Wednesday 2 January 2013

மாற்றம் வேண்டும்



(தவிர்க்க முடியா காரணத்தால் தாமிதமாகிவிட்டது.)


அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்கிய இஸ்லாமிய மார்க்கம் தன்னிறைவு பெற்ற மார்க்கமாகும்.

மனித வாழ்க்கைக்கு தேவையான அத்துனை வழிகாட்டல்களையும் உள்ளடக்கிய முழுமையாக நிறைவு பெற்ற மார்க்கம் இஸ்லாம்.

கொள்கைகள்,வணக்கங்கள்,குடும்பவிவகாரங்கள்,கொடுக்கல் வாங்கல்தனி மனித ஒழுக்கங்கள் என இஸ்லாம் பேசாத எந்த வாழ்க்கை நெறியுமில்லை என்றுகூறுமளவிற்குபூரணத்துவம் பெற்ற தீனையே நாம் பெற்றுள்ளோம்.

இதை அல்குர்ஆன் இப்படி விவரிக்கிறது,

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்

இதை இந்த உம்மத்திற்கு புரியவைக்கவே நபி ஸல் அவர்கள்- நபி மூஸா அலை அவர்கள் இன்று உயிருடன் இருந்தாலும் இந்த தீனை தான் பின்பற்றுவார் எனவும்,இறுதிநாளின் நெருக்கத்தில் வருகின்ற நபி ஈஸா அலை அவர்கள் என் உம்மத்தில் ஒருவராகவும்,என் ஷரீஅத்தை பாதுகாப்பவராகவே வாழ்வார் எனவும் கூறினார்கள்.

இந்த ஷரீஅத் மற்ற எல்லா ஷரீஅத்தையும் மாற்றும் தன்மைகொண்டது.
அதனால் தான் தவ்ராத்தின் பிரதி ஒன்று உமர் ரலி அவர்களுக்கு கிடைத்தபோது,அதை நபி ஸல் அவர்களின் சபைக்கு கொண்டு வந்து-வாசித்தபோது,நபி சல் அவர்கள் கடுமையாக கோபம் கொண்டார்கள்.காரணம் நிறைவான மார்க்கத்தை அல்லாஹ் உங்களுக்கு அருளியிருக்கும் போது நீங்கள் மற்றவேதங்களின் பக்கம் தேவையாக வேண்டாம்
எனவே நபி ஸல் அவர்களின் ஷரீஅத் தான்
 இறுதியானது,முடிவானதுமாகும்.

எனவே இந்த ஷரீஅத்தின் தனித்தன்மைகள் பாதுகாக்கப்படவேண்டும்.

உங்களுக்கு நாம் வழங்கிய ஷரீஅத்தை பின் பற்றுங்கள்,அறிவீனர்களின் மனோஇச்சைகளை பின்பற்றக்கூடாது என குர்ஆன் கண்டிப்புடன் கூறுகிறது.

ثُمَّ جَعَلْنَاكَ عَلَىٰ شَرِيعَةٍ مِّنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ

இதன் பின்னர் ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.

அப்படி இஸ்லாம் அல்லாத தீனை தேடினால் அது அல்லாஹ்விடம் ஒப்புக்கொள்ளப்படாது.

உலகில் தோன்றிய ஒவ்வொரு சமூகத்திற்கும் சில தனித்தன்மைகளும்  தனி அடையாளங்களும் இருப்பது போலவே,இஸ்லாத்திற்கும் சில தனி அடையாளங்களும்,தனித்துவங்களும் உண்டு.

மொழியில்,உணவுமுறையில்,உடையில்,வணக்கங்களில்,வாழ்வின் அத்துனை விஷயங்களிலும் ஒரு முஸ்லிம் தனித்து செயல்படுவதையே இஸ்லாம் விரும்புகிறது.

ஒரு முஸ்லிம் தன் வாழ்வில் எந்த சூழலிலும் பிறமத கலாச்சாரங்களை கையிலெடுப்பதை நாயகம் விரும்பவில்லை,அதனால் தான்

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ منهم" رواه أبو داود

 மற்ற மதங்களின் செயல்பாட்டுக்கு ஒப்பான காரியத்தை செய்பவன் அவர்களைச்சார்ந்தவன்.என கண்டிப்புடன் கூறிவிட்டார்கள்

لتتبعن سَنَن من قبلكم شبرًا بشبر وذراعًا بذراع، حتى لو سلكوا جحر ضب لسلكتموه". قلنا: "يا رسول الله: اليهود والنصارى؟!"، قال النبي -صلى الله عليه وسلم-: "فمن؟!". متفق عليه من حديث أبي سعيد الخدري -رضي الله عنه-.

உங்களின் முன்னோர்களின் வழிமுறைகளை ஜான் ஜானாக,முழம் முழமாக நீங்கள் பின்பற்றுவீர்கள் என நபி ஸல் அவர்கள் கூறியபோது,  முன்னோர்கள் வழிமுறை என்பது யூத,கிருஸ்துவ கலாச்சாரமா? என ஸஹாபாக்கள் வினவியபோது-வேறு யார்?அவர்கள்தான் என்று பதில் கூறினார்கள்

வணக்கங்களில் மாற்றம்:

لما قدم المدينة مهاجرًا، ورأى اليهود يصومون عاشوراء، أمر المسلمين بصيام يوم قبله أو بعده مخالفة لهم؛ بل حتى تحول القبلة من بيت المقدس إلى الكعبة هو مخالفة لهم في قبلتهم: (وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ المَسْجِدِ الحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ) [البقرة: 150].

மதீனாவுக்கு நபி ஸல் அவர்கள் வந்தபோது முக்கியமான மூன்று மாற்றங்களை கொண்டு வந்தார்கள்-

1.யூதர்களின் ஆஷுரா தின நோன்பிற்கு மாற்றமாக ஒருநாள் சேர்த்து வைத்து அவர்களுக்கு மாற்றம் செய்யச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

2.பைத்துல் முகத்தஸிலிருந்து கஃபாவாக கிப்லா மாற்றப்பட்டது,காரணம் அன்றைய தினத்தில் யூதர்கள் தங்களின் கிப்லாவாக பைத்துல் முகத்தஸையே ஆக்கிக்கொண்டனர்.


قال جمع من السلف: "معناه: لئلا يحتج اليهودُ عليكم بالموافقة في القبلة فيقولون: قد وافقونا في قبلتنا فيوشك أن يوافقونا في ديننا، فقطع الله بمخالفتهم في القبلة هذه الحجة".

ஸலபிய்யீன்களில் ஒரு கூட்டத்தினர் கூறுகின்றனர்
யூதர்களின் கிப்லாவுக்கு முஸ்லிம்கள் ஒத்துவருகிறபோது-எங்களின் தீனுக்கும் முஸ்லிம்கள் மாறிவிடுவர் என யூதர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.எனவே இந்த வாதத்தை பொய்யாக்கவே கிப்லா திருப்பப்பட்டது.

3.பெருநாட்களில் மாற்றம் கொண்டு வந்தார்கள்.

روى أنس -رضي الله عنه- فقال: قدم رسول الله -صلى الله عليه وسلم- المدينة، ولهم يومان يلعبون فيهما، فقال: "ما هذان اليومان؟!"، قالوا: كنا نلعب فيهما في الجاهلية، فقال رسول الله -صلى الله عليه وسلم-: "إن الله قد أبدلكم بهما خيرًا منهما؛ يوم الأضحى ويوم الفطر". رواه أبو داود.

நபி ஸல் அவர்கள் மதீனா வந்தபோது அங்குள்ள மக்கள் இரு தினங்களை பெருநாட்களாக கொண்டாடினர்,அதைப்பற்றி நபி ஸல் அவர்கள் வினவியபோது-இந்த இரு தினங்கள் அறியாமை காலம் முதல் நாங்கள் கொண்டாடி வருகின்றோம் என்றனர்.

அப்போது நபி ஸல் அவர்கள்-அல்லாஹுத்தஆலா உங்களுக்கு இதை விட சிறந்த இரு தினங்களை மாற்றமாக தந்துவிட்டான்,ஈதுல் பித்ர்-ஈதுல் அழ்ஹா.என்றார்கள்


சூரியனை வணக்கம் செய்யும் கூட்டத்தை கவனத்தில் கொண்டே சூரிய உதயம்,அஸ்தமம்,அதன் உச்சி பொழுது ஆகிய நேரங்கள் வணக்கம் செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது.

வணக்கமானாலும் வாழ்கையானாலும் மற்ற சமயங்களின் சாயல் வரக்கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

உம்ராவில் மாற்றம்:

ففي العمرة كان المشركون يحرمون العمرة في أشهر الحج، والنبي صلى الله عليه وسلم اعتمر أربع مرات كلهن في ذي القعدة وهو من أشهر الحج، بل في حجته عليه الصلاة والسلام أمر الناس أن يحولوا نسكهم إلى عمرة، ثم يحرمون بالحج بعد ذلك؛ كما روى مسلم عن ابن عباس رضي الله عنهما قال: "كانوا يرون أن العمرة في أشهر الحج من
 أفجر الفجور في الأرض 
மக்காவில் வாழ்ந்த இணைவைப்போரின் வழமை –அவர்கள் ஹஜ்ஜுடைய காலங்களில் ஹஜ்மட்டுமே செய்ய வேண்டும் உம்ரா செய்வது ஹராம்,பெரும்ப்பவம் என்று நம்பி வந்தனர்.
ஆனால் நபி ஸல் அவர்கள் –முஷ்ரிக்குகளுக்கு மாற்றம் செய்யவேண்டுமென்றே –தங்களின் வாழ்நாளில் செய்த நான்கு உம்ராவையும் ஹஜ்ஜுடைய காலமான துல்கஃதா மாதத்தில் தான் நிறைவேற்றினார்கள்.

மேலும் தங்களின் ஹஜ்ஜில் தங்களின் தோழர்களை உம்ரா செய்யச்சொல்லி உத்த்ரவிட்டார்கள்

ஹஜ்ஜில் மாற்றம்:


وخالفهم عليه الصلاة والسلام في النفرة من عرفة، وفي الدفع من مزدلفة؛ إذ كانوا ينفرون من عرفة قبل الغروب، ويدفعون من مزدلفة بعد الشروق؛ فنفر النبي صلى الله عليه وسلم من عرفة بعد الغروب، ودفع من مزدلفة قبيل الشروق؛ كما روى المسور ابن مخرمة رضي الله عنه فقال: "خطبنا رسول الله صلى الله عليه وسلم بعرفة فحمد الله وأثنى عليه ثم قال: "أما بعد: فإن أهل الشرك والأوثان كانوا يدفعون من هاهنا عند غروب الشمس حين تكون الشمس على رؤوس الجبال مثلَ عمائم الرجال على رؤوسها، فهدينا مخالف لهديهم، وكانوا يدفعون من المشعر الحرام عند طلوع الشمس على رؤوس الجبال مثل عمائم الرجال على رؤوسها فهدينا مخالف لهديهم" رواه الحاكم وقال: صحيح على شرط الشيخين.

இணைவைப்போரின் ஹஜ் அமல்களில்-அரபா தினத்தில் மாலை சூரியன் மறையும் முன் அரபாவிலிருந்து புறப்படும் பழக்கமும்,முஸ்த லிபாவில் சூரியன் உதயமாகும் முன் புறப்படும் பழக்கமும் இருந்தது.

நபி ஸல் அவகள்-அதற்கு மாற்றம் செய்தார்கள்.
ஹழ்ரத் மிஸ்வர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அரபா தினத்தில் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு குத்பா பிரசங்கம் செய்யும்போது-அல்லாஹ்வைப்புகழ்துவிட்டு பின்னர் கூறினார்கள்.

இணைவைப்போர் இங்கிருந்து சுரியன் மறையும் போது -மலை உச்சியில் ஆண்களின் தலைப்பாகைகள் போல் தெரியும் நேரத்தில் கிளம்பிவிடுவர்,எனவே அவர்களின் செயலுக்கு நாம் மாற்றம் செய்தாகவேண்டும்,அவ்வாறு முஸ்தலிபாவிலிருந்து சூரியன் உதயமாகும்போது- மலை உச்சியில் ஆண்களின் தலைப்பாகைகள் போல் தெரியும் நேரத்தில் கிளம்பிவிடுவர்,எனவே அவர்களின் செயலுக்கு நாம் மாற்றம் செய்தாகவேண்டும்.


وروى عمرو بن ميمون رضي الله عنه فقال: "شهدت عمر رضي الله عنه صلى بجمع الصبح ثم وقف فقال: إن المشركين كانوا لا يفيضون حتى تطلع الشمس ويقولون: أشرق ثبير، وإن النبي صلى الله عليه وسلم خالفهم ثم أفاض قبل أن تطلع الشمس" رواه البخاري.

ஹஜ்ஜில் 9 ம் நாள் காலை சுபுஹ் தொழுகையை ஹழ்ரத் உமர் ரலி அவர்களுடன் நிறைவேற்றியபோது-இணைவைப்பவர்கள் சூரியன் உதயமாகும் வரைமுஸ்தலிபாவிலிருந்து புறப்படமாட்டார்கள்,சூரியன் உதயமாகிவிட்டால்-ஸபீர் மலையில் சூரியன் தோன்றிவிட்டது என்று கூறி புறப்படுவர்.ஆனால் நபி ஸல்.அவர்கள்- அவர்களுக்கு மாற்றம் செய்து-சூரிய உதயத்திற்கு முன் புறப்பட்டு விடுவார்கள் என அம்ர் இப்னு மைமூன் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நோன்பில் மாற்றம்:

ومن الدقائق في هذا المجـال: ما استنبطه العلمـاء من أن صيامَ المسلمين وإفطارهم وأعيادَهم إنما مبناها على رؤية الهلال، وذلك مخالف لما عليه الكفـار؛ إذ يثبتون ذلك بالحساب، وجاءت السنة بتعجيل الفطور وتأخير السحور مخالفة لهم،

முஸ்லிம்கள் நோன்பு வைப்பதும்,திறப்பதும்,ஈதை முடிவுசெய்வதும் பிறையை அடிப்பையாக கொண்டு என ஷரீஅத் வலியுறுத்தியது- காலக்கணக்கை வைத்து நோன்பு வைத்துவந்த மாற்றுமதத்தவர்களுக்கு மாற்றம் செய்யும் நோக்கமே அன்றி வேறில்லை.

அவ்வாறே-நோன்பு திறப்பதை தீவிரமாகவும்,சஹரை தாமிதப்படுத்துவதும் வேதக்காரர்களுக்கு மாற்றம் செய்யும் நோக்கம் உள்ளே மறைந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும்.


 وجاء النهي عن الجلوس كما يجلسون، ورد عن ابن عمر -رضي الله عنهما- أنه رأى رجلاً يتكئ على يده اليسرى وهو قاعد في الصلاة فقال له: "لا تجلس هكذا؛ فإن هكذا يجلس الذين يعذبون". وفي رواية "تلك صلاةُ المغضوب عليهم". أخرجه أبو داود

ஹழ்ரத் இப்னு உமர் ரலி அவர்கள்-தொழுகையில் ஒருவர் தன் இட்து காலின் மீது சாந்தவராக உட்காரக்கண்டார்கள்,உடனே அம்மனிதரிடம்-இப்படி உட்கார வேண்டாம்,காரணம் இவ்வாறு உட்காருவது இறைவனின் தண்டனையை பெற்ற கூட்டத்தினர் பழக்கம் என்றார்கள்.

ஆடையில் மாற்றம்:

أن عبد الله بن عمرو بن العاص أخبره قال : رأى رسول الله صلى الله عليه وسلم علي ثوبين معصفرين ، فقال : إن هذه من ثياب الكفار فلا تلبسها
مسلم

மஞ்சல் நிறத்தால் சாயம் பூசப்பட்ட இரு ஆடைகளை அணிந்த நிலையில் ஒருவரை கண்ட நபி ஸல் அவர்கள்-இது இறைமறுப்பாளர் களின் ஆடைகள் இதை அணிய வேண்டாம் என்றார்கள்.

தாடியில்:

عَنْ ابْنِ عُمَرَ رضي الله عنه عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ (بخاري)

முஷ்ரிக்குகளுக்கு மாற்றம் செய்து-தாடிய வளருங்கள்,மீசையை கத்திரியுங்கள்.

 عَنْ أَبِي مَعْمَرٍ قَالَ سَأَلْنَا خَبَّابًا أَكَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ قُلْنَا بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ (بخاري)

கப்பாப் ரலி அவர்களிடம் அபூமஃமர் ரஹ் அவர்கள்-ழுஹர் அஸர் தொழுகைகளில் நாயகம் கிராத் ஓதுவார்களா?என கேட்க-ஆம் என கப்பாப் ரலி அவர்கள் பதில் கூறியபோது-
நீங்கள் எப்படி அதை தெரிந்துகொண்டீர்கள்?என கேட்க-தாடியின் அசைவை வைத்து என கூறினார்கள்.

தலையிலும் தாடியிலும் மருதானி இடுவதில் மாற்றம்:

عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ (بخاري)

யூதர்களுக்கும் கிருஸ்துவர்களுக்கும் மாற்றம் செய்து சாயம் பூசுங்கள்.


عَنْ جَابِرِ رَضِيَ اللَّهُ قَالَ أُتِيَ بِأَبِي قُحَافَةَ(والد ابي بكر)يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيِّرُوا هَذَا بِشَيْءٍ وَاجْتَنِبُوا السَّوَادَ(مسلم

மக்கா வெற்றியின் போது தன் தலையும்,தாடியும் நரைத்த நிலையில் அபூபக்கர் ரலி அவர்களின் தந்தை அபூகுஹாபா நாயகத்திடம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வந்தபோது-இந்த நரையை மாற்றுங்கள்,கருப்பு சாயத்தை தவித்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.

முடியை அழகு படுத்துவதில் மாற்றம்:

وعنه رَضِيَ اللَّهُ عَنْهُ قال: رأى رَسُول اللَّهِ  صبياً قد حلق بعض رأسه وترك بعضه فنهاهم عن ذلك وقال: (احلقوه كله أو اتركوه كله) رَوَاهُ أبُو دَاوُدَ بإسناد صحيح على شرط البخاري ومسلم.

தலையில் பாதி முடியை நீக்கி மீதியை அப்படியே விட்ட நிலையில் ஒரு சிறுவனை கண்ட பெருமானார் ஸல் அவர்கள்-ஒன்று முழுமையாக முடியை மழித்துவிடுங்கள்,அல்லது முழுமையாக விட்டுவிடுங்கள் என்றார்கள் என்று கூறியதாக இப்னு உமர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எனவே மாற்றார்களுக்கு மாற்றம் செய்து மார்க்கத்தை பின்பற்றிநடப்போமாக.






5 comments:

  1. //மாற்றம் வேண்டும்//

    மாற்றத்தை உண்டுபண்ணக் கூடிய
    அருமையான கட்டுரை.

    ReplyDelete
  2. அழகான
    செய்திகள்

    ReplyDelete