Thursday 25 October 2012

பெருநாள் சிந்தனை-தியாகம் மலரட்டும் தீன் வளரட்டும்


இஸ்லாமிய பார்வையில் ஈதுப்பெருநாட்கள் மிக உயர்ந்த லட்சியத்தை  யும்,மகத்தான நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டதாகும். ஒவ்வொரு முஸ்லீமும் தன் சந்தோஷத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொள்ளாமல் பிறரையும் மகிழ்ச்சிப்படுத்தும் பின்னனி கொண்டது.
இஸ்லாமிய பண்டிகைகளில் ஆட்டம் பாட்டத்திற்கோ,வீண்கேளிக்கைகளுக்கோ,விரயங்களுக்கோ இடமில்லை.
இஸ்லாத்தில் இரு ஈதுப்பெருநாட்களும் கடமையான வணக்கத்தின் முடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
நோன்பை நிறைவு செய்கிறபோது ஈதுல்பித்ரையும்,ஹஜ்ஜை நிறைவு செய்கிறபோது ஈதுல்அள்ஹாவையும் அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்துக்கு தந்துள்ளான்.
அவனை வணங்குவதற்கு வாய்ப்பளித்த அந்த வல்ல நாயனை பெருமைப்படுத்தவும்,நன்றிகூறவும்,நினைவுகூறவுமே முஸ்லீம்கள் ஒன்று கூடுகின்றனர்.
அதனால் தான் ரமலானை நிறைவு செய்யும்போது அல்லாஹுத்தஆலா,

وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ [البقرة: 185

எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்ட து) என்று கூறுகிறான்.

அதைப்போல ஹஜ்ஜை நிறைவு செய்யும்போது,

وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ) [البقرة: 203]

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள் என்று கூறுகிறான்.

புத்தாடைகள் அணிவதோ,நறுமணங்களை பூசிக்கொள்வதோ மட்டும் ஈதின் நோக்கமல்ல,மாறாக படைத்தவனையும்,படைப்புக்களையும் சந்தோஷப்படுத்துவதே உண்மையான நோக்கமாகும்.

அதனால் தான் இமாம் ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
                       
يقول الحسن -رحمه الله-: "كل يومٍ لا نعصِي اللهَ فيه فهو عيد، وكلُّ يومٍ نقضِيه في طاعة الله -جل وعلا- فهو عيدٌ

அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாத ஒவ்வொரு நாளும்,அவனுடைய வணக்கத்தில் கழிகிற ஒவ்வொரு நாளும் உனக்கு ஈது தான்.
இஸ்லாம் மகிழ்ச்சிக்கு தடைபோடவில்லை,அல்லாஹ்வை மறக்கடிக்கிற
சந்தோஷம் வேண்டாம் என்று தான் சொல்கிறது.
ஒரு அறிஞன் சொன்னான்: இந்த உலகில் நீ எதை இழந்தாலும் அதற்கு பகரம் உண்டு!ஆனால் நீ அல்லாஹ்வை இழந்துவிட்டால் அதற்கு பகரமே கிடையாது.
பெருநாள் என்பது ஒரு முஸ்லிம் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவிக்கும் நாளல்ல!மேலும் அல்லாஹ்வுடன்  உள்ள நம் உறவை முறித்துக்கொள்ளும் நாளுமல்ல.தக்பீர்தான் பெருநாள் தினத்தின் பெரு முழக்கமாகும்.அதுவே நம் கொள்கையின் பிரகடனமாகும்.
அதனால் தான் ஒரு முஸ்லிமின் வாழ்வின் முக்கிய தருனங்களில் தக்பீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
பாங்கில்,இகாமத்தில்,தொழுகையில்,போராட்டத்தில்,போர்களத்தில், அனைத்திலும் தக்பீர்மயம்.
زينوا أعيادكم بالتكبير உங்களின் ஈதுப்பெருநாட்களை தக்பீரக் கொண்டு அழகுபடுத்துங்கள் என நபி ஸல்  அவர்கள் கூறினார்கள்.
எனவே இன்றய தினத்தில் முதலாவதாக அல்லாஹ்வை பெருமைப்படுத்  திய பின்னர், உலக அளவில் இஸ்லாத்தின் நிலை குறித்தும்,முஸ்லீம்களி ன் வாழ்வாதாரம் குறித்தும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
இந்த ஈதுல்அள்ஹாவில் நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்வி ஒன்று உண்டு. அது:

உலகில் முஸ்லீம்கள் சிறுபான்மையா?பெரும்பான்மையா?

இந்த கேள்வியின் விடையில் தான் இஸ்லாத்தின் எதிர்காலம் உள்ளது.
முஸ்லீம்களிடத்தில் எல்லா பலமும் வளமும் உண்டு,150 க்கும் மேற்பட்ட இஸ்லாமியநாடுகள்,200 கோடிக்கும் மேல் மக்கள்தொகை அதாவது உலகில் நான்கில் ஒருவர் முஸ்லிம்,பணமதிப்பை நிர்ணயம்செய்யும் எண்ணை வளம்,தாவரம்,தண்ணீர்,நிலம்,போன்ற எல்லா வளங்களையும் பலங்களையும் பெற்றிருந்தும் உலக அரங்கில் முஸ்லீம்கள் அங்கீகாரமி ல்லாத பலகீனமானவர்களாக இருக்கின்றனர்.என்ன காரணம்?

முஸ்லீம்களிடத்தில் என்ன இல்லை? தியாகம் இல்லை.ஆம்!இன்றைய இஸ்லாத்திற்கு தேவை பணமோ,நிலமோ ஆட்சியோ அல்ல! தியாகிகள் தேவை. தியாகம் என்பது போர்களத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல.அன்றாட வாழ்கைக்கும் தான். நபி இப்ராஹீம் அலை அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் இன்றயதினத்தில் இந்த உண்மையை புரிந்துகொண்டால் இந்நாள் நமக்கு படிப்பினை தரும் நாளாகும்.
இஸ்லாம் தீவிரவாதத்தால் வளர்ந்த மார்க்கமல்ல!தியாகத்தால் மலர்ந்த மார்க்கம்.
கடந்த கால வரலாற்றைப்புரட்டிப்பாருங்கள்,இந்த தீனை நிலை நாட்ட ஸஹாபிகள் தங்களின் பொருளை,பதவியை,உயிரை,உறவை,குடும்பத்தை,  நேரத்தை,உழைப்பை அத்தனையையும் தியாகம் செய்தனர்.
தியாகம் இல்லையேல் தீன் இல்லை,

أخرج البخاري عَنْ أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ: صَحِبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ سِنِينَ لَمْ أَكُنْ فِي سِنِيَّ أَحْرَصَ عَلَى أَنْ أَعِيَ الْحَدِيثَ مِنِّي فِيهِنَّ
أخرج البخاري عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: (( يَقُولُونَ إِنَّ أَبَا هُرَيْرَةَ يُكْثِرُ الْحَدِيثَ وَاللَّهُ الْمَوْعِدُ وَيَقُولُونَ مَا لِلْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ لَا يُحَدِّثُونَ مِثْلَ أَحَادِيثِهِ وَإِنَّ إِخْوَتِي مِنْ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمْ الصَّفْقُ بِالْأَسْوَاقِ وَإِنَّ إِخْوَتِي مِنْ الْأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمْ عَمَلُ أَمْوَالِهِمْ وَكُنْتُ امْرَأً مِسْكِينًا أَلْزَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مِلْءِ بَطْنِي فَأَحْضُرُ حِينَ يَغِيبُونَ وَأَعِي حِينَ يَنْسَوْنَ

எமன் தேசம் இந்த உம்மத்துக்கு தந்த பொக்கிஷம் ஹழ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள்.
நபி ஸல் அவர்களின் தோழமையில் மூன்றாண்டுகள் மட்டுமே இருக்கிற நஸீபை பெற்றவர்கள்.ஹதீஸ்களை மனனம் செய்வதில் அளவு கடந்த பேராசை தனக்கு உண்டு என்று கூறுகிறார்கள்.
5374 ஹதீஸ்களை இந்த சமுதாயத்திற்கு தந்தவர்கள்.அதில் இமாம் புகாரி ரஹ் அவர்கள் 446 ஹதீஸ்களை தங்களின் ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்துள்ளனர்.
அபூஹுரைரா அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கிறார்கள்.முஹாஜிரீன்க ளும் அன்ஸாரிகளும் அந்தளவு ஹதீஸ்களை அறிவிக்க முடியவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.காரணம் என்ன வென்றால் என் சகோதரர்க ளான முஹாஜிர்கள் தங்களின் நேரத்தில் பெரும்பகுதியை வியாபாரத்தில் கழித்தனர்.அன்ஸார்கள் விவசாயத்தில் கழித்தனர்,நான் என் பெரும்பகுதி நேரத்தை இந்த தீனுக்கு கொடுத்தேன்.எனவே எப்போதும் பெருமானாருட ன் இருப்பேன்.என்று அபூஹுர்ரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த தீனுக்காக அபூஹுரைரா ரலி அவர்கள் மட்டும் தங்களின் நேரத்தை தியாகம் செய்யாவிட்டால் இத்தனை ஹதீஸ்கள் கிடைத்து இருக்குமா?

مصعب بن عمير رضي الله عنه لما اقتنع بداخله بسلامة الدين والتوحيد وبخطأ ما عليه قومه أقبل مبايعًا للنبي عليه الصلاة والسلام فحرمته أمه من كل شيء كانت تعطيه إياه، من المال والمتاع والتجارة والثياب والطعام والرائحة الحسنة وما شابه ذلك من أنواع النعيم حتى انه كان ساترا ممكنا منعما مرفها من أحسن وأجمل وأرفه شباب مكة..
فأقبل يومًا إلى رسول الله عليه الصلاة والسلام وعليه ثوبان مخرقان قد لبس الأول فإذا الخروق تظهر بعض جسده فلبس الثوب الثاني فوقه ليغطي خرق هذا بهذا، فلما رآه النبي عليه الصلاة والسلام دمعت عيناه وقال «لقد رأيت هذا وما شاب بمكة أرفه ولا أنعم منه».
فترك كل ما كان فيه من نعيم ضحى به في سبيل أن يتمسك بالتوحيد حتى إذا أسلم نفر من أهل المدينة على يد رسول الله صلى الله عليه وآله وسلم ثم طلبوا رجل يسافر معهم إلى المدينة ليعلمهم الدين اختاره النبي عليه الصلاة والسلام، فإذا به يضحّي إضافة ما ضحى به من أمواله وعزه التي كانت أمه تعطيه إياه يضحي أيضًا بالبلد التي نشأ فيه وترعرع فيه ومشى على أرضه وأكل من ثماره وصاحب أهل... يضحي بكل ذلك..
ويمضى إلى المدينة وبعد سنة واحدة يقيم فيها، أول جمعة أقيمت في الإسلام أقامها مصعب، ثم يعود بعد سنة إلى رسول الله صلى الله عليه وسلم ومعه أكثر من سبعين ما بين رجل وامرأة كلهم قد أسلموا على يده
سيرة الصحابة

ஹழ்ரத் முஸ்அப் இப்னு உமைர் ரலி அவர்கள் இந்த தீனை ஏற்றதற்காக நிறைய தியாகங்கள் செய்யவேண்டியதிருந்தது.உணவை, உடையை,சொத் தை, சுகத்தை,வியாபாரத்தை அனைத்தையும் துறந்தார்கள்.                     ஒரு நாள் கிழிந்த ஆடையுடன் அவரைப்பார்த்த நபி ஸல் அவர்கள் கண்ணீர் வடித்து சொன்னார்கள், இந்த வாலிபர் ஒரு காலத்தில் மக்காவி ல் அதிக சுகபோகத்துடன் வாழ்ந்தவர் என்று கூறினார்கள்.
இவர் தான் மதீனாவில் முதலாவதாக ஈமானுடன் கால்வைத்தவர் ,மாத்தி ரமல்ல ஈமானின் சுடரை மதீனாவில் ஏற்றியவர்,மதீனாவில் ஓராண்டு இவர் செய்த தியாகத்தால் 70 க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள்.
இப்படிப்பட்ட தியாகிகளின் உரத்தால் வளர்க்கப்பட்டது தான்  இஸ்லாம்.
நாம் ஈமானுக்காக எந்த விலையும் கொடுக்கவில்லை,ஆனால் அந்த ஈமானை பாதுகாக்க தியாகம் செய்தேயாகவேண்டும்.
இது நபி இப்ராஹீம் அலை அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் நன்நாளாகும்.தியாகத்தில் உச்சகட்ட தியாகம் நம்முடைய காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்பதும்,அவன் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது ம் தான்.இதுவே நபி இப்ராஹீம் அலை போன்ற நபிமார்களின் தியாகமாகும்.

عمران بن حصين -رضي الله عنه-، الصحابي الجليل الذي شارك مع النبي -صلى الله عليه وسلم- في جميع غزواته، فلما توفي النبي -صلى الله عليه وسلم- أصابه شلل نصفي فرقد على ظهره ثلاثين عامًا حتى توفي وهو لا يتحرك، تخيلوا -أيها الناس- ذلك؟! ثلاثون عامًا وهو -رضي الله عنه- نائم على ظهره لا يتحرك، لدرجة أنهم نقبوا له في السرير، أي: جعلوا فيه فتحة ليقضي حاجته لأنه لا يستطيع الحركة، فدخل عليه بعض الصحابة فرأوه فبكوا، فنظر إليهم وقال: لم تبكون؟! قالوا: لحالك، وما أنت عليه من هذا الابتلاء؛ فقال عمران بن حصين -رضي الله عنه-: "شيء أحبه الله أحببته، أنتم تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى بما ارتضاه الله تعالى، وأسعد بما اختاره الله"، ثم قال لهم: "والله أكون على حالي هذا فأحس بتسبيح الملائكة وأحس بزيارة الملائكة، فأعلم هذا الذي بي ليس عقوبة وإنما يختبر رضائي عنه، أشهدكم أني راضٍ عن ربي الصحابة الصحابة


இம்ரான் இப்னு ஹசீன் ரலி அவர்கள் நாயகத்துடன் பல போர்களில் கலந்து கொண்டவர்.நபி ஸல் அவர்களின் வபாத்திற்கு பின் கடுமயான வாத நோய் தாக்கப்பட்டு 30 வருடம் படுக்கை வாழ்க்கை.சுய தேவைகள் கூட படுத்தநிலையில் தான்.உடலை அசைக்க கூடமுடியாத கடுமையான நோய்.அப்போது அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன்,அவன் திருப்திபட்ட்தை நான் திருப்திபட்டுவிட்டேன்.என்று சொன்னதுடன்,நீங்கள் என்னை இந்த நிலையில் காண்கிறீர்,ஆனால் நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன்,அவர்களை சந்திக்கிறேன் என்றும் கூறினார்கள்.
அல்லாஹ்வுக்காக எதையும் பொருந்திக்கொள்வதே உண்மையான தியாகம்.
தாபியீன்களில் முக்கியமான மூன்று நபர்கள் ஒரு சபையில் அமர்ந்திருந்த போது மூவரும் துஆச் செய்தனர்.
ஒருவர்: فقال الشعبي: "اللهم إني أسألك أن أموت قريبًا
யா அல்லாஹ்! சீக்கிரத்தில் எனக்கு மரணத்தை கொடு!காரணம் கேட்கப்பட்டது? குழப்பமான காலத்திலிருந்து ஈமானை பாதுகாக்கவே அப்படி துஆச்செய்தேன் என்றார்.
இரண்டாமவர்: سعيد بن المسيب.      اللهم أحيني طويلاً!
யாஅல்லாஹ்! எனக்கு நீண்ட ஆயுளை கொடு.காரணம் கேட்டபோது நிறைய அமல் செய்ய வேண்டும் என்றார்கள்.
மூன்றாமவர் :   اللهم لا أختار لنفسي؛ فاختر أنت ما شئت
எனக்காக எதையும் நான் கேட்கமாட்டேன்,நீ விரும்பியதை எனக்கு கொடு அதுவே எனக்கு நன்மையாக அமையும் என்றார்கள்.இதை கேட்ட அவ்விருவரும்      أنت أفضلنا  எங்களில் நீயே சிறந்தவர் என்றார்கள்.
அல்லாஹ்வின் விருப்பத்தையே தன் விருப்பமாக மாற்றுகிற இந்த பண்பையே ஈதுல் அள்ஹா நமக்கு போதிக்கிறது என்று கூறி இந்த நாளைப்போல என்றும் எப்போதும் முஸ்லீம்களின் வாழ்வை அல்லாஹ் மகிழ்ச்சியாக்கி வைப்பானாக !ஆமீன்.

Tuesday 23 October 2012

அவர் ஒரு உம்மத்


தன் உடலை நெருப்புக்கு கொடுத்தவர்
தன் மகனை அறுப்புக்கு கொடுத்தவர்
தன் கல்பை ரப்புக்கு கொடுத்தவர் யார் அவர்?

200 கோடி முஸ்லீம்களின் உள்ளத்திலும் உணர்விலும் கலந்தவர்.வாழ்விலும் வணக்கத்திலும் இணைந்தவர்.

அனைத்து மதத்தினரும் அவரை சொந்தம்கொண்டாடியபோது நான் முஸ்லீம்களுக்குச்சொந்தம் என பிரகடனப்படுத்திய அந்த மாமனிதர் வேறுயாரும் அல்ல,நபி இப்ராஹீம் அலை அவர்கள் தான்.

ما كان إبراهيم يهودياً ولا نصرانياً ولكن كان حنيفاً مسلماً وما كان من المشركين

இப்ராஹீம், யூதராகவோ, கிறித்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் உண்மை வழியில் நின்ற முஸ்லிமாக இருந்தார். இணை கற்பித்தவராக அவர் இருந்ததில்லை.(அல்குர்ஆன் 3:67)

இப்ராஹீம் என்றால் சுர்யானி மொழியில் أب رحيم ) இரக்கமுள்ள தந்தை என்று பொருள்.
இவர்களின் பட்டப்பெயர்: أبو الضيفان விருந்தாளிகளின் தந்தை என அழைக்கப்படுவார்கள். மனிதகுலத்தின் தந்தை ஆதம் அலை அவர்கள் என்றால் நபிமார்களின் தந்தை இப்ராஹீம் அலை அவர்களாவார்கள்

நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கும் இந்த உம்மத்துக்கும் இருக்கும் தொடர்பு பழமையானதும்,மிக நெருக்கமானதுமாகும்.

இஸ்லாத்தின் கடமைகளில் உன்னதமான கடமையான ஹஜ் எனும் கடமையை இந்த உம்மத்துக்கு பெற்றுத்தந்தவர்.மாத்திரமல்ல வற்றாத ஜீவ ஊற்றான, நோய் தீர்க்கும், துயர் துடைக்கும்,தேவையை நிறைவுசெய்யும் ஸம்ஸம் கிடைக்க காரணமானவர்கள்.

துல்ஹஜ் மாதத்தில் உலகில் வாழும் முஸ்லீம்கள் ஆற்றும் விசேஷமான அமல்களுக்கு சொந்தக்காரர் அவர்.

திருர்ஆனின் பார்வையில் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள்:

குர்ஆனில் 69 இடத்தில் இப்ராஹீம் என்ற பெயர் வருகிறது.இப்ராஹீம் என்ற பெயரில் தனி சூராவும் உண்டு.
25 சூராக்களில் அவரின் வரலாறு கூறப்படுகிறது.63 வசனங்கள் அவரைப்பற்றி பேசுகிறது.
சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு இறை தூதரின் தியாகவாழ்க்கையை கியாமத்நாள்வரை வரும் மக்களுக்கு பாடமாகவும்,படிப்பினையாகவும் அல்லாஹுத்தஆலா திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான்.

       إن إبراهيم كان أمة  அவர் ஒரு சமுதாயம் என்று கூறுகிறான்.      ஒரு சமுதாயம் சேர்ந்து செய்யும் தியாகத்தை தனிமனிதராக அவர் செய்தார்.ஒரு சமுதாயம் சேர்ந்து செய்யும் வணக்கத்தை அவர் தனிஒருவர் செய்தார்.ஒரு சமுதாயத்தின் கட்டுப்பாடு அவரிடம் இருந்தது.(அல்குர்ஆன் 16:120)

   قانتاً لله  தூய்மையான நிரந்தர வணக்கசாலி.
இன்பம் துன்பம்,வெற்றி தோல்வி,சுகம் சந்தோஷம்,போன்ற வாழ்வின் எல்லா தருனங்களிலும் அல்லாஹ்வின் நினைவைவிட்டும் நீங்காதவர். .(அல்குர்ஆன் 16:120)

  شاكراً لأنعمه  அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவர். .(அல்குர்ஆன் 16:121)


ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفاً 

'(முஹம்மதே!) உண்மை வழி யில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!' என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். .(அல்குர்ஆன் 16:123)

அல்லாஹுத்தஆலா தன் ஹபீபான முஹம்மத் ஸல் அவர்களை இப்ராஹீம் அலை அவர்களின் மார்க்கத்தை தவிர வேறு எந்த மார்க்கத்தையும் பின்பற்ற சொல்லவில்லை.

நபி ஸல் அவர்களின் பார்வையில் நபி இப்ராஹீம் அலை  அவர்கள்:

عَنْ أَنَسٍ , قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " وُلِدَ لِي اللَّيْلَةَ غُلامٌ فَسَمَّيْتُهُ بِاسْمِ أَبِي إِبْرَاهِيمَ
رواه مسلم
எனக்கு நேற்றிரவு ஒரு ஆண் குழந்தை பிறந்தது,அந்தகுழந்தைக்கு என் தந்தை இப்ராஹீம் அலை அவர்களின் பெயர்சூட்டியுள்ளேன் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
இதன்மூலம் நபி ஸல் அவர்களுக்கு நபி இப்ராஹீம் அலை அவர்களின் மீது எந்தளவு மரியாதையும் அன்பும் உண்டு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

قال صلى الله عليه وسلم : ( أما إبراهيم فانظروا إلى صاحبكم ) رواه البخاري

நபி ஸல் அவர்கள் மிஃராஜில் நபிமார்களை சந்தித்தநிகழ்வுகளை குறித்து தம் தோழர்களுக்கு எடுத்துச்சொல்லும்போது,நான் நபி இப்ராஹீம் அலை அவர்களை சந்தித்தேன்.அவர்கள் தோற்றத்தில் என்னைப்போலவே இருந்தார்கள்.என கூறினார்கள்.
أنا دعوة أبي إبراهيم
رواه أحمد (5/262)
நான் என் தந்தை இப்ராஹீம் அலை அவர்களின் துஆவால் இங்கு நபியாக அனுப்பப்பட்டேன் என நன்றியுடன் நாயகம் கூறிய வார்த்தைகளை இங்கு நினைவு கூறுவது பொருத்தம்.

இறுதி உம்மத்தின் பார்வையில் நபி இப்ராஹீம் அலை அவர்கள்:

இறுதி உம்மத்தான ஹழ்ரத் முஹம்மத் ஸல் அவர்களின் சமுதாயம் இப்ராஹீம் அலை அவர்களுக்கு மிக அதிகமாகவே நன்றிகடன் பட்டிருக்கிறது,ஏனென்றால் தவ்ஹீதை ஏற்றுக்கொண்ட இந்தகூட்டத்திற்கு முஸ்லீம்கள் என்று பெயர் வைத்தவர் அவரே என குர்ஆன் கூறுகிறது.

 مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمينَ مِنْ قَبْلُ (அல்குர்ஆன்
 22:78)
அவர் வாழும்போது இந்த உம்மத்தை சீர்திருத்தம் செய்ய ஒரு நபி வேண்டும் என்று துஆச்செய்தவர்

. رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ
 وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் 67 கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்' (என்றனர்(அல்குர்ஆன் 2:129)

மரணித்தபோதும் இந்த உம்மத்துக்கு வஸிய்யத் செய்தவர்.

قال رسول الله -صلى الله عليه وسلم- لقيت إبراهيم ليلة أسري بي، فقال: يا محمد، أقرئ أمتك مني السلام، وأخبرهم أن الجنة طيبة التربة، عذبة الماء، وأنها قيعان، وأن غراسها: سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر)[الترمذي:3462، أحمد:23552

நான் மிஃராஜில் இப்ராஹீம் அலை அவர்களை சந்தித்தேன்.அப்போது அவர்கள்,முஹம்மதே (ஸல்)!உங்கள் உம்மத்துக்கு என் சலாமை சொல்லுங்கள்.மேலும் சொர்க்கத்தின் மண் மணமானது,அதன் நீர் மதுரமானது,அது மரங்கள் இல்லா சம பூமியாகும் அதன் நாற்று
  سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر  என்பதாகும்.என்ற என் வஸிய்யத்தை சொல்லுங்கள் என்றார்கள்.

இமாம் நவ்வி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்                              
ومن أطرف النظرات والتأملات في هذا الحديث العجيب أن الإمام النووي (676هـ) اعتبر أنه صارت لأهل الحديث رواية متصلة السند إلى النبي إبراهيم .. فإن أهل الحديث يروون هذا الحديث عن الصحابة، والصحابة يروونه عن نبينا محمد صلى الله عليه وسلم، ومحمد يرويه عن إبراهيم الخليل
(وقد من الله الكريم علينا وجعل لنا رواية متصلة، وسبباً متعلقاً بخليله إبراهيم -عليه السلام- كما من علينا بذلك فى حبيبه وخليله وصفيه محمد صلى الله عليه وسلم)[تهذيب الأسماء واللغات:1/100، الطبعة المنيرية

இந்த ஹதீஸ் ஒரு ஆச்சரியமான ஹதீஸாகும். காரணம் எந்த ஹதீஸின் ஸனதும் நாயகத்துடன் முடியும்,ஆனால் இந்த ஹதீஸின் ஸனது நபி இப்ராஹீம் அலை அவர்கள் வரை தொடர்கிறது.இது இந்த உம்மத்துக்கு அல்லாஹ் செய்த மாபெரும் உபகாரமாகும்.

மரணதருவாயில் வஸிய்யத் செய்பவர்கள் உண்டு,ஆனால் மரணித்தபின்பு மரணசாசனம் எழுதிய ஒரே மாமனிதர் நபிய்யுல்லாஹ் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் மட்டும் தான்.

அல்லாஹுத்தஆலா நபிமார்களில் தன் நண்பராக தேர்வு செய்தது நபி இப்ராஹீம் அலை அவர்களைத்தான் என்பதை நாம் அறிவோம்,ஆனால் அதற்காக அவர் கொடுத்த விலை மிகவும் கடினமானது.
ஆம்!ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.      அல்லாஹுத்தஆலா ஒரு அடியானை அன்புகாட்ட தேர்வுசெய்தால் மூன்றுகட்ட சோதனைகளை அவருக்கு கொடுப்பான்.\

1.அவர் உடல் ரீதியான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
2.பொருளாதார சோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
3.குடும்ப ரீதியான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்.

وروى عن أبي ورّاد عن محمد بن مسلمة يرفعه إلى النبي صلى اللَّه عليه وسلم
أن رجلاً قال يا رسول اللَّه : ذهب مالي وسقم جسمي،
فقال النبي صلى اللَّه عليه وسلم “لا خير في عبد لا يذهب ماله ولا يسقم جسمه إن اللَّه إذا أحب عبداً ابتلاه وإذا ابتلاه صبره
 أخرجه ابن أبى الدنيا فى كتاب المرض

அல்லாஹ்வின் தூதரே!என் பொருளும் அழிந்துவிட்டது,என் உடலும் நோயில் அவதிப்படுகிறது.என ஒருவர் நபி ஸல் அவர்களிடம் வந்து முறையிட்டபோது  ,அல்லாஹுத்தஆலா எந்த அடியாரின் பொருளிலும்,உடலிலும் சோதிக்கவில்லையோ அவர் எந்த நன்மையும் பெற்றுக்கொள்ள முடியாது,நிச்சயம் அல்லாஹ் ஒருவரை நேசித்தால் சோதிப்பான்,சோதித்தால் அவர் பொருமை கடைபிடிக்கவேண்டும்.

ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله تعالى وما عليه من خطيئة ) رواه الترمذي
ஒரு முஃமினான ஆணும்,பெண்ணும் தன் உயிரில்,குழந்தையில்,பொருளி ல் சோதிக்கப்படுவார்,இறுதியில் எந்த பாவமும் இல்லாதநிலையில் அல்லாஹ்வை நாளை மறுமையில் சந்திப்பார்.என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً

சாதாரணமாக, ஒருவர் அல்லாஹ்வின் அன்பை பெறவே இப்படியென்றால் அல்லாஹ்வின் நண்பர் எனும் அந்தஸ்தை பெற எத்தனை சோதனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும்?

நபி இப்ராஹீம் அலை அவர்கள் தங்களின் வாழ்வில் சந்தித்த மூன்றுகட்ட சோதனைகள்   
                                                                           

1.தன்னை சோதனைக்கு கொடுத்தார்கள்.
.
 பகுத்தறிவின் தந்தை என்று போற்றப்படும் ஹழ்ரத் இப்ராஹீம் அலை அவர்கள் தன்னுடைய பத்து வயதில் அல்லாஹ்வை தேட முற்படுகிறார்கள்.
நட்சத்திரம்,சந்திரன்,சூரியன் போன்ற படைப்புக்களை சிந்தித்து இறுதியில் மறையும் தன்மைகொண்டது இறைவானாக முடியாது,இவைகளை படைத்தவன் ஒருவன் உண்டு என்ற முடிவுக்கு வந்து,ஏகத்துவத்தை இந்த பூமியில் நிலை நிறுத்தினார்கள்.
இனி அடுத்தகட்டமாக தான் அறிந்துகொண்ட ரப்பின்பக்கம் தன் தந்தைக்கு அழைப்பு கொடுத்தார்கள்.அப்போது அவர்களின் வயது 12.
இனி மூன்றாம் கட்டமாக தான் சார்ந்திருக்கும் சமூகத்திற்கு அழப்பு கொடுக்கிறார்கள்.அப்போது அவர்களின் வயது 14 .இறுதியில் இப்ராஹீம் என்ற வாலிபரின் வீரியமான தஃவாவின் தாக்கம் நம்ரூத் எனும் அந்நாட்டு மன்னன் வரை அடைந்தபோது அவ்வரசன் கொதித்தெழுந்து,பிரமாண்டமான நெருப்புக்குண்டத்தை உருவாக்கி அதில் இப்ராஹீம் அலை அவர்களை தூக்கி எறிய உத்தரவிட்டான்.         அப்போது அவர்களின் வயது 16.
16 வயது என்பது +2 முடித்த ஒரு மாணவனின் வயது.

وذلك أنهم شرعوا يجمعون حطباً من جميع ما يمكنهم من الأماكن، فمكثوا مدة يجمعون له، حتى أن المرأة منهم كانت إذا مرضت تنذر لئن عوفيت لتحملن حطباً لحريق إبراهيم. ثم عمدوا إلى جوبة عظيمة، فوضعوا فيها ذلك الحطب وأطلقوا فيه النار فاضطربت وتأججت، والتهبت وعلا لها شررٌ لم ير مثله قط
ثم وضعوا إبراهيم عليه السلام في كفة منجنيق صنعه لهم رجل من الأكراد يقال له "هزن
فلما وضع الخليل عليه السلام في كفة المنجنيق مقيداً مكتوفاً، ثم ألقوه منه إلى النار، قال: حسبنا الله ونعم الوكيل. كما روى البُخَاريّ عن ابن عبَّاس أنه قال: حسبنا الله ونعم الوكيل، قالها إبراهيم حين ألقي في النار، وقالها محمد حين قيل له: {إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَاناً وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، فَانْقَلَبُوا بِنِعْمَةٍ مِنْ اللَّهِ وَفَضْلٍ لَمْ يَمْسَسْهُمْ سُوءٌ} الآية.
، عن أبي صالح، عن أبي هريرة قال قال: صلى الله عليه وسلم "لما ألقي إبراهيم في النار قال: اللهم إنك في السماء واحد وأنا في الأرض واحد أعبدك".
وذكر بعض السلف أن جبريل عرض له في الهواء فقال: يا إبراهيم ألك حاجة؟ فقال أمّا إليك فلا
قصص الانبياء لابن كثير

அந்த நெருப்பை மூட்ட பல நாட்கள் விறகு சேமிக்கப்பட்டது.அந்தகாலத்தி ல் ஒரு பெண் நோய்பட்டால் நான் குணமானால் இப்ராஹீமை எறிக்க விறகை சுமப்பேன் என்று நேர்ச்சை செய்வாளாம்.
இறுதியில் நெறுப்பு கொழுந்துவிட்டெறிய ஆரம்பித்ததும் மிஞ்ஜனீக் எனும் கருவிமூலம் இப்ராஹீம் அலை அவர்களை தூக்கி வீசினார்கள்.
நெருப்பில் தூக்கி எறியப்பட்ட இப்ரஹீம் அலை அவர்களிடம் எந்த சலனமுமில்லை,கவலையுமில்லை,பயமுமில்லை.
ஹஸ்புனல்லாஹு வநிஃமல் வகீல் என்று அல்லாஹ்விடம் பொருப்பு ஒப்படைத்துவிட்டு அமைதியானார்கள்.
நெருப்பில் வீசப்பட்டபோது,யா அல்லாஹ்!வானத்தில் வணங்கப்படுபவன் நீ ஒருவன் தான்.பூமியில் உன்னை வணங்கும் நான் ஒருவன் தான்.என்று துஆச்செய்தார்கள் என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
ஜிப்ரயீல் அலை அவர்கள் காற்றில் தோன்றி இப்ராஹீமே!உனக்கு ஏதேனும் தேவை உண்டா?நான் நிறைவேற்றுகிறேன் என்றபோது உம்மிடம் எனக்கு எந்த தேவையும் இல்லை,படைத்தவனிடம் தான் என்று பதில் கூறியதாக நல்லோர்களில் சிலர் கூறுகின்றனர்.
இறுதியில்,அந்த நெருப்பை சுகம் தரும் பூஞ்சோலையாக அல்லாஹ் மாற்றினான் என்பது நாமறிந்த செய்தி.
இந்த வரலாற்றின் மூல்லம் ஒரு செய்தி அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது,அது யாதெனில் அல்லாஹ்வுக்காக நாம் எந்த தியாகத்தை செய்தாலும் அதற்கு மிகச்சிறந்த பகரத்தை அல்லாஹ் தருவான்.
ஆடையின்றி நெருப்பில் வீசப்பட்ட இப்ராஹீம் அலை அவர்களுக்கு தான் நாளை மறுமையில் முதலாவதாக ஆடை அணிவிக்கப்படும் என பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள்.மேலும் இப்ராஹீம் அலை அவர்கள் நெருப்பில் போடப்பட்டபோது எல்லா உயிரிணங்களும் நெருப்பை அணைக்க முயற்சித்தது,ஆனால் பல்லி மட்டும் அதை ஊதி அதிகப்படுத்தியது ஆகவே பல்லியை பார்த்தால் கொல்லுங்கள் என நபி ஸல் அவர்கள் உத்தரவிட்டார்கள்.(புகாரி)

. روى البخاري في صحيحه، عن سعيد بن المسيب، عن أم شريك رضي الله عنها، أن رسول الله صلى الله عليه وسلم أمر بقتل الوزغ، وقال "كان ينفخ على إبراهيم عليه السلام" وفي رواية لأحمد، عن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال: "اقتلوا الوزغ فإنه كان ينفخ النار على إبراهيم
2.தன் பொருளில் சோதிக்கப்பட்டார்கள்:
அல்லாஹ்வுக்காக உடல் வணக்கம் செய்யும் பலர் பொருள் என்று வரும்போது பின்வாங்கிவிடுவர்,இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக அவர்கள் வாழ்கை அமைந்தது.
لما اتخذ الله تعالى ابراهيم خليلا قالت الملائكة يارب ان له مالا وولدا وامرأة فكيف يكون خليلا لك مع هذه الشواغل فقال الله تعالى لاتنظروا الى صورة عبدى ولا الى ماله بل الى قلبه واعماله وليس فى قلب خليلى محبة الى غيرى ولو شئتم اذهبوا اليه وجرّبوه فجاء جبرائيل عليه السلام فى صورة بنى آدم وكان لابراهيم عليه السلام اثنا عشر الف كلب للصيد وحفظ الغنم وقس عليها عدد اغنامه ولكل كلب طوق من ذهب ليعلم ان الدنيا نحبسة والنجس لايصلح الا للنجس وكان ابراهيم عليه السلام على تل مرتفع ينظر الى الاغنام فسلم عليه جبرائيل عليه السلام فقال له لمن هذا قال ابراهيم لله ولكن الآن فى يدى ثم قال تبرّع واحدا منها فقال ابراهيم عليه السلام اذكر الله وخذ ثلثها فقال جبرائيل سبوح قدوس ربنا ورب الملائكة والروح ثم قال اذكر ثانيا وخذ نصفها فقال سبوح قدوس ربنا ورب الملائكة والروح ثم قال اذكر ثالثا وخذ كلها برعاتها وكلابها فذكر ثم قال اذكره رابعا واقرّلك بالرق فذكره فقال الله تعالى ياجبرائيل كيف وجدت خليلى فقال نعم الخليل يارب فنادى ابراهيم عليه السلام يارعاة الغنم سوقوا الغنم خلف صاحبها هذا الى اين يريد فانكم صرتم له فاظهر نفسه جبرائيل عليه السلام فقال ياابراهيم لاحاجة لى فى ذالك وانا جئت لاجرّ بك فقال انا خليل الله لااستردّ هبتنى منك فاوحى الله تعالى اليه
ان يبيعها ويشترى بثمنها الضياع والعقار ويجعلها وقفا يأكل منه الفقير والغنى

مشكاة الانوار
அல்லாஹுத்தஆலா நபி இப்ராஹீம் அலை அவர்களை நண்பராக தேர்வு செய்தபோது,மலக்குமார்கள் அல்லாஹ்விடம், யா அல்லாஹ்! இவருக்கு நீ பொருளை பிள்ளையை,மனைவியை வழங்கியிருக்கிறாய்.இத்தனை சுகங்களை அனுபவிக்கும் ஒருவரை நீ எப்படி கலீலாக தேர்வு செய்தாய் என கேட்டனர்,
என் அடியாரின் வெளித்தோற்றத்தையோ,அவரின் பொருளையோ பார்க்காதீர்கள்,அவரின் உள்ளத்தை பாருங்கள்,அதில் என்னை தவிர யாருக்கும் எதற்கும் இடமில்லை.நீங்கள் விரும்பினால் அவரை சோதித்துப்பாருங்கள் என்று அல்லாஹ் கூறினான்.
மனித தோற்றத்தில் ஜிப்ரயீல் அலை அவர்கள் நபியை சந்திக்க வருகிறார்.
அப்போது இப்ராஹீம் அலை அவர்களுக்கு இருந்த  சொத்துக்கள்.
வேட்டைக்கும்,ஆடுகளை பதுகாக்கவும் பயன்படும் நாய்கள் மட்டும் 12ஆயிரம் இருந்தது.அப்படியானால் ஆடுகள் எவ்வளவு இருந்திருக்கும்?   ஒவ்வொரு நாயின் கழுத்திலும் ஒரு தங்க வளையம்,அதில் உலகம் அசுத்தம்,அசுத்தம் அசுத்தத்தில்தான் சேரவேண்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
உயரமான இடத்தில் அமர்ந்திருந்த இப்ராஹீம் அலை அவர்களை சந்தித்த ஜிப்ரயீல் அலை, இது யாருக்கு சொந்தம் என்று கேட்டார்?இது அல்லாஹ்வுக்கு சொந்தம்,இப்போது என் கையில் உள்ளது என பதில் கூறினார்கள்.
இவைகளிலிருந்து ஒரு ஆட்டை எனக்கு கொடுங்கள் என்று கேட்க,ஒரு திக்ர் சொல்லுங்கள்,இதில் 3ல் 1 பகுதியை எடுத்துச்செல்லுங்கள்.என இப்ராஹீம் அலை அவர்கள் கூறினார்கள்
அப்போது ஜிப்ரயீல் அலை அவர்கள்  سبوح قدوس ربنا ورب الملائكة والروح
என்ற திக்ர் சொல்லிக்கொடுத்தார்கள்.
இன்னும் ஒரு முறை சொல்லுங்கள் சரிபாதியை தருகிறேன்.சொன்னார் கள்.
  மூன்றாவது- இன்னொருமுறை சொல்லுங்கள் என் சொத்து முழுவதும் தந்துவிடுகிறேன்.சொன்னார்கள் ஜிப்ரயீல் அலை அவர்கள்.நான்காவது தடவை சொல்லச்சொன்னபோது தருவதற்கு என்ன இருக்கிறது என ஜிப்ரயீல் அலை அவர்கள் கேட்டபோது நபிய்யுல்லாஹ் அவர்கள்,என்னை யே அடிமையாக தருகிறேன் என்றார்களாம்
அப்போது அல்லாஹ் கேட்டானாம் ஜிப்ரயீலே!என் கலீல் எப்படி?சரியான தேர்வு என்று ஜிப்ரயீல் பதில் சொன்னார்களாம்.

இறுதியில் எல்லா சொத்துக்களையும் நபியவர்கள் ஜிப்ரயீல் அலை அவர்களுக்கு கொடுத்தபோது தான் ஜிப்ரயீல் என்றும் சோதிக்க வந்ததாகவும் கூறினார்கள்.
அப்போது நபி இப்ராஹிம் அலை அவர்கள், நான் அல்லாஹ்வின் நண்பன் எனவே அன்பளிப்பை திருப்பி வாங்கும் பழக்கம் இல்லை என்று கூறி அதை வாங்கமறுத்துவிட்டார்கள்.

3.தன் மகனை சோதனைக்கு கொடுத்தார்கள்:

قال ابراهيم لولده يابنى انى ارى فى المنام انى اذبحك فانظر ماذا ترى اى بين لى ماالذى ترى هل تصبر لامر الله او تسئل العفو قبل الفعل هذا امتحان من ابراهيم لولده هل يحبيبه بالسمع والطاعة ام لا قال ياابت افعل ماتؤمر ستجدنى ان شاء الله من الصابرين على ماامرت به من الذبح فلما سمع ابراهيم كلام ولده عرف انه استجاب الله دعائه حين دعا الله بقوله رب هب لى من الصالحين فحمد الله كثيرا ثم قال اسماعيل لابيه ياابت اوصيك باشياء ان تربط يدىّ كيلااضطرب فاوذيك وان تجعل وجهى على الارض كيلاتنظر الى وجهى فترحمنى واكفف عنى ثيابك كيلايتلطخ عليها شىء من دمى فينقص اجرى وتراه امى فتحزن واشحذ شفرتك واسرع امرارها على حلقى ليكون اهون فان الموت شديد وان تذهب بقميصى الى امى تذكرة لها منى وسلم عليها وقل لها اصبرى على امر الله ولاتخبرها كيف ذبحتنى وكيف ربطت يدىّ ولاتدخل الصبيان على امى كيلايتجدد حزنهالى واذا رأيت غلاما مثلى فلاتنظر اليه حتى لاتجزع ولاتحزن فقال ابراهيم عليه السلام نعم العون انت ياولدى على امر الله تعالى
ووضع السكين على حلق ولده فعالجه بشدّة وقوّة فلم يقدر على قطعه
فقال الله تعالى انظروا الى عبدى كيف يمر السكين على حلق ولده لاجل رضائى وانتم قلتم حين قلت انى جاعل فى الارض خليفة اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك ثم قال اسماعيل عليه السلام ياابت حل يدىّ ورجلىّ حتى لايرانى الله مكرها
فقال اسماعيل عليه السلام ياابت ضعفت قوتك بسبب محبتك الىّ فلاتقدر ذبحى فضرب بالسكين الحجر فصار الحجر نصفين فقال ابراهيم عليه السلام تقطع الحجر ولم تقطع اللحم فتكلم السكين بقدرة الله تعالى فقال ياابراهيم انت تقول اقطع واله العالمين يقول لاتقطع فكيف امتثل امرك عاصيا لربك ثم قال الله تعالى وناديناه ان ياابراهيم قد صدّقت الرؤيا
درة الناصحين

இப்ராஹீம் அலை :கனவில் உன்னை அறுக்கக்கண்டேன்.உன் அபிப்ராயம் என்ன?இந்த கேள்வி தன் மகனின் கட்டுப்படும் தன்மையை சோதிக்க.

இஸ்மாயீல் அலை:உங்களுக்கு ஏவப்பட்டதை செய்யுங்கள்.அல்லாஹ் நாடினால் என்னை பொருமையுள்ளவனாக காண்பீர்.
 அந்த பதிலை கேட்ட இப்ராஹீம் அலை அவர்கள், அல்லாஹ்விடம் இறைவா!ஸாலிஹான பிள்ளையை கொடு என்று தான் செய்த துஆ வீண்போகவில்லை என்று எண்ணி அல்லாஹ்வை பலமுறை புகழ்ந்தார்.
அறுப்பதற்கு தயாரானபோது;
இஸ்மாயீல் அலை:தந்தையே!தங்களிடம் சில வஸிய்யத்துக்களை செய்கிறேன்.
நான் அசையாமல் இருக்க என் கையை கட்டுங்கள்.என் முகத்தை நீங்கள் பார்க்காமல் இருக்க பூமியை நோக்கி என் முகத்தை திருப்புங்கள்.என் இரத்தம் தங்களின் ஆடையில் தெரிக்காமல் இருக்கவும் என் தாய் அதைபார்த்து கவலை கொள்ளாமல் இருக்கவும் தங்களின் ஆடையை சுருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.என் தாய்க்கு சலாம் எத்திவைத்து,பொறுமையை கடைபிடிக்கச்சொல்லுங்கள்.
இப்ராஹீம் அலை:மகனே!அல்லாஹ்வின் நாட்டத்தால் எனக்கு நீ மிகச்சிறந்த உதவியாளராக ஆகிவிட்டீர்.

கடுமயான பலம் கொண்டு கழுத்தில் கத்தியை வைத்து அறுத்தபோது    அல்லாஹ் மலக்குகளிடம்,பாருங்கள் என் அடியாரை!என் பொருத்தம் நாடி தன் மகனையே அறுக்கத்துணிந்துவிட்டார்.மனிதனை நான் படைத்தபோது நீங்கள் என்ன சொன்னீர்கள்?
மகன்:தந்தையே!என் கட்டை அவிழ்துவிடுங்கள்,ஏனெனில் என் ரப்புக்கு நான் விரும்பியே உயிர் கொடுக்கிறேன்.
கத்தி அறுக்க மறுத்தபோது கோபத்தில் கத்தியை ஒரு கல்லில் அடித்தார்கள்,கல் இரண்டாக பிளந்தது.அப்போது இப்ராஹீம் அலை அவர்கள், கல்லை அறுக்கிறாய்!கழுத்தை அறுக்க மறுக்கிறாய் என்ற் சப்தமிட்டார்.
அப்போது அல்லாஹ்வின் நாட்டம் கொண்டு கத்தி பேசியது.கலீல்(இப்ராஹீம் அலை) அறு என்கிறார்,ஜலீல்(அல்லாஹ்) அறுக்காதே என்கிறான்,நான் என் ரப்புக்கு எப்படி மாறுசெய்வேன்?
அப்போது அல்லாஹுத்தஆலா, இப்ராஹீமே உன் கனவை உண்மைபடுத்தி னீர்.என்று கூறினான்.