Thursday 25 September 2014

சூனியமும் அல்லாஹ்வின் நாட்டமும்.


சூனியமும் அல்லாஹ்வின் நாட்டமும்.
  

சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும். ஆனால் அல்லாஹ்வின் நாட்டமும், அனுமதியும் இருந்தால் தான் சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது'

وَاتَّبَعُوا مَا تَتْلُو الشَّيَاطِينُ عَلَى مُلْكِ سُلَيْمَانَ وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنْزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآَخِرَةِ مِنْ خَلَاقٍ وَلَبِئْسَ مَا شَرَوْا بِهِ أَنْفُسَهُمْ لَوْ كَانُوا يَعْلَمُونَ

சுலைமான் நபியின் ஆட்சி காலத்தில் ஷைத்தான்கள் ஓதியதை அவர்கள் பின்பற்றினார்கள். ஆனால் சுலைமான் நபி (ஒரு போதும்) இறை நிராகரிப்பாளராக ஆகவில்லை. என்றாலும்  ஷைத்தான்கள் (தான்) இறை நிராகரிப்பாளராக ஆனார்கள். (ஏனெனில்) அவர்கள் மக்களுக்கு சூனியத்தை கற்றுக் கொடுத்தார்கள். மேலும் பாபில் என்ற ஊரில் ஹாரூத் மாரூத் என்ற
இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்ட சூனியத்தையும் கற்றுக் கொடுத்தார்கள். 

ஆனால் அவ்விரு (வான) வரும் நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் ( இதைக் கற்று ) நீங்கள்  இறை நிராகரிக்கும் காபிர்களாக ஆகிவிடாதீர்கள் என்று (எச்சரித்து ) சொல்லாமல் யாருக்கும் சூனியத்தைக்  கற்றுக் கொடுக்கவில்லை ஆயினும்  கணவன், மனைவிக்கிடையே பிரிவை உண்டாக்குமே அத்தகைய (சூனித்)தை அவ்விரு (வான) வரிடமிருந்து அவர்கள் கற்றுக் கொண்டார்கள் எனினும் அல்லாஹ்வின் அனுமதின்றி அவர்கள் யாருக்கும் இதன் மூலம் தீங்கு இழைக்க  முடியாது.  மேலும் அவர்கள் தங்களுக்கு தீங்கிளைப்பதையும் தங்களுக்கு பலனளிக்காததையும்  கற்றுக் கொண்டார்கள் இதை சூனியத்தை) விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை என்பதை நிச்சயமாக அவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள் எந்த ஒன்றுக்குப் பகரமாக தங்களின் ஆத்மாக்களை விற்றார்களோ அது கெட்டதாகும் (இதை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா

அல்குர் ஆன் : 2/102 

أَخْبَرَنَا عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اصْطَبَحَ كُلَّ يَوْمٍ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ سُمٌّ وَلَا سِحْرٌ ذَلِكَ الْيَوْمَ إِلَى اللَّيْلِ وَقَالَ غَيْرُهُ سَبْعَ تَمَرَاتٍ


யார் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் (வெறும் வயிற்றில் ) அஜ்வா பேரித்தம் பழங்களை சாப்பிடுகிறார்களோ அன்றைய தினத்தில் இரவு வரை விஷம் மற்றும் சூனியம் அவரை பாதிக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 

அறிவிப்பாளர் : ஸஅது (ரலி) நூல் : புகாரி :5768


قَالَ سَمِعْتُ عَامِرَ بْنَ سَعْدٍ سَمِعْتُ سَعْدًا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ تَصَبَّحَ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ ذَلِكَ الْيَوْمَ سُمٌّ وَلَا سِحْرٌ



யார் அதிகாலையில் ஏழு  அஜ்வா பேரித்தம் பழங்களை சாப்பிடுகிறார்களோ அன்றைய தினத்தில் விஷம் மற்றும் சூனியம் அவரை பாதிக்காது என்று அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்கள் கூறினார்கள் 

அறிவிப்பாளர் : ஸஅது (ரலி) நூல் : புகாரி :5769


சூனியம் செய்வது பெரும் பாவங்களில் கட்டுப்பட்டதாகும்


أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ

அழிக்கக் கூடிய ஏழு பெரும் பாவங்களை தவிர்த்து  கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே அவை என்ன? என்று தோழர்கள் கேட்டார்கள்  அதற்கு  நபி (ஸல்) அவர்கள் இணை கற்பித்தல் சூனியம் செய்தல் நியாயமின்றி எந்த உயிரை கொள்வதை ஹராமாக்கினானோ அத்தகைய உயிரை கொள்வது வட்டி உண்பது அனாதையின் செல்வத்தை உண்பது யுத்த நாளில் புறமுதுகிட்டு ஓடுவது அப்பாவிகளான இறை நம்பிகையுள்ள  கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது என்று கூறினார்கள் 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

 நூல் : புகாரி : 2766


நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது.


عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُحِرَ حَتَّى كَانَ يَرَى أَنَّهُ يَأْتِي النِّسَاءَ وَلَا يَأْتِيهِنَّ قَالَ سُفْيَانُ وَهَذَا أَشَدُّ مَا يَكُونُ مِنْ السِّحْرِ إِذَا كَانَ كَذَا فَقَالَ يَا عَائِشَةُ أَعَلِمْتِ أَنَّ اللَّهَ قَدْ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ أَتَانِي رَجُلَانِ فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالْآخَرُ عِنْدَ رِجْلَيَّ فَقَالَ الَّذِي عِنْدَ رَأْسِي لِلْآخَرِ مَا بَالُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ قَالَ وَمَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ أَعْصَمَ رَجُلٌ مِنْ بَنِي زُرَيْقٍ حَلِيفٌ لِيَهُودَ كَانَ مُنَافِقًا قَالَ وَفِيمَ قَالَ فِي مُشْطٍ وَمُشَاقَةٍ قَالَ وَأَيْنَ قَالَ فِي جُفِّ طَلْعَةٍ ذَكَرٍ تَحْتَ رَاعُوفَةٍ فِي بِئْرِ ذَرْوَانَ قَالَتْ فَأَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبِئْرَ حَتَّى اسْتَخْرَجَهُ فَقَالَ هَذِهِ الْبِئْرُ الَّتِي أُرِيتُهَا وَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ قَالَ فَاسْتُخْرِجَ قَالَتْ فَقُلْتُ أَفَلَا أَيْ تَنَشَّرْتَ فَقَالَ أَمَّا اللَّهُ فَقَدْ شَفَانِي وَأَكْرَهُ أَنْ أُثِيرَ عَلَى أَحَدٍ مِنْ النَّاسِ شَرًّا


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்  அல்லாஹ்வின் தூதர்  (ஸல்) அவர்களுக்கு பனூ சுரைக் குடும்பத்தைச் சார்ந்த ஒருவன் சூனியம் செய்தான் அவனுக்கு லபீத் இப்னு அஃஸம் என்று பெயர் கூறப்படும் எனவே  நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தை செய்யாமல் அதைச் செய்ததாக அவர்களுக்கு எண்ணம் ஏற்படுத்தப்படும் ஒரு நாள் பகலில் அல்லது இரவில் என்னிடம் தங்கி இருந்தார்கள் ஆனால் நபி (ஸல்) அவர்கள் (தனக்கு) ஏற்பட்டிருக்கும் நிலை என்ன ?முழுமையாக குணமடைவதர்காகவும் இறைவனிடம்  துஆ செய்தார்கள் மேலும் துஆ செய்தார்கள் பின்பு நபி (ஸல்) அவர்கள்  ஆயிஷாவே நான் அல்லாஹ்விடத்தில் எது விஷயமாக தெளிவு கிடைக்கும் படி கேட்டுக்கொண்டிருந்தேனோ அது விஷயமாக அல்லாஹ் எனக்கு  தெளிவு கொடுத்துவிட்டான். (என் கனவில்) இரண்டு மனிதர்கள் (மலகுகள்) என்னிடம் வந்தார்கள். அவர்களில் ஒருவர் என் தலைகருகில் அமர்ந்தார்.

 இன்னொருவர் என் கால்களுக்கருகில்  அமர்ந்தார். இந்த மனிதருக்கு (நபி - ஸல் - அவர்களுக்கு) என்ன வேதனை ஏற்பட்டுள்ளது? என்று அவ்விருவரில் ஒருவர் தன் தோழரிடம் கேட்டார். அதற்கு இரண்டாவது நபர் : இவர்கள் சூனியம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறினார். உடனே முதலாமவர் :   இவர்களுக்கு யார் சூனியம் செய்தார்? என்று கேட்டார். அதற்கு இரண்டாமவர் :  லபீத் இப்னு அஃஸம்  என்பவன் சூனியம் செய்துள்ளான்  என்றார். எந்த பொருளில் சூனியம் செய்துள்ளான்  என்று முதலாமவர்  கேட்டார். அதற்கு இரண்டாமவர் : சீப்பிலும், உதிந்த முடியிலும், ஆண் பேரீத்த மரப்பாளையின் உறையிலும் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

 அந்த பொருள் எங்கே இருக்கிறது என்று முதலாமவர் கேட்டார். அதற்கு இரண்டாமவர் : தர்வான் என்ற கிணற்றில் அப்பொருள் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் சில தோழர்களுடன் அந்த கிணற்றிற்கு சென்றார்கள் . பின்பு வந்து, ஆயிஷாவே! அக்கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றை போல் உள்ளது, அல்லது அதன் பேரீத்த மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளை போல உள்ளன என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அப்பொருளை நீங்கள் (மக்களுக்கு முன்னிலையில்) வெளியேற்ற வேண்டாமா? என்று நான் கேட்டேன். 

அதற்கு நபி (ஸல்)  அவர்கள் ; அல்லாஹ் எனக்கு ஆரோக்கியத்தை தந்து விட்டான். மேலும் மக்களிடம் தீங்கை பரப்புவதை நான் வெறுக்கின்றேன் என்று கூறினார்கள். பின்பு அந்த கிணற்றை மூடும்படி உத்தரவிட்டார்கள். எனவே அக்கிணறு மூடப்பட்டது. 

                                                        அறிவிப்பாளர்: ஆயிஷா (ரளி), நூல் : புகாரி 5763


          மேற்படி ஹதீஸில் " நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தை செய்யாமல் அதை செய்ததாக அவர்களுக்கு எண்ணம் ஏற்படுத்தப்படும்" என்று வருகிறது. 
            அது என்ன காரியம் என்பது 5765 ல் பின் வருமாறு விளக்கமாக வருகிறது. 


    "நபி (ஸல்) அவர்கள் தங்களின் மனைவிமார்களிடம் செல்லாமல் அவர்களிடம் சென்றதாக கருதுவார்கள்" என்று 5765 ல் விளக்கமாக வந்துள்ளது.

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ
سَحَرَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ مِنْ الْيَهُودِ فَاشْتَكَى لِذَلِكَ أَيَّامًا فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَقَالَ إِنَّ رَجُلًا مِنْ الْيَهُودِ سَحَرَكَ عَقَدَ لَكَ عُقَدًا فِي بِئْرِ كَذَا وَكَذَا فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَخْرَجُوهَا فَجِيءَ بِهَا فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّمَا نُشِطَ مِنْ عِقَالٍ فَمَا ذَكَرَ ذَلِكَ لِذَلِكَ الْيَهُودِيِّ وَلَا رَآهُ فِي وَجْهِهِ قَطُّ


                 யூத இனத்தை சேர்ந்த ஒருவன் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்தான் . அதனால் பல நாட்கள் நபி (ஸல்) அவர்கள் நோயில் அவதிப்பட்டாகள். எனவே ஜிப்ரில் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து,  யூத இனத்தை சேர்ந்த ஒருவன் உங்களுக்கு சூனியம் வைத்து விட்டான. இன்ன கிணற்றில் இன்ன இன்ன பொருளில் உங்களுக்கு முடிச்சிட்டு வைத்துள்ளான்  என்று கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்கிணற்றிற்கு ) ஆள் அனுப்பினர்கள். அவர்கள் அப்பொருளை வெளியே எடுத்தார்கள். பின்பு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. பின்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள் கயிற்றிலிருந்து அவிழ்கப்பட்டதை போன்று (உற்சாகமாக) ஆகிவிட்டார்கள். அதை அந்த யூதனிடம நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கூட அதை அவன் பார்கவில்லை.

                அறிவிப்பாளர் : சைது இப்னு அர்க்கம் (ரளி) , நூல் : நசாயி 4012



قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (1) مِنْ شَرِّ مَا خَلَقَ (2) وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ (3) وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ (4) وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ (5)

அதிகாலையில் இறைவனிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (நபியே) நீங்கள் கூறுகள் அவன் படைத்தவற்றின் தீங்கை  விட்டும் இன்னும் இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை  விட்டும் பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போது உண்டாகும் தீங்கை விட்டும் (பாது காவல் தேடுகிறேன் என்று கூறுங்கள்) 

அல்குர் ஆன்

 عَنْ أَبِي نَضْرَةَ عَنْ أَبِي سَعِيدٍ
أَنَّ جِبْرِيلَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا مُحَمَّدُ اشْتَكَيْتَ فَقَالَ نَعَمْ قَالَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ


(ஒரு தடவை) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து  முஹம்மது (ஸல்) அவர்களே நீங்கள் நோயில் அவதிப்படுகிறீர்களா ? என்று கேட்டார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று கூறினார்கள் உங்களுக்கு நோவினைத் தரக்கூடிய எல்லா பொருட்களை விட்டும் எல்லா உயிரினங்களின் தீங்கை விட்டும் அல்லது பொறாமைக்காரனின் கண் திருஷ்டிய விட்டும் அல்லாஹ்வின் திருப் பெயரைக் கொண்டு உங்களுக்கு ஓதிப் பார்க்கிறேன் அல்லாஹ் உங்களுக்கு குணமளிப்பானாக அல்லாஹ்வின் திருப் பெயரைக் கொண்டு உங்களுக்கு  ஓதிப் பார்க்கிறேன் என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள்


  அறிவிப்பாளர் : அபூ ஸயீத் (ரலி) நூல் முஸ்லிம் 4056  



சூனியத்திலிருந்து பாதுகாக்கும் துஆ. 



عن القعقاع : أن كعب الأحبار قال : لولا كلمات أقولهن لجعلتني يهود حمارا فقيل له : ما هن ؟ قال : أعوذ بوجه الله العظيم الذي ليس شيء أعظم منه وبكلمات الله التامات التي لا يجاوزهن بر ولا فاجر وبأسماء الله الحسنى ما علمت منها وما لم أعلم من شر ما خلق وذرأ وبرأ . رواه مالك


கஹ்புல் அஹ்பார் (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள் (இவர்கள் யூத பாதிரியாக இருந்து உமர் (ரலி) ஆட்சி காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ) நான் வழமையாக சில வார்த்தைகளை ஓதி வருகின்றேன் நான் அந்த வார்த்தைகளை சொல்லாமல் இருந்திருந்தால் யூதர்கள் என்னை தங்கள் சூனியத்தைக் கொண்டு கழுதையாக ஆக்கி இருப்பார்கள் அப்போது அவர்களிடம் அந்த வார்த்தைகள் என்ன என்று கேட்ட போது மேல் கண்ட துஆ வை சொன்னார்கள்

நூல் : முவத்தா இமாம் மாலிக்.

وترقد عقد فيه احدى عشرة عقدة مغرزة بالابر فجاؤا بها النبى عليه السلام فجعل يقرأ المعوذتين عليها فكان كلما قرأ آية انحلت عقدة ووجد عليه السلام خفة حتى انحلت العقدة الاخيرة عند تمام السورتين فقام عليه السلام كأنما انشط من عقال

 இமாம் முகாதில் இமாம் கலபீ ( ரஹ்) இருவரும் சொல்கின்றார்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட பொருளில் ஒரு கயிறு இருந்தது அதில் 11 முடிச்சுகள் போடப்பட்டிருந்தது  அப்போது அல்லாஹ்   இந்த இரு சூராக்களை (சூரத்துன் பலக், வன் நாஸ்) இறக்கினான் பலகில் 5 வசனங்களும் நாஸில் 6 வசனங்களும் இருக்கிறது அதனுடைய ஒவ்வொரு வசனமும்  நபியால் ஓதப்பட்ட போது  ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்து தொடர்ந்து எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்தது பிறகு நபி (ஸல்) அவர்கள் உற்சாகத்துடன் எழுந்தார்கள்  

 நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் எந்த வீட்டில் ஆயத்துல் குர்ஸி ஓதப்படுகிறதோ அந்த வீட்டிலிருந்து 30 நாட்கள் ஷைத்தான் ஒதுங்கி கொள்கின்றான் 40 நாட்கள் சூனியம் செய்யும்  ஆணோ பெண்ணோ அந்த வீட்டில்  நுழைய முடிவதில்லை        

நூல் ( மபாதீஹூல் ஹைப்)


மேல் கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களும் திருநபியின் பொன்மொழிகளும் அவ்விரண்டுக்கும் விளக்கம் சொல்லக் கூடிய உலகத்தின் எல்லா விரிவுரையாளர்களின் ஆய்வுகளும் சூனியம் உண்டு என்பதை தெளிவு படுத்துகிறது எனவே சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை உடைய நாம் சூனியம் இருக்கிறது என்பதையும் அந்த சூனியம் இறைவனின் நாட்டம் இன்றி கடுகளவும் கூட எந்த தீங்கையும் எந்த காலத்திலும் யாருக்கும் ஏற்படுத்த முடியாது என்பதையும் அறிந்து கொள்வோம் தங்களுடைய சுய நலத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் நாற்றமெடுக்கும் தங்களுடைய கொள்கையை நிலை நாட்டுவதற்காகவும் குர்ஆன்  மெய்யாக்கிய சூனியத்தை பொய்யாக்கும் போலி தவ்ஹீத்வாதிகளின் வேஷத்தை தெரிந்து கொள்வோம் அவர்களின் நாசத்தை விட்டும் தவிர்ந்து கொள்வோம 


Thursday 18 September 2014

வெற்றிக்கு உதவும் விமர்சனம்.








அல்லாஹ் மனிதர்களை நன்மைகளையும் தீமைகளையும் கலந்து செய்பவர்களாக படைத்திருக்கின்றான். எனவே மனிதர்களில் யாரும் தீமையே செய்யாமல் நன்மையை மட்டும் செய்பவரும் இல்லை. நன்மையே செய்யாமல் தீமையை மட்டும் செய்பவரும் இல்லை. இந்த எதார்த்தத்தை புரியாமல் நம்மை நாம் குறைகளுக்கும், விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட மனிதனாக தவறான முறையில் எண்ணி கொள்ள கூடாது. ஆனால் ஷைத்தானின் பெரிய சூழ்ச்சியும், மனிதனுடைய பலவீனமும் என்னவென்றால் மனிதன் தான் செய்த சில தொழுகை, தர்மம், திக்ரு, பொதுசேவை போன்ற சில நன்மைகளை எண்ணி பார்த்து தற்பெருமை கொள்கிறான், ஆனால் அவன் கடந்த காலங்களில் செய்த எண்ணற்ற பாவங்களையும் தற்போது செய்து வரும் பாவங்களையும் ஷைத்தான் மறக்க செய்து விடுகிறான். இப்படி ஒரு பெரிய குறைபாடும் மனிதனிடம் உள்ளது . நமது குறைகள் களையப்பட்டு பரிசுத்த நிலையை அடைய வேண்டுமானால் நம்மிடம்  இரண்டு தன்மைகள் இருக்கவேண்டும். ஒன்று சுயபுத்தி இரண்டாவது சொல்புத்தி இந்த இரண்டில் ஒன்றேனும் யாரிடத்தில் இல்லையோ அவனை விட்டும் எந்த காலமும் குறைகள் விடை பெற்று செல்லாது. சுயபுத்தி என்றால் நமது குறைகள் நாமே விளங்கி கொண்டு அதை நம்மை விட்டும் களைவது. 

குறைகளை விளங்கு - பாவ கரைகள் விலகும். 

وأخرج ابن أبي الدنيا والخرائطي كلاهما في كتاب الشكر والحاكم والبيهقي في شعب الإِيمان عن عائشة عن النبي صلى الله عليه وسلم قال « ما أنعم الله على عبد من نعمة فعلم أنها من عند الله إلا كتب الله له شكرها قبل أن يحمده ، وما علم الله من عبد ندامة على ذنب إلا غفر له ذلك قبل أن يستغفره ، إن الرجل ليشتري الثوب بالدينار فيلبسه فيحمد الله فما يبلغ ركبتيه حتى يغفر له » .


நாயகம்  (ஸல் ) அவர்கள் சொன்னார்கள்.
                                                                       அல்லாஹ் தன் அடியானுக்கு தான் செய்த உபகாரத்தை அது அல்லாஹ்வின் மூலம் தான்  கிடைத்தது என்று அந்த அடியான் விளங்கி விட்டால் அந்த உபகாரதிற்காக அவன் அல்லாஹ்வை புகழும் முன்பே அல்லாஹ் நன்றியின் கூலியை அவனுக்கு பதிவு செய்துவிடுகிறான்.   

அடியான் தான் செய்து விட்ட பாவத்தை நினைத்து வேதனைபடுகின்றான் என்று அல்லாஹ் அறிந்து விட்டால் அவன் மன்னிப்பு தேடும் முன்பே அவனை மன்னித்து விடுகின்றான். ஒரு மனிதன் ஒரு தினாருக்கு ஒரு ஆடையை வாங்கி அதை அணிகின்றபொழுது அல்லாஹ்வை புகழ்ந்தால் அந்த ஆடை அவனுடைய முட்டை அடையும் முன்பே அவனை மன்னித்து விடுகின்றான் .

நூல்  : தப்சீர் துர்ருல் மன்சூர் 

தன் குறைகளை அறிவதில் கவனம் கொண்ட சுவனத் தோழர்கள்

وعن
 أسلم قال : إن عمر دخل يوما على أبي بكر الصديق رضي الله عنهم وهو يجبذ لسانه . فقال عمر : مه غفر الله لك . فقال أبو بكر : إن هذا أوردني الموارد . رواه مالك


உமர் (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது நாவை தன் கையால் இழுத்து பிடித்திருந்தார்கள் உமர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் அதை விடுங்கள் அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக அப்போது அபூபக்கர் (ரலி) சொன்னார்கள் இந்த நாவு என்னை நாசமாக்கும் இடங்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறது எனவே தான் இவ்வாறு செய்கின்றேன் என்றார்கள். 

நூல் (மாலிக் )

சொல் புத்தியின் விளக்கம் 

சொல் புத்தி என்றால் நம்மிடம் உள்ள குறைகளை வேறு ஒருவர் சுட்டி காட்டினால் அதை ஏற்றுக் கொண்டு அந்த குறையை களைவதாகும்

குறைகளை தெரிந்து கொள்ள விரும்புவது நல்லோர்களின் நிறைவான செயலாகும் 

அமீருல் மூமீனின்  உமர்(ரலி)                                              அவர்களிடம் ஒரு  மனிதர் நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று சொன்னார் அப்போது அந்த சபையில் சிலர் அவ்வாறு சொன்னவருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள் அவரை பேச விடங்கள் எனெனில் என் குறைகளை என்னிடம் நீங்கள் சொல்லாவிட்டால் உங்களிடம் எந்த நலவும் இல்லை அதை தான் செவியேற்காவிட்டால் என்னிடம் எந்த நலவும் இல்லை என்றார்கள். 

நூல். ஆபாதுத் தரீக்.


أخرج ابن مردويه عن علي بن أبي طالب قال : « مر رجل على عهد رسول الله صلى الله عليه وسلم في طريق من طرقات المدينة ، فنظر إلى امرأة ونظرت إليه ، فوسوس لهما الشيطان : إنه لم ينظر أحدهما إلى الآخر إلا اعجاباً به ، فبينا الرجل يمشي إلى جنب حائط ينظر إليها ، إذ استقبله الحائط فشق أنفه فقال : والله لا اغسل الدم حتى آتي رسول الله صلى الله عليه وسلم ، فاعلمه أمري ، فأتاه فقص عليه قصته فقال النبي صلى الله عليه وسلم : » هذا عقوبة ذنبك « وأنزل الله { قل للمؤمنين يغضوا من أبصارهم . . . } الآية » .


நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் மதீனாவின் ஒரு சாலையில் நடந்து சென்றார் அப்போது அவ்வழியில் வந்த ஒரு பெண்ணை கண்டார் அப்பெண்ணும் அவரை பார்த்தார்கள் ஷைத்தான் இருவரின் உள்ளத்திலும் ஊசலாட்டத்தை போட்டான் இருவருமே தங்களின் அந்த பார்வையை விரும்பினார்கள் ரசித்தார்கள் அப்பெண்ணை அவர் பார்த்து கொண்டே நடந்தபொழுது  அவர் எதிரில் ஒரு சுவர் இருந்தது அதை அவர் கவனிக்காமல் அதன் மீது மோதி விட்டார் அது அவருடைய மூக்கை பிளந்து விட்டது அப்போது அவர் தனக்குத் தானே சொன்னார் நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இவ்விஷயத்தை அவருக்கு தெரிவிக்காமல் இந்த ரத்தத்தை கழுவ மாட்டேன் என்று சொல்லி கொண்டே நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த சம்பவத்தை சொன்னார் அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம் இது உம்முடைய பாவத்திற்கான தண்டனையாகும் என்று சொன்னார்கள் அப்போது தான் அல்லாஹ் கீழ்வரும் வசனத்தை இறக்கினான்.
நூல்  : தப்சீர் துர்ருல் மன்சூர் 


குறைகளை திருத்தி கொள்வது பிரச்சனையை குறைக்கும் 

لَمَّا كَانَ غَزْوَةُ تَبُوكَ أَصَابَ النَّاسَ مَجَاعَةٌ قَالُوا يَا رَسُولَ اللَّهِ لَوْ أَذِنْتَ لَنَا فَنَحَرْنَا نَوَاضِحَنَا فَأَكَلْنَا وَادَّهَنَّا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ افْعَلُوا قَالَ فَجَاءَ عُمَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنْ فَعَلْتَ قَلَّ الظَّهْرُ وَلَكِنْ ادْعُهُمْ بِفَضْلِ أَزْوَادِهِمْ ثُمَّ ادْعُ اللَّهَ لَهُمْ عَلَيْهَا بِالْبَرَكَةِ لَعَلَّ اللَّهَ أَنْ يَجْعَلَ فِي ذَلِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ قَالَ فَدَعَا بِنِطَعٍ فَبَسَطَهُ ثُمَّ دَعَا بِفَضْلِ أَزْوَادِهِمْ قَالَ فَجَعَلَ الرَّجُلُ يَجِيءُ بِكَفِّ ذُرَةٍ قَالَ وَيَجِيءُ الْآخَرُ بِكَفِّ تَمْرٍ قَالَ وَيَجِيءُ الْآخَرُ بِكَسْرَةٍ حَتَّى اجْتَمَعَ عَلَى النِّطَعِ مِنْ ذَلِكَ شَيْءٌ يَسِيرٌ قَالَ فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِ بِالْبَرَكَةِ ثُمَّ قَالَ خُذُوا فِي أَوْعِيَتِكُمْ قَالَ فَأَخَذُوا فِي أَوْعِيَتِهِمْ حَتَّى مَا تَرَكُوا فِي الْعَسْكَرِ وِعَاءً إِلَّا مَلَئُوهُ قَالَ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا وَفَضَلَتْ فَضْلَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ لَا يَلْقَى اللَّهَ بِهِمَا عَبْدٌ غَيْرَ شَاكٍّ فَيُحْجَبَ عَنْ الْجَنَّةِ


தபூக் போருக்கு சென்றிருந்த இடத்தில் மக்களுக்கு கடுமையான பசி ஏற்பட்டது அப்போது சஹாபாக்கள் நபியிடம் நாயகமே! தாங்கள் அனுமதித்தால் நாங்கள் எங்கள் ஒட்டகங்களை அறுத்து சாப்பிடுவோம் அதை எண்ணையாகவும் பயன்படுத்தி கொள்வோம் என்று சொன்ன பொழுது (ஸல்) அவ்வாறு செய்யுங்கள் என்று சொல்லி விட்டார்கள் .இதனை அறிந்த உமர் (ரலி ) நபியிடம் வந்து நாயகமே தாங்கள் இப்படி செய்வதற்கு அனுமதி கொடுத்தால் பயணத்துக்கு பயன்பட்டு வரும் ஒட்டகங்கள் குறைந்து ஊர் செல்ல சிரமமாகி விடும் எனவே தாங்கள் மக்களிடம் இருக்கின்ற கொஞ்சம் உணவுகள் கேளுங்கள் பிறகு அந்த உணவில் பரக்கத் ஏற்பட அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் அல்லாஹ் அதில் பரக்கத் ஏற்படுத்துவான் நாயகம் அதை ஏற்று கொண்டு  மக்களிடம் தோல் விரிப்பையும் மிச்சமுள்ள உணவுகளையும் கொண்டு வர சொல்லி அழைத்தார்கள் அப்போது மக்களிடம் சிலர் சிறிய எறும்பின் அளவு உணவும் சிலர் ஒரு கை அளவு பேரீத்தை கனிகளும் இன்னும் சிலர் ரொட்டி துண்டுகளையும் கொண்டு வந்தார்கள் இவை அனைத்தையும் விரிப்பில் ஒன்று சேர்த்த போது அது கொஞ்சம்தான் இருந்தது. அதில் பரகத்துக்காக நபி துஆ செய்தார்கள். பிறகு சஹாபாக்களிடம் உங்கள் பாத்திரத்தில் உணவை எடுத்து கொள்ளுங்கள்  என்றார்கள் சஹாபாக்கள் அனைவரும் உணவை எடுத்து கொண்டார்கள் அனைவரும் தங்கள் பாத்திரத்தை நிரப்பி கொண்டார்கள் .வயறு நிரம்பும் அளவு எல்லோரும் சாப்பிட்டார்கள் .அதற்கு பிறகும் உணவும் இருந்தது .அப்போது நாயகம் சொன்னார்கள் கலிமாவை கொண்டு  உறுதி கொண்ட நிலையில் யார் அல்லாஹ்வை சந்திக்கின்றானோ அவர் சுவனத்தை விட்டும் தடுக்கப்பட மாட்டார் என்று சொன்னார்கள்.

நூல் : (முஸ்லிம்) 

விமர்சனங்கள் ஏற்றுக்கொண்ட விண்மீன்கள்

وأخرج سعيد بن منصور وأبو يعلى بسند جيد عن مسروق قال : ركب عمر بن الخطاب المنبر ثم قال : أيها الناس ما إكثاركم في صداق النساء ، وقد كان رسول الله صلى الله عليه وسلم وأصحابه وإنما الصدقات فيما بينهم أربعمائة درهم فما دون ذلك ، ولو كان الإكثار في ذلك تقوى عند الله أو مكرمة لم تسبقوهم إليها ، فلا أعرفن ما زاد رجل في صداق امرأة على أربعمائة درهم . ثم نزل فاعترضته امرأة من قريش فقالت له : يا أمير المؤمنين نهيت الناس أن يزيدوا النساء في صدقاتهن على أربعمائة درهم؟ قال : نعم . فقالت : أما سمعت ما أنزل الله يقول { وآتيتم إحداهن قنطاراً } فقال : اللهم غفرانك . . . ! كل الناس أفقه من عمر . ثم رجع فركب المنبر فقال : يا أيها الناس إني كنت نهيتكم أن تزيدوا النساء في صدقاتهن على أربعمائة درهم ، فمن شاء أن يعطي من ماله ما أحب .


உமர் (ரலி) ஆட்சி காலத்தில் திருமணத்தில் மணப் பெண்களுக்கு மஹர் வழங்கும் விஷயத்தில் சில பேர் மிகவும் தாராள தன்மையுடன் நடந்து கொண்டதால் அது சில வாலிபர்களின் திருமணத்தை பாதித்தது எனவே உமர் (ரலி) ஒருமுறை குத்பா பிரசங்கத்தில் இனிமேல் யாரும் 40 ஊகியா தங்கத்தை விடவும் மஹர் தொகையை அதிகப்படுத்தாதீர்கள் அவ்வாறு அதிகப்படுத்தினால் அந்த அதிகப்படியான நகையை அரசின் பைத்துல்மாலில் சேர்க்கப்பட்டு விடும் என்றார்கள் அப்போது அச்சபையில் இருந்த ஒரு பெண்மணி அவ்வாறு சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை என்றார்கள் அப்பெண்ணிடம் உமர் (ரலி) அவர்களிடத்தில் ஏன் அவ்வாறு சொல்கின்றீர்கள்   என்று கேட்டபோது அப்பெண்மணி சொன்னார்கள் அல்லா குர்ஆனில் ஒரு குவியல் அளவு தங்கத்தை மஹராக கொடுத்தாலும் என்று கூறும் அவ்வசனம் மஹருக்கு வரம்பு இல்லை என்று சொல்கிறது  என்று குறிப்பிட்டார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் அந்த கருத்தை ஏற்றுக் கொண்டு சொன்னார்கள். இந்த இடத்தில் ஒரு பெண் சரியான கருத்தை சொன்னார் ஒரு ஆண் தவறு செய்துவிட்டார் என்று தன்னை பற்றி சொல்லி தான் முதலில் போட்ட அந்த உத்தரவை திரும்ப பெற்றுக் கொண்டார்கள்.

நூல் : ( துர்ருல் மன்சூர்) 


وروى وكيع عن أبي معشر عن محمد بن كعب القرظي قال: سأل رجل عليا رضي الله عنه عن مسألة فقال فيها، فقال الرجل: ليس كذلك يا أمير المؤمنين، ولكن كذا وكذا، فقال علي: أصبت وأخطأت، وفوق كل ذي علم عليم.


அமீருல் மூமீனின் அலி (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் ஒரு சட்டம் பற்றி கேட்டார் அலி (ரலி) அதில் தனது விளக்கத்தை சொன்னார்கள் உடனே அவர் அந்த சட்டம் நீங்கள் சொல்வது போன்று அல்ல என்று கூறியதுடன் சரியான கருத்து என்ன என்பதையும் சொன்னார் அதை கேட்ட அலி (ரலி) சொன்னார்கள் நீங்கள் சரியாக சொன்னீர்கள் நான் தான் தாறு செய்து விட்டேன் உலகில் ஒவ்வொரு அறிஞனுக்கு மேலும்  ஒரு அறிஞன் இருக்கின்றான் என்றார்கள்.

நூல் (குர்துபீ )


மேற்கூறப்பட்ட விஷயங்கள்  நமக்கு உணர்த்தும் செய்தி என்ன வென்றால் விமர்சனங்களுக்கும் தவறுகளுக்கும் அப்பாற்பட்ட எந்த மனிதனும் அறிவாளியும் திறமை உடையவரும் உலகத்தில் கிடையாது எனவே யார்  சரியான விமர்சனத்தை திறந்த மனதோடும் தூய உள்ளத்தோடும் சகிப்பு தன்மையோடும் ஏற்று கொள்கிறாரோ அவர் தான் மக்கள் மனதில் நல்லவனாக காட்சி  அளிப்பார் வாழ்கையிலும் ஜெயிப்பார் - விமர்சனங்களுக்கு இடம் தராத  அமைப்புகளும் மனிதர்களும் தடம் தெரியாமல் போவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

குறைகள் சுட்டிகாட்டுபவர்களுக்கு சில ஆலோசனைகள் 

1.      இழிவுபடுத்துவது கேலிசெய்வது குரோத மனப்பான்மை இந்த நோக்கத்தில் குறை பேச கூடாது.

2.   குறை பேசுவதையே தொழிலாக கொண்டு அலைய கூடாது அப்படி செய்தால் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப அப்படி பட்ட நபர்கள் விட்டும் மக்கள்  விலகி கொள்வதில் குறை வைக்க மாட்டார்கள் 

3. குறைகள் மட்டும் சொல்ல கூடாது நிறைகளையும் சேர்த்து சொல்ல வேண்டும் 

4. உள்ளதை உள்ளபடியே சொல்லவேண்டும் உரியவரிடம் மட்டுமே சொல்ல வேண்டும்.

" المؤمن مرآة المؤمن

 நாயகம் ஒரு முமீன் இன்னொரு முமீனுக்கு கண்ணாடி என்று சொன்னார்கள்.
நூல். மிஸ்காத்.

 இதில் பல கருத்துகள் உண்டு கண்ணாடி குறையை உரியவரிடம் மட்டுமே சொல்லும் ஊர் முழுவதும் சொல்லாது உள்ளபடியே சொல்லும் கூட்டி குறைத்து சொல்லாது  

5.குறைகள் சுட்டிகாட்டுபவர் குர்ஆன் நபி மொழி நல்லோர்களின் வழி இவைகளை அடிப்படையாக கொண்டு குறைகளை விமர்சனம் செய்ய வேண்டுமே தவிர அவருக்கு பிடிக்காதது எல்லாம் அவர் மனதுக்கு இயல்பிற்கு குறையாக தெரிவது எல்லாம் குறையாக ஆகாது.

6.ஒருவரிடம் தற்போது இல்லாத அவரின் கடந்த கால குறைகளை சொல்லகூடாது.

وعن خالد
 بن معدان عن معاذ قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من عير أخاه بذنب لم يمت حتى يعمله " يعني من ذنب قد تاب منه - . رواه الترمذي

 நபி (ஸல்) சொன்னார்கள் எந்த மனிதன் தன்னுடைய சகோதரன் அவன் தவ்பா செய்து மீண்டும் விட்ட பாவத்தை கொண்டு இழிவு படுத்துகிறானோ அந்த பாவத்தை அவன் செய்யாமல் மரணிக்கமட்டான்.

நூல். திர்மிதி

7. நாம் அடுத்தவரின் குறைகளை துருவி ஆராயாமல் நமது குறைகளை நாமே யோசித்து நம்மை திருத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் .

அன்னை ராபியத்துல் பசரிய்யா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள் இறை நேசர்கள் யார் தெரியுமா ? அவர்கள் பிறரின் குறைகள் தேடி அலைய மாட்டார்கள் தன் குறைகளை சிந்தித்து அவைகளை நீக்குவதில் கவனமாக இருப்பார்கள்.