Thursday 20 February 2014

பிரச்சனைகள் தீர இஸ்லாம் கூறும் வழி.





மனிதன் தன் வாழ்க்கையில் கவலை நோய் வறுமை கடன் சுமை குழந்தை இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றான். இதற்கான தீர்வை பல வழிகளிலும் தேடுகின்றான். ஆனால் அவனுக்கு இன்றுவரை கிடைக்கவில்லை. காரணம் என்னவெனில் அதற்கான தீர்வை அல்லாஹ் எதில் வைத்திருக்கின்றானோ அதில் மனிதன் தேடவில்லை.

ஒரு சமயம்   முல்லா நஸ்ருத்தீன் தன் வீட்டுக்கு வெளியே இரவு நேரத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தார் மக்கள் அவரிடம் எதை தேடுகின்றீர் என்று கேட்ட பொழுது காணாமல் போன காசை தேடுகின்றேன் என்றார் மக்கள் அவரிடம் காசு எங்கே தொலைந்தது என்று கேட்டபொழுது அவர் சொன்னார் வீட்டின் உள்ளே காணாமல் போனது ஆனால் உள்ளே வெளிச்சமில்லை எனவே வெளியே தேடுகின்றேன் என்றார் தொலைந்த இடத்தில் தேடாததால் முல்லாவுக்கு காசு கிடைக்காததைப் போன்று மனிதன் அல்லாஹ் சொன்ன இடத்தில் நிவாரணத்தை தேடாததால் அவனுக்கு நிம்மதி கிடைக்கவில்லை..

அல்லாஹ் சொல்கின்றான்

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللَّهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوب


மக்களே அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வின் திக்ரைக் கொண்டுதான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.

அல்குர்ஆன் 13:28

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا

முஃமின்களுக்கு அருளாகவும் பரிகாரமாகவும் உள்ளவைகளையே இந்த திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம்.

அல்குர்ஆன். 17 : 82

துன்பம் நீங்க தூய வழிகள் என்னவெனில் திக்ரு. குர்ஆன் ஓதுவது. நபியின் மீது சலவாத் ஓதுதல். மற்றும் ஸாலிஹான அமல்கள் செய்வதாகும்.


சகல தீங்குகளும் நீங்க சிறந்த அமல்.

وعن عبد الله بن خبيب قال : خرجنا في ليلة مطر وظلمة شديدة نطلب رسول الله صلى الله عليه وسلم فأدركناه فقال : " قل " . قلت ما أقول ؟ قال : " ( قل هو الله أحد )
 والمعوذتين حين تصبح وحين تمسي ثلاث مرات تكفيك من كل شيء " . رواه الترمذي وأبو داود والنسائي

அப்துல்லா இப்னு குபைப்(ரலி) அவர்கள் சொல்கின்றார்கள் நாங்கள் நபியுடன் பயணத்தில் சென்றோம் அது இரவு நேரம் கடுமையான இருளும் சூழ்ந்து கொண்டது மழையும் பொழிந்தது எனவே யார் யார் எங்கே? நிற்கின்றார்கள் என்பதை சற்று நேரம் தெரிய முடியாத நிலை எற்பட்டது.

எனவே நாங்கள்  நபியை சற்று நேர தேடுதலுக்கு பின் பெற்றுக் கொண்டோம். அப்பொழுது நபி அவர்கள் எங்களிடம் சொன்னார்கள் எனக்கு எந்த தீங்கும் நேராது ஏன் தெரியுமா நான் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் சூரா இக்லாஸ். ஃபலக். நாஸ் . இந்த மூன்றையும் ஒவ்வொன்றையும் மூன்று தடவை ஓதி வருகின்றேன் நீங்களும்  இவ்வாறு ஓதி வாருங்கள் அல்லாஹ் நாள் முழுவதும் எல்லா தீங்குகளை விட்டும் அல்லாஹ் உங்களைப் பாது காப்பான்.

நூல். திர்மிதி. மிஸ்காத்

வறுமை நீங்க ஓத வேண்டியவை

وعن عطاء بن أبي رباح قال : بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال : " من قرأ ( يس )
 في صدر النهار قضيت حوائجه " رواه الدارمي

யார் பகலில் யாஸீன் சூராவை ஓதுகிறாரோ அவருடைய தேவைகள் நிறைவேற்றப்படும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல். மிஸ்காத். தாரமி


أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال تولت عني الدنيا وقلت ذات يدي فقال رسول الله صلى الله عليه وسلم فأين أنت من صلاة الملائكة وتسبيح الخلائق وبها يرزقون ؟ قال فقلت وماذا يا رسول الله قال : قل سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله مائة مرة ما بين طلوع الفجر إلى أن تصلي الصبح تأتيك الدنيا راغمة صاغرة ويخلق الله عز وجل من كل كلمة ملكا يسبح الله تعالى إلى يوم القيامة لك ثوابه

ஒரு தோழர் நபி இடம் வந்து சொன்னார். நாயகமே உலகம் என்னை விட்டும் விரண்டு ஓடுகிறது என்னை புறக்கனித்து செல்கிறதுஎன் கஷ்டம் நீங்கி என் குடும்பத்தை காப்பாற்ற வழி சொல்லுங்கள் என்று கேட்ட பொழுது நபி அவரிடம் கேட்டார்கள் மலக்குமார்களின் தொழுகை விட்டு. இன்னும் எதைக் கொண்டு படைப்புகளுக்கு ரிஸ்க் வழங்கப்படுகிறதோ அந்த தஸ்பீஹை விட்டு நீ எங்கே சென்றாய் என்று கேட்டு விட்டு சொன்னார்கள். தினமும் ஃபஜ்ரு உதயமாகி பஜ்ர் தொழுகை தொழுவதற்குள்

سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله

என்ற திக்ரை 100 முறை தினமும் ஓதி வந்தால் உலகம்
 உங்களிடம் சரண்டர் அடைந்து விடும் இதைக் கேட்டு அந்த மனிதர் சென்று விட்டார் அதை ஓதினார் சிலநாட்கள் கடந்த பின் நபி இடம் வந்து சொன்னார் நபியே நான் இந்த அமலை செய்த பிறகு உலகத்தின் செல்வங்கள் என்னை முன்னோக்கி வந்து விட்டது அது மிக நிறப்பமாகவும் இருந்தது எந்த அளவு என்றால் அந்த செல்வங்களை எங்கே வைப்பது என்றே எனக்கு தெரியவில்லை அந்த அளவுக்கு தந்து விட்டான்

நூல். கஸாயிசுல் குப்ரா. இஹ்யா.

எதிரிகளின் சூழ்ச்சிகள் நம்மை தாக்காமல் இருக்கவும் இறைவனின் பாதுகாப்பு கிடைக்கவும் ஓத வேண்டியது

روي أن زيد بن حارثة خرج مع منافق من مكة إلى الطائف فبلغا خربة فقال المنافق ندخل ههنا ونستريح ، فدخلا ونام زيد فأوثق المنافق زيداً وأراد قتله ، فقال زيد : لم تقتلني؟ قال : لأن محمداً يحبك وأنا أبغضه ، فقال زيد : يا رحمن أغثني ، فسمع المنافق صوتاً يقول : ويحك لا تقتله ، فخرج من الخربة ونظر فلم يرَ أحداً ، فرجع وأراد قتله فسمع صائحاً أقرب من الأول يقول : لا تقتله ، فنظر فلم يجد أحداً ، فرجع الثالثة وأراد قتله فسمع صوتاً قريباً يقول : لا تقتله ، فخرج فرأى فارساً معه رمح فضربه الفارس ضربة فقتله ، ودخل الخربة وحل وثاق زيد ، وقال له : أما تعرفني؟ أنا جبريل حين دعوت كنت في السماء السابعة فقال الله عزّ وجلّ : ( أدرك عبدي ) ، وفي الثانية كنت في السماء الدنيا ، وفي الثالثة بلغت إلى المنافق

நபி தோழர் ஜைது பின் ஹாரிஸா(ரலி) அவர்கள் ஒரு மனிதனுடன் பயணம் சென்றார்கள் அவன் நயவஞ்சகனாக இருந்தான் பயணத்தின் இடையில் பாலடைந்த கட்டிடத்தில் ஜைது(ரலி) தூங்கினார்கள் அப்பொழுது அந்த முனாபிக் அவர்களை கயிற்றால் கட்டினான் கண் விழித்த ஜைது(ரலி) அவனிடம் ஏன் இவ்வாறு செய்கின்றாய் என்று கேட்ட பொழுது அவன் சொன்னான் நீ முஹம்மதை(ஸல்) பிரியப்படக் கூடியவனாக இருக்கின்றாய் எனவே நான் உன்னை கொலை செய்யப் போகின்றேன் என்றான் அத்துடன் அவரை கொலை செய்ய முயன்ற போது அவர்கள் யாரஹ்மான் என்றோ அல்லது யாஅர்ஹமர் ராஹிமீன் என்றோ சொன்னார்கள்

 ஒரு சப்தத்தை கேட்டான் வெளியே வந்து பார்த்தான் அங்கு யாரும் இல்லை எனவே அவரைக் கொல்ல இரண்டாவது முயற்சி மேற்கொண்டான் அப்பொழுது அதே குரல் முன்பை விட சற்று வேகமாக கேட்டது மீண்டும் வெளியே வந்து பார்த்தான் அங்கு யாரும் இல்லை மீண்டும் அவரை கொல்ல முயன்றான் ஜைது(ரலி) அவர்கள் அதே வார்த்தையைக் கொண்டு மீண்டும் அல்லாஹ்வை அழைத்தார்கள் அப்பொழுது அவரை கொல்லாதே என்று சப்தம் கேட்டது வெளியே வந்து பார்த்தான் அங்கே ஈட்டியுடன் ஒருவர் நின்றார் அவர் இந்த முனாபிக்கை கொலை செய்து விட்டு ஜைது அவர்களை காப்பாற்றினார் அவர் சொன்னார் நான் வானவர் ஜிப்ரீல் என்றும் உம்மை காப்பாற்ற அல்லாஹ் தன்னை அனுப்பிவைத்ததாகவும் சொன்னார்..

நூல். தப்ஸீர் ராஸி. சூரத்துல் பாத்திஹா விளக்கத்தில்.

உடல் வலி நீங்க சுகம் பெற ஓத வேண்டியது.

وعن عثمان بن أبي العاص أنه شكا إلى رسول الله صلى الله عليه وسلم وجعا يجده في جسده فقال له رسول الله صلى الله عليه وسلم : " ضع يدك على الذي يألم من جسدك وقل : بسم الله ثلاثا وقل سبع مرات : أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر " . قال : ففعلت فأذهب الله ما كان بي . رواه مسلم

ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் உடல் வழியை நான் முறையிட்டேன் அப்போது நபி(ஸல்) அவர்கள்
வலிக்கும் இடத்தில் கை வைத்து பிஸ்மில்லாஹ் என்று 3 தடவை கூறி

 أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر

என்று 7 தடவை ஓத வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தார்கள் நான் நபி சொன்ன இந்த அமலை செய்தேன் எனக்கு இருந்த உடல் வலியை அல்லாஹ் முற்றிலும் போக்கி குணமக்கினான்.. என்று உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

 நூல். மிஷ்காத்

சோதனைகளுக்கு காரணமான பாவங்கள் நம்மை விட்டும் நீங்கிவிட்டால் வாழ்க்கையில் நிம்மதிக்கும் சகலபாக்கியங்களும் கிடைப்பதற்கு அது வழிவகுக்கும்.

وعن أبي سعيد قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من قال حين يأوي إلى فراشه : أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ثلاث مرات غفر الله له ذنوبه وإن كانت مثل زبد البحر أو عدد رمل عالج أو عدد ورق الشجر أو عدد أيام الدنيا " . رواه الترمذي

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். எந்த மனிதன் இரவில் படுக்கையின் பக்கம் ஒதுங்கும் நேரத்தில்

   أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

இந்த திக்ரை 3 தடவை கூறுகின்றானோ அவனுடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். அந்த பாவங்கள் கடல் நுரை அளவுக்கோ அல்லது ஆலிஜ் என்ற மணல் நிறைந்த பூமியின் மணலின் எண்ணிக்கை அளவுக்கோ அல்லது உலகின் மொத்த நாட்களின் எண்ணிக்கை அளவுக்கு இருந்தாலும் அல்லாஹ் நிச்சயமாக மன்னிக்கின்றான் .

நூல்.மிஸ்காத். பக்கம். 211

மறுமையின் வெற்றியான சொர்க்கத்தை பெற சுலபமான வழி.

وأخرج الحكيم الترمذي عن جابر بن عبد الله رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « قال لي جبريل عليه السلام : يا محمد إن الله يخاطبني يوم القيامة ، فيقول : يا جبريل ما لي أرى فلان ابن فلان في صفوف أهل النار؟ فأقول يا رب إنا لم نجد له حسنة يعود عليه خيرها اليوم . فيقول الله : إني سمعته في دار الدنيا يقول : يا حنان يا منان ، فأته فاسأله فيقول وهل من حنان ومنان غيري؟ فآخذ بيده من صفوف أهل النار ، فادخله في صفوف أهل الجنة

ஒரு நாள் வானவர் ஜிப்ரீல்(அலை) நபியிடம் வருகை தந்து நாளை மறுமையில் நடக்கயிருக்கும் ஒரு சம்பவத்தை இவ்வாறு கூறினார்கள்.

நபியே மறுமையில் நரகவாசிகளின் அணியில் நிற்கும் ஒரு மனிதனை சுட்டிகாட்டி அல்லாஹ் என்னிடம் ஜிப்ரீலே இந்த மனிதனை நான் இங்கு பார்க்க என்ன காரணம் . அப்போது நான் சொல்வேன் இந்த நாளில் இவன் பக்கம் திரும்பி காப்பாற்றக்கூடிய எந்த நன்மையான விஷயத்தையும் நான் காணவில்லைஎன்று.
அப்போது அல்லாஹ் சொன்னான். யா ஹன்னான் யா மன்னான் என்ற திக்ரை சொன்னதை நான் கேட்டிருக்கின்றேன் அவன் சொர்க்கம் போக அந்த ஒன்று போதும் எனவே சொர்க்கம் அழைத்துச் செல்லுங்கள் என்பான் அந்த மனிதனின் கரம் பற்றிக் கொண்டு சொர்க்கத்தில் கொண்டு போய் நான் சேர்ப்பேன் என்று சொன்னார்கள்..

நூல். திர்மிதி

வானவர்கள் நம்மை பற்றி பேச..


وروى : « أنه كان جبريل عليه السلام مع الرسول عليه الصلاة والسلام إذا أقبل أبو ذر الغفاري ، فقال جبريل : هذا أبو ذر قد أقبل ، فقال عليه الصلاة والسلام : أو تعرفونه؟ قال : هو أشهر عندنا منه عندكم ، فقال عليه الصلاة والسلام : بماذا نال هذه الفضيلة؟ قال لصغره في نفسه وكثرة قراءته قل هو الله أحد

ஒரு முறை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களோடு இருக்கும்போது அபூதருல் கிபாரி(ரலி) அவர்கள் முன்னோக்கி வருவார்கள்.அப்போது  ஜிப்ரீல்(அலை) அவர்கள் வருவது அபூதர் (ரலி) அவர்களா என்று நபியிடம் கேட்பார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவரை உங்களுக்கு தெரியுமா என்று கேட்பார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் உங்களிடத்தில் எப்படி அவர் பிரபல்யமோ அது போன்று எங்களிடமும் அவர் பிரபல்யமானவர்.(அதாவது அவரை பற்றி அதிகமாக எங்களிடம் பேசிகொள்வோம்) என்றார்கள். இந்த பாக்கியம் அபூதர் (ரலி) அவர்களுக்கு எதனால் கிடைத்தது என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் அதிகமாக قل هو الله أحد  என்ற சூராவை அதிகமாக ஓதுவார் அதனால் என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் பதில் கூறினார்கள்.

நூல். தப்ஸீர் ராஸி .சிறப்பு சூரத்துல் இக்லாஸ்.


நிம்மதியின் எதிரியான ஷைத்தானை விரட்டும் அபூர்வ துஆ

وكان محمد بن واسع يقول كل يوم بعد صلاة الصبح: اللهم إنك سلطت علينا عدواً بصيراً بعيوننا يرانا هو وقبيله من حيث لا نراهم اللهم فآيسه منا كما آيسته من رحمتك وقنطه منا كما قنطته من عفوك وباعد بيننا وبينه كما باعدت بينه وبين رحمتك إنك على كل شيء قدير. قال: فتمثل له إبليس يوماً في طريق المسجد فقال له: يا ابن واسع هل تعرفني؟ قال: ومن أنت؟ قال: أنا إبليس، فقال: وما تريد؟ قال: أريد أن لا تعلم أحد هذه الاستعاذة ولا أتعرض لك، قال: والله لا أمنعها ممن أراد فاصنع ما شئت

இறை நேசரான முஹம்மது பின் வாஸிஹ் (ரஹ்) அவர்கள் தினமும் சுபுஹ் தொழுகைக்கு பின்
 اللهم إنك سلطت علينا عدواً بصيراً بعيوننا يرانا هو وقبيله من حيث لا نراهم اللهم فآيسه منا كما آيسته من رحمتك وقنطه منا كما قنطته من عفوك وباعد بيننا وبينه كما باعدت بينه وبين رحمتك إنك على كل شيء قدير

என்ற துஆவை ஓதுபவர்களாக இருந்தார்கள்.

 பொருள். யா அல்லாஹ் நீ எங்களின் குறைகளை தெளிவாக பார்க்கக் கூடிய விரோதியை எங்களின் மீது சாட்டி இருக்கிறாய் அவனும் அவனின் கூட்டத்தாரும் எங்களைப் பார்க்கின்றார்கள் நாங்கள் அவனைப் பார்க்க முடிவதில்லை எனவே நீஉன்னுடைய ரஹ்மத்தை விட்டும் நிராசையாக்கியதைப் போன்று என்னை விட்டும் அவனை நிராசையாக்கி விடு உன்னுடைய மன்னிப்பை விட்டும் நிராசையாக்கியதைப் போன்று எங்களை விட்டும் அவனை நிராசையாக்கி விடு நீ உன்னுடைய ரஹ்மத்தை விட்டும் அவனை தூரமாக்கியதைப் போன்று எங்களை விட்டும் அவனை தூரமாக்கி விடு நிச்சயமாக நீ எல்லா வஸ்துக்களின் மீதும் சக்தி பெற்றவனாக இருக்கின்றாய்..

ஷைத்தான் ஒரு நாள் அவர்கள் முன் தோன்றி என்னை தெரிகிறதா என்று கேட்டான் அதற்கு அவர் எனக்கு தெரியவில்லை நீ யார் என்றார்கள். அவன் நான் இப்லீஸ் என்றான். உனது நோக்கமென்ன என்று கேட்டார்கள். அவன் சொன்னான் நீங்கள் என்னை விட்டும் பாதுகாப்புத்தேடி ஓதும் இந்த துஆவை யாருக்கும் கற்றுக்கொடுக்கவேண்டாம் நான் உங்கள் வழியில் குறிக்கிட மாட்டேன் என்றான். அவர்கள் சொன்னார்கள் யாரெல்லாம் என்னிடம் இந்த துஆவை தெரிந்து கொள்ள நாடி வருகிறார்களோ  நிச்சயமாக நான் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பேன் உன்னால் முடிந்ததை செய்துகொள். நான் உன் சொல்லை கேட்கமுடியாது என்றார்கள்.

நூல். இஹ்யா. பாகம் .3

மேற் சொல்லப்பட்ட சூராக்கள் மற்றும் திக்ருகளை கொண்டும் நாம் அமல் செய்து நிம்மதியை மகிழ்ச்சியை ஈருலகிலும் பெற அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்.
                       









5 comments: