Thursday 6 February 2014

இறைநேசர்கள்.



أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
   الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ
لَهُمُ الْبُشْرَىٰ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ ۚ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ۚ ذَٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيم

 (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.   10:62.63.64

இந்த ஆயத்தில்  இறைநேசர்கள் என்றால் யார் அவர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன அவர்களின் தன்மை என்ன என்பதை அல்லாஹ் விவரிக்கின்றான்.

இறைநேசர்கள் எதிர்காலம் பற்றிய எந்த அச்சமும் கொள்ளமாட்டார்கள். அது போல்   நடந்து முடிந்த்ததை குறித்து கவலையும் பட மாட்டார்கள். அதிகம் இறையச்சமுள்ளவர்களாக இருப்பார்கள்.

நாயகம் (ஸல்) அவர்கள் இறைநேசர்களின் அடையாளம் குறித்து சொல்வார்கள்.

ثلاث من حفظهن فهو ولي حقا ، ومن ضيعهن فهو عدوي حقا : الصلاة ، والصيام ، والجنابة

 தொழுகை. நோன்பு. கடமையான குளிப்பு. ஆகிய மூன்று விஷயத்தை யார் பேணி பாதுகாத்தாரோ அவர் என்னுடைய நேசர். யார் அதை வீணாக்கினாரோ .அவர் என்னுடைய விரோதி. என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
  
 நூல். கன்சுல் உம்மால். பாகம்.1. பக்கம். 44

ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்கள் நடத்தி வந்த தவச்சாலையில் மாணவராக ஒருவர் வந்து சேர்ந்தார். சுமார் பத்து வருடங்களுக்கு மேல் இருந்த அவர் திடீரென ஒரு நாள் நான் போகிறேன் என்று கூறிய போது ஏன் போகிறீர்கள் என ஷைகு அவர்கள் கேட்க.. இத்தனை வருடங்களில் உங்களிடம் ஒரு கராமத்தைக் கூட நான் பார்க்கவில்லை. என்று அவர் தயங்கிய படி கூறினார். அப்போது ஜுனைதுல் பக்தாதீ ரஹ் அவர்கள் கூறினார்கள். என்னோடு தங்கியிருந்த இத்தனை வருடங்களில் ஏதாவது ஒரு நாளில் இமாம், ஜமாஅத்தை நான் விட்டதையோ, அல்லது தக்பீர் தஹ்ரீமா எனக்கு தவறியதையோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்க, இல்லை என்று அவர் பதில் கூறினார். அப்போது ஷைகு அவர்கள் இதை விட பெரிய கராமத் என்ன வேண்டும் என்றார்களாம்.

இறைநேசர்கள் உள்ளத்தை வென்றவர்கள்.

هشام بن حسان قال: مررت بالحسن البصري وهو جالس وقت السحر فقلت: يا أبا سعيد مثلك يجلس في هذا الوقت ؟ قال: إني توضأت وأردت نفسي على الصلاة فأبت علي، وأرادتني على أن تنام فأبيت عليها.

ஹிஸாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.நான் ஒரு முறை அதிகாலை நேரம் ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் அமர்ந்திருப்பதை பார்த்து யா அபா ஸயீத் இந்நேரம் ஏன் அமர்ந்திருக்கிறீர்கள் என்று கேட்டேன் அப்போது அவர்கள் கூறினார்கள் நான் ஒழு செய்து தொழ நாடினேன் ஆனால் என மனம் தொழ விரும்பவில்லை. எனவே என் மனம் தூங்க நாடியது நான் தூங்க மறுத்துவிட்டேன் என்றார்கள்.

 நூல். ஹுல்யதுல் அவ்லியா

புளைல் இப்னு இயாள் (ரஹ்) அவர்கள்.
வரலாற்று ஆசிரியர்களால், ஹதீஸ்கலை வல்லுனர்களால் பெரிதும் மதிக்கப்படுவார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்..

فضيل بن عياض، أبو على، أحد الأقطاب، ولد بخراسان، بكورة أبيورد، وقدم إلى الكوفة وهو كبير، فسمع بها الحديث. ثم تعبد وانتقل إلى مكة، وجاور بها، إلى أن مات، سنة سبع وثمانين ومائة.
وأفرد ابن الجوزى ترجمته بالتأليف.
وكان شاطراً، يقطع الطريق بين أبيورد وسرخس. وسبب توبته أنه كان يعشق جارية، فبينما هو ذات يوم يرتقى الجدران إليها، إذ سمع تالياً يتلو: )ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق( فقال: " بلى!. والله يارب! قد آن " . فرجع، فآواه الليل إلى خربة، فإذا فيها رفقة، فقال بعضهم: " نرتحل " . وقال بعضهم: " حتى نصبح، فان فضيلا على الطريق " . فآمنهم، وبات معهم.
ورجع إلى خربة فبات بها فسمع سفارا يقولون: خذوا حذركم إن فضيلا أمامكم يقطع الطريق، فأمنهم واستمر على توبته حتى كان منه ما كان من السيادة والعبادة والزهادة، ثم صار علما يقتدى به ويهتدى بكلامه وفعاله

ஹிஜ்ரி 107-ல் பிறந்து ஹிஜ்ரி – 187-ல் மறைந்தார்கள்.
தஸவ்வுஃப் கலையில நிகரற்று விளங்கியவர்கள்.
ஆனால்,
ஒரு காலத்தில், தூரத்து தேச மக்களே இவர் பெயரைக் கேட்டால் அஞ்சி நடுங்குவார்கள்.
பயங்கரத் திருடர்
தாரீதீ திமிஷ்க் எனும் நூலின் ஓர் அறிவிப்பில்,
ஒரு நாள் ஒரு இடத்திற்கு திருடச் சென்றார் ஃபுளைல், அங்கே ஒரு வியாபாரக் கூட்டத்தினர் இப்படிப் பேசிக் கொண்டார்கள்.
இங்கே ஃபுளைல் என்றொரு திருடர் இருக்கின்றாராம்.
எவ்வளவு தான் பாதுகாப்பாக இருந்தாலும், கன நேரத்தில், அசால்ட்டாக திருடி விட்டுச் சென்றிடுவாராம்.
எனவே, ரொம்ப உஷாராக இருக்க வேண்டும்.
தூரத்தில் நின்று இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஃபுளைல் திடுக்கிட்டார். வெட்கித் தலை குனிந்தார்.
அவர்களின் அருகே வந்த ஃபுளைல் நீங்கள் பயப்படவேண்டாம் இன்று இரவு முழுவதும் உங்களுக்கு நான் காவல் இருக்கின்றேன். ஃபுளைல் இடம் இருந்து உங்கள் பொருளை நான் பாதுகாக்கிறேன். என்றார்
வியாபாரக் கூட்டத்தினர் உறங்கினார்கள்
இரவில் விழித்துக்கொண்டிருந்த ஃபுளைல் சிந்திக்க ஆரம்பித்தார்.
ஆம்! நாம் மாறினால் என்ன?
நம் செயலைக் கண்டு மக்கள் இப்படி அச்சப்பட்டு இரவெல்லாம் தூங்காமல் நிம்மதியிழந்து துன்பப்படுகின்றார்களே!
ஆம்! இனி நான் திருட மாட்டேன் என உறுதி கொண்டார்.
காலை நேரம் வியாபாரிகள் சில அன்பளிப்புகளை ஃபுளைலிடம் கொடுத்து விடைபெறுகிற போது இரவெல்லாம் கண்விழித்து எங்களின் பொருட்களையெல்லாம் பாதுகாத்த தாங்களின் பெயர் என்னவோ?
நான் தான் நேற்றிரவு நீங்கள் பயந்து கொண்டிருந்த ஃபுளைல் என்று கூறிவிட்டு, என்னை குறித்து நீங்கள் பேசியதை நான் கேட்ட போதே நான் மாற வேண்டும் என முடிவெடுத்தேன் என்றார் ஃபுளைல்.
இதை இப்னு அஸாகிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல் தாரீகீ திமிஷ்க் பாகம் 48, பக்கம்-384

என்றாலும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க  முடியாமல் மீண்டும் திருட ஆரம்பித்தார்கள்.
இப்ராஹீம் இப்னு அஷ் அஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்
ஒரு நாள் இரவு நேரம் ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற போது அங்கே ஒரு பெண்மணி குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தார்.
திருடச் சென்ற ஃபுளைல் செவி தாழ்த்தி கேட்க ஆரம்பித்தார்.

நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கிவைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா?
எனும் 57-ம் அத்தியாயத்தின் 16-ம் வசனத்தை கேட்டதும்
இதோ வந்துவிட்டேன் என் இறைவா?
இதோ உருகிவிட்டேன் என் இறைவா?
இதோ பணிந்துவிட்டேன் என் இறைவா?

என் பாவங்களை மன்னித்துவிடு! என் குற்றங்களை பொறுத்து விடு! என்றார்.
ஃபுளைல் மாறினார்! ஆம்! நம்பத்தகுந்த ஆலிமாக, சுஃப்யான் இப்னு உயைனா, ஷாபிஈ, இப்னுல் முபாரக் ஹூமைதீ, ஸவ்ரீ பிஷ்ருல் ஹாபி போன்ற ஈடு இணையில்லா மார்க்க ஞானிகளின் ஆசானாக, நஸாயீ, தஹபீ போன்ற ஹதீஸ் கலா வல்லுநர்களின் வலுவான ஆதாரமாக மாற்றம் பெற்றார். ஏற்றம் பெற்றார்,

நூல்- ஸியரு அஃலாமின் நுபலா,   பாகம்-13, பக்கம்-59எண்-3793

இறைநேசர்களுக்கு உலகம் அடிமையானது.
பூமி சுருங்கியது

சுலைமான் நபியின் எழுத்தாளரான ஆஸிப் இப்னு பர்ஹியா அவர்கள் பல மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு பொருளை கண் மூடி திறப்பதற்குள் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்

 قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم

பலம் பொருந்திய ஒரு ஜின் கூறியது நீங்கள் உங்களுடைய இடத்தைவிட்டு எழுவதற்கு முன் அதை நான் உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகிறேன். நான் அதற்கு வலிமை பெற்றவனாகவும், நம்பிக்கைக்குறியவனாகவும் இருக்கின்றேன்”. அவர்களுள் ஓரளவு வேத ஞானம் பெற்றிருந்த ஒருவர் நீங்கள் கண்மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டுவந்து வருகிறேன் என்று கூறினார். அவ்வாறே அவ்வரியவனை தம்மிடத்தில் வைக்கப்பட்டிருப்பதை சுலைமான் கண்டார்.

அல்குர் ஆன் : 27: 38-40

சாதரண பொருளும் வெளிச்சம் கொடுத்தது

عن أنس أن أسيد بن حضير وعباد بن بشر تحدثا عند النبي صلى الله عليه وسلم في حاجة لهما حتى ذهب من الليل ساعة
 في ليلة شديدة الظلمة ثم خرجا من عند رسول الله صلى الله عليه وسلم ينقلبان وبيد كل منهما عصية فأضاءت عصى أحدهما لهما حتى مشيا في ضوئها حتى إذا افترقت بهما الطريق أضاءت للآخر عصاه فمشى كل واحد منهما في ضوء عصاه حتى بلغ أهله
 رواه البخاري

3639. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் நிறைந்த ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்து சென்றனர். அவ்விருவருடனும் இரண்டு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளிவீசிக் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் சென்று சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றொன்றைவிட்டுப் பிரிந்து அஅவர்களுடன்) சென்றது.

செல்போன் இல்லாமலே பேசினார்கள்.

وعن
 ابن عمر أن عمر بعث جيشا وأمر عليهم رجلا يدعى سارية فبينما عمر يخطب فجعل يصيح : يا أمير المؤمنين لقينا عدونا فهزمونا فإذا بصائح يصيح : يا ساري الجبل . فأسندنا ظهورنا إلى الجبل فهزمهم الله تعالى
 رواه البيهقي في دلائل النبوة

ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் ஸாரியா என்பவரை தளபதியாக நியமித்து

 ஒரு படையை அனுப்பிவைத்தார்கள்.  அதற்கு பிறகு உமர்(ரலி) ஸஹாபாக்களிடம் பிரசங்கம்செய்துகொண்டிருக்கும்போது இடையில் யா ஸாரியா மலை என்று சப்தமிட்டார்கள். சென்ற படை வெற்றியோடு திரும்பியது வந்தவர்கள் உமர் அவர்களிடம் ஆச்சரியமான ஒரு செய்தியை சொன்னார்கள். அமீருல் முஃமினூன்  அவர்களே நாங்கள் எதிரிகளை சந்தித்த ஆரம்பத்தில் தோழ்வியை சந்தித்தோம் அந்நேரத்தில் யா ஸாரியா மலை என்ற உங்களுடைய சப்தத்தை  கேட்டோம் நாங்கள் எல்லோரும் மலையின் பக்கம் திரும்பினோம் வெற்றிபெற்றோம் என்று கூறினார்கள்.

நூல். மிஸ்காத். பாபு கராமத். பக்கம்.546.
.             

அவர்களின் கணிப்பு உண்மையானது.

روى عبد الخالق بن زيد بن واقد قال: حدثني أبي أن عبد الملك بن مروان حدثه قال: كنت أجالس بريرة بالمدينة قبل أن ألي هذا الأمر فكانت تقول لي: يا عبد الملك إني أرى فيك خصالاً وإنك لخليق أن تلي هذا الأمر فاحذر الدماء فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " إن الرجل ليدفع عن باب الجنة بعد أن ينظر إليها بملء محجمة من دم يريقه من مسلم بغير حق

உமைய்யா கலீஃபாக்களில் ஒருவரான அப்துல் மாலிக் பின் மர்வான் அவர்கள் கூறுகின்றார்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட பரீரா (ரலி) என்ற பணிப்பெண் நபித்தோழி ஒருநாள் அவரின் சபைக்கு நான் சென்றிருந்தேன். அப்போது நான் அவர் என்னிடம் அப்துல் மாலிக் அவர்களே! உங்களிடம் சில நல்ல பண்புகளைப் பார்க்கின்றேன். ஆதலால் உமக்கு அரச பதவியும் கிலாஃபத் பொறுப்பும் வழங்கப்படும் என்றே நான் கருதுகிறேன். அப்படி ஆட்சிப் பொறுப்பிற்கு நீர் வந்தால் இரத்தம் சிந்த வைக்கும் காரியங்களிலிருந்து நீர் விலகி இருக்கவும். ஏனெனில் சுவனத்தின் அருகே சென்று விட்ட பிறகும் ஒருவர் அப்புறப்படுத்தப்படுவார் காரணம் அவர் அநியாயமாக முஸ்லிம் ஒருவரின் இரத்தம் சிந்தப்பட காரணமாய் அமைந்திருப்பார் என நபி (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன் எனவே, எச்சரிக்கையாய் இருப்பீராக! என்று என்னிடம் கூறினார்.
நூல் இஸ்திஆப், பாகம் – 3,  பக்கம்-188-189

அவர்களின் மண்ணறை பாக்கியமானது.

عن عائشة قالت : لما مات النجاشي كنا نتحدث أنه لا يزال يرى على قبره نور . رواه أبو داود

அபிசீனியா மன்னர் நஜ்ஜாஷி  அவர்கள் இறந்த போது அவருடைய மண்ணறையில் ஒளி பிரகாசமாக இருக்கிறதாம் என்று நாங்கள் பேசிக்கொள்வோம் என ஆயிஷா நாயகி (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல். அபூதாவுத்.  5954)

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ أَنَّهُ بَلَغَهُ
أَنَّ عَمْرَو بْنَ الْجَمُوحِ وَعَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو الْأَنْصَارِيَّيْنِ ثُمَّ السَّلَمِيَّيْنِ كَانَا قَدْ حَفَرَ السَّيْلُ قَبْرَهُمَا وَكَانَ قَبْرُهُمَا مِمَّا يَلِي السَّيْلَ وَكَانَا فِي قَبْرٍ وَاحِدٍ وَهُمَا مِمَّنْ اسْتُشْهِدَ يَوْمَ أُحُدٍ فَحُفِرَ عَنْهُمَا لِيُغَيَّرَا مِنْ مَكَانِهِمَا فَوُجِدَا لَمْ يَتَغَيَّرَا كَأَنَّهُمَا مَاتَا بِالْأَمْسِ وَكَانَ أَحَدُهُمَا قَدْ جُرِحَ فَوَضَعَ يَدَهُ عَلَى جُرْحِهِ فَدُفِنَ وَهُوَ كَذَلِكَ فَأُمِيطَتْ يَدُهُ عَنْ جُرْحِهِ ثُمَّ أُرْسِلَتْ فَرَجَعَتْ كَمَا كَانَتْ وَكَانَ بَيْنَ أُحُدٍ وَبَيْنَ يَوْمَ حُفِرَ عَنْهُمَا سِتٌّ وَأَرْبَعُونَ سَنَةً

உஹத் போர் நிகழ்ந்து 46 ஆண்டுகள் உருண்டோடின. கலீஃபா அமீர் முஆவியா(ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் அது கால்வாய் ஒன்று வெட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பாதையில் உஹது ஷீஹதாக்களின் புகழுடல்கள் உறங்கிக் கொண்டிருந்தன. அப்புகழுடல்களுக்கு மாற்று இடம் அமைத்திட கலீஃபா நாடினார். இது குறித்து வீரதியாகிகளின் உற்வினர்களது செவிக்கு எட்டும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அங்கு திரளாக கூடினர்.அவர்களது முன்னிலையில் மண்ணறைகள் திறக்கப்பட்டன.அந்த அற்புத நிகழ்ச்சியை ஜாபிர்(ரலி) அவர்கள் கண்டுகளித்த உயரிய காட்சியை இவ்வாறு கூறுகிறார்கள்.

உஹதுப் போர்க்கள உத்தம ஷூஹதாபெருமக்களின் கண்ணியமிகு மண்ணறைகள் திறக்கப்பட்டதை நேரடியாக கண்டேன்.சுப்ஹானல்லாஹ்;அந்த உத்தமர்களின் புகழுடல்கல் ஒளி வீசின அவர்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த கஃபன் துணிகள் அப்பழுக்கற்று புத்தம் புதிய ஆடைகள் போன்று காட்சியளித்தன அவர்களின் உரோமங்கள் வளர்ந்திருக்கவும் கண்டேன்.உறங்குவது போன்ற நிலையில் எனது தந்தையைக் கண்டேன் அவர்களது திருக்கரம் அவர்களது உடலின் ஒரு பகுதியில் பதிந்து இருந்தது.அந்த இடத்தை விட்டு அவர்களது கையை உயர்த்தினேன் இர்த்தம் பீரிட்டு வருவதை கண்டேன் அதனால் அக்கரத்தை அப்படியே விட்டுவிட்டேன் அந்தக்கரம் முன்பிருந்த அதே இடத்திற்கு மீண்டது பீறிட்டு வந்து கொண்டிருந்த இரத்தமும் அடங்கியது கஃபன் துணியோ தூய்மையாக புத்தம் புதியது போன்று காட்சியளித்தது

 நூல். முஅத்தா இமாம் மாலிக் எனும் நூலில் அல் ஜிஹாத் எனும் பாடத்தில் வந்துள்ளது

இறைநேசர்களை வெறுப்பது இறைவனின் கோபத்தில் சேர்த்துவிடும்

. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ

. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்:
எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆம்விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 நூல். புகாரி. ஹதீஸ் எண்  6502.
-

2 comments: