Wednesday 17 April 2013

இளைஞனே!விழித்தெழு



வாழ்நாளில் வாலிபம் ஒரு அமானிதம்.இனிக்கும் இளமையை இன்பமாக மட்டுமே கழித்துவிட்டவர்கள் காலம் கடந்தேனும் வருந்துவார்கள்எதையும் செய்யும் துடிப்புள்ள அப்பருவத்தை பயனுள்ளதாக மாற்றிக்கொண்டவர்களே மிகச்சிறந்த புத்திசாலிகள்.

உலகில் சாதனையாளர்களாக வலம்வருபவர்கள் தங்களின் சாதனைக்கான விதையை வாலிபத்தில் தான் தூவினார்கள்.மனித வாழ்க்கையின் மூன்று பருவங்களில் வாலிபமே உயர்ந்து நிற்கிறது.காரணம் சிறுவயது அறியாமைக்குச்சொந்தமானது,வயோதிகம் இயலாமைக்குச்சொந்தமானது,இளமையே சாதனைக்குச்சொந்தமானதாகும்.
இதை அழகாக விவரிக்கிற அல்குர்ஆனின் வசனங்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள்-

اللَّـهُ الَّذِي خَلَقَكُم مِّن ضَعْفٍ ثُمَّ جَعَلَ مِن بَعْدِ ضَعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعْدِ قُوَّةٍ ضَعْفًا وَشَيْبَةً ۚ 

يَخْلُقُ مَا يَشَاءُ ۖ وَهُوَ الْعَلِيمُ الْقَدِيرُ
அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.

வாலிப பருவம் அல்லாஹ் நமக்கு அருளிய அனைத்து நிஃமத்துக்களும் முழுமையாக செயல்படும் பருவமாகும்.அதனால் தான் அல்லாஹ் அதை பலமிக்கது என்று வர்ணிக்கிறான்.

வாலிபம் பாக்கியமானது தான்,அதேசமயம் ஆபத்தானது.இந்த பருவத்தில் நிகழும் தீய பழக்கங்களின் விளைவு முழுவாழ்வையும் சங்கடத்தில் ஆழ்த்தி விடும்.அதனால் தான், நபி ஸல் அவர்கள் நாளை மறுமையில் நடைபெறும் விசாரணை குறித்துச்சொல்லும்போது-

لن تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما 
أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل به
நாளை மறுமையில் நான்கு கேள்விக்கு பதில் கூறாதவரை ஒரு அடியானின் கால்கள் செயல்படாது.அவைகள்
1.வாழ்நாளை எப்படி கழித்தாய்?  2.வாலிபத்தை எப்படி அழித்தாய்?          3.பொருளை எப்படி சேர்த்தாய்?எப்படி செலவு செய்தாய்?  4.கற்ற கல்வியைக்கொண்டு என்ன அமல் செய்தாய்?   என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் கூறப்பட்ட வாழ்நாளுக்கு கீழ் வாலிபமும்வந்துவிட்டாலும் அல்லாஹ் வாலிபத்தை தனியாக விசாரிப்பான் என்பதிலிருந்து அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.

வாலிபம் ஒருவகையான பைத்தியம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்ஆம் உண்மைதான்!சிலருக்கு பெண் மீது பைத்தியம்-சிலருக்கு பணத்தின் மீது பைத்தியம்-சிலருக்கு அழகான ஆடையின் மீது பைத்தியம்-சிலருக்கு கம்ப்யூட்டர்,லேப்டாப் மீது பைத்தியம்-சிலருக்கு மொபைல் பைத்தியம்- வேறு சிலருக்கோ பைக்,கார் மீது பைத்தியம்.
ஒருநாளில் பெரும்பகுதியை செல்போன் பயன்பாட்டில் மட்டுமே கழிக்கிற எத்தனையோ இளைஞர்கள் உண்டு.இதுவும் ஒருவைகை போதைதான்.      அவர்கள் செல்போனை பிரிந்தாலோ,அல்லது அவர்களின் செல்போன் தொலந்தாலோ ஒருவகையான மனநிலைபாதிப்புக்குள்ளாகிவிடுவார்கள்.    இன்றைய இளைஞர்களின் கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் சவாலாக இருப்பது இணையதளங்களும்,குறிப்பாக பேஸ்புக்கும் தான் என்று சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.
இவர்கள் பெற்றோரை பிரிந்துகூட இருந்துவிடுவார்கள்,ஆனால் பேஸ்புக்கை பிரிந்து இவர்களால் இருக்க முடியாது.
இங்கே நாம் இஸ்லாமிய இளைஞர்களை பற்றி கவலைப்படவேண்டும்.
தடம் புரளாத வாலிபனை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகிறான் என்றும்,   இறைவணக்கத்தில் ஈடுபடும் ஒரு வாலிபனுக்குஅல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் இடமளிப்பான் என்றும் நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்
15 வயதிற்குட்பட்ட ஒரு வாலிபன் சரியாக வழிகாட்டப்படவேண்டும்,அதை தவறவிட்டுவிட்டால் மீண்டும் சரியானபாதைக்கு கொண்டுவருவது கஷ்டமாகி விடும்.
அல்லாஹுத்தஆலா நபிமார்களுக்கு நபித்துவத்தை 40 வது வயதில் தான் தேர்வு செய்கிறான்.ஏனெனில் ஒவ்வொரு நபியும் தன் வாலிபத்தை பரிசுத்தமாகவும், மிகச்சிறந்த சாதனைக்குறியதாகவும் மாற்றிக்காட்டவேண்டும். இளமையின் இச்சையை கட்டுப்படுத்தி, இறைவணக்கத்தில் தன்னை ஈடுபடுத்தியவரே மக்களுக்கு வழிகாட்ட தகுதிபெற்றவர்.
அந்த அடிப்படையில் தங்களின் வாலிபத்தில் சாதனை புரிந்த ஐடியல் எங்ஸ்டர் அதாவது முன்மாதிரி இளைஞர்களை பற்றி அல்லாஹ் தன் திரும றையில் புகழ்ந்து கூறுகிறான்.

இப்றாஹீம் என்ற வாலிபர்:

இணைவைப்புக்கு எதிரான ஒரு இளைஞனின் குரல் உலகையே உலுக்கியது.    இளமையின் துவக்கத்தில் படைப்புக்களை ஆய்வு செய்து படைத்தவனை தெரிந்துகொள்கிறார்.இணைவைப்பின் கூடாரத்தில் பிறந்த இப்றாஹீம் என்ற இளைஞரின் தவ்ஹீத் முழக்கம் தன் தகப்பனையே உசுப்பியது.20 வயதை கூட தாண்டிடாத ஒரு இளைஞர் உலகத்தையே ஆட்சி செய்த நம்ரூதுக்கு முன் தன் ஆணித்தரமான கொள்கையை நிலைநாட்டினார்.உலகில் முன்மாதிரி முஸ்லிம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

யூஸுப் என்ற வாலிபர்:

இவர்களின் வாழ்வு திருமறையின் தனி அத்தியாத்திற்கு சொந்தமானது.அழகு நிறைந்த ஒருவாலிபரின் பரிசுத்தமான ஒழுக்கமான வரலாற்றை அனுவாக அனுவாக அல்குர்ஆன் விவரிக்கிறது.
இளமையில் அவர்களின் பத்தினித்தனமான நடத்தைக்கு ஒரு பெரும் சோத   னை வருகிறது.
ஒரு அழகரசியின் சபலத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.இணங்கினால் அரச வாழ்க்கை,மறுத்தால் சிறை வாழ்க்கை.சபலத்தை விட சிறையே எனக்கு விருப்பம் என்று தேர்வு செய்கிறார்கள்.

قَالَ رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدْعُونَنِي إِلَيْهِ ۖ وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ الْجَاهِلِينَ

அவர், "என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
அல்லாஹ் 12 ஆண்டு காலம் சிறைவாசத்தை கொடுத்தான்,பொருத்தார்கள்.   அப்பழுக்கற்ற அவர்களின் இளமைக்கு பரிசாக இரண்டு பெரும் நிஃமத்துக்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான்.ஒன்று கனவுக்கு விளக்கம் சொல்லும் ஞானம்,மற்றும் எகிப்தின் ஆட்சி.
பொதுவாக- சந்தர்ப்பங்கள் அமையாத வரை யாவரும் நல்லவரே!சந்தர்ப்பமும்,சூழ்நிலையும் அமைந்தும் ஒருவர் பாவத்தை விட்டும் தன்னை பாதுகாக்கவேண்டுமானால் இறையச்சம் மட்டுமே பலன் தரும்.,அதனால் தான் ஸாலிஹீன்களான நல்லோர்கள் அல்லாஹ்விடம், யா அல்லாஹ்! பாவம் செய்யும் சந்தர்ப்பங்களை விட்டும் பாதுகாப்பாயாக என்று பிரார்த்திப்பார்கள்.
அப்படியொரு சந்தர்ப்பம் நபி யூஸுப் அலை அவர்களுக்கு அமைந்தபோது-


قَالَ مَعَاذَ اللَّـهِ ۖ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ ۖ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ
அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார்.
அல்லாஹுத்தஆலா அவரைப்பற்றி இப்படி கூறினான்


نَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ
நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
இப்படி எண்ணற்ற நபிமார்கள் தங்களின் வாலிபகாலத்தில் அல்லாஹ்வின் சோதனையை வென்றெடுத்த காரணத்தால் நபித்துவம் எனும் ஈமானிய ஒளி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஒரு சமுதாயத்தின் முதுகெலும்புகள் இளைஞர்கள் தான்,அவர்களின் ஒழுக்கம் சீரழிந்துவிட்டால் அச்சமுதாயமே சேரழிந்துவிடும். அதனால் நபி ஸல் அவர்கள் உருவாக்கிய சமுதாய இளவல்களை ஒழுக்க சீலர்களாக உருவாக்கினார்கள்.
ஆயிரம் இரக்கத்கள் தஹஜ்ஜுத் தொழுவதை விடவும் ஒரு ஹராமை செய்யாமல் இருப்பது மேலானது.
ஹராமை விட்டுவிடுங்கள்,நீங்களே மக்களில் பெரும் வணக்கசாலி என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நபிதோழர்களில் ஸஃலபா இப்னு அப்துர்ரஹ்மான்.

عن جابر : أن فتى من الأنصار يقال له ثعلبة بن عبدالرحمن أسلم ، وكان يخدم النبي صلى اللّه عليه وسلم ، فبعثه في حاجة ، فمر بباب رجل من الأنصار ، فرأى امرأة الأنصاري تغتسل فكرر إليها النظر ، وخاف أن ينزل الوحي ، فخرج هارباً على وجهه ، فأتى جبالا بين مكة والمدينة ، فوجلها ففقده النبي صلى اللّه عليه وسلم أربعين يوماً ، وهي الأيام التي قالوا : ودعه ربه وقلى ، ثم أن جبريل عليه السلام نزل على النبي صلى اللّه عليه وسلم فقال : يا محمد إن ربك يقرئك السلام ويقول : إن الهارب من أمتك
بين هذه الجبال يتعوذ بي من ناري فقال النبي صلى اللّه عليه وسلم : يا عمر ، ويا سلمان انطلقا فأتياني بثعلبة بن عبدالرحمن فخرجا في أنقاب المدينة ، فلقيا راعياً من رعاة المدينة يقال له : ذفافة فقال عمر له : يا ذفافة هل لك علم بشاب بين هذه الجبال يقال له ثعلبة بن عبدالرحمن ، فقال له ذفافة : لعلك تريد الهارب من جهنم ، فقال له عمر : وما علمك أنه هارب من جهنم ، قال : لأنه إذا كان جوف الليل خرج علينا من هذه الجبال واضعاً يده على رأسه وهو ينادي ياليتك قبضت روحي في الأرواح ، وجسدي في الأجساد لم تجردني لفصل القضاء  فغدا عليه عمر فاحتضنه فقال له : الأمان الخلاص من النار ، فقال له : عمر بن الخطاب ! قال : نعم . فقال له : يا عمر ؛ هل علم رسول اللّه صلى اللّه عليه وسلم بذنبي ؟ فقال : لا علم لي أنه ذكرك بالأمس فأرسلني أنا وسلمان في طلبك ، فقال : يا عمر لا تدخلني عليه إلا وهو يصلي ، إذ بلال يقول : قد قامت الصلاة ، قال : أفعل . فأقبلوا به إلى المدينة ، فوافوا رسول اللّه صلى اللّه عليه وسلم وهو في صلاة الغداة فابتدر عمر وسلمان الصف فلما سمع قراءة النبي صلى اللّه عليه وسلم خر مغشياً عليه فلم سمع النبي صلى اللّه عليه وسلم قال : يا عمر ويا سلمان ما فعل ثعلبة ، قالا : هو ذا يا رسول اللّه فقام النبي صلى اللّه عليه وسلم قائماً فحركه فانتبه صلى اللّه فأخذ رأسه فوضعه على حجره فأزال رأسه عن حجر النبي فقال : لم أزلت رأسك عن حجري قال : إنه ملآن من ، فأمر بغسله وتكفينه ، فلما صلى عليه جعل يمشي على أطراف أنامله فلما دفنه قيل له : يَا رَسُولَ اللّه رأيناك تمشي على أطراف أناملك ، قال : والذي بعثني بالحق ماقدرت أن أضع قدمي على الأرض من كثرة أجنحة من نزل من الملائكة لتشيعه . 

ஸஃலபா என்ற அன்ஸாரி ஸஹாபி ஒருவர்.நபி சல் அவர்களின் செய்தி தொடர்பாளர்.அவர்களை நபி ஸல் அவர்கள் ஒரு தேவைக்காக அனுப்பி வைக்கிறார்கள்.ஒரு அன்ஸாரிப்பெண் குளிக்கும் காட்சி எதார்த்தமாக இவர்களின் கண்ணில் பட்டுவிட்டது.மீண்டும் தங்களின் பார்வையை அப்பக்கமாக திருப்பி பார்த்துவிடுகிறார்.அவ்வளவு தான் அச்சம் பிடித்துக்கொ  ள்கிறது.அல்லாஹ் என்மீது கோபம் கொண்டு வஹி ஏதும் இறக்கிவிடுவா  னோ என்ற பயத்தில் மலையை நோக்கி ஓடுகிறார்.
நாற்பது தினங்களுக்கு பின்னால் ஒரு நாள் ஜிப்ரயீல அலை அவர்கள் நபி ஸல் அவர்களை சந்தித்து அல்லாஹ்வின் ஸலாமை எடுத்துச்சொல்லி விட்டு உங்களில் ஒருவர் தவ்பாவை தேடி நரகை விட்டும் பாதுகாவல் தேடி மலை உச்சியிலிர்ந்து கதறுகிறார் என்ற செய்தியை அல்லாஹ் உங்களுக்கு எத்திவைக்கச்சொன்னான் என்றார்கள்.
உடனே நபி ஸல் அவர்கள் தம் தோழர்களில் உமர் ரலி,ஸல்மான் ரலி ஆகிய இருவரையும் அனுப்பி வைத்து ஸஃலபாவை கண்டுபிடித்து தன்னிடம் அழைத்து வரச்சொன்னார்கள்.அவ்விருவரும் மதீனாவின் தெருக்களில் எல்லாம் தேடி அலைந்து இறுதியில் மலையடிவாரத்தில் ஆடு மேய்க்கும் இடையனிடம் விசாரித்தார்கள்.
அந்த இடையன்,நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிற அந்த இளைஞரையா நீங்கள் தேடுகிறீர்கள்?என்றதும்-அவர் நரகை விட்டும் பாதுகாப்பு தேடுகிறவர் என்று நீர் எப்படி தெரிந்து கொண்டீர் என அந்த இரு ஸஹாபாக்களும் கேட்டபோது-
நடுஇரவில் மலையிலிருந்து இறங்கி வந்து அழுதவராக துஆச்செய்ய பார்த்திருக்கிறேன் என்று பதில் கூறினார்.
ஒருவழியாக உமர் ரலி அவர்கள் இரவு நேரத்தில் மறைந்திருந்து அவருக்காக காத்திருக்கிறார்கள்.அவர் மலயிலிருந்து கீழே இறங்கியதும் அவரை பிடித்து விடுகிறார்கள்.
அப்போது அவர்,நரகிலிருந்து நான் தப்பிக்க முடியுமா?என்று கேட்கிறார்கள்.  அதற்கு உமர் ரலி ஆம் நீ நரகிலிருந்து பாதுகாக்கப்படுவாய் என்றார்கள்.
உமரே!நான் செய்த பாவத்தை பற்றி நபிக்கு தெரிந்து விட்டதா? என்று கேட்டார்கள்.அதைபற்றி எனக்கு தெரியாது,உங்களை தேடி கண்டுபிடித்து கொண்டுவரச்சொல்லி பெருமானார் உத்தரவிட்டார்கள்.என்று உமர் ரலி அவர்கள் கூறியதும்-நாயத்தை பார்க்க எனக்கு வெட்கமாக இருக்கிறது,எனவே  நபி ஸல் தொழுதுகொண்டிருக்கும்போது என்னை அங்கு அழைத்துச்செல்லுங்கள்.என்றார்கள்.
நபி ஸல் அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது பின்னால் சேர்ந்துகொண்ட அவர்கள் தொழுகையின் இடையில் மயக்கமுற்று விழுந்து விட்டார்கள்.    தொழுகையை நிறைவு செய்த நபி ஸல் அவர்கள் அவரின் தலையை தூக்கி தன் தொடையில் வைத்தபோது –மயக்கம் தெளிந்த அந்தஸஹாபி தன் தலையை கீழே வைக்கிறார்கள்.அல்லாஹ்வின் தூதரே உங்களின் முபாரக்கான மடியில் தலைவைக்கும் தகுதி எனக்கு இல்லை நான் பெரும்பாவி என்றார்கள்.
இறுதியில் அந்த பாவத்தை நினைத்து அவர்களின் ரூஹும் பிரிந்து விடுகிறது.
அவரை குளிப்பாட்டி,கபன் செய்து தொழவைத்து அடக்கம் செய்துமுடித்த நபி ஸல் அவர்கள், இந்த ஸஹாபியின் ஜனாஸாவில் ஏராளமான மலக்குகள் கலந்துகொண்டார்கள்.என்று கூறினார்கள்..
இது தான் நபி சல் அவர்கள் வளர்த்தெடுத்த இளைய சமுதாயம். ஒரு தவறான பார்வைக்காக தன் உயிரையே அர்ப்பணித்துவிட்டார்கள்.இதுதான் உண்மையான இறையச்சமாகும்.


இஸ்லாத்தின் ஆரம்பகால உரமாக தங்களை அர்ப்பணித்த ஸஹாபாக்களில் பெரும்பான்மை இளைஞர்களே.இதை நன்றியுடன் நபி ஸல் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

 இந்த தீனுக்கு இளைஞர்களால் நான் உதவி செய்யப்பட்டேன்.என்றார்கள்.

இஸ்லாத்தை பாதுகாத்ததிலும்,இந்த தீனின் விசாலமான தஃவாவை உலகெங் கும் கொண்டு சென்றதிலும் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது.
   ஸைத் இப்னு ஸாபித் ரலி .16 வயது இளைஞர்.சின்னவயதில் திருக்குர்ஆ  னை மனனம் செய்தவர்.
فقد قال له الرسول :((يا زيد تعلَّم لي كتاب يهود فإني والله ما آمنهم على كتابي)). فمن تعلَّم لغة قوم أمن شرهم. ويروى أيضاً أنه تعلمه في نحو أسبوعين, وأتقنه تماماً. ثم طلب إليه الرسول  أن يتعلم "السريانية" فتعلمها في سبعة عشر يوماً
நபி ஸல் அவர்கள் யூதர்களின் வேதத்தை கற்றுக்கொள்ளச்சொல்லி அவருக்கு உத்தரவிட்டார்கள்.இருவாரத்தில் அதைக்கற்றுக்கொண்டார்கள்.   பின்பு சுர்யானி மொழியை கற்றுக்கொள்ளச்சொன்னார்கள்.அதையும் 17 நாளில்கற்றுக்கொண்டார்கள்..
காதிபுல் வஹ்யான ஸைத் ரலி அவர்களிடமே திருக்குர்ஆனை ஒன்றுசேர்க்கும் பணியை  அபூபக்கர் ரலி ஒப்படைத்தார்கள்.
இன்று நம்மிடம் பாதுகாப்புடன் ஒன்றினைத்து குர்ஆனை கொண்டுவந்து சேர்த்ததில்  அவர்களுக்கு முக்கிய பங்குண்டு.

ஒரு அமெரிக்க இளைஞன்,அல்லது ஐரோப்பிய இளைஞன் ஒரு நாளில் 8 மணி நேரத்தை வீணான பொழுதுபோக்கிலும்,ஆபாசங்களிலும் கழிக்கிறார் என்று ஒரு சர்வே கூறுகிறது அப்படிப்பட்ட இளைஞர்களை தான் நம் இளவல்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பின்பற்றுகின்றனர்.
ஒவ்வொரு சமுதாயத்தின் பலம் ஒற்றுமையில் உண்டு என்பார்கள்.ஆனால் அந்த சமுதாயத்தின் ஒற்றுமையின் பலம் இளைஞர்களை பொருத்தே அமைகிறது.
900 ஆண்டுகாலமாக ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி மலர்ந்தது.அசைக்க முடியாத அந்த வல்லரசை யூதர்கள்,கிருத்துவர்களும் எப்படி கவிழ்த்தார்கள் என்பதற்கு ஒரு வரலாறு உண்டு.
ஸ்பெயினில் இஸ்லாமிய இளைஞர்களை பற்றி ஒரு ஆய்வு செய்ய ஒரு குழுவை இஸ்லாமிய எதிரிகள் நியமித்தனர்.
அங்கு சென்ற அவர்கள், அழுதுகொண்டிருந்த ஒரு இளைஞனை பார்த்து காரணம் கேட்டபோது-என் தாய் இவ்வளவு நாட்களாக ஜிஹாத் செல்ல அனுமதி தரவில்லை.குர்ஆனை மனனம் செய்துவிட்டு ஜிஹாதுக்கு செல் என்று சொல்லிவிட்டார்கள் இப்போது தான் நான் ஹாபிஸானேன்.என்றார் அந்த இளைஞர்.இதை கேட்ட அந்த கூட்டம் ஸ்பெயினில் இஸ்லாம் பலமாக இருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுத்தார்கள்.
சிறிது காலம் கழித்து,ஸ்பெயினில் ஒரு இளைஞனை சந்தித்தது அதே கூட்டம். அழுது கொண்டிருந்த அந்த இளைஞனிடம் காரணம் கேட்டபோது  நான் தாயிடம் ஒரு பெண்ணை திருமணம் செய்துவைக்கச்சொன்னேன் என் தாய் மறுத்துவிட்டார்கள்.என்று கூறினார்.
அதை கேட்ட அந்த கூட்டம் ஸ்பெயினில் இஸ்லாம் பலம் குன்றிவிட்டது. என்று தகவல் தெரிவித்தார்களாம்.
ஸ்பெயினில் இஸ்லாமிய தீனை நிலைநிறுத்தியவர் ஒரு 17 வயது இளைஞர் தாரிக் இப்னு ஸியாத்.
சிந்து மாகாணத்திற்கு இந்த தீனை கொண்டுவந்தவர் 19 வயது இளைஞர் முஹம்மத் இப்னு காஸிம்.
பாரஸீகத்தில் இஸ்லாத்தை மலரச்செய்தவர் 20 வயது இளைஞர் முஹம்மத் இப்னு பாதிஹ்.
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் இளைஞர்களின் மகத்தான சாதனைகளை யாரும் மறந்துவிடமுடியாது.










4 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ் மிக அருமை அல்லாஹ் தங்களின் அறிவாற்றலை அதிகப்படுத்துவானாக

    ReplyDelete
  2. Ilainarhar idilirundu padam karka allahuthala arul
    Saivanaha ameen

    ReplyDelete
  3. Masha allah.. Very useful alertness to the today youngsters.... May allah show right path to all

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்

    அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆதார நூலான
    أورد السيوطي في " اللآلى المصنوعة " (2/307) என்ற நூலை பல தேடல்களுக்குப் பிறகு http://www.almeshkat.net/ என்ற வலைதளத்திலிருந்து கிடைக்கப் பெற்றேன் .ஆனால் அதில் அந்த நூலின் முழுப்பெயர்( اللآلئ المصنوعة في الأحاديث الموضوعة للإمامالسيوطي )என்றிருந்தது அதற்கு பொருள் (இட்டுக்கட்டப் ஹதீஸ்கள் விஷயத்தில் தயார் செய்யப்பட்டுள்ள கருவி)என்பதாகும்.அதாவது நபி ஸல் அவர்கள் விஷயத்தில் இட்டுக்கட்டப்பட்டுள்ள ஹதீஸ்களை தோலுறித்து காட்டும் கிதாபாகும்.எனவே இதில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்கள் நிச்சயம் இட்டுக்கட்டப்பட்டதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இருக்க வாய்ப்பில்லை.ஆனாலும் அந்த குறிப்பிட்ட ஹதீஸை குறிப்பிட்ட அந்த பக்கத்தில் என்னால் காண இயலவில்லை.மனிதர்கள் அனைவருமே தவறு செய்பவர்கள் தான் ஆனால் நாம் செய்தது தவறு என்று உணர்ந்து அல்லாஹ்விடம் பிழைபொறுக்க தேடவேண்டும்.எனவே இந்த ஹதீஸின் நம்பகத் தன்மையை தயவுசெய்து தாங்கள் தெளிவு பெற்று நமது இந்த கட்டுரையை படித்த நம் மக்களுக்கும் தெளிவு படுத்த வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இல்லையேல் நபியின் மீது பொய்யை பரப்பிய பெரும் பாவம் நம் அனைவரின் மீதும் வந்து சேரும்.மேலும் அதில் இடம் பெற்றள்ள
    வாலிபம் ஒருவகையான பைத்தியம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

    தடம் புரளாத வாலிபனை பார்த்து அல்லாஹ் ஆச்சரியப்படுகிறான் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

    என்பன போன்ற ஹதீஸ்களுக்கும் ஆதார நூல்களை வெளியிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    வஸ்ஸலாம்
    சய்யிது ஷம்சுத்தீன் சாதிக்.ஃபாழில்மன்பஈ
    தேரிருவேலி(ஷார்ஜாஹ்)


    ReplyDelete