Thursday 25 April 2013

வல்லரசுகளை வாகை சூடும் இஸ்லாம்




அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான்இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை எவரேனும் தேடினால் அது அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படாது.

என் படைப்பிற்கு தலைவணங்கு என்ற அல்லாஹ்வின் கட்டளையை இப்லீஸ் மறுத்துப்பேசிய நிமிடத்திலிருந்து அசத்தியம் தோற்றம் தருகிறது.   தன் அசத்தியக்கொள்கையை நிலைநிறுத்திக்கொள்ள அறிவுத்தனமான வியாக்கியானத்தை இப்லீஸ் முன்வைத்ததிலிருந்து அசத்தியம் சப்தமிட்டு சரிந்துபோகும்,சத்தியம் மொளனமாக சாதிக்கும் எனும் உண்மையை அழுத்தமாக உணர்த்தப்படுகிறது.

தங்கத்தை உருக்கும்போது மேலே எழும் அழுக்குநுரையை அசத்தியத்திற்கு உதாரணமாகவும்,.அடியில் தங்கிவிட்ட உருக்கப்பட்ட தங்கத்தை சத்தியத்திற்கு உதாரணமாகவும் அல்லாஹ் அழகாக எடுத்துறைக்கிறான்.  அசத்தியத்திற்கான ஆயுள் குறைவு என்பதை புரிந்துகொள்ளும் நம்பிக்கை  தரும் வார்த்தைகளாகும். .(அல்குர்ஆன் 13:17)

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையில் நடைபெறும் யுத்தத்தில் வெற்றி தோல்விகள் மாறி மாறி வரலாம்,ஆனால் இறுதிவெற்றி சத்தியத்தை நோக்கித்தான் நகரும் என்பது மறுக்கமுடியா உண்மையாகும்.

பத்ர் களத்தில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியின் மகிழ்ச்சி மறையும் முன்னே உஹதுப்போரில் மிகப்பெரும் சோதனை அவர்களை சூழ்ந்துகொண்டது.

பத்ரில் முஸ்லிம்களுக்கு சாதகமான சூழல் உஹதில் அவர்களுக்கு எதிராக திரும்பியது.வெற்றியை பறிகொடுத்து சோதனைகளில் துவண்டுபோய் இருந்த முஸ்லிகளுக்கு அல்லாஹ் கூறிய ஆறுதல் வார்த்தைகள் இது தான் –

உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்.என்று கூறினான். .(அல்குர்ஆன் 3:140)

சத்தியத்தை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தவே எண்ணற்ற நபிமார்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.நபித்துவம் எங்கே தோன்றியதோ அங்கே அதற்கான எதிர்ப்பும் முளைக்கிறது.

நபி மூஸா அலை அவர்களுக்கு பிர்அவ்னை போல,நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு நம்ரூதைபோல,நபி ஸல் அவர்களுக்கு அபூ ஜஹ்லை போல, அசத்தியவாதிகள் ஒவ்வொரு காலத்திலும் தோன்றினார்கள்.இறுதியில் அவர்களும், அவர்களின் கொள்கைகளும் தோன்றிய இடத்திலேயே அடையாளம் தெறியாமல் புதைக்கப்பட்டுவிட்டது.

கடந்த இருபதாண்டுகளில் உலக முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளையும், சோதனைகளையும் சந்தித்து வருகின்றனர்.கல்வி மற்றும் பொருளாதார ரீதியான மிகமோசமான பின்னடைவை கொண்டிருக்கும் ஒரு சமுதாயம்,  அரசியல் ரீதியான நெருக்கடிகளையும் தற்போது சந்தித்து வருகின்றனர்.   அவர்களின் வாழ்க்கைச் சுதந்திரமும்,வணக்கச்சுதந்திரமும் கேலிக்குறியதாகவும்,கேள்விக்குறியதாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது.

பலஸ்தீனில்,ஈராக்கில்,அப்கானிஸ்தானில்,மியான்மரில்,பர்மாவில்,கஷ்மீரில்,குஜராத்தில் முஸ்லிம்கள்-யூத,கிருஸ்துவ,இந்துத்துவ,புத்த வெறியர்களின் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதை கண்ணுற்ற ஒரு முஸ்லிம், நம்பிக்கை இழக்க வேண்டாம்.துவண்டு விடவேண்டாம்.ஏனெனில் முஸ்லிம்கள் இதைவிடவும் பெரிய சோதனைகளையும் வென்றுள்ளனர்.


இஸ்லாத்திற்கெதிரான மேற்குலகம் தொடுத்திருக்கும் நவீன இண்டெர்நெட் போர், இஸ்லாம் உலகிற்கு அச்சுறுத்தல், ஆபத்து.
முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தையும், இருப்பையும் மறுபரிசீலனை செய்யச்சொல்லும் யுத்தப்பிரகடனம்.

ஒரு இண சுத்திகரிப்புச்செய்வதற்கான முன்னோட்டம் மாத்திரமல்ல, இது ஒரு நவீன சிலுவை போருக்கான தயாரிப்பு.

யூதர்களுக்கு இஸ்லாத்தைப்பற்றிய பயம் எப்போதெல்லாம் தொற்றிக்
கொள்ளுமோ  அப்போதெல்லாம் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பது அவர்களின் வாடிக்கையாகும்.

நாங்கள் உலகில் சோஷலிசத்தையோ.தேசியவாதத்தையோ.மன்னராட்சியையோ பயப்படமாட்டோம்.ஆனால் இஸ்லாம் என்றால் எங்களுக்கு பயம்.இந்த பூமியில் முஹம்மத் மீண்டும் எழுச்சிபெற்று விடுவாரோ என்று நாங்கள் பயப்படுகிறோம்.இதைச்சொன்னவன் சாதாரண யூதன் அல்ல.ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்த டேவிட் பென் குரியன் என்பவன்.
யூதர்களின் பயமே இஸ்லாத்தின் பலம்!
இந்த பயத்தின் விளைவாகவே உலகில் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிக  ளை சந்தித்து வருகின்றனர்.

முஸ்லிம்கள் எத்தனையோ நெருக்கடிகளையும்,சோதனைகளையும் சந்தித்ததுண்டு.அப்பொழுதெல்லாம் இனி இஸ்லாத்திற்கு எதிர்காலம் இல்லையென்றே எதிரிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் மீண்டும் இஸ்லாம் உற்சாகத்துடன் உயிர்பெற்றது.

.இஸ்லாம் எதிர்ப்பில் வளர்ந்தமார்க்கம் என்பதை கடந்த காலங்களில் முஸ்லிம்கள் இவர்களுக்கு புரியவைத்திருக்கின்றனர்.

இஸ்லாத்தின் கடந்த காலம்

ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டு-ஈராக்கிலிருந்து கராமித்தாக்கள் என்ற ஒரு கூட்டம் மக்காவை நோக்கி புறப்படுகிறது.அவர்கள் மக்கா வந்து சேரும்வரை ஹஜ் செய்வதற்காக வருகிறார்கள் என்றே மக்கள் நினைத்துக்கொண்டனர்மக்கா வந்து சேர்ந்த அவர்கள் தங்களின் அராஜகங்களை அரங்கேற்றினர்பார்க்கும் முஸ்லிகளை எல்லாம் கொன்றுகுவித்தனர்.ஹரமின் எல்லைக்குள் அவர்கள் கட்டவிழ்த்துவிட்ட அநியாயங்களை வரலாறு மறக்காது.   இவர்களின் கோரத்தாண்டவத்திற்கு முப்பதாயிரம் முஸ்லிகள் பலியானார்கள்

மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்து அங்கு தவாப் செய்பவர்கள்,தொழுபவர்கள் வணக்கங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் அழித்ததுடன்,கஃபாவின் திரையை கிழித்து.அதன் கதவை உடைத்து உள்ளே சென்று ,எங்கே அபாபீல் பறவை?இப்போது வரச்சொல்லுங்கள் என்று கூச்சலிட்டார்கள்.அன்றைய தினம் மக்கா முழுவதும் ஒரு போர்க்களம் போல காட்சியளித்தது.

பின்பு அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் போகும்போது ஹஜ்ருல் அஸ்வத் கல்லையும் கொள்ளையடித்துச்சென்றுவிட்டனர்.இருபது ஆண்டுகள் ஹஜ்ருல் அஸ்வத் கல் இல்லாத கஃபாவை முஸ்லிம்கள் சந்தித்தனர்.
அல்லாஹுத்தஆலா இந்த நிலையையும் மாற்றினான்.முஸ்லிம்கள் ஒன்றுபட்டு போர் செய்து கராமிதாக்களை அழித்தொழித்தனர்.அவர்களிடமிருந்த ஹஜ்ருல் அஸ்வத் கல்லை கைப்பற்றி மீண்டும் கஃபாவில் பதித்தனர்துரதிஷ்டவசமாக -அக்கல் துண்டு துண்டாக உடைக்கப்பட்டுவிட்டதால் அதன் ஏழு துண்டுகள் மட்டுமே கிடைத்தது.அந்த துண்டுகளே இன்றைக்கு ஹஜ்ருல் அஸ்வத் கல்லாக மக்கள் பார்வைக்கு கிடைக்கிறது.

ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டு-இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் நுழைந்து
தாத்தாரியர்கள் நிகழ்த்திய  அட்டகாசங்களை முஸ்லிம்களால் மறக்க முடியாது.

ஈராக்கில் திரும்பிய பக்கமெல்லாம் அடக்கப்படாத முஸ்லிம்களின் சடலங்கள்.தாத்தாரியரை பார்த்துவிட்ட ஒரு முஸ்லிமின் கால்கள் செயல் பட மறுத்துவிடும் என்று வரலாறு கூறுகிறது.பக்தாதில் மட்டும் இரண்டு இலட்ச முஸ்லிம்களை கொலை செய்தார்கள்.பஃதாதின் பல பள்ளிவாசல்கள் மூடப்பட்டன.இஸ்லாமிய கல்விக்கூடங்களை கொளுத்தினார்கள்.அதன் சாம்பலை தஜ்லா நதியில் கரைத்த காரணத்தால் ஒருமாத காலம் அந்த நதி கறுப்பு நிறத்தில் ஓடியது.அவர்களின் அழிச்சாட்டியங்களுக்கும் உக்கிரமான தாக்குதல்களுக்கும்  எட்டு இலட்ச முஸ்லிம்கள் பலியானார்கள்.உலகில் முஸ்லிம்கள் அனாதையாக விடப்பட்ட காலங்கள்.
இஸ்லாத்தை அழிக்க நினைப்பவர்களின் சூழ்ச்சியை தாண்டி இஸ்லாம் வளரும் என்றும், உலகில் அனைத்து மதங்களையும் இஸ்லாம் வெற்றிகொள்ளும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.
இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்.(அல்குர்ஆன் 9:32,33)

இந்த வசனத்தின் உண்மை தன்மை கராமிதாக்கள்,தாத்தாரியர்களின் விஷயத்தில் நிரூபணமானது.

நபி ஸல் அவர்களின் தோழர்கள் இஸ்லாத்தின் சோதனைகளை கண்டு துவண்டுவிடும் போதெல்லாம் நபி ஸல் அவர்கள் தம் தோழர்களுக்கு இஸ்லாத்திற்கு வளமான எதிர்காலம் உண்டு என்று ஆறுதல் கூறுவார்கள்.

வல்லரசுகளை வாகை சூடும் இஸ்லாம்

முஸ்லீம்களை போர்மேகம் சூழ்ந்த காலம்.அகழ்ப்போர்களம்.குழி  தோண்டிக்கொண்டிருந்தார்கள் ஸஹாபாக்கள்.அப்போது குறிக்கிட்டது ஒரு பாறை.அதை யாராலும் உடைக்க முடியாதபோது நபித்தோழர்கள் நாயகத்திடம் முறையிட்டனர்.

சம்மட்டியை தாங்களே எடுத்து பிஸ்மில்லாஹ் என்று கூறி ஒரு அடி அடித்தார்கள்.பாறையில் மூன்றில் ஒரு பாகம் உடைந்தது.   அல்லாஹு அக்பர்.சிரியாவின் சாவிகள் எனக்கு தரப்பட்டது.  அல்லாஹ்வின் மீது சத்தியம்! நான் இங்கிருந்தே சிரியாவின் செந்நிற மாளிகைகளை காண்கிறேன்.என்றார்கள்.

பிஸ்மில்லாஹ் என்று கூறி இரண்டாவது  அடி அடித்தார்கள், பாறையில் இன்னொரு பகுதி உடைந்தது,அல்லாஹு அக்பர்.பாரசீகத்தின் சாவிகள் எனக்கு தரப்பட்டது,அல்லாஹ்வின் மீது ஆணை! நான் இங்கிருந்தே பாரசீகத்தின் மதாயின் நகரத்தையும் அதன் வெள்ளை மாளிகையையும் காண்கிறேன்.

பிஸ்மில்லாஹ் என்று கூறி மூன்றாவது  அடி அடித்தபோது முழுபாறையும் உடைந்தது.அல்லாஹு அக்பர்.யமன் தேசத்தின் சாவிகள் எனக்கு தரப்பட்டது.அல்லாஹ்வின் மீது சத்தியம்!நான் இங்கிருந்தே யமனின் சன்ஆ நகரத்தின் வாசல்களை காண்கிறேன் என்றார்கள்.(அஹ்மத்)
பாரசீகம் வெற்றிக்கொள்ளப்படுகிறபோது பாரசீக மன்னர் கிஸ்ராவின் காப்பை உங்களுக்கு அணிவிக்கிறேன் என்று சுராகா என்பவருக்கு நபி ஸல் அவர்கள் வாக்கு கொடுத்தார்கள்.

அல்லாஹுத்தஆலா அந்த நாடுகளின் பெரும்பகுதியை கலீபாக்களின் ஆட்சியில் முஸ்லீம்களின் ஆளுகைக்குகீழ் கொடுத்தான். அப்போது உமர் ரலி சுராகாவுக்கு நாயகம் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்கள்.

நபி ஸல் அவர்கள் தம் தோழர்களுக்கு இஸ்லாத்தின் எதிர்காலம் பிரகாசமானது என்று சொன்னபோது ஸஹாபாக்களின் நம்பிக்கை எப்படி இருந்தது என குர்ஆன் விவரிக்கிறது

நம்பிக்கை கொண்டோர் 'இதுவே அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும், அவனது தூதரும் உண்மையே சொன்னார்கள்' என்று கூறினர். நம்பிக்கையையும், கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை.
இஸ்லாத்தின் எதிர்காலம் குறித்து நபி ஸல் அவர்கள் கூறிய வார்த்தைகளி  ன் மீது ஸஹாபிகள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு இன்னொரு ஆதாரம் இதோ:

கான்ஸ்டன்டினோபில்,ரோம் இரு நகரங்களில் எது முதலில் வெற்றி கொள்ளப்படும்? என ஹழ்ரத் அம்ர் இப்னு ஆஸ் ரலி அவர்களிடம் கேட்கப்பட்டபோது,தன்னிடம் இருந்த ஒரு பெட்டியை எடுத்தார்கள் அதில் ஒரு பேப்பரை எடுத்து, இதே கேள்வி நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டது.அதற்கு நபி ஸல் அவர்கள்,ஹிர்கல் நகரமான பாரசீகம் முதலில் வெற்றிகொள்ளப்படும் என்றார்கள்.

நபி ஸல் அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட கான்ஸ்டன்டினோபில் -உஸ்மானிய கலீபாவான முஹம்மத் அல் பாதிஹ் அவர்களின் தலைமையி  ல்  இரண்டுஇலட்சத்து ஐம்பதாயிரம் பேர்களுடன், தரைமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் சுமார் 53 நாட்கள் முற்றுக்கைக்கு பின் அந்நகரம் ஹிஜ்ரி 857 ல் வெற்றிக்கொள்ளப்பட்ட்து.

கான்ஸ்டன்டினோபில் வெற்றி கொள்ளப்படும்.படைத் தலபதிகளில் மிகச் சிறந்தவர் அந்நகரத்தை  வெற்றிக்கொள்ளும் தலபதியே. படைகளில் மிகச்சிறந்த படையும் அதுவே என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஈராக்கிலிருந்து ஒரு பெண் ஹஜ் செய்வதற்காக தனியாக மக்கா வரும் காலம் வெகு விரைவில் வரும்,பாரசீக மன்னன் கிஸ்ராவின் அரசு கஜானாக்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படும்,மதீனாவில் செல்வம் பெருகும்.ஒருகட்டத்தில் ஜகாத்,சதகா வங்குவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்று, மதீனாவுக்கு அருகில் வசித்த தைய் எனும் கோத்திரத்தின் தலைவர் அதீ இப்னு ஹாதம் அவர்களிடம் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

கந்தக் நிகழ்வும்,அதியின் நிகழ்வும் இஸ்லாத்தின் வளமான எதிர்காலத்தின் அடையாளமாகும்.ஏனெனில் நபி ஸல் அவர்கள் இரண்டு வல்லரசுகளான ரோமும்,பாரசீகமும் இஸ்லாத்தின் குடையின் கீழ் கொண்டு வரப்படும் என்றார்கள்.

பாரசீகம் விஷயத்தில் நபியின் கனவு நிறைவேறிவிட்டது.இனி அடுத்து ரோமை நோக்கி இஸ்லாம் நகர ஆரம்பித்துள்ளது.

ரோம் எப்போது?

(ரோம் இன்றய தினம் கிருஸ்துவத்தின் தலைமை பீடம்.)

அதன் துவக்கமே ஐரோப்பாவில் தற்போது நாம் கண்டு வரும் இஸ்லாமிய எழுச்சி.
இன்றைய தினத்தில் இஸ்லாம் ஒரு வெள்ளப்பிரளயத்தைப்போல இரவு பகல் உதயமாகும் இடங்களிலெல்லாம் ஊடுருவ ஆரம்பித்து விட்டது.

கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு சமீபத்திய 20 ஆண்டுளில் இஸ்லாத்தை நோக்கிய மக்களின் படையெடுப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இஸ்லாம் தடுக்க முடியாத சக்தி என்பதை இந்த உலகம் புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது

இஸ்லாம் அதற்கு முன்னால் இருக்கும் அனைத்து தடைக்கற்களையும் தகர்த்தெரிந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது.
 
ஐரோப்பாவில் இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சி அங்குள்ள யூத கிருஸ்துவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீபத்தில் பிரான்ஸில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி:      ஐரோப்பாவில் 7 கோடி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்,இவர்களில் பெரும்பாலர் இஸ்லாத்தை விரும்பி தழுவியவர்.மேலும் ஐரோப்பா வின் 55 நாடுகளில் 11 ல் முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இருக்கின்றனர்.

ஐக்கியநாடுகள் சபை வெளியிட்ட கருத்துகணிப்பின் படி:

2040 ல் ஐரோப்பாவில் முஸ்லிம்களின் ஜனத்தொகை 55% மாறும்.அப்போது ஐரோப்பாவை முஸ்லிம்கள் ஆளுவார்கள்.

ஜெர்மனி அரசு வெளியிட்ட அறிக்கையின் படி:

2006 முதல் நாள் ஒன்றுக்கு 12 பேர்கள் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.அரசு பதிவேட்டில் பதிவு செய்தவர்கள் மட்டும் இவ்வளவு என்றால் பதிவு செய்யாதவர்கள்?

இஸ்லாம் பற்றிய தேடல் அங்கு அதிகமாகி இருக்கிறது.
ஜெர்மன் அது ஒரு கிருஸ்துவ நாடு.50 ஆண்டுகளுக்கு முன் 20ஆயிரம் சர்ச்சுகள் இருந்தது.ஆனால் இன்று 7500 தான் உள்ளது. அதிலும் 4000 மூடப்பட்டு கிடக்கிறது.என்ன ஆனது சர்ச்சுகள்?அதில் பெரும்பாலானது பள்ளிவாசல்களாக இஸ்லாமிக் சென்டர்களாக மாற்றம் பெற்று விட்டன.

கிருஸ்துவ உலகின் தலைமை என்று கூறப்படும் இத்தாலியில் ஆண்டிற்கு 100 பள்ளிவாசல்கள் புதிதாக கட்டப்படுகிறது.

ஒருபுறத்தில் முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்தி  ருந்தாலும் மறுபுறத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சி நம்பிக்கையையும்,ஆறுதலை   யும் தருகிறது.

நபித்துவம் சிலகாலம் இருக்கும்.பின்பு கிலாபத் சிலகாலம் இருக்கும்.பின்னர் மன்னராட்சியும்,சர்வாதிகார ஆட்சியும் சிலகாலம் நீடிக்கும்.அதை தொடர்ந்து மீண்டும் நுபுவ்வத்தின் ஒளியில் கிலாபத் உதயமாகும் என்று நபி ஸல் அவர்களின் முன்னறிவிப்பை நோக்கி இஸ்லாம் வீறுநடைபோட்டு சென்றுகொண்டிருக்கிறது.

அல்லாஹ் முஃமின்களுக்கு  அளித்த முத்தான மூன்று வாக்குறுதிகள்:
1.பூமி எங்கும் இஸ்லாமிய ஆட்சி
2.பூமி எங்கும் இஸ்லாமிய மார்க்கம்.
3.பயமில்லாத இஸ்லாம்

அவர்களுக்கு முன் சென்றோருக்கு (ஆட்சி) அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்.. (அல் குர்ஆன் 24:55)
அவன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் காலம் நெருங்கி வந்துவிட்டது என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறேன்.
இனி இஸ்லாம் தடுக்க முடியாத சக்தி-தவிர்க்க முடியாத சக்தி.












2 comments:

  1. Assalamu alaikum
    Very good article.jazakallahu hairan
    sheak.

    ReplyDelete
  2. சேக் சிறந்த கட்டுரை. காலத்துக்குத் தேவையானது. இதனை எனது இணையத்தில் பதிவேற்றம் செய்கின்றுன்.

    ReplyDelete