Wednesday 17 October 2012

துல்ஹஜ்ஜும் குர்பானியும்



அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் பேரருட்கொடை காலங்கள்.இந்த உண்மையை மனிதன் உணர்ந்து கொள்கிறபோது காலங்கள் அவனுக்கு கிடைப்பதில்லை.
حَتَّى إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!என்று கூறுவான்.
لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ كَلاَّ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ
 “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.

வாழும்காலங்களில் இதை சரியாக புரிந்துகொண்டவர்கள் பயனுள்ள வாழ்வை வாழ்ந்துவிட்டுச்செல்கிறார்கள்.
நேரங்கள் அல்லாஹ்விடமிருந்து மனிதன் பெற்றுக்கொண்ட அமானிதமாகும்.   ஒரு நாள் அந்த அமானிதத்துக்கு முழுமையாக பொருப்பு ஒப்படைக்க வேண்டும்.
இஸ்லாத்தின் வணக்கங்கள் காலங்களைக்கொண்டும் நேரங்களைக்கொண்டும் அமைக்கப்பட்டிருக்கிறது. விலைமதிப்பில்லா அந்தகாலத்தை வீண்விரயம் செய்வதை ஒருபோதும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

 كم لبثتم في الأرض عدد سنين

  பூமியில் நீங்கள் எத்தனை ஆண்டு தங்கினீர்கள்? இது நரகவாசிகளிடம் நாளை மறுமையில் கேட்கப்படும் கேள்வி என குர்ஆன் கூறுகிறது.

திருக்குர்ஆனில் பல்வேறு இடங்களில் அல்லாஹுத்தஆலா காலங்களின் மீது சத்தியம் செய்யும் அளவுக்கு காலம் கண்ணியமானவையாகும்.

எனவே பணத்தால் காலத்தை சம்பாதிக்க முடியாது ஆனால் அதை பயனுள்ளதாக ஆக்குவதின் மூலம் சேமிக்க முடியும்.

நேரங்களையும் காலங்களையும் நல்லமல்களால் வென்றெடுத்து,இறை       நேசத்தையும் நெருக்கத்தையும் பெற்ற அறிநர்களின் அனுபவவார்த்தையை செவிதாழ்த்தி கேளுங்கள்:

قال عمر -رضي الله تعالى عنه-: "إني لَأكره أن أرى الرجل سبهللا - فارغا- ليس في شيء من أمر دينه ولا من أمر دنياه
தீனுக்கும் துன்யாவுக்கும் பயனற்றதாக காலத்தை கழிக்கிற மனிதனை நான் பார்க்கவே வெறுக்கிறேன் என்று ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

قال ابن مسعود -رضي الله تعالى عنه-:إني لا أحزن على شيء حزني على يوم تغرب عليه فيه شمسه فينقص فيه عمري، ولا يزيد فيه عملي
என் வாழ்நாளில் ஒருநாள் குறைந்து,அதில் என் அமல் அதிகமாகவில்லையானால் அந்தநாள் எனக்கு கவலை தரும் நாள்.என இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

يقول الحسن البصري -رحمه الله تعالى-: "يا ابن آدم، انما أنت أيام"، تعيش في هذه الدنيا ألف يوم، الفي يوم، عشرة آلاف يوم، بقدر ما يقدر الله -تعالى- لك في الحياة، قال: "يا ابن آدم، إنما أنت أيام، كلما مضى يوم ذهب بعضك"
ஆதமின் மகனே! நீ உலகில் சில நாட்கள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறாய்.       ஒருநாள் கழிந்தால் உன் இருப்பில் குறைகிறது என்பதை புறிந்து கொள் என ஹஸனுல் பஸரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்

அப்படி அல்லாஹ்வினால் இந்த உம்மத்துக்கு தரப்பட்ட பொக்கிஷமான  பரக்கத்தான காலங்கள் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்துநாட்கள்.
அதன் சிறப்பு குறித்த ஹதீஸ்:

عن ابن عباس رضي الله عنه أن النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: " مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ اْلأيَّامِ الْعَشْرِ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ! وَلا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟! فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: وَلا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ، إِلا رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَيْءٍ " [صحيح : صحيح سنن الترمذي، (757)؛ صحيح سنن أبي داود، (2438)؛ صحيح سنن ابن ماجه (1753) ] .

துல்ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்தநாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி(ஸல்அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரேஅல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்செய்வதை விடவுமாஎன நபித்தோழர்கள் கேட்டார்கள்அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும்அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்

عن جابر بن عبد الله رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال: أفضل أيام الدنيا أيام العشر " [صحيح : صحيح الجامع الصغير، (1133

துன்யாவின் நாட்களில் மிகச்சிறந்தது அந்த பத்துநாட்களாகும்.
துல்ஹஜ் முதல் பத்துநாட்கள் நமக்கு தரப்பட்டதற்கான காரணம் நான்கு என பெருமக்கள் கூறுகின்றனர்.

1.ரமலானை தொடர்ந்து இந்தநாட்கள் வருவதால் ரமலானுடைய காலங்களில் செய்யவேண்டிய அமல்களில் குறைவு செய்திருந்தால் அதை சரிசெய்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு.

2.வசதிபடைத்தவர்கள் ஹஜ்ஜுக்கு சென்று அதிகமாக வணக்கங்கள் செய்து நன்மைகளை சம்பாதிக்கிறார்கள்.வசதியற்றவர்களும் தங்களின் இல்லங்களில் இருந்துகொண்டே அந்தநாட்களில் நிறைவாக வணக்கங்கள் புரிந்து நன்மைகளை பெற்றுக்கொள்ள.

3.இஸ்லாமிய கணக்கில் துல்ஹஜ் மாதம், ஆண்டின் இறுதிமாதமாக இருப்பதால் ஆண்டின் முடிவு வணக்கங்களால் அலங்கரிக்கப்படவேண்டு  ம் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக தரப்பட்டது.

4.இந்த தீன் நிறைவு பெற்றமாதம் துல்ஹஜ்மாதமாகும்.அல்லாஹுத்தஆ  லா அவனுடைய அருட்கொடையை நிறைவுசெய்துவிட்டு அதன் நினைவு  பரிசாக இந்த பத்துநாட்களை நமக்கு வழங்கியிருக்கிறான்.

சுருக்கமாகக்கூறினால்-இந்தபத்து நாட்கள் ரமலானுடைய இறுதிபத்துநாட்களுக்கு ஒப்பானதாகும்.

قال أبو عثمانَ النهديُ رحمه الله عن السلف: كانوا يعظمون ثلاثَ عشراتٍ: العشرَ الأخيرَ من رمضان، والعشرَ الأول من ذي الحجة، والعشرَ الأول من المحرم

முன்னோர்களான நல்லோர்கள் மூன்று பத்துக்ககளை கண்ணியப்படுத் துவர்.1.ரமலானின் இறுதிபத்து  2.துல்ஹஜ்ஜின் முதல்பத்து  3.முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து.என்று அபூஉஸ்மான் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்

துல்ஹஜ் 10 நாட்களின் சிறப்பிற்கான காரணம் என்ன?

قال الحافظ ابن حجر العسقلاني والذي يظهر أن السبب في امتياز عشر ذي الحجة لمكان اجتماع أمهات العبادة فيه, وهي الصلاة والصيام والصدقة والحج, ولا يتأتى ذلك في غيره. [ فتح الباري بشرح صحيح البخاري، 2/534

இதில் முக்கிய வணக்கங்களான தொழுகை,நோன்பு,சதகா,ஹஜ்,(குர்பானி) போன்ற வணக்கங்கள் சங்கமிக்கிறது என அல்லாமா இப்னுஹஜர் ரஹ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


இந்த பத்துநாட்களில் செய்யவேண்டிய வணக்கங்கள்:

1.அதிகமாக தஸ்பீஹ்,தஹ்மீத்,தஹ்லீல்.தக்பீர் போன்ற திக்ர்களில் ஈடுபடுவது.

، ففي هذه العشر يستحب الإكثار من ذكر الله تعالى والتكبير والتحميد والتهليل، فربنا سبحانه يقول: (وَيَذْكُرُواْ اسْمَ اللَّهِ فِى أَيَّامٍ مَّعْلُومَـاتٍ) [الحج:28]، وقد فسرت بأنها أيام عشر ذي الحجة، وقد استحب العلماء كثرة الذكر في هذه العشر، فقد كان ابن عمر يخرج إلى السوق في العشر فيكبر ويكبر الناس بتكبيره. فيستحب رفع الصوت بالتكبير في الأسواق والدور والطرق وغيرها؛ إعلانًا بحمد الله، وشكرًا على نعمه: (وَلِتُكَبّرُواْ اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ) [البقرة:185].

அறியப்பட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரை திக்ர்செய்யுங்கள் என குர்ஆன் கூறுகிறது.இந்தவசனத்தில் குறிப்பிடப்படும் நாட்கள் துல்ஹஜ்ஜின் பத்துநாட்கள் என முபஸ்ஸிரீன்கள் கூறுகின்றனர்.

மேலும் ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள் கடைவீதிக்குச்சென்றால் இந்த நாளில் தக்பீர் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.அவர்களுடன் மக்களும் தக்பீர் கூறுவர்.

இன்னும் ஒரு அறிவிப்பில்,இப்னு உமர் ரலி,அபூஹுரைரா ரலி ஆகிய இருவரும் தக்பீர் சொல்லுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.


وكان ابنُ عُمَرَ وأبو هُرَيْرَةَ يَخْرُجَانِ إلى السُّوقِ في أَيَّامِ الْعَشْرِ يُكَبِّرَانِ وَيُكَبِّرُ الناس بِتَكْبِيرِهِمَا) رواه البخاري معلقا.

2.அரபாவுடைய நாளில் நோன்பு வைப்பது.

عن أبي قتادةَ الأنصاري رضي الله عنه أنَ رسولَ الله سُئلَ عن صوم يوم عرفة فقال: "يكفر السنة الماضية والسنة القابلة" رواه مسلم

நபி ஸல் அவர்களிடம் அரபாவுடையநாளின் நோன்புபற்றி கேட்கப்பட்டது?
அது கடந்த ஆண்டின் பாவத்திற்கும்,வரும் ஆண்டின் பாவத்திற்கும் குற்றப்பரிகாரமாகும் என்று பதில் கூறினார்கள்.
அரபாவுடைய நோன்பு ஹாஜிகளுக்கு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

3.துல்ஹஜ் பத்தாம் நாள் குர்பானி கொடுப்பது.
ரமலானில் குரஆன் திலாவத் முக்கியத்துவம் பெறும்,மக்காவில் தவாப் முக்கியத்துவம் பெறும்,மதீனாவில் ஸலவாத் முக்கியத்துவம் பெறும்,அதைப்போலவே,துல்ஹஜ்ஜில் குர்பானி முக்கியத்துவம் பெறும்.


فعن عائشة - رضي الله عنها - قالت: قال رسول الله - صلى الله عليه وسلم -: (( ما عمل ابن آدم يوم النحر أحب إلى الله من إهراق الدم، وإنه ليؤتى يوم القيامة بقرونها وأشعارها وأظلافها، وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض، فطيبوا بها نفسا)). روى الترمذي وابن ماجه وصححه الألباني.

துல்ஹஜ் பத்தில் மனிதன் செய்யும் அமல்களில் அல்லாஹ்வுக்கு பிரியமானது குர்பானி கொடுப்பதாகும்.அந்த பிராணி நாளை மறுமையில் அதன் கொம்புகளுடன்,முடிகளுடன்,அதன் கால் குழம்புகளுடன் கொண்டுவரப்படும்.குர்பானி பிராணியின் இரத்தம் பூமில் விழும்முன் அல்லாஹ்விடம் அந்தஸ்து பெறும்.எனவே மனமகிழ்ந்து குர்பானி கொடுங்கள்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.



குர்பானி

உள்ஹிய்யா எனும் இந்த இபாதத்- மனிதன் இறைநெருக்கம் பெறுவதற்கும்,தியாக மனப்பான்மையை தன்னுள் வளர்த்துக்கொள்வதற்கு ம்,அல்லாஹ் தனக்கு வழங்கிய பொருளில் விசாலத்தன்மையை கடைபிடிப்பதற்கும்,அதை தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கும், -இந்த உம்மத்துக்கு தரப்பட்டிருக்கிறது.

அல்லஹுத்தஆலா திருக்குர்ஆனில் இரண்டு இடங்களில் உள்ஹிய்யா வை முதன்மை வணக்கமான தொழுகையுடன் சேர்த்து கூறுகிறான்.

يقول تعالى: (فَصَلّ لِرَبّكَ وَنْحَرْ) [التكاثر:2]،
ويقول -جل شأنه-: (قُلْ إِنَّ صَلاَتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى للَّهِ رَبّ الْعَـالَمِينَ * لاَ شَرِيكَ لَهُ) [الأنعام:162، 163

அது இந்த தீனின் அடையாளச்சின்னம் மாத்திரமல்ல,நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கும் இந்த உம்மதுக்கும் இருக்கிற ஆத்மார்த்த தொடர்பின் வெளிப்பாடாகும்.
இப்ராஹீம் அலை அவர்களின் ஷரீஅத்தில் இருந்த 40 சட்டங்கள், நபி ஸல் அவர்களின் உம்மத்துக்கும் சட்டமாக்கப்பட்டிருக்கிறது,அதில் குர்பானியும் ஒன்று என அல்லாமா பத்ர் ஆலம் தங்களின் தர்ஜுமான் சுன்னா என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்

அதனால்தான் ஸஹாபிகள் நபி ஸல் அவர்களிடம் இந்த உள்ஹிய்யா என்ன?என்று கேட்கிறார்கள்,இது உங்கள்தந்தை இப்ராஹீம் அலை அவர்க ளின் வழிமுறை என்றார்கள்.அதில் எங்களுக்கு என்ன? என மீண்டும் கேட்டபோது அதன் ஒவ்வொரு முடிக்கும் ஒரு நன்மை உண்டு என்றார்கள்

وقد أخرجه ابن ماجه و البيهقي في " سننه " و ابن عدي في " الكامل "  من طريق عائذ الله عن أبي داود عن زيد بن أرقم قال :" قال أصحاب رسول الله صلى الله عليه وسلم : يا رسول الله ما هذه الأضاحي ؟ قال : سنة أبيكم إبراهيم ، قالوا : فما لنا فيها يا رسول الله ؟ قال : بكل شعرة حسنة ، قال : فالصوف يا رسول الله ؟ قال : بكل شعرة من الصوف حسنة 

 குர்பானியின் முறைகளில் சிறிது மாற்றம் இருந்தாலும் எல்லா சமூகத்திலும் இந்த அமல் வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்பதை திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا

(22:34)
குர்பானியின் வரலாறு நபி ஆதம் அலை அவர்களின் காலத்திலிருந்து துவங்குகிறது.
ஹாபிலுக்கும் காபிலுக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் தீர்வுக்கு அவ்விருவரும் குர்பானி கொடுத்ததாக குர்ஆன் கூறுகிறது.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقّ إِذْ قَرّبَا قُرْبَاناً فَتُقُبّلَ مِن أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبّلْ مِنَ الاَخَرِ

ஆதமின் இரு மகன்கள் குர்பானி கொடுத்தபோது அவர்களில் ஒருவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது,மற்றவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அதைப்போல,ஹழ்ரத் சுலைமான் அலை அவர்கள் 22ஆயிரம் மாடுகளும் 1லட்சத்து இருபதாயிரம் ஆடுகளும் குர்பானி கொடுத்ததாக தஸ்கிரதுத்தவ்ராத் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி ஸல் அவர்கள் மதீனாவில் இருந்த பத்து ஆண்டுகளும் குர்பானி கொடுத்தார்கள்.

தங்களின் இறுதி ஹஜ்ஜில் 100 ஒட்டகங்கள் குர்பானி கொடுத்தார்கள் அதில் 63 தாங்களே அறுத்தார்கள்.மீதியை அலி ரலி அவர்களை அறுக்கச்சொன்னார்கள்

அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில்) இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்து வந்தார்கள். நானும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்துவந்தேன். (புகாரி)
வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவர் நம்முடைய ஈத்காவுக்கு  வர வேண்டாம் என எச்சரித்தார்கள்.

من وجد سعة ولم يضح فلا يقربن مصلانا" رواه أحمد وابن ماجه وحسنه الألباني

இந்த ஹதீஸை ஆதாரமாக கொண்டு இமாம் அபூஹனீபா ரஹ் அவர்கள் குர்பானி வசதிபடைத்தவர்களின் மீது வாஜிப் என்று கூறுகிறார்கள்.
 இமாம் ஷாபிஈ அவர்களிடத்தில் குர்பானி கொடுத்தல் சுன்னத்தே முஅக்கதாவாகும்.

உள்ஹிய்யாவின் சட்டங்கள்

உள்ஹிய்யாவில் நான்கு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

முதலாவது: உள்ஹிய்யா கொடுப்பவரின் வசதி.அதாவது ஜகாதின் நிஸாப் அளவை பெற்றிருக்கும் ஒவ்வருவரின்மீதும் குர்பானி வாஜிபாகும்.இதில் ஓராண்டு கழிந்திருக்கவேண்டும் என்பதை கவனிக்கப்படாது.
குர்பானி கொடுப்பவர் 'துல்ஹஜ்மாதம்' பிறை பார்த்ததிலிருந்து  குர்பானி கொடுக்கும் வரை தலைமுடி இறக்குவதோ, முடியை வெட்டுவதோ, நகம் தரிப்பதோ கூடாது.

இரண்டாவது:மார்க்கம் அனுமதித்த பிராணிகளை குர்பானி கொடுத்தல்.அதாவது ஒட்டகம்,மாடு,ஆடு,ஆகியவை.
இவைகளில் வயது கவனிக்கப்படவேண்டும்.ஒட்டகம் 5 வயது பூர்த்தியானது,மாடு 2 வயது பூர்த்தியானது,ஆடு 1 வயது முழுமை பெற்றது.
ஆறுமாத செம்மறியாடு நன்கு கொழுத்ததாக இருந்து அதை ஒரு வருடத்திய ஆடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு வருடத்திய ஆடு போல் தெரிந்தால் குர்பானி கொடுக்கலாம்.

மூன்றாவது:அறுக்கப்படும் பிராணிகள் குறைகளை விட்டும் நீங்கி இருக்க வேண்டும்.

நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்குஏற்றவையல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை, நோய்,ஊனம், கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! கொம்பிலும்,பல்லிலும் ஒருகுறை இருப்பதால் அதைக் கொடுக்க நான்விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,“உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு! மற்றவருக்கு ஹராமாக்கி விடாதே என்றுகூறினார்கள். அறிவிப்பவர்: பரா(ரலி) நூல்: நஸயீ 4293

இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத்தெரியக்கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நான்காவது:ஷரீஅத் ஆகுமாக்கிய நேரத்தில் குர்பானி கொடுப்பது.            
ஈதுல் ளுஹாவின் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சூரியன் உதயமான நேரத்திலிருந்து குர்பானி கொடுத்தல் துவங்குகிறது.
பெருநாள் தொழுகையை அடுத்து குத்பா ஓதி முடிந்தபின் குர்பானி கொடுத்தல் சிறந்ததாகும்.
                                                                                                                                       நூல்:
 மிஷ்காத்.

தல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய மூன்று நாட்களிலும் குர்பானி கொடுக்கலாம். இதில் குர்பானி கொடுக்க முதல் (பெரு) நாளே சிறந்ததென ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலீ, ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹும் போன்ற நபித் தோழர்கள் அறிவிக்கின்றனர்.
                                                                                                                                         நூல்: ஹிதாயா.

உள்ஹிய்யாவின் சுன்னத்துக்கள்,மற்றும் ஒழுக்கங்கள்:

1.குர்பானி பிராணிக்கு வேதனை தராமல் இருக்க கூர்மையான கத்தியை தேர்வு செய்தல்,ஒரு பிராணி கண் முன் இன்னொரு பிராணியை அறுக்கக்கூடாது,மேலும் அதற்கு முன் கத்தியை தீட்டக்கூடாது.

وفي الحديث الّذي رواه مسلم عن شدّاد بن أوس رضي الله عنه أنّ النبيّ صلّى الله عليه وسلّم قال:
(( إِنَّ اللهَ كَتَبَ الإِحْسَانَ فِي كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا القِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذِّبْحَةَ

" مَرَّ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم بِرَجُلٍ يَشْحَذُ سِكِّينَهُ أَمَامَ الأُضْحِيَةِ، فَقَالَ: (( أَفَلاَ قَبْلَ هَذَا ؟ أَتُرِيدُ أَنْ تُمِيتَهَا مَوْتَـَتيْنِ، هَلاَّ حَدَدْتَ شَفْرَتَكَ قَبْلَ أَنْ تُضْجِعَهَا ؟)).

நபி ஸல் அவர்கள் ஒரு மனிதரை கடந்து சென்றார்கள்.அவர் உள்ஹிய்யா பிராணிக்கு முன் கத்தியை தீட்டிக்கொண்டிருந்தார்.அப்போது நபி ஸல் அவர்கள்,முன்னரே இதைச்செய்திருக்க வேண்டாமா?அதற்கு இரண்டு மரணத்தை கொடுக்கிறீரா?என கண்டித்தார்கள்.

2.குர்பானி பிராணியை இடது பக்கமாக படுக்கவைத்து,அதன் முகத்தை கிப்லாவை நோக்கி திருப்புதல்.
كما يشير إليه حديث جابر رضي الله عنه عند أبي داود حين قال:" كَانَ النَّبِيُّ صلّى الله عليه وسلّم إِذَاأَرَادَ أَنْ يَذْبَحَ ذَبِيحَتَهُ وَجَّهَهَا

3.அறுக்கும்போது பின்வரும் துஆவை ஓதுதல்
:" بسم الله، والله أكبر، اللهمّ هذا منك ولك، اللهمّ تقبّل منّي 

4.உயிர் முழுமையாக வெளியாகும் வரை காத்திருத்தல்.
، قال عمر بن الخطّاب رضي الله عنه:

" لاَ تَعْجَلُوا الأَنْفُسَ حَتَّى تُزْهَقَ " [انظر " فتح الباري "(9/526)].

5.குர்பானி கொடுப்பவரே அறுத்தல்.

No comments:

Post a Comment