Wednesday 21 November 2012

ஆஷுரா தினம்-அராஜக அரசியலின் முற்றுப்புள்ளி



ஆஷுரா தினம் ஒரு அநியாயக்காரனின் அரசியல் சாம்ராஜ்யம் அஸ்தமமான நாள்.

அராஜக அரசியலுக்கான முற்றுப்புள்ளி.

உலகில் எந்த காலத்திலும் அநியாயம் நிலைக்காது எனும் உண்மையை அழுத்தமாக சொல்லும் நாளாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆஷுரா தினம் வரும்போது முஸ்லிம்கள் பெறவேண்டிய பாடம் இது.

அலாஹ்வினால் நினைவூட்டப்பட்ட நாட்களில் ஆஷுராதினமும் ஒன்று.

                                                                وَذَكِّرْهُم بِأَيَّامِ اللَّـهِ 

அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக என்று அல்லாஹ் கூறுகிறான்.அல் குர்ஆன் 14:5


அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய பதவி,அதிகாரம்,செல்வம்,    செல்வாக்கைக்கொண்டு பலகீனமானவர்களின் மீது அநியாயங்களை கட்டவிழ்த்துவிடும் ஒவ்வொருவருக்கும் இந்த ஆஷுரா தினம் ஒரு எச்சரிக்கை தினமாகும்.ஏனெனில் உலகில் முதன்மை அநியாயக்காரனான பிர்அவ்னின் அக்கிரமத்தை,அழிச்சாட்டியத்தை அல்லாஹுத்தஆலா இன்று தான் முடிவுக்கு கொண்டுவந்தான்.


فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً 

  
உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம் (அல் குர்ஆன் 10:92)


பிர்அவ்னை ஒரே இரவில் கடலில் மூழ்கடித்து விட்டு அல்லாஹ் கூறிய  வார்த்தைகள் தான் இவை.

ஆட்சி,அதிகாரம் தன்னிடம் உண்டு என்ற ஆணவத்துடன் அராஜக அரசியல் நடத்தும் அமெரிக்க இஸ்ரேலிய பயங்கரவாதிகளுக்கு இந்த ஆஷுராதினம் ஒரு நல்ல பாடத்தை தரவேண்டும்.

காஸாவின் குழந்தைகளை கருவறுத்துக்கொண்டிருக்கும் இந்த சாத்தான்களின் அட்டூழியத்திற்கும் ரெளடித்தனத்திற்கும் வெகு விரைவில் அல்லாஹ் முடிவு கட்டுவான் என்று நம்புகிறோம்.


வன்முறை உலகில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

உலகில் எந்த வரலாறுகளிலிருந்தும் பிர்அவ்னின் வரலாறு வேறுபடும்.


قال عبد الله بن مسعود رضي الله عنه: كان رسول الله صلى الله عليه وسلم عامة نهاره يحدثنا عن بني إسرائيل


நபி ஸல் அவர்கள் பனீஇஸ்ரவேலர்களின் வரலாற்றைத்தான் எங்களுக்கு அதிகமாக சொல்லுவார்கள் என்று ஹழ்ரத் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.ஏனெனில் குர்ஆனில் அதிகமாக கூறப்பட்ட வரலாறு அதுவே.

27 சூராக்களில் பிர்அவ்னின் வரலாறு கூறப்படுகிறது.
இப்லீஸின் சிந்தனையான நான் சிறந்தவன் என்ற எண்ணம் எப்போதும் பிர்அவ்னுக்கு உண்டு.


أَمْ أَنَا خَيْرٌ مِّنْ هَـٰذَا الَّذِي هُوَ مَهِينٌ وَلَا يَكَادُ يُبِينُ


அல்லது, இழிவானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா? என்று மூஸா அலை அவர்களை இழிவு படுத்தி அவன் தொடுத்தவினாவாகும். (அல் குர்ஆன் 43:52)


இப்லீஸிடம் கூட இல்லாத ஒரு சிந்தனை பிர்அனிடம் உண்டு,

அது என்ன வெனில் فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன்  என்று (அவர்களிடம்) கூறினான்.

உலகில் பொய்யாக தன்னை நபி என்று வாதிட்டவர்கள் உண்டு,தன்னை இறை நேசர் என்று அடையாளப்படுத்தியவர்கள் உண்டு,ஆனால் தன்னை இறைவன் என்று சொல்லியவர்கள் பிர்அவ்னை தவிர யாருமில்லை.

அவன் தன்னை இறைவனாக அந்த மக்களுக்கு காட்டிக்கொள்ள இரண்டு அடையாளங்களை சொன்னதாக குர்ஆன் கூறுகிறது.


قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَـٰذِهِ الْأَنْهَارُ تَجْرِي مِن تَحْتِي ۖ أَفَلَا تُبْصِرُونَ


மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்; "என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்று (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா? (அல் குர்ஆன் 43:51)


மிஸ்ரின் ஆட்சியும்,நைல் நதியின் ஆதிக்கமும் அவன் உச்சகட்ட அநியாயம் செய்ய காரணமானது என அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு கல்வியை,பொருளை,பதவியை ஆக்கத்திற்கு கொடுக்கிறான்.ஆனால் மனிதன் அதைக்கொண்டு அநியாயம் செய்து அழிவுக்கு காரணமாக்கி கொள்கிறான்.கல்வியால் அழிந்தவன் இப்லீஸ்,பொருளால் அழிந்தவன் காரூன்,ஆட்சி அதிகாரத்தால் அழிந்தவன் பிர்அவ்ன்.
அல்லாஹுத்தஆலா குப்ரை கூட பொருத்துக்கொள்வான் ஆனால் அநியாயத்தை ஒருபோதும் பொருத்துக்கொள்ள மாட்டான்.


أخرج أحمد بإسناد حسن من حديث أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: "دعوة المظلوم مستجابة وإن كان فاجراً، ففجوره على نفسه".


அநீதி இழக்கப்பட்டவன் பாவியாக இருந்தாலும் அவன் அழைப்புக்கும் பதில் சொல்லப்படும். அவன் பாவம் அவனுடன்.என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

.قيل: الدنيا تدوم مع العدل والكفر، ولا تدوم مع الظلم والإسلام
குப்ருடன் நீதம் இருந்தால் துன்யா நிலைக்கும்,இஸ்லாத்துடன் அநீதி இருந்தால் நிலைக்காது இது ஒரு அரபி கவிஞனின் வரிகள்.


وكتب بعض عمال عمر بن عبد العزيز إليه: أما بعد؛ فإن مدينتنا قد خربت، فإن رأى أمير المؤمنين أن يقطع لنا مالا نرمها به. فرد عليه: أما بعد؛ فحصنها بالعدل، ونق طرقها من الظلم؛ فإنه مَرَمَّتُها. والسلام.


حلية الأولياء لأبي نعيم الأصفهاني


ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ் அவர்களின் ஆட்சியில் அதிகாரி யாக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர்,எங்கள் ஊர் பழுதடைந்துள்ளது.அமீருல் முஃமினினீனான தாங்கள் எங்கள் ஊரை சரிசெய்ய நிதிஒதுக்குமாறு வேண்டிக்கொண்டார்.   அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, உங்கள் ஊரை நீதத்தை கொண்டு சரிசெய்யுங்கள்.அதன் பாதைகளை அநீதியிலிருந்து சுத்தப்படுத்துங்கள். அதுவே உண்மையான மராமத்து பணியாகும்.என்றார்கள்

அல்லாஹுத்தஆலா எத்தனையோ காபிர்களை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறான், ஆனால் அநியாயக்கார அரசாக இருந்தால் அது இஸ்லாமிய அரசாக இருந்தாலும் அல்லாஹ் அழித்துவிடுவான்.அதனால் தான் குர்ஆனில் அதிகமாக கண்டிக்கப்பட்டவர்கள் அநியாயக்காரர்கள் தான்.

அல்லாஹ் அநீதிக்கு கால அவகாசம் தருவான்.ஆனால் நிலைக்க விடமாட்டான்.


قال -عليه الصلاة والسلام-: "إن اللهَ لَيُمْلِي للظالم، حتى إذا أخذه لم يُفْلِتْهُ"، ثم قرأ قول الله -جل وعلا-: (وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ) [هود:102](رواه البخاري ومسلم)


.நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரனுக்கு அவகாசம் தருவான் இறுதியில் அவன் பிடிக்க ஆரம்பித்தால் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவான்.என்று கூறிய நபி ஸல் அவர்கள் பின் வரும் வசனத்தை ஓதினார்கள்அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்.


في دولة بني العباس يقول أحد المؤرخين، ذكره ابن كثير عن أحد مجالس الخليفة قال: طلب مني الخليفة شيئا من الغالية "طيب" فقلت عندنا شيء منه نفيس في بيت المال، قال: جئ به إليَّ، قال: فجئت به إليه، قال: بِكَم هذا؟ قلت بكذا وكذا من الدنانير، غالٍ جدا، قال: والله ما أفتحه! ما دام أنه غالٍ نحافظ عليه، قال: ثم أخذه وشمه وناولني إياه.قال: وبعد سنين تولى الخليفة الآخَر، قال: عندكم شيء من الغالي؟ قلت: نعم، قال: هات، قال : فأتيته به، قال : بكم هذا؟ قلت : بكذا وكذا من الدنانير، قال: ففتحه فانبعثت رائحته في المجلس، قال: فأخذ بطرف أصبعه من حوافه ثم مسح في ظهر يده وأطبقه، قال: احفظه. ما يريده أن ينتهي حفاظا على المال.قال : وبعدها بسنين تولى خليفة فقال: عندكم شيء من الغالي؟ قلت نعم، قال : آتني به، قال: فأتيته به نفسه، قال فقال: بكم؟ قلت : بكذا وكذا، قال: ففتحه ثم جعل يده فيه فمسح يده ثم مسح رجليه، ثم قال: يا أيها الناس، افعلوا به ما شئتم.قال: فلما رأيته يعبث به قلت: والله ليسقطنَّ ملكه! فلم تمضِ عليه سنونٌ حتى سقط الملك في عصره.


இப்னு கஸீர் ரஹ் அவர்கள் அப்பாஸிய கலீபாக்களின் ஆட்சி வீழ்ச்சி அடைந்ததின் பின்னனியை குறிப்பிடுகிறார்கள்.அப்பாஸிய கலீபாக்களின் ஆட்சியில் அரசபையில் இடம்பிடித்திருந்த ஒருவர் கூறுகிறார்.

கலீபா என்னிடம் விலை உயர்ந்த நறுமணம் ஏதேனும் இருக்கிறதா?என கேட்டார்.ஆம்;இருக்கிறது,ஆனால் அது பைதுல் மாலுக்கு சொந்தமானது என்று கூறினேன்.

அதை கொண்டு வாருங்கள் என்றார்.

நான் கொண்டுவந்தேன்.

இதன் விலை என்ன?என்று கலீபா கேட்டார்.இதன் விலை மிகவும் அதிகம் என்று கூறி அதன் விலையை சொன்னேன்.உடனே கலீபா அவர்கள்,அல்லாஹ்வின் மீது சத்தியமாக இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நான் திறக்கமாட்டேன்.இதை பாதுகாக்க வேண்டும்.என்றார்.அதை நுகர்ந்துவிட்டு என்னிடம் திருப்பி தந்துவிட்டார்.

சில ஆண்டுகளுக்கு பின் இன்னொரு கலீபா ஆட்சிக்கு வந்தார்.அவரும் என்னிடம் ஏதேனும் விலையுயர்ந்த அத்தர் இருக்கிறதா? என்று வினவினார்.ஆம் என்று, அதை நான் கலீபாவிடம் கொண்டுவந்து கொடுத்தேன்.அதை பெற்றுக்கொண்ட கலீபா அவர்கள் அதன் விலையை விசாரித்தார்.பின்பு அதை திறந்து அவரின் விரல் நுனிப்பகுதியை கொண்டு கொஞ்சமாக எடுத்து தன் கையின் மேல்பாகத்தில் தேய்த்தார்.பின்பு அதை மூடி என்னிடம் தந்து அதை பாதுகாக்க சொன்னார்

காலம் கடந்தது.இன்னொரு கலீபா ஆட்சிக்கு வந்தார்.அவரும் இந்த நறுமணத்தை கேட்டார்,அதை பெற்றுக்கொண்ட கலீபா, அதை திறந்தார்,உள்ளே தன் கையை முக்கினார்.அதைகொண்டு தன் கையிலும் காலிலும் தடவினார்.பின்பு அரசபையில் உள்ளவர்களிடம் கொடுத்து,மக்களே! இதை நீங்கள் விரும்பியபடி பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றார்.


அப்போது நான் சொன்னேன்.அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மக்களின் உரிமையில் இவர்கள் கைவைக்க ஆரம்பித்து விட்டனர்.இவர்களின் ஆட்சி கவிழும் என்றேன்.

சில ஆண்டுகளிலேயே அவரின் அரசு கவிழ்ந்தது.

அப்பாஸிய கலீபாக்களின் சாம்ராஜ்யம் அநியாயம் தலை தூக்கியபோது முடிவுக்கு கொண்டுவரப்பட்டக இப்னு கஸீர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

في حديث جابر -رضي الله عنه- قال: سأل النبي -عليه الصلاة والسلام- عددا من الصحابة الذين قدموا من الحبشة، قال: حدثوني بأعجب ما رأيتم في أرض الحبشة؟ فقال فتية منهم: يا رسول الله، رأينا عجوزا تحمل جرة ماء -أو قالوا قلة ماء- فوق رأسها، فبينما هي تمشي إذ أقبل شاب منهم -يعني من الحبشة- فوضع كفه بين كتفيها ثم دفع بينهم فوقعت القلة من فوق رأسها فانكسرت، ووقعت العجوز على ركبتيها، وهم كفار غير مسلمين، وهم يقولون الله ثالث ثلاثة! ومع ذلك انظر كيف علق النبي -عليه الصلاة والسلام- على الموقف!.: فقامت العجوز والتفت إليه وقالت: ستعلم يا غدر -يعني يا أيها الغادر- الذي جئت من خلفي ولم أنتبه إليك، قالت ستعلم يا غدر إذا وضع الله كرسيه للحكم بين العباد أي شيء يكون حالي وحالك! فقال -عليه الصلاة والسلام-: "صَدَقَتْ، صدقت، صدقت؛ لا قدست أمة لا يؤخذ لضعيفهم من قويهم".
ابن ماجه في سننه
அபிஸீனியாவிலிருந்து திரும்பிவந்த ஸஹாபாக்களிடம் நபி ஸல் அவர்கள் அங்கு அவர்கள் கண்ட ஆச்சரியமான காட்சிபற்றி விசாரித்தார்கள்.

அப்போது ஸஹாபாக்கள்,யாரஸூல்லாஹ்!ஒரு மூதாட்டி தன் தலையில் தண்ணீர் பாத்திரம் சுமந்து செல்கிறாள்.ஒரு அபிஸீனிய வாலிபன் வந்தான்.அவளின் தோழ்புஜத்தில் கைவத்து தள்ளிவிட்டான். தண்ணீர் பாத்திரம் கீழேவிழுந்து உடைந்துவிட்டது.அந்த மூதாட்டியும் கீழே விழுந்து விட்டாள்.

பின்னர் எழுந்து அந்த மூதாட்டி சொன்னாள்.

அநியாயக்காரனே!அல்லாஹ் அடியார்களுக்கிடையில் நீதியை நிலைநிறுத்தும் அந்த நாளில் உன் நிலை என்ன ஆகும் என்று தெரியும்.அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள் அவள் உண்மை சொன்னாள்.அவள் உண்மை சொன்னாள்.அவள் உண்மை சொன்னாள்.

அநியாயக்காரனிடமிருந்து அநீதி இழக்கப்பட்டவனுக்கு உரிமை பெற்றுத்தராத எந்த சமுதாயமும் அழிவிலிருந்து தப்பமுடியாது என்று கூறினார்கள்.


أوحى الله -تعالى- إلى موسى -عليه السلام-: يا موسى، حذر بني إسرائيل من مغبة الظلم؛ فإن له سوء عاقبة


மூஸாவே!பனீஇஸ்ரவேலர்களை அநியாயம் செய்வதை விட்டும் எச்சரிக்கை செய்யுங்கள்.ஏனெனில் அநியாயத்தின் முடிவு மிக மோசமானது.என்று மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் வஹி அறிவித்தான்.

உலகில் பிர்அவ்னிய அராஜகத்தின் முடிவு அநியாயம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் பாடமாக அமைய வேண்டும் என்று ஆஷுரா நாளில் நோன்பு நோற்பதை நபி சல் அவர்கள் தங்களின் வழிமுறயாக்கினார்கள்.


أن محمدًا -صلى الله عليه وسلم- لما هاجر إلى المدينة ورأى اليهود يصومون يوم العاشر سألهم عن سبب صومهم فقالوا: هذا يوم أنجى الله فيه موسى وقومه وأغرق فيه فرعون وقومه، فقال -صلى الله عليه وسلم-: "نحن أحق وأولى بموسى منكم"، فصامه وأمَر بصيامهرواه البخاري


அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்தபோது அங்குள்ள யூதர்கள் இந்த 10 வது நாளில் நோன்பு வைத்திருப்பதைக் கண்டார்கள். இவ்வாறு நோன்பிருப்பதின் காரணம் என்ன என்பதை  நபி (ஸல்) அவர்கள் யூதர்களைப் பார்த்து வினவினர். அதற்கு அந்த யூதர்களோ 'இன்றைய நாளில்தான் இறைவன் நபி மூஸா (அலை) அவர்களை பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, பிர்அவ்னையும் அவனுடைய கூட்டத்ததாரையும் கடலில் முழ்கடிக்கச் செய்தான் என்றும், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக  நாங்கள் நோன்பிருக்கிறோம் என்று பதிலளித்தார்கள்'.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், நபி மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் (முஸ்லிம்களாகிய)நாங்கள் தான் உங்களைவிட தகுதியானவர்கள் என்று கூறி அந்த நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் அனைவரையும் நோன்பு நோற்குமாறும் கூறினார்கள்.ஆனாலும் யூதர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று 

இவ்வாறு கூறினார்கள்فقال: "خالفوا اليهود، صوموا يوما قبله أو 

يوما بعده،

யூதர்களுக்கு மாற்றம் செய்து ஒரு நாளை முன்னால் அல்லது பின்னால் சேர்த்துக்கொள்ளுங்கள்.என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
மரணித்தவனின் உடல் தாமதமின்றி அடக்கம் செய்யப்படவேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடு,ஆனால் பலநூற்றாண்டுகளை கடந்தும் பிர்அவ்னின் உடல் படிப்பினைக்காக பாதுகாக்கப்படுகிறது

இறுதியாக:سَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ  அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். (அல் குர்ஆன் 26:227)
இதுவே இந்த ஆஷுராநாளின் பாடமாகும்.


1 comment:

  1. intha vaara jumma bayan supper,
    thodarattum ungal pani.
    by PS

    ReplyDelete