Thursday 6 March 2014

பெண்களுக்கு எல்லா உரிமையும் கொடுத்த இஸ்லாம்.


ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பலவகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதன் முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

பிறகு, கோபன்ஹேகனில் 1910ல் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப்பட்டது. அப்போது, சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

இந்த வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911ல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின், மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் 1913ல் ஒன்று கூடி, மார்ச் 8ம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

 இவ்வாறு கொண்டாடுவதால் மட்டும் பெண்களுக்கு உரிமையும். உண்மையான பாதுகாப்பும் கிடைத்துவிடுமா. அது இஸ்லாத்தால் மட்டுமே முழுமையாக கொடுக்க முடியும்…

இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அதன் வருகை முழுமனித சமுதாயத்திற்கும் ஓர் அருளாக அமைந்தது என்பதை மனித வரலாற்றை நடுநிலையோடு பார்க்கின்ற எவரும் எளிதில் புரிந்து கொள்வார்.

 இஸ்லாம் எல்லோருக்கும் அருளாக இருந்தாலும் ஒப்பீட்டு ரீதியில் அது பெண்ணினத்திற்கே பேரருளாக அமைந்தது என்பது ஒரு பெரிய உண்மையாகும். ரஸுலுல்லாஹ்வின் வருகையும் இஸ்லாத்தின் தோற்றமும் நிகழ்ந்த அந்த கால கட்டத்தை சரியாக அறியும் ஒருவர் இவ்வுண்மையை ஏற்கத் தயங்க மாட்டார்.

அன்று பெண் என்பவள்,

   1. ஆணின் அடிமை
   2. அவனின் சிற்றின்பப் பொருள்
   3. ஒருவர் விட்டுச் செல்லும் வாரிசுச் சொத்தின் ஓர் அங்கம்
   4. மனிதப் பிறவியாக கருதப்பட முடியாதவள்
   5. ஒரு தீமை, அத்;தியவசியத் தீமை
   6. குடும்பத்தின் அவமானச் சின்னம்
   7. ஒரு சுமை
   8. எத்தகைய உரிமையையும் பெறத் தகைமையற்றவள் என்றெல்லாம் கருதப்பட்டாள்.

பெண்ணினம் இவ்வாறு மிக இழிவாக நோக்கப்பட்டும் கேவலமாக நடத்தப்பட்டு வந்த ஒரு காலச் சூழ்நிலையிலேயே நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் தூதைச் சுமந்து வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த தூது பொதுவாக மனித விடுதலையை இலக்காக கொண்டிருந்தது. குறிப்பாகவும் சிறப்பாகவும் பெண் விடுதலையை அது அடிநாதமாக கொண்டிருந்தது. இஸ்லாத்தை ஒரு பெண் விடுதலை மார்க்கம் என வர்ணித்தால் அது மிகையாகாது.

இஸ்லாத்தை ஏற்ற முதல் மனிதர் ஒரு பெண் என்பதும் இஸ்லாத்திற்காக முதலில் உயிர்த்தியாகம் செய்தவர் ஒரு பெண் என்பதும் நினைவு கூரத்தக்கதாகும்.

இஸ்லாம்,

   1. உயிருடன் புதைக்கப்பட்ட பெண்ணுக்கு உயிர் கொடுத்து காத்த மார்க்கம்.
   2. வாரிசுச் சொத்தில் பண்டத்துடன் பண்டமாக பகிர்ந்தளிக்கப்பட்டவளுக்கு பண்டத்தில் பங்கு பெற்றுக் கொடுத்த மார்க்கம்.
   3. அவமானச் சின்னமாக கருதப்பட்டவளை சுவனத்து அரசியாக, தனது பெற்றோரை நரகம் செல்ல விடாமல் காக்கும் பெரும் பாக்கியமாக மாற்றிய மார்க்கம்.
   4. அகதியின் நிலையில் இருந்தவளை அதிதியின் நிலைக்கு கொண்டு வந்த மார்க்கம்.
   5. வெறும் சிற்றின்பப் பொருளாகக் கருதப்பட்டவளுக்கு சுவனத்திற்கான கடவுச்சீட்டை வழங்கும் தாய்மை என்ற உயர் அந்தஸ்த்தை வழங்கிய மார்க்கம்

பிறப்பதில் உள்ள உரிமை, அறிவைப் பெருக்குவதில் உரிமை, கண்ணியம் கொடுக்கும் ஹிஜாப், திருணத்தில் உரிமை, திருமண விலக்கிலும் இஸ்லாம் வழங்கியுள்ள உரிமை, வாரிசு உரிமை என்று எல்லாவற்றிலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துள்ள ஒரே மார்க்கம் இனிய இஸ்லாமிய மார்க்கம்.

கருத்துரிமை…

وكان النبي صلى الله عليه وآله وسلم قال لأصحابه بعد ما كتب كتاب الصلح يوم الحديبية: إنحروا بدنكم وأحلقوا رؤوسكم.
فإمتنعوا وقالوا: كيف ننحر ونحلق ولم نطف بالبيت ولم نسع بين الصفا والمروة.
فإغتم رسول الله صلى الله عليه وآله وسلم وشكا ذلك لأم سلمة فقالت: يا رسول الله إنحر أنت وأحلق.
فنحر رسول الله صلى الله عليه وسلم وحلق.
فنحر القوم).
ومما يدل على رجاحة عقلها أيضا ".
روي عن عبد الله بن رافع قال: كانت أم سلمة تحدث أنها سمعت النبي صلى الله عليه وسلم يقول على المنبر وهي تمتشط: أيها الناس، فقالت لماشطتها: لفي رأسي.
قالت: فديتك إنما يقول: أيها الناس.
قالت أم سلمة: ويحك أو لسنا من الناس.
فلفت رأسها وقامت في حجرتها فسمعته يقول: أيها الناس بينما

     ஹிஜ்ரி – 6, துல்கஅதா மாதம் கஃபாவை உம்ரா செய்ய நபி (ஸல்) 1400 அல்லது 1500 தோழர்களோடு புறப்பட்டு வந்தார்கள்.

     இறுதியில் உம்ரா செய்யவிடாமல் நபியும், நபித் தோழர்களும் தடுக்கப்பட்டனர் ஒப்பந்தம் கையெழுத்தானது பிரபல்யமாக பேசப்படுகிற
ஹு தைபிய்யா ஒப்பந்தம் தான் அது.

     பின்பு நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்று தோழர்கள நோக்கி குர்பானி பிராணியை அறுத்து பலியிடுங்கள் என்றார்கள். ஆனால் தோழர்களில் ஒருவர் கூட அதற்கு முன் வரவில்லை. நபியவர்கள் மூன்று முறை கூறியும் யாரும் முன் வராத போது தமது கூடாரத்தில் நுழைந்து துணைவியார் உம்முஸலமா (ரலி) அவர்களிடம் தோழர்கள் நடந்து கொண்டதைக் கூறினார்கள். சற்றும் தாமதிக்காமல் அல்லாஹ்வின் தூதரே மக்கள் குர்பானியை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறீர்களாமுதலில் நீங்கள் சென்று யாரிடமும் பேசாமல் உங்களது ஒட்டகத்தை அறுத்துவிட்டு தலைமுடி இறக்குபவரை அழைத்து உங்களது தலைக்கு மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் என்றார்கள். நபி (ஸல்) அவர்களும் அன்னை உம்முஸலமா (ரலி) அவர்கள் சொன்னது போன்றே நடந்து கொண்டார்கள். இதைக் கண்ணுற்ற தோழர்களும் தமது பிராணிகளை பலியாக்கிவிட்டு சிலர் மொட்டையடித்தும், சிலர் தலை முடியை குறைத்தும் கொண்டனர்.

நூல். நபியின் மனைவியர்கள். பாபு .உம்முஸல்மா(ரலி

நான் அல்லாஹ்வின் தூதர் என்னிடமே கருத்து சொல்கிறாயா? எனக்கே ஆலோசனை சொல்கிறாயா? என்று நபி (ஸல்) அவாகள் ஆவேசப்படவில்லை மாறாக அவர்களின் கருத்தை அங்கீகரிக்கிறார்கள்.



عن عبد الله بن مصعب قال: "قال عمر رضي الله عنه: "لا تزيدوا مهور النساء على أربعين أوقية، وإن كانت بنت ذي الغُصّة - يعني: يزيد بن الحصين الحارثي - فمن زاد ألقيت الزيادة في بيت المال، فقالت امرأة من صفّ النساء طويلة، في أنفها فَطْسٌ: "ما ذاك لك"، قال: "ولم؟" قالت: "لأن الله تعالى يقول: {وآتَيْتُم إِحْدَاهُنَّ قِنْطَاراً فَلاَ تَأْخُذوا منه شَيئاً أَتَأْخُذونَه بُهْتَاناً وَإِثْماً مُّبِيناً}" [النساء: 20]، فقال عمر رضي الله عنه: "امرأة أصابت ورجل أخطأ".

ஆண்கள் பெண்களுக்கு மஹர் அளவுக்குமீறி கொடுத்து வந்த சூழ்நிலையில் உமர் ரலி அவர்கள் மக்களைக் கூட்டி இனிமேல் 40ஊக்கியாக்களைவிட அதிகமாக மஹரை நீங்கள் கொடுக்க வேண்டாம் என்று கூறியபோது அக்கூட்டத்திலிருந்து ஒரு பெண்மனி ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த ஒரு ஜனாதிபதியை நோக்கி பேசினார்கள் உனக்கு அது (அந்த உரிமை) இல்லை. உடனே உமர் ரலி அவர்கள் காரணத்தை வினவியபோது அப்பெண்மனி கூறினார்கள். அல்லாஹ்வே தன் திருமறையில் நீங்கள் அப்பெண்மனிகளில் ஒருவருக்கு குவியல் அளவிற்கு கொடுத்தாலும் அதிலிருந்து ஒரு வஸ்துவைக்கூட நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டான் என்றார்கள். அப்பொழுது உமர் ரலி அவர்கள் கூறினார்கள் பெண் (சரியானதை) அடைந்துவிட்டால் ஆண் தவறிழைத்துவிட்டான். இச்செய்தியை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் பெண்களுக்குண்டான மஹரை இஸ்லாம் சரியான முறையில் கொடுக்கச் சொல்கிறது. அதனை ஒரு ஜனாதிபதி நினைத்தாலும் கூட மாற்றி அமைக்கின்ற உரிமையோ, சக்தியோ கிடையாது என்று இச்சம்பவத்தின் மூலம் உணருகின்ற அதே வேளேயில் ஒரு ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராகவும் தன் கருத்தை பதிவு செய்கின்ற உரிமையை ஒரு சாதாரன பெண்ணுக்கும் இஸ்லாம் வழங்குகிறது என்பதே ஆகும். ஹதீஸ்களில் அப்பெண்ணின் பெயர் குறிப்பிடப்படாமல் இருப்பதிலிருந்து முன்பின் அறிமுகமில்லாத அடிதட்டு குடிமக்களில் கட்டுப்பட்ட ஒரு பெண்ணாகத்தான் அவர்கள் இருப்பார்கள் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. அப்பெண்மனி தனக்கு எதிராக பேசிவிட்டார்கள் என்று யோசிக்காமல் அப்பெண்மனி சரியானதை சொல்லிவிட்டால் என்று உமர் அவர்கள் பாராட்டியது அவர்களின் நீதத்தையும் இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்குன்டான உரிமைகளையும் நமக்கு போதிக்கின்றது

உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்.


عن عدي بن ثابت، عن رجل من الأنصار قال: لما توفي أبو قَيْس -يعني ابن الأسلت-وكان من صالحي الأنصار، فخطب ابنَه قيس امرأته، ه وسلم فقالت: إن أبا قيس تُوفِّي. فقال: "خيرا". ثم قالت: إن ابنه قيسًا خطبني وهو من صالحي قومه. وإنما كنت أعده ولدًا، فما ترى؟ فقال (9) لها: "ارجعي إلى بيتك". قال: فنزلت هذه الآية { وَلا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ مِنَ النِّسَاءِ
    

     கப்ஷா (ரலி) அவர்கள்  அண்ணலாரின் முன்வந்து அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் அபுகைஸ் இறந்து விட்டார் அவரின் மகன் கைஸ் என்னை திருமணம் செய்ய முயற்சிப்பதாக நான் அறிகிறேன். மேலும் நான் அவரை மகனாகத்தான கருதுகிறேன். என் விஷயத்தை பாதிப்பை உங்களிடம் உணர்த்திவிட்டேன் என தன் உள்ளத்து உணர்வுகளை மாநபி (ஸல்) அவர்களிடம் வந்து கொட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள் சிறிது நேரத்தில் அல்லாஹ்.

وَلَا تَنْكِحُوا مَا نَكَحَ آَبَاؤُكُمْ مِنَ النِّسَاءِ إِلَّا مَا قَدْ سَلَفَ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَمَقْتًا وَسَاءَ سَبِيلًا

     ”மேலும், உங்கள் தந்தையா மணமுடித்திருந்த பெண்களை நீங்கள் ஒருபோதும் மணம் முடித்துக் கொள்ளாதீர்கள் முன்னால் நடந்த்து நடந்துவிட்டது. யதார்த்தத்தில் இது ஒரு மானக்கேடான, தண்டனைக்குரிய செயலாகும், மேலும் கீழ்த்தரமான செயலுமாகும். 
       
 (அல்குர்ஆன்; 4;22)

எனும் இறைவசனத்தை இறக்கியருளினான்.

     இஸ்லாம் பெண்களின் உணர்வுகளை எந்தளவிற்கு மதித்த்து என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

அவளது மாதவிடாய்க் காலத்தில் அவளைத் தீண்டத் தகாத பிறவியாக இன்னும் பல்வேறு சமூகங்கள் அவளை நடத்தியும், அக்காலத்தில் அவளை வாழும் இடங்களில் இருந்து தனிமைப்படுத்தியும் வருவது நாம அறிந்ததே.

قَالَ أَبُو هُرَيْرَةَ
بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ إِذْ قَالَ يَا عَائِشَةُ نَاوِلِينِي الثَّوْبَ فَقَالَتْ إِنِّي لَا أُصَلِّي قَالَ إِنَّهُ لَيْسَ فِي يَدِكِ فَنَاوَلَتْهُ

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இருக்கும் போது ஆயிஷா ரளியல்லாஹ¤ அன்ஹா அவர்களை அழைத்து ஆயிஷாவே! அந்த ஆடையை என்னிடம் எடுத்துத் தாருங்கள் என்று கேட்டார்கள். நான் தொடத் தகாதவளாக உள்ளேன். (அதாவது மாதவிடாய்ப் பெண்ணாக உள்ளேன்) என்று கூறினேன். மாதவிடாய் உனது கையில் இல்லையே, என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதும், அந்த ஆடையை எடுத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்தேன்
. (அறிவிப்பவர் : ஆயிஸா ரளியல்லாஹ¤ அன்ஹா

(நூல் : நஸயீ).

.

குடும்ப வாழ்வில் பெண்ணுக்கு வழங்கப்படுகிற உரிமை

ஒரு பெண்ணை அவளுடைய அனுமதி இல்லாமல் திருமணம் முடித்துக் கொள்ள இஸ்லாம் ஒரு போதும் இடம் தருவதில்லை. தோலில் போட்டு சுமந்த தந்தையாக இருந்தாலும் முதலில் மணப்பெண்ணின் அனுமதியும், சம்மதமும் இருப்பது திருமணத்திற்கு இஸ்லாம் வைத்திருக்கின்ற நிபந்தனை.

 பெருமானார் ஸல் அவர்கள் கூறுவார்கள்

أَنَّ أَبَا هُرَيْرَةَ حَدَّثَهُمْ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تُنْكَحُ الْأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ وَلَا تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا قَالَ أَنْ تَسْكُتَ

கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதத்தைப் பெறாமல் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்று என்று நபியவர்கள்  கூறியபோது, 'அல்லாஹ்வின் தூதரே அவளது சம்மதம் எப்படி பெறப்படல் வேண்டும். என ஸஹபாக்கள் வினவியபோது நபி (ஸல்) அவர்கள் 'அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்றார்கள் 

நூல்.புகாரி, அஹ்மத்)

حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ حَدَّثَنَا مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ وَمُجَمِّعٍ ابْنَيْ يَزِيدَ بْنِ جَارِيَةَ الْأَنْصَارِيِّ عَنْ خَنْسَاءَ بِنْتِ خِذَامٍ الْأَنْصَارِيَّةِ
أَنَّ أَبَاهَا زَوَّجَهَا وَهِيَ ثَيِّبٌ فَكَرِهَتْ ذَلِكَ فَأَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ نِكَاحَهَا

ஹன்ஸா பின்த கிதாம் அல்அன்ஸாரியா என்ற விதவைப் பெண்ணை அவளின் தந்தை அவளது விருப்பத்திற்கு மாற்றமாக ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார். அப்பெண் இது பற்றி நபியவர்களிடம் முறைப்பாடு செய்யவே அன்னார் அத்திருமணத்தை செல்லுபடியற்றதாக ஆக்கினார்கள்.

நூல்.. புகாரி, திர்மிதி, இப்னு மாஜா)

கணவன் மனைவிக்கு தரவேண்டிய உரிமை


ஒரு கணவன் தன் மனைவியடத்தில் ஒழுக்கமுள்ளவராகவும், சிறந்தவராகவும் இருக்க வேண்டும். அவர்களை நன்முறையில் நடத்த வேண்டும். தான் வைத்த்து தான் சட்டம் என்ற ரீதியில் கட்டினமனைவியை துன்புரறுத்தவோ, விரட்டி அடிக்கவோ கணவனுக்கு உரிமையில்லை. அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுவான்
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ ) النساء/19

அவர்களிடத்தில் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள்.

وقوله صلى الله عليه وسلم : ( خَيْرُكُمْ خَيْرُكُمْ لأَهْلِهِ وَأَنَا خَيْرُكُمْ لأَهْلِي ) رواه الترمذي

குடும்பத்தாரிடத்தில் சிறந்தவராக இருப்வர் உங்களில் சிறந்தவராக இருப்பார் நான் என்னுடைய குடும்பத்தாரிடத்தில் சிறந்தவராக இருக்கின்றேன் என்று பெருமானார் ஸல் கூறியுள்ளார்கள்.

" عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ:
إِنَّ الرَّجُلَ إِذَا سَقَى امْرَأَتَهُ مِنَ الْمَاءِ أُجِرَ.

ஒரு கணவன் தன் மனைவிக்கு தண்ணீர் புகட்டினால் கூட அதற்கு கூலி கொடுக்கப்படும் என்று பெருமான் ஸல் கூறினார்கள்.

عَنِ الأَسْوَدِ قَالَ سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - يَصْنَعُ فِى أَهْلِهِ قَالَتْ كَانَ فِى مِهْنَةِ أَهْلِهِ ، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ قَامَ إِلَى الصَّلاَةِ .

பெருமானார் ஸல் வீட்டில் தன் குடும்பத்தாரிடத்தில் என்ன செய்வார்கள் என்று கேட்கப்பட்டபோது ஆயிஷா அம்மையார் கூறினார்கள் தன்னுடைய குடும்பத்தாருடைய வேலையில் இருப்பார்கள். தொழுகைநேரம் வந்துவிட்டால் தொழுகைக்கு சென்றுவிடுவார்கள்.

இப்படி கணவன் மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் இஸ்லாம் அழகாக பட்டியலிடுகின்றது. வீட்டிற்கு வெளியே உழப்பதோடு மட்டும் கணவனுடைய பொறுப்பு முடிந்து விடாது தன் மனைவியினுடைய வீட்டு வேலையிலும் கணவன் பங்கெடுத்து ஓர் பாட்னராக இருக்கவேண்டும். அவளுக்கு ஓர் ஒத்தாசையாகவும் இருக்கவேண்டும். நல்ல மனிதன் என்பவன் அவனுடைய வெளிப்பழக்கவழக்கங்களை வைத்து மட்டும் எடைப்போடப்படுவது கிடையாது வீட்டிற்கு சிறந்தவனே நாட்டிற்கும் சிறந்தவனாக இருப்பான் என்பதையும் பெருமானார் உணர்த்தியுள்ளார்கள்

نَّ رَجُلًا جَاءَ إلَى عُمَرَ يَشْكُو إلَيْهِ خُلُقَ زَوْجَتِهِ فَوَقَفَ بِبَابِهِ يَنْتَظِرُهُ فَسَمِعَ امْرَأَتَهُ تَسْتَطِيلُ عَلَيْهِ بِلِسَانِهَا وَهُوَ سَاكِتٌ لَا يَرُدُّ عَلَيْهَا فَانْصَرَفَ الرَّجُلُ قَائِلًا إذَا كَانَ هَذَا حَالَ أَمِيرِ الْمُؤْمِنِينَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَكَيْفَ حَالِي فَخَرَجَ عُمَرُ فَرَآهُ مُوَلِّيًا فَنَادَاهُ مَا حَاجَتُك يَا أَخِي فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَشْكُو إلَيْك خُلُقَ زَوْجَتِي وَاسْتِطَالَتَهَا عَلَيَّ فَسَمِعْتُ زَوْجَتَكَ كَذَلِكَ فَرَجَعْت وَقُلْت إذَا كَانَ هَذَا حَالَ أَمِيرِ الْمُؤْمِنِينَ مَعَ زَوْجَتِهِ فَكَيْفَ حَالِي فَقَالَ لَهُ عُمَرُ إنَّمَا تَحَمَّلْتُهَا لِحُقُوقٍ لَهَا عَلَيَّ إنَّهَا طَبَّاخَةٌ لِطَعَامِي خَبَّازَةٌ لِخُبْزِي غَسَّالَةٌ لِثِيَابِي رَضَّاعَةٌ لِوَلَدِي وَلَيْسَ ذَلِكَ بِوَاجِبٍ عَلَيْهَا وَيَسْكُنُ قَلْبِي بِهَا عَنْ الْحَرَامِ فَأَنَا أَتَحَمَّلُهَا لِذَلِكَ فَقَالَ الرَّجُلُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ وَكَذَلِكَ زَوْجَتِي قَالَ فَتَحَمَّلْهَا يَا أَخِي فَإِنَّمَا هِيَ مُدَّةٌ يَسِيرَةٌ

ஹழ்ரத் உமர் ரலி அவர்களிடம் ஒரு மனிதர் தன் மனைவியின் தீய குணத்  தை முறையிட வந்து ஜனாதிபதி உமர் ரலி அவர்களின் வாசலில் காத்து நின்றார்.அப்போது உள்ளே உமர் ரலி அவர்களின் மனைவி உமர் ரலி அவர்களை சப்தமிட்டு கடும் வார்த்தையால் பேசிக்கொண்டி
ருந்ததை செவியுற்று திடுக்கிட்டுப்போனார்.

ஜனாதிபதி நிலையே இப்படி என்றால் நாம் அவரிடம் முறையிட்டு என்ன பயன்? என்று எண்ணியவராக இடத்தை காலி செய்தார்.
அப்போது எதார்த்தமாக வெளியே வந்த உமர் ரலி அவர்களிடம் என்ன விஷயம்? என விசாரித்தார்கள்.

அவர் தான் வந்த நோக்கத்தயும் இப்போது திரும்பிச்செல்லும் காரணத்தையும் கூறியபோது உமர் ரலி அவர்கள் தன்னிலை விளக்கம் தந்தார்கள்.

என் மனைவியின் கடும் சொல்லை நான் தாங்கிக்கொள்கிறேன் ஏன் தேரியுமா? எனக்காக அவள் சமையல்காரியாக தன்னை மாற்றிக்கொள்கிறாள்.என் ஆடைகளை துவைப்பதில் தன்னை வண்ணாத்தியாக மாற்றிக்கொள்கிறாள்.என் குழந்தைக்கு தன் இரத்தத்தை பாலாக கொடுக்கிறாள்.நான் ஹராமான வழியில் சென்றுவிடாமல் என்னை காப்பாற்றுகிறாள்.எனக்காக அவள் இவ்வளவு தியாகம் செய்யும்போது அவளுக்காக நான் ஏன் இந்த சின்ன சொல்லை தாங்கக்கூடாது?என்றார்கள்.

நூல். குலபாஹு ராஸிதீன்.

சொத்துரிமை:

ஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்தில் பங்குண்டு! 1956 ஜூலை 4ம் தேதி அன்று இந்திய (இந்து)வாரிசு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் தான் சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டு (தனி சொத்தில் மட்டும். பங்கு சொத்தில் இல்லை) என இந்திய அரசியலமைப்பு சொன்னது!   2005ம் ஆண்டு வெளிவந்த சட்டதிருத்தத்தின்படி  தனிசொத்திலும் பங்குசொத்திலும் உரிமை உண்டு என கூறப்பட்டது.  ஆனால் 7ம் நூற்றாண்டிலேயே இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் உரிமை கிடைத்துவிட்டது.  எவ்வித காத்திருப்புகளும் இல்லை! எவ்வித போராட்டங்களும் இல்லை! எவ்வித கெஞ்சுதல்களும் இல்லை!  இந்த பங்கீடு ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் கட்டாயக் கடமை ஆகும். இதை நிறைவேற்றியே ஆக வேண்டும். 

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு. என்று உங்கள் பிள்ளைகள் விசயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகின்றான். 
அல்-குர்ஆன் (4:11)

குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்குண்டு. பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்குண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. அல்-குர்ஆன் (4:7)

     ஒருநாள் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களின் முன்வந்து நின்று அல்லாஹ்வின் தூதரே என் கணவர் இறந்துவிட்டார். என் கணவரின் சகோதரர் எங்களுக்கு என் கணவரின் சொத்தில் எந்தப் பங்கும் இல்லை எனக்கூறி விரட்டிவிட்டார். இதோ பாருங்கள் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர் என பரிதாபத்துடன் கூறி நின்றாள்.

     ஆம் ஸஅதுப்னு ரபீஃ (ரலி) என்கிற நபித்தோழரின் மனைவி தான் அவர்கள். உஹத் களத்திற்குச் சென்ற ஸஅத் அங்கேயே வீர மரணமடைந்து போவார் என்று அப்பெண்மணி நினைத்துக்கூட பார்க்கவில்லை.

     அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஹத் யுத்தம் முடிந்த பிறகுத ஸஅத் இப்னு ரபீஃ (ரலி) அவர்களின் தியாகம் குறித்து அல்லாஹ் ஸஅதுக்கு அருள்புரிவானாக! அவர் வாழும் போதும் இறக்கும் போதும் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் நலம் நாடுபவராகவே அமையப் பெற்றிருந்தார்என சிறப்பித்து துஆ செய்தார்கள்.

     அந்த சிறப்பிற்கு சொந்தமான ஸஅதின் மனைவிதான் தன் இரண்டு பெண்மக்களோடு நபிகளார் முன் வந்து நின்று தனது அவலத்தை கூறிநின்றார்.
     நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் உன் விஷயத்தில் தீர்வை தரும் வரை பொறுமையாக இரு என்று கூறி ஸஅது (ரலி) அவர்களின் மனைவியை அனுப்பிவைத்தார்கள்.
பின்பு தான் அல்லாஹ்...

     ”உங்களுடைய பிள்ளைகள் குறித்து அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு ஏவுகிறான். ஓ ஆணின் பங்கு இரு பெண்களின் பங்கிற்கு சம்மானது (இறந்து போனவருக்கு) இரண்டுக்கும் மேற்பட்ட பெண்மக்கள் இருந்தால் இறந்தவர் விட்டச் சென்ற சொத்தில் மூன்றில் இரு பங்கு அர்களுகுரியதாகும். மேலும் ஒரு மகள் மட்டும் இருந்தால் (சொத்தில் ) பாதி அவளுக்கியதாகும் இறந்து போனவருக்கு குழந்தை இருப்பின் அவருடைய பெற்றோரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கு உண்டு அவருக்கு குழந்தைகள் இல்லாமல் பெற்றோர் மட்டுமே இருப்பின் தாய்க்கு மூன்றில் ஒரு பங்கு அளிக்கப்பட வேண்டும். அவருக்கு சகோதர, சகோதரிகளிருந்தால் தாய்க்கு ஆறில் ஒரு பங்கு உண்டு இறந்து போனவர் செய்த மரண சாசனம் (வஸிய்யத்) நிறைவேற்றப்பட்ட பின்பும் (அவர் மீதுள்ள) கடன் அடைக்கப்பட்ட பின்பும் தான் (சொத்துக்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்) உங்களுடைய பெற்றோர்களிலும், உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வதில் யார் மிக சமீபமாக  இருப்பா என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள் (இப் பங்குகளை) அல்லாஹ்வே நிர்ணயம் செய்துள்ளான் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் நுட்பமானவனாகவும் இருக்கின்றான்.                                         

(அல்குர்ஆன்; 4;11)
இவ்வசனத்தை இறக்கியருளினான்.

     இவ்வசனம் அருளப் பெற்றதும் ஸஅத் (ரலி) அவர்களின் சகோதரரை நபிகளார் சபைக்கு அழைத்து வரச் செய்து

     ஸஅதின் பெண்மக்களுக்கு மூன்றில் இரு பங்கையும் ஸஅதின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கொடுத்துவிட்டு மீதமுள்ளதை நீ எடுத்துக்கொள் எனக் கூறினார்கள்.

     நூல் உஸ்துல்காபா, பாகம் -2, பக்கம்- 277






பெண் குழந்தையை வளர்ப்பதில்

عن عائشة قالت : جاءتني مسكينة تحمل ابنتين لها فأطعمتها ثلاث تمرات فأعطت كل واحدة منهما تمرة ورفعت إلى فيها تمرة لتأكلها فاستطعمتاها ابنتاها فشقت التمرة التي كانت تريد أن تأكلها بينهما فأعجبني حنانها فذكرت الذي صنعت لرسول الله صلى الله عليه و سلم فقال : ( إن الله قد أوجب لها الجنة وأعتقها بها من النار )
ابن ماجة

அன்னை ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் ஒரு ஏழையான மிஸ்கீன் பெண்மணி என்னிடத்தில் தன்னுடைய இரு குழந்தைகளையும் சுமந்து வந்தாள். எனவே நான் அவளுக்கு ஒரு பேரித்தம் பழத்தை கொடுத்தேன். அதனை அவள் சாப்பிடுவத்ற்கு கரத்தை தன் வாயின் பக்கம் நீட்டியபோது அவளுடைய இரு குழந்தைகளும் அப்பழத்தை கேட்டன. எனவே அவள் அந்தப் பழத்தை இரண்டாக பிழந்து தன்னுடைய இரு குழந்தைக்கும் ஊட்டினாள். அவளுடைய இரக்கம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இதை நான் பெருமானார் ஸல் அவர்களிடத்தில் கூறினேன் அப்பொழுது பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள் நிச்சையமாக அல்லாஹ்வாகிறவன் அப்பெண்ணிற்கு சொர்கத்தை கட்டாயமாக்கிவிட்டான் இன்னும் அவளை நரகத்திலிருந்து விடுவித்துவிட்டான் என்றார்கள்.



عن عُقْبَةَ بْنَ عَامِرٍ رضي الله عنه قال : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( مَنْ كَانَ لَهُ ثَلاثُ بَنَاتٍ ، فَصَبَرَ عَلَيْهِنَّ ، وَأَطْعَمَهُنَّ وَسَقَاهُنَّ وَكَسَاهُنَّ مِنْ جِدَتِهِ كُنَّ لَهُ حِجَابًا مِنْ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ

 ابن ماجه (3669)

எவரிடத்தில் மூன்று பெண்மக்கள் இருந்து அவர்களடித்தில் பொருமையோடு நடந்து அவர்களுக்கு உண்ண உணவும், குடிக்க பானமும், உடுத்த உடையும் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து கொடுத்தாரோ அவருக்கு அந்த பெண்பிள்ளைகள் கியாமநாளிலே நரகத்திலிருந்து திரையாக, தடுப்பாக ஆகியிருப்பர் என்று பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள்.

 தண்டனையில் சமஉரிமை..

ஒரு பக்கம் சமத்துவம் எனக் கூறிக்கொண்டு மறுபக்கம் பெண் என்பதற்காக கொலைகாரப் பெண்ணுக்காக சலுகைகள் கேட்கின்ற கேலிக் கூத்தைப் பார்க்கிறோம். 20 ஆம் நூற்றாண்டில் கூட உயிர்கள் அனைத்தும் சமம் எனக் கருதப்படாத போது ஆறாம் நூற்றாண்டிலேயே இருபாலாரின் உயிர்களும் சமமானவையே என்று இஸ்லாம் பிரகடனம் செய்தது.]

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنثَى بِالأُنثَى

நம்பிக்கையாளர்களே! கொல்லப்பட்டவர்களுக்கு (கொலையாளிகளின் மீது) கொலைத் தண்டனையளிப்பது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவருக்காக (அவரைக் கொன்ற) சுதந்திரமானவனும், அடிமைக்காக (அவரைக் கொன்ற) அடிமையும், பெண்ணுக்காக (அவளைக் கொன்ற) பெண்ணும் (என்ற அடிப்படையில் இத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்)”. (அல்குர்ஆன் 2:178) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

இவ்வசனத்தின் துவக்கமே கொல்லப்பட்டவர்களுக்காக கொலைத் தண்டனை அளிப்பது உங்கள் கடமைஎன்று பொதுவாக அறிவிக்கின்றது. கொல்லப்பட்டவர்கள் ஆணா? பெண்ணா? அடிமையா? எஜமானனா? என்றெல்லாம் பேதம் கிடையாது. அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட்டவர்கள் தான். இதைத் தவிர வேறு அடையாளங்கள் எதையும் இந்த விஷயத்தில் கவனத்தில் கொள்ளலாகாது எனக் கூறுகிறது.

பொதுவாகக் கூறியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் விரிவாகவும் விளக்கமாகவும் தொடர்ந்து இவ்வசனம் கூறுகிறது.

அடிமையாக இல்லாதவனை அடிமையாக இல்லாதவன் கொலை செய்தாலும், அடிமையை மற்றொரு அடிமை கொலை செய்தாலும் பெண்ணைப் பெண் கொலை செய்தாலும் கொலையாளிக்கு கண்டிப்பாக கொலைத் தண்டனை தரப்பட வேண்டும். கொலையாளிக்கத்தான் அந்தத் தண்டனை தரப்பட வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இதை தமது ஆட்சியின் போது நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளனர். ஒரு யூதர் இரண்டு கற்களுக்கிடையே ஒரு பெண்ணின் தலையை நசுக்கினார். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த அப்பெண்ணிடம், ‘யார் உன்னைத் தாக்கியவர்? என்று கேட்கப்பட்டது. இவரா? அவரா? என்று கேட்டு வரும் போது அந்த யூதனின் பெயரைக் கூறியதும் ஆம்என்பது போல் சைகை செய்தார். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளைப்படி அந்த யூதர் பிடிக்கப்பட்டு இரு கற்களுக்கிடையே தலை நசுக்கப்பட்டு கொல்லப்பட்டார். அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

நூல்: புகாரி





.

4 comments:

  1. طلحة مصباحي6 March 2014 at 17:10

    جزاكم الله خيرا كثيرا

    ReplyDelete
  2. அல்ஹம்து லில்லாஹ் மிக அருமை

    ReplyDelete
  3. thangaludaya bayaanai buthan kilamai andru veliyittal matra ulamaakkalukkum print eduthkodukka vasathiyaha irukkumu

    ReplyDelete
  4. இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கிறோம்

    ReplyDelete