Tuesday, 25 December 2012

இஸ்லாமிய தண்டனை வேண்டும்.



ஒரு இளம் பெண் கழுத்து நிறைய தங்க நகைகளுடன் நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்துச்சென்று பத்திரமாக தன் இல்லம் திரும்பினால் அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது.                                                                                        
                                                                                  இந்தியத்தலைவர் காந்தி.

இராக்கிலிருந்து ஒரு பெண் தன்னந்தனியாக மக்காவுக்கு வந்து கஃபாவை தவாப் செய்துவிட்டு பத்திரமாக    திரும்பி செல்லும் காலம் வெகு விரைவில் வரும்.
                                                                                                                                                                     உலகத்தலைவர் நபி ஸல்

நபி ஸல் அவர்களின் இந்த வாக்கு 10 ஆண்டுகளில் நிறைவேறியதாக நபித்தோழர் அதி இப்னு காதம் ரலிஅவர்கள் சாட்சியம் கூறுகிறார்கள்.

இந்திய மக்களால் மதிக்கப்படும் காந்தி அவர்கள் கண்ட சுதந்திர கனவு என்ன ஆனது?


இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகளை கடந்தும்,கழுத்தில் தங்கநகைகளுடன் இரவில் அல்ல பகலில் கூட ஒரு பெண் தனியாக நடந்து செல்லமுடியா அச்சமுள்ள சூழலே நிலவுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் 23 வயது கல்லூரி மாணவி காமுகர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம்இந்தியாவையேஉலுக்கியது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளிகளுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்கக்கோரிஆர்ப்பாட்டங்களும்,போராட்டங்களும் நடை பெற்று வருகிறது.

இதுபோன்ற கற்பழிப்புக்குற்றங்களுக்கு மரண
தண்டனையேதீர்வுஎனவும்,இந்தியஅரசியலமைப்புச்சட்டத்தில்திருத்தம்கொண்டுவரப்படவேண்டுமெனவும் நாட்டின் பல திக்குகளிலிருந்தும் குரல்கள் ஒலிக்கிறது.

இதுபோன்ற கொடூரங்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும்அவ்வப்போதுநடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.ஆனால் தலைநகரில் நடந்ததால் இது தலையாய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

அசாமிலோ,பிகாரிலோ நடந்திருந்தால் இந்தளவு முக்கியத்துவம் பெறுமா?என்பது சந்தேகமே!

காரணம், டில்லியில் அந்த மாணவிக்கு நடந்த கொடுகமைக்குநிகரானசம்பவங்கள்தமிழ்நாட்டிலும் 
நடந்துகொண்டுதானிருக்கிறது,

இந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 7 ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவியை ஒரு காமக்கொடூரன் கற்பழித்து கோரமாக கொலை செய்த நிகழ்வு அவ்வளவு 
முக்கியத்துவம் பெறவில்லை? ஏன்?

பிரச்சனைகளில் காட்டப்படும் தீவிரம் அதற்கான தீர்வில் காட்டப்படுவதில்லை என்பது உண்மையே.

மக்களும் மீடியாக்களும் இந்தப்பிரச்சனையை மூன்று கோனத்தில் அலசுகின்றனர்,

முதலாவது:சட்ட ஒழுங்கு சரியில்லை.


அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால்-புதிதாக தேர்வு செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்து பேசும்போது,தமிழ்நாட்டில் உள்ள 900 நீதிபதிகளில் 500 பேர் மீது ஊழல் புகார்இருப்பதாகவேதனையுடன் தெறிவித்தார்.மேலும் பொதுமக்கள் கடைசியாக நிவாரணம் தேடிவருவது நீதிபதிகளிடம்தான் எனவே விமர்சனங்களுக்கு ஆளாகாமல் செயல்படவேண்டும் என வலியுறுத்தினார்.

இரண்டாவது:பண்பாடு கெட்டுப்போய்விட்டது.

கற்பழிப்பு போன்ற விவகாரங்களில் மரணதண்டனை வேண்டும் என்று வலியுறுத்தும் சமுதாயம்பெண்களின்ஆடைக்குறைப்புகலாச்சாரம் பற்றியும்,ஆண்,பெண் கலப்புச்சமாச்சாரம் பற்றியும்,சுதந்திரம் எனும் பெயரில் 
கட்டுப்பாடுகளை தகர்த்தெறிகிற ஆபத்துக்களைப்பற்றியும் வாய்திறப்பதில்லை.


மூன்றாவது: மதுப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட சமுதாயம்.

டெங்கு காய்ச்சல் வந்தால் காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்கும் அதே நேரம் அதற்கு காரணமான கொசுவும் ஒழிக்கப்படவேண்டும்.

இஸ்லாம் என்ன கூறுகிறது?


இஸ்லாம் சட்டங்களைப்பற்றி பேசியதை விட சீர்திருத்தங்களைப்பற்றியும்,முன் நடவடிக்கைகள் பற்றியும் அதிக கவனம்எடுத்துப்பேசுகிறது,காரணம் வரும் முன் காப்பதே அறிவுடமை.

இஸ்லாம் சட்டங்களை அடிப்படையாக கொண்ட மார்க்கமல்ல.அதனால் தான் திருக்குர்ஆனின் வசனங்கள் 
6666 ல்- சட்டங்கள் பற்றி பேசும் வசங்கள் வெறும் 500 மட்டுமே!

இஸ்லாம் வழங்கியிருக்கும் குற்றவியல் தண்டனைகள என்றுப்பார்த்தால் விசாலமான ஷரீஅத்தில் ஒரு பகுதி மட்டுமே.

ஆம்!ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட இறைவசனங்களில் குற்றவியல் தண்டனைகள் குறித்துபேசும்வசனங்கள் பத்தைக்கூட தாண்டவில்லை.

குற்றவாளிகளை தண்டித்து சீர்த்திருத்துவதை விடவும் குற்றவாளியாகாமல் அவனை தடுப்பதே இஸ்லாத்தின்பிரதான நோக்கமாகும்.

அல்குர்ஆனில் விபச்சாரத்திற்கான தண்டனை குறித்து ஒரு வசனம் பேசுகிறது

الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ

விபசாரியும், விபசாரனும் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்.(திருமணம் ஆகாமல்
இருந்தால்)
(அல்குர்ஆன் 24:2)

இந்த வசனம் இடம் பெற்ற சூரா அந்நூரில்- விபச்சார குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வழிகள் பற்றி நிறைவாக பேசுகிறது.

அடுத்தவர்களின் வீட்டுக்கு செல்லும்போது கடைபிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள்,தீயபார்வைகளிலிருந்து தன்னை
பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள்,பெண்கள் அந்நியர்களிடமிருந்து தங்களை மறைவாக்கிகொள்ள
வேண்டிய அவசியங்கள் போன்ற பண்பாடுகள் பற்றியும்,நல்லொழுக்கம் பற்றியும் அதிகம் வலியுறுத்திப்பேசுகிறது

இதனடிப்படையில் தான்-விபச்சாரம் செய்யாதீர்கள் என்று சொல்வதை விட விபச்சாரத்தின் பக்கம் நெருங்க வேண்டாம் என போதிக்கிறது.

 وَلَا تَقْرَبُوا الزِّنَىٰ ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
(அல்குர்ஆன் 17:32)


ஒரு பெண் அவசியத்தேவையின்றி வெளியே வருவதை கண்டிக்கும் அல்குர்ஆன்-

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَىٰ

 நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்.-
(அல்குர்ஆன் 33:33)


தேவைக்காக வெளியே வரும்போது கூட- அந்நியர்கள் உங்களால் ஈர்க்கப்படும் எந்த செயல்பாடுகளிலிருந்தும்
உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிறது.

وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ

 மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்.
(அல்குர்ஆன் 24:31)

ஆடவர்களை திரும்பிப்பார்க்க வைக்கிற நடையே ஆபத்து என்றால்,அடுத்தவர்களை சுண்டி இழுக்கிற ஆடைகளை
என்ன சொல்வது?
அவ்வாறே-திருட்டுக்குற்றத்திற்கான தண்டனை பற்றி திருக்குர்ஆனில் இரண்டு வசனங்கள் மட்டுமே பேசுகிறது
  
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللَّـهِ ۗ وَاللَّـهُ عَزِيزٌ حَكِيمٌ

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் 5:38)

இந்த வசனம் மதீனாவில் இறுதியாக இறக்கப்பட்ட வசனமாகும்.திருட்டின் தண்டனை பற்றிய வசனம் இறங்கும்
முன்பு திருட்டுக்கு காரணமான வறுமை ஒழிக்கும் வழிகளான ஜகாத்,சதகா,கடன்,போன்ற திட்டங்களை குறித்து
நூற்றுக்கணக்கான வசனங்கள் இறக்கப்பட்டு விட்டன.

வறுமையே திருட்டுக்கு காரணம் என்றால் வறுமையே முதலில் ஒழிக்கப்படவேண்டும் என்பதே இஸ்லாத்தின் 
அனுகுமுறையாகும்,அதனால் தான் பசித்தவன் ரொட்டியை திருடினால்,ஆடையில்லாத நிர்வாணமானவன்
ஆடையை திருடினால்,நோயாளி மருந்தை திருடினால் கை வெட்டப்படும் குற்றமாக அதை பார்க்கப்படாது.

இஸ்லாம் போதிக்கிற பண்பாடுகளையும் அறநெறிகளையும் தாண்டி ஒருவர் குற்ற வாசலில் வந்து நிற்கும்
போது-இப்போது சட்டம் தன் கடமையைச்செய்யும்.
இஸ்லாமிய சட்டங்கள் மூலம் மட்டும் தான் குற்றம்செய்யாத ஒரு மனித சமூகத்தை உருவாக்க முடியும்.
அதனால் தான் இஸ்லாம் நீதித்துறையை கட்டமைப்பதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டது.
கலிபாக்களின் ஆட்சியில் அரசாங்க ஊழியர்களில் நீதிபதிகளுக்கே அதிக ஊதியம் வழங்கப்பட்டது.ஏனெனில்
பணம்,பதவி,சொந்தம் என எதற்கும் முன்னும் நீதி மண்டியிடக்கூடாது.

இஸ்லாமிய சட்டங்களின் தனித்தன்மைகள்

1.பகிரங்கமாக தண்டித்தல்.

விபச்சாரம்,களவு,கொலை,கொள்ளை,போதைப்பொருள் போன்ற பெரும் குற்றங்களுக்கு இஸ்லாத்தில் கடும்
தண்டனைகள் உண்டு என்பது உண்மையே.

ஒரு கொலைகாரனுக்கு வழங்கப்படும் மரணதண்டனை எத்தனையோ கொலைகளை தடுத்து நிறுத்தும்,அதனால்
தான் இஸ்லாத்தில் கடும் குற்றத்திற்கான தண்டனை நிறைவேற்றும் போது மக்களின் முன்னிலையில் வைத்து
நிறைவேற்றப்படவேண்டும் என உத்தரவிடுகிறது.

وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ

அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
(அல்குர்ஆன் 24:2)


أن عمرو بن العاص، أقام حد الخمر على عبد الرحمن بن عمر بن الخطاب، يوم كان عامله على مصر. ومن المألوف أن يقام الحد في الساحة العامة للمدينة، لتتحقق من ذلك العبرة للجمهور، غير أن عمرو بن العاص أقام الحد على ابن الخليفة في البيت، فلما بلغ الخبر عمر كتب إلى عمرو بن العاص: من عبد الله عمر أمير المؤمنين إلى العاص بن العاص: عجبت لك يا ابن العاص ولجرأتك عليّ، وخلاف عهدي. أما إني قد خالفت فيك أصحاب بدر عمن هو خير منك، واخترتك لجدالك عني وإنفاذ مهدي، فأراك تلوثت بما قد تلوثت، فما أراني إلا عازلك فمسيء عزلك، تضرب عبد الرحمن في بيتك، وقد عرفت أن هذا يخالفني؟ إنما عبد الرحمن رجل من رعيتك، تصنع به ما تصنع بغيره من المسلمين. ولكن قلت: هو ولد أمير المؤمنين وقد عرفت أن لا هوادة لأحد من الناس عندي في حق يجب لله عليه، فإذا جاءك كتابي هذا، فابعث به في عباءة على قتب حتى يعرف سوء ما صنع. وقد تم إحضاره إلى المدينة وضربه الحد جهرًا (روى ذلك ابن سعد، وأشار إليه ابن الزبير، وأخرجه عبد الرزاق بسند صحيح عن ابن عمر مطولاً).


எகிப்தின் ஆளுனராக இருந்த ஹழ்ரத் அம்ர் இப்னுல் ஆஸ் ரலி அவர்கள்-ஜனாதிபதி உமர் ரலி அவர்களின்
மகன் அப்துர் ரஹ்மான் அவர்கள் மது குடித்த குற்றத்திற்காக தண்டனை நிறைவேற்றும்போது தங்களின்
வீட்டில் வைத்து மறைவாக தண்டித்தார்கள்.குற்றவாளிகளை பொது தளத்தில் வைத்து தண்டிப்பதே இஸ்லாமிய
மரபு.செய்தியறிந்த ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் ஆளுனர் அம்ர் ரலி அவர்களுக்கு கடிதம் அனுப்பினார்கள்,
அதில்-உன்னை விட மிகச்சிறந்தவர்களான பத்ரியீன்கள் இருக்க என் கட்டளையை சரியாக நிறைவேற்றுவீர்
என்ற நம்பிக்கையில் இப்பதவிக்கு உம்மை தேர்வு செய்தேன்,ஆனால் என் ஒப்பந்தத்தை மீறிவிட்டீர்.உம்
ஆட்சிக்கு கீழ் வாழும் என் மகன் அப்துர் ரஹ்மானை மற்ற முஸ்லிம்களை போல சமமாக பாவித்து தண்டித்தி
ருக்க வேண்டும்.எனவே இக்கடிதம் கிடைத்ததும் உடனடியாக அவரை மதீனாவுக்கு அனுப்பி வையுங்கள்,
மதீனாவில் மக்கள் முன்னிலையில் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று உத்தரவிட்டார்கள்.

இஸ்லாம் வழங்கும் தண்டனைகளால் மனித உரிமை பாதுகாக்கப்படுகிறது,பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் 
கிடைக்கிறது.சமூகமும் நிம்மதி பெறுகிறது.இதை தான் அல்லாஹுத்தஆலா -

وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நல்லறிவாளர்களே! கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.என்று கூறுகின்றான்.
(அல்குர்ஆன் 2:179)


2.சமத்துவமான நீதி;

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّـهِ وَلَوْ عَلَىٰ أَنفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ ۚ إِن يَكُنْ غَنِيًّا أَوْ فَقِيرًا

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்).
(அல்குர்ஆன் 4:135)


இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகளை பொருத்தவரையில் குற்றத்தின் வீரியம் பார்க்கப்படுமே தவிர
குற்றவாளியின் பின்னனி பார்க்கப்படாது.ஏழை,பணக்காரன்,அந்நியன் சொந்தக்காரன்,ஆட்சியாளர்,குடிமகன்
போன்ற எந்த பாகுபாடும் காட்டப்படாது.
இன்னும் சொல்வதானால் ஆட்சியாளர்கள்,அல்லது ஆட்சியாளர்களின் உறவினர்கள் தவறு செய்யும்போது 
கடுமையான கண்டனத்துடன் தண்டிக்கும்.

يقول ابن عمر رضي الله عنهما: كان عمر إذا نهى الناس عن شيء جمع أهله وقال: إني قد نهيت الناس عن كذا وكذا وإنهم إنما ينظرون إليكم نظر الطير إلى اللحم فإن وقعتم وقعوا، وإن هبتم هابوا، وايم الله لا أوتي برجل منكم فعل الذي نهيت عنه إلا أضعفت عليه العقوبة، لمكانه مني فمن شاء فليتقدم ومن شاء فليتأخر[2].

உமர் ரலி மக்களுக்கு ஒரு சட்டத்தை கொண்டு வரும்போது தன் குடும்பத்தினர்களை ஒன்று கூட்டி-நான் 
மக்களை இன்ன இன்ன விஷயங்களை விட்டும் தடுத்துள்ளேன்.எனவே மக்கள் -பறவை தன் இரையை குறிவைத்து பார்ப்பது போல உங்களை பார்ப்பார்கள்.நீங்கள் அதை செய்தால் மக்களும் செய்வார்கள்.நீங்கள் விலகிக்
கொண்டால் மக்களும் விலகிக்கொள்வர்.எனவே நான் தடுத்த விஷயங்களில் நீங்கள் ஈடுபட்டதாக நான் 
கேள்விப்பட்டால் உங்களை பன்மடங்கு தண்டிப்பேன். என்று கூறுவார்கள்.


جاء رجل من أهل مصر إلى عمر بن الخطاب -رضي الله عنه- وقال له: يا أمير المؤمنين، لقد تسابقتُ مع ابن عمرو بن العاص وإلى مصر، فسبقتُه فضربني بسوطه، وقال لي: أنا ابن الأكرمين. فكتب عمر بن الخطاب إلى
عمرو بن العاص: إذا أتاك كتابي هذا فلتحضر إلى ومعك ابنك، فلما حضرا أعطى عمر بن الخطاب السوط للرجل المصري ليضرب ابن عمرو قائلا له: اضرب ابن الأكرمين

كنز العمال

எகிப்து வாசிகளில் ஒருவர் உமர் ரலி அவர்களிடம் வந்து-அமீருல் முஃமினீன் அவர்களே!எனக்கும் எகிப்து 
ஆளுனரின் மகனுக்கும் குதிரை பந்தயம் வைத்து அதில் நான் முந்தியபோது-ஆளுனரின் மகனான என்னையே
முந்துகிறாயா?என தன் சாட்டையால் அடித்துவிட்டார் என முறையிட்டார்.
அப்போது உமர் ரலி அவர்கள் கடிதம் எழுதி-எகிப்து ஆளுனரும் அவரின் மகனும் உடனே மதீனாவந்து தன்னை
சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டார்கள்.
அவ்விருவரும் வந்தபோது-விசாரித்து பின் -சாட்டையை வழக்கு தொடுத்தவரிடம் கொடுத்து,ஆளுனரின் மகனை
அடிக்கச்சொன்னார்கள்.

3.பரிந்துரை செல்லாது.

سرقت امرأة أثناء فتح مكة، وأراد الرسول صلى الله عليه وسلم أن يقيم عليها الحدَّ ويقطع يدها، فذهب أهلها إلى أسامة بن زيد وطلبوا منه أن يشفع لها عند رسول الله صلى الله عليه وسلم حتى لا يقطع يدها، وكان الرسول صلى الله عليه وسلم يحب أسامة حبَّا شديدًا.
فلما تشفع أسامة لتلك المرأة تغير وجه الرسول صلى الله عليه وسلم، وقال له: (أتشفع في حد من حدود الله؟!). ثم قام النبي صلى الله عليه وسلم فخطب في الناس، وقال: (فإنما أهلك الذين قبلكم أنهم كانوا إذا سرق فيهم الشريف تركوه، وإذا سرق فيهم الضعيف أقاموا عليه الحد، وايم الله (أداة قسم)، لو أن فاطمة بنت محمد سرقت لقطعتُ يدها)
 [البخاري].

மக்கா வெற்றியின் போது உயர்ந்த குலப்பெண் திருடிய குற்றத்திற்காக கரத்தை துண்டிக்க நபி ஸல் அவர்கள்
உத்தரவிட்ட போது-அப்பெண்ணின் குடும்பத்தினர் நபிக்கு பிரியமான உஸாமா ரலி அவர்களை சந்தித்து,
நபியிடம் பரிந்துரை செய்யுமாறு வேண்டிக்கொண்டனர்-இது குறித்து நபியிடம் உஸாமா ரலி அவர்கள் 
பேசியபோது கடும் சினமுற்ற நாயகம்-அல்லாஹ்வின் தண்டனையில் பரிந்து பேசுகிறீரா?உங்களின் முன்னவர்கள்
அழிந்தது, அவர்களில் உயர்ந்த குலத்தவர் திருடினால் விட்டுவிடுவதும்,பலகீனமானவர் திருடினால் தண்டிப்பதும் 
போன்ற செயல்களால் தான்.முஹம்மதின் மகள் பாத்திமா திருடினாலும் நான் கரத்தை துண்டிப்பேன் என்றார்கள்

இஸ்லாமிய குற்றவியல் தண்டனையில் மன்னிக்கும் உரிமையை பாதிக்கப்பட்டவனின் குடும்பத்திடம் 
ஒப்படைக்கிறது,காரணம் நடபெற்ற குற்றத்தால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் அவர்களே.
கொலை செய்தவன் ஒருவன்,அதனால் பாதிக்கப்பட்டவன் இன்னொருவன் இந்த இரண்டுக்குமிடையில் 
குற்றத்தை மன்னிப்பதற்கு மற்றவர்களுக்கு எந்தவகையிலும் அதிகாரம் இல்லை.

4.காலம் கடத்தாத உடனடி தண்டனை.

في عهد عمر بن الخطاب -رضي الله عنه- أسلم رجل من سادة العرب، وذهب للحج، وبينما كان يطوف حول الكعبة، داس رجل على طرف ردائه، فضربه على وجهه ضربة شديدة، فذهب الرجل إلى عمر بن الخطاب، واشتكى له، فطلب عمر -رضي الله عنه- إحضار الضارب، فلما حضر أمر عمر الرجل أن يقتص منه بأن يضربه على وجهه مثلما فعل معه، فقال متعجبًا: وهل أستوي أنا وهو في ذلك؟ فقال عمر: نعم، الإسلام سوَّى بينكما

"السيرة الحلبية" (3/ 359)، 

உமர் ரலி அவர்களின் ஆட்சியில்-அர்புநாட்டின் தலைவர்களில் ஒருவர் ஹஜ் செய்ய வந்தார்.கஃபாவில் தவாப்
செய்து கொண்டிருக்கும் போது ஒருவர் அவரின் ஆடையின் ஒரப்பகுதியை மிதித்து விட்டார்.உடனே கோபப்
பட்ட அந்த தலைவர்,அவரை கடுமையாக அடித்துவிட்டார்,அடிபட்டவரோ உமர் ரலி அவர்களிடம் வழக்கு
தொடுத்தபோது உமர் ரலி அவர்கள்-அடி வாங்கியவரை திருப்பி அடிக்கச்சொன்னார்கள்.அப்போது குற்றவாளி 
யான தலைவர்-நானும் அவரும் சமமா?என கேட்டார்.அதற்கு உமர் ரலி ஆம் இஸ்லாம் உங்கள் இருவரையும் சமமாகவே பார்க்கிறது.என கூறினார்கள்.
5.இறக்கம் காட்டப்படாது.

 وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّـهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّـهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்;
(அல்குர்ஆன் 24:2)


நிறைவாக:
கரத்தை துண்டித்தல்,தலையெடுத்தல்,கல்லெரிந்து கொல்லுதல் போன்ற இஸ்லாமிய தண்டனைகளை
ஒரு காலத்தில் காட்டுமிராண்டித்தனம் என்று சொன்ன மக்கள் இன்று-குற்றங்கள் குறைய அதுவே தீர்வு 
என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.காரணம் இந்திய குற்றவியல் சட்டங்களில் கடுமை இல்லை என்கிற
மனோநிலைக்கு பெரும்பான்மையான மக்கள் வந்து விட்டனர்.
குற்றம் செய்தவனுக்கு மக்கள் வரிப்பணத்தில் பல வருடங்கள் சிறையில் சோறுபோட்டு,அவனை படிக்கவைத்து,
அவனுக்கு உயர்தரமான பாதுகாப்பும்,மருத்துவ வசதியும் செய்து கொடுத்தால்-80 தடவை திருடியவன் 81 
தடவை கைவரிசை-10 கொலைகள் செய்தவன் 11 வது கொலை செய்யும் போது பிடிபட்டான் போன்ற செய்திகள்
தவிர்க்க முடியாது.



  




                                   

Tuesday, 18 December 2012

மாயர்களும் மறைக்கப்பட்ட கியாமத்தும்


21.12.2012 உலக அழிவிற்கு மாயர்கள் குறித்திருக்கும் நாள்.

மீடியாக்கள்,மற்றும் இணையதளங்கள் வழியே இச்செய்தி மிக வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.அப்பாவி பொதுமக்களும்-
நடுத்தரவர்க்கத்தினரும் மட்டுமல்ல படித்தவர்களும் கூட இது உண்மையாக இருக்குமோ எனும் அச்சத்தில் இருக்கின்றனர்.

யார் இந்த மாயர்கள்?இவர்கள் எப்படி உலக அழிவை கணித்தனர்? இவர்கள் எந்த காலத்தில் வாழ்ந்தனர்?எங்கு வசித்தனர்?போன்ற கேள்விகளைப்பற்றிய தேடலே இன்றய இணையதளங்களின் சூடான செய்தியாகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னமெரிக்காவில் வாழ்ந்த மாயன் எனும் இனத்தவர்களால் கணிக்கப்பட்ட காலண்டர் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவு பெறுகிறது.இதுவே பாமர மக்களின் அச்சத்திற்கு காரணமாகும்.

இதுகுறித்து தெளிவுபடுத்தவேண்டிய மதங்கள் வாய்திறக்க மறுக்கிறதுமாயர்களின் கணிப்பு தவறு என்று உரக்கச்சொல்ல கடமைப்பட்ட அறிவியல் உலகம்- மாயர்கள் வானவியலில் வல்லவர்கள்,கணிதத்தில் தேர்ச்சிபெற்றவர்கள்,கட்டிடக்கலையில் ஜாம்பவான்கள் என்று மாயர்களின் புகழ்பாடி மாயர்களின் மாயவலையில் மக்களை சிக்கவைக்கப்  பார்க்கின்றனர்.

உண்மையில் மாயர்கள் மந்திரத்தையும்,ஜோதிடத்தையும் பின்னனியாக கொண்டவர்கள்.இதே மாயர்கள் வாழ்ந்த பகுதியான தென்னமெரிக்காவில்தான் ஒருகாலத்தில் அதிகமாக நரபலிகள் அரங்கேறியது.சூரியன் தொடர்ந்து உதிக்கவேண்டுமானால் வீட்டுக்கு ஒருவரை நரபலி கொடுப்பது அவசியம் என நம்பிக்கைகொண்டு அதை செய்தும் வந்தனர்
   
அறிவியல் சரித்திரத்தில் இதுபோன்ற கோமாளித்தனத்தை செய்தவர்கள் எப்படி உலக ஆயுளை கணிக்க முடியும்?

பூமி இன்று அழியும் என்று சொன்ன மாயர்களால் அது எப்போது தோன்றியது?என்பதை கணிக்கமுடியவில்லை.அவர்கள் தயாரித்த காலண்டர் கி.மு 3113 ம் ஆண்டிலிருந்தே துவக்கமாகிறது.

இந்த உலகத்திற்கு அவர்கள் கணித்திருக்கும் ஆயுட்காலம் 5125 ஆண்டுகாலம்.

பூமியை சூரியன் சுற்றுகிறது என நம்பிக்கொண்டிருந்த காலத்தில்-கிரகங்கள்பற்றிய சரியான அறிவு இல்லாத காலத்தில்- வாழ்ந்த ஒரு கூட்டம் சொல்லிய மூடத்தனமான கருத்தை மில்லேனியத்தில் வாழும் மனிதர்கள் நம்புவது அறியாமையா?பலகீனமா?

இதை ஜோதிடம் என்று கூறுங்கள் விட்டுவிடலாம்.அறிவு தளத்தில் விவாதிக்கப்படும் அளவுக்கு இதை பெரிதுபடுத்த வேண்டுமா?இதுவே இப்போது நம்முன் தோன்றும் கேள்வியாகும்.


முக்காலத்திற்கும் தீர்வு சொல்லும் இஸ்லாம் என்ன கூறுகிறது?

மாயர்களின் கருத்தை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு விஷயத்தில் மட்டுமே ஒத்துவருகிறது.இந்த உலகத்திற்கு ஒருநாள் அழிவு உண்டு,அந்த ஒருநாள் வெள்ளிக்கிழமையாக இருக்கும் என்பதை தவிர்த்து வேறு எதுவும் உண்மை இல்லை.

وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا

நிச்சயமாக கியாமத் வரும்,அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ولا تقوم الساعة إلا يوم الجمعة ) رواه مسلم

கியாமத் வெள்ளிக்கிழமைதான் வரும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் கியாமத் விஷயத்தில் சில நிலைபாடுகள் உண்டு.

முதலாவது:கியாமத்தின் அழிவு குறித்து அல்குர்ஆன் அதிகமான இடங்களில் பேசுகிறது.

அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது

நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

மலைகள் பெயர்க்கப்படும் போது-

காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-

கடல்கள் தீ மூட்டப்படும்போது-

வானம் அகற்றப்படும் போது-

கப்றுகள் திறக்கப்படும் போது,

இவை போன்று உலக அழிவுநாளில் ஏற்படும் ஆபத்துக்களை குறித்து ஏராளமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த அழிவை சந்திக்கும் அந்த நாள் எது?என்பதை மட்டும் அல்லாஹ் தன் இரகசிய அறிவில் மறைத்து வைத்துள்ளான்.மரணிக்கும் நாள் தெரிந்துவிட்டால் வாழ்க்கையில் இன்பம் இருக்காது எனும் நலன் கருதியே அல்லாஹ் மறைத்தான்.

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்

நபித்தோழர்கள் நபி ஸல் அவர்களிடம் 13 கேள்விகள் கேட்டுள்ளனர்.   அந்த 13 கேள்விகளையும் அதற்கான பதிலையும் குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

அதில் கியாமத் நாளைப்பற்றிய ஒரு கேள்வி உண்டு.

يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ رَبِّي ۖ لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ ۚ ثَقُلَتْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً ۗ يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا ۖ قُلْ إِنَّمَا عِلْمُهَا عِندَ اللَّـهِ وَلَـٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ

அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; "அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடீரென அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும் பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக.

உலகின் முடிவு நாள் குறித்து அல்லாஹ்வை தவிர வேறு யாரும் சொல்லிவிடமுடியாது.முடிவில்லாதவனால் மட்டும் தான் முடிவு பற்றி பேசமுடியும்.

இதில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

உலக அழிவுகள் வேறு,அதன் அடையாளங்கள் வேறு.இரண்டையும் குழப்பிக்கொள்ளக்கூடாது.

உலக அழிவின்போது இந்த உலகம் சந்திக்கும் ஆபத்துக்களை குறித்து குர்ஆன் தெளிவாக கூறுவது போன்று-அதன் முன் அடையாளங்களைப்பற்றி முழுமையாக நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஒரு நாள் நபி ஸல் அவர்கள் காலை பஜ்ர் தொழுகை முடித்து தன் தோழர்களுக்கு-உலக அழிவு நாள் வரை இந்த உம்மத் சந்திக்கும் சோதனைகள் குறித்து அனைத்தையும் தெளிவுபடுத்தினார்கள்.  மஃரிப் வரை (சுமார் பத்துமணி நேரம்) பிரசங்கம் செய்ததாகவும்,   அதில் எதையும் விட்டுவிடவில்லை என்றும்,எங்களில் அறிவில் தேர்ச்சிபெற்றவர்கள் அதை மனனம் செய்து கொண்டனடனர் என  ஹழ்ரத் இர்பாத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

உலக அழிவின் முன் அடையாளங்கள் குறித்து இஸ்லாம் பேசிய அளவிற்கு வேறு எந்த மதமும் பேசவில்லை,அறிவியல் உலகமும் பேசவில்லை.

தனிமனித வாழ்வில்-குடும்பத்தில்-சமூகத்தில்-அரபுலகத்தில்-இஸ்லா  மிய உம்மத்தில்-இயற்கையில் நிகழும் மாற்றங்கள் பற்றி தீர்க்கதரிசனமாக இஸ்லாம் சொன்னதில் என்றைக்கும் பொய்த்துப்போனதில்லை.

இஸ்லாம் கியாமத்தின் அடையாளங்களை இரண்டாக பிரிக்கிறது.     1.சிறிய அடயாளங்கள்.2.பெரிய அடையாளங்கள்.

ஸஹீஹான ஹதீஸ் நூட்களிலிருந்து ஆய்வு செய்த முஹத்திஸீன் கள்-சுமார் 131 சிறிய அடையாளங்களை நபி ஸல் அவர்கள் முன் அறிவிப்புச்செய்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

இதில் நிகழ்ந்துவிட்டவை-தொடர்ந்து கொண்டிருப்பவை-இனிமேல் நடக்கவிருப்பவை என மூன்றுவகையாக பிரித்துள்ளனர்.

நடந்து முடிந்தவை:

நபி ஸல் அவர்கள் தங்களின் வருகையை கியாமத்தின் முதல் அடையாளமாக அறிவிக்கிறார்கள்.

عن أنس-رضي الله عنه- قال: قال رسول الله-صلى الله عليه وسلم- « بعثت أنا والساعة كهاتين قال وضم السبابة والوسطى
مسلم

நபி ஸல் அவர்கள் தங்களின் ஆள்காட்டிவிரலையும் நடுவிரலையும் சேர்த்துவைத்து-நானும் கியாமத்தும் இப்படி அனுப்பப்பட்டிருக்கிறோ  ம் என கூறினார்கள்.

கியாமத்தின் அடையாளங்களுடன் இவ்வளவு நெருக்கமாக கூறப்பட்ட நாயகத்தின் வருகை ஏற்பட்டு 1400 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் உலகின் ஆயளை கவனித்து பார்க்கும்போது கியாமத் நெருங்கிவிட்டது என்றே சொல்லவேண்டும்.ஏனெனில் உலகம் படைக்கப்பட்டு சுமார் லட்சக்கணக்காண ஆண்டுகள் ஆகிவிட்டதாக அறிஞர்கள் கூறுகின்றனர்

இவ்வாறே சந்திரன் பிளவும் கியாமத்தின் நெருக்கத்தின் அடையாளம் என அல்லாஹ் கூறுகிறான்.

اقْتَرَبَتِ السَّاعَةُ وَانشَقَّ الْقَمَرُ

கியாமத் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது.

ஆனால் அந்த நிகழ்வு ஏற்பட்டது நபி ஸல் அவர்களின் காலத்தில் தான் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

عن ابن مسعود رضي الله عنه قال: ( انشق القمر على عهد رسول الله صلى الله عليه وسلم فرقتين، فرقة فوق الجبل وفرقة دونه، فقال رسول الله صلى الله عليه وسلم اشهدوا ) متفق عليه

நபி ஸல் அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டாக பிளந்து அதில் ஒரு பாகம் மலைக்கு மேல் பகுதியிலும்,மற்றொரு பாகம் மலைக்கு கீழும் விழுந்து,என் நுபுவ்வத்துக்கு நீங்கள் சாட்சியாயிருங்கள் என நபி ஸல் அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அரபுலகத்தின் செல்வச்செழிப்பு கியாமத்தின் அடையாளம்.

وفي رواية للإمام أحمد قال عليه الصلاة والسلام: "ورأيتَ أصحاب الشاء تطاولوا بالبنيان

ஆடு மேய்ப்பவர்களான அரபியர்கள் கட்டிடங்கள் கட்டுவதில் போட்டி போடுவதை நீங்கள் காண்பீர்கள்.

இதைச்சொன்ன காலத்தில் அரபுலகத்தின் திரும்பிய பக்கமெல்லாம் பசியும் பட்டினியும்தான்.

كما روى البيهقي عن عمر بن أسيد رحمه الله تعالى قال: "إنما ولي عمر بن عبد العزيز ثلاثين شهرا، ألا والله ما مات حتى جعل الرجل يأتينا بالمال العظيم فيقول: اجعلوا هذا حيث ترون في الفقراء؛ فما يبرح حتى يرجع بماله يتذكر من يضعه فيه فلا يجده، قد أغنى عمر الناس

உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் ஆட்சி செய்தது முப்பது மாதங்கள் தான். ஆனால் அவர்கள் மரணிக்கிறபோது எங்களில் ஒவ்வொருவரும் மிகப்பெறும் செல்வத்துக்கு சொந்தக்கார்ர்களாக இருந்  தோம்.ஏழைகளே பார்க்க முடியாது.தர்மம் செய்ய பணத்துடன் வருபவர்கள் யாசகர்களை பெற்றுக்கொள்ளமாட்டார்கள்.அந்தளவு மக்களை செல்வந்தர்களாக மாற்றினார்கள்.என உமர் இப்னு உஸைத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

அரபியர்களின் இன்றைய நிலை என்ன?

மக்கள் பொருளுக்கும் அருளுக்கும் அந்த பூமியைதான் நாடிச்செல்கின்றனர்.

காலில் செருப்பில்லாமல் நடந்த கூட்டம் இன்று பென்ஸ்கார்களில் பவனிவருகிறார்கள்.

உலகில் மிகவும் உயரமான கட்டிடம் எங்கே இருக்கிறது?இந்த கேள்வியின் விடையில் கியாமத் ஜொலிக்கிறது.

அமெரிக்காவிலோ,ஐரோப்பாவிலோ இல்லை,அரபுநாடுகளில் தான் உள்ளது. உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலீபா என்ற கட்டிடம் துபாயில் உள்ளது. இந்த கட்டிடம் 500 ஏக்கர்-ல் அமைந்துள்ளது.இதன் உயரம் 828 மீட்டர்.அதாவது இதன் உயரத்தை சொல்ல வேண்டுமானால் கிட்டத்தட்ட 1 கி.மீ (KM). ஐந்தாண்டு காலமாக கட்டப்பட்ட இந்த கட்டிடம்- கட்டி முடிக்க மொத்தம் 2 பில்லியன் டாலர் செலவாகியுள்ளது.
இது ஆச்சரியமல்ல,உனக்கு நான் சளைத்தவன் இல்லை என்று சவூதி களம் இறங்கியிருக்கிறது.உலகில் மிக உயரமான கட்டிடம் சவூதியில் உள்ள ஜித்தாவில் தயாராகி வருகிறது.நீ 828 மீட்டர் உயரத்தில் கட்டினால் நான் 1000 மீட்டர் உயரத்தில் கட்டுகிறேன்,6,330 கோடி செலவில் 63 மாதங்களில் கட்டிமுடிக்க திட்டமிட்டுள்ளனர்.

கொஞ்சம் மேல் ஹதீஸை உற்றுநோக்கி கவனியுங்கள்.உயரமான கட்டிடங்களை கட்டுவார்கள் என்று சொல்லவில்லை,மாறாக அதில் போட்டிபோடுவார்கள்.அல்லாஹு அக்பர்.எங்கள் நாயத்தின் வார்த்தைகளில் எங்களுக்கு ஈமான் அதிகமாகிறது.

அதேநேரம் ஈராக் தேசத்தின் வறுமையும் கியாமத்தின் அடையாளம்:


روى مسلم في صحيحه بسنده :
( عن أبي نضرة رضي الله عنه قال : كنا عند جابر بن عبد الله رضي عنه فقال : يوشك أهل العراق ألا يجبى إليهم قفيز و لا درهم .
قلنا : من أين ذلك ؟ .
قال : العجم يمنعون ذلك

இராக் வாசிகளுக்கு பணமும் உணவும் தடுக்கப்படும் என்று நபி ஸல் அவர்கள் கூறியபோது-அதை யார் தடுப்பார்கள் என நாங்கள் கேட்க-அந்நியர்கள் அதை தடுப்பார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

1991 ம் ஆண்டு சாத்தானின் சதிகாரன் அமெரிக்காவால் இராக் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு,2003 ல் நாட்டையே சுடுகாடாக மாற்றிய காட்சியை நம் காலத்தில் கண்டதை யாரும் மறந்திருக்க முடியாது.

கொத்து கொத்தான திடீர் மரணங்கள் கியாமத்தின் அடையாளம்:

ثم موتان يأخذ فيكم كعقاص الغنم
البخاري

ஆடுகளை தாக்கும் நோயைபோல ஒரு நோய் உங்களை தாக்கி அதிக உயிர் சேதங்களை உண்டாக்கும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஹழ்ரத் உமர் ரலி அவர்களின் ஆட்சியில் பைத்துல்முகத்தஸ் வெற்றிக்கு பின்பு ஹிஜ்ரி 18 ல் சிரியாவில் பரவிய நோயால் கூட்டம் கூட்டமாக மரணித்துப்போனார்கள்.

அந்த நோயால் 25,000 முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகி இறந்துபோனார்  கள்.அந்த நோயினால் ஸஹாபிகளில் ஒரு ஜமாஅத் மவ்த்தானார்கள்.

அதில் ஹழ்ரத் முஆத் இப்னு ஜபல் ரலி,அபூ உபைதா ரலி ,பழ்ல் இப்னு அப்பாஸ் ரலி போன்ற ஸஹாபாக்கள் அடக்கம்.

அதிகமான கொலைகள் நடைபெறுவது கியாமத்தின் அடையாளம்.

எந்தளவென்றால் கொலை செய்யப்பட்டவன் தான் ஏன் கொலைசெய்யப்படுகிறான் என்பதை அறிந்து கொள்ளமாட்டான்.

عنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
( وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، لَا تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَأْتِيَ عَلَى النَّاسِ يَوْمٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِيمَ قَتَلَ ، وَلَا الْمَقْتُولُ فِيمَ قُتِلَ ، فَقِيلَ : كَيْفَ يَكُونُ ذَلِكَ ؟ قَالَ : الْهَرْجُ)
رواه مسلم


மக்கள் இப்படி ஒருநாளை சந்திக்கும் வரை கியாமத் வராது,அதில் கொலை செய்பவன் ஏன் கொலை செய்கிறான்,கொலை செய்யப்படுபவன் ஏன் கொல்லப்படுகிறான் என்பதை அரிந்துகொள்ளமாட்டான்.

அது எப்படி என ஸஹாபாக்கள் கேட்டபோது-ஹர்ஜ் அதிகமாகும் என பதில் கூறினார்கள்.

ويكثر الهرج.. قيل: وما الهرج ؟ قال : القتل " رواه أحمد والبخاري

ஹர்ஜ் என்றால் என்ன ஸஹாபாக்கள் கேட்க அதிகமான கொலை என பதில் கூறினார்கள்.

முதல் உலக போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை:15 லட்சம்.
இரண்டாம் உலக போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை:55 லட்சம்.
வியட்நாம் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை:3 லட்சம்.
ரஷ்யப்புரட்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சம்
ஸ்பெயின் புரட்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சம்
இராக் ஈரான் வலைகுடாபோரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை லட்சம்:
இராக் மீது அமெரிக்கா நடத்திய போரில் பல லட்சம் மக்கள் மாண்டனர்.

தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் அடையாளங்கள்:

وعن حذيفة -رضي الله عنه- قال : قال رسول الله -صلى الله عليه وسلم-: " من اقتراب الساعة اثنتان وسبعون خصلة : إذا رأيتم الناس أماتوا الصلاة، وأضاعوا الأمانة، وأكلوا الربا، واستحلوا الكذب، واستخفوا بالدماء، واشتغلوا بالبناء، وباعوا الدين بالدنيا، وتقطعت الأرحام، ويكون الحكم ضعفاً والكذب صدقاً والحرير لباساً، وظهر الجور، وكثر الطلاق، وموت الفجأة، وائتمن الخائن وخوَّن الأمين وصدق الكاذب وكذب الصادق، وكثر القذف، وكان المطر قيظاً والولد غيظاً، وفاض اللئام فيضاً وغاض الكرام غيضاً، وتشبه الرجال بالنساء والنساء بالرجال، وحلف بغير الله وشهد المرء من غير أن يستشهد، وسلم للمعرفة وتفقه لغير الدين، وطلبت الدنيا بعمل الآخرة، ويقل الأمر بالمعروف، وشربت الخمور، وعق الرجل أباه وبر صديقه وجفا أمه وأطاع امرأته.. الحديث " رواه أبو نعيم في الحلية

நபி ஸல் அவர்களின் இரகசிய தோழர் ஹுதைபா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.கியாமத்தின் நெருக்கத்தில் 72 விஷயங்கள் நடைபெறும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

மக்கள் தொழுகையை வீணாக்குவார்கள்,அமானிதத்தை வீணடிப்பார்கள்-வட்டியை சாப்பிடுவர்-பொய் பேசுவதை ஹலாலாக்குவர்-கொலை செய்வதை சாதாரணமாக கருதுவர்-கட்டிடங்கள் கட்டுவதில் அதிக ஈடுபாடு காட்டுவர்-துன்யாவுக்காக தீனை விற்றுவிடுவர்-உறவுக ளை துண்டித்துவாழ்வர்-நீதி பலகீனப்படும்-பொய் உண்மையாகும்-பட்டு, ஆடையாகும்-பாவம் பகிரங்கமாகும்-தலாக் அதிகமாகும்-திடீர் மரணம்-மோசடிக்காரன் நம்பிக்கயாளனாகவும்,நம்பிக்கையாளன் மோசடிக்காரனாகவும்,பொய்யன் உண்மையாளனாகவும் உண்மையாளன் பொய்யனாகவும் பார்க்கப்படுவான். –தொடர்...... 
 
சிரிய அடையாளங்களில் இனிமேல் நடக்க இருப்பவை:

(لا تقوم الساعة حتى لا يحج البيت)

கஃபாவை ஹஜ் செய்ய யாரும் வரமாட்டார்கள் இப்படியொரு காலம் வந்தால் அது கியாமத்தின் அடையாளமாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

- ثم فتح بيت المقدس

பைத்துல் முகத்தஸின் இறுதி வெற்றியும் இன்ஷா அல்லாஹ் இனி வரும் காலத்தில் நடைபெறும் அடையாளமாகும்.
இதுபோன்று இன்னும் ஏராளம் உண்டு.

கியாமத்தின் பெரிய அடையாளங்கள் 10:

روى الإمام مسلم رحمه الله من حديث حذيفة بن أسيد الغفاري رضي الله عنه أنه قال: اطلع النبي  علينا ونحن نتذاكر فقال: ((ما تذاكرون؟)) قالوا: نذكر الساعة، قال: ((إنها لن تقوم حتى تروا قبلها عشر آيات))، فذكر ((الدخان، والدجال، والدابة، وطلوع الشمس من مغربها، ونزول عيسى عليه السلام، ويأجوج ومأجوج، وثلاثة خسوف: خسف بالمشرق، وخسف بالمغرب، وخسف بجزيرة العرب، وآخر ذلك نار تخرج من اليمن تطرد الناس إلى محشرهم

ஹழ்ரத் ஹுதைபா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது எங்களிடம் வந்த நபி ஸல் அவர்கள்-எதைபற்றி பேசிக்கொள்கிறீர்கள்?என வினவினார்கள்-கியாமத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று பதில் கூறியபோது  அதற்கு முன்பு 10 அடையாளங்களை காண்பீர்கள்.என்று கூறினார்கள்.
1.புகை மூட்டம்   2.தஜ்ஜாலின் வருகை   3. தாப்பத் எனும் மிருகம் வெளிப்படுவது   4. சூரியன் மேற்கிலிருந்து உதயமாகுதல்  5.ஈஸா அலை அவர்களின் வருகை  6.யஃஜூஜ் மஃஜூஜ் வருகை  7.8.9.மூன்று நில நடுக்கம் (கிழக்கில் மேற்கில்.அரேபிய தீபகற்பத்தில்) ஏற்படுதல்.  10. யமன் தேசத்திலிருந்து ஒரு நெருப்பு மக்களை விரட்டும்.

இறுதியாக இன்ஷா அல்லாஹ் ஒரு நாள் இந்த உலகம் அழியத்தான் போகிறது,அந்த நாள் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் அறிவுக்கு மட்டுமே சொந்தம்.இந்த மனித சமுதாயத்திற்கு சவால்:

إِنَّ اللَّـهَ عِندَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ ۖ وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّـهَ عَلِيمٌ خَبِيرٌ

நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.