Tuesday 4 December 2012

மரணம்-ஒரு இழப்பல்ல!



قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ

நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்
களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும். (அல் குர்ஆன் 62:8)

இன்பங்களை முறித்துவிடும்,உறவுகளை பிரித்து விடும்,ஆசைகளை அறுத்துவிடும்.

மாளிகைகள் இதற்கு தடையில்லை.மன்னர்களும் இதற்கு தடையில்லை.மருத்துவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

யாருக்கு முன்னும் மண்டியிட்டு பழக்கமில்லை,

உலக வரலாற்றில் கருத்துவேறுபாடுகளை தாண்டி ஒரு விஷயம் இருக்குமானால் அது மரணத்திற்கு மட்டும் சொந்தமானது.ஏனெனில் இறைவனை மறுக்கும் மதங்கள் உண்டு,மறுமையை மறுக்கும் மதங்களும் உண்டு,ஆனால் மரணத்தை மறுத்துப் பேசும் தைரியம் இதுவரை யாருக்கும் கிடையாது.

உலகின் எல்லா ஆராய்ச்சிக்களும் தோற்றுப்போகும் இடமாகும்.

மரணத்தின் சூட்சுமத்தை அறிந்துகொள்ளவேண்டுமானால் மனிதனுக்கு மரணத்தை தருகிற ரூஹின் இரகசியத்தை தெரிந்தாக வேண்டும்.

மரணம் என்றால் என்ன?

خروج الروح من الجسدஉடலை விட்டும் ரூஹ் வெளியேறுவது தான் மரணமாகும்.

அப்படியானால் அழிவு உடலுக்குத்தானே தவிர ரூஹுக்கு அல்ல.
                                                         ஆன்மாவைப்பற்றிய அறிவையும் ஆராய்ச்சியையும் நம் நலன் கருதி இஸ்லாம் மறைத்துவைத்திருக்கிறது.

وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ ۖ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا

(நபியே!) "உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூஹு' என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை" எனக் கூறுவீராக. (அல் குர்ஆன் 17:85)

ரூஹை பற்றி எத்தனையோ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன.இன்னும் தீர்வு எட்டவில்லை.கிடைக்க போவது மில்லை.

மனித உடலில் இன்ப துன்பங்களை அனுபவிப்பது அந்த ரூஹ் தான்.உடலில் ரூஹ் இருக்கும் வரை தான் அப்துல் காதிர்,அப்துர் ரஹ்மான்.அது பிரிந்து விட்டால் மைய்யித்து தான்.ரூஹை பிரிந்த உடல் வெற்றுடலாகிப்போகிறது.

உடலுக்கு அழிவு உண்டு,ஆனால் ரூஹுக்கு அழிவில்லை.

கப்ரில் உடல் அழியலாம்,நரகில் உடல் அழியலாம்.ஆன்மா அழியாது.இது பற்றி அல்குர்ஆன் -

كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ

அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம்.என்று கூறுகிறது.
(அல் குர்ஆன் 4:57)

தோள்களும் சதைகளும் மாற்றப்படலாம்,ரூஹ் மாற்றப்படாது.ஏனென்றால் ரூஹுக்கு அழிவு கிடையாது.

எட்டு பொருட்களுக்கு அழிவு கிடையாது என்று இமாம் சுயூதி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்

المخلّدات أو المخلوقات التي لا تفنى بمشيئة الله طبعا , فهي التي نظمها الإمام جلال الدّين السَّيوطي فقال
ثمانية حُكْمُ البقاء يعُمُّها ********* من الخلق والباقون في حيِّز العدمْ
هي العرش والكرسي نار وجنة *** وعجب وأرواح كذا اللوح والقلم

1.அர்ஷ் 2.குர்ஸ் 3.நரகம் 4.சொர்க்கம் 5.முதுகுஎழும்பு 6.ஆன்மாக்கள் 7.விதி ஏடு 8.கலம்

இதை இமாம் நவவி ரஹ் அவர்களும் உறுதிபடுத்துகிறார்கள்.

يقول النووي : ثمانية حكم البقاء يعمها من الخلق والباقون في حيز العدم هي العرش والكرسي نار وجنة وعجب وأرواح كذا اللوح والقلم وهذه الأشياء باقية بإبقاء الله لها
شرح كتاب السنة

படைப்பாளனின் பலத்தையும்,படைப்புக்களின் பலகீனத்  தையும் பறைசாற்றிக்கொண்டிருக்கும் மரணத்தை நினைவு கூர்வது  ஈமானை வலுப்படுத்தும்.

ஒரு முஸ்லிமை பொருத்தவரையில் மவ்த் இழப்பல்ல,அது அல்லாஹ்வை சந்திப்பதற்கான வழித்தடமாகும்.

 أن ملك الموت عليه السلام جاء الى ابراهيم عليه السلام خليل الرحمن عز وجل ليقبض روحه 0 فقال ابراهيم *ياملك الموت هل رأيت خليلا يقبض روح خليله ؟ فعرج ملك الموت عليه السلام الى ربه فقال *قل له *هل رأيت خليل يكره لقاء خليله ؟ فرجع فقال*اقبض روحى الساعه

التذكرة للامام القرطبى 

நபி இப்ராஹீம் அலை அவர்களின் உயிரை கைப்பற்ற வந்த மலகுல்மவ்த்திடம்-ஒரு நண்பன் தன் நண்பனின் உயிரை எடுப்பானா?என்று கேட்கிறார்.

மலகுல் மவ்த் அவர்கள் இந்த கேள்வியை தன் ரப்பிடம் கூறியபோது-ஒரு நண்பன் தன் நண்பனை சந்திக்க வெறுப்பானா?என்று அல்லாஹ் திருப்பிக்கேட்டானாம்.
 
மரணத்திற்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தைரிய மும்,துணிச்சலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம்.

وقال أبو هريرة رَضِيَ اللَّهُ عَنْهُ : من رأى الموت يباع فليشتره لي !
الثبات عند الممات" لابن الجوزي (ص 45) .

மரணம் எங்காவது விற்கப்படுமானால் அதை 
எனக்கு வாங்கிக்கொடுங்கள் என்று
 அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்


وكتب خالد بن الوليد رَضِيَ اللَّهُ عَنْهُ إلى أهل فارس : والذي لا إله غيره لأبعثنَّ إليكم قوماً يحبُّون الموت كما تحبُّون أنتم الحياة 

ذكر ابن جرير الطبري في تاريخه وابن كثير في البداية والنهاية

படைத்தளபதி காலித் இப்னு வலீத் ரலி அவர்கள் பாரசீகர்களுக்கு எழுதிய கடிதத்தில்-நீங்கள் வாழ்வை நேசிப்பது போல மரணத்தி நேசிக்கும் ஒரு கூட்டத்தை அனுப்பி வைக்கிறேன் என்று எழுதினார்கள். ஒரு முஸ்லிமிடம் மட்டும் தான் தன்னை பற்றிய தெளிவான பயோடேட்டா உண்டு.

நான் யார்?நான் எங்கிருந்து வந்தேன்?எங்கு செல்வேன்?நான் என்ன செய்ய வேண்டும்?
மரணம் வரை எல்லா மதங்களும் பேசுகிறது,அதை தாண்டி என்ன நடக்கும்?மொளனமே பதிலாக கிடைக்கிறது. 
மரணம் மிகச்சிறந்த உபதேசி.அத்துமீறி செல்லும் மனித வாழ்கைக்கான கடிவாளமாகும்.
வாழும் காலங்கள் தான் வாழ்வின் முடிவை தீர்மானிக்கிறது. வாழ்கையின் முடிவே அல்லாஹ்விடம் அங்கீகாரத்தை பெற்றுத்தருகிறது.

நல்ல மரணத்தின் அடையாளங்கள்.

1.அல்லாஹ்வின் தொடர்பில் இருக்கும் நிலையில் மரணம் வருவது.

عن أنس بن مالك رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( إذا أراد الله بعبده خيراً استعمله ) قالوا : كيف يستعمله ؟ قال : ( يوفقه لعمل صالح قبل موته ) رواه الإمام أحمد (11625) والترمذي (2142) وصححه الألباني في السلسلة الصحيحة 1334.
அல்லாஹுத்தஆலா ஒரு அடியானுக்கு நன்மையை நாடினால் அவனை பயன்படுத்துவான் –என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

அப்போது ஸஹாபாக்கள்-அல்லாஹ் எப்படி பயன் படுத்து வான்?-என்று விளக்கம் கேட்டபோது,அவரின் மரணத்திற்கு முன் நல்லமல் செய்யும் பாக்கியத்தை வழங்குவான் –என்று பதில் கூறினார்கள்.



أمّا عامر بن عبد الله بن الزبير .. فلقد كان على فراش الموت .. يعد أنفاس الحياة
.. وأهله حوله يبكون ..
فبينما هو يصارع الموت .. سمع المؤذن ينادي لصلاة المغرب .. ونفسه تحشرج في حلقه ..
وقد أشتدّ نزعه .. وعظم كربه ..
فلما سمع النداء قال لمن حوله : خذوا بيدي ..!!
قالوا : إلى أين ؟ ..
قال : إلى المسجد ..
قالوا : وأنت على هذه الحال !!
قال : سبحان الله .. !! أسمع منادي الصلاة ولا أجيبه ..
خذوا بيدي .. فحملوه بين رجلين .. فصلى ركعة مع الإمام .. ثمّ مات في سجوده
التمهيد لما في الموطأ من المعاني والأسانيد


ஆமிர் இப்னு அப்துல்லாஹ் ரஹ் அவர்களின் மரண நேரம்-வாழ்நாளின் இறுதி மூச்சுக்கள் எண்ணப்படுகிறது-அவரை சுற்றி அவரின் குடும்பத்தினர் அழுதுகொண்டிருக்கின்றனர்-
மரணத்தின் பிடியில் போராடும் அன்னாருக்கு மஃரிப் தொழுகைக்கு பாங்கு சொல்லப்படும் சப்தம் கேட்கிறது.

அப்போது தன்னை சுற்றி அமர்ந்தவர்களிடம்-என் கைபிடித்து தூக்குங்கள் என்றார்.

எங்கே செல்ல விரும்புகிறீர்?என கேட்டபோது,மஸ்ஜிதிற்கு என்று கூறினார்கள்.

இந்த நிலையிலா?என்று குடும்பத்தினர் ஆச்சரியமாக கேட்ட போது-அல்லாஹ்வின் அழைப்பை கேட்டபின்னும் பதில் சொல்லாமல் இருக்க என்னால் முடியாது என்றார்கள்.

இறுதியில் அவரை இருவர் தூக்கி ஸப்பில் நிறுத்தியபோது ,இமாமுடன் ஒரு ரகஅத் தொழுத நிலையில் ஸுஜூதில் அவரின் ரூஹ் பிரிந்தது.
எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்?


لما نزل الموت بالعابد الزاهد عبد الله بن إدريس .. اشتد عليه الكرب .. فلما اخذ
يشهق .. بكت ابنته ..
فقال : يا بنيتي .. لا تبكي .. فقد ختمت القرآن في هذا البيت أربعة آلاف ختمة ..
كلها لأجل هذا المصرع

அப்துல்லாஹ் இப்னு இத்ரீஸ் ரஹ் அவர்களின் மரண நேரத்தில் அன்னாரின் மகள் அழுதபோது-மகளே!நீ அழ வேண்டாம்,ஏன் தெரியுமா?நான் இந்த நாளை எதிர்பார்த்து இந்த வீட்டில் நான்காயிரம் குர்ஆன் முடித்துள்ளேன் என்றார்களாம்.

நீங்கள் எப்படி வாழ்கிறீர்களோ அப்படியே மரணத்தை சந்திப்பீர்கள்.

குர்ஆன் ஓதுவதில் அதீத பேராசைக்கொண்ட உஸ்மான் ரலி அவர்களுக்கு குர்ஆன் ஓதும் நிலையில் மரணம் வருகிறது.

ஷஹாதத் மரணத்தின் மீது அளவு கடந்த ஆசை கொண்டிருந்த உமர் ரலி அவர்களுக்கு தொழுகையில் நின்றுகொண்டி ருந்த உமர் ரலி அவர்களை தேடி ஷஹாதத் மரணம் வருகிறது.

தன் நேசரான நபி ஸல் அவர்கள் வாழ்ந்த வாழ்வை மட்டும் தான், தான் வாழவேண்டும் என்று ஆசைப்பட்ட அபூபக்கர் ரலி அவர்களுக்கு 63 வயதில் மரணம் வருகிறது.

2.மரணம் குறித்து முன்னறிவிப்பு செய்யப்படுதல்.

إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். (அல் குர்ஆன் 41:30)

وهذه البشارة تكون للمؤمنين عند احتضارهم . انظر تفسير ابن سعدي 1256

மலக்குமார்களால் மரண நேரத்தில் முஃமின்களுக்கு இந்த நற்செய்தி கூறப்படும் என்று இமாம் இப்னு சஃதி தங்களின் தப்ஸீரில் எழுதுகிறார்கள்.

நபி ஸல் அவர்கள் தங்களின் வபாத்திற்கு சுமார் 80 நாள் முன்னர் –

لعلي لا ألقاكم بعد عامي هذا

இந்த ஆண்டிற்கு பின்னால் உங்களை நான் சந்திக்க முடியா மல் போகலாம் என்று இறுதி ஹஜ்ஜில் அறிவிப்புச்செய்தார்கள்.

مرض أبو بكرة رضي الله عنه واشتد مرضه .. فعرض عليه أبناؤه أن يأتوه بطبيب .. فأبى ..
فلما نزل به الموت صرخ بأبنائه وقال : أين طبيبكم ؟ .. ليرّدها إن كان صادقاً ..
ووالله لو جاءه أطباء الدنيا .. ما ردوا روحه إليه

حدائق الموت

அபூபக்ரா ரலி அவர்கள் அவர்களின் மரண நேரம் நெருங்கி யபோது,அவர்களின் பிள்ளைகள்-மருத்துவரை அழைத்துவர அனுமதி கேட்டபோது –அன்னார் மறுத்துவிட்டார்கள்.

பின்னர் தன் மரணத்தை அவர்கள் உறுதி செய்தபோது-கூப்பிடுங்கள் உங்கள் மருத்துவரை,அவர் என் உயிரை திருப்பி தரட்டும் என்றார்களாம்.

3.மரண நேரத்தில் ஷைத்தானின் சூழ்ச்சியை விட்டும் தன் ஈமானை பாதுகாப்பது.

அல்லாஹுத்தஆலா அந்த நாளை குறித்து-

يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ

இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (அல் குர்ஆன் 24:37)

கண்களும்,கல்புகளும் மட்டும் தடுமாற்றம் அடையாது,   ஈமானும், கொள்கையும் தடுமாற்றமடையும் நாளாகும்.

(إن الشيطان يأتي أحدكم قبل موته، فيقول له: مت يهوديا مت نصراني
الترمذي والنسائي.
நீங்கள் மரணமாகும் முன்னர் ஷைதான் உங்களை சந்திப்பான் –யூதனாக மரணித்து விடு,கிருஸ்துவனாக மரணித்து விடு என்று உங்களிடம் வாதம் செய்வான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

மரண நேரத்தில் ஷைத்தானுடன் நடைபெரும் போராட்டத்தில் ஈமானை இழந்தவர்கள் ஏராளம்.  அல்லாஹ் பாதுகாப்பானாக!

فقد قال القرطبي في التذكرة : قال عبدالله بن أحمد بن حنبل: حضرت وفاة أبي أحمد وبيدي الخرقة لأشد لحييه، فكان يغرق ثم يفيق ويقول بيده : لا بعد، لا بعد. فعل هذا مرارا فقلت له : يا أبت أي شيء ما يبدو منك ؟ فقال: إن الشيطان قائم بحذائي عاض على أنامله يقول: يا أحمد فتني، وأنا أقول: لا بعد، لا حتى أموت

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்களின் மகன் அப்துல்லாஹ் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

என் தந்தை இமாம் அஹ்மத் ரஹ் அவர்களின் மரணத்தருவாயில் அவர்களின் அருகே நான் இருந்தேன் –அவர்கள் மவ்த்தாகி விட்டால் அன்னாரின் தாடியை கட்டுவதற்கு ஒரு துணி என்னிடம் இருந்தது.

அவர்கள் கொஞ்சம் மயக்கம் தெளிந்தபோது-முடியாது,    பிறகு பார்க்கலாம்.என்று பலதடவை தன் கையால் சைகை செய்து கூறினார்கள்.

தந்தையாரே!தங்களுக்கு என்ன தெரிகிறது? –என்று நான் கேட்டபோது,ஷைத்தான் தன் விரலை கடித்துக்கொண்டு என் முன்னே நின்று-எனக்கு பத்வா (தீர்ப்பு)கொடுங்கள் என்று கேட்கிறான்.

நான் மவ்த்தாகும் வரை உன் மஸ்அலாவுக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டேன்.என்றார்கள்.


قال ابن القيم :
واحتضر رجل ممن كان يجالس شراب الخمور .. فلما حضره نزعُ روحه ..
اقبل عليه رجل ممن حوله .. وقال : يا فلان .. يا فلان .. قل لا إله إلا الله ..
فتغير وجهه .. وتلبد لونه .. وثقل لسانه ..
فردد عليه صاحبه : يا فلان .. قل لا إله إلا الله ..
فالتفت إليه وصاح :
لا .. اشرب أنت ثمّ اسقني .. اشرب أنت ثمّ اسقني ..
وما زال يردّدها .. حتى فاضت روحه إلى باريه

அல்லாமா இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவர் தன் மரணநேரம் நெருங்கியபோது –அவரின் சுற்றத்தார் கலிமா சொல்லிக் கொடுக்கின்றனர்.
அதைக்கேட்ட அவரின் முகம் மாறியது –நாவு கனத்தது-இறுதியில் நீயும் குடி,எனக்கும் ஊற்றிக்கொடு என்று கூறியவராக அவரின் ரூஹ் பிரிந்தது.மரணத்திலும் மது சிந்தனை.

நீங்கள் எப்படி வாழ்கிறீர்களோ அப்படியே மரணம் உங்களை சந்திக்கும்.

4.மரண நேரத்தில் கலிமா சொல்லும் வாய்ப்பு அமைதல்.

من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة) رواه أبو داوود 3116 ، وصححه الألباني في صحيح أبي داوود 2673 .

எவரின் இறுதி வார்த்தை கலிமாவாகுமோ அவர் சுவனத்தில் நுழைவார் –என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.


و يروى عن عبد الله بن شبرمة رحمه الله أنه قال : دخلت مع عامر الشعبي على مريض نعوده فوجدناه لماً ، و رجل يلقنه الشهادة ويقول له : لا إله إلا الله , وهو يكثر عليه , فقال له الشعبي . ارفق به ، فكلم المريض , وقال : إن تلقني أو لا تلقني . فإني لا أدعها , ثم قرأ قوله تعالى
 وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها

இமாம் ஷுஃபி ரஹ் அவர்கள் வபாத் நேரத்தில் அருகில் இருந்த ஒருவர் அவருக்கு கலிமா சொல்லிக்கொடுத்து கொண்டே இருந்தார் –
அப்போது இமாம் ஷுஃபி அவர்கள் –தோழரே!நோயாளியிடம் மிருதுவாக சொல்லிக்கொடுங்கள்.நீங்கள் சொல்லிக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அந்த கலிமாவை நான் விடமாட்டேன்.-என்று கூறி,
وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها
தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்; அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள்.(அல் குர்ஆன் 48:36)
என்ற வசனத்தை ஓதினார்கள்.

قيل للجنيد رحمه الله عند موته : قل لا إله إلا الله فقال ما نسيته فأذكره

ஜுனைதுல் பஃதாதி ரஹ் அவர்களுக்கு ஒருவர் சகராத்தில் கலிமா சொல்லிக்கொடுத்தபோது -             நான் அதை மறக்கவே இல்லையே!மறந்தால் அல்லவா ஞாபகப்படுத்த வேண்டும் என்றார்களாம்.

5.அல்லாஹ்வப்பற்றிய நல்ல எண்ணத்துடன் மரணமடைதல்.


أخرج الامام مسلم وبخاري رحمهما الله عن جابر بن عبدالله رضي الله عنهما أنه قال : سمعت رسول الله صلى الله عليه و سلم يقول قبل وفاته بثلاثة أيام : لا يموتن أحدكم إلا و هو يحسن الظن بالله

உங்களில் யாரும் அல்லாஹ்வைப்பற்றி நல்ல எண்ணம் இல்லாமல் மரணமாக வேண்டாம் என்று நபி ஸல் அவர்கள் தங்களின் வபாத்திற்கு மூன்று நாள் முன்பு கூறினார்கள் என நபித்தோழர் ஜாபிர் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் சவால்:

قُلْ فَادْرَءُوا عَنْ أَنفُسِكُمُ الْمَوْتَ إِن كُنتُمْ صَادِقِينَ

(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள்" (பார்ப்போம் என்று)  கூறுகிறான். (அல் குர்ஆன் 3:168)

மரணம் –தடுக்கமுடியாது-தள்ளிப்போடவும் முடியாது-ஒரு முஸ்லிம் அதை தைரியமாக எதிர்கொள்ள முடியும்.      அல்லாஹ் கபூல் செய்வானாக!







4 comments:

  1. alhamdhu lillaah aanmeeha sinthanai

    ReplyDelete
  2. //மரணத்திற்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் தைரிய மும்,துணிச்சலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம்//
    உண்மைதான்.. அதுபோல அடுக்கடுக்கான தகவல்களை
    ஆதாரங்களோடு அள்ளித் தரும் அருமயான நடை தங்களுக்கே சொந்தம்.

    மகான்கள் முதல் மதுப் பிரியன் வரை அவர்களுக்கு மரணம் வந்த தருணம் எவ்வாறு இருந்தது என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை அடுக்கி வைத்திருப்பது தனி அழகுதான். மாஷா அல்லாஹ். தங்களின் இந்த சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ماشاء الله இதை நான் பயான் செய்யப்போகிறேன்.ஆதாரம் இருந்தால் நன்று. ان شاء الله

      Delete
  3. masha allah, Oru periya kanam erpadugirathu manathil

    ReplyDelete