Tuesday 8 January 2013

அமைதி மார்க்கம் இஸ்லாம்



உலக மதங்களில் இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கமாகும்.

 இஸ்லாம் என்ற சொல் سلم     எனும் மூலச்சொல்லிலிருந்து எடுக்கப்பட்டிருப்பது அது அமைதியை நோக்கமாக கொண்ட மார்க்கம் என்பதற்குச்சான்றாகும்.

இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று கூறுவதை விடவும் உலகில் அமைதியை நிலைநிறுத்தும் மார்க்கம் என்று கூறுவதே மிகவும் பொருத்தமானது,ஏனெனில் தன்னை முஸ்லிம் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் எவரும் அடிப்படையாக அடுத்தவர்களுக்கு தீங்கிழப்ப  திலிருந்து தன்னை முழுமையாக தடுத்தாகவேண்டும்.

சக மனிதனின் உயிர்,பொருள்,உடமை.மானம் இவைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தராத எந்த முஃமினின் ஈமானும் மறுபரிசிலனை
க்குறியது.

இஸ்லாம் ஒரு முஸ்லிமை சாந்தமான வாழ்க்கை வாழ்வதற்கான எல்லா வழிமுறைகளையும் அமைத்து கொடுத்தி
ருக்கிறது.

வன்முறையின்மீதும்,தீவிரவாதத்தின்மீதும்  இஸ்லாத்திற்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை,காரணம் வன்முறையால் நிலங்களை ஆக்கிரமிக்க முடியும்-வளங்களை கொள்ளையடிக்க முடியும்-ஆட்சியை கைப்பற்ற முடியும்,நிச்சயமாக மனித மனங்களை ஒருபோதும் ஆதிக்கம் செலுத்த முடியாது.

இஸ்லாம் மக்களின் மனங்களை வென்றெடுத்த மார்க்கம்,அதனால் தான் அது தோன்றிய காலத்தைவிட பின்னாட்களில் தான்  வேகமாக வளர்ச்சியை சந்தித்தது.

அண்ணல் நபி ஸல் அவர்களின் மிகவும் மிருதுவான அனுகுமுறையே இஸ்லாத்தை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்சென்றதாக அல்குர்ஆன் கூறுகிறது.

فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّـهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ

அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்
அல் குர்ஆன் (3:159)

இஸ்லாத்தின் முதல் வெற்றி நகரமாகவும்,அதன் தலைநகரமாகவும் அறியப்படும் மதீனா நகரத்தின் வெற்றி குறித்து- அருமை நபித்தோழர்கள் இப்படிக்கூறுகின்றனர்.

மதீனா மாநகரம் நற்குணத்தால் வெற்றிக்கொள்ளப்பட்டது என ஸஹாபாக்கள் கூறுகிறார்கள்.

இஸ்லாம் கடந்துவந்த பாதைகளில் அதிகமான போர்க்களங்களை சந்தித்திருக்கலாம்,அது மட்டுமே இஸ்லாத்தை புரிந்துகொள்வதற்கான அளவு கோளல்ல,அதற்கு சில நியாயமான காரணங்கள் உண்டு.

இஸ்லாம் நடத்திய யுத்தங்கள் யாவும் தினிக்கப்பட்டவையே தவிர தீர்மாணிக்கப்பட்
டதல்ல,
தற்காப்பு யுத்தங்கள் தானே தவிர விரும்பி நடத்தியதல்ல.இந்த உண்மையை புரிந்துகொள்ள நடுநிலையான பார்வை தேவை.

இதை அடுக்கடுக்கான ஆதாரங்கள் மூலம் நிரூபிக்க முடியும்.

1.ஒரு உயிரின் மதிப்பு என்ன?என்பதில் இஸ்லாம் கொண்டிருக்கும் நிலைபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்

أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا

நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்
(அல் குர்ஆன் 5:32)

மனிதன் மட்டுமல்ல,தேவையின்றி ஒரு சிறிய உயிரினத்தை கொலை செய்வதை கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை.அது சிட்டுக்குருவியாக இருந்தாலும் சரி.

من قتل عصفورا فما فوقها بغير حقها سأل الله عز وجل عنها يوم القيامة
سنن النسائي

முறையின்றி எவர் ஒரு சிட்டுக்குருவியை கொலைசெய்வாரோ அவர் அதுபற்றி அல்லாஹ்வின் விசாரனைக்கு உட்படுத்தப்படுவார் என கருணை நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

அதனால் தால் அல்லாஹ் தடைசெய்த செத்தவை,இரத்தம்,பன்றியின் இறைச்சி,மது போன்ற ஹராமான பொருட்களும்,அவ்வளவு ஏன்?இணைவைப்பும் கூட உயிரை காப்பாற்றும் நிர்பந்தம் ஏற்படுகிறபோது இஸ்லாம் அனுமதிக்கிறது.

2.போர்க்குணங்களையும் வன்முறையான நடவடிக்கைகளையும் இஸ்லாம் வெறுக்கிறது.

ويقول النبي صلى الله عليه وسلم فيما رواه عنه عبد الله بن أبي أوفى: "لا تتمنوا لقاء العدو، وسلوا الله العافية

أخرجه البخاري ومسلم

எதிகளை சந்திப்பதில் ஆசைப்படாதீர்கள்,அல்லாஹ்விடம் ஆரோக்கியத்  தையே கேளுங்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

சாதாரணமாக போர் எனும் வார்த்தையை கேட்பதையும் கூட பல நேரங்களில் அண்ணல் எம்பெருமான் ஸல் அவர்கள் வெறுத்துள்ளதை ஹதீஸ் நூட்களில் பார்க்க முடிகிறது.

அன்றைய அரபியர்களிடம் போர் எனும் பொருள் தரும் பெயர்களை தங்களின் பிள்ளைகளுக்கு சூட்டிக்கொள்வதை பெருமையாக நினைத்து வந்தனர்.இதை கண்டிக்கும் விதமாக நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்

أحب الأسماء إلى الله: عبد الله وعبد الرحمن، وأصدق الأسماء: حارث وهمام، وأقبح الأسماء: حرب ومرة

رواه أحمد في المسند

பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது அப்துல்லாஹ்,அப்துர்ரஹ்மான் எனும் பெயராகும்,பெயர்களில் உண்மையான பெயர் ஹாரிஸ், ஹம்மாம்-பெயர்களில் அல்லாஹ்வுக்கு வெறுப்பான பெயர் ஹர்ப்,முர்ரா.ஹர்ப் என்றால் போர்-முர்ரா என்றால் கசப்பு-

وروى الإمام مالك في (الموطأ) عن يحيى بن سعيد –مرسلا- أن رسول الله قال لِلَقْحَةٍ[7] (ناقة) تُحلب: "مَن يحلب هذه؟". فقام رجل فقال: "ما اسمك؟". قال: مرّة، قال: "اجلس". ثم قال: "مَن يحلب هذه؟". فقام رجل، فقال: "ما اسمك؟". قال: حرب. قال: "اجلس". ثم قال: "مَن يحلب هذه؟". فقام رجل، فقال: "ما اسمك؟". قال: يعيش! فقال له رسول الله صلى الله عليه وسلم: "احلب

நபி ஸல் அவர்கள் தங்களின் ஒட்டகத்தில் பால் கறக்கும் பொருப்பை யார் ஏற்கிறீர்கள்?என வினவியபோது-ஒருவர் எழுந்தார்.உம் பெயர் என்ன?என நபி ஸல் அவர்கள் கேட்டபோது-என் பெயர் முர்ரா (கசப்பு)  என அம்மனிதர் கூறினார்-உடனே அவரை நாயகம் உட்காரச்சொன்னா  ர்கள்.

யார் ஒட்டகத்தில் பால் கறக்கிறீர்கள்?என மீண்டும் கேட்க-மற்றொருவர் எழுந்தார்,அவரிடம் உம் பெயர் என்னவென அண்ணலார் கேட்ட  போது-அவர் ஹர்ப் (போர்) என்று கூறினார்-அவரையும் நாயகம் உட்காரச்சொன்னார்கள்.

மூன்றாவது முறையாக கேட்டபோது-இப்போது ஒருவர் எழுந்தார்,அவரின் பெயரை கேட்டபோது-யஈஷ் என்றார்.அப்போது நபி ஸல் அவர்கள் அவரை அப்பணிக்கு நியமித்தார்கள்.

பெயருக்கு கூட வன்முறையான வார்த்தைகளை பயன்படுத்துவதை அல்லாஹ்வும் ரஸூலும் விரும்புவதில்லை.

ஹழ்ரத் அலி ரலி அவர்கள் இறைவனுக்காக போர்புரிவதில் அளவுகடந்த பேராசை கொண்டிருந்தார்கள்,அதன் உச்சகட்டமாக தங்களின் பிள்ளைகளுக்கு ஹர்ப் என்று பெயர் வைப்பதையும் அதன் மூலம் ஹர்பின் தந்தை எனும் புனைப்பெயரால் தான் அழைக்கப்படுவ  தையும் விரும்பினார்கள்.

இதை இவ்வாறு கூறினார்கள்.

أن عليا قال: كنت أحب أن أكتنى بـ(أبي حرب

والطبراني في الكبير



وروى الإمام أحمد في مسنده، وروى البخاري في الأدب المفرد، وغيرهما عن على رضي الله عنه قال: لما ولد الحسن سمَّيتُه حربا، فجاء رسول الله صلى الله عليه وسلم فقال: "أروني ابني ما سمَّيتموه؟". قال: قلت: حربا. قال: "بل هو حسن". فلما ولد الحسين سمَّيتُه حربا، فجاء رسول الله صلى الله عليه وسلم فقال: "أروني ابني ما سميتموه؟". قال: قلت: حربا. قال: "بل هو حسين". فلما ولد الثالث سمَّيتُه حربا، فجاء النبي صلى الله عليه وسلم فقال: "أروني ابني ما سميتموه؟". قلت: حربا. قال: "بل هو محسن

ஹழ்ரத் அலி ரலி அவர்களுக்கு ஹஸன் ரலி பிறந்தபோது ஹர்ப் என்றே பெயர் வைத்தார்கள்.

பேரக்குழந்தையை பார்க்க வந்த பெருமானார் ஸல் அவர்கள்-என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?என கேட்டார்கள்.

ஹர்ப் என்று பெயர்வைத்துள்ளேன் என்றார்கள்.உடனே நபி ஸல் அவர்கள்-இல்லை ஹஸன் என்று பெயர் மாற்றுங்கள் என்றார்கள்.
பின்னர் ஹுஸைன் ரலி அவர்கள் பிறந்தபோதும் அதே ஹர்ப் என்ற பெயரை சூட்டினார்கள்.அப்போதும் நபி ஸல் அவர்கள்-ஹுஸைன் என்று மாற்றுங்கள் என்றார்கள்.

மூன்றாவது குழந்தை அலி ரலி அவர்களுக்கு பிறந்தபோது குழந்தையை பார்த்து பெயர் என்ன வைத்தீர்கள்?என நபி ஸல் அவர்கள் கேட்க ஹர்ப் என்று கூறினார்கள்,அதைகேட்ட பெருமானார்-முஹ்ஸின் என்று மாற்றச்சொன்னார்கள்.

3.கட்டாயமான மதமாற்றம் இஸ்லாத்தில் செல்லாது.

لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது.

(அல் குர்ஆன் 2:256)

அவ்வாறே,இன்னொரு வசனத்தில் ஈமானுக்காக கட்டயப்படுத்துவது பற்றி தெளிவாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்

أَفَأَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُوا مُؤْمِنِينَ) [يونس:99]،

அவர்கள் ஈமான் கொள்ளவேண்டுமென நீர் மக்களை நிர்பந்திப்பீர்களா? என கேட்கிறான்.
அல் குர்ஆன்

لم يقبل إيمان فرعون ساعة الغرق، (حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرائيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ) [يونس:90]، فكان الجواب الإلهي عليه: (آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ) [يونس:91].

கடலில் மூழ்கடிக்கப்படும் நேரத்தில் பிர்அவ்ன் ஈமான் கொண்டபோது-அவனின்  ஈமான் ஏற்றுக்கொளளப்படவில்லை,காரணம் வேதனையை கண்ணால் பார்த்து,இனி தப்பிக்க வழியில்லை எனும் நிர்பந்தச்சூழலில் ஒருவர் ஈமான் கொண்டால் அது இஸ்லாத்தில் செல்லாது.

அதனால் தான் அல்லாஹ் இப்படி பதில் சொன்னான்

இப்போது தான் உனக்கு ஈமான் ஞாபகம் வந்ததா?என கேட்டான்.


وقال عن قوم مكذبين نزل عليهم عذاب الله: (فَلَمَّا رَأَوْا بَأْسَنَا قَالُوا آمَنَّا بِاللَّهِ وَحْدَهُ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِ مُشْرِكِينَ * فَلَمْ يَكُ يَنْفَعُهُمْ إِيمَانُهُمْ لَمَّا رَأَوْا بَأْسَنَا سُنَّتَ اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ فِي عِبَادِهِ وَخَسِرَ هُنَالِكَ الْكَافِرُونَ) [غافر:84،85].

இறை மறுப்பில் மூழ்கிக்கிடந்த கூட்டத்தினர்கள் மீது அல்லாஹ்வின் வேதனை இறங்கும்போது அவர்கள் ஈமான் கொள்ளவே செய்தனர் ஆனால் அது அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படவி
ல்லை.

எனவே அவர்கள் நம் வேதனையை கண்டபோது, "நாங்கள் அல்லாஹ் ஒருவன் மீதே ஈமான் கொள்கிறோம்; நாங்கள் (அவனுடன்) இணைவைத்தவற்றை நிராகரிக்கிறோம்" என்று கூறினார்கள்.

ஆயினும், வேதனையைக் கண்டபோது, அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை
.
4.எந்த நியதிக்கும் கட்டுப்படாத போர்க்களங்களில் கூட இஸ்லாம் மனித நேயத்தையும் கட்டுப்பாட்டையும் போதிக்கிறது.

முஸ்லிம்களின் ஈமானிய வாழ்வுக்கும்,இருப்புக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி-எல்லாவகையான அநியாயங்களையும் கட்டவிழ்த்துவிட்டு-சொந்த ஊர் சோதனைக்களமாகியபோது-சிறுபான்மையினரான முஸ்லிம்கள் சொந்த ஊரை துறந்து அந்நியபூமியில் அகதிகளாக வாழ்கிறார்கள்.ஆனாலும் அவர்கள் அங்கும் நிம்மதியாக வாழவிடாமல் மக்கத்து காபிர்கள் எடுத்த போர்நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்களி   ன் தற்காப்பு நடவடிக்கையே இஸ்லாம் சந்தித்த போர்களங்கள்.

ஒரு கண்ணத்தில் அறைந்தால் மறு கண்ணத்தை காட்டு என்ற கிருஸ்துவ தத்துவம் வார்த்தைக்கு அழகு தரலாம்,வாழ்கைக்கு அது ஒத்துவராது.

ஒரு கையை வெட்டினால் மறு கையை வெட்டச்சொல்வார்களா?  100 ரூபாய் திருடியவனுக்கு 1000 ரூபாயை அன்பளிப்பாக தருவார்களா?

இஸ்லாம் சந்தித்த எந்த போர்க்களங்களிலும் மறவாமல் முஸ்லிம்களுக்கு பெருமானார் செய்யும் மனித நேய உபதேசங்கள்.

உங்களால் ஒருவருக்கு நேர்வழி காட்ட முடியுமானால் அதுவே உங்களுக்கு உலகமே கிடைப்பதைவிடவும் சிறந்தது.

உங்களிடம் போர்செய்ய வருபவர்களிடம் மட்டுமே போர்செய்ய வேண்டும்.

பெண்களை-குழந்தைகளை-சிறுவர்களை-வயோதிகர்களை கொலை செய்யக்கூடாது.

மதகுருமார்களை-வியாபாரிகளை-விவசாயிகளை கொலைசெய்யக்கூடாது.

பிறமத ஆலயங்களை சேதப்படுத்தக்கூடாது.

தேவையின்றி மரங்களை வெட்டவோ,கட்டிடங்களை இடிக்கவோ கூடாது.

நபி ஸல் அவர்களின் காலத்தில் நடைபெற்ற மொத்தப்போர்களிலும் ஏற்பட்ட உயிர்சேதம் 1062 ஐ தாண்டவில்லை என்பதை சிந்தித்தாலே இஸ்லாத்தை சரியான கோனத்தில் புரிந்து கொள்ள முடியும்.

5.போர்க்களங்களை சந்திக்கும் முன் உடன்பாடு ஏற்படுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் நபி ஸல் அவர்கள் ஆய்வு செய்வார்கள்.

وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا

அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக  (அல் குர்ஆன் 8:61)

ஹுதைபிய்யா உடன்படிக்கையில் முஸ்லிம்களுக்கும் மக்காவின் காபிர்களுக்கும் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை குறித்து அல்குர்ஆன் மகத்தான வெற்றி என்று புகழ்கிறது.ஆனால் வெளித்தோற்றத்தில் அது ஒருதலைபட்சமாக (காபிர்களுக்கு சாதகமாக) எழுதப்பட்ட உடன்பாடு.

وتنزل في ذلك سورة تسمى سورة (الفتح) تبدأ بقوله تعالى: (إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحاً مُبِيناً)[الفتح:1]، ويسأل أحد الصحابة رسول الله صلى الله عليه وسلم: أفتح هو يا رسول الله؟ فيقول: "نعم هو فتح"استبعدوا أن يكون فتح بغير حرب، ولكن الله تعالى سمَّاه فتحا، بل فتحا مبينا، وامتنَّ به على رسوله صلى الله عليه وسلم).

அந்த சமாதான உடன்படிக்கைபற்றி பேசிய சூராவுக்கு வெற்றி என பெயரிடப்பட்டது-
போர் நடைபெறாமல் இது எப்படி வெற்றி ?என ஒரு ஸஹாபி நாயகத்திடம் கேட்டபோது-ஆம்.அது மகத்தான வெற்றிதான் என்றார்கள்.
காரணம் இந்த உடன்பாடுக்கு பின்னரே இஸ்லாமிய தஃவாவுக்கு விசாலமான சுதந்திரம் கிடைத்தது.

في الحديث المتفق عليه، عن أسامة بن زيد قال: بعثنا رسول الله -صلى الله عليه وسلم- في سرية فصبحنا الحرقات من جهينة، فأدركت رجلاً، فقال: لا إله إلا الله، فطعنته، فوقع في نفسي من ذلك، فذكرته للنبي -صلى الله عليه وسلم- فقال رسول الله -صلى الله عليه وسلم- :" أقال لا إله إلا الله وقتلته ؟! " قال: قلت يا رسول الله إنما قالها خوفاً من السلاح، قال:" أشققت عن قلبه حتى تعلم أقالها أم لا " فما زال يكررها علي حتى تمنيت أني أسلمت يومئذٍ

ஹழ்ரத் உஸாமா ரலி அவர்கள் ஒரு போரில் எதிரி ஒருவரை துரத்தி பிடித்தபோது-அந்த மனிதர் கலிமா சொல்லி சமாதானத்திற்கு முன் வருகிறார்.ஆனாலும் அவரின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாத உஸாமா ரலி அவர்கள் அவரை கொலை செய்து விடுகிறார்கள்.

இந்த நிகழ்வை குறித்து பெருமானாரிடம் கூறியபோது-அவர் கலிமா சொல்லியுமா கொன்றுவிட்டீர்?என கேட்க ஆம் அவர் ஆயுதத்திற்கு பயந்து கலிமா சொன்னார் என உஸாமா ரலி கூறினார்கள்-அதை கேட்டதும் கடும் கோபமுற்ற நாயகம்-அவரின் உள்ளத்தை பிளந்தா பார்த்தீர் என கடுமையாக கண்டித்தார்கள்.

போர்க்களத்தில் சமாதானத்திற்கான சூழல் உருவாகும்போது அதுவே ஒரு முஸ்லிமின் நோக்கமாக இருக்கவேண்டுமென உணர்த்தினார்கள்.

ஆனால் துரதிஷ்டவசமாக இஸ்லாமிய எதிரிகளால் இஸ்லாத்தின் மீது வன்முறைச்சாயம் பூசப்படுகிறது,தீவிரவாத முத்திரை குத்தப்படு கிறது. இன்றைய ஊடகங்களில்-ஒரு தனிமனிதன் செய்யும் தவறில் அவன் சார்ந்திருக்கும் மதம் முன்னிலைப்படுத்தப்பட்டு வஞ்சிக்கப்படு  மானால் அது இஸ்லாம் மட்டும் தான்.

இஸ்லாம் வாளால் பரவியதா?

இஸ்லாத்தைப்பற்றிய புரிதலில்,அல்லது புரிய வைப்பதில் ஒரு பெரிய் வரலாற்றுத்தவறு நடந்திருக்கிறது.அதை அடையாளம் கண்டு கொள்வதும்,அதன் உண்மை நிலையை மக்களுக்கு விளக்கிக்கூறுவதும் இன்றைய முஸ்லிம்களின் தலையாய கடமையாகும்.

இதைச்செய்ய தவறினால் தெருக்கூத்தாடிகளின் துப்பாக்கிகள் மூலமும் விஷமத்தனமான பொய்ப்பிரச்சாரங்களின் விஸ்வரூபங்கள் மூலமும் இஸ்லாம் சிதைக்கப்படுவதை தவிர்க்க முடியாது.

உண்மையில் இஸ்லாத்தின் அபாரமான வளர்ச்சியை ஜீரனிக்கமுடியாத சில அறிவீனர்கள்-இஸ்லாம் படையெடுப்பின் மூலம் பரவியது எனவும் வாளால் வளர்ச்சியடைந்த மார்க்கம் எனவும் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இஸ்லாத்தின் படைஎடுப்புக்கள் அனைத்தும் தஃவாவுக்கான படையெடுப்பேயன்றி மண்ணை,பொண்னை,ஆட்சியை,அதிகாரத்தை நோக்கமாக கொண்டதல்ல.

இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமிய படைகள் நுழையாத மலேசியா.இந்தோனேசியா,பிலிப்பைன் போன்ற நாடுகளில் இஸ்லாம் எப்படி பரவியது?முஸ்லிம் வியாபாரிகளின் நேர்மையாலும் ஒழுக்கத்   தாலுமே இஸ்லாத்தின் பக்கம் மக்கள் ஈர்க்கப்பட்டனர்.

ஆப்பிரிக்கா நாடுகளில் இஸ்லாம் கூறும் சூபித்துவதால் ஈர்க்கப்பட்டு அங்குள்ள மக்கள் இஸ்லாத்தை வாழ்க்கைநெறியாக ஏற்றனர்.

ومَن ينظر بعمق في تاريخ الإسلام ودعوته وانتشاره: يجد أن البلاد التي فتحها المسلمون، لم ينتشر فيها الإسلام إلا بعد مدة من الزمن
وانظر إلى بلد كمصر، وقد فُتحت في عهد أمير المؤمنين الفاروق عمر بن الخطاب، ولكن ظلَّ الناس على دينهم النصراني عشرات السنين، لا يدخل فيه إلا الواحد بعد الواحد

இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்யும்போது -முஸ்லிம்கள் வெற்றி கொண்ட நாடுகளில் மிகநீண்ட காலத்திற்குபின்னரே இஸ்லாம் அங்கு பரவியது என்றும்,மிஸ்ர் போன்ற நாடுகள் உமர் ரலி அவர்களின் ஆட்சியில் வெற்றிக்கொள்ளப்பட்டாலும் அங்குள்ள மக்கள் பல வருடங்கள் தங்களின் கிருஸ்துவ மார்க்கத்தில் தான் தொடர்ந்து இருந்தனர்.இஸ்லாத்தின் நேர்மையான சமத்துவமான சட்டங்களுமே அங்குள்ள மக்கள் இஸ்லாத்தை தழுவ காரணமானது என சர்வதேச அறிஞர் அல்லாமா யூசுப் அல்கர்ளாவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்

இஸ்லாம் அது அமைதி மார்க்கம்,அதன் வணக்கங்கள் வாழ்த்துக்கள் அனைத்தும் ஸலாமையே நோக்கமாக கொண்டிருக்கிறது.

இவை அனைத்திற்கும் மேலாக ஒரு முஸ்லிமின் இலட்ச்சியமான அந்த சுவனபதிக்கு அமைதி இல்லம் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அல்லாஹ் அமைதி இல்லத்தின் பக்கம் அழைக்கிறான். (அல் குர்ஆன் 10:25)
                                


 










11 comments:

  1. ALHAMDHU LILLAH MASHA ALLAH MIGA,MIGA,MIGA ARUMAI HAZRATH ALLAH THANGALIN SINDHANAI AATRALAI ADHIGA PADUTHUVANAGA AMEEN

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்
    பதிவுகள்அனைத்தும்
    அறுமைஃMASUsmani@
    அஹ்மத்உஸ்மானி

    ReplyDelete
  3. allah ungalathu muyarsiyayai kabool seivaanaaga aameen

    ReplyDelete
  4. assalamu alaikkum. miga arumayana thoguppugal jazakallah.

    ReplyDelete
  5. assalamu alaikkum. miga arumayana thoguppugal jazakallah.

    ReplyDelete