Wednesday 3 April 2013

உணர்வுகளை காயப்படுத்தாதீர்


இஸ்லாம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் மார்க்கமாகும்.ஒரு மனிதனின் உயிருக்கும்,பொருளுக்கும் கொடுக்கப்படுகிற முக்கியத்துவத்திற்கு நிகரான ஒரு முன்னுரிமையை இஸ்லாம் மானத்திற்கும் வழங்குகிறது

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத்தெரியாதவன் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது.

பலஹீனமானவர்களுக்குப்பின் எப்பொழுதும் இஸ்லாம் துணைநிற்கும்.

عن جعفر بنِ سليمانَ
قال : سمعتُ مالكَ بنَ دينارٍ يقول : ( قال موسى - عليه السلام - : إلهي أين أبغيكَ ؟
فأوحى الله عز وجل إليه :
أن يا موسى ابغني عند المنكسرةِ قلوبُهم ، فإني أدنو منهم كل يومٍ وليلةٍ باعاً


உன்னை எங்கு தேடுவேன்?என்று அல்லாஹ்விடம் நபி மூஸா அலை அவர்கள் வினவியபோது-உடைந்த உள்ளம் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்,ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் நான் அவனுடன் நெருங்கியிருப்பேன் என்று அல்லாஹ் சொன்னானாம்.இந்த அர்த்தத்தில் தான் ஒரு ஏழையின் யாசகத்தையும்,நோயாளியின் பலஹீனத்தையும் தன்னுடன் இணைத்து கூறுகிறான்.

பாதிக்கப்பட்டவனை பாதுகாப்பதில் அல்லாஹ் பாராபட்சம் காட்டுவதில்லை.    அநீதியிழைக்கப்பட்டவனின் அபயக்குரலை அஞ்சிக்கொள்,அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் திரையிடப்படாத நெருக்கம் உண்டு என்பது பெருமானார் ஸல் அவர்களின் பொன்மொழியாகும்.

இஸ்லாம் வணக்கத்தால் வென்றதை விட நல்ல குணத்தால் மக்களை வென்றதாக அல்குர்ஆன் கூறுகிறது.

நற்சொல் ஒன்று சொல்வது செய்யும் தர்மத்தைவிட மேலானது என திருக்குர்ஆன் கூறுகிறது.

قَوْلٌ مَّعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِّن صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى ۗ وَاللَّـهُ غَنِيٌّ حَلِيمٌ

கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை விட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்;. மிக்க பொறுமையாளன்.

இன்னும் ஒருபடி மேலே,

تبسمك في وجه أخيك صدقة،

உன் சகோதரனின் முகத்தை பார்த்து புன்னகிப்பதே தர்மம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

சீர்த்திருத்தம் செய்வது தான் இஸ்லாத்தின் நோக்கம் என்றபோதிலும் அவ்வாறு சீர்திருத்தம் செய்யும் போது மற்றவர்களின் உணர்வுகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளச்சொல்கிறது.

ஒரு அழைப்பாளர் அவசியம் கடைபிடிக்கவேண்டிய பண்புகளில் மிக முக்கியமானது மிருதுவான வார்த்தைகளும்,நளினமான அனுகுமுறையுமாகும்.

இதை தான் நபி மூஸா அலை அவர்களையும்,நபி ஹாரூன் அலை அவர்களையும் பிர்அவ்னிடம் அல்லாஹ் அனுப்பிவைக்கும்போது அறிவுரையாக கூறினான்.

கண்டனங்களையும் தண்டனைகளையும் பற்றி எச்சரிப்பதை விட ஈமானின் நற்செய்திகளை பிரதானமாக எடுத்துக்கூறுங்கள் என்பதே நபி ஸல் அவர்கள் முஆத் ரலி,அபூமூஸா ரலி ஆகியோரை எமனுக்கு அனுப்பிவைக்கும்போது செய்த போதனையாகும்.

குற்றவாளியை கேவலப்படுத்தக்கூடாது


ما رواه ابن عباس عن النبي صلى الله عليه وسلم أنه قال : "عرضت علي الأمم فرأيت النبي ومعه الرهيط والنبي ومعه الرجل والرجلان والنبي ليس معه أحد إذ رفع لي سواد عظيم فظننت أنهم أمتي فقيل لي هذا موسى صلى الله عليه وسلم وقومه ولكن انظر إلى الأفق فنظرت فإذا سواد عظيم فقيل لي انظر إلى الأفق الآخر فإذا سواد عظيم فقيل لي هذه أمتك ومعهم سبعون ألفا يدخلون الجنة بغير حساب ولا عذاب ثم نهض فدخل منزله فخاض الناس في أولئك الذين يدخلون الجنة بغير حساب ولا عذاب فقال بعضهم فلعلهم الذين صحبوا رسول الله صلى الله عليه وسلم وقال بعضهم فلعلهم الذين ولدوا في الإسلام ولم يشركوا بالله وذكروا أشياء فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم فقال ما الذي تخوضون فيه فأخبروه فقال هم الذين لا يرقون ولا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون فقام عكاشة بن محصن فقال ادع الله أن يجعلني منهم فقال أنت منهم ثم قام رجل آخر فقال ادع الله أن يجعلني منهم فقال سبقك بها عكاشة 
رواه البخاري


இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது(பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவர்,இருவர் மட்டுமிருந்த இறைத்தூதரும்,  தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கினர்.

அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை கண்டேன். அது என் சமுதாயமாக இருக்கும் என எதிர் பார்த்தேன். அப்போது, 'இது (இறைத்தூதர்) மூஸாவும் அவரின் சமுதாயமும்' என்று எனக்குச் சொல்லப்பட்டது.

 பிறகு என்னிடம், 'அடிவானத்தை பாருங்கள்' என்று சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தை அடைத்திருந்த (ஒரு பெரும்) மக்கள் திரளை பார்த்தேன். மீண்டும் என்னிடம், 'அடிவானத்தின் மற்றொரு புறத்தை பாருங்கள்' என்று சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானத்தை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். அப்போது, 'இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்' என்று சொல்லப்பட்டது.

(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை நபி(ஸல்) அவர்கள் விளக்கிக் கூறாத நிலையில்)தங்களின் வீட்டில் நுழைந்துவிட்டார்கள்

 பின்னர் நபித்தோழர்கள் தமக்கிடையே விவாதித்துக் கொண்டார்கள். சிலர் அந்த எழுபதாயிரம் நபர்கள் நபித்தோழர்கள் தான் என்றனர்-

மற்றும் சிலரோ நாமோ இறைவனுக்கு இணை கற்பிக்கும் கொள்கையில் (நம் குடும்பங்கள்) இருந்த நிலையில், பிறந்தோம். ஆயினும், பின்னர் நாம் அல்லாஹ்வின் மீது அவனுடைய தூதர் மீதுமநம்பிக்கை கொண்டோம். எனவே, (இஸ்லாத்தில் பிறந்த) நம் பிள்ளைகளே அந்த எழுபதாயிரம் பேர் ஆவர்' என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்)அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், '(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ள மாட்டார்கள்; மந்திரிக்கமாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்' என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(ரலி) எழுந்து, 'அவர்களில் நானும் ஒருவனா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். வேறொருவர் எழுந்து நின்று, 'அவர்களில் நானும் ஒருவனா?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இவ்விஷயத்தில் உக்காஷா உங்களை முந்திக் கொண்டுவிட்டார்' என்று கூறினார்கள்.


இந்த ஹதீஸை விவரிக்கும் அல்லாமா காழி இயாழ் ரஹ் அவர்கள் -
இரண்டாவதாக எழுந்து நபி ஸல் அவர்களிடம் “எனக்கும் துஆச்செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டவர் ஒரு முனாபிக் என்று கூறுகிறார்கள்.

அவரின் நயவஞ்சகத்தன்மையை பகிரங்கப்படுத்தி,  சபையில் அவரை இழிவுபடுத்தாமல், அவரின் உணர்வுகளும் காயப்படாமல் உங்களை உக்காஷா முந்திவிட்டார் என்று பக்குவமாக பெருமானார் ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

குற்றவாளிகளை வெறுக்க கூடாது

وروت أم المؤمنين عائشة - رضي الله عنها -أن رجلا استأذن على النبي صلى الله عليه وسلم فلما رآه قال: "بئس أخو العشيرة، وبئس ابن العشيرة"، فلما جلس تطلق النبي صلى الله عليه وسلم في وجهه وانبسط إليه فلما انطلق الرجل قالت له عائشة: يا رسول الله، حين رأيت الرجل قلت له كذا وكذا ثم تطلقت في وجهه وانبسطت إليه، فقال رسول الله صلى الله عليه وسلم: "يا عائشة متى عهدتني فحاشا؟ إن شر الناس عند الله منزلة يوم القيامة من تركه الناس اتقاء شره
رواه البخاري


ஆயிஷா(ரலி) அறிவித்தார்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்' என்று (என்னிடம்) கூறினார்கள். அவர் வந்து அமர்ந்தபோது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டார்கள். அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான் (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! அந்த மனிதரைக் கண்டதும் தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டீர்களே' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரின் தீங்கை அஞ்சி மக்கள் (அவருடன் இயல்பாகப் பழகாமல்)விட்டு விடுகிறார்களோ அவரே மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவராவார்' என்று கூறினார்கள்.
ஒரு நடத்தை சரியில்லாதவர் தன் வீட்டுக்கு வரும்போது அவரைப்பற்றிய விழிப்புணர்வை தன் குடும்பத்திற்கு ஏற்படுத்தும், அதேசமயம் அவரின் குற்றத்தை காரணமாக வைத்துக்கொண்டு அவரிடம் வெறுப்பை காட்டுவதோ,  அவரை ஒதுக்கிவைப்பதோ தன் வழிமுறையல்ல என்பதை விளக்குகிறார்கள்.

தவறுகளை திருத்தும்போது அறிவார்ந்த அனுகுமுறை தேவை

وفي فتح مكة أيضاً- كان سعد بن عبادة قائداً من قواد الجيش فلما نظر إلى مكة وسكانه. وتذكر فإذا هم الذين حاربوا رسول الله صلى الله عليه وسلم..وضيقوا عليه..وصدوا عنه الناس..وإذا هم الذين قتلوا سمية وياسر..وعذبوا بلالاً وخباباً,,كانوا يستحقون التأديب فعلاً..هز سعد الراية..وهو يقول:
اليوم يوم الملحمة * * * * * اليوم تستحل الحرمة
سمعته قريش فشق ذلك عليهم ..وكبر في أنفسهم..وخافوا أن يفنيهم بقتالهم..فعارضت امرأة رسول الله صلى الله عليه وسلم- وهو يسير..فشكت إليه خوفهم من سعد..وقالت:
يا نبي الهدى إليك لجائي ‍
فلما سمع رسول الله صلى الله عليه وسلم-..هذا الشعر..دخله رحمة ورأفة بهم..وأحب ألا يخيبها إذ رغبت إليه..وأحب ألا يغضب سعداً بأخذ الراية منه بعد أن شرفه بها..فأمر سعداً فناول الراية لابنه قيس بن سعد..فدخل بها مكةوأبوه سعد يمشي يجانبه..فرفضت المرأة وقريش لما رأت يد سعد خالية من الراية..ولم يغضب سعد لأنه بقي قائداً لكنه أريح من عناء حمل الراية وحملها عنه ابنه
محمد العريفي ( استمتع بحياتك ص 61 )

மக்கா வெற்றியின் போது சஃது இப்னு உப்பாதா ரலி அவர்கள் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.அப்படை மக்காவின் கடைவீதியை கடந்து சென்றபோது -இவர்கள் தான் அல்லாஹ்வின் தூதருடன் போர் செய்தவர்கள்,  அவர்களுக்கு நெருக்கடி தந்தவர்கள்,சுமைய்யா ரலி,யாஸிர் ரலி போன்றவர்க  ளை கொலை செய்தவர்கள்,பிலால் ரலி,கப்பாப் ரலி போன்றவர்களை துன்புறுத்தியவர்கள் என்றெல்லாம் பழைய ஞாபகம் தளபதி சஃது ரலி அவர்களுக்கு வந்தபோது-இன்று பழிதீர்க்கும் நாள் என்று உரக்க சப்தமிட்டார்கள்.  அதை செவியுற்ற மக்காவாசிகள் திடுக்கிட்டு பயந்து நடுங்கினர்.அப்போது ஒரு பெண் நபி ஸல் அவர்களை சந்தித்து குரைஷிகளின் நிலைபற்றி சொன்ன போது அம்மக்களின் மீது நபி சல் அவர்களுக்கு இறக்கம் வந்தபோது- ஸஃது ரலி அவர்களிடமிருந்து தளபதி பொருப்பையும்,இஸ்லாமிய கொடியையும் வாங்கி மற்றவரிடம் கொடுக்க நினைத்தார்கள்,அதேசமயம் சஃது ரலி அவர்களின் உள்ளமும் வேதனைபடக்கூடாது என்று நீண்ட நேர யோசனைக்குப்பின் அப்பொறுப்பை ஸஃது ரலி அவர்களின் மகன் கைஸ் ரலி அவர்களுக்கு கொடுத்தார்கள்.குரைஷிகளின் பயத்தையும் போக்கினார்கள்,ஸஃ  து ரலி அவர்களையும் திருப்திபடுத்தினார்கள்.
ஒரு தவறை எடுத்துச்சொல்லி திருத்தும்போது குற்றம் செய்தவரின் உள்ளம் உடைந்துபோகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.இதுவே நபிவழிமுறையாகும்.

தவறை திருத்தும்போது சம்பந்தப்பட்டவரின்

கவனத்திற்கு மட்டும்கொண்டுசெல்லும் விதத்தில்

 சமிக்ஞையாக சொல்லிக்காட்டுவது


குறிப்பிட்டு தவறு செய்தவரின் பெயரை சொல்லும் பழக்கம் நாயகத்திற்கு எப்போதும் இருந்ததில்லை.
ஏன் சிலர்கள் இவ்வாறு செய்கிறார்கள்?என்று தான் கூறுவார்கள்.

قال أحد الدعاة: ( لتكن نصيحتك لأخيك تلميحاً لا تصريحاً وتصحيحاً لا تجريحا

உன் சகோதரனின் தவறை சுட்டிக்காட்டு,வெளிச்சம்போட்டு காட்டாதே! அதை சரிசெய்ய முயற்சி செய், சங்கடப்படுத்தாதே! என்று ஒரு அழைப்பாளர் கூறுகிறார்.

தொழுகையில் தன் பார்வையை மேலே உயர்த்தும் சிலரின் தவறை கண்டிக்கும் போது-

ما بال أقوام يرفعون أبصارهم إلى السماء في الصلاة

சிலர்கள் தொழுகையில் தங்களின் பார்வையை வானத்தின் பக்கம் உயர்த்துகிற்றர்கள்,அவர்களுக்கு என்ன வந்துவிட்டது?

துறவரத்தை கடைபிடிக்க நாட்டம் கொண்ட சில ஸஹாபாக்களை கண்டிக்கும்போது-

ما بال أقوام يتنزهون عن شيء أصنعهفوالله أني لأ, علمهم بالله و أشدهم خشية

நான் செய்யும் சிலகாரியத்தை விட்டும் உங்களில் சிலர் விலகிக்கொள்கின்ற னர்.அல்லாஹ்வின் மீது சத்தியமாக!அவர்களில் அல்லாஹ்வைபற்றி அதிகம் அறிந்தவனும்,அச்சமுடையவனும் நான் தான் என்று கூறினார்கள்.

ஸஹாபாக்களில் சிலர் தொடர்நோன்பு வைத்தபோது அத்த கண்டிக்கும் வித்த்தில்-

ما بال رجال يواصلون؟ إنكم لستم مثلي

சிலர்கள் ஏன் தொடர் நோன்பு வைக்கிறார்கள்?உங்களின் என்னைப்போல யார் இருக்கிறீர்கள்?என்றார்கள்
அஷ்அரிய்யாக்களிடம் அண்டைவீட்டாருடன் நல்ல முறையில் பழகும் தன்மை இல்லாதபோது அதை கண்டிக்கும் விதத்தில்-

مَا بَالُ أَقْوَامٍ لا يُعَلِّمُونَ جِيرَانَهُمْ، وَلا يُفَقِّهُونَهُمْ وَلا يُعْطُونَهُمْ

சிலர்கள் தங்களின் பகத்து வீட்டாருக்கு கற்றுக்கொடுப்பதுமில்லை,அவர்களுக்  கு உதவிசெய்வதுமில்லை ஏன் இவ்வாறு இருக்கின்றனர்?

ஒரு இமாம் தன்னை பின்பற்றுபவர்களின் உணர்வுகளை கவனத்தில் கொள்ளவேண்டும்


روى جابرٍ رضي الله عنه قال : كانَ معاذٌ يصلي مع النبي صلى الله عليه وسلم ثم يأتي فيؤمُ قومَه ، فصلّى ليلةً معَ النبي صلى الله عليه وسلم العشاءَ ثم أتى قومَه فأمَّهم فافْتَتَحَ بسورةِ البقرةِ فانْحَرَفَ رجلٌ مسلمٌ ثم صلّى وحدَه وانصَرَفَ ، فقالوا له : أنافَقْتَ يا فلانُ ؟ قال : لا واللهِ ولآتِيَنَّ رسولَ الله صلى الله عليه وسلم فلأُخْبِرَنَّه ، فأتى رسولَ الله صلى الله عليه وسلم فقال : يا رسولَ الله ، إنا أصحابُ نواضحَ نعملُ بالنهارِ ، وإنَّ معاذاً صلى معكَ العشاءَ ثم أتى فافتَتَح بسورةِ البقرةِ ، فأقبَلَ رسولُ الله صلى الله عليه وسلم فقال : " يا معاذُ أفتّانٌ أنتَ ؟ اقرأ بكذا واقرأ بكذ
رواه مسلم.

முஆத் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களுடன் தொழுகையை நிறைவேற்றிய பின்பு தன் சமூகத்தாரிடம் வந்து அவர்களுக்கு இமாமத் செய்வார்கள்.ஒரு நாள் நபியுடன் இஷா தொழுகையை நிறைவேற்றிய அவர்கள் தன் சமூகத்தி ற்கு வந்து இமாமத் செய்தார்கள்.
அதில் சூரத்துல் பகராவை ஓத ஆரம்பித்தார்கள்.பின்னால் தொழுதுகொண்டிந் த ஒரு முஸ்லிம் தனியாக தொழ ஆரம்பித்து தொழுகையை முடித்தார்.  அப்போது மக்கள் அவரை பார்த்து-நீர் முனாபிக்கா?என வினவினார்கள்,  அதற்கு அவர் இதுபற்றி விளக்கத்தை நபி ஸல் அவர்களிடம் நான் சொல்லிக்கொள்கிறேன் என்றார்.
பின்னர் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் பகலெல்லாம் வேலைபார்த்து கலைத்துப்போய் இஷா தொழுக வந்தால் முஆத் ரலி பெரிய சூராவை ஓதுகிறார் என்றதும் நபி சல் முஆத் ரலி அவர்களை அழைத்து முஆதே!நீ குழப்பம் செய்கிறீரா?என கண்டித்தார்கள்.இப்படி இப்படி ஓதிக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூரினார்கள்.


عن عثمانَ بنِ أبي العاصِ أن النبي صلى الله عليه وسلم قال : " أُمَّ قومَكَ ، فمنْ أمَّ قومَه فليُخَفَّفْ فإن فيهم الكبيرَ وإن فيهم المريضَ وإن فيهم الضعيفَ وإن فيهم ذا الحاجة ، وإذا صلى أحدُكم وحدَه فليُصَلِّ كيفَ شاءَ 
رواه مسلم.

ஒரு கூட்டத்திற்கு இமாமத் செய்யும் ஒருவர் இலேசாக தொழவைக்கட்டும்,  ஏனெனில் அவர்களில் வயோதிகர் இருப்பார்கள்.நோயாளி இருப்பார்கள்
பலஹீனமவர்,  தேவையுடையோர் இருப்பார்கள்.நீங்கள் தனியாக தொழுதால் நீங்கள் விரும்பியபடி தொழுதுகொள்ளுங்கள் என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்.
தன்னை பின்பற்றி தொழுகிற முக்ததிகளின் உணர்வுகளை சரியாக புரிந்து கொண்டு தொழவைப்பவரே சரியான இமாம் என்று மார்க்கம் சொல்கிறது.

அடுத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியிருந்தால் தயங்காமல் மன்னிப்பு கேட்பது

أن أبا سفيان ـ في هدنة صلح الحديبية ـ قبل إسلامه، مر على سلمان وصهيب وبلال، فأرادوا أن يسمعوه قولاً يغيظه، فقالوا: والله ما أخذت سيوف الله من عنق عدو الله مأخذها. فاستنكر عليهم أبو بكر ما قالوا، وقال لهم: أتقولون هذا لشيخ قريش وسيدهم؟ وذهب أبو بكر فأخبر النبي صلى الله عليه وسلم بما جرى، فكان أول أمر أهم رسول الله صلى الله عليه وسلم أن تساءل عن مشاعرهم تجاه ما صدر من أبي بكر، فقال له: يا أبا بكر! لعلك أغضبتهم؟ لئن كنت أغضبتهم، لقد أغضبت ربك، فأتاهم أبو بكر يسترضيهم، ويستعطفهم، قائلاً: يا إخوتاه! أغضبتكم؟ قالوا: لا . يغفر الله لك
صحيح مسلم

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த காலம்.ஓரிடத்தில் பிலால் ரலி,ஸல்மான் ரலி,சுஹைப் ரலி ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அந்தபக்கமாக அபூ ஸுப்யான் அவர்கள் கடந்து சென்றார்கள்.அப்போது அவர் இஸ்லாமாகியிருக்கவில்லை.   அவரை ப்பார்த்த அந்த மூன்று நபித்தோழர்களும்- அல்லாஹ்வின் வாட்களுக்கு இந்த அல்லாஹ்வின் எதிரியின் கழுத்து தப்பிவிட்டதே! என்று பேசிக்கொண்டனர்.
அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை செவியுற்ற அபூபக்கர் ரலி அவர்கள் கடும் கோபமுற்றவராக-ஒரு குரைஷிப்பெரியவரைப்பார்த்தா இப்படி பேசுகிறீர்கள்?
என கடிந்துகொண்டார்கள்.
பின்பு நடந்த விஷயம் குறித்து நபி ஸல் அவர்களிடம் சொன்னபோது,அந்த த்கோழர்களின் நியாமான உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் எப்படி அவர்களை கண்டிப்பீர்கள் என அபூபக்கர் ரலி அவர்களை எச்சரித்தார்கள்.  அபூபக்கரே!அவர்களை நீ கோப்ப்படுத்தியிருந்தால் அல்லாஹ்வை கோப்ப்படுத்திவிட்டீர் என்றார்கள்.
உடனே அபூபக்கர் ரலி அவர்கள் அம்மூவரிடமும் சென்று மன்னிப்பு கேட்டார்கள்.
இதுவே இஸ்லாம் போதிக்கும் பண்பாகும்.சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் ஒருவர் அடிமட்டத்தில் இருக்கும் ஒருவரின் உணர்வுகளை காயப்படுத்திவிட்டு அல்லாஹ்வை திருப்திபடுத்த  முடியாது.

2 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் மிக அருமை

    ReplyDelete