Wednesday 13 April 2016

தேர்தல் வாக்குறுதிகள்




மிழகத்தில் 2016 க்கான சட்டமன்ற தேர்தல்சூடுபிடிக்கத்துவங்கியிருக்கிறது
வழமைபோலகவர்ச்சிகரமானதேர்தல்வாக்குறுதிகளுடன் அரசியல்வாதிகள்மக்களைசந்திக்கத்தயாராகிவிட்டனர்.

சொன்னதைச்செய்தோம்,சொல்லாததையும் செய்தோம்என்றமுழக்கத்துடன்ஒருகட்சியும்,சொன்னீர்கள் செய்தீர்களா? என்ற எதிர் முழக்கத்துடன் மாற்றுக்கட்சியும்ஊடகத்துணையுடன்கழமிறங்கியிருக்கிறது.

போன தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள்முக்கியபங்குவகித்தது. 
இந்த தேர்தல் வாக்குறுதிகளில் மதுஒழிப்பு மையப்புள்ளியை பெற்றிருக்கிறது.”மது விலக்கை கொண்டுவருவோம்என்று தமிழகத்துக்கு மதுவின் வாசலை திறந்துவைத்த ஒரு கட்சியும்,”படிப்படியாக மதுவிலக்கை அமலுக்கு கொண்டுவருவோம்என்று மதுவை அரசுடமையாக்கிய வேரொரு கட்சியும் மாறி மாறி வாக்களித்திருப்பது இவ்வாண்டின் மகா காமெடியாகும்..

இந்த  தேர்தலில்முஸ்லிம்கள்எந்தவாக்குறுதியை முன்வைத்து ஓட்டளிக்கப்போகிறார்கள் என்பதை பொருத்திருந்துதான்பார்க்கவேண்டும்.

காலம் காலமாக முஸ்லிம்களை வெறும் ஓட்டுவங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி,அவர்களின் அரசியல் சக்திகள் ஒன்றுபடாமல் பார்த்துக்  கொள்வதும்,ஜெயிப்பதற்கு அறவே வாய்ப்பில்லாத தொகுதிகளை வழங்கி அவர்களின் ஓட்டை வீணடிப்பதிலும்,ஒரு தொகுதியில் முஸ்லிம் வேட்பாளருக்கு எதிராக இன்னொரு முஸ்லிமை மோதவிடுவதிலும் எல்லா  கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

இப்லீஸ் கட்சி ஆரம்பித்தாலும் அதிலேயும் ஒருமுஸ்லிம் இருப்பான் என்று ஒருவர் சொன்னது நம்முடைய அரசியல் கோமாளித்தனத்தின்உச்சமாகும்.

வாக்குறுதிகள் ஒன்றையே மையமாக வைத்து ஆட்சியாளர்கள் தேர்தலை சந்திப்பதே அவர்களின் மிகப்பெரிய பளஹீனமாகும்.

வாக்கும் இஸ்லாமும்

இஸ்லாமிய பார்வையில் வாக்கை நிறைவேற்றுவது ஒரு நல்ல முஸ்லிமின்அடையாளமாகும்
அதேசமயம் மறுபுறம் வாக்கு மாற்றம் செய்வது நயவஞ்சக தனத்தின்அடையாமாகவும்பார்க்கின்றது.

வெற்றிபெற்ற முஃமின்களின் குணங்களை வரிசைப்படுத்தி கூறும் திருமறை அதன் வரிசையில்-

   وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ‏ 
 
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள் என்றும் கூறுகின்றான்.

இங்கே வா தருகின்றேன் என்று ஒரு தாய் தன் குழந்தையை அழைக்கிறாள். இந்த காட்சியை கன்னுற்ற பெருமானார் ஸல் அவர்கள்-அந்த குழந்தைக்கு என்ன கொடுப்பாய்?என்று கேட்டார்கள்.
அதற்கு அப்பெண் -ஒரு பேரித்த பழம் கொடுக்க நாடியுள்ளேன் என்றார்கள். ஒருவேளை நீ எதையும் அக்குழந்தைக்குகொடுக்கவில்லையானால் உன்மீது ஒரு பொய்குற்றம் எழுதப்படும் என்று நபி ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

இந்த ஹதீஸின் மூலம் வலியவர்கள் எழியவர்களுக்கு வழங்கும் வாக்குறுதியில் மிகுந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.
  
பெற்றோர்கள்பிள்ளைகளுக்கும்,முதலாளிகள் தொழிலாளிகளுக்கும் பெரியவர்கள் சிரியவர்களுக்கும் ஆட்சியாளர்கள் தங்களின் குடிமக்களுக்கும் வழங்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றும் போதனை வழங்கப்பட்டிரிக்கிறது

பிமார்களின் தனித்துவங்கள் பற்றி பேசும் அல்குரான் பல்வேறு இடங்களில் அவர்களின் வாக்கு மாறா தன்மைபற்றி புகழாரம் சூட்டுகிறது.

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது நபிமார்கள்,மற்றும் நல்லோர்களின் பண்பாக இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ் தன்னைப்பற்றி தன் அருள்மறையில்…….

وَلَنْ يُخْلِفَ اللَّهُ وَعْدَهُ} [الحج: 47]

நிச்சயமாக அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்.என்று கூறுகின்றான்.

அதைபோல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மூன்று வாக்குறுதிகளை கூறியிருக்கின்றான்
முதலாவது வாக்குறுதி. இந்த பூமி முழுவதும் முஃமின்களை நான் ஆட்சியாளர்களாக நான் ஆக்குவேன்.
இரண்டாவது வாக்குறுதி. உங்கள் மார்க்கம் தான் இந்த உலகம் பூராவும் நிலைத்து நிற்கும் மற்றவைகள் விழுந்து விடும்.
இன்று உலகில் நமது இஸ்லாமிய மார்க்கம் இல்லாத நாடுகள் இல்லை. அமெரிக்கா,ஆப்ரிக்கா,ஆசியா, என அனைத்து நாடுகளிலும் பரவி இருக்கிறது.
மூன்றாவது வாக்குறுதி.முஃமின்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்வீர்கள். எந்த நாடுகளின் பயம் அச்சுறுத்தல் இன்றி நிம்மதியாக வாழ்வீர்கள்.

وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي 
 ارتضى لهم  وليبدلنهم من بعد خوفهم أمنا

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான் என்று அல்லாஹ் கூறுகின்றான்

வானவர்களின் தலைவர் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் பற்றி நபி ஸல் அவர்கள் கூறும்போது……….

حديث ابن عباس رضي الله عنهما في صحيح مسلم قال: "أخبرتني ميمونة أن رسول الله صلى الله عليه وسلم أصبح يوما واجما فقالت ميمونة: يا رسول الله لقد استنكرت هيئتك منذ اليوم. قال رسول الله صلى الله عليه وسلم: إن جبريل كان وعدني أن يلقاني الليلة فلم يلقني، أما والله ما أخلفني. قال: فظل رسول الله صلى الله عليه وسلم يومه ذلك على ذلك ثم وقع في نفسه جرو كلب تحت فسطاط لنا فأمر به فأخرج ثم أخذ بيده ماء فنضح مكانه فلما أمسى لقيه جبريل فقال له: قد كنت وعدتني أن تلقاني البارحة. قال: أجل ولكنا لا ندخل بيتا فيه كلب ولا صورة

நபி ஸல் அவர்கள் ஒருநாள் காலையில் கவலையுடன் வந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!இன்று தங்களின் தோற்றத்தில் இத்தனை மாற்றத்திற்கு என்ன காரணம்? என உம்முல் முஃமினீன் மைமூனா ரலி அவர்கள் வினவினார்கள்.அதற்கு நபி ஸல் அவர்கள், ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் நேற்றிரவு என்னை சந்திப்பதாக சொல்லியிருந்தார் கள்.ஆனால் சந்திக்க வரவில்லை.அல்லாஹ்வின் மீது சத்தியமாக! வாக்கு மாற்றம் செய்யும் பழக்கம் அவருக்கு இல்லை என்று கூறினார்கள். அன்று பகல் முழுவதும்அவ்வாறேகாணப்பட்டார்கள்.

பின்னர் கட்டிலுக்கு கீழ் படுத்திருந்த ஒரு நாய் குட்டியை கவனித்த நபி ஸல் அவர்கள் ஒருவேளை இதுகாரணமாக இருக்குமோ என்று அவர்களின் உள்ளத்தில் தோன்ற உடனே அதை விரட்டிவிடும்படி உத்தரவிட்டார்கள்பின்னர் அந்த இடத்தில் தாங்களே தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தார்கள்

அன்று மாலை ஜிப்ரயீல் அலை அவர்களை சந்தித்த நபி ஸல் அவர்கள் நேற்று இரவு என்னை சந்திப்பதாக வாக்களித்தீர்கள்,ஆனால் சந்திக்கவில்லையே என கூறியபோது-
ஆம்! நாய் மற்றும் உருவப்படம் இருக்கும் வீட்டிற்குள் நாங்கள் நுழையமாட் டோம் என்று ஜிப்ரயீல் அலை அவர்கள் பதில் கூறினார்கள் 
.
தன் மதீனா குடிமக்களுக்கு அண்ணலாரின் வாக்குறுதி:

கொடைத்தன்மைக்கு பெயர்பெற்ற ஹாதம் தாய் அவர்களின் மகன் அதிய் இப்னு ஹாதம் அவர்கள் ஒரு நிர்பந்த சூழலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளு ம் திட்டத்துடன் மதீனா வருகிறார்.

அவரின் வருகையை தெரிந்துகொண்ட பெருமானார் ஸல் அவர்கள்மிகவும்மகிழ்ச்சியடைந்தார்கள். 

அவரை வரவேற்று மதீனா வீதிகளில் அழைத்து வரும்போது-
இரண்டு காட்சிகள்:ஒன்று-

روى الإمام البخاري رحمه الله بإسناده إلى عدي بن حاتم قال: 
بينا أنا عند الني صلى الله عليه وسلم إذا أتاه رجل فشكا إليه الفاقة

ரு ஏழை நபியை சந்தித்து தன் ஏழ்மையைசொல்லிமுறையிடுகிறார்.

இரண்டு-

  ، ثم أتاه آخر فشكا إليه قطع السبيل

இன்னொரு மனிதர் வந்து மதீனாவில் வழிப்பறி அதிகமாக இருப்பதாக முறையிடுகிறார்.
இங்கே மதீனாவின் குடிமக்கள் இரண்டு கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

வறுமை தாண்டவமாடும் மதீனா-வழிப்பறியின் கோரப்பிடியில் மதீனாஒரு ஆட்சியாளராக அந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டாகவேண்டும். இந்த காட்சியை கன்னுற்ற விருந்தாளி அதிய் அவர்கள் கொஞ்சம் இஸ்லாத்தை தழுவ பின் வாங்குகின்றார்.

உடனே நபி ஸல் அவர்கள் அந்த மதீனா மக்களுக்கும் குறிப்பாக அதிய் அவர்களுக்கும் இரண்டு வாக்குறுதிகள் கொடுத்தார்கள்.

ஒன்று:

قال: فإن طالت بك حياة لترين الظعينة ترتحل من الحيرة حتى 
تطوف بالكعبة لا تخاف أحداً إلا الله

அதிய்யே! உங்களுக்கு ஹயாத் இருந்தால்நீங்கள் பார்ப்பீர்கள். இராக் தேசத்திலிருந்து ஒரு பெண் தனியாக இந்த பூமிக்கு வந்து கஃபாவை தவாப் செய்துவிட்டுச்செல்வாள்அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அவள் பயப்படமாட்டாள்.
அப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பான அரசை நான் தருவேன் என்றார்கள்.

இரண்டு-

. ولئن طالت بك حياة لترين الرجل يخرج ملء كفه من ذهب أو فضة يطلب من يقبله منه فلا يجد أحداً يقبله منه

 உங்களுக்கு ஹயாத் இருந்தால் நீங்கள் பார்ப்பீர்கள்.ஒரு மனிதன் கை நிறைய தங்கம் அல்லது வெள்ளியை அள்ளிக்கொண்டு அதை ஸதகா மற்றும் ஸகாத் கொடுக்க ஏழையை தேடுவான்.ஆனால் ஒரு ஏழையும் கிடைக்கமாட்டார்கள்.

இது ஐந்தாண்டுக்கான வாக்குகள் அல்ல,மாறாக ஆயுள் வாக்குறுதி, பசியில்லாத மதீனாவை,பயமில்லாத மதீனாவை நான் உருவாக்குவேன் என்று அன்று நபி ஸல் அவர்கள் கொடுத்த வாக்கை பதிநான்கு நூற்றாண்டுகள் கடந்தும் பார்க்க முடிகிறது.

நபி ஸல் அவர்கள் ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை சில நிர்பந்த காரணங்களால் நிறைவேற்ற முடியாமல் போனால் அடுத்து வரும் ஆட்சியாளர்கள்அதைநிறைவேற்றுவதில் அதிக முக்கியத்துவம் வழங்குவார் கள்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ قَدْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ قَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا فَلَمْ يَجِئْ مَالُ الْبَحْرَيْنِ حَتَّى قُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَمَرَ أَبُو بَكْرٍ فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا فَأَتَيْتُهُ فَقُلْتُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي كَذَا وَكَذَا فَحَثَى لِي حَثْيَةً فَعَدَدْتُهَا فَإِذَا هِيَ خَمْسُ مِائَةٍ وَقَالَ خُذْ مِثْلَيْهَا

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது அபூபக்ர்(ரலி) அவர்களிடம் அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூபக்கர்(ரலி), 'யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தர வேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரின் உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)" என்று கூறினார்கள். இந்த அறிவிப்பைக் கேட்டு நான், 'எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்" என்று கூறினேன். 'இப்படிக் கூறும்போது, தம் இரண்டு கைகளையும் ஜாபிர்(ரலி) மூன்றுமுறை விரித்துக் காட்டினார்கள்" என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) கூறினார் - அபூபக்ர்(ரலி) என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள்.நூல். முஸ்லிம்

قال رسول الله صلى الله عليه وسلم لسراقة: “كيف بك إذا لبست سواري كسرى؟.
فدعا عمر سراقة فألبسه سواري كسرى وتاجه وقال: “الحمد لله الذي سلبهما كسرى بن هرمز وألبسهما سراقة الأعرابي
 .
நபி ஸல் அவர்களின் ஹிஜ்ரத் பயணத்தில் சுராக்கா என்பவருக்கு ஒரு வாக்கு கொடுக்கிறார்கள்..
பாரசீக மன்னர் கிஸ்ராவின் காப்புகளை உங்களுக்கு நான் அணிவிக்கிறேன் என்றார்கள்.
மதீனாவே சொந்தமில்லாதபோது ஒரு வல்லரசின் விலைமதிப்பில்லாத ஆபரணங்கள் பற்றி வாக்கு கொடுத்தார்கள்.
காலம் உருண்டோடியது ஹழ்ரத் உமர் ரலி அவர்களின் ஆட்சியில் சஃத் ரலி அவர்களின் தலமையில் பாரசீகம் வெற்றிகொள்ளப்பட்டு அதன் கருவூலங்கள் மதீனாவுக்கு கொண்டுவரப்படுகிறது.
அதில் கிஸ்ராவின் தங்கக் காப்புகளையும், தலைக்கிரீடத்தையும் கண்ட ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் சுராக்காவை அழைத்துவரச்சொல்லி அவ்விரண்டையும் அவருக்கு அணிவித்து-

இந்த இரண்டு பொக்கிஷத்தையும் கிஸ்ராவிடமிருந்து பறித்து சாதாரண ஒரு கிராமவாசி சுராவுக்கு அணிவித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று துஆச்செய்தார்கள்.

இஸ்லாமியஆட்சியாளர்களின்வாக்குறுதி காத்தல்
வரலாற்றுச்சிறப்புமிக்கபைத்துல்முகத்தஸ் வெற்றிகொள்ளப்பட்டபோது அங்கு வாழும் யூத,கிருஸ்துவர்களுடன் ஹழ்ரத் உமர் ரலி அவர்களின் அரசு ஒரு ஒப்பந்தம் செய்தது.

அங்கு வசிக்கும் யூத கிருஸ்துவர்களின் உயிர் பொருள் வணக்கஸ்தலங்கள் அத்துனையும் இஸ்லாமிய அரசால் பாதுகாக்கப்படும்.அதற்குப்பகரமாக அவர்கள் அரசுக்கு ஆண்டுதோறும் ஜிஸ்யா வரி கட்டவேண்டும்.
இது நடைமுறையில் இருந்த காலத்தில் பைத்துல் முகத்தஸ்மீது எதிரிகள் தாக்குதல் நடத்த ஒரு பெரும் படையுடன் வந்தபோதுஉமர் ரலி அவர்கள் நிலமையின் நெருக்கடியை உணர்த்தி உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழல் வந்துவிடக்கூடாது.எனவே உங்களின் இந்த ஆண்டு ஜிஸ்யாவை அரசிடமிருந்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அப்படிப்பட்ட அரசியல் நேர்மையாளர்களை தங்களின் அரசியல் முன்னோடிக ளாக ஏற்று வாழ இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பரிந்துறைக்கின்றோம்

5 comments:

  1. வாக்குறுதி தேர்தலில்மட்டும் அல்ல எல்லாகாலங்கலிலும் நிறைவேற்றவேண்டும் என்பதை படைத்தவனின் வார்த்தையோடு பன்பாளர் கொடுத்த அருமையான வாக்குறுதியோடு இது தேர்தல் வாக்குறுதி அல்ல மாறாக ஆயுள் வாக்குறுதி என்பது அருமையான பதிவு அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்

    ReplyDelete
  2. Alhamdhu lillah அருமை

    ReplyDelete
  3. அல்ஹம்து லில்லாஹ் அருமை

    ReplyDelete
  4. அல்ஹம்து லில்லாஹ் அருமை

    ReplyDelete
  5. உஸ்மானிகளின் வெள்ளிமேடை குறிப்பு தடையில்லாமல் தொடராக வரும் என்று தலைமை வாக்குறுதி தர வேண்டும்





    மாஷ அல்லாஹ் அருமை

    ReplyDelete