Wednesday 27 April 2016

மது ஒழிப்பு அரசியல்



மனித சமூகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தீமைகளில் மது முதலிடம் பிடித்திருக்கிறது.அதன்மூலம் தனி மனிதன்,குடும்பம்,சமூகம் எண்ணற்ற துய ரங்களை சந்தித்து வருவதை அன்றாடம் பார்த்துவருகிறோம்-படித்து வருகிறோம்.அதை ஒழித்துக்கட்டி,ஆரோக்கியமான,நிம்மதியான ஒரு சமூகத்தை கட்டமைக்க கடமைப்பட்ட அரசுகள் மதுவை மேலும் ஊக்கப்படுத்தும் வேலைகளையே தொடர்ந்து செய்து வருவதை பார்க்கிறோம். அதன் மூலம் அரசு அடைந்து வரும் இலாபமே அதற்கு பிரதான காரணமாகும்.

அரசு வருவாய் ஈட்டும் முயற்சியாக மதுக்கடைகளைத் திறந்தது. மக்கள் மறந்திருந்த குடிப்பழக்கம் அரசின் நடவடிக்கையால் 15 வயது சிறுவனிலிருந்து இளைஞர்கள், முதியவர்கள் என குடிப்பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார்கள். கடந்த 10 ஆண்டில் ரூ.2,828 கோடியாக இருந்த மது விற்பனை மூலம் கிடைத்த அரசு வருவாய், தற்பொழுது ரூ.18,081.16 கோடியாக பல்கி பெருகி இருக்கிறது.
 அதே நேரத்தில், 7 கோடி 21 லட்சம் மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில், ஒரு கோடி மக்களுக்கு மேலாக மதுக் குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார்கள். மூன்று தலைமுறை மதுவால் பாதிக்கப்பட்டுவிட்டது.

தமிழகத்திலுள்ள 6,800 டாஸ்மாக் கடைகள் போதாதென்று, சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் எலைட் (உயர்தர) சாராயக் கடைகளைத் திறந்துள்ளது. வருவாய் போதவில்லை என்று இப்போது தமிழகத்தின் 226 வட்டங்களிலும் தலா இரண்டு கடைகள் வீதம் 552 எலைட் சாராயக் கடைகளை ஜூலை 30-ம் தேதிக்குள் திறக்க அவசர உத்தரவு பிறப்பித்தது மேட்டுக்குடியினர் தயக்கமின்றி வாங்கிச் செல்வதற்கு வசதியாக ஷாப்பிங் மால்களிலும் சாராயத்தை விற்பனை செய ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவிலேயே சாராயத்தின் மூலம் அதிக வருவா ஈட்டும் அரசாக முன்னணியில் நிற்கும் தமிழக அரசு, குடிகெடுக்கும் டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கிடைக்கும் ரூ 30,000 கோடி வருவாயை 32 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு தீர்மானித்து, மாவட்ட ஆட்சியர்களே இவற்றை நேரடியாகக் கண்காணித்து செயல்படுத்த வேண்டுமென்று கெடுபிடி செய்கிறது.


தெற்காசிய நாடுகள் மொத்தமாகத் தயாரிக்கும் மதுவில் இந்தியாவில் தயாராகும் அளவு மட்டும் 65 சதவீதம்! உள்நாட்டில் தயாரிப்பது போதாதென்று வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் இந்தியாவின் பங்கு 7 சதவீதம்.
இந்தியா விளையாட்டில் சாதனை படைக்குதோ இல்லையோ வெகு விரைவில் போதை பொருட்களை உற்பத்தி செய்வதிலும்,அதை விற்பனை செய்வதிலும் சாதனை படைக்கும்.
1992-93-இல் இந்தியாவின் மது உற்பத்தி அளவு 8,872 லட்சம் லிட்டர்கள். 1999 - 2000-த்தில் இது 16,540 லட்சம் லிட்டர்கள்! இவ்வாண்டு 70,000 லட்சம் லிட்டர்கள் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.ஆண்டுக்கு ஆண்டு மிகப்பெரும் முன்னேற்றம்.
அசோசேம்' அமைப்பு சமீபத்தில் நடத்திய கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மதுபானம் குடிப்பது ஆண்டுதோறும் 30 சதவீதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

மதுவை தடைசெய்து, மக்களை காப்பாற்றவேண்டிய அரசு அதை ஒரு இலாபம் தரும் வியாபாரமாக மட்டுமே பார்க்கிறது.அதன் விளைவாக ஒரு ஆரோக்கியமற்ற சமூகத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
டாஸ்மாக் சாராயம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் பாரதூரமானவை. ஒரு தலைமுறையையே சமூகப் பொறுப்பற்றவர்களாகவும் கிரிமினல்களாகவும் மெல்ல மெல்ல மாற்றி வருகிறது
தற்போது உள்ள அரசியல் சூழல் வைத்து முடிவு எடுக்கும் பிரச்சனை அல்ல. மாறாக இதற்க்கு நீண்ட கால திட்டமிடல் மட்டுமே தீர்வு காண முடியும்..

நாட்டின் பாதுகாப்பை கேல்விக்குறியாக்கும் பயங்கர குற்றங்களுக்கு மது தான் முக்கிய காரணம் என்பதை யாரும் மறுத்து கூற முடியாது.

கொலை,கொள்ளை,கற்பழிப்பு,திருட்டு போன்ற குற்றங்களில் மதுவே பிரதான காரணமாக பதிவு செய்யப்படுகிறது.
மது மயமாகி விட்ட ஒரு சமூகத்தில் ஒழுக்கத்தை,நல்ல பண்பாட்டை எதிர் பார்க்க முடியாது.
ஒரு காலத்தில் எங்காவது கூட்டமாக மக்கள் நிற்பதை கண்டால் ரேஷன் கடையாக இருக்கும் என்பார்கள்.ஆனால் இன்று எங்காவது கூட்டத்தை பார்த்தால் கண்ணை மூடிக்கொண்டு டாஸ்மாக் கடை என்று சொல்லிவிட முடியும்.
மதுப்பழக்கத்திற்கு  தன் தந்தையை பறிகொடுத்துவிட்டு அனாதையாக நிற்கும் குழந்தைகளை தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் பார்க்க முடியும்.
தன் கனவனை இழந்து விதவையாக வாழ போராடிக்கொண்டிருக்கும் பெண்களை  பார்க்க முடியும்.
படிக்கும் வயதில்,ஆரோக்கியத்தை வளர்க்க வேண்டிய வயதில் போதைக்கு அடிமையாகி தன் எதிர்காலத்தை தொலைத்து நிற்கும் இளைஞர்களையும் பார்க்கலாம்
குடிப்பதை மக்கள் குறைக்கவேண்டும் என்கிற உண்மையான அக்கறை அரசுக்கு இருந்தால் சாராய உற்பத்தியைக் குறைக்க வேண்டும். விற்பனையகங்களின் எண்ணிக்கையையும் விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும். மது விற்பனை மூலம் வரும் வருவாயைக் கைவிடத் தயாராக வேண்டும்.

அது எப்படி கைவிடுவார்கள்?

அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்கும் மொத்த வரி வருவாயில் 13 சதவீதம், மதுபானங்களிலிருந்து மட்டும் கிடைத்துவிடுகிறது.

தங்க முட்டையிடும் வாத்தை அவ்வளவு சீக்கிரம் அறுத்துவிடுவார்களா என்ன?
சமூகநல திட்டங்களுக்கு நிதிதிரட்டத்தான் இந்த வருவாயைப் பயன்படுத்துகிறோம் என்று  மாநில அரசுகள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
 சமூகத்தின் ஒட்டுமொத்த நலனை சீரழித்துக்கொண்டு ஏதோ ஒரு சில தாற்காலிக நன்மைகளை அளிப்பதற்காக இதை ஊக்குவிப்பது பெருங்கேடான செயலாகும். மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பட்டியலிட வேண்டிய அவசிமில்லை.

மதுவைப்பற்றி இஸ்லாம்


மது மதிக்கு ஆபத்தானது:


{يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَآ أَكْبَرُ مِن نَّفْعِهِمَا} [سورة البقرة: آية 219

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2:
மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தை விடவும் அதன்மூலம் ஏற்படும் தீமைகள் தான் அதிகம் என்று அழகாக எடுத்துரைக்கிறது.

மது மனித மூளையை செயல்பட விடாமல் தடுத்துவிடுகிறது.அதனால் தான் மதுவுக்கு அரபியில் கம்ர் என்ற வார்த்தையை பயன்படுத்தப்படுகிறது.
கம்ர் என்றால் அறிவுக்கு திரையிடும் அனைத்துக்கும் சொல்லப்படும்.
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய விலை மதிக்கமுடியாத செல்வம் அறிவா கும்.அந்த அறிவை மழுங்கடிக்கும் கீழ்த்தரமான செயல்களை விட்டும் ஒரு முஸ்லிம் விலகி வாழ்வது கட்டாயமாகும்.
உயிர்,உடல்,பொருள்,மானம்,மார்க்கம் இவைகளை பாதுகாப்பது எப்படி ஒரு முஸ்லிமின் கடமையோ அவ்வாறே தன் அறிவையும் பாதுகாக்க வேண்டும்.   அறிவில்லாதவனுக்கும்,அரைகுறை அறிவுள்ளவனுக்கும் சமூகத்தில் எந்த மதிப்பும் கிடைக்காது.
அல்லாஹ்வின் படைப்பில் அவனுக்கு முதலில் கட்டுப்பட்டது அகல் எனும் அறிவாகும்.அவன் படைப்பில் அவனுக்கு முதலில் மாறு செய்தது நப்ஸ் எனும் ஆத்மாவாகும்.எனவே தான் அல்லாஹ் அந்த அறிவக்கொண்டே ஒரு மனிதனை உயர்த்துகின்றான்.அதே அறிவைக்கொண்டே ஒருவனை தாழ்த்தவு  ம் செய்கிறான்.
மதுவின் மூலம் மனிதன் தன் உயர்ந்த அறிவுச்செல்வத்தை இழக்கிறான்.   அறிவை இழந்தவன் அனைத்தையும் இழப்பான்.என்பார்கள்.

وهذا سيدنا أبو بكر الصديق - رضي الله عنه - في ذات يوم سُئل: هل شربْتَ الخمر في الجاهلية؟ قال: أعوذ بالله! فقيل له: ولِمَ؟ قال: كنتُ أَصُون عرضي، وأحفظ مروءتي، فإن مَن شرب الخمر كان مُضيعًا في عرضه ومروءته، وصدق - رضي الله عنه

அபூபக்கர் ரலி அவர்களிடம் உங்களுக்கு அறியாமை காலத்தில் மது குடிக்கும் பழக்கம் உண்டா?என்று கேட்டபோது-அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்றார்களாம்.அதற்கான காரணம் கேட்டபோது,நான் என் மானத்தையும் மனித தன்மையையும் பாதுகாத்தேன்.
யார் மது அருந்துகிறார்களோ அவர் தன் மானத்தையும் மனிதத்தன்மையை யும் இழந்துவிடுவான் என்றார்கள்.


قال الضحاك بن مزاحم -رحمه الله-لرجل: ما تصنع بالخمر؟ قال: يهضم طعامي، قال: أما إنه يهضم من دينك وعقلك أكثر.

இமாம் ழஹ்ஹாக் ரஹ் அவர்கள் மது குடிக்கும் பழக்கம் உள்ள ஒருவரிடம் ஏன் மது குடிக்கிறீர்?என்று கேட்டபோது-என் நான் சாப்பிடும் உணவு ஜீரனமா  குவதற்கு என்று கூறினார்.
அப்போது ழஹ்ஹாக் ரஹ் அவர்கள், மது உன் தீனையும் அறிவையும் ஜீரனித்துவிடுமே அது பற்றி கவலையில்லையா?என்றார்களாம்.


وقال الحسن البصري رحمه الله: لو كان العقل يشترى لتغالى الناس في ثمنه، فالعجب ممن يشتري بماله ما يفسده.

அறிவுக்கு மக்களிடம் விலை அதிகம் தான்.ஆனால் அதைவிட ஆச்சரியம் என்ன தெரியுமா? அந்த அறிவை அழிக்கிற மதுவுக்கு மக்கள் தன் பணத்தை செலவு செய்கின்றனர்.என இமாம் ஹஸன் பஸரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

ولقد روى القرطبي رحمه الله في تفسيره : أن أحد السكارى جعل يبول ويأخذ بوله بيديه ويغسل به وجهه وهو يقول: اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين.

இமாம் குர்துபீ ரஹ் ரஹ் அவர்கள் தங்களின் தப்ஸீரில் மதுவால் மனிதன் மடையனாகிறான் என்பதற்கு தான் கண்ட ஒரு காட்சியை குறிப்பிடுகிறார்.
போதையில் ஒருவன் தன் சிறுநீரை பிடித்து தன் கையையும் முகத்தையும் கழுகியதை பார்த்தேன்.அவ்வாறு செய்து முடித்து ஒழுச்செய்து முடித்துவிட்டு ஓதும் துஆவான அல்லாஹும்மஜ்அல்னீ மினத்தவ்வாபீன்.வஜ்அல்னீ மினல் முத்தஹ்ஹிரீன் என்று ஓதினான்.


மது குற்றங்களின் பிறப்பிடம்

மது எல்லா தீமைகளுக்கும் ஆணிவேரானது என்று மார்க்கம் கூறுகிறது.
மது ஒருவனை திருடனாக்கும்.கொலைகாரனாக்கும்.பாவத்தின் பக்கம் தூண்டுகிற எந்த செயலையும் இஸ்லாம் அனுமதிக்காது.

மது விலக்கு கொண்டுவரப்படாதவரை சட்ட ஒழுங்கு சாத்தியமில்லை என்பதை சத்தியமிட்டு சொல்ல முடியும்.

எந்த நாடுகளில் குற்றங்கள் குறைவாக நடக்குமோ அங்கெல்லாம் மதுவிலக்குச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படும்.


يقول سيدنا عثمان بن عفان - رضي الله عنه -: "كان رجلٌ فيمن كان قبلَكم متعبِّدًا زاهدًا، فأحبَّتْه امرأةٌ بغِيٌّ، فأرسلَتْ إليه جاريةً لها تدعوه للشهادة، فجاء العابد الزاهد الراهب إلى البيت، ودَخل معها، فكانت كلما دخل بابًا أغلقتْه دونه حتى وصل إلى امرأة وَضِيئة (أي: حسناء جميلة) جالسة، عندها غلامٌ وإناءُ خمر، فقالت له: ما دعوناك لشهادة، وإنما دعوناك لإحدى ثلاث: إما أن تزْنِي - أي: بها - وإما أن تشرب الخمر، وإما أن تقتل الغلام".

ففكَّر هذا الراهب الجاهل، وظنَّ أن الخمر أقلُّ هذه الثلاثة جُرمًا، فقال لها: أشربُ الخمر، فشرب، فقال: اسقيني، فشرب حتى عملت الخمر فيه، فقام وقتل الغلام، وزنى بالمرأة، فقال عثمان - رضي الله عنه -: "فاجتنبوا الخمر؛ فإنها أم الخبائث، وإنها لا تجتمع هي والإيمان في قلب واحد، إذا جاء أحدهما طرَدَ الآخر".
أخرج النسائي و ابن حبان في صحيحه

உஸ்மான் ரலி அவர்கள் ஒரு நாள் மக்களுக்கு குத்பா பிரசங்கம் செய்யும்போது-உங்கள் முன்னோர்களில் ஒரு வணக்கசாலி இருந்தார்.அவரை ஒரு விபச்சாரி நேசித்தாள்.ஒரு நாள் தன் வேலைக்காரியை அந்த ஆபிதிடம் அனுப்பி, தான் ஈமான் கொள்வதாகவும் தனக்கு கலிமா சொல்லித்தர தன் இல்லம் வரவேண்டும் எனவும் அவ்விபச்சாரி கூறி அனுப்பினாள்.
அந்த வணக்கசாலியும் அதை நம்பி அவளின் இல்லம் சென்றார்.

உள்ளே நுழைந்தவுடன் அவ்விபச்சாரி கதவை சாத்திவிட்டாள்.

அவளுக்கு அருகில் ஒரு சிறுகுழந்தையும் ஒரு கிளாஸில் மதுவும் இருந்தது.
நான் உங்களை கலிமா சொல்லித்தர அழைக்கவில்லை.மாறாக மூன்று நிபந்தனைகளில் ஏதாவது நீங்கள் செய்யவேண்டும்.

ஒன்று:என்னுடன் விபச்சாரத்தில் ஈடுபடுவது.அல்லது:மது குடிப்பது அல்லது இந்த குழந்தையை கொலை செய்வது.
மூன்று குற்றங்களில் ஏதாவது செய்யவேண்டும்.இல்லையானால் உங்களின் பழிசுமத்திவிடுவேன் என்றாள்.

இப்போது அந்த ஆபித் மூன்றில் மதுவை சிறிய குற்றமாக கருதி மது குடித் தார்.பின்பு மது போதையில் அந்த குழந்தையை கொலை செய்ததுடன் அவளுடன் விபச்சார உறவிலும் ஈடுபட்டார்.

இதை சொன்ன ஹழ்ரத் உஸ்மான் ரலி அவர்கள்,மதுவை தவிர்ந்து கொள்ளுங்கள்.அது பாவங்களுக்கெல்லாம் தலையான பாவமாகும்,நிச்சயமாக மதுவும் ஈமானும் ஒரு உள்ளத்தில் ஒன்று சேராது என எச்சரித்தார்கள்.
மதுவில் மருத்துவம் கிடையாது
மது குடிப்பவர்கள் அதை மருந்துக்காக குடிக்கிறோம் என்றும் அவ்வாறு குடிப்பதால் வேலை செய்த உடல் வலி தெரியாது என்றும் மன அமைதி கிடைக்கிறது என்றும் பொய்யான காரணங்களை சொல்லி தங்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

وعن ابن مسعود -رضي الله عنه- أنه قال: "إن الله لم يجعل شفاءكم فيما حرم عليكم].
 صحيح البخاري

அல்லாஹ் ஹராமாக்கிய எந்த பொருளிலும் ஆரோக்கியம் கிடையாது.இதை அழுத்தமாக இப்னு மஸ்வூத ரலி அவர்கள் பதிவு செய்கிறார்கள்.

وعن طارق بن سويد الخضرمي قال: قلت يا رسول الله: إن بأرضنا أعنابا نعصرها أفنشرب منها، قال: (لا)، فراجعته فقال: (لا) لا ثم راجعته فقال (لا) فقلت: إنا نستشفي بها للمريض، قال: (إنه ليس بشفاء ولكنه داء)[].
رواه أحمد في مسنده

ஹழ்ரத் தாரிக் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
நான் நபி ஸல் அவர்களிடம்-அல்லாஹ்வின் தூதரே!எங்கள் ஊரில் திராட்சையில் இருந்து ஒருவித பானம் தயார் செய்கிறோம் அதை குடிக்கலாமா?என்று கேட்டான்.
அப்போது நபி ஸல் அவர்கள்,வேண்டாம் என்றார்கள்.மீண்டும் கேட்டேன்.   வேண்டாம் என்றார்கள்.பின்பு மீண்டும் கேட்டேன்,வேண்டாம் என்றார்கள்.
நாங்கள் அதை குடிப்பதால் ஆரோக்கியமாக இருப்பதை உணர்கிறோம் என்றேன்.அப்போது நபி ஸல் அவர்கள்-அது ஆரோக்கியமல்ல,நோய் என்றார்கள்.

فعن ديلم الحميري قال سألت رسول الله -صلى الله عليه وسلم- فقلت يا رسول الله إنا بأرض باردة نعالج فيها عملا شديدا وإنا نتخذ شرابا من هذا القمح نتقوى به على أعمالنا وعلى برد بلادنا قال: (هل يسكر؟) قلت: نعم. قال: (فاجتنبوه) قلت فإن الناس غير تاركيه قال: (فإن لم يتركوه فقاتلوهم)[].
رواه أبو داود

தைலமி ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
நான் நபி ஸல் அவர்களிடம் வந்து,அல்லாஹ்வின் தூதரே!
எங்கள் ஊர் கடும் குளிர் பிரதேசம்.நாங்கள் கடுமையாக உழைப்பவர்கள்.  என்வே நாங்கள் சோர்வின்றி உழைக்கவும்,எங்கள் ஊரின் குளிரை தாங்குவதற்கும் கோதுமையிலிருந்து ஒருவித பானம் தயார் செய்து குடிக்கிறோம்.என்ற போது-அது போதை தருகிறதா?என்று கேட்டார்கள்.நான் ஆம் என்றேன்.அப்படி   யானல் அது ஹராம் என்றார்கள்.
மக்கள் அதை விட மறுக்கிறார்கள் என்று நான் சொன்னபோது-அவர்களுடன் சண்டைபோடுங்கள் என்றார்கள்.


عن الفضيل بن عياض - رحمه الله - أنه حضر عند تلميذ له حضَرَه الموتُ، فجعل يلقِّنه الشهادة، ولسانه لا ينطق بها، فكرَّرها عليه، فقال: لا أقولها وأنا بريء منها، ثم مات.
فخرج الفُضَيل مِن عنده وهو يَبكي، ثم رآه بعد مدةٍ في مَنامه وهو يُسحب به في النار، فقال له: يا مسكين، بم نُزِعَت منك المعرفة؟ فقال: يا أستاذ، كان بي علةٌ، فأتيتُ بعض الأطباء، فقال لي: تشرب في كل سنَةٍ قَدحًا مِن الخمر، وإن لم تفعل تبْقَ بك علَّتُك، فكنتُ أشربها في كل سنة لأجل التداوي!

புழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்கள் தங்களின் மாணவர் ஒருவரின் மரண தருவாயில் கலிமா சொல்லிக்கொடுத்தபோது அவர் சொல்லாமல் மரணித்து விட்டார்.
பின்பு ஒருநாள் அந்த மாணவரை நரகில் இழுத்துச்செல்லப்படுவதாக கனவு கண்ட புழைல் ரஹ் அவர்கள் காரணம் கேட்டார்கள்.
அதற்கு அவர்-எனக்கு ஒரு நோய் வந்தது,ஒரு மருத்துவரிடம் சென்றேன்.  அவரோ இந்த நோயிக்கு மருந்து ஒரு கிளாஸ் மது குடிப்பது,ஆண்டுக்கு ஒரு முறை இதை செய்ய வேண்டும் என்றார்.நானும் அதை செய்து வந்தேன் என்றார்கள்.

மது குடிப்பவனுக்கு இஸ்லாம் உலக தண்டனை

1.அவனின் ஈமான் பிடுங்கப்படலாம்.

ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن } رواه البخاري 
      
ஒரு முஃமின் மது அருந்த மாட்டான்.

2.இஸ்லாமிய தண்டனை வழங்கப்படுதல்.

. ما رواه مُسْلِمٍ ( 3281 ) عَنْ أَنَسٍ رضي الله عنه  : أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم : { جَلَدَ فِي الْخَمْرِ بِالْجَرِيدِ وَالنِّعَالِ }

நபி ஸல் அவர்கள், மது குடிப்பவர்களை  பேரித்த மட்டைகளாலும்,செருப்புகளாலும் அடிக்க உத்தரவிட்டார்கள்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِرَجُلٍ قَدْ شَرِبَ الْخَمْرَ فَجَلَدَهُ بِجَرِيدَتَيْنِ نَحْوَ أَرْبَعِينَ

மது குடித்த ஒருவருக்கு நாற்பது சவுக்கடி கொடுத்த்தாக ஹதீஸில் வருகிறது

3.அவனின் நாற்பதுநாள் தொழுகை ஏற்கப்படாது.

لا يَشْرَبُ الْخَمْرَ رَجُلٌ مِنْ أُمَّتِي فَيَقْبَلُ اللَّهُ مِنْهُ صَلاةً أَرْبَعِينَ يَوْمًا
سنن النسائي
என் உம்மத்தில் மது குடித்த ஒருவனின் நாற்பதுநாள் தொழுகை ஏற்கப்படாது

4.அவனுக்கு சலாம் சொல்லக்கூடாது

، قال البخاري رحمه الله تعالى في الأدب المفرد : باب لا يسلَّم على شارب الخمر ... وساق إسناده إلى عبد الله بن عمرو بن العاص أنه قال: [[لا تسلموا على شراب الخمر

மது குடித்தவனுக்கு சலாம் சொல்லாதீர் என அப்துல்லா இப்னு அம்ர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

5.அவன் நோயுற்றால் நலம் விசாரிக்கக்கூடாது

وقال أيضاً رضي الله تعالى عنه: [[لا تعودوا شراب الخمر إذا مرضوا

அவன் நோயுற்றால் நலம் விசாரிக்காதீர் என்றும் கூறினார்கள்.

மது குடிப்பவனின் மறுமை தண்டனை

1.அவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவன்

2.நாளை அல்லாஹ் அவனை ஏரிட்டும் பார்க்க மாட்டான்.
3.கெட்ட பானம் புகட்டப்படும்

إن على الله عز وجل عهداً لمن يشرب المسكر أن يسقيه من طينة الخبال! قالوا: يا رسول الله! وما طينة الخبال؟ قال: عرق أهل النار، أو عصارة أهل النار } رواه مسلم .

போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு தீனத்துல் கப்பால்எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்றுகேட்டனர். அது நரகவாசிகளின் வேர்வைஅல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

4.அவன் சில வணக்கம் செய்தவனை போல அல்லாஹ்வை சந்திப்பான்.

وقال صلى الله عليه وسلم: {مدمن الخمر إن مات لقي الله كعابد وثن } رواه أحمد

மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போல அல்லாஹ்வை சந்திப்பான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

மது தீமையிலிருந்து அல்லாஹ் மனிதசமூகத்தை பாதுகாப்பானாக.




அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய விலை மதிக்கமுடியாத செல்வம் அறிவா கும்.அந்த அறிவை மழுங்கடிக்கும் கீழ்த்தரமான செயல்களை விட்டும் ஒரு முஸ்லிம் விலகி வாழ்வது கட்டாயமாகும்.
உயிர்,உடல்,பொருள்,மானம்,மார்க்கம் இவைகளை பாதுகாப்பது எப்படி ஒரு முஸ்லிமின் கடமையோ அவ்வாறே தன் அறிவையும் பாதுகாக்க வேண்டும்.   அறிவில்லாதவனுக்கும்,அரைகுறை அறிவுள்ளவனுக்கும் சமூகத்தில் எந்த மதிப்பும் கிடைக்காது.
அல்லாஹ்வின் படைப்பில் அவனுக்கு முதலில் கட்டுப்பட்டது அகல் எனும் அறிவாகும்.அவன் படைப்பில் அவனுக்கு முதலில் மாறு செய்தது நப்ஸ் எனும் ஆத்மாவாகும்.எனவே தான் அல்லாஹ் அந்த அறிவக்கொண்டே ஒரு மனிதனை உயர்த்துகின்றான்.அதே அறிவைக்கொண்டே ஒருவனை தாழ்த்தவு  ம் செய்கிறான்.

Wednesday 13 April 2016

தேர்தல் வாக்குறுதிகள்




மிழகத்தில் 2016 க்கான சட்டமன்ற தேர்தல்சூடுபிடிக்கத்துவங்கியிருக்கிறது
வழமைபோலகவர்ச்சிகரமானதேர்தல்வாக்குறுதிகளுடன் அரசியல்வாதிகள்மக்களைசந்திக்கத்தயாராகிவிட்டனர்.

சொன்னதைச்செய்தோம்,சொல்லாததையும் செய்தோம்என்றமுழக்கத்துடன்ஒருகட்சியும்,சொன்னீர்கள் செய்தீர்களா? என்ற எதிர் முழக்கத்துடன் மாற்றுக்கட்சியும்ஊடகத்துணையுடன்கழமிறங்கியிருக்கிறது.

போன தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள்முக்கியபங்குவகித்தது. 
இந்த தேர்தல் வாக்குறுதிகளில் மதுஒழிப்பு மையப்புள்ளியை பெற்றிருக்கிறது.”மது விலக்கை கொண்டுவருவோம்என்று தமிழகத்துக்கு மதுவின் வாசலை திறந்துவைத்த ஒரு கட்சியும்,”படிப்படியாக மதுவிலக்கை அமலுக்கு கொண்டுவருவோம்என்று மதுவை அரசுடமையாக்கிய வேரொரு கட்சியும் மாறி மாறி வாக்களித்திருப்பது இவ்வாண்டின் மகா காமெடியாகும்..

இந்த  தேர்தலில்முஸ்லிம்கள்எந்தவாக்குறுதியை முன்வைத்து ஓட்டளிக்கப்போகிறார்கள் என்பதை பொருத்திருந்துதான்பார்க்கவேண்டும்.

காலம் காலமாக முஸ்லிம்களை வெறும் ஓட்டுவங்கிகளாக மட்டுமே பயன்படுத்தி,அவர்களின் அரசியல் சக்திகள் ஒன்றுபடாமல் பார்த்துக்  கொள்வதும்,ஜெயிப்பதற்கு அறவே வாய்ப்பில்லாத தொகுதிகளை வழங்கி அவர்களின் ஓட்டை வீணடிப்பதிலும்,ஒரு தொகுதியில் முஸ்லிம் வேட்பாளருக்கு எதிராக இன்னொரு முஸ்லிமை மோதவிடுவதிலும் எல்லா  கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

இப்லீஸ் கட்சி ஆரம்பித்தாலும் அதிலேயும் ஒருமுஸ்லிம் இருப்பான் என்று ஒருவர் சொன்னது நம்முடைய அரசியல் கோமாளித்தனத்தின்உச்சமாகும்.

வாக்குறுதிகள் ஒன்றையே மையமாக வைத்து ஆட்சியாளர்கள் தேர்தலை சந்திப்பதே அவர்களின் மிகப்பெரிய பளஹீனமாகும்.

வாக்கும் இஸ்லாமும்

இஸ்லாமிய பார்வையில் வாக்கை நிறைவேற்றுவது ஒரு நல்ல முஸ்லிமின்அடையாளமாகும்
அதேசமயம் மறுபுறம் வாக்கு மாற்றம் செய்வது நயவஞ்சக தனத்தின்அடையாமாகவும்பார்க்கின்றது.

வெற்றிபெற்ற முஃமின்களின் குணங்களை வரிசைப்படுத்தி கூறும் திருமறை அதன் வரிசையில்-

   وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ‏ 
 
இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள் என்றும் கூறுகின்றான்.

இங்கே வா தருகின்றேன் என்று ஒரு தாய் தன் குழந்தையை அழைக்கிறாள். இந்த காட்சியை கன்னுற்ற பெருமானார் ஸல் அவர்கள்-அந்த குழந்தைக்கு என்ன கொடுப்பாய்?என்று கேட்டார்கள்.
அதற்கு அப்பெண் -ஒரு பேரித்த பழம் கொடுக்க நாடியுள்ளேன் என்றார்கள். ஒருவேளை நீ எதையும் அக்குழந்தைக்குகொடுக்கவில்லையானால் உன்மீது ஒரு பொய்குற்றம் எழுதப்படும் என்று நபி ஸல் அவர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

இந்த ஹதீஸின் மூலம் வலியவர்கள் எழியவர்களுக்கு வழங்கும் வாக்குறுதியில் மிகுந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.
  
பெற்றோர்கள்பிள்ளைகளுக்கும்,முதலாளிகள் தொழிலாளிகளுக்கும் பெரியவர்கள் சிரியவர்களுக்கும் ஆட்சியாளர்கள் தங்களின் குடிமக்களுக்கும் வழங்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றும் போதனை வழங்கப்பட்டிரிக்கிறது

பிமார்களின் தனித்துவங்கள் பற்றி பேசும் அல்குரான் பல்வேறு இடங்களில் அவர்களின் வாக்கு மாறா தன்மைபற்றி புகழாரம் சூட்டுகிறது.

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது நபிமார்கள்,மற்றும் நல்லோர்களின் பண்பாக இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ் தன்னைப்பற்றி தன் அருள்மறையில்…….

وَلَنْ يُخْلِفَ اللَّهُ وَعْدَهُ} [الحج: 47]

நிச்சயமாக அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்.என்று கூறுகின்றான்.

அதைபோல அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மூன்று வாக்குறுதிகளை கூறியிருக்கின்றான்
முதலாவது வாக்குறுதி. இந்த பூமி முழுவதும் முஃமின்களை நான் ஆட்சியாளர்களாக நான் ஆக்குவேன்.
இரண்டாவது வாக்குறுதி. உங்கள் மார்க்கம் தான் இந்த உலகம் பூராவும் நிலைத்து நிற்கும் மற்றவைகள் விழுந்து விடும்.
இன்று உலகில் நமது இஸ்லாமிய மார்க்கம் இல்லாத நாடுகள் இல்லை. அமெரிக்கா,ஆப்ரிக்கா,ஆசியா, என அனைத்து நாடுகளிலும் பரவி இருக்கிறது.
மூன்றாவது வாக்குறுதி.முஃமின்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்வீர்கள். எந்த நாடுகளின் பயம் அச்சுறுத்தல் இன்றி நிம்மதியாக வாழ்வீர்கள்.

وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي 
 ارتضى لهم  وليبدلنهم من بعد خوفهم أمنا

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான் என்று அல்லாஹ் கூறுகின்றான்

வானவர்களின் தலைவர் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் பற்றி நபி ஸல் அவர்கள் கூறும்போது……….

حديث ابن عباس رضي الله عنهما في صحيح مسلم قال: "أخبرتني ميمونة أن رسول الله صلى الله عليه وسلم أصبح يوما واجما فقالت ميمونة: يا رسول الله لقد استنكرت هيئتك منذ اليوم. قال رسول الله صلى الله عليه وسلم: إن جبريل كان وعدني أن يلقاني الليلة فلم يلقني، أما والله ما أخلفني. قال: فظل رسول الله صلى الله عليه وسلم يومه ذلك على ذلك ثم وقع في نفسه جرو كلب تحت فسطاط لنا فأمر به فأخرج ثم أخذ بيده ماء فنضح مكانه فلما أمسى لقيه جبريل فقال له: قد كنت وعدتني أن تلقاني البارحة. قال: أجل ولكنا لا ندخل بيتا فيه كلب ولا صورة

நபி ஸல் அவர்கள் ஒருநாள் காலையில் கவலையுடன் வந்தார்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!இன்று தங்களின் தோற்றத்தில் இத்தனை மாற்றத்திற்கு என்ன காரணம்? என உம்முல் முஃமினீன் மைமூனா ரலி அவர்கள் வினவினார்கள்.அதற்கு நபி ஸல் அவர்கள், ஹழ்ரத் ஜிப்ரயீல் அலை அவர்கள் நேற்றிரவு என்னை சந்திப்பதாக சொல்லியிருந்தார் கள்.ஆனால் சந்திக்க வரவில்லை.அல்லாஹ்வின் மீது சத்தியமாக! வாக்கு மாற்றம் செய்யும் பழக்கம் அவருக்கு இல்லை என்று கூறினார்கள். அன்று பகல் முழுவதும்அவ்வாறேகாணப்பட்டார்கள்.

பின்னர் கட்டிலுக்கு கீழ் படுத்திருந்த ஒரு நாய் குட்டியை கவனித்த நபி ஸல் அவர்கள் ஒருவேளை இதுகாரணமாக இருக்குமோ என்று அவர்களின் உள்ளத்தில் தோன்ற உடனே அதை விரட்டிவிடும்படி உத்தரவிட்டார்கள்பின்னர் அந்த இடத்தில் தாங்களே தண்ணீர் தெளித்து சுத்தம் செய்தார்கள்

அன்று மாலை ஜிப்ரயீல் அலை அவர்களை சந்தித்த நபி ஸல் அவர்கள் நேற்று இரவு என்னை சந்திப்பதாக வாக்களித்தீர்கள்,ஆனால் சந்திக்கவில்லையே என கூறியபோது-
ஆம்! நாய் மற்றும் உருவப்படம் இருக்கும் வீட்டிற்குள் நாங்கள் நுழையமாட் டோம் என்று ஜிப்ரயீல் அலை அவர்கள் பதில் கூறினார்கள் 
.
தன் மதீனா குடிமக்களுக்கு அண்ணலாரின் வாக்குறுதி:

கொடைத்தன்மைக்கு பெயர்பெற்ற ஹாதம் தாய் அவர்களின் மகன் அதிய் இப்னு ஹாதம் அவர்கள் ஒரு நிர்பந்த சூழலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளு ம் திட்டத்துடன் மதீனா வருகிறார்.

அவரின் வருகையை தெரிந்துகொண்ட பெருமானார் ஸல் அவர்கள்மிகவும்மகிழ்ச்சியடைந்தார்கள். 

அவரை வரவேற்று மதீனா வீதிகளில் அழைத்து வரும்போது-
இரண்டு காட்சிகள்:ஒன்று-

روى الإمام البخاري رحمه الله بإسناده إلى عدي بن حاتم قال: 
بينا أنا عند الني صلى الله عليه وسلم إذا أتاه رجل فشكا إليه الفاقة

ரு ஏழை நபியை சந்தித்து தன் ஏழ்மையைசொல்லிமுறையிடுகிறார்.

இரண்டு-

  ، ثم أتاه آخر فشكا إليه قطع السبيل

இன்னொரு மனிதர் வந்து மதீனாவில் வழிப்பறி அதிகமாக இருப்பதாக முறையிடுகிறார்.
இங்கே மதீனாவின் குடிமக்கள் இரண்டு கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

வறுமை தாண்டவமாடும் மதீனா-வழிப்பறியின் கோரப்பிடியில் மதீனாஒரு ஆட்சியாளராக அந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டாகவேண்டும். இந்த காட்சியை கன்னுற்ற விருந்தாளி அதிய் அவர்கள் கொஞ்சம் இஸ்லாத்தை தழுவ பின் வாங்குகின்றார்.

உடனே நபி ஸல் அவர்கள் அந்த மதீனா மக்களுக்கும் குறிப்பாக அதிய் அவர்களுக்கும் இரண்டு வாக்குறுதிகள் கொடுத்தார்கள்.

ஒன்று:

قال: فإن طالت بك حياة لترين الظعينة ترتحل من الحيرة حتى 
تطوف بالكعبة لا تخاف أحداً إلا الله

அதிய்யே! உங்களுக்கு ஹயாத் இருந்தால்நீங்கள் பார்ப்பீர்கள். இராக் தேசத்திலிருந்து ஒரு பெண் தனியாக இந்த பூமிக்கு வந்து கஃபாவை தவாப் செய்துவிட்டுச்செல்வாள்அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அவள் பயப்படமாட்டாள்.
அப்படிப்பட்ட ஒரு பாதுகாப்பான அரசை நான் தருவேன் என்றார்கள்.

இரண்டு-

. ولئن طالت بك حياة لترين الرجل يخرج ملء كفه من ذهب أو فضة يطلب من يقبله منه فلا يجد أحداً يقبله منه

 உங்களுக்கு ஹயாத் இருந்தால் நீங்கள் பார்ப்பீர்கள்.ஒரு மனிதன் கை நிறைய தங்கம் அல்லது வெள்ளியை அள்ளிக்கொண்டு அதை ஸதகா மற்றும் ஸகாத் கொடுக்க ஏழையை தேடுவான்.ஆனால் ஒரு ஏழையும் கிடைக்கமாட்டார்கள்.

இது ஐந்தாண்டுக்கான வாக்குகள் அல்ல,மாறாக ஆயுள் வாக்குறுதி, பசியில்லாத மதீனாவை,பயமில்லாத மதீனாவை நான் உருவாக்குவேன் என்று அன்று நபி ஸல் அவர்கள் கொடுத்த வாக்கை பதிநான்கு நூற்றாண்டுகள் கடந்தும் பார்க்க முடிகிறது.

நபி ஸல் அவர்கள் ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை சில நிர்பந்த காரணங்களால் நிறைவேற்ற முடியாமல் போனால் அடுத்து வரும் ஆட்சியாளர்கள்அதைநிறைவேற்றுவதில் அதிக முக்கியத்துவம் வழங்குவார் கள்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ قَدْ جَاءَ مَالُ الْبَحْرَيْنِ قَدْ أَعْطَيْتُكَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا فَلَمْ يَجِئْ مَالُ الْبَحْرَيْنِ حَتَّى قُبِضَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا جَاءَ مَالُ الْبَحْرَيْنِ أَمَرَ أَبُو بَكْرٍ فَنَادَى مَنْ كَانَ لَهُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِدَةٌ أَوْ دَيْنٌ فَلْيَأْتِنَا فَأَتَيْتُهُ فَقُلْتُ إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي كَذَا وَكَذَا فَحَثَى لِي حَثْيَةً فَعَدَدْتُهَا فَإِذَا هِيَ خَمْسُ مِائَةٍ وَقَالَ خُذْ مِثْلَيْهَا

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது அபூபக்ர்(ரலி) அவர்களிடம் அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூபக்கர்(ரலி), 'யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தர வேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரின் உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)" என்று கூறினார்கள். இந்த அறிவிப்பைக் கேட்டு நான், 'எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்" என்று கூறினேன். 'இப்படிக் கூறும்போது, தம் இரண்டு கைகளையும் ஜாபிர்(ரலி) மூன்றுமுறை விரித்துக் காட்டினார்கள்" என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) கூறினார் - அபூபக்ர்(ரலி) என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள்.நூல். முஸ்லிம்

قال رسول الله صلى الله عليه وسلم لسراقة: “كيف بك إذا لبست سواري كسرى؟.
فدعا عمر سراقة فألبسه سواري كسرى وتاجه وقال: “الحمد لله الذي سلبهما كسرى بن هرمز وألبسهما سراقة الأعرابي
 .
நபி ஸல் அவர்களின் ஹிஜ்ரத் பயணத்தில் சுராக்கா என்பவருக்கு ஒரு வாக்கு கொடுக்கிறார்கள்..
பாரசீக மன்னர் கிஸ்ராவின் காப்புகளை உங்களுக்கு நான் அணிவிக்கிறேன் என்றார்கள்.
மதீனாவே சொந்தமில்லாதபோது ஒரு வல்லரசின் விலைமதிப்பில்லாத ஆபரணங்கள் பற்றி வாக்கு கொடுத்தார்கள்.
காலம் உருண்டோடியது ஹழ்ரத் உமர் ரலி அவர்களின் ஆட்சியில் சஃத் ரலி அவர்களின் தலமையில் பாரசீகம் வெற்றிகொள்ளப்பட்டு அதன் கருவூலங்கள் மதீனாவுக்கு கொண்டுவரப்படுகிறது.
அதில் கிஸ்ராவின் தங்கக் காப்புகளையும், தலைக்கிரீடத்தையும் கண்ட ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் சுராக்காவை அழைத்துவரச்சொல்லி அவ்விரண்டையும் அவருக்கு அணிவித்து-

இந்த இரண்டு பொக்கிஷத்தையும் கிஸ்ராவிடமிருந்து பறித்து சாதாரண ஒரு கிராமவாசி சுராவுக்கு அணிவித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று துஆச்செய்தார்கள்.

இஸ்லாமியஆட்சியாளர்களின்வாக்குறுதி காத்தல்
வரலாற்றுச்சிறப்புமிக்கபைத்துல்முகத்தஸ் வெற்றிகொள்ளப்பட்டபோது அங்கு வாழும் யூத,கிருஸ்துவர்களுடன் ஹழ்ரத் உமர் ரலி அவர்களின் அரசு ஒரு ஒப்பந்தம் செய்தது.

அங்கு வசிக்கும் யூத கிருஸ்துவர்களின் உயிர் பொருள் வணக்கஸ்தலங்கள் அத்துனையும் இஸ்லாமிய அரசால் பாதுகாக்கப்படும்.அதற்குப்பகரமாக அவர்கள் அரசுக்கு ஆண்டுதோறும் ஜிஸ்யா வரி கட்டவேண்டும்.
இது நடைமுறையில் இருந்த காலத்தில் பைத்துல் முகத்தஸ்மீது எதிரிகள் தாக்குதல் நடத்த ஒரு பெரும் படையுடன் வந்தபோதுஉமர் ரலி அவர்கள் நிலமையின் நெருக்கடியை உணர்த்தி உங்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழல் வந்துவிடக்கூடாது.எனவே உங்களின் இந்த ஆண்டு ஜிஸ்யாவை அரசிடமிருந்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அப்படிப்பட்ட அரசியல் நேர்மையாளர்களை தங்களின் அரசியல் முன்னோடிக ளாக ஏற்று வாழ இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பரிந்துறைக்கின்றோம்