அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அன்புள்ள உஸ்மானிகள் ஆன்லைன் வாசகர்களே! அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நீண்ட இடைவெளிக்குப்பின் பல்வேறு உலமாக்களின் வேண்டுகோளை கவனத்தில் எடுத்துக்கொண்டு இத்தளத்திற்கு மீண்டும் உயிரூட்டப்படுகிறது.
இன்ஷா அல்லாஹ் இப்பணி தொடர்ந்து தொய்வின்றி நடைபெற உங்களின் மேலான துஆவும் ஆலோசனையும்......
அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகள்ஏராளமானவை,எண்ணிலடங்காதவை.
ஆரோக்கியம்,பாதுகாப்பு,வசிக்கும் இல்லம்,மனைவி,மக்கள்,செல்வம்,செல்வாக்கு
இப்படி எத்தனையோ நிஃமத்துகளை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்.
அல்லாஹ் நம்மை மனிதனாக பிறக்க வைத்தது, முஃமின்களுடைய குடும்பத்தில் பிறக்க வைத்தது. ஈமானை வாரிசு சொத்தாக
கொடுத்தது.இப்படி பல விசயங்களை நாம் பெற்றிருக்கிறோம்.
ஈமானை பெற நாம் ஸஹாபாக்களை போல் குடும்பத்தையோ அல்லது சொத்துக்களையோ,
அல்லது மனைவி மக்களையோ அல்லது உயிரையோ நாம் இழந்திருக்கிறோமா.... ஈமானின் அருமை
தெரிய வேண்டும் என்றால் உயிர் கொடுத்து ஈமானை அடைந்தார்களே அந்த ஸஹாபாக்களை கேட்டால் தெரியும்.
காலை முதல் மாலை வரை,பிறப்பு முதல் இறப்பு வரையிலும் அவனின்
அன்புக்கும் அருளுக்கும் அளவுகோள் கிடையாது.
பிறக்கும் முன்னால் அவனை மூன்று திரைக்குள் வைத்து பாதுகாத்தான். தாயின் வழியாக
உணவு கொடுத்தான்,தாயின் வழியாக நீர் கொடுத்தான், தாயின் வழியாக சுவாசத்தை கொடுத்தான்.
அவன் வெளியே வரும் பொழுது அதன் வழியை திறந்து கொடுத்தான்.
அவன் வந்த பிறகு இயற்கையாக தாயின் உள்ளத்தில் அந்த குழந்தையின்
மீது பாசத்தை கொடுத்தான், தன்னை விட
தன் உயிரை விட தன்னுடைய குழந்தைக்காக எதையும் துறக்குமளவுக்கு அந்த தாயின் உள்ளத்தை
மாற்றினான், இரவு நேர தூக்கத்திலும் கூட குழந்தையின்
சப்தம் கேட்டால் துடித்து எழுந்து விடுவாள். பசிக்காக அழுகிறதா... அல்லது சிறுநீர்
கழிக்க அழுகிறதா என குழந்தையின் உணர்ச்சியோடு தாயின் உணர்ச்சியை கலந்தான்.
இரண்டாண்டு காலம் அவனை தாயின் மடியில் சுகமாக வாழ வைத்தான்.
அவன் சிறுவனானபோது தந்தையின் தோள் புஜத்தை அவனை சுமக்கும் கருவியாக
மாற்றினான். வாலிபனாகியபோது அவன் வாகனிக்க எத்தனையோ வாகனத்தை கொடுத்தான். அவன் மரணித்த
போது கூட அவனை நடக்கவிடவில்லை அல்லது தூக்கியெறிய விடவில்லை நான்கு பேரின் தோளில் தூக்கி
சுமக்க வைத்தான்.
அவன் கப்ருக்கு வந்த பிறகு கப்ரிலிருந்து மறுமைக்கு வருவதற்கு வாகனத்தை
வைத்திருக்கிறான். அவர்கள் கொடுக்ககூடிய குர்பானி பிராணியை அவர்களின் வாகனமாக தயார்
செய்து வைத்திருகிறான்.
அல்லாஹ் கொடுத்த நிஃமத்துக்களை அனுபவிக்கும் நாம் அதற்குப் பகரமாக
நாம் என்ன செய்தோம் ? என்ன செய்ய
போகிறோம்.? திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ்
முன்வைக்கும் கேள்வி இது.
அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் வழிகள்
முதலாவது:அருட்கொடைகளை அறிந்துகொள்வது
عن عائشة رضي الله عنها
قالت: (( ما أنعم الله على عبد نعمة فعلم أنها من عند الله إلا كتب الله له شكرها قبل
أن يحمده عليها ، وما أذنب عبد ذنباً فندم عليه إلا كتب الله له مغفرة قبل أن يستغفره،
وما اشترى عبد ثوبا بدينار أو نصف دينار فلبسه فحمد الله عليه إلا لم يبلغ ركبتيه حتى
يغفر الله له
அல்லாஹ் ஒரு அடியானுக்கு ஒரு நிஃமத்தை வழங்கியிருந்து, அது அல்லாஹ்வின்
அருட்கொடை என்று அந்த அடியான் அறிந்துவிட்டால் அதையே தனக்கான நன்றியாக அல்லாஹ் எழுதிவிடுகின்றான்.மேலும்
ஒரு பாவத்தை செய்து அத்ற்கு மன்னிப்புகேட்கும் முன் வருத்தப்பட்டால் அதையே தவ்பாவாக
அல்லாஹ் ஏற்றுக்கொள்கொன்றான்.மேலும் ஒரு அடியான் ஒரு தீனாருக்கு அல்லது அரை தீனாருக்கு
ஒரு ஆடை வாங்கி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி உடுத்தினால் அந்த ஆடை அவனின் முட்டுக்காலை
அடையும் முன்னர் அல்லாஹ் அவனின் பாவத்தை மன்னிப்பான் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக
ஆயிஷாரலிஅவர்கள்அறிவிக்கிறார்கள் (ஹாகிம்)
உமர் இப்னு கத்தாப் ரலி அவர்களின் ஆட்சி
காலத்தில் இரண்டு கை கால் இழந்த பார்வையற்ற ஒருவர் நடுரோட்டில் படுத்திருந்தார்.அவரைக்கண்ட ஸஹாபாக்கள் -இப்படி
ஒரு மனிதரா... அல்லாஹ் இவருக்கு எந்த நிஃமத்தையும் கொடுக்கவில்லையே என்று
ஆதங்கப்பட்டனர்.
அப்போது ஹழரத் உமர் அவர்கள், இவரிடம் அல்லாஹ்வுடைய எந்த நிஃமத்தும் இல்லையென்றா சொல்கிறீர்கள். மிகப்பெரிய நிஃமத் ஒன்று
இருக்கிறது அல்லாஹ் ஒவ்வொரு நாளும் இவரின் உடம்பிலிருந்து சிறுநீரை வெளியேற்றுகிறான்
அது பெரிய நிஃமத்தாக உங்களுக்கு தெரியலையா என கேட்டார்கள்.
قال رجل لشيخ الإسلام ابن
تيمية: كيف أصبحت؟ قال: "أصبحت بين نعمتين لا أدري أيتهما أفضل: ذنوب سترها الله
فلا يستطيع أن يعيرني بها أحد، ومودة قذفها الله في قلوب العباد لا يبلغها عملي
ஒரு மனிதர் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? என இப்னு தைமியாவிடம்
கேட்டார்.அதற்கு அன்னார்,அல்லாஹ் எனக்கு
அருளிய இரண்டு நிஃமத்துக்களை நினைத்து சந்தோஷமாக வாழ்ந்துவருகின்றேன்.
1.என்னுடைய மறைக்கப்பட்ட
பாவங்கள்.யாரும் அந்த பாவத்தச்சொல்லி என்னை குறைப்படுத்திவிடாத அளவுக்கு அல்லாஹ் அதை
மறைத்து என்னை காப்பாற்றிவிட்டான்.
2.என்னுடைய நேசத்தை
சில அடியார்களின் உள்ளத்தில் போட்டுவிட்டான். அப்படி ஒரு பெரிய வணக்கமொன்றும் என்னிடம்
கிடையாது. இந்த இரண்டு உபகாரங்களை நான் நினைக்காத நாளில்லை என்று கூறினார்கள்.
எந்த பிடிமானமுமில்லாத தாயின் கறுவறையில் ஏதோ ஒரு ஓரத்தில்
ஒட்டிக்கொண்டு உயிர் பிடித்து வளரத்துவங்கும் காலம் முதல் கப்ர் வரை அவனின் அருள் விசாலமாக விரிந்துகிடக்கிறது
இரண்டாவது:அருட்கொடைகளை நினைத்துப்பார்ப்பது
அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய நிஃமத்தை நினைத்துப்பாருங்கள் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்
தான் செய்த ஏராளமான நிஃமத்துகளை சொல்லி விட்டு அதற்கு பகரமாக
நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகின்ற போது -அதை நினைத்து பாருங்கள் என்று சொல்லுகிறான்.உபகாரம்
செய்தவன் தான் செய்த உபகாரத்தின் பிரதிபலனாக அதை நினைத்தாலே போதும் என்று சொல்கின்றான்.
ومن فقه أبي هريرة رضي الله
عنه، وشكره للنعمة: أنه رُأي في الليل يكبر، فلحقه رجل ببعيره، فقال: من هذا؟ قال:
أبو هريرة، قال: وما التكبير؟ قال: أشكر ربي بذكره، قال: على أيّ شيء؟ قال: كنت أجير
لبسرة بنت غزوان بعقبة رجلي وطعام بطني، -كنت موظفاً في ما مضى من أمري، كنت أؤجر نفسي
لهذه المرأة مقابل أن أشبع، وأن أركب فقط- وكانوا إذا ركبوا سقت بهم، -سائق- وإذا نزلوا
خدمتهم، -خادم- فزوجنيها الله فهي امرأتي، ثم أصبح أميراً على مصر من الأمصار، أمّره
عمر بن الخطاب أمير المؤمنين
ஹழ்ரத்
அபூ ஹுரைரா ரலி அவர்கள் இரவுநேரத்தில் சப்தமிட்டு தக்பீர் சொல்வார்களாம்.அந்த இடத்தை கடந்துசென்ற ஒரு மனிதர்,அவர் யார்? என கேட்டார்.அதற்கு அவர் நபித்தோழர் அபூஹுரைரா ரலி என்று சொல்லப்பட்டது.
அந்த சப்தத்தை கேட்டு,அதற்கான காரணத்தை விசாரித்தார்.அதற்கு அபூஹுரைரா ரலி அவர்கள் -இது என் ரப்புக்கு நன்றிக்கடனாக நான் சொல்கின்றேன் என்றார். என்ன விஷயத்திற்காக இந்த நன்றி கடன் என வினவியபோது-
நான்
புஸ்ரா என்ற பெண்ணிடம் என் வயிற்றை நிறப்ப வேலை பார்த்தேன். அவர்கள் பயணிக்கும்போது அவர்களின் வாகனத்தை இழுத்துச்செல்வேன். அவர்கள் எங்கேனும் தங்கினால் அவர்களுக்கு பணிவிடை செய்வேன். சாதாரண கூலிக்காரணாக இருந்தேன்.அல்லாஹ் என் வாழ்க்கையை மாற்றினான்.அதே பெண்ணை எனக்கு மணமுடித்துவைத்து என் மனைவியாக ஆக்கினான்.ஹழ்ரத் உமர் ரலி அவர்களின் ஆட்சியில் எகிப்தின் கவர்ஞராக அல்லாஹ் ஆக்கினான்.என்று கூறினார்கள்
நபி ஸல் அவர்கள் தங்களின் பிந்தியகாலத்தில் ஆட்சி, செல்வம்
என அனைத்து வசதிவாய்ப்புக்களும் கைக்கூடியபோது தங்களின் பழைய வாழ்வை
எண்ணிப்பார்த்தார்கள்
والله ما أبدلني الله خيراً
منها . قد آمنت بى إذ كفر بى الناس وصدَّقتنى إذ كذبنى الناس ، وواستنى بمالها إذ حرمنـى
الناس ورزقنى الله أولادها وحرمنى أولاد الناس
அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ் எனக்கு கதீஜாவுக்குப்பகரமாக இன்னொரு மனைவியை தரவேயில்லை.மக்கள் என்னை நிராகரித்தபோது என்னை நம்பியவள் கதீஜா.மக்கள் என்னை பொய்பித்தபோது என்னை மெய்ப்பித்தவள் கதீஜா.மக்கள் எனக்கு பொருளாதார நெருக்கடியளித்தபோது தன் பொருளை விசாலமாக அள்ளி வீசியவள் கதீஜா என நபி ஸல் அவர்கள் தன் கடந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறார்கள்.
وكذلك يوسف عليه السلام
لما خرج من السجن، وتبوأ خزائن الأرض، هل نسي ما كان فيه؟ أبداً، قال بعد ما صار له
الملك في الأرض: وَقَدْ أَحْسَنَ بَي إِذْ أَخْرَجَنِي مِنَ السِّجْنِ سورة يوسف
100. أخرجني من السجن، كان مسجوناً ففك قيده، كان أسيراً فصار طليقاً، فهو يتذكر النعمة
நபி
யூஸுப் அலை அவர்கள் பிற்காலத்தில் எகிப்தின் அரசராக சிம்மாசனத்தில் அமர்ந்தபோது-
அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும்
என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை
கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்
என்று தன் பழைய சிறை வாழ்வை எண்ணிப்பார்க்கிறார்கள்
அல்லாஹ்
வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதற்கான வழிகளில் அதை நினைத்துப்பார்ப்பதும்
ஒன்றாகும்
நபி மூஸா அலை அல்லாஹ்விடத்தில் கேட்டார்கள்.
யா அல்லாஹ்! எனக்கு நீ இவ்வளவு நிஃமத்துகளை செய்திருக்கிறாயே
இதற்கு நான் எப்படி நன்றி செலுத்துவேன் என்றார்கள் அல்லாஹ் சொன்னான் இப்பவே நீ நன்றி
செலுத்தி விட்டாய் என்றான்.எப்பொழுது நான் அருளிய நிஃமத்துகளுக்கெல்லாம் எப்படி நன்றி
செலுத்தப்போகின்றேன் என கவலைப்பட்டீரோ அப்போதே நீர் நன்றி செலுத்திவிட்டாய் என அல்லாஹ்
சொன்னான்.
மூன்றாவது:பணிவை வெளிப்படுத்துவது.
جاء في ما ذكر عبدالله ابن
المبارك: أن النجاشي -يرحمه الله- أرسل ذات يوم إلى جعفر بن أبي طالب وأصحابه من المسلمين
عنده في الحبشة، فدخلوا عليه وهو في بيته، عليه خلقان -أي: ثياب بالية-، جالس على التراب،
وهو ملك الحبشة، قال جعفر: فأشفقنا منه حين رأيناه على تلك الحال، فلما رأى ما في وجوهنا
من الاستغراب، قال: إني أبشركم بما يسركم، إنه جاءني من نحو أرضكم عين لي فاخبرني أن
الله قد نصر نبيه صلى الله عليه وسلم، وأهلك عدوه، وأسر فلان وفلان، وقتل فلان وفلان،
بواد يقال له بدر، حتى قال له جعفر: ما بالك جالساً على التراب، ليس تحتك بساط، وعليك
هذه الأخلاق البالية؟! قال: إنا نجد فيما أنزل الله على عيسى عليه السلام أن حقاً على
عباد الله أن يحدثوا لله تواضعاً إذا أحدث لهم من نعمه، فلما أحدث الله لي نصر نبيه
أحدثت لله هذا التواضع، والعلم نافذة عظيمة يفتح الله بها على صاحبها أبواباً عظيمة
من الشكر.
அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஷி அவர்கள் ஒருநாள் ஹழ்ரத் ஜஹ்பர் ரலி அவர்களையும் மற்றும் அவர்களின் தோழர்களையும் தன் இல்லத்துக்கு அழைத்தார்.அவரின் அழைப்பை ஏற்று அந்த நபித்தோழர்கள் மன்னரின் வீட்டில் நுழைந்தபோது மன்னரை பார்த்து ஆசரியப்பட்டார்கள்.காரணம் பழைய ஆடையை அணிந்து சாதாரண மண் தரையில் அமர்ந்திருந்தார்கள். ஒரு நாட்டின் மன்னர் இந்த தோற்றத்தில் இருக்க காரணம் என்னவென ஹழ்ரத் ஜஹ்பர் ரலி அவர்கள் வினவியபோது –
உங்களுடைய ஊரிலிருந்து என் உளவாளி ஒரு செய்திகொண்டுவந்துள்ளார். அல்லாஹ் தன்னுடைய நபிக்கு உதவிசெய்து தன் எதிரிகளை பத்ர் களத்தில் வைத்து அழித்துவிட்டான்.இன்ன இன்ன எதிரிகள் கொல்லப்பட்டார்கள் என்றும் இன்ன இன்ன எதிரிகள் சிறைபிடிக்கப்பட்டார்கள் என்றும் எனக்கு தகவல் வந்துள்ளது என்றார்கள்
அதைக்கேட்ட ஜஹ்பர் ரலி அவர்கள் -இந்த நிகழ்வுக்கும் தாங்கள் பழைய ஆடை உடுத்தி மண் தரையில் அமர்ந்திருப்பதற்கும் உள்ள சம்பந்தம் என்ன வென்று கேட்டார்கள்.அதற்கு பதிலளித்த மன்னர் நஜ்ஜாஷி,அல்லாஹ் நபி ஈஸா அலை அவர்களுக்கு இறக்கிய வேதத்தில் ஒரு செய்தி இப்படி உள்ளது அதாவது-அல்லாஹ் ஒரு அடியானுக்கு ஒரு நிஃமத்தை அருளினால் அதன் நன்றியாக அடியான் தன் பணிவை வெளிக்காட்டவேண்டும்.அது அவன்மீது கடமையாகும்.எனவே அல்லாஹ் தன் நபிக்கு உதவி செய்தபோது அதற்கு நன்றி செலுத்தவே நான் இவ்வாறு அமர்ந்தேன் என்றார்களாம்.
நான்காவது: அல்லாஹ்வின் அருட்கொடைகள் பற்றி அடுத்தவரிடம் கூறுவது
(التحدُّث بنعمة الله شكر، وتركها كفر) البيهقي.
அல்லாஹ்வின் நிஃமத்தைப்பற்றி பேசுவது அவனுக்கு நன்றி செலுத்தவதாகும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது
நன்றிகெட்டதனமாகும்.என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
ألا وأنا حبيب الله ولا
فخر وأنا حامل لواء الحمد يوم القيامة ولا
فخر وأنا أول شافع وأول مشفع يوم القيامة ولا فخر وأنا أول من يحرك حلق الجنة فيفتح
الله لي فيدخلنيها ومعي فقراء المؤمنين ولا فخر
நபி ஸல் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
தெரிந்துகொள்ளுங்கள்!
நான் அல்லாஹ்வின் நேசனாவேன்.இதை பெருமைக்காக சொல்லவில்லை.நாளை மறுமையில் புகழ் கொடியை நானே சுமந்து வருவேன் இதை பெருமைக்காக சொல்லவில்லை.நான் முதலில் பரிந்துரை செய்வேன்,என் பரிந்துரையே முதலாவது ஏற்றுக்கொள்ளப்படும் இதை பெருமைக்காக சொல்லவில்லை.சுவனத்தின் கதவை நானே முதலாவது தட்டுவேன்.அல்லாஹ் எனக்காக அதை திறந்து என்னயே அதில் முதலாவதாக நுழையச்செய்வான்.மேலும் என்னுடன் ஏழை முஃமின்களும் நுழைவார்கள். இதை பெருமைக்காக சொல்லவில்லை.என அல்லாஹ் தனக்கு வழங்கிய அருட்கொடைகளை அடுக்கடுக்காக எடுத்துக்கூறினார்கள்.
அல்ஹம்து லில்லாஹ்.....
ReplyDeleteஅல்லாஹ் தங்களின் இல்மிலும் நேரத்திலும் அபிவிருத்தி செய்வானாக!
முன்பைவிட பன்மடங்கு பிரயோஜனங்களை மின்பரின் அலங்கார பூக்களான உஸ்மானிகள் ஆன்லைன் மூலம் உலமாக்களுக்கும் உம்மத்தும் பெற்றிட அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்
அல்ஹம்து லில்லாஹ்.....
ReplyDeleteஅல்லாஹ் தங்களின் இல்மிலும் நேரத்திலும் அபிவிருத்தி செய்வானாக!
முன்பைவிட பன்மடங்கு பிரயோஜனங்களை மின்பரின் அலங்கார பூக்களான உஸ்மானிகள் ஆன்லைன் மூலம் உலமாக்களுக்கும் உம்மத்தும் பெற்றிட அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்
உங்களின் மேலான தூண்டுதலும் துஆவும் இருக்கும்வரை பூக்கள் மலர்ந்துகொண்டே இருக்கும் இன்ஷா அல்லாஹ்
Deleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteஜஸாகல்லாஹ்
Deleteஅல்லாஹ் தடை இல்லாமல் இத் தளம்இயங்குவதற்கும்..இதற்காக உழை க்கும் உலமாக்களுக்கு அல்லாஹ் ரஹ்மத்தை அருள்வானாக ஆமீன்
ReplyDeleteஅல்லாஹ் தடை இல்லாமல் இத் தளம்இயங்குவதற்கும்..இதற்காக உழை க்கும் உலமாக்களுக்கு அல்லாஹ் ரஹ்மத்தை அருள்வானாக ஆமீன்
ReplyDeleteஉங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி
Deleteதடை இல்லாத அருள் தடை இல்லாத நேரத்தில் அருள் தடை இல்லாத உடல்ஆபியத்தில் அருள் எல்லா அருள்களையும் அல்லாஹ் வழங்குவானாக ஆமீன்
ReplyDeleteஇத்தளம் தொடர்ந்து இயங்குவதற்கு ஆரோக்கியமான நேரங்களை அல்லாஹ் விசாலமாக்கித்தரவேண்டும் என்று துஆச்செய்த நண்பருக்கு நன்றி
Deleteபாரகல்லாஹ் !
ReplyDeleteஇன்ஷாஅல்லாஹ் இந்த சீரிய பணி தொடர்ந்து செயல்பட துஆ செய்கிறேன். ஜஸாகுமுல்லாஹ் ஹைரா!
ஆமீன்
DeleteMasha allah
ReplyDeleteபாரகல்லாஹ்
Deleteஅல் ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு. இந்த பணி தொடர்ந்து நடைபெறட்டும்.
ReplyDeleteஇத்தளம்ொடர்ந்து இயங்கபெருமுயற்சிசெய்தபேவையின் உறுப்பினர்களில் ஒருவர் பஷீர் ஹஜ்ரத் அவர்களுக்கும் கடினலை பழுவுக்கும் மத்தியில் பதிவிட சைந்த அமலி ஹஜ்ரத்திற்க்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக
ReplyDeleteஇத்தளம்ொடர்ந்து இயங்கபெருமுயற்சிசெய்தபேவையின் உறுப்பினர்களில் ஒருவர் பஷீர் ஹஜ்ரத் அவர்களுக்கும் கடினலை பழுவுக்கும் மத்தியில் பதிவிட சைந்த அமலி ஹஜ்ரத்திற்க்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக
ReplyDeleteதொய்வின்றி உங்களின் மகத்தான பணி தொடரவேண்டும். நூற்றுக்கணக்கான ஆலிம்கள் இதனால் பயனுறுகிறார்கள். جزاكم الله خيرا.
ReplyDeleteதொய்வின்றி உங்களின் மகத்தான பணி தொடரவேண்டும். நூற்றுக்கணக்கான ஆலிம்கள் இதனால் பயனுறுகிறார்கள். جزاكم الله خيرا.
ReplyDeleteالحمدلله
ReplyDeleteஇத்தளம் தொடர்ந்து நடைபெற ஆவலுடன்
ReplyDeleteஇருக்கிறோம்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ உங்கள் பதிவுகளை நான் என் முகநூல் பக்கத்தில் தொடர் பதிவாக பதிவிடுகிறேன் ஏதாவது தடை இருந்தால் தெரியப்படுத்தவும் என்னோட இமெயில் முகவரி ars.gng@gmail.com மற்றும் தொலைபேசி எண்0096598832767 வாட்ஸ்அப் உள்ளது
ReplyDeleteماشاء الله
ReplyDelete