Monday 14 October 2013

படைத்தவனை சந்தோஷப்படுத்துவோம்.



நம்முடைய வாழ்நாளில் நாம் எத்தனையோ தியாகத் திருநாளை கொண்டாடி இருக்கிறோம்.
 தியாக வரலாறுகளையும் கேட்டுக்கொண்டிருக்
கிறோம்.நம்முடைய மனதில் என்றாவது உருத்தல் ஏற்பட்டிருக்கிறதா.?நாம் படைத்தவனுக்காக என்ன தியாகம் செய்தோம்.?
தியாகத் திருநாள் சந்தோசத்துக்கு மட்டும்தானா?.
அல்லது புத்தாடை அணிவதற்காகத்தானா.? இந்த நாளில் இருந்து நாம் பாடம் பெற வேண்டாமா.? படிப்பினை பெற வேண்டாமா.?

 எத்தனை படிப்பினைகள் இந்திருநாளில் மறைந்திருக்கிறது. எத்தனை மனிதர்களின் தியாகம் மறைந்துயிருக்கிறது எண்ணி பார்க்க வேண்டாமா. அவர்களின் தியாகத்தால்தான் இஸ்லாம்  இன்றும் வாழ்கிறது. வளர்கிறது. வளர்ந்துகொண்டிருக்கிறது..

 அவர்களின் வாழ்வை மனிதர்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே அந்த நாட்களை அல்லாஹ் பெருநாளாகவே ஆக்கிவிட்டான்  எனவே இந்த தியாகத் திருநாள் நமக்கு சொல்லக்கூடிய பாடம் என்ன? படிப்பினை என்ன என்பதை பார்ப்போம்.

தியாகத்திருநாள் தரக்கூடிய முதல் படிப்பினை..
படைத்தவனை காதலிப்போம். படைத்தவனை சந்தோஷபடுத்துவோம்.
படைத்தவனுக்கு முன்னுரிமை கொடுப்போம்.

நமக்கு கொஞ்ச நேரம் சுகம் தரக்கூடிய நம் அன்பிற்குரிய மனைவி.மக்களை சந்தோசபடுத்துவதற்காக எத்தனை சிரமங்கள். எத்தனை அவமானங்களை தினம் தினம் சந்திக்கிறோம். ஆனால் அந்த அழகான மனைவியை. அன்பான குழந்தைகளை. அலங்காரமான வீட்டை. ஆடம்பரமான வாகனத்தை கொடுத்து நம்மை சந்தோஷ படுத்திபார்க்க கூடிய நம்மீது உண்மையான அன்பு கொண்ட  அல்லாஹ்விற்காக கொஞ்ச நேரம்கொடுக்க கூட நாம் தயாரில்லை. ஏன் நமக்கு நம்மனைவியின் மீது வைத்திருக்கும் அன்பு.காதல் அல்லாஹ்வின் மீது இல்லை. ஆனால் நம்முன்னோர்கள் மனைவி. மக்களை நேசித்தார்கள்.
அல்லாஹ்வையும் நேசித்தார்கள்.ஆனால் முன்னுரிமை அல்லாஹ்வுக்கே கொடுத்தார்கள். அதற்கு அழகான உதாரணமாக இருக்க கூடியவர்தான் இந்த திருநாளுக்கு காரணகர்த்தவான இப்ராஹிம் நபி அவர்கள்.

அவர் மனைவி. மக்களை நேசித்தார்.
அல்லாஹ்வையும் நேசித்தார். முன்னுரிமை அல்லாஹ்வுக்கே கொடுத்தார் ஏன் அல்லாஹ்வின் மீது வைத்த அளவிடமுடியாத அன்புதான் காரணம்...
 இன்னும் படைத்தவனை எப்படி சந்தோசப்படுத்தலாம் என்று ஏங்கி தவித்துக்கொண்டிருக்க கூடிய உள்ளங்களுக்கு சொந்தக்காரர்களான சிலருடைய வாழ்வை பார்ப்போம்..

அல்லாஹ் நம்முடைய நபிக்கு  தாஹா என்ற அழகான பெயர் சூட்டினான். அதற்கு இப்படியும் ஒரு அர்த்தம் சொல்லப்படுகிறது. ஒற்றை காலில் நின்று தொழக்கூடியவரே. அதற்கு காரணம் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை சந்தோசப்படுத்த எடுத்துக்கொண்ட சிரமம்தான் காரணம்..

 الربيع بن أنس قال: كان النبي صلى الله عليه وسلم إذا صلى قام على رجل ورفع الأخرى، فأنزل الله تعالى { طه } ، يعني: طأ الأرض يا محمد، { مَا أَنزلْنَا عَلَيْكَ
الْقُرْآنَ لِتَشْقَى
}.
ரபீஆ இப்னு அனஸ்(ரலி) அவர்கள். கூறுகிறார்கள். நபி (ஸல்)அவர்கள் தொழுதால் ஒருகாலின்மீது நிற்பார்கள். இன்னொரு காலை உயர்த்திக்கொள்வார்கள். அப்போது அல்லாஹ்   பின் வரும் வசனத்தை இறக்கிவைத்தான். ஒற்றை காலில் நின்று தொழக்கூடியவரே.நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.
நூல். இப்0னு கஸீர்.

அல்லாஹ்வே இறக்கம்படும் அளவிற்கு  நாயகம் தொழுதிருக்கிறார்கள். அல்லாஹ்வை சந்தோசப்படுத்துவதற்காக..

وقال في عيون المجالس أن عائشة كانت إذا تصدقت بدرهم طيبته فسألها النبي صلى الله عليه وسلم عن ذلك فقالت يا نبي الله أحببت أن يكون درهمي مطيبا لأنه يقع في يد الله قبل يد السائل فقال لقد وفقك الله يا عائشة.
யிஷா (ரலி) அவர்கள் தர்மம் செய்யும்போது நறுமனத்தை தடவி தர்மம் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு காரணம் கேட்டபோது யாரசூல ல்லாஹ் நாம் செய்யக்கூடிய தர்மம் யாசகருடைய கையில் விழுவதற்கு முன் அல்லாஹ்வுடைய கையில் விழுவதால் . அல்லாஹ்வுடைய கையில் விழக்கூடிய தர்மம் நறுமணமானதாக இருக்க நான் விரும்புகிறேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னபோது  நாயகம் (ஸல்)அவர்கள் அல்லாஹ் உனக்கு கிருபை செய்வானாக என துஆ செய்தார்கள்.
நூல். نزهة المجالس .பக்கம்.334


قَالَ ابْنُ إسْحَاقَ : وَحَدّثَنِي حِبّانُ بْنُ وَاسِعِ بْنِ حِبّانَ عَنْ أَشْيَاخٍ مِنْ قَوْمِهِ أَنّ رَسُولَ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ عَدّلَ صُفُوفَ أَصْحَابِهِ يَوْمَ بَدْرٍ ، وَفِي يَدِهِ قِدْحٌ يُعَدّلُ بِهِ الْقَوْمَ فَمَرّ بِسَوَادِ بْنِ غَزِيّةَ حَلِيفِ بَنِي عَدِيّ بْنِ النّجّارِ - قَالَ ابْنُ هِشَامٍ : يُقَالُ سَوّادٌ مُثَقّلَةٌ وَسَوَادٌ فِي الْأَنْصَارِ غَيْرُ هَذَا ، مُخَفّفٌ - وَهُوَ مُسْتَنْتِلٌ مِنْ الصّفّ - قَالَ ابْنُ هِشَامٍ : وَيُقَالُ مُسْتَنْصِلٌ مِنْ الصّفّ - فَطُعِنَ فِي بَطْنِهِ بِالْقِدْحِ وَقَالَ اسْتَوِ يَا سَوّادُ فَقَالَ يَا رَسُولَ اللّهِ أَوْجَعْتنِي وَقَدْ بَعَثَك اللّهُ بِالْحَقّ وَالْعَدْلِ قَالَ فَأَقِدْنِي . فَكَشَفَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ عَنْ بَطْنِهِ وَقَالَ اسْتَقِدْ قَالَ فَاعْتَنَقَهُ فَقَبّلَ بَطْنَهُ فَقَالَ مَا حَمَلَك عَلَى هَذَا يَا سَوّادُ ؟ قَالَ يَا رَسُولَ اللّهَ حَضَرَ مَا تَرَى ، فَأَرَدْتُ أَنْ يَكُونَ آخِرُ الْعَهْدِ بِك أَنْ يَمَسّ جِلْدِي 

جِلْدَك . فَدَعَا لَهُ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ بِخَيْرِ

பத்ரு போருக்காக நாயகம் அவர்கள் அணியை சரிசெய்தபோது சவ்வாத்(ரலி)அவர்கள் அணியை விட்டும் விலகி நின்றார்கள்.அப்போது நாயகம்(ஸல்)அவர்கள் தன் கையில் வைத்திருந்த அம்பால் அவருடைய வயிற்றில் குத்தினார்கள். உடனே சவ்வாத்(ரலி) அவர்கள் யாரசூலல்லாஹ் நீங்கள் அம்பால் குத்தியது எனக்கு வழியை ஏற்படுத்தியது. எனவே உங்களை பழி வாங்க விரும்புகிறேன். உங்களுடைய மேலாடயை கலட்டுங்கள் என்றார்.
கருணையே உருவான நாயகம் அவர்கள் தன் மேலாடயை  கலற்றியதும் சவ்வாத்(ரலி) அவர்கள், நாயகத்தை கட்டியனைத்து நாயகத்தின் மேனியில் முத்தமிட்டார்கள். நாயகம் அதற்கு காரணம் கேட்டபோது யாரசூலல்லாஹ் இந்த போர்களம், என் வாழ்நாளின் இறுதியாக இருக்கலாம் எனவே என் வாழ்வின் இறுதி உங்களின் மேனியை தொட்டதாக இருக்கட்டுமே எனபதற்காக இவ்வாறு செய்தேன் என்று சொன்னபோது நாயகம்(ஸல்)அவர்கள் அவருக்காக துஆ செய்தார்கள். நூல். سيرة ابْنُ هِشَامٍ.

தியாகத்திருநாள் தரக்கூடிய இரண்டாவது

படிப்பினை

நாம் அல்லாஹ்வை சந்தோசப்படுத்தினால்

அல்லாஹ் நம்மை பன் மடங்கு

சந்தோசப்படுத்துவான்.அந்த சந்தோசத்துக்கு

நிகரில்லை.
.
இப்ராஹிம் நபி செய்த தியாகத்தால் அவர்களின் புகழை கியாமத் வரை மனிதர்களின் நாவில் வருவதை அல்லாஹ் விதியாக்கிவிட்டான்.
தொழுகையில் ஸலவாத்தைப் போல.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

இப்ராஹிம் நபி மனைவி ஹாஜரா (அலை) அவர்கள் செய்த தியாகத்தால் அவர்கள் தண்ணீர் தேடி ஓடிய சாதரண ஓட்டத்தை இந்த உம்மத்துக்கு ஹஜ் செய்யும் போது அந்த தொங்கோட்டத்தை கியாமத் வரை கடமையான ஓட்டமாக ஆக்கிவிட்டான்.
இப்ராஹிம்(அலை)அவர்களின் மகனார் இஸ்மாயில்(அலை)அவர்கள் செய்த தியாகத்தால் அவர்களின் பாதத்தில் இருந்து வெளிப்பட்ட தண்ணீரை புனித மான ஸம்ஸம் நீராக ஆக்கிவிட்டான்.
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَرْحَمُ اللَّهُ أُمَّ إِسْمَاعِيلَ لَوْلَا أَنَّهَا عَجِلَتْ لَكَانَ زَمْزَمُ عَيْنًا مَعِينًا

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அல்லாஹ் இஸ்மாயீலின் தாயார்(ஹாஜ)ருக்குக் கருணைபுரியட்டும். அவர்கள் மட்டும் (இறையருளால் பொங்கி வந்த 'ஸம் ஸம்' நீரை அள்ளி எடுத்துத் தம் தோல் பையில் வைக்க) அவசரப்பட்டிருக்காவிட்டால் 'ஸம்ஸம்' (கிணறு, பூமியின் மேற்பரப்பில்) ஓடிக் கொண்டிருக்கும் ஓர் ஊற்றாக ஆகிவிட்டிருக்கும்.  என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நூல். புகாரி. 3362

சுலைமான் நபி செய்த தியாகத்தால் அவர்களை காற்றில் பறக்க வைத்தான்.
وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ وَمِنَ الْجِنِّ مَنْ يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ وَمَنْ يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ


இந்த ஆயத்துக்கு விளக்கம் கூறும்போது

முபஸ்ஸிரீன்கள் இவ்வாறு விளக்கம்

தருகிறார்கள்.


عن الحسن رضي الله عنه قال : إن سليمان عليه السلام لما شغلته الخيل فأتته صلاة العصر غضب لله ، فعقر الخيل ، فأبدله الله مكانها خيراً منها ، وأسرع الريح تجري بأمره كيف شاء ، فكان غُدُوُّها شهراً ، ورواحها شهراً
عن إبراهيم التيمي قال: كانت الخيل التي شغلت سليمان، عليه الصلاة والسلام عشرين ألف فرس، فعقرها.
عن عوف رضي الله عنه قال : بلغني أن الخيل التي عقر سليمان عليه السلام كانت خيلاً ذات أجنحة ، أخرجت له من البحر ، لم تكن لأحد قبله ولا بعده



ஒரு முறை சுலைமான் (அலை)அவர்களுக்கு 

யாருக்கும் வளங்கிடாத இறைக்க உள்ள 20

ஆயிரம் கடல் குதிரைகளை அல்லாஹ் 


கொடுத்தான்.அதை ஆச்சரியத்தோடு 

பார்வையிட்டதிலயே அஸர் நேரத்தொழுகை 

தவரிப்போனது. அதனால் தொழுகை 

தவறிப்போக காரணமான 20 ஆயிரம் 

குதிரைகளையும் அல்லாவுக்காக கோபப்பட்டு 


குர்பானி கொடுத்து விடுவார்கள். அவருடைய 

தியாகத்திற்கு பகரமாக அல்லாஹ் காற்றை 

வசப்படுத்திகொடுத்தான்.

அய்யூப் நபி செய்த தியாகத்தால் அல்லாஹ் அவர்களை தங்கத்தால் குளிக்க வைத்தான்.

وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ

பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் 

அறிவுடையயோருக்கு நினைவூட்டுதலாகவும் 

அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் 

போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் 

குடும்பமாகக்) கொடுத்தோம்.


இந்த ஆயத்துக்கு விளக்கம் தரும்போது கீழ் 

வரும் ஹதீஸை முபஸ்ஸிரீன்கள் 

கொண்டுவருவார்கள். அய்யூப் (அலை

அவர்கள் அல்லாஹ்விற்காக கடுமையான 

நோயை 17 

ஆண்டுகள் பொறுத்துகொண்டதால் அல்லாஹ் 

அதற்கு பகரமாக நிகரில்லாத பாக்கியங்களை 


கொடுத்தான் என்பதை காட்டுவதற்காக.


وقال الإمام أحمد: حدثنا عبد الرزاق حدثنا مَعْمَر عن همام بن مُنَبِّه قال: هذا ما حدثنا  أبو هري

رة قال: قال رسول الله صلى الله عليه وسلم: "بينما أيوب يغتسل عريانا خر عليه جراد من ذهب فجعل أيوب يحثو في ثوبه فناداه ربه يا أيوب ألم أكن أغنيتك عما ترى؟ قال: بلى يا رب ولكن لا غنى بي عن بركتك
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அய்யூப்(அலை) அவர்கள் தங்களின் ஆடை முழுவதையும் களைந்துவிட்டு குளித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளி  வந்து விழுந்தது. உடனே, அவர்கள் அதைத் தம் துணியில் எடுக்கலானார்கள். அப்போது அவர்களின் இறைவன் (அவர்களை) அழைத்து, 'அய்யூபே! நீங்கள் பார்க்கிற இச்செல்வம் உங்களுக்குத் தேவையில்லை என்ற நிலையில் நான் உங்களை (போதிய செல்வமுடையவராக) வைத்திருக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு அவர்கள், 'ஆம்; (உண்மை தான்.) என் இறைவா! ஆயினும், உன் அருள்வளம் எனக்குத் தேவைப்படுகிறதே!" என்று பதிலளித்தார்கள்.
நூல். அஹ்மத். தப்ஸீர் தபரி.
அன்பிற்குரிய முஃமின்களே, அல்லாஹ் இந்த தியாகத்திருநாள் மூலமாக பெறப்படும் படிப்பினைகளை நம்முடைய வாழ்வில் கடைபிடித்து வாழும் பாக்கியத்தையும். அதனால் அல்லாஹ்வை சந்தோசப்படுத்தி பார்க்கும் எண்ணத்தையும் அல்லாஹ் நம் எல்லோருக்கு தருவானாக. ஆமீன்.
முக்கிய அறிவிப்பு.
அஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ். அன்பிற்குரிய உலமா பெருமக்களே. சென்னை, பாலவாக்கத்தில் உஸ்மானிகள் பேரவை சார்பாக ஒருநாள் ஷரீஅத் மாநாடு கடந்த 22.09.13 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாடு நிகழ்வு இன்ஷா அல்லாஹ் வருகிற தியாகத்திருநாள் அன்று மதியம் 2 மணி முதல் 4 மணிவரை மூன் டி.வியில் ஒலிபரப்பப்படும் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஜூம்ஆ பயான்  வரும் வியாழன் மாலை வெளியிடப்படும் என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறோம். இப்படிக்கு உஸ்மானி பேரவை.

Top of Form


2 comments: