நாடாளும் அரசன் முதல் வீடாளும் சாமானியன் வரை இன்று அனைவராலும் தேடப்படும் ஒன்று நிம்மதியும் அமைதியுமாகும் - இஸ்லாம் சோதனைகளுக்கான காரணங்களையும் நிம்மதிகளுக்கான வழிகளையும் சொல்கிறது.
அல்லாஹ் குர்ஆனில்.
وَمَا أَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَفْسِك
உனக்கு ஏற்பட்ட தீமைகளுக்கு நீயே காரணம் (நீ செய்த பாவங்கள்) என்றான்.
மன அமைதிக்கான வழிகள்.
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا
عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي
مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ
<khd;
nfhz;ltHfNs! fyg;gw;w (kdNjhL) my;yh`;tplk; jt;gh nra;J>
ghtkd;dpg;Gg; ngWq;fs; cq;fs; ,iwtd; cq;fs; ghtq;fis cq;fis tpl;Lg;
Nghf;fp
cq;fisr; Rtdr; Nrhiyfspy; gpuNtrpf;fr;nra;thd;
.
மனிதன் பாவங்களை விடாத வரை இறைவனின் சாபங்கள் அவனை விடாது.
இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் - நாம் பெற வேண்டிய பாடங்களில் ஒன்று பாவமன்னிப்பு தேடுவதாகும்.
وَالَّذِي
أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ
தீர்ப்பு நாள் அன்று அல்லாஹ் என் குற்றங்களை மன்னிப்பதை நான் ஆதரவு வைக்கிறேன் என்று நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் சொன்னார்கள்.
26:82
وَآَتَيْنَاهُ فِي الدُّنْيَا حَسَنَةً وَإِنَّهُ فِي الْآَخِرَةِ لَمِنَ
الصَّالِحِينَ
எப்படி பட்ட நபி என்றால் இவர்களைப் பற்றி இறைவன் திருமரையில்
وَإِنَّهُ
فِي الْآَخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ
மறுமையில் அவர் ஸாலிஹானவர்களில் ஒருவராக இருப்பார்.
என்று அல்லாஹ்வினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட இப்ராஹிம் (அலை) அவர்கள் பாவமன்னிப்பு தேடினார்கள் என்றால் நாம் பாவமன்னிப்பு தேடுவது எவ்வளவு முக்கியம்.
பாவங்களைவிட்டும் பாதுகாத்து இறை அச்சத்தை தரும் விஷயங்கள் நான்கு.
1. இறைவன் கண்காணிப்பில் நாம் வாழ்வதை நினைவில் கொள்வது.
وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
அல்லாஹ் கூறுகிறான் நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடன் இருக்கின்றான். அல்குர்ஆன் 57:4
இந்த வாழ்க்கையை தான் நபி (ஸல்) அவர்கள் சஹாபாக்களிடம் ஏற்படுத்தினார்கள்.
ويروى أن حبشياً قال: يا رسول الله إني كنت أعمل الفواحش فهل لي من توبة؟
قال: " نعم " ، فولى ثم رجع فقال: يا رسول الله أكان يراني وأنا أعملها؟
قال: " نعم " فصاح الحبشي صيحة خرجت فيها روحه.
நபி (ஸல்) அவர்களிடம் ஹபஷி இனத்தைச் சார்ந்த ஒரு தோழர் நான் வாழ்க்கையில் பல பாவங்களை செய்துவிட்டேன். இப்பொழுது தவ்பா செய்ய விரும்புகிறேன். என் தவ்பாவை இறைவன் ஏற்பானா?
என்றார். நபி (ஸல்) அவர்கள் இறைவன் ஏற்பான் என்றார்கள். இவ்வாறு கேட்டுவிட்டு திரும்பி சென்ற அவர் உடனே திரும்பி வந்து நான் பாவம் செய்த பொழுது அல்லாஹ் என்னை பார்த்தானா ?
என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள். உடனே இறையச்சம் மிகைத்து ஓங்கி ஒரு சப்தமிட்ட நிலையில் மவ்தாகி விட்டார்.
நூல் : இஹ்யா உலூமுத்தீன். 4
ம் பாகம்.
وكان عمر يطلب من الصبيان الإستغفار
உமர்(ரலி) அவர்கள் தன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட சிறுவர்களிடம் துஆ செய்ய சொல்வார்கள்.
وكان أبو هريرة يقول لغلمان الكتاب قولوا: )اللهم اغفر لأبى هريرة(.
فيؤمن على دعائهم.
ஹஜ்ரத்
அபூஹுரைரா(ரலி) அவர்கள் மதரஸா செல்லும் மாணவர்களிடம் யா
அல்லாஹ்அபூஹுரைராவை
மன்னிப்பாயாக என்று சொல்ல சொல்லி ஆமீன் கூறுவார்கள்.
2.ஈடு இணையற்ற இறைவன் வல்லமையும் - அவனின் விசாரனையையும் மனதில் நிலை நிறுத்துவது.
கியாமத்தில் 5 விஷயங்களப் பற்றி விசாரிக்கப்படும் வரை மனிதனின் பாதங்கள் நகராது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
அவன் வாழ்க்கையை எதில் அளித்தான். வாலிபத்தை எந்த ஒன்றில் வினாக்கினான். செல்வத்தை எப்படி சம்பாதித்தான். எப்படி செலவு செய்தான். அவன் கற்றுக் கொண்ட கல்வியில் என்ன அமல் செய்தான் என்று கேட்கப்படுவான்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்வூத் - நூல் . திர்மிதி
3)மரணத்தை நினைத்து வாழ்வது .
இமாம் கஸ்ஸாலி (ரஹ் ) சொன்னார்கள் மரணத்தின் நினவு மனிதனை மோசமான உலக வல்வை விட்டும் காப்பாற்றி மறுமை வாழ்வுக்காக தயார் படுத்தும் எனவே தான் இந்த சிறப்பு கிடைக்கும் என்றார்கள்.
4 வது விஷயம் நமக்கு இறைவன் வழங்கிய எண்ணற்ற அருட்கொடைகளை எண்ணி வாழ்வது
சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும் படி உன்னை ஏமாற்றியது எது? அவன் தான் உன்னைப் படைத்து உன்னை ஒழுங்குப்படுத்தினான் உன்னை செவ்வையாகினான்
எந்த வடிவத்தில் அவன் நாடினானோ அதில் உன் உறுப்புகளை இணைத்தான் 82:6,7,8,
இப்ராஹிம் இப்னு அத்ஹம் (ரஹ் ) அவர்களிடம் ஒரு வாலிபர் வருகை தந்து பாவங்களை விட்டும் தடுத்து உள்ளத்தை பரிசுத்தப் படுத்தக் கூடிய ஓர் சிறந்த உபதேசத்தை எனக்கு சொல்லுங்கள் என சொன்ன சமயத்தில் இப்ராஹிம்
இப்னு அத்ஹம் அவர்கள் நான் கூறும்ன் 5 விசயங்களை நீ கவனத்தில் கொண்டு வாழ்ந்தால் எல்லா பாவங்களைவிட்டும் பாதுகாக்க படுவாய். .
1.நீ இறைவனுக்கு மாறு செய்ய நாடினால் அவனுடைய ரிஸ்கை சாப்பிடாதே. அவர் சொன்னார் பூமியில் எல்லாமே அவனுடைய ரிஸ்க் தானே இந்த நிலையில் நான் எப்படி அவனுடைய உணவை உண்ணாமல் வாழ முடியும்?
எனக் கேட்டார். இப்னு
அத்ஹம் (ரஹ் )அவர்கள் . அவரிடம் இறைவனின் உணவை உண்ணும் நீ அந்த இறைவனுக்கு எதிராக வாழ்வது சரியா? நீ யோசிக்க வேண்டாமா என்று கேட்டார்கள்.
2. நீ அவனக்கு மாறு செய்ய நாடினால் அவனுடைய ஊர்களில் வாழாதே அந்த வாலிபர் கேட்டார். உலகில் எல்லா பகுதிகளிலும் அவனுடை ஊர்கள் தானே அவ் ஊர்களை
விட்டு நான் எங்கே வாழ முடியும்? மகான் அவனிடம் கேட்டார்கள் . அவனுடைய ஊரில் அவன் வழங்கிய வீட்டில் வாழ்ந்து கொண்டு குற்றம் புரிகின்றாயே உனக்கு நன்றி இருக்கின்றதா? என்று கேட்டார்கள்.
3.நீ அல்லாஹ்வுக்கு மாறு செய்ய எண்ணினால் அவனுக்கு நேர் பட்ட நிலையில் எந்த இடத்தில் அவன் உன்னை பார்க்க முடியாதோ அந்த இடத்தில் சென்று பாவம் செய் என்றார்கள் . அந்த வாலிபர் கேட்டான் இறைவன் எல்லா இடங்களையும் உற்று நோக்கிய நிலையில் அணைத்து ரகசியங்களையும் அறிந்தவனாக இருக்கின்றானே நான் எப்படி அவன் காணாத இடத்திற்கு போக முடியும்?
என்றார். மகான் அவனிடம் . அவன் பார்க்கின்றான் என்று தெரிந்தும் அவனுக்கு மாறு செய்ய உனக்கு எப்படி துணிச்சல் வந்தது என்று கேட்டார்கள்.
4.மலக்குல் மவ்த் உன் உயிரை கைப்பற்ற வரும்பொழுது நீ அவரிடம் தவ்பா செய்வதற்கும் சாலிஹான அமல் செய்வதற்கும் அவகாசம் கேள் என்றார். அதற்கு அவ் வாலிபர் அவ்வாறு கேட்க்க சாத்தியமில்லை என்றார்
இப்னு அத்ஹம் (ரஹ் ) அவரிடம் கேட்டார்கள். திடீர் மரணத்தை தடுக்கவும் முடியாது தள்ளிப் போடவும் முடியாது என்று தெரிந்தும் எப்படி உன்னால் எப்படி தீமை செய்ய முடிகிறது என்று கேட்டார்கள்.
5. கியாமத்தில் சபானியா மலக்குகள் உன்னை நரகத்திற்கு பிடித்து செல்வதற்காக வந்தால் நீ அவரிடம்
என்றார். அதற்கு அதற்கு அந்த வாலிபர் சொன்னார். அவர் என்னை கட்டாயமாக இழுத்து செல்வாரே ! நான் எப்படி நரகை விட்டும் தப்பிக்க முடியும் எனக் கேட்டார். இப்னு
அத்ஹம் (ரஹ் ) அவரிடம் பாவங்கள் நரகத்தை கட்டாயமாக்கும் என்பதை விளங்கியும் நீ தவறு செய்கின்றாயே இது சரிதானா அறிவார்ந்த செயல் தானா என்று சிந்தித்து பார் என்றார். இந்த அற்புதமான உபதேசத்தை கேட்டு திருந்திய அவ் வாலிபர் மரணம் வரை அந்த இறைநேசருடன் வாழ்ந்து பெரும் இறை நேசம் பெற்றார் - நூல் [கிதாபுத் தவ்வாபீன் ]
ஷைத்தானை விரட்டுவோம்
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நீங்கள் லாயிலாஹா
இல்லல்லாஹ்
என்ற திக்ரையும் இஸ்திஃபார்
செய்வதையும் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் இப்லீஸ் சொல்கின்றான் : நான் மக்களை பாவங்களில் ஈடுபடுத்தி அளிக்கின்றேன். அவர்கள் லாயிலாஹா இல்லல்லாஹ்
என்ற திக்ரை கொண்டும் இஸ்திஃபா ரை கொண்டும்
என்னை அளிக்கின்றனர்.
நூல் (தப்ஸீர் துர்ருல் மன்ஸு ர் )
இஃதிபார் செய்ய சிறந்த நேரம்
الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنفِقِينَ
وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ
3:17. (இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும்,
(இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.
عن أبي سعيد الخدري قال : بلغنا أن داود عليه السلام سأل جبريل عليه السلام
فقال : يا جبريل أي الليل أفضل؟ قال : يا داود ما أدري إلا أن العرش يهتز في السحر
தாவூத்(அலை)
அவர்கள் ஜிப்ரயீல்(அலை) அவர்களிடம் இரவில் சிறந்த பகுதி எது என்று கேட்டார்கள். அப்போது
ஜிப்ரயீல்(அலை) அவர்கள் அல்லாஹ்வுடைய சிம்மானம் ஸஹர் உடைய நேரத்தில் அசையும் அந்த நேரம்தான்
சிறந்த நேரம் என்றார்கள்.
عن أنس بن مالك قال « أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نستغفر بالأسحار
سبعين استغفارة
ஸஹர் நேரத்தில் 70தடவை
இஸ்திக்பார் செய்யும் படி நபி (ஸல் )அவர்கள் எங்களை ஏவினார்கள் என்று அனஸ் (ரலி )கூறினார்கள்.
(நூல் : தப்ஸீர் துர்ருல் மன்ஸு ர் )
பாவங்ளை உ டனடியாக போக்கும் துஆ
பாவம் புரிந்த ஒரு சஹாபி நபியின் சமூகத்திக்கு வந்து தான் செய்த பாவத்தை எண்ணி வேதனையை வெளிப்படுத்திய நிலையில் வந்தார் நபி (ஸல் ) அவருக்கு
உனது மன்னிப்பு எனது பாவங்ளை விட விசாலமானது என்றார்கள் என்று நல் அமல்களை விடவும் உனது ரஹ்மத்தே என்னிடம் மிக ஆதரவானது. இந்த துஆவை அவரை 3
தடவை ஓதும் படி நாயகம் (ஸல்) அவர்கள் சொல்ல அவரும் ஓதினார். உடனே நாயகம் (ஸல்) அவர்கள்
நீங்கள் எழுந்து செல்லுங்கள் உங்கள் பாவத்தை இறைவன் மன்னித்து விட்டான் என்றார்கள்.நூல். ஹயாதுஸ் ஸஹாபா
பாவிகளின் கண்ணீருக்கு இறைவன் கொடுத்த வலிமை
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
நாளை மறுமையில் என் சமுகத்தில் ஒரு பெரும் கூட்டத்தை மலை போல் உயர்ந்த நரக நெருப்பு அவர்களை அளிப்பதற்காக விரட்டிச் செல்லும் அவர்கள் என்னிடம் உதவி தேடுவார்கள் என்னால் அதை அணைக்க முடியாது அப்போது ஜிப்ரீல் (அலை) என்னிடம் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் தந்து
நாயகமே! இதிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து
அதை நெருப்பில் மீது தெளித்துவிடுங்கள் என்பார்கள். நானும் அவ்வாறு செய்வேன் உடனே அந் நெருப்பு அணைந்துவிடும் என் உம்மத் காப்பற்றப்படும். அப்போது நான் அவரிடம் இப்படி ஒரு தண்ணீரை நான் கண்டதில்லை. இது உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்பேன். அப்போது அவர் என்னிடம் இது தண்ணீர் அல்ல. மாறாக உங்கள் உம்மத்தில் பாவம் செய்தவர்கள் அல்லாஹ்வை பயந்து அழுதார்களே ! அவர்களின் கண்ணீர் என்று கூறுவார்கள்
நூல் : ( துர்ரதுன் நாஸிஹீன் )
இப்ராஹிம் தைமிய் (ரஹ் ) சொல்கிறார்கள். இரு விஷயங்கள் என்னை உலகின் இன்ப வாழ்வை விட்டும் துண்டித்து விட்டது.
1. மரணத்தின் நினைவு
2. இறைவனுக்கு முன்னாள் நிற்க வேண்டுமே என்ற உணர்வு என்றார்கள்.
நூல் : இஹ்யா உலூமுத்தீன்
இஸ்திஃபார் செய்தால் ஏற்படும் பயன்கள்
1) மகிழ்சியான ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.
2) சோதனைகளை விட்டும் பாதுகாப்பு கிடைக்கும்.
இமாம் முஹம்மது இப்னு ஜாபர் சொன்னார்கள். வானத்தில் இருந்து உலகில் எங்காவது இறைவனின் வேதனை இறங்கினால் பாவ மன்னிப்பு கேட்க கூடியவர்களை தவிர மற்ற எல்லோரையும் அது தாக்கும் என்றார்கள்.
وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ
ஏனென்றால் அல்லாஹ் குர்ஆனில் சொன்னான் நபியே நீங்கள் அவர்களிடம்
இருக்கும் வரையிலும் மேலும் அவர்கள் பாவ மன்னிப்பு தேடும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்
8:33.
3 வது பயன்.
ஹலாலான உணவும் சாலிஹான குழந்தைகளும் கிடைக்கும்.
فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ
غَفَّارً
يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا
(11) وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ
لَكُمْ أَنْهَارًا
நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பு தேடுங்கள் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன். அவன்
உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான் இன்னும் உங்களுக்கு பொருட்களை கொண்டும் பிள்ளைகளை கொண்டும் உதவி செய்வான் உங்களுக்காக தோட்டங்கள் உருவாக்குவான் ஆறுகளையும் உருவாக்குவான்.
நபி (ஸல்) சொன்னார்கள் ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் சொல்கின்றான்
நான் அடியானை பொருந்தி கொண்டால் என் பரக்கத்திற்கு முடிவு காலமே கிடையாது நான் கோபம் கொண்டால் சபிப்பேன். என் சாபம் 7-
வது தலைமுறை வரை செல்லும். நூல் : இப்னு ஹபீ சைபா
4 வது பயன்
பாவ மன்னிப்பு கிடைக்கும்
கியாமத்தில் தனது ஏடு தன்னை சந்தோஷப் படுத்த வேண்டும் என்று விரும்புபவர் இஸ்திக்பாரை அதிகப் படுத்தட்டும்.. நூல் தப்ரானீ
5வது பயன்..
வாழ்வின் அனைத்து கஷ்டங்களும் விலகும்..
عبد الله بن عباس ، عن النبي صلى الله عليه وسلم قال : « من أكثر من الاستغفار
، جعل الله له من كل هم فرجا ، ومن كل ضيق مخرجا ، ورزقه من حيث لا يحتسب
வாழ்வின் அனைத்து கஷ்டங்களும் விலகும்.. நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் எந்த மனிதன் பாவ மன்னிப்பு தேடுவதை அதிகப் படுத்தினானோ அவனுக்கு அல்லாஹ் எல்லா கவலைகளை விட்டும் விடுதலையையும் கஷ்டங்களை விட்டும் வெளியாகும் வழியையும் அவன் அறியாத புறத்தில் அவனுக்கு ரிஷ்க்கையும் வழங்குவான் நூல் இப்னு மாஜா
இறைவன் தீர்ப்பு நாள் அன்று அல்லாஹ் என் குற்றங்களை மன்னிப்பதை நான் ஆதரவு வைக்கிறேன் என்று நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் சொன்னதை கவனத்தில் கொண்டு நாம் இன்று முதல் என்றும் பாவம் செய்யாமல் வாழ்வதற்கும் பாவ மன்னிப்பு தேடுவதற்கும் சபதம் எடுப்போம் அதற்க்கு அல்லாஹ் அரு புரிவானாக !
ஆமீன்
جزاك الله خيرا كثيرا
ReplyDeleteநம் இருதயத்தில் பாவத்தின் ஆளுகை இருக்கும்வரையில் சமாதானமும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கவே கிடைக்காது.
ReplyDeleteபாவத்தின் வேர் அறுக்கப்படவேண்டும், சமாதானத்தைக்கொடுக்கும் இயேசுவை நம் இருதயத்தில் வரவேற்க்கவேண்டும்.
இயேசுவிடம் நம் பாவங்கள் அனைத்தையும், ஒப்புக்கொண்டு அவரோடு அனுதினமும் நடந்தால் மட்டுமே நமக்கு மனநிம்மதியும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கும்.
Regards,
gopalelango.blogspot.com
நம்மை படைத்த அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுங்கள். நபி ஈசா(இயேசு) கடவுள் அல்ல , அவர் மனிதர் தான் ,அவர் அல்லாஹ்வின் தூதர்.
ReplyDeleteஅல்லா என்பவன் ஒரு சந்திர கடவுளான விக்கிரகம். அல்லா என்பவன் ஒரு பிசாசு அவனுக்கு வழிக்காட்டுபவன் முகமது ... இவன் போலி தீர்க்கதரிசி.
ReplyDeleteஉன் பிறப்பு போலியானது..என்பதை..நீ..ஏற்றுக்கொள்கிறாயா?அப்படி..ஏற்றுக்கொண்டாலும்..முஹம்மது..நபி..அல்லாஹ்வின்..அருள்.அவர்மீது..உண்டாகட்டும்..அவர்..இறைவனின்..உண்மைத்தூததர்
DeleteGreat and I have a tremendous give: How Long Do House Renovations Take luxury home renovations
ReplyDelete