அவருக்கு வாகனம் கொடுங்கள் என நாயகம் உத்தரவிட்டார்கள்,
மீண்டும் வேறு ஏதேனும் கேளுங்கள் தருகிறேன் என்றார்கள்.
அவரோ-என் ஆடுகளை பாதுகாக்க நாய் வேண்டும் என்றார் அதையும் கொடுத்துவிட்டு வேறு ஏதேனும் கேளுங்கள் என்றார்கள்.
அந்த கிராமவாசியோ-என் குடும்பத்திற்கு பணிவிடை செய்ய வேலைப்பெண் வேண்டும் என்றார்கள்,
அதை கொடுக்க உத்தரவிட்ட நபி ஸல் அவர்கள் அந்த கிராமவாசியை நோக்கி,பனீஇஸ்ராயீலின் கிழவியை விட நீர் இயலாமல் ஆகிவிட்டீர் என்றார்கள்.
அது என்ன கிழவி? என ஸஹாபாக்கள் விளக்கம் கேட்டபோது,யூசுப் நபியின் கப்ர் தெரிந்த ஒரேபெண்ணான அவளிடம் அதை அறிவித்து தரும்படி நபி மூஸா அலை அவர்கள் கேட்க-அதை அறிவிக்கவேண்டு மானால் நான் கேட்பதை கொடுக்க வேந்தும் என்றாள்.
என்ன வேண்டும்?என்றபோது உங்களுடன் சுவனத்தில் இருக்க வேண்டும் என்றாள்,இறுதியில் அவளின் ஆசை நிறைவேரியது என்று நபி ஸல் அவர்கள் கூரினார்கள்.

தப்ரானி:

அப்படி நல்லமல்கள் செய்வதற்கும்,நற்ப்பா
க்கியங்களை பெற்றுக்கொள்வதற்கு
ம் அல்லாஹ்வால் நமக்கு வழங்கப்பட்ட நாட்களில் மிகவும் உயர்வான நாட்கள் ரமலான்.
ரமலான் நல்லமல் செய்வதற்கான ஒரு நல்லவாய்ப்பு.அதை எல்லோருக்கும் அல்லாஹ் வழங்குவதில்லை.
ஒரு முஃமினின் ஈமானிய அறுவடை காலம் ரமலான்.
கடந்த ஆண்டு நம்முடன் ரமாலானை சந்தித்தவர்களில் சிலர் இன்று நம்முடன் இல்லை.மண்ணுக்கும் மறுமைக்கும் சொந்தமாகிப்போனார்கள்.
ரமலான் ஒரு நல்ல வாய்ப்பு என்பதை புரிந்து அமல்செய்யவேண்டும் என்ற ஆவலில் தான் நபி ஸல் அவர்கள் ரமலானுக்கு முன்னால் ரமலானைபற்றிய முன்னறிவிப்பு செய்பவர்களாக இருந்துள்ளார்கள்.
உங்களிடம் கண்ணியமான மாதம் வருகிறது.
பொருமையின் மாதம் வருகிறது,சிறப்பான மாதம் வருகிறது என்றெல்ல்லாம் சொல்லியுள்ள ஹதீஸ்களை ஏராளமாக காண முடிகிறது.

أتاكم رمضان شهر مبارك،

உங்களிடம் ரமலான் வருகிறது.அது பரக்கத் செய்யப்பட்ட மாதமாகும்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

عن أنس رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يقول إذا دخل رجب: (اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان

யா அல்லாஹ்!ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் பரக்கத் செய்வாயாக ரமலானை அடையும் பாக்கியத்தை தருவாயாக என நபி ஸல் அவர்கள்  ரமலானுக்கு இரண்டுமாதங்களுக்கு முன்னால் இருந்தே துஆ செய்வார்கள் என அனஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இமாம்முஜத்தித் அல்பஸானி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
சூரிய உதயத்தை முன்னறிவிப்புச்செய்வதற்காக அதிகாலை வெளிச்சம் முதலில் வரும்.பின்பு சிறிது நேரம் கழித்து சூரியன் உதயமாகும். அதை போலவே ரமலானின் பரக்கத்துக்களை முன்னறிவிப்புச்செய்ய ரஜபும் ஷஃபானும் வருகிறது.

ولذا كان السلف الصالح يدركون هذه النعمة ويقدرون لها قدرها فيسألون الله على ما ذكر ستة أشهر أن يبلغهم رمضان فإذا أدركوه بكوا من الفرح واجتهدوا في الطاعات ونافسوا في الخيرات وسارعوا إلى المغفرة والجنات فإذا ولَّى ودعوه بقلوب حزينة وأعين دامعة وسألوا الله ستة أشهر أخرى أن يتقبل منهم رمضان فالسنة عندهم كانت كلها رمضان ، وكان من دعائهم اللهم سلمني إلى رمضان وسلم لي رمضان وتسلمه مني متقبلاً
நம்முடைய முன்னோர்களான நல்லோர்கள் இந்த நல்ல சந்தர்ப்பத்தின் மதிப்பை புரிந்துகொண்டதால் ரமலானுக்கு ஆறு மாதம் முன்னால் இருந்தே யா அல்லாஹ் ரமலானை அடையும் பாக்கியத்தை தா என துஆச்செய்வதை வழமையாக்கிக்கொண்டவர்கள்.
ரமலானை அடைந்துவிட்டால் மகிழ்ச்சியால் அதை வரவேற்ப்பார்கள்.
ரமலானை மகிச்சியுடன் வரவேற்றால் அவர் நரகம் செல்லமாட்டார் என்றொரு நபிமொழி உண்டு.
ரமாலான் காலங்களில் வணக்கங்களில் அதிக ஈடுபாடும் போட்டும் கொண்டு ஸாலிஹீன்கள் அமல்செய்வதுடன் மன்னிப்பையும் ஜன்னத்தையும் மறவாமல் அல்லாஹ்விடம் கேட்பார்கள்.
ரமலான் விடைபெற்றால் கண்ணீர் வடித்து கவலையுடன், யா அல்லாஹ் ரமலானில் நாங்கள் செய்த அமல்களை கபூல் செய்வாயாக என  கெஞ்சி துஆச்செய்வார்கள்.
சுறுக்கமாகச்சொன்னால். அவர்களை பொருத்தவரை ஆண்டு முழுவதும் ரமலான் தான்.அதாவது ரமலானின் நினைவில் தான் அவர்களின் ஒவ்வொரு நாளும் கழிகிறது.
 ரமலானுடைய காலத்தின் மதிப்பை புரிந்துகொள்ள பின் வரும் ஹதீஸே போதுமானதாகும்.

وروى ابن ماجه بسند صحيح كما قال الألباني عن طلحة بن عبيد الله أن رجلين قَدِما على رسول الله صلى الله عليه وسلم وكان إسلامهما جميعا، فكان أحدهما أشد اجتهادا من الآخر، فغزا المجتهد منهما فاستشهد، ثم مكث الآخر بعده سنة ثم توفي، قال طلحة: فرأيت في المنام بينا أنا عند باب الجنة إذا أنا بهما، فخرج خارج من الجنة فأذن للذي توفي الآخِر منهما، ثم خرج فأذن للذي استشهد، ثم رجع إلي فقال: ارجع فإنك لم يأْنِ لك بعد، فأصبح طلحة يحدث به الناس، فعجبوا لذلك، فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم وحدثوه الحديث، فقال:" من أي ذلك تعجبون ؟ " فقالوا: يا رسول الله هذا كان أشد الرجلين اجتهادا ثم استشهد، ودخل هذا الآخِر الجنةَ قبله ! فقال رسول الله صلى الله عليه وسلم :" أليس قد مكث هذا بعده سنة ؟ " قالوا: بلى، قال :" وأدرك رمضان فصام وصلى كذا وكذا من سجدة في السنة ؟ " قالوا: بلى، قال رسول الله: صلى الله عليه وسلم : " فما بينهما أبعد مما بين السماء والأرض

தல்ஹா இப்னு உபைதில்லாஹ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இரண்டு மனிதர்கள் நபி ஸல் அவர்களிடம் வந்து ஒரேநேரத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
அவர்களில் ஒருவர் போரில் கலந்துகொண்டு இந்த தீனுக்காக உயிர் கொடுத்து போராளியானார்.
மற்றொருவர் அவருக்குப்பின்னால் ஓராண்டுகாலம் வாழ்ந்து படுக்கையில் மரணித்தார்.இந்நிலையில் கனவில் ஒரு காட்சியை நான் கண்டேன்.

சுவனத்தின் வாசலில் நான் நிற்கிறேன்
.சுவர்க்கத்திற்கு உள்ளிருந்து ஒருவர் வந்து இரண்டாவதாக மரணித்த அந்த மனிதரை உள்ளே அழைத்தார்.
உள்ளே சென்றுவிட்டார்.சிறிது நேரம் கழித்து மீண்டும் அவர் வந்து முதலில் மரணித்த அந்த போராளியை உள்ளே அழைத்துச்சென்றார்.
மூன்றாவது வந்த அவர் என்னைப்பார்த்து உனக்கு இன்னும் நேரம் வரவில்லை நீ திரும்பிச்செல் என்றார்.
இந்த நிகழ்வை தல்ஹா ரலி நபித்தோழர்களிடம் சொல்லிக்கொண்டிருந்த போது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
இச்செய்தி நபி ஸல் அவர்களுக்கு கிடைத்தபோது ஸஹாபாக்களை அழைத்து ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்?என கேட்டார்கள்.
அதற்கு நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே!முதலில் மரணித்த போராளியை விட இரண்டாவது மரணித்தவர் எப்படி முன்னால் சுவர்க்கம்? என்று வினவினர்.
அதற்கு நபி ஸல் அவர்கள், அவருக்குப்பின்னால் இவர் ஓராண்டுகாலம் வாழ்வில்லையா?ஒரு ரமலானை சந்திக்கவில்லையா?அதில் அவர் நோன்பு நோற்கவில்லையா?தொழவில்லையா?
அப்படியானால் அவருக்கும் இவருக்கும் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் உண்டு என்றார்கள்.
எனவே ரமலானுக்கு முன் ரமலானை பயண்னுள்ளதாக கழிப்பத்தற்கான முன் திட்டத்தை தயார் செய்துகொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் பிரதான கடமையாகும்.
வீடு கட்டுவதற்கும் திருமணங்களை நடத்துவதற்கும் பலமாதங்களாக திட்டங்களை வகுக்கும்போது பாக்கியமான ரமலானை பயனுள்ளதாக மாற்றுவதற்கு அவசியம் முன் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
ஸஹாபாக்கள் ரமலானுக்காக தங்களின் பணிகளை முன்கூட்டியே செய்து முடிப்பார்களாம்.


Wednesday, 12 June 2013

அதிகாலை நேரத்தொழுகையும் அபிவிருத்தியான வாழ்க்கையும்




அல்லாஹ்வின் படைப்புக்கள் அனைத்திலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு.அந்த ஏற்றத்
தாழ்வுகள்தான் படைப்புக்களுக்கிடையில் சமன் செய்கிறது.அல்லாஹ்  தன் படைப்புக்க
ளுக்கிடையில் அமைத்த இந்த ஏற்றத்தாழ்வுகள் எனும் விதிக்கோட்பாட்டிலிருந்து எதுவும் தப்பாது.

வானவர்கள்,தூதர்கள்,நபித்தோழர்கள்,அவ்லியாக்கள் இவர்களில் எல்லோரும் அல்லாஹ்விடம் ஒரே அந்தஸ்தை பெற்றவர்களல்ல.

மலக்குமார்களுக்கிடையிலும் பெரிய வித்தியா
சங்கள் இருப்பதாக அல்லாஹ் தன் வான்மறையில் கூறுகிறான்.

اللَّهُ يَصْطَفِي مِنَ الْمَلَائِكَةِ رُسُلاً وَمِنَ النَّاسِ إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ } [ الحج75 ] .

அல்லாஹ் வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களை அவனே தேர்வுசெய்கிறான். என்று கூறுகிறான்.

மலக்குமார்கள் அத்தனைபேரும் பரிசுத்தமானவர்கள் தான்,எனினும் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்களுக்கு அல்லாஹ்விடம் இருக்கும் நெருக்கத்தை வேறுஎவரும் பெறவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம்.

இறைவனால் தூதர்களாக அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களும் பாவமன்னிப்பு பெற்றவர்கள்தான், எனினும் நபி ஸல் அவர்களின் அந்தஸ்தை வேறுஎவரும் கனவில்கூட நினைத்துப்பார்க்க இயலாது என்பதை நாம் அறிவோம்.

இவ்வாறே ஐங்கால தொழுகைகளில் அதிகாலை தொழுகையான பஜ்ர் தொழுகைக்கு அல்லாஹ்விடம் இருக்கும் மரியாதையும் கண்ணியமும் வேறு எந்த தொழுகைக்கும் இல்லை,காரணம் வணக்கங்களில் நாம் ஏற்றுக்கொள்கிற சிரமங்கள் அளவுக்கு கூலிகிடைக்கும் என்பது அல்லாஹ்வின் நியதியாகும்.
அன்னை ஆயிஷா ரலி அவர்களை நோக்கி நபி ஸல் அவர்கள் கூறிய வார்த்தைகள் இங்கு சிந்திக்கத்தக்கதாகும்.

قال النبي صلى الله عليه وسلم لعائشة رضي الله عنها : ( إن لك من الأجر على قدر 

نصبك ونفقتك ) رواه الحاكم

உன் சிறமத்தின் அளவே உனக்கு கூலி கிடைக்கும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

பொதுவாக தொழுகை ஒரு முஃமினின் ஈமானிய சாட்சியாகும்.நீங்கள் பள்ளிவாசலில் வழமையாக ஒருவரை கண்டால் அவரின் ஈமானுக்கு சாட்சியாயிருங்கள் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.

ஈமானுக்கும் இறைமறுப்புக்கும் இடையில் வேறுபாடு தொழுகை மூலமே பார்க்கப்படுகிறது.காரணம் அது இந்த மார்க்கத்தின் அசைக்க முடியா தூனாகும்.

முதலாவதாக கடமையாக்கப்பட்டது தொழுகை.முதலாவதாக உயர்த்தப்படும் அமலும் தொழுகையே,அவ்வாறே நாளை மறுமையில் முதல்விசாரணையும் தொழுகையைபற்றியே என ஸல் அவர்கள் கூறினார்கள்.

பயணத்திலும் போர்களத்திலும் தொழுகையின் முறைகள் மாறுபடுமே தவிர தொழுகை தவிர்க்கப்படாது.அது இந்த உம்மத்தின் விலைமதிப்பில்லா செல்வமாகும்.அதனால் தான் அல்லாஹ்வுக்கும் அவனின் அன்புத்தூதருக்கும் இடையில் யாருமின்றி நேரடியாக மிஃராஜில் தொழுகை வழங்கப்பட்டது.

சுக துக்கங்களில்,வெற்றி தோல்விகளில்,ஏற்ற இறக்கங்களில் வாழ்வின் அத்தனை நொடியிலும் ஒரு உற்ற நண்பனைப்போல ஒரு முஃமினின் வாழ்வில் தொழுகைக்கு இடமுண்டு.


كان رسول الله صلى الله عليه وسلم إذا أهمه أمر قام إلى الصلاة لأن الله يقول ( واستعينوا بالصبر والصلاة )

நபி ஸல் அவர்களுக்கு கவலைதரும் விஷயம் எதுவும் நடந்துவிட்டால் உடனே தொழுகையின் பக்கம் தங்களின் கவனத்தை திருப்புவார்கள்.ஏனெனில் பொருமையை கொண்டும்,தொழுகையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

நபி ஸல் அவர்கள் தங்களின் வாழ்நாளின் இறுதிமூச்சை எண்ணிக்கொண்டிருக்கும்போது தொழுகையின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.

தொழுகையில் நிற்கிறபோது இஸ்லாமிய எதிரியால் கொலைசெய்யப்பட்டு மயங்கி விழுந்த உமர் ரலி அவர்கள் மயக்கம் தெளிந்த போது-தொழுகையின் நேரம் முடிந்துவிட்டதா? என்று கேட்டார்களாம்.

தொழுகையில் பேணுதல் இல்லாத ஒரு முஸ்லிமால் எதையும் சரியாக செய்ய முடியாது என்பது உமர் ரலி அவர்களின் அபிப்ராயமாகும்.அதனால் தான் தன் ஆட்சியில் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கான முதல் தகுதியாக அவர் தொழுகையில் பேணுதல் உள்ளவராக இருக்கவேண்டும் என்று கடைபி டித்துவந்தார்கள்.

ஸாலிஹீன்களான நல்லோர்கள் தொழுகையில் கடைபிடித்த பேனுதல்:

عن برد مولى سعيد بن المسيب قال : ما نودي بالصلاة منذ أربعين سنة إلا وسعيد في
المسجد .
நாற்பதாண்டுகளாக பாங்கு சொல்லப்படும்போது இமாம் ஸயீத் இப்னுல் முஸய்யப் ரஹ் அவர்கள் பள்ளிவாசலில் இருப்பார்கள்.

كان الأعمش قريباً من سبعين سنة لم تفته التكبيرة الأولى

இமாம் அஃமஷ் ரஹ் அவர்கள் ஏறத்தாள எழுபதாண்டு காலமாக முதல் தக்பீரை தவறவிட்டதில்லை.

وروي عن أحد السلف أنه كان به وجع الخاصرة ، فكان إذا أصابه أقعده عن الحركة ، فكان إذا نودي بالصلاة يحمل على ظهر رجل ، فقيل له : لو خففت على نفسك ؟ قال : إذا سمعتم حي على الصلاة ، ولم تروني في الصف ، فاطلبوني في المقبرة .

நம் முன்னோர்களில் ஒருவர் கடுமையான இடுப்பு வலியால் அவதிப்பட்டார். அந்த வலி வரும்போது அவரால் அசையக்கூட முடியாது.இந்நிலையில் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டுவிட்டால் யாராவது அவரை சுமந்து சென்று பள்ளியில் அமரவைப்பார்கள்.
இவ்வளவு சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டுமா?என அவரிடம் கேட்கப்பட்ட போது-ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டு தொழுகையின் ஸஃப்பில் என்னை காணாவிட்டால் என்னை கப்ரில் தேடுங்கள் என்றார்கள்.

وسمع عامر بن عبد الله بن الزبير المؤذن وهو يجود بنفسه فقال : خذوا بيدي ، فقيل
: إنك عليل ، قال : أسمع داعي الله فلا أجيبه ؟! فأخذوا بيده فدخل مع الإمام في المغرب 
 ، فركع ركعة ثم مات

ஆமிர் இப்னு அப்துல்லாஹ் ரஹ் அவர்கள் கடுமையான நோயில் பீடிக்கப்பட்டிருந்த போது தொழுகைக்காக தன் கரம்பிடித்து அழைத்துச்
செல்லச்சொன்னார்கள்.
நீங்கள் கடுமையான நோயில் அவதிப்படு
கிறீர்கள்.இந்நிலையில் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?என்றபோது-
அல்லாஹ்வின் அழைப்பாளரின் அழைப்பை கேட்டும் என்னை பதில் கூறாமல் இருக்கச்சொல்கிறீர்களா?என்று கேட்டார்கள்.

உடனே அவரின் நண்பர்கள் அவர் கரம்பிடித்து மங்ரிப் தொழுகைக்கு அழைத்து வந்தபோது இமாமுடன் சேர்ந்துகொண்டார்.
அத்தொழுகையிலேயே அவரின் உயிர் பிரிந்தது.

தொழுகை விஷயத்தில் சுலைமான் அலை அவர்களின் பேனுதல்

قال تعالى : { فَطَفِقَ مَسْحاً بالسوق والأعناق } أي فجعل سليمان عليه السلام يمسح سوقها وأعناقها ، قال الأكثرون معناه أنه مسح السيف بسوقها وأعناقها أي قطعها ، قالوا إنه عليه السلام لما فاتته صلاة العصر بسبب اشتغاله بالنظر إلى تلك الخيل استردها 
وعقر سوقها وأعناقها تقرباً إلى الله تعالى

நபி சுலைமான் அலை அவர்கள் ஒருநாள் தன் படையை பார்வையிடும்போது அதில் அணிவகுத்துநின்ற குதிரைகளின் காட்சி அவர்களை கவர்ந்திழுத்தது.  அந்த காட்சிகளை இரசித்துக்கொண்டிருந்ததால் அஸர் தொழுகை களாவாகிப்போனது.
தனக்கு தொழுகை களாவாகிப்போனதை பொருத்துக்கொள்ள முடியாத நபி சுலைமான் அலை அவர்கள் அத்தனை குதிரைகளின் க்கலையும் கழுத்தையும் துண்டித்து அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தார்கள் என அல்குர்ஆன் கூறுகிறது.

عن إبراهيم التيمي قال: كانت الخيل التي شغلت سليمان، عليه الصلاة والسلام عشرين 
ألف فرس، فعقرها

(இப்னு கஸீர்)

அவர்கள் பலியிட்ட குதிரைகள் இருபதாயிரம் என இப்ராஹீம் அத்தைமி அவர்கள் கூறுகிறார்கள்.



عَنْ شُتَيْرِ بْنِ شَكَلٍ الْعَبْسِيِّ قَالَ سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ
لَمَّا كَانَ يَوْمُ الْأَحْزَابِ صَلَّيْنَا الْعَصْرَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَغَلُونَا عَنْ الصَّلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ وَأَجْوَافَهُمْ نَارًا

கந்தக் போரில் நாங்கள் அஸர் தொழுகையை- மக்ரிபுக்கும் இஷாவுக்கு இடைப்பட்ட நேரத்தில் தொழுதோம்,தொழுகையை முடித்த நபி ஸல் அவர்கள்,அஸர் தொழுகையை களாவாக்க வைத்துவிட்டார்கள்.அல்லாஹ் அவர்களின் கப்ர்களையும்,வயிறுகளையும் நெருப்பால் நிறப்புவானாக என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அலி ரலி.அஹ்மத்-1182


عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَفَلَ مِنْ غَزْوَةِ خَيْبَرَ سَارَ لَيْلَهُ حَتَّى إِذَا أَدْرَكَهُ الْكَرَى عَرَّسَ وَقَالَ لِبِلَالٍ اكْلَأْ لَنَا اللَّيْلَ فَصَلَّى بِلَالٌ مَا قُدِّرَ لَهُ وَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ فَلَمَّا تَقَارَبَ الْفَجْرُ اسْتَنَدَ بِلَالٌ إِلَى رَاحِلَتِهِ مُوَاجِهَ الْفَجْرِ فَغَلَبَتْ بِلَالًا عَيْنَاهُ وَهُوَ مُسْتَنِدٌ إِلَى رَاحِلَتِهِ فَلَمْ يَسْتَيْقِظْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا بِلَالٌ وَلَا أَحَدٌ مِنْ أَصْحَابِهِ حَتَّى ضَرَبَتْهُمْ الشَّمْسُ فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوَّلَهُمْ اسْتِيقَاظًا فَفَزِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَيْ بِلَالُ فَقَالَ بِلَالٌ أَخَذَ بِنَفْسِي الَّذِي أَخَذَ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ بِنَفْسِكَ قَالَ اقْتَادُوا فَاقْتَادُوا رَوَاحِلَهُمْ شَيْئًا ثُمَّ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَ بِلَالًا فَأَقَامَ الصَّلَاةَ فَصَلَّى بِهِمْ الصُّبْحَ فَلَمَّا قَضَى الصَّلَاةَ قَالَ مَنْ نَسِيَ الصَّلَاةَ فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ قَالَ

{ أَقِمْ الصَّلَاةَ لِذِكْرِي
நபி ஸல் அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பும்போது தூக்கம் மிகைத்த காரணத்தால் ஓரிடத்தில்  இரவு தங்க முடிவு செய்தார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள் ஹழ்ரத் பிலால் ரலி அவர்களை அழைத்து இரவில் நீங்கள் பாதுகாப்பு பொறுப்பை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

ஹழ்ரத் பிலால் ரலி அவர்கள் தொழுகையில் ஈடுபட்டார்கள்.நபி ஸல் அவர்களும், நபித்தோழர்களும் தூங்கிவிட்டனர்.

பஜ்ர் நேரம் நெருங்கியபோது பிலால் ரலி அவர்களுக்கு தூக்கம் மிகைக்கவே தன் வாகனத்தில் சாய்ந்தவர்களாக தூங்கிவிட்டார்கள்.
சூரியன் சுட்டெரிக்கும்வரை நபியும், நபித்தோழர்களும்,பிலால் ரலி அவர்களும் நன்றாக தூங்கிவிட்டனர்.

முதலாவதாக திடுக்கிட்டு எழுந்த நபி ஸல் அவர்கள்,பிலாலே!என சப்தமிட்டார்கள்.திடுக்கிட்டு எழுந்த பிலால் ரலி அவர்கள்-அல்லாஹ்வின் தூதரே!உங்களை மிகைத்த தூக்கம் என்னையும் மிகைத்து விட்டது என்றார்கள்.அப்போது நபி ஸல் அவர்கள் தம் தோழர்களை நோக்கி,இந்த இடத்தை விட்டு வாகனத்தை கிளப்புங்கள் என்று உத்தரவிட்டார்கள்.

பின்பு சிறிதுதூரம் சென்று நபி ஸல் அவர்கள் ஒழுச்செய்து,பிலால் ரலி அவர்களை பாங்கு சொல்ல சொன்னார்கள்.பின்பு பஜ்ர் தொழுகையை ஜமாத்துடன் களாச்செய்தார்கள்.தொழுகையை முடித்த நபியவர்கள்-
யாரேனும் மறதியின் காரணமாக (உரிய நேரத்தில்) தொழத் தவறிவிட்டால் அவனுக்கு நினைவு வரும்போது, (விழித்தவுடன்) அதைத் தொழட்டும்!என்று கூறினார்கள்.
அபூஹுரைரா ரலி :முஸ்லிம்:1097

நபி இப்ராஹீம் அலை அவர்கள் தொழுகைக்காக அல்லாஹ்விடம் இப்படி துஆச்செய்தார்கள்

 رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

("என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!"

அல்லாஹுத்தஆலா இந்த துஆவை ஒப்புக்கொண்டான் என்பதை இன்னொரு வசனம் உணர்த்துகிறது.

وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِندَ رَبِّهِ مَرْضِيًّا

அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார் தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.

பஜ்ரும் பரக்கத்தும்

ஐங்காலத்தொழுகைகளில் பஜ்ர் தொழுகை தனிப்பெரும் அந்தஸ்தை பெறுகிறது.

1.வானவர்கள் சங்கமிக்கும் தொழுகை பஜ்ர்

 إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُوداً } [ الإسراء
78 ] 

நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது.
அதாவது மலக்குகளால் அந்த தொழுகைக்கு சாட்சி சொல்லப்படும்.

عن أَبي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " تَجْتَمِعُ مَلاَئِكَةُ اللَّيْلِ وَمَلاَئِكَةُ النَّهَارِ فِي صَلاَةِ الْفَجْرِ " ، ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ : فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ : { إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُوداً } [ متفق عليه ] 

பஜ்ர் தொழுகையில் பகல் மலக்குகளும் இரவு மலக்குகளும் ஒன்றுசேர்கின்ற னர் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அறிவித்த அபூஹுரைரா ரலி அவர்கள் மேல்வசனத்தை மேற்கோள்காட்டினார்கள்.

2.அல்லாஹ்வை சந்திக்கும் அருள்கிடைக்கும்

عَنْ جَرِيرٍ بن عبد الله رضي الله عنه قَالَ : كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَنَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةً - يَعْنِى الْبَدْرَ - فَقَالَ : " إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُّونَ _ تضارون _ فِي رُؤْيَتِهِ ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا فَافْعَلُوا " يعني الفجر والعصر ، ثُمَّ قَرَأَ : { وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ الْغُرُوبِ } [ متفق عليه
  ]
ஒரு பதினான்காம் இரவில் நாங்கள் நபி ஸல் அவர்களின் சபையில் அமர்ந்திருந்தோம்.
அப்போது நபி ஸல் அவர்கள் –
நீங்கள் இன்றைய இரவில் சந்திரனைப்பார்ப்பது போல நாளை மறுமையில் அல்லாஹ்வை பார்ப்பீர்கள்.அதற்கு நீங்கள் முடிந்தவரை பஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளில் பேனுதலாக இருங்கள் என்று கூறினார்கள் என ஜரீர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்

3.அல்லாஹ்வின் பொருப்பில் வருவார்

مَنْ صَلَّى صَلاَةَ الصُّبْحِ فَهْوَ فِي ذِمَّةِ اللَّهِ
 رواه مسلم ]

பஜ்ர் தொழுதவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற்றுவிட்டார் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

4.இரவு வணங்கிய கூலி வழங்கப்படும்

عن عُثْمَانُ بْنُ عَفَّانَ رضي الله عنه قال : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ ، وَمَنْ صَلَّى الصُّبْحَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ " [ رواه مسلم ] .

இஷாவை ஜமாஅத்துடன் தொழுதவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப்  போலாவார்.எவர் பஜ்ரை ஜமாஅத்துடன் தொழுதாரோ அவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவரைப்போலாவார்

5.வானவர்களின் துஆ கிடைக்கிறது

عَنْ علي بن أبي طالب رضي الله عنه قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ : " مَنْ صَلَّى الْفَجْرَ ثُمَّ جَلَسَ فِي مُصَلاَّهُ ، صَلَّتْ عَلَيْهِ الْمَلاَئِكَةُ ، وَصَلاَتُهُمْ عَلَيْهِ : اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، اللَّهُمَّ ارْحَمْهُ " [ رواه أحمد ] .

யார் பஜ்ர் தொழுதுவிட்டு அந்த இட்த்தில் சிறிதுநேரம் உட்கார்ந்திருப்பாரோ அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.
யா அல்லாஹ் இவரை மன்னித்து இரக்கம் காட்டுவாயாக என துஆச்செய்கின்றனர்.
6.பஜ்ரை விடுவது நயவஞ்சகர்களின் அடையாளம்.

نْ أُبَىِّ بْنِ كَعْبٍ رضي الله عنه قَالَ : صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَةَ الصُّبْحِ ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ : " أَشَاهِدٌ فُلاَنٌ ؟ " فَقَالُوا لاَ ، فَقَالَ : " أَشَاهِدٌ فُلاَنٌ " فَقَالُوا لاَ ، لِنَفَرٍ مِنَ الْمُنَافِقِينَ لَمْ يَشْهَدُوا الصَّلاَةَ فَقَالَ : " إِنَّ هَاتَيْنِ الصَّلاَتَيْنِ _ الفجر والعشاء _ أَثْقَلُ الصَّلاَةِ عَلَى الْمُنَافِقِينَ 

நபி ஸல் அவர்கள் பஜ்ர் தொழுகையை எங்களுக்கு தொழவைத்துவிட்டு சில முனாபிக்குகளை கவனத்தில் வைத்து இவர் வந்தாரா?இவர் வந்துள்ளாரா? என கேட்டுவிட்டு ,இவர்கள் யாவரும் வரவில்லை என்பதை புரிந்துகொண்டுச்சொன்னார்கள்.
பஜ்ரும் இஷாவும் நயவஞ்சகாலுக்கு க்அஷ்டமான தொழுகை என்றார்கள். 

7.பரக்கத்தை பெற்றுத்தரும்.


قال صلى الله عليه وسلم \اللهم بارك لأمتي في بكورها

யா அல்லாஹ் அதிகாலையில் என் உம்மத்திற்கு பரக்கத் செய்வாயாக என நபி ஸல் அவர்கள் துஆச்செய்தாரகள்.

قال ابن القيم \ونومة الصبح تمنع الرزق لانه وقت تقسم فيه الأرزاق
  
சுபுஹ் தொழாமல் தூங்குவது ரிஸ்கை தடுத்துவிடும்,ஏனெனில் அந்த நேரத்தில்தான் அன்றைய தினத்தின் ரிஸ்குகள் பங்கு வைக்கப்படுகிறது என இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
 மனிதா!துர்க்குறியை வெளியே தேடாதே,என்றைக்கு நீ பஜ்ர் தொழவில்லையோ அன்றைய தினம் உனக்கு துர்க்குறிதான்.



Thursday, 6 June 2013

அமல்களில் தூய்மை அதுதான் மேன்மை


فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.
நாம் செய்யும் வணக்கங்கள் வீணாகுவதற்கான காரணங்களில் முதன்மையானது முகஸ்துதி தான்.

முடியை விடவும் மெல்லிய தன்மை கொண்ட இந்த முகஸ்துதியால் விளையும் தீங்குகள் எண்ணிக்கையில் அடங்காது.

எனக்கு பின்னால் என் உம்மத்தினர் முகஸ்துதி மூலம் இணைவைப்பின் வாசலை திறந்துவைத்து விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன் என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்.

ஈமான், இஸ்லாமுக்கு பின்னால் தீனின் அடிப்படை இகலாஸ் தான்.இதை தான் நபி சல் அவர்களுக்கு இந்த தீனை கற்றுக்கொடுக்க வந்த ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் நபி ஸல் அவர்களுக்கு இந்த தீனை மூன்று பிரிவுகளாக சொல்லி கொடுத்தார்கள்.

1:ஈமான்   2.இஸ்லாம்   3.இஹ்ஸான்.

இஹ்ஸான் என்றால் அல்லாஹ்வை பார்க்கும் உணர்வு அல்லது அல்லாஹ் நம்மை பார்க்கிறான் என்ற உணர்வு.

அதிகமான அமல்கள் செய்வதை விடவும் அல்லாஹ்வுக்காக தூய்மையாக செய்யப்படும் குறைவான அமல் அல்லாஹ்விடம் பெரும் நெருக்கத்தை பெற்றுத்தரும்.

ஸாலிஹீன்களான நல்லோர்கள் தங்களின் நற்காரியங்களில் இக்லாஸை கடைபிடித்து வந்தார்கள்.

وقف عبد الله بن عمر مع أبيه عمر على جبل الصفا، فلما رأوا كثرة الناس والحجاج رأوا كثرة الملبين والمكبرين استبشر عمر بكثرتهم وفرح في عهده رضي الله عنه وقد كثر المسلمين وامتلأ الحرم بالحجاج..فرح.. فقال عبدالله بن عمر لأبيه: يا أبتِ ما أكثر الحاج! فقال له عمر: يا بني: الركب كثير لكن الحاج قليل..
لكن الله أعلم بالقلوب والنيات "لكن الحاج قليل "

ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் தன் தந்தை உமர் ரலி அவர்களுடன் ஹஜ்ஜுக்கு சென்றார்கள்.

அங்கு ஸபா மலையில் நின்று ஹாஜிகளின் பிரமாண்டமான கூட்டத்தை கண்டு அளவிலா ஆனந்தமடைந்த இப்னு உமர் ரலி அவர்கள் தம் தந்தையிடம்-
எவ்வளவு ஹாஜிகள்!  என்றார்கள்.
அதை கேட்ட உமர் ரலி அவர்கள், மகனே! ஹஜ்ஜுக்கு வந்த கூட்டம் அதிகம் தான் ஆனால் இதில் இக்லாஸாக ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் குறைவு என்றார் கள்.
பின்னொரு காலத்தில் ஹஜ்ஜின் நோக்கம் மாறிப்போகும் என்று நபி ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.



صلى أبو أمامة الباهلي رضي الله تعالى عنه صلى يومًا في المسجد، والمسجد مليء فقام رجل يصلي ركعتين فسجد واشتد بكاؤه، بكاء هذا الرجل فلما انتهى من صلاته وجعل يمسح دمعه بطرف عمامته قال له أبو أمامة رضي الله عنه: "ما أحسن بكاؤك لو كان في بيتك".

ஹழ்ரத் அபூ உமாமா ரலி அவர்கள் ஒருநாள் பள்ளியில் தொழுதுகொண்டிருந்தார்கள்.
பள்ளிவாசல் மக்கள் கூட்டத்தால் நிறம்பி இருந்தது.
அச்சபையில் மக்கள் பார்வையில் ஒருவர் நின்று தொழ ஆரம்பித்தார்.தன்னுடைய ஸஜ்தாவில் கடுமையாக அழுதார்.

தொழுகையை முடித்த அம்மனிதர் தன் தலைப்பாகையால் தன் கண்ணீரை துடைத்தார்கள்.
இம்மனிதரிடம் வந்த ஹழ்ரத் அபூ உமாமா ரலி அவர்கள் ,நீர் உம் வீட்டில் தொழும்போது அழுதுகொள்ளும்.அதுதான் உமக்கு நல்லது.ஏனெனில் பொது இடத்தில் இவ்வாறு செய்வது உமக்கு முகஸ்துதியை ஏற்படுத்தி
விடும்.என்று கூறினார்கள்.

தனிமையில் வணக்கம் செய்யும்போது சோம்பேரித்தனமும்,மக்களுக்கு மத்தியில் அமல்செய்யும்போது உற்சாகமும் ஏற்படுவது முனாபிக்கீன்களின் அடையாளமாகும் என அலி ரலி அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் தன் திருமறையில் முனாபிகீன்களின் மூன்று அடையாளத்தை கூறுகிறான்.

إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّـهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَىٰ يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّـهَ إِلَّا قَلِيلًا

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான். தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் - மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்). இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.


ابن المبارك التقي مرة بالعدو وخرج رجل من أقوى العدو بأسًا، وجعل يجول بين الصفين ويصيح بالمسلمين من يبارز؟ من يقاتل؟ فلم يخرج إليه أحد..
فوضع ابن المبارك طرف العمامة على وجهه ولبس الخوذة على رأسه، ثم استل سيفه وخرج وقاتله حتى قتله، قتل ابن المبارك ذلك الرومي، فخرج رجل من الروم إلى ابن المبارك فقتله ابن المبارك، ثم خرج ثالث فقتله ابن المبارك..
ثم أقبل إليه الناس إلى هذا الملثم -ابن المبارك- لا يدرون من هو؟ من هو هذا الرجل الذي رفع راية الله وأعلى كلمة الإسلام وأعز الدين وأذل المشركين من هو؟
فجعلوا يحاولون أن يعرفوه وهو يصد بوجهه عنهم ليدخل في غمار الناس فيختفي فأقبل إليه أبو عمر أحد أصحابه، وقد شك أنه صاحبه، أقبل إليه ووضع طرف أصبعه على عمامته ثم كشف اللثام فغطاه ابن المبارك مباشرة، وقال: "حتى أنت يا أبا عمر ممن يشنّع علينا" ممن يريد فضحنا، ممن يريد أن يظهر عملنا.. يعني لا يُظن بك، حتى أنت يا أبا عمر ممن يشنع علينا، فَعَدَّ كشف عمله فضيحة..
يقول أنا أريد العمل الذي عملته ألا يقصد قلبي أن يشكرني أحد أو يثني عليّ أحد أبدًا، أنا أريده لله، أريد الجهاد لله، ألا يعلم به أحد..

ரோமர்களை எதிர்த்து நடைபெற்ற போர்களத்தில் எதிரிகளில் ஒருவன் முஸ்லிம்களை நோக்கி என்னுடன் உங்களின் யார் சண்டைக்கு வருகிறீர்?  என கூச்சலிட்டான்.என்னை எதிர்கொள்ள உங்களில் யாருக்கு தைரியம் இல்லையா?என கொக்கரித்தான்.
முஸ்லிம்களில் அவனை எதிர்கள்ள யாரும் தயாரில்லை.
அப்போது முஸ்லிம்களின் படையில் இருந்த அப்துல்லா இப்னு முபாரக் ரஹ் அவர்கள் தன் தைலைப்பாகையை கொண்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டு வாளுடன் களத்தில் அந்த எதிரியை எதிர்கொண்டார்கள்.
அவனுடன் சண்டையிட்டு அவனை கொலை
செய்துவிட்டார்கள்.

பின்பு இன்னொருவன் வந்தான்.அவனையும் அவர்களே எதிர்கொண்டு கொன்று விட்டார்கள்.பின்பு மூன்றாவது ஒருவன் வந்தான்.அவனையும் எதிர்கொண்டு இப்னுல்முபாரக் ரஹ் அவர்கள் அவன் கதையையும் முடித்தார்கள்.
இறுதியில் மக்கள் யார் அந்த மகா பெரிய வீரர்? என பார்க்க ஆவல் கொண்டனர்.இந்த தீனின் கண்ணியத்தை நிலைநிறுத்திய அப்போராளி யார் என மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
மக்கள் முட்டிமோதி அவரை காண முற்பட்டபோதும் முடியவில்லை. அக்கூட்டத்தில் இருந்த அபூஉமர் அவர்களுக்கு இவர் நம் நண்பர்  அப்துல்லாஹ் இப்னுல் முபாரக்காக இருக்குமோ என சந்தேகம் வந்து அவரை பின் தொடர்ந்து சென்றார்.
இறுதியாக வலுக்கட்டாயமாக அவரிம் முகத்திரையை நீக்கி பார்த்து விட்டார்கள்.
மக்களிடமிருந்து ஏன் உங்களை மறைக்கிறீர்கள்?என இமாமிடம் காரணம் கேட்டபோது,நான் அல்லாஹ்வுக்காக ஜிஹாத் செய்ய வந்தேன்.வேறு யாரும் என்னை புகழவேண்டுமென்றோ,நன்றி சொல்லவேண்டுமென்றோ வரவில்லை.  என் அமல் அல்லாஹ்வுக்காகவே ஒப்படைக்கப்படவேண்டும்.என்று பதில் கூறினார்கள்.

قال أبو إسماعيل الصائغ: كان أبي ومشيخة الحي إذا كان يوم صوم أحدهم، إذا أحدهم صاحب يوم الخميس والاثنين ادهن – دهن شفته حتى لا يظهر عليه أثر الصوم – ادهن وتطيب ثم خرج إلى الناس حتى لا يعلم الناس عليه أي أمارة تدل أنه صائم

அபூ இஸ்மாயீல் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
என் தந்தையும் அவர்களின் நண்பர்களும் திங்கள்,வியாழன் ஆகிய தினங்களில் நோன்புநோற்பதை வழமையாக்கி கொண்டவர்கள்.
அவ்வாறு அவர்கள் நோன்புவைக்கும்போது தங்களின் உதட்டில் எண்ணை தேய்த்துக்கொள்வார்கள்.அவ்வாறு செய்வது அவர்களை உற்சாகமாக காட்டும்.
மற்றும் நோன்பின் அடையாளத்தை மக்காளால் உணர்ந்துகொள்ள முடியாது.


وداود بن أبي هند لبث سنين يصوم يومًا ويفطر يومًا، ولم يعلم به أحد حتى أهله لم يعلموا به، كان يخرج إلى دكانه في الصباح فيأخذ من أهله طعامًا ليكون له فطورًا، فإذا كان يوم فطره أفطر عليه، وإذا كان يوم صومه تصدق به، ثم رجع بعد المغرب إلى بيته من دكانه فأكل معه فهم يظنونه يتغدى إذا رجع أو يتعشى وهو في الحقيقة إنما يفطر لأنه كان صائمًا.

தாவூத் ரஹ் அவர்கள் தங்களின் குடும்பத்தினர்களுக்கு கூட தெரியாமல் பல ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.
ஒரு நாள் நோன்பு வைப்பார்கள்.மறுநாள் விட்டுவிடுவார்கள்.
தன் இல்லத்திலிருந்து காலை உணவை எடுத்துக்க்ண்டு கடைக்கு புறப்பட்டு விடுவார்கள்.அன்று நோன்பு இல்லையானால் அதை சாப்பிடுவார்கள். நோன்பாக இருந்தால் அதை ஸதகா செய்து விடுவார்கள்.பின்பு மக்ரிபுக்கு தன் இல்லம் திரும்பிய பின் இரவு உணவை சாப்பிடுவார்கள்.இவ்வாறு தன் குடிம்பத்தினர்களுக்கு கூட தெரியாமல் நோன்பில் இக்லாஸை கடைபித்து வந்தார்கள்.