Thursday 29 August 2013

நாவடக்கமே நல்லடக்கம்



அல்லாஹுத்தஆலா ஒரு முஃமினின் நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் வழங்குகிறான்.எந்தளவிற்கென்றால் நேற்றுவரை அந்நியத்தனமாக இருந்த ஒரு ஆண் பெண்ணுக்கு இடையில் கபில்து என்ற ஒரு வார்த்தை காலமெல்லாம் இருவருக்குமான உறவை விசாலமாக்கி விடுகிறது.

அப்பெண்ணை பார்ப்பது,பேசுவது,தனிமையில் இருப்பது அத்துனையும் ஒரு வார்த்தையால் ஹலாலாகி விடுகிறது.
அவ்வாறே,ஒரு முஃமின் வெளிப்படுத்தும் கடும் சொற்களால் ஏற்படும் தீய விளைவுகளை பட்டியலிட்டு கூறத்தேவையில்லை.

நேற்றுவரை உயிருக்கு உயிராக இருந்த கணவன் மனைவிக்கான உறவுகள் தலாக் என்ற ஒரு வார்த்தையால் சிதைந்து போய்விடுவதை பார்க்கிறோம்.
ஈமானையும் இறைமறுப்பையும் தீர்மானிப்பதில் நாவுக்கும் அதிலிருந்து வெளியாகும் வார்த்தை
களுக்கும் முக்கிய பங்குண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

நாற்பது ஆண்டுகள் இணைவைப்பிலும் இறை
மறுப்பிலும் காலத்தை கழித்துவிட்ட ஒருவர் அஷ்ஹது என்ற வார்த்தையால் தன் கடந்த கால பாவங்கள் அனைத்தையும் விட்டு விலகிக்
கொள்கிறார்.அப்பழுக்கற்ற வாழ்க்கைக்கு தன்னை சொந்தமாக்கிக்கொள்கிறார்
அப்படியே அரைநூற்றாண்டு காலம் ஈமானிய வாழ்வை சொந்தமாக்கியவர் ஒரே ஒரு குஃப்
ரியத்தான வார்த்தையால் அத்துனையையும் இழந்து விடுகிறார்.

இதனால் தான், ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் என்று அனுபவசாலிகள் கூறுவார்கள்.

ஒரு முஃமினின் நாவிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அல்லாஹ்விடம் மிகப்பெரும் மரியாதை உண்டு.அதனால் தான் ஒவ்வொரு வார்த்தைகளும் மலக்குகளால் பதிவு செய்யப்படுகிறது.
நாளை மறுமையில் நாம் வெளிப்படுத்திய வார்த்தைகளுக்கான விசாரனை உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் வழங்கிய ஒவ்வொரு நிஃமத்தையும் சரியாக முறையாக பயன் படுத்தவேண்டும் அதனடிப்படையில் நாவும்,அதற்கு அல்லாஹ் வழங்கிய பேசும் திறனும் மாபெரும் அருட்கொ
டையாகும்.

நாவின் வீரியம் பற்றி பெரியவர்கள்,
அளவில் சிறியது.விளைவில் பெரியது என்று கூறுவார்கள்
நாம் பேசும் வார்த்தைகளுக்கு நம் வாழ்க்கை சொந்தமாகவில்லையானால் அது அல்லாஹ்வின் மிகப்பெரும் கோபத்திற்கு காரணமாகும் என அல் குர்ஆன் கூறுகிறது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ ﴿٢﴾ كَبُرَ مَقْتًا عِندَ اللَّـهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
பொய்,கோள்,புறம் இட்டுக்கட்டல் போன்ற அல்லாஹ்வின் வெறுப்பிற்கு காரணமான அத்துனை பாவங்களையும் நாவே விதைக்கிறது.
விபச்சாரத்தை விட புறம் கடுமையான பாவம் என்று ஹதீஸில் வருகிறது அப்படிப்பட்ட புறம் எனும் பாவத்திற்கு நாவே பிறப்பிடம்.
உலமாக்கள் சொல்வார்கள்

பாவங்கள் முஃமின்களை பாவிகளாக்கும்.ஆனால் சில வார்த்தைகள் முஃமின்களை காபிர்களாக்கிவிடும்.
உதாரணமாக இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்
கள்.அதில் ஒருவர் இது ஷரீஅத் சட்டம் என்றார்.மற்றவரோ ஷரீஅத்தை தூரபோடு (நவூது பில்லாஹ்) என்றால் அவனை உலமாக்கள் காபிர் என்று கூறுவார்கள்.
மார்க்கத்தை கேலிபேசுவதும் ஏளனமாக பேசுவதும் இறைமறுப்பாகும்.
யார் தன்னுடைய் இரு உறுப்புக்களுக்கு பொருப்பேற்பானோ அவனின் சுவனத்திற்கு நான் பொருப்பு என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ஒன்று நாவு மற்றொன்று மர்மஸ்தானம்.
ஹழ்ரத் அபூபக்கர் ரலி தன் நாவை பிடித்து நாவே!அதிகமான ஜனங்கள் உன்னை காரணமாக கொண்டே நரகம் செல்கின்றனர் என கூறுவார்களாம்
ஒரு மனிதனின் சுபாவம் அவனின் நாவுக்கு கீழே மறைந்துள்ளது என்று ஹழ்ரத் அலி ரலி அவர்கள் கூறினார்கள்.அதனால் தான் ஸாலிஹீன்கள் சொல்வார்கள்
நீ ஆலிம்களின் சபையில் இருந்தால் உன் நாவை கட்டுப்படுத்து,இறை நேசர்களுடன் இருந்தால் உன் கல்பை கட்டுப்படுத்து என்பார்கள்.
அல்லாஹுத்தஆலா அவனின் படைப்புக்கள் அனைத்திலும் ஹிக்மத் எனும் ஞானம் இருக்கும்.
மனிதனுக்கு இரு காதை தந்தான்.ஆனால் ஒரு நாவை தான் தந்திருக்கிறான்.ஏனெனில் அதிகமாக கேட்க வேண்டும்.குறைவாக பேச வேண்டும்.
அறிவாளி பேசும் முன் சிந்திக்கிறான்.முட்டாள் பேசிவிட்டு சிந்திக்கிறான்.
நல்லவர்களின் நாவின் அசைவுக்கு அல்லாஹ்வின் அர்ஷ் செவி சாய்க்கிறது.

وإليك قصة الثلاثة الذين ذهبوا معا لزيارة واحد من رجال الله.. كل منهم يحمل فى قلبه غير الذى يحمله الآخر.. فلقى كل منهم جزاءه الذى يستحقه.
هى قصة مشهورة.. أوردها الإمام المناوى فى طبقاته..وتناولها كثير من المؤرخين بالقبول.. "تكاد تتواتر فى المعنى بكثرة ناقليها وعدالتهم – كما قال محمد فتحى أبو بكر محقق طبقات المناوى- وفيها أبلغ زجر عن الإنكار على أولياء الله تعالى".
الولى هو الشيخ يوسف الهمدانى المشهور بالغوث.. قصد زيارته ثلاثة:
الأول عبد القادر الجيلانى.. وكان يومئذ شاب.
والثانى ابن أبى عصرون.
والثالث ابن السقاء.
فقال ابن السقاء فى الطريق: اليوم أسأله مسألة لا يعلم جوابها.
وقال ابن أبى عصرون: أسأله فأنظر ماذا يقول.
وقال عبد القادر الجيلانى: معاذ الله أن أسأله.. بل أتبرك برؤيته.
فدخلوا عليه فلم يروه مكانه.. فمكثوا ساعة فإذا هو جالس.. فقال لابن السقاء وهو لا يعرفه:
- يابن السقاء.. تسألنى مسألة لا أعرف جوابها؟.. هى كذا.. وجوابها كذا.. إنى أرى نار الكفر تتلهب فيك.
ثم قال لابن أبى عصرون:


- تسألنى تنظر ما أقول؟ أردت أن تسأل عن كذا.. وجوابه كذا.. لتغمرنّك الدنياإلى شحمتى أذنيك لإساءة أدبك.
وقال لعبد القادر:
- لقد أرضيت الله ورسولك بأدبك.. أراك قد صعدت الكرسى متكلما على الناس وقلت: قدمى على رقبة كل ولى لله.
قال المحقق فى الهامش: وقد صدق قول الشيخ فيهم جميعا.. قال ابن أبى عصرون:
- وأما الشيخ عبد القادر فقد ظهرت أمارة قربه من الله تعالى.. وأجمع عليه الخاص والعام.. وقال: قدمى هذه على رقبة كل ولى (كناية عن علو مكانته ومقامه).. وأقرت الأولياء بفضله فى وقته..
- وأما ابن السقاء فإنه اشتغل بالعلوم الشرعية حتى برع فيها وفاق كثيرا من أهل زمانه.. واشتهر بقطع من يناظره فى جميع العلوم.. وكان ذا لسان فصيح وسمت بهى.. فأدناه الخليفة منه.. وبعثه إلى ملك الروم رسولا (بالقسطنطينية).. فرآه الملك ذا فنون وفصاحة وسمت فأعجب به.. وجمع له القسيسين والعلماء بدين النصرانية وناظروه..فأفحمهم عجزا.. فعظم عند الملك.. ثم رأى بنتا للملك ففُتن بها.. وسأل الملك أن يزوجها به.. فأبى الملك إلا أن يتنصر.. فأجابه إلى طلبه وتنصر.. فزوجه بها.. وكان ابن السقاء يذكر كلام الغوث.. ويقول إنه أصيب فى دينه بسببه.
- وأما أنا فجئت دمشق.. وأحضرنى السلطان نور الدين – الملك الشهيد- وأكرهنى على ولاية الأوقاف فوليتها.. وأقبلت علىّ الدنيا إقبالا كثيرا.. وقد صدق قول الغوث فينا كلنا.

யூஸுப் ஹம்தான் எனும் ஒரு இறைநேசரை சந்திக்க பக்தாத் நிஸாமிய்யா மத்ரஸாவில் படித்துக்கொண்டிருந்த மூன்று மாணவர்கள் புறப்பட்டனர்.
முதலாமவர். அப்துல் காதிர் ஜைலானி ரஹ்.

இரண்டாமவர் இப்னு அபீ அஸ்ரூன்

மூன்றாமவர் இப்னு ஸகா

அப்போது போகும் வழியில் இப்னு ஸகா,

நான் அந்த ஷைகை ஒரு கேள்வியின் மூலம் திகைக்க வைக்கப்போகிறேன்.என்றார்.

அப்போது இப்னு அபீ அஸ்ரூன்,

நான் அந்த பெரியவரிடம் ஒரு கேள்வி கேட்பேன்.அதற்கு என்ன பதில் கூறுகிறார் என்று பார்ப்பேன் என்றார்.

அப்துல் காதிர் ஜைலானி அவர்கள்

அல்லாஹ் பாதுகாக்கட்டும்! நான் அவர்களிடம் கேள்வி கேட்பதைகூட அவமரியாதையாக கருதுகிறேன்.எனவே நான் அவர்களை சந்தித்து பரக்கத் பெறமட்டுமே வருகிறேன் என்றார்கள்.

இவ்வாறு பேசிக்கொண்டு சென்ற அம்மூவர்,அந்த இறைநேசரின் சமூகத்தை அடைந்தபோது
இப்னு ஸகாவை பார்த்த அந்த இறைநேசர் -

நீ என்னை மடக்கும் கேள்வி கேட்கப்போகிறீரோ? உன் கேள்வி இது.அதற்கான பதில் இது என்று கூறிய அந்த பெரியவர் கடும் கோபமுற்றவராக உன்னிடம் குஃப்ரிய்யத்தான நெருப்பு கொழுந்துவிட்டு எறிவதை பார்க்கிறேன் என்றார்கள்.அதாவது உன் ஈமான் எப்போது பறிபோகலாம் என்றார்கள்.

இரண்டாமவரான இப்னு அஸ்ரை பார்த்து-

 நீ என்னிடம் கேள்வியை நாடி வந்துள்ளாய்.உன் கேள்வி இது.அதற்கான விடை இது என்று கூறிவிட்டு  உன் தீய நடத்தையால் உலகம் உன்னை ஆக்கிரமிக்கும் என்றார்கள்.

மூன்றாமவரான அப்துல்காதிர் ஜைலானியை பார்த்து,உன் அழகிய ஒழுக்கத்தால் அல்லாஹ்,ர
ஸூலை திருப்தி படுத்திவிட்டாய்.மக்களிடம் மிக உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்.இறைநேசர்களின் தலைமையை பெறுவீர் என்றார்கள்.

அந்த ஷைக் கூறிய அத்துனை வார்த்தைகளும் அம்மூவரின் எதிர்காலத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்தன.

இப்னு அஸ்ர் கூறுகிறார்.

அப்பெரியவர் கூறியது போலவே அப்துல்காதிர் ரஹ் அவர்கள் உலகமே திரும்பி பார்க்ககும் ஞானியானார்.மேலும் இப்னு ஸகா ஷரீயத் கல்வியில் தேர்ச்சிபெற்று அக்கால மக்களில் மிகவும் திறமையானவராக வளம்வந்ததுடன், மிகச்சிறந்த தன் நாவன்மையால் தன்னிடம் வாதம் செய்யும் அனைவரையும் வெற்றி கொள்வார்.
ஒருகட்டத்தில் அக்கால கலீபா அவர்களின் மிகச்சிறந்த நம்பிக்கையை பெற்று அவரின் பிரதான தூதராக தேர்வு செய்யப்பட்டார்.
இறுதியாக கலீபா அவர்கள் இவர்களை ரோம் அரசபைக்கு தூதுவராக அனுப்பி வைத்தார்கள்.இவரின் அபாரமான ஆற்றலை கண்ட ரோம் மன்னர் கிருஸ்துவ பாதிரிகளை வரவைத்து இவரிடம் விவாதம் செய்ய வைத்தார்,  அவர் தம் வாதத்திறமையால் அத்துனை பாதிகளையும் மண் கவ்வ வைத்துவிட்டார்.
இந்நிலையில் ஒருநாள்...ரோம் மன்னனின் அழகான மகளை பார்த்த இப்னு ஸகா அவளால் ஈர்க்கப்பட்டு,மணமுடிக்க ஆசை கொண்டு அரசரிடம் கேட்டபோது அதற்கு கிருத்துவராக தான் மாறவேண்டும் என்று அரசர் கூறிவிட்டார்.இறுதியில் அப்பெண்ணுக்காக தன் மார்க்கத்தை துறந்துவிட்டார்.
அவரின் பிந்திய நாட்களை பற்றி பதிவு செய்யும் இப்னு அபீ அஸ்ர் அவர்கள்,இப்னு ஸகா பஃதாதின் வீதிகளில் பிச்சை எடுத்து அலைந்ததை தான் கண்டதாகவும், அவரின் மரண நேரத்தில் கிப்லாவின் பக்கம் முகத்தை திருப்பிய போது அவரின் முகம் கிழக்கு திசை பக்கம் திரும்பியதாகவும் கூறினார்.மேலும் நான் சுல்தான் நூருத்தீன் அவர்களின் அரசபையில் தன் வாழ்நாள் கழிந்த்தாகவும் உலக அலுவல்களில் ஈடுபட்டு தீனின் சேவைகள் செய்யும் நஸீபின்றி கழ்ந்துவிட்டது.
ஏக காலத்தில் ஒரே மத்ரஸாவில் பயின்ற மூன்று நபர்களின் வாழ்க்கை அவர்கள் நாவுகள் வெளிப்படுத்திய வார்த்தைகளின் விளைவுகளானது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
சில நேரங்களில் நாம் பேசும் வார்த்தைகள் தான் நம் வாழ்வை தீர்மானிக்கிறது.மறுமையையும் தீர்மானிக்கிறது
'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
ஒரு அடியான் ஒருவரை சாபமிட்டால் அந்த வார்த்தை வானத்தை நோக்கி செல்கிறது.அங்கு வானத்தின் கதவு அடைக்கப்படுகிறது.உடனே அந்த கடும் சொல் பூமியில் பல இடங்களுக்ககும் சென்று சேரும் இடம் இல்லாததால் அதை பயன்படுத்திவனை நோக்கி திரும்பி வந்துவிடுகிறது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நல்ல எண்ணங்கள் நல்ல வார்த்தைகளை உதயமாகச்செய்கிறது.நல்ல வார்த்தைகள் தான் நல்ல வாழ்வை பெற்றுத்தருகிறது.


Thursday 22 August 2013

கொள்கையில் உறுதி வேண்டும்

இஸ்லாத்தின் கொள்கைகள்,கோட்பாடுகள் சுத்தமானதும் தெளிவானதுமாகும்.எந்தவிதமான குழப்பத்திற்கும் தடுமாற்றத்திற்கும் அதில் இடமில்லை.

அகீதாக்கள் எனப்படும் கொள்கைகள் தான் இஸ்லாத்தின் அடித்தளம்.

அமல்களில் குறைவு ஏற்படலாம்.ஆனால் கொள்கையில் குழப்பம் வரக்கூடாது.
ஒரு முஃமின் எந்த சூழ்நிலையிலும் தன் கொள்கையை இழக்கக்கூடாது.

 ஈமான் மூன்று பிரிவுகளை கொண்டது.

الإيمان اصطلاحًا: "اعتقاد بالجنان، وإقرار باللِّسان، وعمل بالأركان"؛ ينظر: "شرح الطحاوية"

அதில் முதன்மையானது கொள்கையுடன் சம்பந்தப்பட்டது.ஈமானின் சொல்வடிவமும் செயல்வடிவமும் நாம் ஏற்றிருக்கிற அகீதாவைக்கொண்டு முடிவு செய்யப்படுகிறது.அதனால் தான் அகீதாக்கள் கெட்டுப்போனால் அமல்களும் கெட்டுப்போகும் என்று குர்ஆன் எச்சரிக்கிறது.

قُلْ هَلْ نُنَبِّئُكُم بِالْأَخْسَرِينَ أَعْمَالًا (103) الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا (الكهف: 103 104)

செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்.


நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த முனாபிகீன்களிடம் ஈமானும் வணக்கமும் இருந்தது.ஆனால் அவர்களிடம் கொள்கை கெட்டுப்போய்விட்டது.எனவே அவர்களின் ஈமானும் அமலும் அவர்களுக்கு எந்த பலனும் அளிக்கவில்லை.
அதைபோலவே இறைமறுப்பளர்களின் நல்ல காரியங்கள் நாளை மறுமையில் அவர்களுக்கு எந்தபலனையும் தரப்போவதில்லை, காரணம் அடிப்படையான ஈமானிய கொள்கையில் அவர்கள் கோட்டைவிட்டுவிட்டார்கள்.

وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا} [الفرقان: 23]،

இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.

கொள்கை சரியில்லாத அமல்களுக்கு அல்லாஹ்விடம் எந்த மதிப்பும் இல்லை.

مر أبو بكر -رضي الله تعالى عنه- براهب يتعبد في كنيسة وقد ترك الناس وزهد في الدنيا؛ لكنه يعتقد أن الله
ثالث ثلاثة، يتقرب إلى عيسى وإلى روح القدس كما يتقرب إلى ربنا -جل وعلا- يعمل وينصب؛ لكنه على
الشرك. فلما رآه أبو بكر دمعت عيناه وقال: صدق الله! (عَامِلَةٌ نَاصِبَةٌ * تَصْلَى نَارًا حَامِي

ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் ஒரு கிருஸ்துவ ஆலயத்தை கடந்துசெல்கிறபோது அதில் மிகுந்த பக்தியுடன் வணக்கம் செய்யும் ஒரு பாதிரியை கண்டார்கள்.மக்களிடமிருந்து தனிமை,உலகில் பற்றின்மை.  வணக்கம்.எல்லாம் இருக்கிறது ஆனாலும் கொள்கை கெட்டுப்போய்விட்ட து.காரணம் மூன்று தெய்வ கொள்கை மூலம் ஷிர்க்கும் கலந்துவிட்டது. அவரைப்பார்த்து கண்ணீர் வடித்த அபூபக்கர் (ரலி) அவர்கள்,

அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்  88:3,4

என்ற அல்லாஹ்வின் வார்த்தை உண்மைதான் என்று கூறினார்கள்.

உலகில் முதலாவதாக கொள்கை கெட்டவன் இப்லீஸ்தான்.அவன் அல்லாஹ்வையும்,மறுமையையும்,சுவர்க்கத்தையும்,நரகத்தையும் நம்பிக்கை கொண்டவன்.அவன் கெட்டுப்போனது கொள்கையில் தான்.

الحجر:35]،: (قَالَ رَبِّ فَأَنْظِرْنِي إِلَى يَوْمِ يُبْعَثُونَ)

என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!என்று இப்லீஸ் கூறினான்

இதில் இப்லீஸ் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிக்கை கொண்டிருந்தான் என்று தெளிவாக விளங்குகிறது.
நபி ஸல் அவர்கள் தங்களின் ஸஹாபாக்களின் சிந்தனையை தீய கொள்கையைவிட்டும் பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
அன்றைக்கு யூதர்கள் முஸ்லிம்களுடன் கலந்து வாழ்ந்ததால் அவர்களின் வியாபார கொடுக்கல் வாங்கள்களை தவிர்க்க முடியாத  சூழல், அதேசமயம் யூதர்களின் கொள்கை குழப்பத்தை விட்டும் தன் தோழர்களை கவனமாக பாதுகாத்தார்கள்.
இணைவைப்பிலிருந்து வந்த அந்த அரேபிய கூட்டம் மீண்டும் அதற்கு திரும்பிவிடாமல் பாதுகாத்ததில் தான் அண்ணலாரின் மகத்தான வெற்றி அமைந்திருக்கிறது.
அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று பழைய தவ்ராத் பிரதியை படிக்க கூடாது.சில காலம் கப்ர் ஜியாரத் தடுக்கப்பட்டிருந்தது.
   
لما جلس عمر رضي الله -تعالى- عنه إلى رجل من اليهود، وكان اليهود يخالطون المسلمين، وربما شاركوهم في تجارتهم وجاوروهم في منازلهم ومشوا معهم في أسواقهم، فلما جلس عمر إلى ذلك اليهودي قال ذلك اليهودي شيئاً من التوراة إلى عمر وإذا فيها حكم وأمثال وبلاغة وآداب، فأعجب عمر بهذا الكلام..
فلما وضعه بين يدي النبي -عليه الصلاة والسلام- وقرأه عليه غضب النبي -صلى الله عليه وسلم.
قال -عليه الصلاة والسلام- له، وقد غضب: "أمتهوكون فيها يا ابن الخطاب؟"، أنت عندك شك في الشريعة التي جئت بها فذهبت تبحث في كتب القوم عن شريعة أخرى أو عن مكمل لها؟ "أمتهوكون فيها؟"، هل تشكون فيها يا ابن الخطاب؟ "والله لقد جئتكم بها بيضاء نقية!"، والله إنها بيضاء ليس فيها شك، وليس فيها ضلال، لم تعبث بها يد عالِمٌ، ولم تغير فيها يدُ مُفْسِد، قال: "لقد جئتكم بها بيضاء نقية!"، ثم أخذها النبي -صلى الله عليه وسلم- ومحاها بيده، ثم قال: "يا ابن الخطاب، والله لو كان موسى حيا ما وسعه إلا أن يتبعني".
ஒரு யூதரிடமிருந்து தவ்ராத் பிரதியை பெற்றுக்கொண்ட உமர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களின் சபையில் வைத்து படித்தபோது நபி ஸல் அவர்கள் கடுமையாக கோபம் கொண்டார்கள்.
கத்தாபின் மகனே! உங்களுக்கு வழங்கப்பட்ட ஷரீஅத்தில் சந்தேகம் கொள்கிறீரா?என கேட்டார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உங்களுக்கு தெளிவான தீனை கொண்டு வந்துள்ளேன்.ஒருவேளை நபி மூஸா அலை அவர்கள் உயிருடன் இருந்தாலும் என் தீனையே பின்பற்றுவார்

எனவே ஒரு முஸ்லிம் தன் ஈமானை பாதுகாக்க இஸ்லாத்தின் கொள்கை களை அடிப்படையாக பாதுகாப்பது அவசியமாகும்.அதனால் தான் இஸ்லாமிய அறிஞர்கள்,கொள்கைகள் பற்றி சரியான அறிவின்றி பேசவோ, விவாதம் செய்யவோ, அதைபற்றிய கட்டுரைகளை படிக்கவோ கூடாது என்று கூறுகிறார்கள்.
இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

اعْلَمْ أنَّ الفِقْهَ في الدّينِ أفضَلُ مِنَ الفِقْهِ في الأحْكام

மார்க்கத்தின் கொள்கைகளை தெரிந்துகொள்வது இஸ்லாத்தின் சட்டங்களை தெரிந்துகொள்வதைவிட முக்கியமானது.
தீர்க்கமான அறிவு பெற்றவர்கள் கூட

وَالرَّاسِخُونَ فىِ الْعِلْمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِ كلُ‏ٌّ مِّنْ عِندِ رَبِّنَا

கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். 3:7 என குர்ஆன் கூறுகிறது.


أقبل رجل إلى الإمام مالك رحمه الله تعالى، وقال له: يا إمام (الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَى) [طه: 6]، كيف استوى؟ قالوا: فتغير الإمام مالك حتى علته الرحباء يعني أخذه شعور بالهيبة والخوف والرعب من السؤال وعظمته حتى تصبب منه العرق، تغير الإمام ثم التفت إلى الرجل وقال ويحك أتدري ما تقول ؟ أنت تسأل عن أمر عظيم، الاستواء معلوم والكيف مجهول .. نحن نعلم أن الله استوى على عرشه جل وعلا لكن طريقة الاستواء لم يخبرنا بها جل وعلا فلا نتكلم بها بغير علم فإنها تختص بأمر يخص العظيم جل وعلا
قال: "الاستواء معلوم، والكيف مجهول، والسؤال عنه بدعة، والإيمان به واجب"، ثم أمر بإخراج الرجل بين يديه .
 الأسماء والصفات للبيهقي (ج2 ص305-306)،


இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து,இமாம் அவர்களே!  அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.என்று அல்லாஹ் கூறுகிறான் அவன் அர்ஷில் எப்படி அமர்ந்திருக்கிறான்?என்று கேட்டார்.அப்போது அந்த கேள்வியின் பயத்தால் இமாம் அவர்களுக்கு தன்னிலைமாறி வியர்க்க ஆரம்பித்தது.

பின்னர் அந்த மனிதர் பக்கம் திரும்பி, நீ எதைப்பற்றி கேள்வி கேட்கிறாய் என்று தெரிகிறதா?மிகப்பெரிய விஷயம் பற்றி கேட்கிறாய்.
   அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்தான் என்று தெரியும் ஆனால் எப்படி அமர்ந்திருக்கிறான் என்று தெரியாது.ஏனெனில் அதைப்பற்றி அவன் கூறவில்லை.அவன் கூறாத விஷயம் பற்றி நாம் பேசமாட்டோம்.

ஆகவே இதைப்பற்றிய நம்முடைய கொள்கை இது தான்:
அவன் அர்ஷில் அமர்ந்தான் என்பது தெரியும்.
எப்படி அமர்ந்தான் என்று தெரியாது.அதைப்பற்றி கேள்வி கேட்பது பித்அத்.அதை ஈமான் கொள்வது கட்டாயக்கடமையாகும்.


لما ترجم الذهبي لعمرو بن عبيد في كتابه سير أعلام النبلاءكان عمرو بن عبيد مع ضلاله وكثرة الشبهات في قلبه إلا أنه كان عابدا حتى إنه مرة التقى بالخليفة فقال له الخليفة وهم في الحرم قال: هل لك إلي حاجة؟ فقال له عمرو: هذا مقام لا يسأل فيه إلا الله. وتركه وذهب، مع أنه ضال في عقيدته ينكر أن الله في السماء، أن الله مستو على العرش، ينكر أن الله يتكلم وأنه سميع بصير، يسجد ويقول: سبحان ربي الأسفل!
لما ترجم له الذهبي قال: عمرو بن عبيد الزاهد العابد الورع الزنديق الفاجر، فكان زاهد في الدنيا، ورعا عن المحرمات، كان متعبداً، لكن لما أكثر السماع لأهل البدع ومجالستهم وأكثر الاستماع والنظر إلى شبهاتهم خلصت إلى قلبه حتى ضل ضلالا عظيما.ا.


இமாம் சஹபி (ரஹ்) அவர்கள் தங்களின் சியரு அஃலாமிந்நுபலா என்ற நூலில், அம்ர் இப்னு உபைத் என்பவர்  பற்றி விமர்சனம் செய்கிற
போது, அவர் உலக மோகம் இல்லாதவர்,மிகவும் பேனுதலுள்ளவர்,மிகச்சிறந்த வணக்கசாலி.
.ஒரு தடவை ஹறம் ஷரீபில் வைத்து அக்காலத்து கலீபா அவர்கள் அம்ரை சந்தித்து,உங்களுக்கு என்ன தேவை சொல்லுங்கள் நான் நிறைவேற்றுகிறேன் என்றார்.அப்போது அம்ர் அவர்கள், இது அல்லாஹ்விடம் கேட்கும் இடம்.வேறு யாரிடமும் நான் தேவையாகமாட்டேன் என்று பதில் கூறினார்கள்.
அந்தளவுக்கு பேனுதளுல்லவர் இறுதியில் கொள்கை கெட்டுப்போய் அல்லாஹ் வானத்தில் இல்லை,அவன் அர்ஷிலும் இல்லை,பூமியில் தான் இருக்கிறான்,அவன் பேசுவதில்லை,கேட்பதில்லை,   பார்ப்பதில்லை என்று உளற ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலைக்கு அவர் சென்றதற்கு காரணம் அகீதாக்கள் பற்றி அதிகம் விவாதம் செய்ததும்,அதுபோன்ற சபைகளில் பங்கெடுத்ததும்,வஹ்ஹாபிகளின் நட்புமே அவரின் வழிகேட்டிற்கு காரணம் என்று இமாம் சஹபி குறிப்பிடுகிறார்.

இஸ்லாம் அறிவுக்கு சுதந்திரம் கொடுக்கிறது,ஆனால் அந்த சுதந்திரத்திற்கு ஒரு எல்லை உண்டு.
எந்த இடத்தில் அறிவு தடுமாறுமோ  அந்த இடத்தில் ஈமான் முன்னிலைப்படுத்தப்படும்.

இதுநாள்வரை முஸ்லீம்களுக்கிடையில் சட்டஙக்குழப்பங்கள் செய்துவந்த வஹ்ஹாபிகள் கொள்கை குழப்பங்களில் இறங்கியுள்ளனர்.
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்றும்,குர்ஆனில் பிழை உண்டு என்றும் கூற ஆரம்பித்துள்ளனர்.

தமிழகத்தை பொருத்தவரையில் ஒற்றுமையுடனும்,கொள்கைப்பிடிப்புடனும் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் மத்தியில் தூய தவ்ஹீத் எனும் போர்வையில் போலி தவ்ஹீத் தோன்றியது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் குமரிமாவட்டம் கோட்டாரிலிருந்து அந்த வெசச்செடி வேர்பிடித்து வளரத்துவங்கியது.   சூரிய உதயத்திற்கு பிரபலமான அந்த குமரி மாவட்டத்தில் அன்று சூரியன் உதயமானபோது ஷைத்தான் தன் மூன்றாவது கொம்பையும் வெளியே நீட்டி விட்டான்.
இஸ்லாமிய சமூகத்தில் மண்டிக்கிடக்கிற அனாச்சாரங்களையும்,மூடநம்பிக்  கைகளையும் ஒழித்துக்கட்ட வந்தவர்களாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டவர்கள்,காலப்போக்கில் தங்களின் உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தினர்.
பன்னெடுங்காலமாக பின்பற்றி வாழ்ந்துவந்த சுன்னத் வல்ஜமாஅத்தின் வழி முறைகளைகளை விட்டும் முஸ்லிம் இளைஞர்களை திசைதிருப்பும் முயற்சி  யில் ஈடுபட்டனர்.தங்களின் குறுமதிக்கு எட்டிய ஊனமான கருத்துக்களையும் உண்மைக்குபுறம்பான செய்திகளையும் மார்க்கம் என்ற பெயரால் உளர ஆரம்பித்தனர்.
தமிழகத்தில் தாங்கள் தான் தவ்ஹீதை குத்தைகைக்கு எடுத்தவர்கள் போல தோற்றத்தை உருவாக்கிய அவர்கள்,அமைதியாக,ஒற்றுமையாக வாழ்ந்த இஸ்லாமிய குடும்பங்களில் குழப்பத்தையும்,பிளவையும் ஏற்படுத்தினர்.
பெற்றோர்களையும்,சமுதாய பெரியவர்களையும் தன் மார்க்கத்தின் எதிரியாக  வும்,இணைவைப்பாளராகவும் சித்தரித்தனர்.அவர்களின் மூலைச்சலவைக்கு ஆட்படுத்தப்பட்ட துடிப்புள்ள இளைஞர்கள் பெற்றோர்களிடமும்,பெரியவர்களிடமும் அவமரியாதையாக பேச ஆரம்பித்தனர்,செயல்படத்துவங்கினர்.
அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் பயப்படாதே என்ற கருத்தின் ஊடே வேறு யாருக்கும் மரியாதை செய்யாதே  என்ற விஷக்கருத்தை இளையசமுதாயத்தின் உள்ளத்தில் விதைத்தனர்.

கொலை செய்வதை விடவும் பெரும்பாவமான குழப்பம் செய்வதை தங்களின் ஆயுதமாக கையிலெடுத்தனர்.அன்பு தவழவேண்டிய குடும்பங்கள் குழப்பங்களி  ன் கூடாரங்களாயின.அமைதி தவழவேண்டிய பள்ளிவாசல்கள் போர்க்களங்கள் போல் காட்சி தந்தன.

அல்லாஹ்வின் நம்பிக்கையில் சந்தேகங்களை உண்டாக்கினர்.                        அல்லாஹ்வின் மகத்துவத்தை குறைத்துப்பேசினர்.                          
கண்மனி நாயகத்தின் கண்ணியத்தை குழி தோண்டி புதைத்தனர்.
                                     அல்குர்ஆனின் நம்பகத்தன்மையை குறைத்து,அதில் சந்தேகத்தை கிளப்பினர்.       நபி மொழிகளை முரண்பாடுகளாக்கினர்.    ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் அவர்களின் கொள்கைக்கு ஒத்துவராதபோது பலஹீனமாக்கினர்.தேவைப்பட்டால் மறுக்கவும் செய்தனர். அல் குர்ஆனையும்,நபிமொழியையும் இந்த உம்மத்தின் கைகளுக்கு பாதுகாப்பாக கொண்டுவந்துசேர்த்த ஸஹாபாக்களை இழிவாகவும் கேவலமாகவும் பேசி வருகின்றனர்.சுருங்கச்சொல்லவேண்டுமானால்-  தங்களின் மனோ இச்சைக்கு இணங்க மார்க்கத்தை வளைத்தனர்.
தன் மனோ இச்சையை இறைவனாக ஆக்கிக்கொண்டவனை நபியே நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?என்ற அல்லாஹ்வின் அர்த்தமுள்ள கேள்விக்கு இவர்கள் அத்துனை பொருத்தமானவர்கள்..(அல்குர்ஆன்:45:23)

நாளுக்கொரு சட்டமும்,நேரத்திற்கொரு நிலைப்பாட்டையும் கொண்ட அவர்கள் முரண்பாடுகளின் மொத்த உருவமாக காட்சி தருகிறார்கள்.
மத்ஹபுகளையும்,இமாம்களையும் புறக்கணித்து தான்தோன்றித்தனமாக சட்டம் இயற்றியதின் விளைவாக முன்னுக்குப்பின் முரண்பாடுகளான சட்டங்களை கூறிவந்தனர்.
இமாம்களையும்,இறையச்சத்துடன் அவர்கள் இயற்றிய பிக்ஹ் நூட்களையும் கொச்சைப்படுத்தி பேசியும் எழுதியும் வந்தனர்.
இனி அடுத்தகட்டமாக புனிதமான ஸஹாபாக்களை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்தார்கள். நபிமார்களுக்குப்பின்னர் இந்த உலகில் வாழ்ந்த மனிதர்களில் மிகச்சிறந்த மனிதர்களான ஸஹாபாக்கள் பற்றி அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இஸ்லாமிய எதிகளையும் மிஞ்சி நிற்கிறது.
அல்லாஹுத்தஆலா இந்த கொள்கை கெட்ட கூட்ட்த்தை விட்டும் நம் சமுதாய இளவல்களை பாதுகாப்பானாக!