Thursday, 23 January 2014

நண்பர்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்.



மனிதனை நல்லவனாக அல்லது தீயவனாக . உயர்ந்தவனாக அல்லது தாழ்ந்தவனாக உருவாக்கும் மாபெரும் சக்தி இவ்வுலகில் இரண்டு விஷயத்துக்கு உண்டு. ஒன்று சுற்று சூழல். மற்றொன்று நட்பு. இவ்விரண்டும் தான் ஒரு மனிதனுடைய வாழ்வை முடிவு செய்கிறது. எனவே சுற்றுச் சூழலையும் நட்பையும் ஏற்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்துவோம்.

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் தனிமையை விரும்புவதில்லை. துணைக்கு நண்பன் வந்து விட்டால் நேரம் போவதே தெரியாமல் எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறோம். நண்பர்கள் அதிகமாக கூடிவிட்டால் நம்முகத்தில் கவலையையே பார்க்க இயலாது. சந்தோஷமாக காலத்தை கடத்துவதற்கு ஒரு சாதனமாக நட்பு இங்கு பயன்படுகிறது.

நமக்கு ஏற்படும் கஷ்டங்களை நமது நண்பனிடம் தெரிவிக்கும் போது நெஞ்சத்தில் ஏற்பட்ட கனம் காணாமல் போய் விடுகிறது. இங்கு நட்பு என்பது கட்டடத்தைத் தாக்க வரும் மின்னலை இடிதாங்கி வாங்கிக் கொண்டு கட்டடத்தை காப்பதைப் போல உதவுகிறது.

நண்பர்களை அதிகம் பெற்றவர்கள் தங்களது காரியங்களை சுலபமாக முடித்துவிட்டு வருகிறார்கள். மருத்துவமனையில் நண்பர் பணிபுரிந்தால் இவர் மருத்துவமனை செல்ல நினைக்கும் போது தேவையான ஏற்பாடுகளை நண்பரே செய்து கொடுக்கிறார். கஷ்டங்கள் வரும்போது பக்கபலமாகவும் நிற்கிறார்.

இன்னும் இது போன்று பல பயன்கள் நட்பின் மூலம் மனிதர்களுக்கு கிடைப்பதால் இஸ்லாமும் நண்பர்கள் வைத்துக் கொள்வதை தடை செய்யாமல் ஊக்கப்படுத்துகிறது. நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமூட்டுகிறது. ஆனால் அந்த நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்றும் வரைமுறையை ஏற்படுத்தித் தந்துள்ளது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ الْأَصْحَابِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ وَخَيْرُ الْجِيرَانِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِجَارِهِ

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

  தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார் (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

 திர்மிதி (1867)

நபி (ஸல்) அவர்கள் நட்புவைப்பதை நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

عَنْ أَبِي ذَرٍّ قَالَ
قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَحْقِرَنَّ مِنْ الْمَعْرُوفِ شَيْئًا وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம் (4760)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ الْأَصْحَابِ عِنْدَ اللَّهِ خَيْرُهُمْ لِصَاحِبِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர் அவர்களில் யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ அவராவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: திர்மிதி (1867)



  அழகிய நட்பு நம்மை படைத்த இறைவனின் பொருத்தத்தைப் பெற்றுத் தரக்கூடியதாக உள்ளதால் நாம் தேர்வு செய்யும் நண்பன் நாம் பின்பற்றும் இஸ்லாமியக் கொள்கை பிடிப்புள்ளவனா? என்பதை பார்க்க வேண்டும்.எல்லோரையும் நண்பர்களாக ஆக்கிக் கொள்வதை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிப்பதில்லை.

  அதேபோல் நண்பனை தேர்வு செய்வதற்கு முன்னால் நம்முடைய குணத்திற்கும் பழக்க வழக்கத்திற்கும் ஒத்துப் போகுமா? என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

عن عائشة قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " الأرواح جنود مجندة فما تعارف منها ائتلف وما تناكر منها اختلف " . رواه البخاري

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று(குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.  அறிவிப்பாளர் .ஆயிஷா (ரலி)

நூல். புகாரி 3336)

  நண்பர்களைப் பொருத்தவரையிலும் உயிர் காப்பான் தோழன் என்ற அடிப்படையில் நண்பர்கள் அமைய வேண்டும். உபத்திரவம் கொடுக்கக்கூடிய நண்பர்கள் கிடைத்து விடக் கூடாது, அப்பேர்ப்பட்டவர்களை தேர்வு செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. மேலும் தீயவர்களுடைய நட்பு இவ்வுலக வாழ்க்கையை மட்டுமின்றி மறுமை வாழ்வையும் நாசப்படுத்தி விடும் என்பதை உணர வேண்டும். அதே போல் நல்லவர்கள், நேர்மையானவர்கள் உடைய நட்பு இவ்வுலக வாழ்வை மட்டுமின்றி மறுமை வாழ்வையும் சந்தோசமாக அமைத்து விடும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுமாறு கூறினார்கள்.

الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ

இறையச்சம் உள்ளவர்களைத்தவிர நண்பர்கள் அந் நாளில் சிலருக்கு சிலர் பகைவர்களாக ஆகிவிடுகிறார்கள். 43-67



நல்ல நட்பு நம்மை உயர்த்திவிடும்

(ورفعناه مكانا عليا) فقال كعب: أما إدريس فإن الله أوحى إليه اني أرفع لك كل يوم مثل جميع عمل بني آدم (لعله من أهل زمانه) فأحب أن يزداد عملا فأتاه خليل له من الملائكة فقال  له : ان الله أوحى إلي وكذا فكلم ملك الموت حتى أزداد عملا فحمله بين جناحيه ثم صعد به إلى السماء فلما كان في السماء
الرابعة تلقاه ملك الموت منحدرا فكلم ملك الموت في الذي كلمه فيه إدريس، فقال: وأين إدريس ؟ قال هو ذا على ظهري فقال ملك الموت فالعجب  بعثت وقيل لي اقبض روح إدريس في السماء الرابعة، فجعلت أقول: كيف أقبض روحه في السماء الرابعة وهو في الارض فقبض روحه هناك فذلك قول الله عزوجل (ورفعناه مكانا عليا).
ورواه ابن أبي حاتم عند تفسيرها * وعنده فقال لذلك الملك: سل لي ملك الموت كم بقي منعمري ؟ فسأله وهو معه كم بقي من عمره ؟ فقال: لا أدري حتى أنظر، فنظر فقال: إنك لتسألني عن رجل ما بقي من عمره إلا طرفة عين، فنظر الملك إلى تحت جناحه إلى إدريس فإذا هو قد قبض وهو لا يشعر

ஹிலால் பின் யசாப் (ரலி) கூறியுள்ளார்கள். நான் சபையில் இருந்தபோது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கஅப் (ரலி) அவர்களிடம் நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம் என்று அல்லாஹ் கூறியுள்ளதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இறைத்தூது அறிவித்தான். நிச்சயமாக நான் ஒவ்வொரு நாளும் ஆதமுடைய பிள்ளைகளின் அனைத்து நற்செயல்களைப்போல உமக்கு உயர்த்துவேன். (இது அவர்களுடைய காலத்தின் வாழ்ந்தவர்களின் நற்செயல்களாக இருக்கலாம்.) எனவே அவர் இன்னும் அதிகமாக நன்மைசெய்ய விரும்பினார்.

 வானவர்களிலிருந்து அவருக்குரிய ஒரு நண்பர் அவரிடம் வந்தார். நிச்சயமாக அல்லாஹ் எனக்கு இன்னின்ன இறைத்தூதை அறிவித்துள்ளான் என்று அவர் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் கூறினார். இத்ரீஸ் நபி அவர்கள் உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவரிடம் எனக்காக பேசுவீர். (அதாவது) நான் நற்செயல்களை அதிகப்படுத்துகின்ற வரை என்னுடைய உயிரைக் கைப்பற்றுவதை அவர் பிற்படுத்தட்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த வானவர்  இத்ரீஸ் நபி அவர்களை தம்முடைய இரண்டு இறக்கைகளுக்குள் வைத்துகொண்டு வானத்தை நோக்கி ஏறினார். நான்காவது வானத்தை அடைந்த போது திடீரென அவ்வானவரை உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் சந்தித்தார். இத்ரீஸ் (அலை) எதைப் பேசியிருந்தாரோ அதைப்பற்றி அவ்வானவர் உயிரைக்கைப்பற்றக்கூடிய வானவரிடம் பேசினார். இத்ரீஸ் எங்கே என்று அவர் வினவினார். இதோ அவர் என்னுடைய முதுகில் இருக்கிறார் என்று அவ்வானவர் பதிலளித்தார். அப்போது மலக்குல் மவ்த் என்ன ஆச்சரியம் நான்தான் (அவருடைய உயிரைக் கைப்பற்ற) அனுப்ப பட்டுள்ளேன். இத்ரீஸ் உடைய உயிரை நான்காவது வானத்தில் வைத்து கைப்பற்றுமாறு எனக்கு கூறப்பட்டுள்ளது.அவர் பூமியில் இருக்கின்ற நிலையில் நான் எவ்வாறு அவருடைய உயிரை நான்காவது வானத்தில் கைப்பற்ற முடியும்? என்று நான் என்னையே கேட்கலானேன் என்று கூறிவிட்டு அங்கேயே அவருடைய உயிரைக் கைப்பற்றிக்கொண்டார் இதுதான் அல்லாஹ் கூறுகின்ற நாம் அவரை ஓர் உயரிய இட்த்தில் உயர்த்தினோம் என்பதாகும் என கஅப் (ரலி) பதிலளித்தார்கள்.

நூல். தப்ஸீர் அத்தப்ரீ.
.


பரிசுத்தமான அன்புக்கு கிடைக்கும் கூலி..


عَنْ أَبِي هُرَيْرَةَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا زَارَ أَخًا لَهُ فِي قَرْيَةٍ أُخْرَى فَأَرْصَدَ اللَّهُ لَهُ عَلَى مَدْرَجَتِهِ مَلَكًا فَلَمَّا أَتَى عَلَيْهِ قَالَ أَيْنَ تُرِيدُ قَالَ أُرِيدُ أَخًا لِي فِي هَذِهِ الْقَرْيَةِ قَالَ هَلْ لَكَ عَلَيْهِ مِنْ نِعْمَةٍ تَرُبُّهَا قَالَ لَا غَيْرَ أَنِّي أَحْبَبْتُهُ فِي اللَّهِ عَزَّ وَجَلَّ قَالَ فَإِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكَ بِأَنَّ اللَّهَ قَدْ أَحَبَّكَ كَمَا أَحْبَبْتَهُ فِيهِ
 
 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேறொரு ஊரில், இருக்கும் தன் சகோதரனை சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்தபோது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை சந்திக்கச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா? என்று கேட்டார். அதற்கு இல்லை. கண்ணியமானவனும் சங்கையானவனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் எனக் கூறினார்.

அறிவிப்பாளர். அபூஹூரைரா   (ரலி) அவர்கள்.

நூல்.  முஸ்லிம் 4656)

 

 .

 யார் நல்லவர்களை நண்பர்களாக ஆக்கிக் கொண்டார்களோ அவர்கள் மறுமை நாளில் கவலைப்பட மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لَأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلَا شُهَدَاءَ يَغْبِطُهُمْ الْأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنْ اللَّهِ تَعَالَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ قَالَ هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلَا أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لَا يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلَا يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ وَقَرَأَ هَذِهِ الْآيَةَ
{ أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ }

அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. இவர்களுக்கு அல்லாஹ் விடத்தில் கிடைக்கும் அந்தஸ்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். சஹாபாக்கள், அவர்கள் யார்? என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த  பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக் காட்டினார்கள்.

உமர் பின் அல்கத்தாப் (ரலி)

  நூல் .அபூதாவூத் 3060)
.
 நேசிப்பவரிடம் அன்பைத் தெரிவித்தல்

أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ
كُنْتُ جَالِسًا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ مَرَّ رَجُلٌ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأُحِبُّ هَذَا الرَّجُلَ قَالَ هَلْ أَعْلَمْتَهُ ذَلِكَ قَالَ لَا فَقَالَ قُمْ فَأَعْلِمْهُ قَالَ فَقَامَ إِلَيْهِ فَقَالَ يَا هَذَا وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ فِي اللَّهِ قَالَ أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ

நபி (ஸல்) அவர்களின் சபையில் நான் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் (எங்களை) கடந்து சென்றார். எங்களுடன் இருந்தவர்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! நான் இந்த மனிதரை நேசிக்கிறேன் என்றார். அதனை அவருக்கு தெரிவித்துவிட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர் இல்லை என்றார். எழுந்து சென்று அவரிடம் தெரிவித்துவிடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் எழுந்து சென்று, இன்னவரே! நான் உம்மை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன் என்றார். அதற்கு அந்த மனிதர், யாருக்காக நீ என்னை நேசித்தாயோ அந்த அல்லாஹ் உம்மை நேசிப்பானாக! என்று கூறினார்.

அறிவிப்பர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல் : அஹ்மது 11980
.
நட்பில் கவனம்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ

ஒருவர் தன் தோழனின் வழியில்தான் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் யாரிடம் தோழமை கொண்டுள்ளார் என பார்த்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்,
நூல்: அபூதாவூத் 4193, திர்மிதி 2300)

தூய நட்புக்கான கூலி

عَنْ أَبِي مُسْلِمٍ الْخَوْلَانِيِّ حَدَّثَنِي مُعَاذُ بْنُ جَبَلٍ قَالَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْمُتَحَابُّونَ فِي جَلَالِي لَهُمْ مَنَابِرُ مِنْ نُورٍ يَغْبِطُهُمْ النَّبِيُّونَ وَالشُّهَدَاءُ

அல்லாஹுதஆலா கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்காக நேசிக்கக் கூடியவர்களுக்கு ஒளியினால் ஆன மின்பர்கள் (மேடைகள்) இருக்கும். அவர்கள் நிலையை நபிமார்களும் ஷுஹதாக்களும் கூட விரும்புவார்கள்.
(அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள், நூல்: திர்மிதி 2312)


நல்லோரை நேசிப்போம்!

நமக்கு முன் சென்ற நல்லோர்களையும் நமது சமகால நல்லோர்களையும் நமக்கு பின் தோன்றும் நல்லோர்களையும் நேசிக்குமாறும் அவர்களுக்காக துஆச் செய்யுமாறும் பாவமன்னிப்புத் தேடுமாறும் மார்க்கம் அறிவுறுத்துகிறது. மேலும் இம்முக்காலத்து நல்லோர்களுடன் சொர்க்கத்தில் இணைந்திருக்க வேண்டும் என்ற ஆசையைப்படவும் அதற்காக செயல்படவும் மார்க்கம் வலியுறுத்துகிறது.

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! இன்னும் (இவ்வுலகிற்கு) வந்தடையாத ஒரு சமுதாயத்தை ஒருவர் அதிகமாக நேசிக்கிறார்! இதுபற்றி கூறுங்களேன்! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று பதிலளித்தார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள்,
நூல்: புகாரீ 5703)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
رَأَيْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرِحُوا بِشَيْءٍ لَمْ أَرَهُمْ فَرِحُوا بِشَيْءٍ أَشَدَّ مِنْهُ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يُحِبُّ الرَّجُلَ عَلَى الْعَمَلِ مِنْ الْخَيْرِ يَعْمَلُ بِهِ وَلَا يَعْمَلُ بِمِثْلِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ

அல்லாஹ்வின் தூதரே! நல்லறங்கள் புரியும் ஒருவரை அவரின் நல்லறங்களுக்காக ஒருவர் நேசிக்கிறார், ஆனால் நேசிப்பவரோ அவரைப் போன்று நல்லறங்கள் புரியவில்லை, இவரைப் பற்றிக் கூறுங்களேன்! என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மனிதன் அவன் யாரை நேசிக்கின்றானோ அவருடன் (மறுமையில்) இருப்பான் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நபித்தோழர்கள் இதற்கு முன்னர் வேறு எதற்கும் மகிழ்ச்சியடைந்து நான் கண்டிடாத அளவுக்கு மகிழ்ந்தனர்.

(அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள், நூல்: அபூதாவூத் 4462)



தவறு செய்தால் நண்பனிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

தவறு நம் தரப்பிலிருந்து ஏற்படுமேயானால் கவுரவம் பார்க்காமல் நண்பனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கு மிக நெருக்கமாகவும் ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்றவருமான அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் நண்பர்களின் மனம் புண்படும்படியாக பேசிவிட்டோமோ என்று நினைத்து அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். இது போன்ற குணம் நண்பர்களிடையே வந்துவிட்டால் பகைமைக்கு அங்கு வேலையே இல்லை.

عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ عَائِذِ بْنِ عَمْرٍو
أَنَّ أَبَا سُفْيَانَ أَتَى عَلَى سَلْمَانَ وَصُهَيْبٍ وَبِلَالٍ فِي نَفَرٍ فَقَالُوا وَاللَّهِ مَا أَخَذَتْ سُيُوفُ اللَّهِ مِنْ عُنُقِ عَدُوِّ اللَّهِ مَأْخَذَهَا قَالَ فَقَالَ أَبُو بَكْرٍ أَتَقُولُونَ هَذَا لِشَيْخِ قُرَيْشٍ وَسَيِّدِهِمْ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَقَالَ يَا أَبَا بَكْرٍ لَعَلَّكَ أَغْضَبْتَهُمْ لَئِنْ كُنْتَ أَغْضَبْتَهُمْ لَقَدْ أَغْضَبْتَ رَبَّكَ فَأَتَاهُمْ أَبُو بَكْرٍ فَقَالَ يَا إِخْوَتَاهْ أَغْضَبْتُكُمْ قَالُوا لَا يَغْفِرُ اللَّهُ لَكَ يَا أَخِي

பிலால், சுஹைப், சல்மான் இன்னும் சிலர் (இருந்த சபைக்கு) அபூ சுஃப்யான் அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள், "(அபூசுஃப்யானைப் பார்த்து) அல்லாஹ்வுடைய வாட்கள் அல்லாஹ்வின் எதிரியின் கழுத்தில், தாம் பதம் பார்க்க வேண்டிய இடத்தில் இன்னும் பதம் பார்க்கவில்லை'' என்று கூறினார்கள். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள், (அவர்களிடம்) "குரைஷிகளின் தலைவரிடத்திலா இப்படி பேசுகிறீர்கள்?'' என்று கூறி விட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதை கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், "அபூபக்ரே, நீர் அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திருக்கலாம்.  நீர் அவர்களை கோபப்படுத்தியிருந்தால் உமது இறைவனை கோபப்படுத்தி விட்டீர்'' என்று கூறினார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் அந்த நபித் தோழர்களிடம் வந்து, "சகோதரர்களே, உங்களை நான் கோபப்படுத்தி விட்டேனா?'' என்று கேட்டார்கள். அவர்கள், "இல்லை. என் சகோதரரே, அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயித் பின் அமர் (ரலி)

நூல்: முஸ்லிம் (4559)

பிரதி உபகாரம் செய்ய வேண்டும்.

எப்போதும் நண்பன் நமக்கு செலவு செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அவர் ஒருமுறை செலவு செய்தால் அடுத்த முறை நாம் அவருக்கு செலவு செய்ய வேண்டும். சிலர் நண்பனுக்காக தன் புறத்திலிருந்து எதையும் கொடுக்காமல் அவனிடமிருந்து அனுபவித்துக்கொண்டிருப்பார்கள். நமக்கு நன்மை செய்தால் அதற்கு பதிலாக அவனுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும். பொருள்வசதி நம்மிடம் இல்லாவிட்டால் அதிகமாக நண்பனுக்காக துஆ செய்ய வேண்டும்.

அல்லாஹ்வை முன்வைத்து யார் பாதுகாப்பு கேட்கிறாரோ அவருக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள். அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடத்தில் கேட்பவருக்கு கொடுங்கள். அல்லாஹ்வை முன்வைத்து யார் அடைக்கலம் கேட்கிறாரோ அவருக்கு அடைக்கலம் தாருங்கள். உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்க பிரதிஉபகாரம் செய்யுங்கள். (பிரதி உபகாரம் செய்ய பொருள்) உங்களிடத்தில் இல்லா விட்டால் அவருக்கு நீங்கள் பிரதி உபகாரம் செய்து விட்டீர்கள் என்னும் அளவிற்கு அவருக்காக துஆ செய்யுங்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)

நூல்: நஸயீ (2520)

குறைகளை துருவித் துருவி ஆராயக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (6064)



என்றும் நட்பு நிலைத்திருப்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.


وَالَّذِينَ جَاءُوا مِنْ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

அவர்களுக்குப் பின் வந்தோர் "எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுகின்றனர்.
அல்குர்ஆன் (59:10)



கோபம் கொள்ளக்கூடாது.

நம் தோழர்களை திருத்துவதற்காக நாம் பல முயற்சிகளை எடுப்போம். அவர்கள் தீமை செய்யும போது எடுத்துச் சொல்லி தீமைக்குத் தடைக்கல்லாக இருப்போம். அவனுடைய விருப்பத்திற்கு நாம் தடையாக இருப்பதினால் சில நேரங்களில் எடுத்தெறிந்து பேசி விடுவான். இந்நேரத்தில் அவன் மீது கோபப்பட்டு தவறான வார்த்தைகளை கூறிவிடக் கூடாது.

قَالَ أَبُو هُرَيْرَةَ
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَانَ رَجُلَانِ فِي بَنِي إِسْرَائِيلَ مُتَوَاخِيَيْنِ فَكَانَ أَحَدُهُمَا يُذْنِبُ وَالْآخَرُ مُجْتَهِدٌ فِي الْعِبَادَةِ فَكَانَ لَا يَزَالُ الْمُجْتَهِدُ يَرَى الْآخَرَ عَلَى الذَّنْبِ فَيَقُولُ أَقْصِرْ فَوَجَدَهُ يَوْمًا عَلَى ذَنْبٍ فَقَالَ لَهُ أَقْصِرْ فَقَالَ خَلِّنِي وَرَبِّي أَبُعِثْتَ عَلَيَّ رَقِيبًا فَقَالَ وَاللَّهِ لَا يَغْفِرُ اللَّهُ لَكَ أَوْ لَا يُدْخِلُكَ اللَّهُ الْجَنَّةَ فَقَبَضَ أَرْوَاحَهُمَا فَاجْتَمَعَا عِنْدَ رَبِّ الْعَالَمِينَ فَقَالَ لِهَذَا الْمُجْتَهِدِ أَكُنْتَ بِي عَالِمًا أَوْ كُنْتَ عَلَى مَا فِي يَدِي قَادِرًا وَقَالَ لِلْمُذْنِبِ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ بِرَحْمَتِي وَقَالَ لِلْآخَرِ اذْهَبُوا بِهِ إِلَى النَّارِ
قَالَ أَبُو هُرَيْرَةَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَكَلَّمَ بِكَلِمَةٍ أَوْبَقَتْ دُنْيَاهُ وَآخِرَتَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் இருவர் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பாவம் செய்து கொண்டிருந்தார். மற்றொருவர் வணக்கத்தில் திளைத்தவராக இருந்தார். அந்த வணக்காசாலி தன் நண்பரை பாவம் செய்யக் காணும் போதெல்லாம் (இதை) செய்யாதே என்று கூறுவார். ஒரு நாள் ஒரு பாவம் செய்பவராக தன் நண்பரை அவர் கண்ட போது அவரிடத்தில் (இதை) செய்யாதே என்று கூறினார். அதற்கு அவர், "என்னை விட்டுவிடு. எனக்கும் என் இறைவனுக்கும் இடைப்பட்ட (விஷயம் இது) என்னை கவனிப்பவராக நீ அனுப்பப் பட்டுள்ளாயா?'' என்று கேட்டார். அந்த வணக்கசாலி, "அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ் உன்னை மன்னிக்கவே மாட்டான் அல்லது சொர்க்கத்தில் உன்னை கொண்டு செல்லவே மாட்டான்'' என்று கூறினார். பின்பு இவ்விருவர்களின் உயிரையும் அல்லாஹ் கைப்பற்றினான். அவர்கள் இருவரும் அகிலத்தின் இறைவனிடம் ஒன்று சேர்ந்தார்கள். அப்போது அல்லாஹ் அந்த வணக்கசாலியைப் பார்த்து, "என்னைப் பற்றி நீ அறிந்தவனா? என் கைவசம் உள்ளதைச் செய்ய நீ சக்தி படைத்தவனா?'' என்று கூறி விட்டு பாவம் செய்துகொண்டிருந்தவனைப் பார்த்து, "செல். என்னுடைய அருளாள் சொர்க்கத்தில் நுழைந்து கொள்'' என்று கூறினான். மற்றவரைப் பார்த்து "இவரை நரகிற்கு அழைத்துச் செல்லுங்கள்'' என்று கூறினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அபூதாவுத் (4255)

மானத்துடன் விளையடக்கூடாது.

ஜாலி என்ற பெயரில் தன் நண்பனின் மானத்துடன் சில நேரங்களில் நாம் விளையாடி விடுவதுண்டு. நண்பனின் மனம் புண்படும் விதத்தில் நமது வார்த்தைகள் மற்றும் செயல்பாடுகள் அமைந்து விடக்கூடாது. மகிழ்ச்சி என்ற பெயரில் நண்பனை கேலிப்பொருளாக ஆக்கிவிடக்கூடாது. தனிப்பட்ட முறையில் நம் நண்பனிடம் நடந்துகொள்வதைப் போல் ஒரு சபையில் நடந்துகொள்ளக் கூடாது. மரியாதை தர வேண்டிய இடங்களில் அற்பமாகக் கருதி மட்டம் தாழ்த்தக் கூடாது. மோசமான வார்த்தைகளை உபயோகிக்காவிட்டாலும் அற்பமாக நினைப்பதே பாவம் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

عَنْ أَبِي سَعِيدٍ مَوْلَى عَامِرِ بْنِ كُرَيْزٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَحَاسَدُوا وَلَا تَنَاجَشُوا وَلَا تَبَاغَضُوا وَلَا تَدَابَرُوا وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ وَلَا يَحْقِرُهُ التَّقْوَى هَاهُنَا وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ بِحَسْبِ امْرِئٍ مِنْ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தீயவர் என்பதற்கு முஸ்லிமான தன் சகோதரனை அற்பமாக நினைப்பதே போதுமானதாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (4650)


நல்ல நண்பர்களை தேர்வு செய்வோம் நல்லவர்களாக வாழ்வோம்..














No comments:

Post a Comment