Tuesday 25 December 2012

இஸ்லாமிய தண்டனை வேண்டும்.



ஒரு இளம் பெண் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்துச்சென்று பத்திரமாக தன் இல்லம் திரும்பினால் அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது.                                                                                        
                                                                                  இந்தியத்தலைவர் காந்தி.

இராக்கிலிருந்து ஒரு பெண் தன்னந்தனியாக மக்காவுக்கு வந்து கஃபாவை தவாப் செய்துவிட்டு பத்திரமாக    திரும்பி செல்லும் காலம் வெகு விரைவில் வரும்.
                                                                                                                                                                     உலகத்தலைவர் நபி ஸல்

நபி ஸல் அவர்களின் இந்த வாக்கு 10 ஆண்டுகளில் நிறைவேறியதாக நபித்தோழர் அதி இப்னு காதம் ரலிஅவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள்.

இந்திய மக்களால் மதிக்கப்படும் காந்தி அவர்கள் கண்ட சுதந்திர கனவு என்ன ஆனது?


இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகளை கடந்தும்,கழுத்தில் தங்கநகைகளுடன் இரவில் அல்ல பகலில் கூட ஒரு பெண் தனியாக நடந்து செல்லமுடியா அச்சமுள்ள சூழலே நிலவுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் 23 வயது கல்லூரி மாணவி காமுகர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம்இந்தியாவையேஉலுக்கியது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்கக்கோரிஆர்ப்பாட்டங்களும்,போராட்டங்களும் நடை பெற்று வருகிறது.

இதுபோன்ற கற்பழிப்புக்குற்றங்களுக்கு மரண
தண்டனையேதீர்வுஎனவும்,இந்தியஅரசியலமைப்புச்சட்டத்தில்திருத்தம்கொண்டுவரப்படவேண்டுமெனவும் நாட்டின் பல திக்குகளிலிருந்தும் குரல்கள் ஒலிக்கிறது.

இதுபோன்ற கொடூரங்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும்அவ்வப்போதுநடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.ஆனால் தலைநகரில் நடந்ததால் இது தலையாய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

அசாமிலோ,பிகாரிலோ நடந்திருந்தால் இந்தளவு முக்கியத்துவம் பெறுமா?என்பது சந்தேகமே!

காரணம், டில்லியில் அந்த மாணவிக்கு நடந்த கொடுகமைக்குநிகரானசம்பவங்கள்தமிழ்நாட்டிலும் 
நடந்துகொண்டுதானிருக்கிறது,

இந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவியை ஒரு காமக்கொடூரன் கற்பழித்து கோரமாக கொலை செய்த நிகழ்வு அவ்வளவு 
முக்கியத்துவம் பெறவில்லை? ஏன்?

பிரச்சனைகளில் காட்டப்படும் தீவிரம் அதற்கான தீர்வில் காட்டப்படுவதில்லை என்பது உண்மையே.

மக்களும் மீடியாக்களும் இந்தப்பிரச்சனையை மூன்று கோனத்தில் அலசுகின்றனர்,

முதலாவது:சட்ட ஒழுங்கு சரியில்லை.


அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால்-புதிதாக தேர்வு செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து பேசும்போது,தமிழ்நாட்டில் உள்ள 900 நீதிபதிகளில் 500 பேர் மீது ஊழல் புகார்இருப்பதாகவேதனையுடன் தெறிவித்தார்.மேலும் பொதுமக்கள் கடைசியாக நிவாரணம் தேடிவருவது நீதிபதிகளிடம்தான் எனவே விமர்சனங்களுக்கு ஆளாகாமல் செயல்படவேண்டும் என வலியுறுத்தினார்.

இரண்டாவது:பண்பாடு கெட்டுப்போய்விட்டது.

கற்பழிப்பு போன்ற விவகாரங்களில் மரணதண்டனை வேண்டும் என்று வலியுறுத்தும் சமுதாயம்பெண்களின்ஆடைக்குறைப்புகலாச்சாரம் பற்றியும்,ஆண்,பெண் கலப்புச்சமாச்சாரம் பற்றியும்,சுதந்திரம் எனும் பெயரில் 
கட்டுப்பாடுகளை தகர்த்தெறிகிற ஆபத்துக்களைப்பற்றியும் வாய்திறப்பதில்லை.


மூன்றாவது: மதுப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட சமுதாயம்.

டெங்கு காய்ச்சல் வந்தால் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கும் அதே நேரம் அதற்கு காரணமான கொசுவும் ஒழிக்கப்படவேண்டும்.

இஸ்லாம் என்ன கூறுகிறது?


இஸ்லாம் சட்டங்களைப்பற்றி பேசியதை விட சீர்திருத்தங்களைப்பற்றியும்,முன் நடவடிக்கைகள் பற்றியும் அதிக கவனம்எடுத்துப்பேசுகிறது,காரணம் வரும் முன் காப்பதே அறிவுடமை.

இஸ்லாம் சட்டங்களை அடிப்படையாக கொண்ட மார்க்கமல்ல.அதனால் தான் திருக்குர்ஆனின் வசனங்கள் 
6666 ல்- சட்டங்கள் பற்றி பேசும் வசங்கள் வெறும் 500 மட்டுமே!

இஸ்லாம் வழங்கியிருக்கும் குற்றவியல் தண்டனைகள என்றுப்பார்த்தால் விசாலமான ஷரீஅத்தில் ஒரு பகுதி மட்டுமே.

ஆம்!ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட இறைவசனங்களில் குற்றவியல் தண்டனைகள் குறித்துபேசும்வசனங்கள் பத்தைக்கூட தாண்டவில்லை.

குற்றவாளிகளை தண்டித்து சீர்த்திருத்துவதை விடவும் குற்றவாளியாகாமல் அவனை தடுப்பதே இஸ்லாத்தின்பிரதான நோக்கமாகும்.

அல்குர்ஆனில் விபச்சாரத்திற்கான தண்டனை குறித்து ஒரு வசனம் பேசுகிறது

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ

விபசாரியும், விபசாரனும் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்.(திருமணம் ஆகாமல்
இருந்தால்)
(அல்குர்ஆன் 24:2)

இந்த வசனம் இடம் பெற்ற சூரா அந்நூரில்- விபச்சார குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வழிகள் பற்றி நிறைவாக பேசுகிறது.

அடுத்தவர்களின் வீட்டுக்கு செல்லும்போது கடைபிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள்,தீயபார்வைகளிலிருந்து தன்னை
பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள்,பெண்கள் அந்நியர்களிடமிருந்து தங்களை மறைவாக்கிகொள்ள
வேண்டிய அவசியங்கள் போன்ற பண்பாடுகள் பற்றியும்,நல்லொழுக்கம் பற்றியும் அதிகம் வலியுறுத்திப்பேசுகிறது

இதனடிப்படையில் தான்-விபச்சாரம் செய்யாதீர்கள் என்று சொல்வதை விட விபச்சாரத்தின் பக்கம் நெருங்க வேண்டாம் என போதிக்கிறது.

 وَلَا تَقْرَبُوا الزِّنَىٰ ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
(அல்குர்ஆன் 17:32)


ஒரு பெண் அவசியத்தேவையின்றி வெளியே வருவதை கண்டிக்கும் அல்குர்ஆன்-

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ

 நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்.-
(அல்குர்ஆன் 33:33)


தேவைக்காக வெளியே வரும்போது கூட- அந்நியர்கள் உங்களால் ஈர்க்கப்படும் எந்த செயல்பாடுகளிலிருந்தும்
உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிறது.

وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ

 மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.
(அல்குர்ஆன் 24:31)

ஆடவர்களை திரும்பிப்பார்க்க வைக்கிற நடையே ஆபத்து என்றால்,அடுத்தவர்களை சுண்டி இழுக்கிற ஆடைகளை
என்ன சொல்வது?
அவ்வாறே-திருட்டுக்குற்றத்திற்கான தண்டனை பற்றி திருக்குர்ஆனில் இரண்டு வசனங்கள் மட்டுமே பேசுகிறது
  
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللَّـهِ ۗ وَاللَّـهُ عَزِيزٌ حَكِيمٌ

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 5:38)

இந்த வசனம் மதீனாவில் இறுதியாக இறக்கப்பட்ட வசனமாகும்.திருட்டின் தண்டனை பற்றிய வசனம் இறங்கும்
முன்பு திருட்டுக்கு காரணமான வறுமை ஒழிக்கும் வழிகளான ஜகாத்,சதகா,கடன்,போன்ற திட்டங்களை குறித்து
நூற்றுக்கணக்கான வசனங்கள் இறக்கப்பட்டு விட்டன.

வறுமையே திருட்டுக்கு காரணம் என்றால் வறுமையே முதலில் ஒழிக்கப்படவேண்டும் என்பதே இஸ்லாத்தின் 
அனுகுமுறையாகும்,அதனால் தான் பசித்தவன் ரொட்டியை திருடினால்,ஆடையில்லாத நிர்வாணமானவன்
ஆடையை திருடினால்,நோயாளி மருந்தை திருடினால் கை வெட்டப்படும் குற்றமாக அதை பார்க்கப்படாது.

இஸ்லாம் போதிக்கிற பண்பாடுகளையும் அறநெறிகளையும் தாண்டி ஒருவர் குற்ற வாசலில் வந்து நிற்கும்
போது-இப்போது சட்டம் தன் கடமையைச்செய்யும்.
இஸ்லாமிய சட்டங்கள் மூலம் மட்டும் தான் குற்றம்செய்யாத ஒரு மனித சமூகத்தை உருவாக்க முடியும்.
அதனால் தான் இஸ்லாம் நீதித்துறையை கட்டமைப்பதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டது.
கலிபாக்களின் ஆட்சியில் அரசாங்க ஊழியர்களில் நீதிபதிகளுக்கே அதிக ஊதியம் வழங்கப்பட்டது.ஏனெனில்
பணம்,பதவி,சொந்தம் என எதற்கும் முன்னும் நீதி மண்டியிடக்கூடாது.

இஸ்லாமிய சட்டங்களின் தனித்தன்மைகள்

1.பகிரங்கமாக தண்டித்தல்.

விபச்சாரம்,களவு,கொலை,கொள்ளை,போதைப்பொருள் போன்ற பெரும் குற்றங்களுக்கு இஸ்லாத்தில் கடும்
தண்டனைகள் உண்டு என்பது உண்மையே.

ஒரு கொலைகாரனுக்கு வழங்கப்படும் மரணதண்டனை எத்தனையோ கொலைகளை தடுத்து நிறுத்தும்,அதனால்
தான் இஸ்லாத்தில் கடும் குற்றத்திற்கான தண்டனை நிறைவேற்றும் போது மக்களின் முன்னிலையில் வைத்து
நிறைவேற்றப்படவேண்டும் என உத்தரவிடுகிறது.

وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ

அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
(அல்குர்ஆன் 24:2)


أن عمرو بن العاص، أقام حد الخمر على عبد الرحمن بن عمر بن الخطاب، يوم كان عامله على مصر. ومن المألوف أن يقام الحد في الساحة العامة للمدينة، لتتحقق من ذلك العبرة للجمهور، غير أن عمرو بن العاص أقام الحد على ابن الخليفة في البيت، فلما بلغ الخبر عمر كتب إلى عمرو بن العاص: من عبد الله عمر أمير المؤمنين إلى العاص بن العاص: عجبت لك يا ابن العاص ولجرأتك عليّ، وخلاف عهدي. أما إني قد خالفت فيك أصحاب بدر عمن هو خير منك، واخترتك لجدالك عني وإنفاذ مهدي، فأراك تلوثت بما قد تلوثت، فما أراني إلا عازلك فمسيء عزلك، تضرب عبد الرحمن في بيتك، وقد عرفت أن هذا يخالفني؟ إنما عبد الرحمن رجل من رعيتك، تصنع به ما تصنع بغيره من المسلمين. ولكن قلت: هو ولد أمير المؤمنين وقد عرفت أن لا هوادة لأحد من الناس عندي في حق يجب لله عليه، فإذا جاءك كتابي هذا، فابعث به في عباءة على قتب حتى يعرف سوء ما صنع. وقد تم إحضاره إلى المدينة وضربه الحد جهرًا (روى ذلك ابن سعد، وأشار إليه ابن الزبير، وأخرجه عبد الرزاق بسند صحيح عن ابن عمر مطولاً).


எகிப்தின் ஆளுனராக இருந்த ஹழ்ரத் அம்ர் இப்னுல் ஆஸ் ரலி அவர்கள்-ஜனாதிபதி உமர் ரலி அவர்களின்
மகன் அப்துர் ரஹ்மான் அவர்கள் மது குடித்த குற்றத்திற்காக தண்டனை நிறைவேற்றும்போது தங்களின்
வீட்டில் வைத்து மறைவாக தண்டித்தார்கள்.குற்றவாளிகளை பொது தளத்தில் வைத்து தண்டிப்பதே இஸ்லாமிய
மரபு.செய்தியறிந்த ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் ஆளுனர் அம்ர் ரலி அவர்களுக்கு கடிதம் அனுப்பினார்கள்,
அதில்-உன்னை விட மிகச்சிறந்தவர்களான பத்ரியீன்கள் இருக்க என் கட்டளையை சரியாக நிறைவேற்றுவீர்
என்ற நம்பிக்கையில் இப்பதவிக்கு உம்மை தேர்வு செய்தேன்,ஆனால் என் ஒப்பந்தத்தை மீறிவிட்டீர்.உம்
ஆட்சிக்கு கீழ் வாழும் என் மகன் அப்துர் ரஹ்மானை மற்ற முஸ்லிம்களை போல சமமாக பாவித்து தண்டித்தி
ருக்க வேண்டும்.எனவே இக்கடிதம் கிடைத்ததும் உடனடியாக அவரை மதீனாவுக்கு அனுப்பி வையுங்கள்,
மதீனாவில் மக்கள் முன்னிலையில் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று உத்தரவிட்டார்கள்.

இஸ்லாம் வழங்கும் தண்டனைகளால் மனித உரிமை பாதுகாக்கப்படுகிறது,பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் 
கிடைக்கிறது.சமூகமும் நிம்மதி பெறுகிறது.இதை தான் அல்லாஹுத்தஆலா -

وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.என்று கூறுகின்றான்.
(அல்குர்ஆன் 2:179)


2.சமத்துவமான நீதி;

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّـهِ وَلَوْ عَلَىٰ أَنفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்).
(அல்குர்ஆன் 4:135)


இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளை பொருத்தவரையில் குற்றத்தின் வீரியம் பார்க்கப்படுமே தவிர
குற்றவாளியின் பின்னனி பார்க்கப்படாது.ஏழை,பணக்காரன்,அந்நியன் சொந்தக்காரன்,ஆட்சியாளர்,குடிமகன்
போன்ற எந்த பாகுபாடும் காட்டப்படாது.
இன்னும் சொல்வதானால் ஆட்சியாளர்கள்,அல்லது ஆட்சியாளர்களின் உறவினர்கள் தவறு செய்யும்போது 
கடுமையான கண்டனத்துடன் தண்டிக்கும்.

يقول ابن عمر رضي الله عنهما: كان عمر إذا نهى الناس عن شيء جمع أهله وقال: إني قد نهيت الناس عن كذا وكذا وإنهم إنما ينظرون إليكم نظر الطير إلى اللحم فإن وقعتم وقعوا، وإن هبتم هابوا، وايم الله لا أوتي برجل منكم فعل الذي نهيت عنه إلا أضعفت عليه العقوبة، لمكانه مني فمن شاء فليتقدم ومن شاء فليتأخر[2].

உமர் ரலி மக்களுக்கு ஒரு சட்டத்தை கொண்டு வரும்போது தன் குடும்பத்தினர்களை ஒன்று கூட்டி-நான் 
மக்களை இன்ன இன்ன விஷயங்களை விட்டும் தடுத்துள்ளேன்.எனவே மக்கள் -பறவை தன் இரையை குறிவைத்து பார்ப்பது போல உங்களை பார்ப்பார்கள்.நீங்கள் அதை செய்தால் மக்களும் செய்வார்கள்.நீங்கள் விலகிக்
கொண்டால் மக்களும் விலகிக்கொள்வர்.எனவே நான் தடுத்த விஷயங்களில் நீங்கள் ஈடுபட்டதாக நான் 
கேள்விப்பட்டால் உங்களை பன்மடங்கு தண்டிப்பேன். என்று கூறுவார்கள்.


جاء رجل من أهل مصر إلى عمر بن الخطاب -رضي الله عنه- وقال له: يا أمير المؤمنين، لقد تسابقتُ مع ابن عمرو بن العاص وإلى مصر، فسبقتُه فضربني بسوطه، وقال لي: أنا ابن الأكرمين. فكتب عمر بن الخطاب إلى
عمرو بن العاص: إذا أتاك كتابي هذا فلتحضر إلى ومعك ابنك، فلما حضرا أعطى عمر بن الخطاب السوط للرجل المصري ليضرب ابن عمرو قائلا له: اضرب ابن الأكرمين

كنز العمال

எகிப்து வாசிகளில் ஒருவர் உமர் ரலி அவர்களிடம் வந்து-அமீருல் முஃமினீன் அவர்களே!எனக்கும் எகிப்து 
ஆளுனரின் மகனுக்கும் குதிரை பந்தயம் வைத்து அதில் நான் முந்தியபோது-ஆளுனரின் மகனான என்னையே
முந்துகிறாயா?என தன் சாட்டையால் அடித்துவிட்டார் என முறையிட்டார்.
அப்போது உமர் ரலி அவர்கள் கடிதம் எழுதி-எகிப்து ஆளுனரும் அவரின் மகனும் உடனே மதீனாவந்து தன்னை
சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டார்கள்.
அவ்விருவரும் வந்தபோது-விசாரித்து பின் -சாட்டையை வழக்கு தொடுத்தவரிடம் கொடுத்து,ஆளுனரின் மகனை
அடிக்கச்சொன்னார்கள்.

3.பரிந்துரை செல்லாது.

سرقت امرأة أثناء فتح مكة، وأراد الرسول صلى الله عليه وسلم أن يقيم عليها الحدَّ ويقطع يدها، فذهب أهلها إلى أسامة بن زيد وطلبوا منه أن يشفع لها عند رسول الله صلى الله عليه وسلم حتى لا يقطع يدها، وكان الرسول صلى الله عليه وسلم يحب أسامة حبَّا شديدًا.
فلما تشفع أسامة لتلك المرأة تغير وجه الرسول صلى الله عليه وسلم، وقال له: (أتشفع في حد من حدود الله؟!). ثم قام النبي صلى الله عليه وسلم فخطب في الناس، وقال: (فإنما أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه، وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد، وايم الله (أداة قسم)، لو أن فاطمة بنت محمد سرقت لقطعتُ يدها)
 [البخاري].

மக்கா வெற்றியின் போது உயர்ந்த குலப்பெண் திருடிய குற்றத்திற்காக கரத்தை துண்டிக்க நபி ஸல் அவர்கள்
உத்தரவிட்ட போது-அப்பெண்ணின் குடும்பத்தினர் நபிக்கு பிரியமான உஸாமா ரலி அவர்களை சந்தித்து,
நபியிடம் பரிந்துரை செய்யுமாறு வேண்டிக்கொண்டனர்-இது குறித்து நபியிடம் உஸாமா ரலி அவர்கள் 
பேசியபோது கடும் சினமுற்ற நாயகம்-அல்லாஹ்வின் தண்டனையில் பரிந்து பேசுகிறீரா?உங்களின் முன்னவர்கள்
அழிந்தது, அவர்களில் உயர்ந்த குலத்தவர் திருடினால் விட்டுவிடுவதும்,பலகீனமானவர் திருடினால் தண்டிப்பதும் 
போன்ற செயல்களால் தான்.முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும் நான் கரத்தை துண்டிப்பேன் என்றார்கள்

இஸ்லாமிய குற்றவியல் தண்டனையில் மன்னிக்கும் உரிமையை பாதிக்கப்பட்டவனின் குடும்பத்திடம் 
ஒப்படைக்கிறது,காரணம் நடபெற்ற குற்றத்தால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் அவர்களே.
கொலை செய்தவன் ஒருவன்,அதனால் பாதிக்கப்பட்டவன் இன்னொருவன் இந்த இரண்டுக்குமிடையில் 
குற்றத்தை மன்னிப்பதற்கு மற்றவர்களுக்கு எந்தவகையிலும் அதிகாரம் இல்லை.

4.காலம் கடத்தாத உடனடி தண்டனை.

في عهد عمر بن الخطاب -رضي الله عنه- أسلم رجل من سادة العرب، وذهب للحج، وبينما كان يطوف حول الكعبة، داس رجل على طرف ردائه، فضربه على وجهه ضربة شديدة، فذهب الرجل إلى عمر بن الخطاب، واشتكى له، فطلب عمر -رضي الله عنه- إحضار الضارب، فلما حضر أمر عمر الرجل أن يقتص منه بأن يضربه على وجهه مثلما فعل معه، فقال متعجبًا: وهل أستوي أنا وهو في ذلك؟ فقال عمر: نعم، الإسلام سوَّى بينكما

"السيرة الحلبية" (3/ 359)، 

உமர் ரலி அவர்களின் ஆட்சியில்-அர்புநாட்டின் தலைவர்களில் ஒருவர் ஹஜ் செய்ய வந்தார்.கஃபாவில் தவாப்
செய்து கொண்டிருக்கும் போது ஒருவர் அவரின் ஆடையின் ஒரப்பகுதியை மிதித்து விட்டார்.உடனே கோபப்
பட்ட அந்த தலைவர்,அவரை கடுமையாக அடித்துவிட்டார்,அடிபட்டவரோ உமர் ரலி அவர்களிடம் வழக்கு
தொடுத்தபோது உமர் ரலி அவர்கள்-அடி வாங்கியவரை திருப்பி அடிக்கச்சொன்னார்கள்.அப்போது குற்றவாளி 
யான தலைவர்-நானும் அவரும் சமமா?என கேட்டார்.அதற்கு உமர் ரலி ஆம் இஸ்லாம் உங்கள் இருவரையும் சமமாகவே பார்க்கிறது.என கூறினார்கள்.
5.இறக்கம் காட்டப்படாது.

 وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّـهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّـهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்;
(அல்குர்ஆன் 24:2)


நிறைவாக:
கரத்தை துண்டித்தல்,தலையெடுத்தல்,கல்லெரிந்து கொல்லுதல் போன்ற இஸ்லாமிய தண்டனைகளை
ஒரு காலத்தில் காட்டுமிராண்டித்தனம் என்று சொன்ன மக்கள் இன்று-குற்றங்கள் குறைய அதுவே தீர்வு 
என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.காரணம் இந்திய குற்றவியல் சட்டங்களில் கடுமை இல்லை என்கிற
மனோநிலைக்கு பெரும்பான்மையான மக்கள் வந்து விட்டனர்.
குற்றம் செய்தவனுக்கு மக்கள் வரிப்பணத்தில் பல வருடங்கள் சிறையில் சோறுபோட்டு,அவனை படிக்கவைத்து,
அவனுக்கு உயர்தரமான பாதுகாப்பும்,மருத்துவ வசதியும் செய்து கொடுத்தால்-80 தடவை திருடியவன் 81 
தடவை கைவரிசை-10 கொலைகள் செய்தவன் 11 வது கொலை செய்யும் போது பிடிபட்டான் போன்ற செய்திகள்
தவிர்க்க முடியாது.



  




                                   

14 comments:

  1. மரியாதைக்குரிய கட்டுரையாளரே.. இக்கட்டுரையின் தொடக்கத்தில் காந்தியடிகளை தேசத்தந்தை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். காந்திக்கு தேசத் தந்தை எனும் பட்டத்தை யாரும் வழங்கவுமில்லை. அப்படியொரு பட்டத்தை வழங்கவும் சட்டத்தில் இடமில்லை என்று சமீபத்தில் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மக்கள் அவரை அவ்வாறே அழைக்கிறார்கள் என்று காரணம் சொல்ல வழியில்லை. ஏனெனில் பத்திரிக்கைகளில் வந்த மக்கள் அந்த வார்த்தையை தவிர்த்து வருகின்றனர்.தமிழ் பத்திரிக்கைகளில் இது வந்துள்ளது.
    http://4tamilmedia.com/newses/india/9259-2012-10-26-07-24-25

    ReplyDelete
    Replies
    1. yosufi avargaluku kuraigal mattum dhan kannil theriyumo?

      Delete
    2. தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி,திருத்திக்கொள்கிறேன்

      Delete
  2. alhadhu lillah miga arumaiyana katturai hazrath jazakallah

    ReplyDelete
    Replies
    1. அது திறமையை பொருத்தது அப்பாஸ் ரியாஜி..நீர் ஆதங்கப்படாதீர். எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை.

      Delete
    2. ANDHA KURAIYAI PAARKUM THIRAMAI YENAKKU VENDAM YOSUFI AVARGALE MATRAVARGALIN KURAIGALAI PAARPADHAIVIDA AVARGALIN NIRAIGALAI PAARPADHARKU ALLAH YENAKKU ARUL SEYYA VENDUM!

      Delete
  3. மௌலானா! கட்டுரை அருமை! ஆனால் இன்னும் கொஞ்சம் உள் நீச்சல் அடித்திருக்கலாம்; ஆம்! இன்னும் ஆழம் வேண்டும்!

    ReplyDelete
  4. kurayillatha katturayai padithu kollungal...illayenral 100% sariyaga neengal blogspot open panni katturai eluthungal..ungal thani patta virothathattahi kaati thiramaigalai oona padutha theergal

    ReplyDelete
  5. Alhamdu lillah... Katturaum alahu,quran vasanankal kuripittatharku...jazakallah...

    ReplyDelete
  6. Alhamdu lillah... Katturaum alahu,quran vasanankal kuripittatharku...jazakallah...

    ReplyDelete
  7. அன்பு அபூபக்ர் மவ்லானா, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்ம., இஸ்லாமிய குற்றவியல் தண்டனைதான் நல்ல தீர்வைத்தர முடியும் என்பதை உங்களின் பாணியில் அழகிய உரையை வழங்கியுள்ள தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புடன் அபுல் ஹஸன் ஜமாலி, ஈரோடு.

    ReplyDelete
  8. ippothaikku makkalukku thevaiyana katturai jazakkallah

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete