Thursday 25 October 2012

பெருநாள் சிந்தனை-தியாகம் மலரட்டும் தீன் வளரட்டும்


இஸ்லாமிய பார்வையில் ஈதுப்பெருநாட்கள் மிக உயர்ந்த லட்சியத்தை  யும்,மகத்தான நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டதாகும். ஒவ்வொரு முஸ்லீமும் தன் சந்தோஷத்தை மட்டுமே பிரதான நோக்கமாக கொள்ளாமல் பிறரையும் மகிழ்ச்சிப்படுத்தும் பின்னனி கொண்டது.
இஸ்லாமிய பண்டிகைகளில் ஆட்டம் பாட்டத்திற்கோ,வீண்கேளிக்கைகளுக்கோ,விரயங்களுக்கோ இடமில்லை.
இஸ்லாத்தில் இரு ஈதுப்பெருநாட்களும் கடமையான வணக்கத்தின் முடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
நோன்பை நிறைவு செய்கிறபோது ஈதுல்பித்ரையும்,ஹஜ்ஜை நிறைவு செய்கிறபோது ஈதுல்அள்ஹாவையும் அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்துக்கு தந்துள்ளான்.
அவனை வணங்குவதற்கு வாய்ப்பளித்த அந்த வல்ல நாயனை பெருமைப்படுத்தவும்,நன்றிகூறவும்,நினைவுகூறவுமே முஸ்லீம்கள் ஒன்று கூடுகின்றனர்.
அதனால் தான் ரமலானை நிறைவு செய்யும்போது அல்லாஹுத்தஆலா,

وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ [البقرة: 185

எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்ட து) என்று கூறுகிறான்.

அதைப்போல ஹஜ்ஜை நிறைவு செய்யும்போது,

وَاذْكُرُوا اللَّهَ فِي أَيَّامٍ مَعْدُودَاتٍ) [البقرة: 203]

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள் என்று கூறுகிறான்.

புத்தாடைகள் அணிவதோ,நறுமணங்களை பூசிக்கொள்வதோ மட்டும் ஈதின் நோக்கமல்ல,மாறாக படைத்தவனையும்,படைப்புக்களையும் சந்தோஷப்படுத்துவதே உண்மையான நோக்கமாகும்.

அதனால் தான் இமாம் ஹஸன் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
                       
يقول الحسن -رحمه الله-: "كل يومٍ لا نعصِي اللهَ فيه فهو عيد، وكلُّ يومٍ نقضِيه في طاعة الله -جل وعلا- فهو عيدٌ

அல்லாஹ்வுக்கு மாறுசெய்யாத ஒவ்வொரு நாளும்,அவனுடைய வணக்கத்தில் கழிகிற ஒவ்வொரு நாளும் உனக்கு ஈது தான்.
இஸ்லாம் மகிழ்ச்சிக்கு தடைபோடவில்லை,அல்லாஹ்வை மறக்கடிக்கிற
சந்தோஷம் வேண்டாம் என்று தான் சொல்கிறது.
ஒரு அறிஞன் சொன்னான்: இந்த உலகில் நீ எதை இழந்தாலும் அதற்கு பகரம் உண்டு!ஆனால் நீ அல்லாஹ்வை இழந்துவிட்டால் அதற்கு பகரமே கிடையாது.
பெருநாள் என்பது ஒரு முஸ்லிம் கட்டுப்பாடுகளிலிருந்து தன்னை விடுவிக்கும் நாளல்ல!மேலும் அல்லாஹ்வுடன்  உள்ள நம் உறவை முறித்துக்கொள்ளும் நாளுமல்ல.தக்பீர்தான் பெருநாள் தினத்தின் பெரு முழக்கமாகும்.அதுவே நம் கொள்கையின் பிரகடனமாகும்.
அதனால் தான் ஒரு முஸ்லிமின் வாழ்வின் முக்கிய தருனங்களில் தக்பீருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
பாங்கில்,இகாமத்தில்,தொழுகையில்,போராட்டத்தில்,போர்களத்தில், அனைத்திலும் தக்பீர்மயம்.
زينوا أعيادكم بالتكبير உங்களின் ஈதுப்பெருநாட்களை தக்பீரக் கொண்டு அழகுபடுத்துங்கள் என நபி ஸல்  அவர்கள் கூறினார்கள்.
எனவே இன்றய தினத்தில் முதலாவதாக அல்லாஹ்வை பெருமைப்படுத்  திய பின்னர், உலக அளவில் இஸ்லாத்தின் நிலை குறித்தும்,முஸ்லீம்களி ன் வாழ்வாதாரம் குறித்தும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
இந்த ஈதுல்அள்ஹாவில் நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் கேள்வி ஒன்று உண்டு. அது:

உலகில் முஸ்லீம்கள் சிறுபான்மையா?பெரும்பான்மையா?

இந்த கேள்வியின் விடையில் தான் இஸ்லாத்தின் எதிர்காலம் உள்ளது.
முஸ்லீம்களிடத்தில் எல்லா பலமும் வளமும் உண்டு,150 க்கும் மேற்பட்ட இஸ்லாமியநாடுகள்,200 கோடிக்கும் மேல் மக்கள்தொகை அதாவது உலகில் நான்கில் ஒருவர் முஸ்லிம்,பணமதிப்பை நிர்ணயம்செய்யும் எண்ணை வளம்,தாவரம்,தண்ணீர்,நிலம்,போன்ற எல்லா வளங்களையும் பலங்களையும் பெற்றிருந்தும் உலக அரங்கில் முஸ்லீம்கள் அங்கீகாரமி ல்லாத பலகீனமானவர்களாக இருக்கின்றனர்.என்ன காரணம்?

முஸ்லீம்களிடத்தில் என்ன இல்லை? தியாகம் இல்லை.ஆம்!இன்றைய இஸ்லாத்திற்கு தேவை பணமோ,நிலமோ ஆட்சியோ அல்ல! தியாகிகள் தேவை. தியாகம் என்பது போர்களத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல.அன்றாட வாழ்கைக்கும் தான். நபி இப்ராஹீம் அலை அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் இன்றயதினத்தில் இந்த உண்மையை புரிந்துகொண்டால் இந்நாள் நமக்கு படிப்பினை தரும் நாளாகும்.
இஸ்லாம் தீவிரவாதத்தால் வளர்ந்த மார்க்கமல்ல!தியாகத்தால் மலர்ந்த மார்க்கம்.
கடந்த கால வரலாற்றைப்புரட்டிப்பாருங்கள்,இந்த தீனை நிலை நாட்ட ஸஹாபிகள் தங்களின் பொருளை,பதவியை,உயிரை,உறவை,குடும்பத்தை,  நேரத்தை,உழைப்பை அத்தனையையும் தியாகம் செய்தனர்.
தியாகம் இல்லையேல் தீன் இல்லை,

أخرج البخاري عَنْ أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ: صَحِبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ سِنِينَ لَمْ أَكُنْ فِي سِنِيَّ أَحْرَصَ عَلَى أَنْ أَعِيَ الْحَدِيثَ مِنِّي فِيهِنَّ
أخرج البخاري عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: (( يَقُولُونَ إِنَّ أَبَا هُرَيْرَةَ يُكْثِرُ الْحَدِيثَ وَاللَّهُ الْمَوْعِدُ وَيَقُولُونَ مَا لِلْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ لَا يُحَدِّثُونَ مِثْلَ أَحَادِيثِهِ وَإِنَّ إِخْوَتِي مِنْ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمْ الصَّفْقُ بِالْأَسْوَاقِ وَإِنَّ إِخْوَتِي مِنْ الْأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمْ عَمَلُ أَمْوَالِهِمْ وَكُنْتُ امْرَأً مِسْكِينًا أَلْزَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مِلْءِ بَطْنِي فَأَحْضُرُ حِينَ يَغِيبُونَ وَأَعِي حِينَ يَنْسَوْنَ

எமன் தேசம் இந்த உம்மத்துக்கு தந்த பொக்கிஷம் ஹழ்ரத் அபூஹுரைரா ரலி அவர்கள்.
நபி ஸல் அவர்களின் தோழமையில் மூன்றாண்டுகள் மட்டுமே இருக்கிற நஸீபை பெற்றவர்கள்.ஹதீஸ்களை மனனம் செய்வதில் அளவு கடந்த பேராசை தனக்கு உண்டு என்று கூறுகிறார்கள்.
5374 ஹதீஸ்களை இந்த சமுதாயத்திற்கு தந்தவர்கள்.அதில் இமாம் புகாரி ரஹ் அவர்கள் 446 ஹதீஸ்களை தங்களின் ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்துள்ளனர்.
அபூஹுரைரா அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கிறார்கள்.முஹாஜிரீன்க ளும் அன்ஸாரிகளும் அந்தளவு ஹதீஸ்களை அறிவிக்க முடியவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.காரணம் என்ன வென்றால் என் சகோதரர்க ளான முஹாஜிர்கள் தங்களின் நேரத்தில் பெரும்பகுதியை வியாபாரத்தில் கழித்தனர்.அன்ஸார்கள் விவசாயத்தில் கழித்தனர்,நான் என் பெரும்பகுதி நேரத்தை இந்த தீனுக்கு கொடுத்தேன்.எனவே எப்போதும் பெருமானாருட ன் இருப்பேன்.என்று அபூஹுர்ரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த தீனுக்காக அபூஹுரைரா ரலி அவர்கள் மட்டும் தங்களின் நேரத்தை தியாகம் செய்யாவிட்டால் இத்தனை ஹதீஸ்கள் கிடைத்து இருக்குமா?

مصعب بن عمير رضي الله عنه لما اقتنع بداخله بسلامة الدين والتوحيد وبخطأ ما عليه قومه أقبل مبايعًا للنبي عليه الصلاة والسلام فحرمته أمه من كل شيء كانت تعطيه إياه، من المال والمتاع والتجارة والثياب والطعام والرائحة الحسنة وما شابه ذلك من أنواع النعيم حتى انه كان ساترا ممكنا منعما مرفها من أحسن وأجمل وأرفه شباب مكة..
فأقبل يومًا إلى رسول الله عليه الصلاة والسلام وعليه ثوبان مخرقان قد لبس الأول فإذا الخروق تظهر بعض جسده فلبس الثوب الثاني فوقه ليغطي خرق هذا بهذا، فلما رآه النبي عليه الصلاة والسلام دمعت عيناه وقال «لقد رأيت هذا وما شاب بمكة أرفه ولا أنعم منه».
فترك كل ما كان فيه من نعيم ضحى به في سبيل أن يتمسك بالتوحيد حتى إذا أسلم نفر من أهل المدينة على يد رسول الله صلى الله عليه وآله وسلم ثم طلبوا رجل يسافر معهم إلى المدينة ليعلمهم الدين اختاره النبي عليه الصلاة والسلام، فإذا به يضحّي إضافة ما ضحى به من أمواله وعزه التي كانت أمه تعطيه إياه يضحي أيضًا بالبلد التي نشأ فيه وترعرع فيه ومشى على أرضه وأكل من ثماره وصاحب أهل... يضحي بكل ذلك..
ويمضى إلى المدينة وبعد سنة واحدة يقيم فيها، أول جمعة أقيمت في الإسلام أقامها مصعب، ثم يعود بعد سنة إلى رسول الله صلى الله عليه وسلم ومعه أكثر من سبعين ما بين رجل وامرأة كلهم قد أسلموا على يده
سيرة الصحابة

ஹழ்ரத் முஸ்அப் இப்னு உமைர் ரலி அவர்கள் இந்த தீனை ஏற்றதற்காக நிறைய தியாகங்கள் செய்யவேண்டியதிருந்தது.உணவை, உடையை,சொத் தை, சுகத்தை,வியாபாரத்தை அனைத்தையும் துறந்தார்கள்.                     ஒரு நாள் கிழிந்த ஆடையுடன் அவரைப்பார்த்த நபி ஸல் அவர்கள் கண்ணீர் வடித்து சொன்னார்கள், இந்த வாலிபர் ஒரு காலத்தில் மக்காவி ல் அதிக சுகபோகத்துடன் வாழ்ந்தவர் என்று கூறினார்கள்.
இவர் தான் மதீனாவில் முதலாவதாக ஈமானுடன் கால்வைத்தவர் ,மாத்தி ரமல்ல ஈமானின் சுடரை மதீனாவில் ஏற்றியவர்,மதீனாவில் ஓராண்டு இவர் செய்த தியாகத்தால் 70 க்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள்.
இப்படிப்பட்ட தியாகிகளின் உரத்தால் வளர்க்கப்பட்டது தான்  இஸ்லாம்.
நாம் ஈமானுக்காக எந்த விலையும் கொடுக்கவில்லை,ஆனால் அந்த ஈமானை பாதுகாக்க தியாகம் செய்தேயாகவேண்டும்.
இது நபி இப்ராஹீம் அலை அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் நன்நாளாகும்.தியாகத்தில் உச்சகட்ட தியாகம் நம்முடைய காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைப்பதும்,அவன் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது ம் தான்.இதுவே நபி இப்ராஹீம் அலை போன்ற நபிமார்களின் தியாகமாகும்.

عمران بن حصين -رضي الله عنه-، الصحابي الجليل الذي شارك مع النبي -صلى الله عليه وسلم- في جميع غزواته، فلما توفي النبي -صلى الله عليه وسلم- أصابه شلل نصفي فرقد على ظهره ثلاثين عامًا حتى توفي وهو لا يتحرك، تخيلوا -أيها الناس- ذلك؟! ثلاثون عامًا وهو -رضي الله عنه- نائم على ظهره لا يتحرك، لدرجة أنهم نقبوا له في السرير، أي: جعلوا فيه فتحة ليقضي حاجته لأنه لا يستطيع الحركة، فدخل عليه بعض الصحابة فرأوه فبكوا، فنظر إليهم وقال: لم تبكون؟! قالوا: لحالك، وما أنت عليه من هذا الابتلاء؛ فقال عمران بن حصين -رضي الله عنه-: "شيء أحبه الله أحببته، أنتم تبكون، أما أنا فراضٍ، أحب ما أحبه الله، وأرضى بما ارتضاه الله تعالى، وأسعد بما اختاره الله"، ثم قال لهم: "والله أكون على حالي هذا فأحس بتسبيح الملائكة وأحس بزيارة الملائكة، فأعلم هذا الذي بي ليس عقوبة وإنما يختبر رضائي عنه، أشهدكم أني راضٍ عن ربي الصحابة الصحابة


இம்ரான் இப்னு ஹசீன் ரலி அவர்கள் நாயகத்துடன் பல போர்களில் கலந்து கொண்டவர்.நபி ஸல் அவர்களின் வபாத்திற்கு பின் கடுமயான வாத நோய் தாக்கப்பட்டு 30 வருடம் படுக்கை வாழ்க்கை.சுய தேவைகள் கூட படுத்தநிலையில் தான்.உடலை அசைக்க கூடமுடியாத கடுமையான நோய்.அப்போது அவர்களை சந்திக்கச்சென்ற சில ஸஹாபாக்கள் அவர்களின் நிலை கண்டு அழுதபோது, ஏன் அழுகிறீர்கள்? அல்லாஹ் பிரியப்பட்டதை நான் பிரியப்பட்டுவிட்டேன்,அவன் திருப்திபட்ட்தை நான் திருப்திபட்டுவிட்டேன்.என்று சொன்னதுடன்,நீங்கள் என்னை இந்த நிலையில் காண்கிறீர்,ஆனால் நான் மலக்குமார்களின் தஸ்பீஹை கேட்கிறேன்,அவர்களை சந்திக்கிறேன் என்றும் கூறினார்கள்.
அல்லாஹ்வுக்காக எதையும் பொருந்திக்கொள்வதே உண்மையான தியாகம்.
தாபியீன்களில் முக்கியமான மூன்று நபர்கள் ஒரு சபையில் அமர்ந்திருந்த போது மூவரும் துஆச் செய்தனர்.
ஒருவர்: فقال الشعبي: "اللهم إني أسألك أن أموت قريبًا
யா அல்லாஹ்! சீக்கிரத்தில் எனக்கு மரணத்தை கொடு!காரணம் கேட்கப்பட்டது? குழப்பமான காலத்திலிருந்து ஈமானை பாதுகாக்கவே அப்படி துஆச்செய்தேன் என்றார்.
இரண்டாமவர்: سعيد بن المسيب.      اللهم أحيني طويلاً!
யாஅல்லாஹ்! எனக்கு நீண்ட ஆயுளை கொடு.காரணம் கேட்டபோது நிறைய அமல் செய்ய வேண்டும் என்றார்கள்.
மூன்றாமவர் :   اللهم لا أختار لنفسي؛ فاختر أنت ما شئت
எனக்காக எதையும் நான் கேட்கமாட்டேன்,நீ விரும்பியதை எனக்கு கொடு அதுவே எனக்கு நன்மையாக அமையும் என்றார்கள்.இதை கேட்ட அவ்விருவரும்      أنت أفضلنا  எங்களில் நீயே சிறந்தவர் என்றார்கள்.
அல்லாஹ்வின் விருப்பத்தையே தன் விருப்பமாக மாற்றுகிற இந்த பண்பையே ஈதுல் அள்ஹா நமக்கு போதிக்கிறது என்று கூறி இந்த நாளைப்போல என்றும் எப்போதும் முஸ்லீம்களின் வாழ்வை அல்லாஹ் மகிழ்ச்சியாக்கி வைப்பானாக !ஆமீன்.

2 comments:

  1. alhamdhu lillah miga arpudham hazrath avargale thngalin sevai yellaa kaalatthilum payan perum jazaakallah

    ReplyDelete
  2. ماشالله

    ReplyDelete