நம்மிடம் நல்லவிதமாக
நடந்து கொள்பவரிடம் நாம் நல்லவிதமாக நடந்து கொள்வது நல்ல குணம் தான். ஆனால் பிறர் நம்முடன்
தீங்காக நடந்தாலும் நாம் நல்லவிதமாக நடப்பதென்பது மிக உன்னதக் குணமாகும். அத்தகைய உயர்ந்த
நற்குணத்துடன் நபியவர்கள் வாழவும் வழிகாட்டவும் செய்தார்கள். அது குறித்து தன் தூதரை
அல்லாஹ் இவ்வாறு புகழ்கிறான்:
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
நிச்சயமாக! நீர் மிகவும்
மகத்தான குணநலத்;தின் மீது இருக்கிறீர்
(68 : 4)
ஆம், தீமை செய்தவருக்கும் நன்மை செய்வது என்பது அது சாதாரண
ஒன்றல்ல! அதனால் தான் மகத்தான குணநலன் என்று அல்லாஹ் புகழ்கிறான். இது அல்லாஹ் நபிக்கு கொடுத்த தனித்துவமான தன்மை.
وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ
(நபியே!) அல்லாஹ்வின்
பெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டீர். கடுகடுப்பானவராகவும்
வன்னெஞ்சராகவும் நீர் இருந்திருந்தால் இவர்கள் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள்
(3 : 159)
முகமது நபி அவர்களுக்கு
ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது
குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டை சமையுங்கள்'
என்று கூறினார்கள். பெரிய
பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது.
உணவு கிடைக்காத
தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். முகமது நபி அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர்.
உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால்
முகமது நபி அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது
ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?'
என்று கேட்டார். அதற்கு நபி
அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு
முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே
ஆக்கியுள்ளான்.' என்று விடையளித்தார்.
-ஆதாரம் -அபுதாவுத்
3773, பைஹகீ 14430
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا
أَنَّهَا قَالَتْ
مَا خُيِّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَمْرَيْنِ إِلَّا أَخَذَ أَيْسَرَهُمَا مَا لَمْ يَكُنْ
إِثْمًا فَإِنْ كَانَ إِثْمًا كَانَ أَبْعَدَ النَّاسِ مِنْهُ وَمَا انْتَقَمَ رَسُولُ
اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِنَفْسِهِ إِلَّا أَنْ تُنْتَهَكَ حُرْمَةُ
اللَّهِ فَيَنْتَقِمَ لِلَّهِ بِهَا
.
இரண்டு விஷயங்களில்
விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள்
அவ்விரண்டில் இலேசானதையே - அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் -எப்போதும்
தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்களிலேயே அதிகமாக அதிலிருந்து
வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை;
அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம்
எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின்
சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர. (அப்போது மட்டும் பழி
வாங்குவார்கள்.)
3560. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
உஹத் போரில் நபிகளாரின்
முகத்தில் காயம் ஏற்பட்டது. பல் உடைக்கப்பட்டது. அந்நேரத்தில் நபியவர்களே! இந்த எதிரிகள்
நாசமாகட்டுமென நீங்கள் பிரார்த்தனை செய்யக் கூடாதா? என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு நபி(ஸல்)
அவர்கள் பதிலளித்தார்கள்: சாபமிடுபவனாக நான் அனுப்பப்படவில்லை! நானோ ஓர் அழைப்பாளனாக,
அருட்கொடையாகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்.
யா அல்லாஹ்! என் கூட்டத்தாருக்கு நேர்வழிகாட்டு! நிச்சயமாக அவர்கள் அறியாத மக்கள் ஆவர்!
நபி (ஸல்)
அவர்களின் நளினம்!
அபூ ஹுரைரா (ரலி)
அறிவித்தார்கள் : “ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந்
நபவீ பள்ளி வாசலு)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி
மக்கள் குதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவரைவிட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி
விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள்.
கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள்.
ஆதாரம் : நூல். புகாரி.
நபி (ஸல்)
அவர்கள் சிறுவர்களிடம் காட்டிய பரிவு!
سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ
عَنْهُ يَقُولُ
إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ لَيُخَالِطُنَا حَتَّى يَقُولَ لِأَخٍ لِي صَغِيرٍ يَا أَبَا عُمَيْرٍ مَا
فَعَلَ النُّغَيْرُ
அனஸ் இப்னு மாலிக்
(ரலி) அறிவித்தார்கள் : “நபி (ஸல்) அவர்கள்
எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் ‘அபூ உமைரே! பகுதி உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்)
என்ன ஆயிற்று?” என்று கூடக் கேட்பார்கள்.
ஆதாரம் : புகாரி
.
ஆயிஷா (ரலி) அறிவித்தார்கள்
: “நான் (சிறுமியாக இருந்தபோது)
பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன்
விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால்
அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன்
(சேர்ந்து) விளையாடுவார்கள்”
ஆதாரம் : புகாரி.
பிற
உயிரினங்களின் மீதும் நபியின் அன்பு.
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ
أَرْدَفَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ خَلْفَهُ ذَاتَ يَوْمٍ فَأَسَرَّ إِلَيَّ حَدِيثًا لَا أُحَدِّثُ
بِهِ أَحَدًا مِنْ النَّاسِ وَكَانَ أَحَبُّ مَا اسْتَتَرَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَاجَتِهِ هَدَفًا أَوْ حَائِشَ نَخْلٍ قَالَ فَدَخَلَ
حَائِطًا لِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَإِذَا جَمَلٌ فَلَمَّا رَأَى النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَنَّ وَذَرَفَتْ عَيْنَاهُ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ ذِفْرَاهُ فَسَكَتَ فَقَالَ مَنْ رَبُّ هَذَا
الْجَمَلِ لِمَنْ هَذَا الْجَمَلُ فَجَاءَ فَتًى مِنْ الْأَنْصَارِ فَقَالَ لِي يَا
رَسُولَ اللَّهِ فَقَالَ أَفَلَا تَتَّقِي اللَّهَ فِي هَذِهِ الْبَهِيمَةِ الَّتِي
مَلَّكَكَ اللَّهُ إِيَّاهَا فَإِنَّهُ شَكَا إِلَيَّ أَنَّكَ تُجِيعُهُ وَتُدْئِبُهُ
அப்துல்லாஹ் பின்
ஜஅஃபர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;: ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் பின்னால் என்னை அமர்த்தியிருந்தார்கள்.
அன்ஸாரி ஒருவரது தோட்டத்தினுள் சென்றார்கள். அங்கே ஓர் ஒட்டகம்! நபி(ஸல்) அவர்களைக்
கண்டவுடன் கனைத்தது. அதன் இரு கண்களும் கண்ணீர் வடித்தன. அதன் அருகே நபியவர்கள் வந்து
அதன் காதுமடலைத் தடவிக்கொடுத்தார்கள். இதன் எஜமானன் யார்? என்று கேட்டார்கள். ஓர் அன்ஸாரி இளைஞர் வந்து அல்லாஹ்வின்
தூதரே! இது எனது ஒட்டகம் தான் என்றார். அவரிடம் நபியவர்கள் சொன்னார்கள்: அல்லாஹ் உனக்கு
உடமையாக்கிக் கொடுத்துள்ள வாயில்லாத இந்த உயிரினங்கள் விஷயத்தில் நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!
இதோ! நீ இந்த ஒட்டகத்தைப் பட்டினி போடுகிறாய் என்றும் கஷ்டப் படுத்துகிறாய் என்றும்
என்னிடம் முறையிடுகிறதே!
(நூல்: அபூ தாவூத்)
ஒரு தடவை சொன்னார்கள்:
தனது காலணியில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்து அந்த நாய்க்குத் தண்ணீர் புகட்டினான்.
அப்போது ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! இந்த வாயில்லா ஜீவன்கள் விஷயத்திலும்
எங்களுக்கு நற்கூலி கிடைக்குமா? அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
ஆம், உயிருள்ள எந்த ஒரு படைப்புக்கு உதவினாலும் நற்கூலி
உண்டு
நூல்: புகாரி.
உயிரில்லாத
வஸ்துவின் மீது நபியின் கருணை
நபி(ஸல்) அவர்கள்
ஜும்ஆ நாளின்போது (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு மரம்... அல்லது பேரீச்ச மரத்தின்....
(அடிப்பாகத்தின்) மீது சாய்ந்த படி (உரையாற்றிய வண்ணம்) நின்றிருந்தார்கள். அப்போது
ஓர் அன்சாரிப் பெண்மணி... அல்லது ஓர் அன்சாரித் தோழர்.., 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உங்களுக்கு ஓர் உரை
மேடை (மிம்பர்) செய்து தரலாமா?' என்று கேட்டார். நபி(ஸல்)
அவர்கள், 'நீங்கள் விரும்பினால்
(செய்து கொடுங்கள்)" என்று பதிலளித்தார்கள். அவ்வாறே அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு
(மிம்பர்) உரை மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள். ஜும்ஆ நாள் வந்தபோது நபி(ஸல்)
அவர்கள் (உரை நிகழ்த்திட) உரைமேடைக்குச் சென்றார்கள். உடனே, அந்தப் பேரீச்ச மரக்கட்டை குழந்தையைப் போல் தேம்பிய
(படி அமைதியாகிவிட்ட)து. நபி(ஸல்) அவர்கள், 'தன் மீது (இருந்தபடி உரை நிகழ்த்தும் போது) அது
கேட்டுக் கொண்டிருந்த நல்லுபதேசத்தை நினைத்து ('இப்போது நம் மீது அப்படி உபதேச உரைகள் நிகழ்த்தப்படுவதில்லையே'
என்று ஏங்கி) இது அழுது கொண்டிருந்தது"
என்று கூறினார்கள்.
3584. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
سَمِعْتُ نَافِعًا عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ
اللَّهُ عَنْهُمَا
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ يَخْطُبُ إِلَى جِذْعٍ فَلَمَّا اتَّخَذَ الْمِنْبَرَ تَحَوَّلَ إِلَيْهِ
فَحَنَّ الْجِذْعُ فَأَتَاهُ فَمَسَحَ يَدَهُ عَلَيْهِ
நபி(ஸல்) அவர்கள்
(பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி
உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்த பின்னால்
அதற்கு மாறிவிட்டார்கள். எனவே, (நபி-ஸல்- அவர்கள்
தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப்பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே,
நபி(ஸல்) அவர்கள் அதனிடம்
சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தன் கையை வைத்து (பரிவுடன்) வருடிக்
கொடுத்தார்கள்.
3583. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ قَالَ
ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى رَسُولِ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي
وَقَعَ فَمَسَحَ رَأْسِي وَدَعَا لِي بِالْبَرَكَةِ وَتَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ
ثُمَّ قُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى خَاتِمٍ بَيْنَ كَتِفَيْهِ
3541. சாயிப் இப்னு யஸீத்(ரலி) கூறினார்கள்.
என்னை இறைத்தூதர்(ஸல்)
அவர்களிடம் என் தாயின் சகோதரி அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் (பாதங்களில்)
நோய் கண்டுள்ளான்" என்று கூறினார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் (இரக்கத்துடன்) என் தலையை வருடிக்
கொடுத்து, என் வளத்திற்காகப்
பிரார்த்தித்தார்கள். பின்னர் 'உளூ' செய்தார்கள். அவர்கள் உளூச் செய்த தண்ணீரை நான்
சிறிது குடித்தேன். பிறகு, நான் அவர்களின் முதுகுக்குப்
பின்னே நின்று, அவர்களின் இரண்டு
புஜங்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன்.
(நபித்துவ முத்திரை
எப்படியிருந்தது என்று கேட்கப்பட்டபோது அறிவிப்பாளர்) முஹம்மத் இப்னு உபைதில்லாஹ்(ரஹ்),
'குதிரையின் இருகண்களுக்கு
மத்தியிலுள்ள வெண்மை போன்றிருந்தது" என்று பதிலளித்தார்கள்.
நூல். புகாரி. 3541.
மற்றொரு ரிவாயத்தில்..
சாயிப் இப்னு யஸீத்(ரலி)
அவர்களைத் தொண்ணூற்று நான்கு வயது உடையவர்களாக, (அந்த வயதிலும்) திடகாத்திரமானவர்களாக (கூன் விழாமல்)
முதுகு நிமிர்ந்தவர்களாக கண்டேன். அவர்கள், 'எனக்குக் கேள்விப்புலன் மற்றும் பார்வைப் புலனின்
நலம் அல்லாஹ்வின் தூதரின் பிரார்த்தனையால் தான் வழங்கப்பட்டுள்ள என்பதை நான் அறிந்திருக்கிறேன்.
என் தாயின் சகோதரி என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியின் மகன் நோயுற்றிருக்கிறார்.
இவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்யுங்கள்' என்று கூறினார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் எனக்காக பிரார்த்திதார்கள்"
என்று கூறினார்கள். நூல். புகாரி. 3540
நபியின் செயல்பாடுகள்..
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
قَالَ
مَا عَابَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ طَعَامًا قَطُّ إِنْ اشْتَهَاهُ أَكَلَهُ وَإِلَّا تَرَكَهُ
.
நபி(ஸல்) அவர்கள்
எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்;
இல்லையென்றால்விட்டு விடுவார்கள்.
3563. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
பலரும் அமர்ந்து சாப்பிடும்
ஒரு தட்டில் மேல் நிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சாப்பிடுவதை கவுரவக் குறைவாகவே கருதுவார்கள்.
மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பழக்கமாக
இருந்தது. இதனால்தான் அந்த கிராமவாசி கூட அமர்ந்ததை குறை காண்கிறார். தாம் ஒரு ஆட்சியாளர்
என்றோ மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர்
என்றோ முகமது நபி அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்க்க் கூடிய
ஒரு மனிதனாக மட்டும் தான் தம்மை முன்னிறுத்துகிறார்கள். இப்படி ஒரு பண்பான ஆட்சியாளரை
நாம் பார்த்திருக்கிறோமா?
عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ عَنْ أَبِي
مَسْعُودٍ قَالَ
أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ رَجُلٌ فَكَلَّمَهُ فَجَعَلَ تُرْعَدُ فَرَائِصُهُ فَقَالَ لَهُ هَوِّنْ
عَلَيْكَ فَإِنِّي لَسْتُ بِمَلِكٍ إِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ تَأْكُلُ الْقَدِيدَ
ஒரு மனிதர் முதன்
முதலாக முகமது நபி அவர்களைச் சந்திக்க வருகிறார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் உடலை
வளைத்து பவ்யமாக குடி மக்கள் நிற்பதுதான் அன்றைய வழக்கம. முகமது நபியையும் அதுபோல்
நினைத்துக் கொண்டு உடல் நடுங்கி பய பக்தியுடன் வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு
வந்த குறைஷிக் குலத்துப் பெண்ணுடைய மகன்தான் நான்.' என்று கூறி அவரை சகஜ நிலைககு கொண்டு வந்தார்கள்.
-நூல் இப்னுமாஜா 3303.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
நமது தமிழ்நாட்டு முதல்வர் மேடையில் பேசும் போது மற்ற அமைச்சர்கள் நின்று கொண்டிருப்பதை
பார்க்கிறோம். முதல்வரின் கால்களில் விழுவதையும் பார்க்கிறோம். அதுவும் இந்த இருபதாம்
நூற்றாண்டில். ஆனால் முகமது நபியோ ஒரு மன்னர். அதிலும் மதத் தலைவர் தனது குடிமக்களிடம்
எவ்வளவு அன்யோன்யமாக பழகியிருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது.
தரையில் எதுவும் விரிக்காமல்
அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள்
அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள்.
-தப்ரானி 12494
அகழ் யுத்தத்தின்
போது முகமது நபி அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள்.
முகமது நபி அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.
-புகாரி 2837,
3034,4101
முகமது நபி அவர்கள்
மதினா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.
-புகாரி 3906
அண்ணல் நபிகளார் போதிக்கும்
ஓர் அடிப்படைத் தத்துவம் உலகில் சமூகக் கூட்டு வாழ்வு சீர் பெற ஓர் அருட்கொடையாகத்
திகழ்கிறது! அது இதுதான்:
அநீதி இழைத்தவனை மன்னித்துவிடு!
கேடு செய்தவனுக்கும்
நன்மை செய்!
உனக்கு விரும்புவதையே
உன் சகோதரனுக்கும் விரும்பு!
இத்தகைய உயர் போதனைகளைத்
தாங்கிய நபிமொழிகள் வருமாறு:
அநீதி இழைத்தவரை மன்னிக்க
வேண்டும் என்றும் உறவைத் துண்டித்தவருடன் இணைந்த வாழ வேண்டும் என்றும் வழங்க மறுத்தவனுக்கும்
வழங்கிட வேண்டும் என்றும் என் இரட்சகன் எனக்குக் கட்டயையிடுகிறான்' (ஜாமிஉல் உஸூல்)
எனது உயிர் எவன் கைவசம்
உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்பாத
வரையில் எந்த மனிதனும் இறைநம்பிக்கை கொண்டவனாகத் திகழ முடியாது'
(நூல்: புகாரி, முஸ்லிம்)
அந்த வகையில் அல்லாஹ்வின்
மகத்தான குணாம்சங்களான ரஹ்மத்-கருணை, கிருபையை நாம் நமது வாழ்க்கையில் மலரச் செய்தால் அவனது அன்பையும் நெருக்கத்தையும்
பெறலாம்.
நபி(ஸல்) அவர்கள்
அருளினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இணையிலாக் கிருபையாளன். கிருபை செய்பவர்களை நேசிக்கிறான்.
மேலும் கூறினார்கள்;:
இப்பூமியில் உள்ளோர் மீது
கிருபை பொழியுங்கள்., வானத்திலுள்ள (இறை)வன்
உங்கள் மீது கிருபை பொழிவான் (நூல்;: புகாரி, முஸ்லிம்)
.
قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو
بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ إِنَّكَ لَتَصُومُ الدَّهْرَ وَتَقُومُ اللَّيْلَ فَقُلْتُ نَعَمْ قَالَ
إِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ هَجَمَتْ لَهُ الْعَيْنُ وَنَفِهَتْ لَهُ النَّفْسُ
لَا صَامَ مَنْ صَامَ الدَّهْرَ صَوْمُ ثَلَاثَةِ أَيَّامٍ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ
قُلْتُ فَإِنِّي أُطِيقُ أَكْثَرَ مِنْ ذَلِكَ قَالَ فَصُمْ صَوْمَ دَاوُدَ عَلَيْهِ
السَّلَام كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا وَلَا يَفِرُّ إِذَا لَاقَى
அப்துல்லாஹ் இப்னு
அம்ர் இப்னுல் ஆஸ் {ரலி} அவர்கள் குறித்து, மாநபி {ஸல்} அவர்களிடம்,
குடும்பத்தை சரியாக கவனிப்பதில்லை
என்று புகார் கூறப்பட்டது.
உடனே, மாநபி {ஸல்} அவர்கள் அப்துல்லாஹ் {ரலி} அவர்களைச் சந்தித்து “ உம்மைப் பற்றி இவ்வாறெல்லாம் கூறப்படுகின்றதே உண்மைதானா?
என்று கேட்டு விட்டு, “
இனி இவ்வாறு நடந்து கொள்ளாதீர்!
(சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டு
விடும்! சிறிது நேரம் தொழுவீராக! மேலும், சிறிது நேரம் உறங்குவீராக!
ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய
வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச்
செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உமது மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன!
என்று அறிவுரை வழங்கினார்கள்.” நூல்: புகாரி,
அருமையான கட்டுரை மாஷா அல்லாஹ்
ReplyDeleteMashaallah
ReplyDelete