ரமலான் நோன்பின் முடிவில் இறைவன் நோன்பின் நோக்கம் தக்வா என்றும். அதுபோல் குர்பானியிலும் உங்களின்
இறையச்சமே என்னிடம் வரும் என்கிறான் இந்த அடிப்படையில் இரு பெருநாட்களுக்கும்
இடையில் தொடர்பு உள்ளது..
பக்ரீத் பெருநாள் அன்று அடியான் செய்யும் அமல்களில் மிக
உயர்ந்தது குர்பானி கொடுப்பதாகும் அந்த குர்பானியை நாம் அறிவோம் .
لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ
التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا
هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ
குர்பானி பிராணியின் மாமிசங்களோ அதன் உதிரங்களோ ஒருபோதும் இறைவனை அடைவதில்லை
என்றாலும் உங்களின் இறையச்சம் தான் அவனை அடையும் - 22:37.
அல்லாஹ் மேலும்
கூறுகிறான்.
وفديناه بذبح عظيم
'எனவே நாம் ஒரு மகத்தான
பலியைக் கொண்டு அவருக்கு பகரமாக்கினோம்' –அல்-குர்ஆன் 37:107
، عن أبي هريرة مرفوعا: "من وجد سَعَة فلم يُضَحِّ، فلا يقربن
مُصَلانا
உள்ஹியா கொடுக்க வசதி இருந்தும் உள்ஹியா
கொடுக்காதவன் நமது தொழும் இடத்திற்கு
வரவேண்டாம் (இறைவனின்
அருளை பெறுவதற்காக..) என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
நம்
நபியும் குர்பானியும்.
தன் வீட்டில் விளக்கு எறிப்பதற்கு கூட வசதியில்லாமல் இருந்த. பல நாட்கள் தானும். தன் மனைவிமக்களும் சாப்பிடாமல் இருந்த
நபி ஸல் அவர்கள்
وقال ابن عمر: أقام رسول الله صلى الله عليه وسلم عشر سنين يضحي. رواه الترمذي
மதீனாவில் இருந்த பத்து ஆண்டுகளும் குர்பானி
கொடுத்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் அவர்களுடைய 100 ஒட்டகத்தில் 63 ஒட்டகைகளை தன் கரத்தால் குர்பானி
கொடுத்துள்ளார்கள். மீதத்தை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்து அறுக்கும் படி
கூறினார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத்துண்டுகளை
சமைத்து சாப்பிட்டதாக இடம் பெற்றுள்ளது. நூல் : முஸ்லிம் (2137
குர்பானி
பிராணி மறுமையில் நம்முடைய வாகனம்.அந்த வாகனத்தை அழகு படுத்துவோம்.
قال رسول الله صلى الله عليه وسلم « استشرفوا ضحاياكم فانها على الصراط
مطاياكم
குர்பானி
பிராணிகளில் உயர்வானதை கொடுங்கள். ஏனென்றால் அது மறுமையின் வாகனம்.என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : தப்ஸீர்.هميان
الزاد
நம்முடைய குர்பானி பிராணி
சொர்க்கத்தில் மேய்க்கப்படுகிறது.
قال ابن عباس: هو الكبش الذي تقرب به هابيل، وكان في الجنة يرعى حتى
فدى الله به
إسماعيل.
وعنه أيضا: أنه كبش أرسله الله من الجنة كان قد رعى في الجنة أربعين
خريفا.
அல்லாஹ் ஹாபிலுடைய ஆட்டை ஏற்றுக் கொண்டான் அதை சொர்க்கத்தில் 40 வருடங்கள் பாதுகாத்தான்
அந்த ஆட்டைத்தான்
இப்ராஹிம் நபி (அலை) அவர்கள். இஸ்மாயில் (அலை)
அவர்களுக்கு பகரமாக பலியிட்டார்கள் - நூல் :
(தப்ஸீர் - இப்னு கஸீர் ).
குர்பானி கொடுக்கும் நடைமுறை ஆதி
மனிதர் ஆதம் நபி (அலை) அவர்களின் காலம் தொட்டே பாரம்பரியமாக இருந்து வருகிறது ..
மணமாக்க வேண்டிய காரியத்தை
மனதில் ரணமாக்கி மண்ணை இரத்த களமாக்கிய உலகின் முதல் குர்பானியும் அதன் வரலாறும் ..
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقّ إِذْ قَرّبَا
قُرْبَاناً فَتُقُبّلَ مِن أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبّلْ مِنَ الاَخَرِ.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ். இப்னு மஸ்ஊத் (ரலி)
அவர்கள் இருவரும் அறிவிக்கிறார்கள் ..
ஆதம் (அலை) அவர்களுக்கு ஒவ்வொரு சூலிலும் ஒரு ஆண் குழந்தையும். ஒரு பெண் குழந்தையும். பிறக்கும் முதல்
பிரசவத்தில் பிறக்கும் ஆணுக்கு மறு பிரசவத்தில் பிறக்கும் பெண்ணையும். மறு பிரசவத்தில் பிறக்கும் ஆணுக்கு முதல் பிரசவத்தில்
பிறந்த பெண்ணையும் ஆதம் நபி (அலை) அவர்கள் திருமணம் செய்து வைப்பார்கள்
மூத்தவரான காபிலுடன்
இக்லீமா என்ற பெண்ணும் ஹாபிளுடன் லுபூதா என்ற பெண்ணும் பிறந்தனர் இக்லீமா மிக
அழகாகவும் லுபூதா அழகு குறைந்தவலாகவும் இருந்தார்கள் மரபின் அடிப்படையில் ஹாபில்
காபிளிடம் இக்லீமாவை தனக்கு
நிக்காஹ் செய்து வைக்குடிபம் கேட்டார் காபில் மறுத்தான் தந்தை ஆதம் நபி (அலை) அவர்கள் சொல்லியும் அவன்
கேட்கவில்லை எனவே இருவரிடமும் இறைவனுக்கு குர்பானி
கொடுக்கும் படியும். குர்பானி ஏற்கப்படுபவருக்கு இக்லீமாவை நிக்காஹ் செய்து வைக்கும்படியும் ஆதம் நபி
(அலை) அவர்கள் சொன்னார்கள்
அதன் அடிப்படையில் ஆடுமேப்பாளரான ஹாபில் அழகான கொளுத்த தரமான செம்மறி ஆட்டை மன
நிறைவோடும் இறையச்சத்தோடும் காணிக்கை செலுத்தினார்.விவசாயியான காபில் தொலியும் உம்மியும் கலந்த மட்டமான தானியங்களை வெறுப்புடன் காணிக்கை
செலுத்தினார் இறையச்சம் நிறைந்த ஹாபிளின் குர்பானியை ஏற்று. காபிலின் குர்பானியை இறைவன் மறுத்தான். எனவே அதன் காரணமாக ஹாபிலை காபில் கொன்றான்
நூல் :
(தப்ஸீர் - இப்னு கஸீர் )
ஏற்றுக்கொள்ளப்பட்ட
குர்பானி தரும் சிறப்புகள் .
எந்த மனிதன் மன நிறைவோடும் நன்மையை நாடியும் குர்பானி கொடுகின்றானோ அவனுக்கு அது நரகத்தை விட்டும்
தடையாக அமையும் - நூல் : தப்ரானி
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அறிந்து கொள்ளுங்கள் நிச்சயமாக
குர்பானி அது உடையவனை
மறுமையின் எல்லா தீங்குகளைவிட்டுப் பாதுகாக்கும்
நூல் : நுஸ்ஹதுல்மஜாலிஸ்
عن عمران بن حصين قال :
قال رسول الله صلى الله عليه وسلم : « يا فاطمة قومي فاشهدي أضحيتك ، فإنه يغفر لك
بأول قطرة تقطر من دمها كل ذنب عملتيه ، وقولي : إن صلاتي ونسكي ومحياي ومماتي لله
رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين » ، قلت : يا رسول الله هذا
لك ولأهل بيتك خاصة ، فأهل ذلك أنتم ، أم للمسلمين عامة ؟ ، قال : « بل للمسلمين
عامة » . قال الإمام أحمد رحمه الله : « هذا والذي قبله والأحاديث الأربعة التي
قبله وقبل أثر علي رضي الله عنه في أسانيدها مقال ، غير أني رأيت بعض علمائنا يذكر
أمثالها في فضائل الأعمال ، والله يعصمنا من الزلل والوبال »
ஃபாத்திமா ! எழு! உன்னுடைய பிராணியிடத்தில் ஆஜராகு! ஏனெனில் குர்பானி
பிராணியின் முதலாவது சொட்டு விழும்போதே உனது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு
விடுகின்றன. மேலும் இந்தப் பிராணி மறுமை நாளில் இதனுடைய இரத்தமும் மாமிசமும்
எழுபது மடங்கு கூடுதலாக கொண்டு வரப்படும். இதை உன்னுடைய மீஸானில் (நன்மைத்
தட்டில்) வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அபூசயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த பாக்கியம் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின்
குடும்பத்தினருக்குரியதா? அல்லது எல்லா மக்களுக்கும் உரியதா? எனக் கேட்டார்கள்.
முஹம்மதுடைய குடும்பத்திற்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானதுதான் என
பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அலீ (ரலி) மற்றும் இப்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்
: பைஹகீ (19161,19162)
தாவூது நபி (அலை) அவர்கள் இறைவனிடம் இறைவா குர்பானி
கொடுக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உம்மத்திற்கு நீ வழங்கும் நன்மை என்ன என்று
கேட்ட சமயத்தில் இறைவன் சொன்னான் குர்பானி பிராணியின் உடலில் உள்ள ஒவ்வொரு
முடிக்கும் பகரமாக 10 நன்மைகளை
வழங்கி 10 பாவங்களை
மன்னிப்பேன் - நூல்(அப்துல் காதிர் ஜிலானி குன்யா)
குர்பானியும் இறை அச்சமும்;
குர்பானியில் இறை அச்சம் மட்டுமே அல்லாஹ்வை
அடையும் எனவே முகஸ்துதி பெருமை கூடாத தக்வா அவசியம்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் சஹாபாக்களிடம் மறுமையில் நடக்கவிருக்கும் சம்பவம்
குறித்து சொன்னார்கள்
நாளை மறுமையில் ஒரு கூட்டம் எல்லோரையும் போன்று கப்ரில் இருந்து எழுப்பப்படுவார்கள். அவர்களுக்கு பறவைகளுக்கு
இருப்பதை போன்று இறக்கைகள் இருக்கும்.அவர்கள் பறந்து சொர்க்கம் சென்று அதனுடைய இன்ப வாழ்க்கை அனுபவிப்பர்.
அவர்களை சந்தித்து மலக்குகள் வியப்புடன் பேட்டி காண்பார்கள். விசாரணை-சிராத்துல்
முஸ்தகீம் பாலத்தில் நடப்பது, நரகத்தை பார்ப்பது இவை எல்லாம் உங்களுக்கு இல்லையா?அம்மக்கள் நாங்கள்
எதையும் பார்க்கவில்லை.
அல்லாஹ் நேரடியாக எங்களை சொர்கத்திற்கு அனுப்பிவிட்டபின் பேட்டி தொடர்கிறது; நீங்கள் எந்த நபியின்
உம்மத்-அவர்கள் நாங்கள் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் சமுதாயம் என்று கூறுவார்கள். நீங்கள் உலகில் செய்த
அமல்கள் யாவை?
எங்களிடம் இரு பண்புகள் இருந்தது அதைக்கொண்டும், அல்லாஹ்வின் அருளாலும்
நாங்கள் இந்த அந்தஸ்தை பெற்றோம். ஒன்று நாங்கள் தனிமையிலும் அல்லாஹ்வை நினைத்தோம்
எனவே பாவம் செய்ய வெட்க்கப்பட்டோம் பயந்தோம், இரண்டு உலகில் அல்லாஹ்
எங்களுக்கு செய்த பங்கீட்டை பொருந்திக்கொண்டோம் என்று சொல்வார்கள். - இஹ்யா உலூமுத்தீன் 4ம் பாகம்;
குர்பானியும் தர்மமும்;
அல்லாஹ் குர்பானி பற்றி கூறும்போது .
وَالْبُدْنَ جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ
اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ
فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ
وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ(36) سورة
الحج "
அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்!
(வறுமையிலும் கையேந்தாமல், இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப்போருக்கும்
உண்ணக் கொடுங்கள். (அல்குர்ஆன் 22 : 36)
எனவே குர்பானியில் மூன்றில் இரு பகுதியை மக்களுக்கு வழங்கிடுவது அவசியம்.
தாவூது நபி (அலை) அவர்களுக்கு ஒரு சாலிஹான வாலிபர் நண்பராக இருந்தார் .அவர் பற்றி ஒரு நாள் மலக்குள் மவ்த் தாவூது நபியிடம் உங்கள் நண்பர் 3 நாளில் மரணிப்பார் என்று கூறியபொழுது நபிக்கு அது மிகுந்த
வேதனையை ஏற்படுத்தியது இந்த நிலையில் 3 நாள் கழித்து அந்த வாலிபரை நல்ல நிலையில் தாவூத் (அலை)
அவர்கள் கண்டார்கள்.
மேலும் இத்துடன் ஒரு மாதமும் கடந்த வேலையில் இதை எண்ணி வியப்பும் , ஆச்சரியமும் அடைந்த போது .
மலக்குல் மவ்த் தாவூத் (அலை) அவர்களிடம் சொன்னார்கள் நான் 4 வது நாள் அவர் உயிரை கைப்பற்ற சென்றபொழுது அல்லாஹ்
என்னிடம் அவரை மவ்த்தாக்க
வேண்டாம்
ஏனெனில் அவர் மரணிக்க வேண்டிய நாளுக்கு முந்திய நாள் ஒரு மிஸ்கீனுக்கு 20 திர்ஹம் தர்மம் செய்தார். அவர் இவரின் ஆயுளின் பரக்கத்திற்கு துஆ செய்தார் எனவே ஒரு திர்ஹமிற்கு ஒரு வருடம் என்ற
அடிப்படையில் அவர் வயதில் 20 வருடங்களை அதிகமாக்கி
விட்டேன்
என்று கூறினான்.எனவே தான் அவர் ஆயுள் நீளமானது என்றார் - நூல் - (நுஸ்ஹதுள் மஜாலிஸ்)
இஸ்லாம் கூறுகின்ற முறையில்
உயிரினங்களை அறுப்பது.
عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ ثِنْتَانِ حَفِظْتُهُمَا عَنْ رَسُولِ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ
الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ
وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ
فَلْيُرِحْ ذَبِيحَتَهُ رواه مسلم
"எல்லாப் பொருட்களின் மீதும் நல்ல முறையில் நடந்து கொள்வதை அல்லாஹ்
கடமையாக்கியுள்ளான். நீங்கள் (கிஸாஸ் பழிக்குப் பழி வாங்கும் போது) கொலை செய்தால்
அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில்
அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக)
அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: ஷிதாத் இப்னு அவ்ஸ்(ரலி) நூற்கள்: முஸ்லிம் (3955), திர்மிதி(1329) நஸாயீ(4329), அபூதாவூத் (2432) இப்னுமாஜா (3161), அஹ்மது(16490) 3627
" مَرَّ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم بِرَجُلٍ يَشْحَذُ سِكِّينَهُ أَمَامَ الأُضْحِيَةِ، فَقَالَ: (( أَفَلاَ قَبْلَ هَذَا ؟ أَتُرِيدُ أَنْ تُمِيتَهَا مَوْتَـَتيْنِ، هَلاَّ حَدَدْتَ شَفْرَتَكَ قَبْلَ أَنْ تُضْجِعَهَا ؟)).
நபி ஸல் அவர்கள் ஒரு மனிதரை கடந்து
சென்றார்கள்.அவர் உள்ஹிய்யா பிராணிக்கு முன் கத்தியை
தீட்டிக்கொண்டிருந்தார்.அப்போது நபி ஸல் அவர்கள்,முன்னரே இதைச்செய்திருக்க
வேண்டாமா?அதற்கு
இரண்டு மரணத்தை கொடுக்கிறீரா?என கண்டித்தார்கள்
இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த
வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.
அசைவம் அவசியம்
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் பிக்கார்ட் ஸ்ட்ரார்ட்
போர்டில் கூறுகிறார் மாமிசம்
காய்கறிகள் இரண்டையும் உண்ணும் வகையைச் சேர்ந்தவனே மனிதன் அந்த உணவு பழக்கத்தை
தவிர்த்து சைவம் உணவை மட்டுமே சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு ஏனெனில் மாமிச
உணவை செரிமானம் செய்வதற்காகவே மனிதனின் குடல் பகுதியில் ஏராளமான பாக்டீரியாக்கள் இறைவனால்
படைக்கப்பட்டிருக்கின்றது எனவே நாம் இறைச்சி உண்ணாமல் இருந்தால் அவற்றிற்கு வேலை
இல்லாமல் போகும் அதனால் நோய் தோற்று ஏற்படும் சைவம் அசைவம் இருவகை உணவுகள் உண்ணும்
மனிதனுக்கு அதிக சக்தி கிடைகின்றது இன்னும் மாமிசத்தில் இருந்து இரும்பு சத்து
வைட்டமின், புரோட்டின், கொழுப்பு சத்து உள்ளிட பல சத்துக்கள் மனிதனுக்கு
கிடைக்கின்றன என்று பிக்கார்ட் குறிப்பிடுகிறார்
இஸ்லாத்தின்
குர்பானி கூடாது அதில் உயிர் வ தைஉள்ளது என்று கதைவிடும் கரை படிந்த
உள்ளங்களிடம் சில கேள்விகனைகள்
1. மனிதர்கள் உயிர் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில்
நமது நோய்களை
நீக்கும் மருந்துகளின் ஆராய்ச்சி க்காக லண்டனில் ஆண்டொன்றுக்கு - 50 லட்சம் மிருகங்களும் இன்னும் உலகின் பல்வேறு
மருந்து ஆய்வு கூடங்களில் பல கோடி மிருகங்கள் கொள்ளப்படுகிறது இதை தடை செய்வீர்களா?
2. காற்றை சுவாசிக்காமல் இருப்பீர்களா ஏனெனில்
நாம் சுவாசிக்கும் காற்றில் கூட கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணுயிர்கள் வாழ்ந்து கொண்டிருகின்றன
அவற்றை கொள்வதும் உயிர் வதை தானே.
3. மனிதர்களை தண்ணீர் குடிப்பதை விட்டும்
தடுக்கவேண்டும் ஏன் தெரியுமா? தண்ணீரிலும் நாம் அறியாத பல உயிர் கிருமிகள் வாழ்கின்றன இது
சாத்தியமா ?
4. தானியங்கள், காய்கறிகள் தரும் செடி, கொடிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் உயிர் இருப்பதாக இன்றைய விஞ்ஞானம்
சொல்கிறது. எனவே சைவம் சாப்பிடுவது அந்த உயிர் உள்ள தாவரங்களை வதைப்பதாக
ஆகாதா. இப்பொழுது சைவம் அசைவம் இரண்டையும் புறக்கணித்து எப்படி நாட்டில் வாழ்வீர்கள்
ஆள்வீர்கள்
5. பக்ரீத் பெருநாள் அன்று முஸ்லிம்கள்
இறைவனுக்காகவும் நாட்டில் உள்ள ஏழைகளின் வறுமையை
ஒழிப்பதற்காகவும் உலக நாடுகளில் பல கோடிக்கணக்கான அறுக்கப்படும் குர்பானிகளை உங்கள் கூற்றுப்படி தடை செய்து விட்டால் இன்னும் முஸ்லிம்கள் இறைச்சி சாப்பிடுவதையே புறக்கணித்து
விட்டால் உலகில் ஆடுகளும்,
மாடுகளும்
கட்டுக்கடங்காத அளவு தேங்கி விடுமே .அவ்வாறு தேங்கும் நேரத்தில்
அப் பிராணிகள்
வாழ்வதற்கு இடம் எங்கே காடுகளும், விவசாய நிலங்களும் அளிக்கப்படுகின்ற இந்த காலத்தில் அப்பிராணிகளின்
பசி நீங்க இலை , தலைகள் எங்கே கிடைக்கும்
இந்த
கேள்விகளுக்கு நீங்கள் என்று பதில் சொல்வீர்களோ அன்று நாங்கள் குர்பானி கொடுப்பதை
விட்டும் தவிர்ந்து கொள்வோம் ஆனால் உலகம்
உள்ள வரை அதுவும் நடக்க
போவதில்லை எனவே இதுவும் நடக்க போவதில்லை
நடைகளை அறுப்பது என்பது அந்த
கால்நடைகளை கொள்வதாக ஆகாது - மனு
சாஸ்திரம் : 5:39:40
ஜன்னத் தரும் சுன்னத்
அரபா நோன்பு
அரபா நாளில் நோன்பு நோற்கும் மனிதனுக்கு அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களுக்கு
வழங்கியது போன்ற நற்கூலியை வழங்குகிறான் - நூல் - (நுஸ்ஹதுள் மஜாலிஸ்)
அரபா தினத்தில் அடியான் கேட்கும் உலகம்
மற்றும் மறுமையின் எல்லா
தேவைகளையும் அல்லாஹ் நிறைவேற்றி
தருவான் - நூல் - (நுஸ்ஹதுள் மஜாலிஸ்)
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ
كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ
صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ
الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ
أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்திய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்திய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல் : முஸ்லிம் 1976
குர்பானியின் தத்துவம் இறைவா!
உனக்காக நான் எவரையும் எதையும் இழப்பேன். யாருக்காகவும், எதற்காகவும் உன்னை ஒரு போதும் இழக்கமாட்டேன். இதுவே நமது
வாழ்க்கையாகட்டும் அதற்கு அல்லாஹ் அருள்
புரிவானாக ! ஆமீன்
குர்பானியின் ஷரீஅத் சட்ட விளக்கங்கள்.
ஹிஜ்ரி 2-ம் வருடம் குர்பானி
கடமையாக்கப்பட்டது. ஹனபி மத்ஹபின் படி குர்பானி கொடுத்தல் வாஜிபாகும். இமாம் ஷாபிஈ
அவர்களிடத்தில் குர்பானி கொடுத்தல் சுன்னத்தே முஅக்கதாவாகும்.
குர்பானி யார் மீது கடமை?
இமாம் அபூஹனீபா
ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'தமது ஊரில் தங்கி
இருக்கக் கூடிய வசதியான அடிமைகளாக இல்லாத சுதந்திரமான முஸ்லிம்களின் மீது குர்பானி
கொடுத்தல் வாஜிபு' எனக் கூறுகின்றனர்.
குர்பானி கொடுக்கக்
கூடிய நபரின் பொருளாதார வசதியை இமாம்கள் 200 திர்ஹம் மாத வருமானம் உள்ளவர்கள் என நிர்ணயிக்கின்றனர்.
நூல்: அல் பிக்ஹு வல் மதாஹிபில் அர்பஆ..
நூல்: அல் பிக்ஹு வல் மதாஹிபில் அர்பஆ..
குர்பானி
கொடுப்பவர் 'துல்ஹஜ்மாதம்' பிறை
பார்த்ததிலிருந்து
குர்பானி கொடுக்கும் வரை தலைமுடி இறக்குவதோ, முடியை வெட்டுவதோ, நகம் தரிப்பதோ
சுடாது.
அறுக்கு முன் ஓத வேண்டிய துஆ
இன்னீ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ
பத்ரஸ் மாவாத்தி வல் அர்ழ ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரிகீன்.
இன்ன ஸலாத்தீ வ நுஸுக்கீ வ மஹ்யாய வ
மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீகலஹு வபி தாலிக்க உமிர்த்து வ அன மினல்
முஸ்லிமீன்.
மேற்கண்ட துஆவை
ஓதியபின் குர்பானியின் பிராணியை கிப்லாவின் பக்கம் முகம் இருக்குமாறு படுக்க வைத்த
அறுப்பவர் 'அல்லாஹும்ம லக வ
மின்க பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' என்று ஓதியபடியே
கூர்மையான கத்தியைக் கொண்டு விரைவாக மூன்று அறுப்பில் அறுத்து முடிக்க வேண்டும்.
பின்னர் அங்கு
நின்று கிப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்தி கீழ்காணும் துஆவை ஓத வேண்டும்.
அல்லாஹும்ம தகப்பல் மின்னீ கமா தகப்பல்த்த மின் கலீலிக்க
ஸையிதினா இப்றாஹிம வ மின் ஹபீபிக்க ஸையிதினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வ அலா
ஆலிஹீ வ அஸ்ஹாபிஹி வ பாரிக் வ ஸல்லிம்.
அடுத்தவருக்காக
அறுக்கும்போது,
அல்லாஹும்ம தகப்பல்
மின்னீ என்ற இடத்தில் மின் என்று கூறி பின்னர் குர்பானி கொடுப்பவரின் பெயரைக்
குறிப்பிட வேண்டும்.
ஆதாரம்: பதாவா ஆலம்கீரி, பஹாரே ஷரீஅத்.
குர்பானி கொடுக்கும் நேரம்
ஈதுல் ளுஹாவின்
ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சூரியன் உதயமான நேரத்திலிருந்து குர்பானி கொடுத்தல்
துவங்குகிறது.
பெருநாள் தொழுகையை
அடுத்து குத்பா ஓதி முடிந்தபின் குர்பானி கொடுத்தல் சிறந்ததாகும்.
நூல்: மிஷ்காத்.
நூல்: மிஷ்காத்.
தல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய மூன்று
நாட்களிலும் குர்பானி கொடுக்கலாம். இதில் குர்பானி கொடுக்க முதல் (பெரு) நாளே
சிறந்ததென ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலீ, ஹஜ்ரத் இப்னு
அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹும் போன்ற நபித் தோழர்கள் அறிவிக்கின்றனர்.
நூல்: ஹிதாயா.
குர்பானியில் வெறுக்கத்தக்கவை (மக்ரூஹ்)
1. அறுக்கும் போது தலை
துண்டாகி விடுதல்.
2. பிராணியை படுக்க
வைத்தபின் கத்தியை தீட்டுதல்.
3. கிப்லாவை
முன்னோக்கி படுக்க வைக்காமல் அறுத்தல்.
4. அறுக்கப்பட்டபின்
உயிர் முழுவதுமாக அடங்குமுன்பே தோலை உரித்தல்.
5. உயிர் நன்கு
பிரியுமுன் தலையை ஒடித்தல், துண்டித்தல்.
6. அறுக்கும்போது தேவையில்லாதவைகளை
செய்வதன் மூலம் பிராணிக்கு துன்பம் கொடுத்தல்.
7. ஒரு பிராணிக்கு
முன் மற்றொரு
பிராணியை அறுத்தல்.
குர்பானிக்கு தகுதியற்ற பிராணிகள்
குர்பானி
கொடுக்கப்படும் பிராணி குருடு, கண்பார்வை குறைந்தது, நடக்க முடியாதது, சொறி பிடித்தது, காது, வால் போன்றவை துண்டிக்கப்பட்டிருத்தல், ஆணுமற்ற பெண்ணுமற்ற
பிராணி போன்றவற்றை குர்பானி கொடுத்தல் கூடாது.
நூல்: ஹிதாயா, பதாவா ஆலம்கீரி.
قال النبي صلى الله عليه وسلم لعائشة عند تفريق
لحم الاضحية: (ابدئي بجارنا اليهودي).
குர்பானி இறைச்சியை பங்கு வைக்கும்போது நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா நாயகி(ரலி) அவர்களிடம் அண்டை வீட்டாரான யூதரிடம் இருந்து
ஆரம்பிப்பாயாக என்று கூறினார்கள்.
ஆரம்பிப்பாயாக என்று கூறினார்கள்.
وروي أن شاة ذبحت في أهل عبد الله بن عمرو فلما
جاء قال: أهديتم لجارنا اليهودي ؟ - ثلاث مرات –
இப்னு உமர்(ரலி) அவர்கள் தன் வீட்டில் ஆடு அறுக்கும்போது நம் அண்டை வீட்டார் யூதருக்கும் கொடுங்கள் என மூன்று முறை கூறினார்கள்.
உங்கள் உஸ்மானிகள ஆன் லைன் என்ற தோட்டத்தில் பூக்கும் மலர்கள் மகரந்த சேர்க்கைகு தகுதியானவைகள்
ReplyDeleteஈத் பெருநாள் அன்று எங்கள் ஊரில் குர்பானியின் பங்கு வைப்பது குறித்து பயான் செய்யும் பொழுது " குர்பானி இறைச்சியை முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டது. கொடுக்கலாம் என்று நான் சொன்னதற்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உங்கள் கட்டுரையில் யுதர்களுக்குக் கொடுக்கலாம் என்ற ஹதீஸை எழுதியுள்ளீர்கள், ஆனால் அந்த ஹதீஸின் ஆதார நூல்கள் கொடுக்கப்படவில்லை. ஆதார நூல் இல்லாததால்,உங்கள் கட்டுரையை நான் அவர்களிடம் காட்டமுடியவில்லை.தயவு செய்து உங்கள் கட்டுரைகளில் ஹதீஸ் ஆதாரத்தைக் குறிப்பிடவும். இல்லையெனில் உங்கள் கட்டுரை நீங்கள் நினைக்கும் பயனைத் தராது என்பது என் தாழ்மையான கருத்து. வஸ்ஸலாம். நஜுமுதீன்.
ReplyDeleteஅது அந்த காலத்தில் வாழ்ந்த வேதகாரர்கள் ஆனால் அந்த சட்டம் இப்போது பொருந்தாது காபிர்கள் சிலைவணக்கம் செய்பவர்கள் அது திம்மி காபிராக இருந்தாலும் சரி ஹர்பியாயினும் சரி கொடுக்கக் கூடாது
Deleteவேதகாரர்களுக்கு தரலாம் ஆனால் திம்மி காபிருக்கோ நம்நாட்டிலுள்ள ஹர்பி காஃபிர்களுக்கு கறியை தருவது கூடாது
ReplyDeleteநம் நாட்டில் உள்ள அனைவரும் ஹர்பி காபிரா?
Deleteநமது நாட்டில் உள்ள இந்து சகோ தர்களுக்கு குடுக்கலமா..?
ReplyDeleteஆம் தாராலமாக கொடுக்கலாம்.
ReplyDeleteplz contact 9942407358
ReplyDeletealhamthu lillah
ReplyDeleteSuperb
ReplyDelete