Tuesday 13 November 2012

ஹிஜ்ரத் சந்தர்ப்ப பயணமல்ல சரித்திரப்பயணம்



இஸ்லாமிய புத்தாண்டு பிறந்து விட்டது.

ஹிஜ்ரி 1433 லிருந்து  1434 ம் ஆண்டிற்கு அடியெடுத்து வைத்திருக்கிறோம்.

அல்லாஹுத்தஆலா நம்முடைய கடந்த ஆண்டின் பாவங்களை மன்னித்து புத்தாண்டை பயனுள்ள ஆண்டாக ஆக்கிவைப்பானாக!

முஸ்லிம்களின் வாழ்வில் ஹிஜ்ரா காலண்டரை பயன்படுத்தும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது.இது ஆரோக்கியமானதல்ல.

ஹிஜ்ரா காலண்டருக்கும் முஸ்லிம்களுக்குமான தொடர்பு நோன்பு ஒருமாதத்துடன் சுருங்கிப்போய்விட்டது.
நோன்பை முடிவு செய்வதற்கும்,பெருநாட்களை தீர்மானிப்பதற்கு மட்டுமே அது தேவைப்படுகிறது.

முஸ்லிம்களின் திருமண பத்திரிக்கைகளில் அடைப்புக்குறியில் ஹிஜ்ரி முடங்கிப்போனது.

ஒரு சமுதாயத்தின் மொழி,பண்பாடு,நாகரீகம்,கொள்கைகள்,பாதுகாக்கப்ப டவேண்டுமானால் அந்த சமுதாயத்தின் வரலாறு பாதுகாக்கப்படனும்.

ஒரு சமுதாயத்தின் தனித்தன்மையை பாதுகாப்பதில் வரலாற்றுக்கு முக்கிய பங்குண்டு.

 وقع في زمن الخطيب البغدادي أن يهوديا اظهر كتابا فيه أن المصطفى صلى الله علية وسلم أسقط الجزية عن أهل خيبر ، وفيه شهادة جمع منهم على ذلك ، فوقع التنازع فيه فعرض على الخطيب فتأمله ، ثم قال :- هذا زور ، لأن فيه شهادة معاوية وإنما اسلم عام الفتح ، وفتح خيبر سنة سبع ، وشهادة سعدبن معاذ وكان مات عقب قريظة ، ففرح الناس بذلك

أحكام أهل الذمة  ابن قيم الجوزية 

ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த யூதர்கள் முஸ்லிம் ஆட்சியாளரிடம், எங்களின் மீது அரசு விதித்திருக்கும் ஜிஸ்யாவை தள்ளுபடி செய்ய வேண்டும்.ஏனெனில் நபி ஸல் அவர்கள் கைபரில் வசித்த யூதர்களுக்கு ஜிஸ்யாவை தள்ளுபடி செய்தார்கள்.என்று கூறி, அதற்கு ஆதாரமாக ஒரு கடிதத்தை காட்டினர்.அதில் நபி ஸல் அவர்கள் கைபர் யூதர்களுக்கு ஜிஸ்யாவை தள்ளுபடி செய்வதாகவும்,   அதற்கு சாட்சியாக முஆவியா ரலி, சஃது ரலி ஆகிய இரண்டு ஸஹாபாக்கள் நியமிக்கப்பட்டதாகவும் எழுதப்பட்டிருந்தது.

குழப்பமான இந்த பிரச்சனையை அரசு, கதீபுல் பக்தாதி ரஹ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றது.(இவரின் பெயர் அபூபக்கர்,நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் அறிஞர்.)

கடிதத்தை ஆய்வு செய்த கதீப் அவர்கள், இது பொய்யாக புனையப்பட்டது.  ஏனெனில் இதில் முதல் சாட்சியான ஹழ்ரத் முஆவியா ரலி அவர்கள் ஹிஜ்ரி 8 ல் நடந்த மக்கா வெற்றிக்கு பின் தான் இஸ்லாத்தை தழுவினார்கள்.ஆனால் கைபர் வெற்றியோ ஹிஜ்ரி 7ல் நடந்த நிகழ்வு.

இரண்டாவது சாட்சியான ஹழ்ரத் சஃது ரலி அவர்கள் பனூ குரைழா நிகழ்வுக்கு பின் மரணமாகிவிட்டார்கள்.அவர்களின் மரணத்திற்கு பின்தான் கைபர் வெற்றி கிடைக்கிறது.

இதுபோன்ற பிரச்சனைகளை கவனத்தில்கொண்டே இஸ்லாமிய காலண்டர் உருவாக்கப்பட்டது.

ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு.

கலீபாக்களின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய பேரரசு நிறுவப்பட்டபோது வரலாற்று தகவல்களை கணக்கிடுவதிலும்,ஒப்பந்தங்களின் கால நிர்ணயத்திலும் பிரச்சனை ஏற்பட்டபோது வரலாற்றை குறிப்பதற்கு முஸ்லிம்களுக்கு ஒரு காலண்டர் அவசியம் என்று உணரப்பட்டது.

அப்போது நபி ஸல் அவர்கள் மரணித்து 6 ஆண்டுகள் கழிந்து உமர் ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய ஆண்டின் தொடக்கமாக எதை தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது.

அதில் நான்கு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன

1.நபி ஸல் அவர்களின் பிறப்பு.
2.நபி ஸல் அவர்களின் இறப்பு.
3.நபி ஸல் அவர்களின் நபித்துவம்.
4.நபி ஸல் அவர்களின் ஹிஜ்ரத்.

இதில் நபி ஸல் அவர்களின் பிறப்பை தேர்வு செய்வதில் உமர் ரலி அவர்களுக்கு உடன்பாடில்லை. காரணம் அதில் கிருஸ்துவர்களின் தழுவல் உள்ளது.பிற மத தழுவல்களை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

யூத கிருஸ்துவர்களுக்கு நீங்கள் ஒப்பாக வேண்டாம் என்றும் அப்படி ஒப்பான காரியத்தை செய்தவர் அவர்களை சார்ந்தவர் என்றும் நபி ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

இதன் பின்னனியில் தான் பைதுல் முகத்தஸிலிருந்து கஃபதுல்லாவாக முஸ்லிம்களின் கிப்லா மாற்றப்பட்டது,சூரியனை வணக்கம் செய்யும் கூட்டத்தை கவனத்தில் கொண்டே சூரிய உதயம்,அஸ்தமம்,அதன் உச்சி பொழுது ஆகிய நேரங்கள் வணக்கம் செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது.

வணக்கமானாலும் வாழ்கையானாலும் மற்ற சமயங்களின் சாயல் வரக்கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

நபி ஸல் அவர்களின் இறப்பை தேர்வு செய்வதிலும் உமர் ரலி அவர்களுக்கு உடன்பாடில்லை, காரணம் நாயகத்தின் இறப்பு இந்த உம்மத்தின் இழப்பும் கைசேதமுமாகும்.அது இந்த உம்மத்தின் சோதனையான நாளாகும்.அதை தேர்வு செய்தால் வருடத்தின் ஆரம்ப தினத்தை துக்க தினமாக மாற்றி விடுவார்கள்.

நபித்துவத்தை தேர்வு செவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும்,நபித்துவத்தின் நோக்கம் முழுமை பெற்றது ஹிஜ்ரத்தின் பின்னனியில் தான்.ஆகவே ஹிஜ்ரத் தான் என் முடிவு என்றபோது மற்ற ஸஹாபாக்களும் அதை அங்கீகரித்தார்கள்.

 ஹிஜ்ரத்தை ஏன் தேர்வு செய்தார்கள்?

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் கூறிய காரணம்

فقال عمر :- بل نؤرخ بمهاجرة رسول الله ، فإن مهاجرته فرق بين الحق والباطل ) قاله الشعبي,وقال 

ابن كثير في البداية والنهاية

நபி ஸல் அவர்களின் ஹிஜ்ரத் பயணம் தான் சத்தியத்திற்கும் அசத்தியத்தி ற்கும் பிரிவை காட்டியது.

ஸஹாபாக்கள் கூறிய காரணம்

و أفاد السهيلي في الروض الأنف (4/255 ) أن الصحابة أخذوا التأريخ بالهجرة من قوله تعالى { لمسجد أسس على التقوى من أول يوم } لأنه من المعلوم أنه ليس أول الأيام مطلقاً ، فتعين أنه أضيف إلى شيء مضمر و هو أول الزمن الذي عز فيه الإسلام ، و عبد فيه النبي صلى الله عليه وسلم ربه آمناً ، و ابتداء المسجد ، فوافق رأي الصحابة ابتداء التاريخ من ذلك اليوم .

அல்குர்ஆன் 9:108 ல் ஆரம்ப தினத்தில் தக்வாவின் மீது அஸ்திவாரமிடப்பட்ட பள்ளிவாசல் என்று ஹிஜ்ரத்தின் போது கட்டப்பட்ட குபா பள்ளியை குறித்து அல்லாஹ் கூறுகிறான்.  எதில் ஆரம்ப தினம்?முஸ்லிம்களுக்கு கண்ணியம் கிடைத்ததில்,முஸ்லிம் கள் பயமின்றி வணக்கம் செய்ததில்,பள்ளிவாசல் கட்டியதில் ஆகிய அனைத்தும் ஹிஜ்ரத்தின் பின் தான் நடைபெற்றது.

எனவே அல்லாஹ்வே அவ்வல் யவ்ம் (ஆரம்ப நாள்) என்று கூறிவிட்டான் அதுவே ஆண்டின் துவக்கமாகுவதே பொருத்தமானது என ஸஹாபாக்கள் முடிவு செய்தார்கள்.

உண்மையில் ஹிஜ்ரத் முஸ்லிம்களுக்கான கண்ணியம் தேடிய பயணம்
மாத்திரமல்ல  முஸ்லிம்களுக்கான களம் தேடிய பயணமும் தான்.
எதிரிகளுக்கு பயந்து ஓடுவதல்ல,இந்த தீனை பாதுகாக்கவும்,முஸ்லிம்களின் துயர் துடைக்கவும்,இஸ்லாத்திற்கான அரசியல் களம் அமைக்கவும் தேவைப்பட்ட பயணம்.

இதன் நோக்கத்தை அல்லாஹ் திருமறையில் தெளிவுபடுத்துகிறான்.  
 
وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَىٰ ۗ وَكَلِمَةُ اللَّـهِ هِيَ الْعُلْيَا ۗ

நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் (அல் குர்ஆன் 9:40)

ஹிஜ்ரத் தான் இஸ்லாத்தின் இருப்பை உறுதி செய்தது,இஸ்லாம் வளர காரணமானது.அதனால் தான் அல்லாஹ் குர்ஆனில் ஈமான் கொண்டவர்ளே!என்ற வார்த்தையை பயன்படுத்தியது ஹிஜ்ரத்துக்கு பின் தான்.

எந்த இடங்களிலெல்லாம் يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا என்று வருகிறதோ அது மதீனாவில் இறக்கப்பட்டது என்று விளங்கிக்கொள்ளலாம்.

இதன் மூலம் ஹிஜ்ரத்துக்கும் ஈமானுக்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறது.

அதுபோலவே முஸ்லிம்களை ஒன்றுபடுத்துகிற ஜும்ஆ தொழுகையும் ஹிஜ்ரத்திற்கு பின்பே கடமையாக்கப்பட்டது.

ஹிஜ்ரத் நபிமார்களின் சுன்னத்தாகும்.

உலகில் முதல் ஹிஜ்ரத் செய்த கூட்டம் நபி நூஹ் அலை அவர்களின் தலைமையில் கப்பலில் பயணம் செய்த 80 முஃமின்கள்.

قُلْنَا احْمِلْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلاَّ مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ آمَنَ وَمَا آمَنَ مَعَهُ إِلاَّ قَلِيلٌ ﴾ [هود: 40].

ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்

தீனை பாதுகாக்க இடம் பெயர்வதே ஹிஜ்ரத்தாகும்.

அதுபோல ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் சிரியாவுக்கு,எகிப்துக்கு,  ஹிஜாஸ் பூமிக்கும் ஹிஜ்ரத் செய்ததாக குர்ஆன் கூறுகிறது.

அவ்வாறு ஹழ்ரத் மூஸா அலை அவர்கள் நபித்துவத்தின் முன்பும் பின்பும் ஹிஜ்ரத் செய்ததாக குர்ஆன் கூறுகிறது.

நபிமார்களுக்கு ஏகத்துவ எதிரிகளால் நெருக்கடிகள் வரும்போதெல்லாம் அல்லாஹுத்தஆலா ஹிஜ்ரத்தின் வாசலை திறந்துவைப்பான்.

அப்படியொரு நெருக்கடியை மக்கத்து காபிர்கள் நபி ஸல் அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கொடுத்தபோது அல்லாஹ் ஹிஜ்ரத்திற்கான அனுமதி வழங்கினான்.

وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ ۚ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّـهُ ۖ وَاللَّـهُ خَيْرُ الْمَاكِرِينَ

(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சி செய்ததை நினைவு கூறுவீராக அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்னையுடையவன். (அல் குர்ஆன் 8:30)

சிறை பிடித்தல்,கொலை செய்தல்,நாடுகடத்தல் ஆகிய மூன்று கட்ட நெருக்கடி நாயகத்துக்கு ஏற்பட்டபோது அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு ஹிஜ்ரத் செய்ய அனுமதி வழங்கினான்.

ஹிஜ்ரத் எதார்த்தமாக நடந்த நிகழ்வல்ல!அது ஒரு திட்டமிட்ட பயணம்.

ففي حديثه مع ورقة بن نَوفَل عندما اصطَحبَتْه زوجُه خديجة - رضِي الله عنها - إلى ابن عمِّها، عندها قال له ورقة: "هذا النامُوسُ الذي نزَّل الله على موسى، يا ليتَنِي فيها جَذَعًا، ليتَنِي أكون حيًّا إذ يُخرِجك قومُك، فقال رسول الله - صلَّى الله عليه وسلَّم -: ((أوَمُخرِجِيَّ هم؟!))، قال: نعم

صحيح البخاري

முதல் வஹ்யின் தாக்கம் நபி ஸல் அவர்களை உடல் ரீதியாகவும் மனரீதியாக்கவும் பலகீனப்படுத்தியபோது அன்னை கதீஜா ரலி அவர்கள் பெருமானாரை வேதம் படித்த பெரியவரான வரகாவிடம் அழைத்துச்செல்கிறார்கள்.

வரகா:நீங்கள் பயப்படத்தேவையில்லை.உங்களை சந்தித்தது நபி மூஸா அலை அவர்களை சந்தித்த ஜிப்ரயீல் தான்,என்று சொல்லியதோடு இந்த மக்கள் உங்களை இந்த ஊரிலிருந்து வெளியேற்றும் போது நான் உயிருடன் இருந்தால் உங்களுக்கு உதவி செய்வேன்.

அப்போது நபி ஸல் அவர்கள் அவர்கள் என்னை வெளியேற்றுவார்களா? என ஆச்சரியமாக கேட்டபோது ஆம் என்று வரகா பதில் சொன்னார்கள்.

நபித்துவத்தின் ஆரம்பத்திலேயே ஹிஜ்ரத்திற்கான முன்னறிவிப்பு செய்யப்பட்டுவிட்டது.

மதீனாவில் யூதர்கள் குடியேர ஆரம்பித்ததே இறுதி நபியின் ஹிஜ்ரத் பூமி இது என்று தங்களின் வேதத்தின் மூலம் தெரிந்துகொண்ட பின் தான் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

நபி ஸல் அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தின் நிறைவில் மதீனாவில் அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரலி அவர்களின் வீட்டில் தங்கினார்கள்.இது குறித்து சில வரலாற்றாசியர்கள் நபிக்கு தங்குவதற்கு அபூ அய்யூப் ரலி இடம் கொடுத்தார் என்று எழுதுவர்.அது முற்றிலும் தவறு,உண்மை என்ன தெரியுமா?அபூ அய்யூப் ரலி அவர்கள் தங்குவதற்கு நாயகம் வீடு கொடுத்தார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறதா?

உச்சந்தலைக்கும் உள்ளங்காலுக்கும் முடிச்சு போட முடியுமா?அது சாத்திய மில்லை என்று உலகம் சொல்லும் அது சத்திமானது என்று இஸ்லாம் சொல்கிறது.

கி.மு. 4 ம் நூற்றாண்டில் நடந்த ஒரு நிகழ்வுக்கும் ஹிஜ்ரத்துக்கும் ஒரு பெரிய தொடர்பு உண்டு.இந்த உண்மையை விளங்கினால் ஹிஜ்ரத் சந்தர்ப்ப பயணமல்ல சரித்திரபயணம் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

عاش في حدود القرن الرابع قبل الميلاد . (الأعلام: 2/175تُبَّع ملك اليمن :
إن أحد التبابعة من ملوك اليمن مر بالمدينة وهو في طريقه إلى أفريقيا،وكان معه مائة وثلاثون فارساً وضعف ذلك راجلاًومعه من أجل العلم والحكمة العدد الكبير، فلما وصلوا إلى المدينة تبايع أربعمائة من أهل العلم والمعرفة ألَّا يخرجوا من المدينة مع الملك، مع أنهم جاءوا معه وهم رفقاؤه.
فسألهم الملك: علام امتنعتم؟ وعلام تحبون البقاء في هذه البلاد؟ قالوا: إن البيت -البيت العتيق- وهذه البلدة تتشرف ببعثة نبي آخر الزمان اسمه محمد، ونحن نقيم ننتظره.
فأراد أن يقيم معهم.
؛ لكن ما استطاع
فبنى أربعمائة بيت لكل واحد بيتاً، واشترى أربعمائة جارية فأعتقهن وزوج كل واحد بجارية وأعطاه عطاءً جزلاً، وبنى بيتاً حتى إذا جاء النبي سكن فيه، وكتب كتاباً وختمه بالذهب وأعطاه إلى كبير هؤلاء العلماء والحكماء، وقال: إن أدركته أبلغه سلامي وأعطه كتابي، ومما كتب فيه: ولو أنه أدركه لكان وزيراً له، أي: معيناً مساعداً وابنَ عمه.
وختم الكتاب وقال لكبير العلماء: إن أدركته فأعطه كتابي، وإن لم تدركه فأعطه لولدك، وولدك لولده، وولد ولدك لولده، حتى يصل إليه

كتاب :البداية والنهاية
 الهجرة النبوية   للشيخ : عطية محمد سالم

கி.மு 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்த துப்பவு எனும் எமன் நாட்டு அரசர் மதினா வழியாக ஆப்பிரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.அவர்களுடன் 130 குதிரை வீரர்களும் பயணமானார்கள்.வழியில் அறிஞர்களும் ஞானிகளும் சேர்ந்துகொண்டனர்.மதீனாவை அடைந்தபோது அதை விட்டும் வெளியாக அறிஞர்கள் மறுத்துவிட்டனர்.

அரசர் காரணம் கேட்டபோது,இந்த ஊர் இறுதி நபியான அஹ்மத் ஸல் அவர்களின் வரவால் கண்ணியம் பெறும்.எனவே அவரின் வரவை எதிர்பார்த்து இங்கேயே தங்குகிறோம் என்றனர்.

அவர்களுடன் அரசரும் தங்க நாடினாலும் முடியவில்லை,ஆகவே அந்த 400 ஞானிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு என்ற கணக்கில் 400 வீடு அங்கு கட்டுவதற்கு உத்தரவிட்டார்,மேலும் 400 4440 அடிமை பெண்களை விலைக்கு வாங்கி திருமணம் செய்து வைத்தார்.நிறைய அன்பளிப்புக்கள் கொடுத்து அங்கு தங்க வைத்தார்.

மதீனாவில் விசேஷமாக ஒரு வீடு கட்டி இது இறுதி நபிக்கு என் அன்பளிப்பு என்றும் தன் ஈமானுக்கு சாட்சியாக ஒருகடிதம் எழுதி அதை தங்கத்தால் முத்திரையிட்டு ஞானிகளில் தலைவரிடம் கொடுத்து இறுதி நபியை நீங்கள் சந்தித்தால் என் சலாமை கூறி என் கடிதத்தை ஒப்படைத்து விடுங்கள்.

உங்களுக்கு சந்திக்கும் பாக்கியம் கிடைக்காவிட்டால் உங்கள் சந்ததியிடம் ஒப்படைத்து விடுங்கள்.என்றார்

அந்த கடிதம் பல தலைமுறை தாண்டி ஹழ்ரத் அபூ அய்யூப் அன்ஸாரி ரலி அவர்களிடம் வந்து சேருகிறது.

எனவே ஹிஜ்ரத்திற்கான அடித்தளம் நபியின் பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகள் முன்னே போடப்பட்டுவிட்டது.

ஹிஜ்ரத்தில் நபி ஸல் அவர்களின் பயண வியூகம்

عن عائشة أن رسول الله –صلى الله عليه وسلم- جاء إلى بيت أبي بكر في ذلك اليوم ظهرًا على غير عادته، فلما دخل على أبي بكر قال: "أَخْرِج من عندك"، قال: يا رسول الله: إنما هما ابنتاي، يعني عائشة وأسماء، قال: "أشعرت أنه قد أذن لي في الخروج؟!"، قال: الصحبة يا رسول الله؟! قال: "الصحبة"، قال: يا رسول الله: إن عندي ناقتين أعددتهما للخروج، فخذ إحداهما، قال: "قد أخذتها بالثمن". أخرجه البخاري.
வழமைக்கு மாற்றமாக ஒருநாள் ழுஹர் நேரத்தில்நபி ஸல் அவர்கள் அபூபக்கர் ரலி அவர்களின் இல்லம் சென்றார்கள்.வீட்டில் 2 சிறுமிகள் இருப்பதைப்பார்த்த நாயகம் இவர்களை வெளியே போகச்சொல்லுங்கள் என்றார்கள்,அப்போது அபூபஅக்கர் ரலி இவர்கள் என் பெண்மக்கள் என்றா ர்கள்.உடனே நபி ஸல் அவர்கள்,எனக்கு ஹிஜ்ரத் செல்ல அனுமதி வந்துவிட்டது என்றதும் அல்லாஹ்வின் தூதரே!நானும் தங்களுடன் வர அனுமதி உண்டா?ஆம் உங்களுடன் தான் என்று பதில் கூறினார்கள்.

நான் இதற்காகவே 2 ஒட்டகம் தயார் செய்து வைத்துள்ளேன்.அதில் ஒன்றை தாங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அபூபக்கர் ரலி கூறிய போது,அதை விலை கொடுத்துவாங்கிக்கொள்கிறேன்,என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

நபி ஸல் அவர்களை உயிருடன்,அல்லது கொலைசெய்து யார் கொண்டு வருவார்களோ அவர்களுக்கு 100 ஒட்டகம் பரிசு என்று தாருன்னத்வாவில் காபிர்கள் அறிவிப்புச்செய்த கால்கட்டம் அது.
100 ஒட்டகம் என்பது இன்றய பண மதிப்பில் சுமார் 50 லட்சமாகும்.
உச்சகட்ட வேட்கையுடன் தேட ஆரம்பிக்கிறது அரபுலகம்.


خرج الرسول - صلى الله عليه وسلم- وصاحبه وقد تزودوا بالزاد والماء ليلاً من خوخة في ظهر بيت أبي بكر حتى لا يراهما أحد، وسلكا طريقاً غير معهودة، فبدلاً من أن يسيرا نحو الشمال ذهبا إلى الجنوب حيث يوجد (غار ثور)

நபி ஸல் அவர்களும் சித்தீக் ரலி அவர்களும் அபூபக்கர் ரலி அவர்களின் வீட்டின் பின்வாசல் வழியாக வடக்கு திசை நோக்கி செல்வதற்கு பதிலாக (மக்காவிலிருந்து மதீனா வடக்கில் இருக்கிறது.) தெற்கு நோக்கி புறப்பட்டார்கள். (அதாவது எமன் தேசம் நோக்கி)
அங்கு மலை உச்சியில் அமைந்திருக்கும் சவ்ர் குகையில் 3 தினம் தங்கினார்கள்.எதிரிகளின் தேடல் ஓய்ந்தபின் வடக்கு நோக்கி புறப்படலா ம் என்பது நபியின் சாதுர்யமான திட்டம்

ஹிஜ்ரத்தில் அபூபக்கர் ரலி அவர்களின் அர்ப்பணிப்பு.

இந்த தீனுக்காக எத்தனையோ தியாகங்களை செய்தவர்கள் அபூபக்கர் ரலி அவர்கள்,ஹிஜ்ரத்திலும் அவர்களின் பங்களிப்பு மகத்தானது.

மக்களின் அமானிதங்கள் அலி ரலி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றால் அல்லாஹ்வின் அமானிதமான கண்மணி நாயகத்தை அபூபக்கரிடமே ஒப்படைக்கப்பட்டது.அந்த அமானிதத்தை எத்துனை பாதுகாப்புடன் கொண்டு வந்து இந்த உம்மத்திடம் ஒப்படைத்தார்கள்.அந்த அபூபக்கருக்கு இந்த உம்மத் எப்படி நன்றிகடன் தீர்க்கப்போகிறது.

முன்னால் ஓடுகிறார்,பின்னால் ஓடுகிறார்,வலது திசை நோக்கி ஓடுகிறார்,இடது திசையில் ஓடுகிறார்,ஏன்? என்ன ஆனது அபூபக்கருக்கு? காரணம் கேட்டபோது, நான் தனி மனிதன் தாங்கள் உம்மத் என்றார்கள். கற்கள் தன் ஹபீபின் பாத கமழங்களை பதம் பார்த்ததால் சவ்ர் மலை ஏற முடியாமல் சிரமப்பட்டபோது அந்த நபித்துவத்தை முதுகில் சுமந்து கொண்டு ஓடியவரல்லவா அவர்.உலகம் கண்டிருக்குமா இப்படியொரு உயிர் தோழரை?அதனால் தானோ அவர் ஸஹாபி என்று குர்ஆன் சாட்சி சொன்னது.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக அபூபக்கரை தவிர வேறு யாராலும் நுபுவ்வதின் கனத்தை சுமக்க முடியாது.                                      மக்கா வெற்றி.கஃபா உள் இருந்த சிலைகளை தன் கரத்தால் நாயகமே சுத்தம் செய்தார்கள்,அப்போது உயரமான இடத்தில் இருந்த  ஒரு சிலை வடிவத்தை அழிக்க அலி ரலி அவர்களை அழைத்து தன் முதுகில் ஏறச்சொன்னார்கள்.
அலி ரலி அவர்கள் மறுத்து தாங்கள் குனிந்தார்கள்.நுபுவ்வத்தின் கனத்தை உன்னால் தாங்க முடியாது என்றார்கள் நபி ஸல் அவர்கள்,அலி ரலி வற்புறுத்த ஒரு பெரு விரலை முதுகில் வைத்த போது அல்லாஹ்வின் சிங்கம் அலி ரலி குப்புற விழுந்தார்கள்.
அல்லாஹ் நாடினால் இந்த பயணத்தை மிஃராஜ் பயணத்தை போல ஆக்கியிருக்க முடியும்,ஆனால் இது உம்மத்துக்கான பயணம்.
மிஃராஜில் மலக்குகளின் இமாம் பயணத்தோழர்,ஹிஜ்ரத்தில் ஸஹாபாக்களின் இமாம் பயணத்தோழர்.மிஃராஜில் பயணத்தோழர் இடையில் நாயகத்தை தனிமையில் விட்டுவிட்டார்,ஹிஜ்ரத்தின் பயணத்தோழர் இறுதி வரை கொண்டு சேர்த்தார்,இலக்குவரை கொண்டு சேர்த்தார்.அதனால் தான் அவரை கப்ரிலும் தன் நேசருடன் அல்லாஹ் சேர்த்தான்.
குகையில் 3 நாட்கள்.நபி தூங்குவார்கள்.அபூபக்கர் தூங்கமாட்டார்.நபி சாப்பிடுவார்கள்,அபூபக்கர் சாப்பிடமாட்டார்.அபூபக்கர் ரலி அவர்களின் மொத்த குடும்பமும் ஹிஜ்ரத்துக்கு அர்ப்பணமானது.

وأنفق ماله في إعداد العدة لذلك وفي استئجار الدليل، وعرَّض ابنه عبد الله للخطر حيث كان يمسي عندهما عندما كانا في الغار ويصبح عند قريش يتسقط الأخبار، وكان مولاه عامر بن فهيرة يسرح بغنمه عند الغار ليسقيهم من لبنها، وكذلك فعلت أسماء التي حفظت السر والتي شقت نطاقها لتضع فيه طعامهما، فسميت ذات النطاقين

அபூபக்கர் ரலி அவர்களின் மகன் அப்துல்லாஹ் ரலி குறைஷிகளின் செய்தி கொண்டுவருவார்.
அவர்களின் மகள் அஸ்மா ரலி உணவு கொண்டு வருவார்.அவர்களின் அடிமை ஆமிர் ஆட்டில் பால் கறந்து கொண்டுவருவதுடன் காலடி அச்சுகளை அழிப்பார்.
மீண்டும் பயணம் தொடர்கிறது.சுமார் 450 கிலோமீட்டர் பயணம்.வழிகாட்டியாக அப்துல்லா இப்னு உரைகித் என்ற காபிர் கூலிக்கு நியமிக்கப்பட்டார்.
அல்லாஹ் இறை மறுப்பாளரைக்கொண்டு இந்த தீனுக்கு உதவி செய்வா ன் என்பதற்கு ஹிஜ்ரத் ஒரு பாடம்.

ஹிஜ்ரத்தில் அன்ஸாரிகளின் அரவணைப்பு.

நபி ஸல் அவர்கள் அன்ஸாரிகள் விஷயத்தில் சொன்ன இரண்டு வைர வரிகள் அவர்களின் ஹிஜ்ரத் பங்களிப்புக்கு சாட்சி

لَوْلا الْهِجْرَةُ لَكُنْت امْرَأً مِنْ الأنْصَارِ، وَلَوْ سَلَكَ النّاسُ شِعْبًا وَسَلَكَتْ الأْنصَارُ شِعْبًا، لَسَلَكْت شِعْبَ الأنْصَارِ.

مشكاة
ஹிஜ்ரத் இல்லை என்றால் நானும் அன்ஸாரிதான்.மக்கள் ஒரு பாதையிலும் அன்ஸாரிகள் ஒரு பாதையிலும் சென்றால் நான் அன்ஸாரி கள் செல்லும் பாதையில் செல்வேன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

أُوصِيكُمْ بِالأنْصَاروَقَدْ قَضَوْا الَّذِي عَلَيْهِمْ -أي أدّوا ما عاهدوا عليه من النصرة وغيرها-، وَبَقِيَ الَّذِي لَهُمْ
البخاري

அன்ஸாரிகள் விஷயத்தில் உங்களுக்கு நான் வசிய்யத் செய்கிறேன்.    அவர்கள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டார்கள்.(அதாவது எங்களை நம்பி வாருங்கள் உங்களுக்கு அடைக்களம் தருவோம் உதவி செய்வோம் இஸ்லாத்திற்கான தலைமையாக மதீனாவை தருவோம்) அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தை நீங்கள் கொடுங்கள்.

இஸ்லாம் விருட்சம் என்றால் அதன் விதை ஹிஜ்ரத் தான்.ஹிஜ்ரத் இல்லையேல் இஸ்லாம் இல்லை.அல்லாஹ் புரிய தவ்பீக் செய்வானாக.


 
















2 comments: