Thursday, 2 January 2014

தாஹா நபியின் தனிச்சிறப்புகள்



முஹம்மது  நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு பன்முகங்களைக் கொண்ட ஒரு மாணிக்க கல்லுக்கு ஒப்பானதாகும். தனை எக்கோணத்திலிருந்து நோக்கினாலும் அது ஒளிவிட்டுப் பிரகாசிப்பதைக் காணலாம்.

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சரிதையைப் படிக்கும் ஒருவர் மனித வாழ்வின் எல்லாத்துறைகளையும் தழுவிய வொன்றாக அவர்களின் வாழ்வு அமைந்திருப்பதைக் காண்பார். இந்த வகையிலேயே கடந்த பல நூற்றாண்டு காலமாக பல நூறு ஆய்வாளர்கள் நபியவர்களின் பன்முக ஆளுமையை பல் வேறு கோணங்களில் அணுகி ஆராய்ந்துள்ளதைப் பார்க்கின்றோம்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு தனக்கே உரிய பல தனிப் பெரும் சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்கின்றது எனவே அவர் நம்மைப்போன்று சாதாரண மனிதராக இருக்கமுடியுமா..

நமக்கும் நமது  நபிக்கும் இடையில் காணப்படும் வித்தியாசங்களுக்கான சில உதாரணங்கள்..

1)   நாம் அனைவரும் தந்தை பெற்ற பிள்ளைகள் ஆனால் அவர்களோதந்தை ஆதம்(அலை) அவர்களை பெற்ற பிள்ளையாவார் ஏனெனில் நபியை படைத்திருக்காவிட்டால் அல்லாஹ் ஆதமையே படைத்திருக்க மாட்டான்.

 أبي هريرة قال : قالوا : يا رسول الله متى وجبت لك النبوة ؟ قال : " وآدم بين الروح والجسد " . رواه الترمذي

சஹாபாக்கள் நபி இடத்தில் நாயகமே நபித்துவம் தங்களுக்கு உறுதியானது எப்பொழுது என்று கேட்டார்கள் நபி சொன்னார்கள் ஆதம் (அலை) உயிருக்கும் உடலுக்கும் இடையில் இருக்கின்ற பொழுதே எனக்கு நுபுவ்வத் தரிப்பட்டுவிட்டது என்றார்கள்.

நூல். திர்மிதி மிஷ்காத் 513

2)   நாம் எல்லோரும்  (ஜீரோ) பொன்றவர்கள் எத்தனை ஜீரோக்கள் சேர்த்திருந்தாலும் அவற்றுக்கு மதிப்பில்லை அவற்றை கணக்கில் சேர்க்கவும் முடியாது அவைகளுக்கு மதிப்பு வேண்டுமானால் ஒன்று அல்லது மற்ற எண்ணிக்கையுடன் சேர வேண்டும் இதைபோன்று தான் நாம்  சிறப்பையும் பெற முடியாது

3)   நபிக்கு அல்லாஹ் தேர்வு செய்திருக்கும் முஹம்மத் என்ற பெயரேஅவர்களின் கண்ணியத்தை பாதுகாக்கும் வலிமை பெற்று விளங்குகிறது.

 عن جبير بن مطعم قال : سمعت النبي صلى الله عليه وسلم يقول : " إن لي أسماء : أنا محمد

 وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب " . والعاقب : الذي ليس بعده شيء . متفق عليه
                                             
 எனக்கு 
முஹம்மத் என்றும் அஹ்மத் என்றும் பெயர்கள் உள்ளது என்றார்கள்     
நூல். புகாரி முஸ்லிம்   மிஷ்காத் 515

முஹம்மத் என்றால் புகழப்பட்டவர் என்று பொருள் எனவே நபியை எதையாவது கூறி திட்டுபவர் அவர் திட்டுதல் என்ற காரியத்தை மட்டும் செய்வதில்லை  மாறாக திட்டிக்கொண்டே புகழ்கின்றார்..

وعن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " ألا تعجبون كيف يصرف الله عني شتم قريش ولعنهم ؟ يشتمون مذمما ويلعنون مذمما وأنا محمد " . رواه البخاري

அல்லாஹ் என்னை குரைஷிகளின் திட்டைவிட்டும் சாபத்தைவிட்டும் திருப்பியதை பார்த்து ஆச்சரியப்படவேண்டாமா. அவர்கள் பழிக்க தகுந்தவனை பழிக்கின்றனர்.நான் புகழந்தகுந்தவன்  என்றார்கள்.
நூல் .மிஸ்காத். பக்கம் 515

எல்லா நபிமார்களையும் பிறந்ததற்கு பிறகு புகழ்ந்துப் போற்றுகின்ற அல்லாஹ் முத்தான முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை மட்டும் பிறப்பதற்கு முன்பே போற்றியிருக்கிறான்.

ஈசா நபியைப் பிறந்ததற்கு பிறகு போற்றுகிறான்۔ அவர்களின் அன்னையை ஊரார் தூற்றியபோது அன்னையின் பரிசுத்த தன்மையை நிரூபிக்கும் வகையில் அவர்கள் தொட்டிலில் பேசியதை அற்புதமாக குறிப்பிடுகிறான்:

قال اني عبد الله آتاني الكتاب وجعلني نبيا

மூசா நபியை பிறந்ததற்கு பிறகு போற்றுகிறான்۔ அவர்களின் அன்னை அந்த குழந்தையை ஒரு மரப் பேழையில் வைத்து நைல் நதியில் விட்டபோது அதைப் பத்திரமாகப் பாதுகாத்து கரைசேர்த்த அற்புதத்தைச் சொல்லி புளகாங்கிதம் அடைகிறான்۔

நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை மட்டும் பிறப்பதற்கு முன்பே போற்றியிருக்கிறான்۔ நம்மை உலகில் உருவாக்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் அனைத்து உயிர்களையும் ஆலமுல் அர்வாஹில் ஒன்றுகூட்டி அதிலும் குறிப்பாக நபிமார்களின் உயிர்களிடம் இறைவன் ஒரு ஒப்பந்தம் செய்தான்:

واذ اخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتومنن به ولتنصرنه۔۔۔(3:81)

பின்னால் ஒரு நபி வருவார். அவரை நீங்கள் நம்பவேண்டும்; அவருக்கு உதவியாக இருக்கவேண்டும்; என்று கேட்டதோடு மட்டுமின்றி இதில் நீங்கள் கையெழுத்திடுகிறீர்களா?என்றான். அனைவரும் இதை ஆமோதிக்கிறோம் என்றனர். அப்படியா இதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன்.

இதை மிஃராஜ் இரவில் நடத்திக்காட்டினான். பைத்துல் முகத்தஸில் அனைத்து நபிமார்களும் கூடியிருக்க ஜிப்ரீல் அலை பாங்கு சொல்ல அதில் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னபோது அனைவரும் அதை ஆமோதித்தனர்.

அல்லாஹ்வை நினைக்கும் தொழுகையில் அண்ணலையும் நினைக்க வேண்டும்

தொழுகையில் அல்லாஹ்வை மட்டும்தான் முன்னிலைப்படுத்திப் பேசமுடியுமேயன்றி வேறெவரை முன்னிலைப்படுத்திப் பேசினாலும் தொழுகை வீணாகிவிடும். இதுதான் புகஹாஉசட்டமேதைகளின் தீர்க்கமான முடிவு.

ஒருவன் தும்மிவிட்டு அல்ஹம்துலில்லாஹ்என்று சொன்னதை இன்னொருவன் கேட்டால் அதற்குப் பதிலாக யர்ஹமுகல்லாஹ்அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக என்று கூற வேண்டும். இது பொதுவான ஒரு சட்டம்.

எனினும் தும்மிய ஒருவன் அல்ஹம்துலில்லாஹ்என்று சொன்னதைத் தொழுது கொண்டிருக்கின்ற இன்னொருவன் கேட்டால் வழமையாகப் பதில் சொல்வதுபோல் தும்மினவனை முன்னிலைப்படுத்தி யர்ஹமுகல்லாஹ்என்று சொன்னால் அவனின் தொழுகை பாதில்வீணாகிவிடும்.

எனினும், தொழுது கொண்டிருப்பவன் தும்மினவனுக்குப் பதில்கூற விரும்பினால் அவனை முன்னிலைப்படுத்தாமல் யர்ஹமுஹூல்லாஹ்அவனுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக என்று படர்க்கையில் மட்டும் சொல்ல முடியும்.

தொழுகையில் அல்லாஹ் அல்லாத வேறெவரையும் முன்னிலைப்படுத்தக் கூடாதென்பதை இச்சட்டம் வலியுறுத்துகிறது. உணர்த்துகிறது.

ஷரீஅத்இவ்வாறிருக்கும் பொழுது தொழுகையில் அத்தஹிய்யாத்ஓதும் பொழுது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்நபிய்யுநபீயே உங்கள் மீது ஸலாம்உண்டாவதாக ! என்று நபீஸல் அவர்களை முன்னிலைப்படுத்திக் கூற வேண்டுமென்று ஷரீஅத்சட்டம் கூறுகிறது.

. وأما التشهد فإذا جلست له فاجلس متأدباً وصرح بأن جميع ما تدلي به من الصلوات والطيبات أي من الأخلاق الطاهرة لله. وكذلك الملك لله وهو معنى " التحيات " وأحضر في قلبك النبي صلى الله عليه وسلم وشخصه الكريم وقل " سلام عليك أيها النبي ورحمة الله وبركاته " وليصدق أملك في أنه يبلغه ويرد عليك ما هو أوفى منه. ثم تسلم على نفسك وعلى جميع عباد الله الصالحين. ثم تأمل أن يرد الله سبحانه عليك سلاماً وافياً بعدد عباده الصالحين

ஹுஜ்ஜதுல் இஸ்லாம் அபூஹாமித் முஹம்மது கஸ்ஸாலி றஹ்அவர்கள் இஹ்யாஉ உலூமித்தீன்என்னும் தங்களின்  நூலில் ஒரு மனிதன் தனது தொழுகையில் அத்தஹிய்யாத்ஓதும் பொழுது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்நபிய்யுஎன்று சொல்லும் வேளை நபீ(ஸல்) அவர்களை தனது மனக்கண் முன் நிறுத்தி அவர்களை முன்னிலைப்படுத்தி ஸலாம்சொல்ல வேண்டுமென்று எழுதியுள்ளார்கள்.

நூல். இஹ்யா உலூமுத்தீன். பாகம்.1 பக்கம் 178

தொழுகையில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்நபிய்யுஎன்று ஸலாம்சொல்லும்பொழுது நபீ(ஸல்) அவர்களின் உருவத்தைக் கற்பனை செய்ய வேண்டுமென்றும், அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டுமென்றும் சொல்லப்பட்டிருப்பதிலிருந்து நபீயவர்களின் அந்தஸ்து எத்தகையதென்பது தெளிவாகிவிட்டது.

அவர்களுக்கு மட்டும் இவ்விஷயத்தில் விதிவிலக்கப்பட்டதிலிருந்து அவர்கள் நம்மைப் போன்ற மனிதனில்லையென்பது தெளிவாகிவிட்டது.

நபீ(ஸல்) அவர்கள் நம்மைப்போன்ற மனிதனென்றால் தொழுகையில் அவர்களை முன்னிலைப்படுத்தினால் தொழுகை பாதிலாகி வீணாகிவிட வேண்டும். ஆனால் தொழுகையின் போது அத்தஹிய்யாத்தில்அவர்களை நினைத்து முன்னிலைப்படுத்தி ஸலாம்கூறவில்லையென்றால்தான் தொழுகை வீணாகிவிடுமென்று அறிவுக்கடல் இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்களும், மற்றும் ஸுபிகளும் ஞானிகளும் கூறுகின்றார்கள்.

தொழுகையில் நபீஸல் அவர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு ஸலாம் கூறுவது கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் நம்போன்ற சாதாரண மனிதனில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதான் ஒலிக்காத அண்ணல்

அதான்பாங்கு சொல்வதிலும், “இமாமத்இமாமாக நின்று தொழுகை நடத்துவதிலும் எது சிறந்ததென்ற கேள்விக்கு தொழுகை நடாத்துவதைவிட பாங்கு சொல்வதுதான் சிறந்ததென்று மார்க்கச்சட்ட மேதைகள் கூறுகின்றனர்.

எல்லாக் காரியங்களிலும் சிறந்ததைத் தெரிவு செய்து செயற்பட்டு வந்த நபீஸல் அவர்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு தடவையேனும் பாங்கு சொன்னதாக வரலாறு கிடையாது. எனினும் பல தடவைகள் இமாமாக நின்று தொழுகை நடத்தியிருக்கிறார்கள்.

எல்லாக் காரியங்களிலும் சிறந்ததைத் தெரிவு செய்து செயற்பட்டு வந்த நபீஸல் அவர்கள் பாங்கு விஷயத்தில் செய்யாமல் விட்டதேன்? என்பதை ஆராய வேண்டும். அவர்கள் பாங்கு சொல்லாமல் விட்டதற்குக் காரணம் என்னவெனில் அவர்கள் பாங்கு சொன்னால் ஹய்ய அலஸ் ஸலாஹ்” “ஹய்ய அலல் பலாஹ்என்று சொல்ல வேண்டும்.

அதாவது தொழுகைக்கு வாருங்கள்; வெற்றியின் பக்கம் வாருங்கள் என்று அழைக்க வேண்டும். நபீயவர்கள் அவ்வாறு அழைத்தால் மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்தின்படி அவர்களின் அழைப்பைக் கேட்டவர்கள் அனைவரும் தமது வேலைகளை விட்டுவிட்டு உடனடியாகத் தொழுகைக்கு விரைந்து சமூகமளிக்க வேண்டும். அவ்வாறு வருதல் தவிர்க்க முடியாத கடமையாகிவிடும். இதனால் உடனடியாகத் தொழுகைக்கு வரமுடியாத நிலையிலிருப்போர் அனைவரும் தண்டனைக்குரிய குற்றவாளியாகிவிடுவர்.

எனவேதான் பாங்கு சொல்வதால் மக்களுக்கு இத்தகைய சிரமம் ஏற்படுமென்பதை அறிந்த நபீஸல் அவர்கள் பாங்கு சொல்லாமல் தொழுகையை மட்டும் முன்னின்று நடத்தினார்கள். அவர்கள் றஹ்மத்உலக மக்களின் அருட்கொடை என்ற உண்மையை இது நிரூபித்துக் காட்டுகிறது.

இந்த விவரத்தின் மூலமாக நபீயவர்களின் அழைப்புக்குப் பதில் கூறுவது கடமையென்பது தெளிவாகிவிட்டது.

عَنْ أَبِي سَعِيدِ بْنِ الْمُعَلَّى قَالَ
كُنْتُ أُصَلِّي فِي الْمَسْجِدِ فَدَعَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ أُجِبْهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أُصَلِّي فَقَالَ أَلَمْ يَقُلْ اللَّهُ
{ اسْتَجِيبُوا لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمْ لِمَا يُحْيِيكُمْ }
ثُمَّ قَالَ لِي لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ السُّوَرِ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ تَخْرُجَ مِنْ الْمَسْجِدِ ثُمَّ أَخَذَ بِيَدِي فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ قُلْتُ لَهُ أَلَمْ تَقُلْ لَأُعَلِّمَنَّكَ سُورَةً هِيَ أَعْظَمُ سُورَةٍ فِي الْقُرْآنِ قَالَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ هِيَ السَّبْعُ الْمَثَانِي وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُوتِيتُهُ

நான் பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்தபொழுது நபீஸல் அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் பதில் கூறவில்லை. தொழுகையை முடித்துவிட்டு நபீஸல் அவர்களிடம் வந்தேன். அல்லாஹ்வின் றஸூலே! நான் தொழுது கொண்டிருந்தேன். அதனால்தான் உங்களின் அழைப்புக்குப் பதில் கூறவில்லை. என்று சொன்னேன்.

அதற்கு நபீஸல் அவர்கள் அல்லாஹ்வும் றஸூலும் உங்களை அழைத்தால் அவர்களுக்கு பதில் கூறுங்கள்என்ற திருமறை வசனத்தை ஓதிக்காட்டி, அல்லாஹ் இவ்வாறு சொல்லியிருப்பது உமக்குத் தெரியாதா? என்று என்னிடம் திருப்பிக் கேட்டார்கள். என்று அபூ ஸயீத் பின் அல்முஅல்லா றழி அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம் :புஹாரி)

தொழுது கொண்டிருக்கின்ற ஒருவனை நபீஸல் அவர்கள் அழைத்தால் அவன் உடனே தொழுகையை விட்டுவிட்டு நபீஸல் அவர்களுக்கு பதில் கூற வேண்டுமென்பது இந்த ஸஹீஹான ஹதீது மூலமாக மேலும் உறுதிப்படுத்தப்படுகிற

நபீஸல் அவர்களின் வியர்வை கஸ்தூரி வாசமுள்ளது. அவர்களின் உடலிலும், கஸ்தூரி மணமே கமழ்ந்து கொண்டிருக்கும்.

عَنْ جَابِرٍ : أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- لَمْ يَسْلُكْ طَرِيقاً أَوْ لاَ يَسْلُكُ طَرِيقاً فَيَتْبَعُهُ أَحَدٌ إِلاَّ عَرَفَ أَنَّهُ قَدْ سَلَكَهُ مِنْ طِيبِ عَرْفِهِ . أَوْ قَالَ : مِنْ رِيحِ عَرَقِهِ. إتحاف 3641

நபி(ஸல்) அவர்கள் ஒரு வழியால் போனார்களாயின் அவர்கள் நடந்து சென்ற அவ்வழியில் மூன்று நாள்வரை கஸ்தூரி மணம் கமழ்ந்துகொண்டே இருக்கும். அம்மணத்தைக் கொண்டு அவ்வழியால் நபி (ஸல்) அவர்கள் போயுள்ளார்களென்பதை ஸஹாபாக்கள் அறிந்து கொள்வார்கள் ..
நபி (ஸல்) அவர்கள் ஒரு வழியால் சென்றார்களாயின், அவ்வழியால் செல்பவர்கள் நபிகளாரின் வியர்வையின் நறுமணத்தைக் கொண்டு அவர்கள் அவ்வழியால் சென்றுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வார்கள்.
ஆதாரம் :தாரமீ
அறிவிப்பு : ஜாபிர் (ரழி)

நபி (ஸல்) அவர்களின் வியர்வையை ஸஹாபாக்கள் மிகப் பக்குவமாக எடுத்துச் சிறிய சீசாக்களில் வைத்துக் கொள்வார்கள். அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களுக்குப் பதிலாக அதைப் பாவித்து வந்தார்கள்.
6281. அனஸ்(ரலி) அறிவித்தார்.

(என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபி(ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற) வியர்வைத் துளிகளையும் (ஏற்கனவே தம்மிடமுள்ள) நபியவர்களின் தலைமுடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள். பிறகு அதனை வாசனைப் பொருளில் வைப்பார்கள். வாசனைப் பொருளில் வைப்பார்கள். (இதையெல்லாம்) நபி(ஸல்) அவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்)
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

(என் பாட்டனார்) அனஸ்(ரலி) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தம் கஃபன் துணியில் பூசப்படும் நறுமணத்தில் இந்த நறுமணத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு என்னிடம் இறுதி விருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்களின் கஃபனில் பூசப்பட்ட நறுமணத்துடன் இதுவும் சேர்க்கப்பட்டது.  


நபிக்கும் மற்றவர்களுக்கும் இடையில் காணப்படும் மார்க்க சட்டரீதியான வித்தியாசங்கள்.
மிஸ்வாக். வித்ருதொழுகை. உள்ஹியா கொடுப்பது. பஜ்ரின் முன் சுன்னத் தஹஜ்ஜத் தொழுகை இவை போன்றவைகள் அவர்களுக்கு பர்ளாகும்.

    உபரியான வணக்கங்களின் மூலம் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அது நம்முடைய நன்மைகளை அதிகரிக்கச்செய்கிறது. அதன் மூலம்  தொழுகையில் நாம் செய்த தவறுகளை நிவர்த்தி செய்கிறது.

    உபரியான தொழுûக்களுக்கு சில ஒழுக்கங்கள் இருக்கின்றது.
    உட்கார்ந்து தொழுதால் பாதி நன்மையும் நின்று தொழுதால் முழு நன்மையும் கிடைக்கும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதால் அவர்களுக்கு முழுமையான நன்மை கிடைத்து விடும்.

عن عبد الله بن عمرو قال : حدثت أن رسول الله صلى الله عليه وسلم قال : " صلاة الرجل قاعدا نصف الصلاة " قال : فأتيته فوجدته يصلي جالسا فوضعت يدي على رأسه فقال : " مالك يا عبد الله بن عمرو ؟ " قلت : حدثت يا رسول الله أنك قلت : " صلاة الرجل قاعدا على نصف الصلاة " وأنت تصلي قاعدا قال : " أجل ولكني لست كأحد منكم " . رواه مسلم

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:     அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உட்கார்ந்து தொழுபவருக்கு, (நின்று தொழுபவரின்) தொழுகையில் பாதி (நன்மை)யே உண்டு'' என்று கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் உட்கார்ந்து தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, நான் அவர்களது தலைமீது எனது கையை வைத்தேன். அப்போது அவர்கள், "அப்துல்லாஹ் பின் அம்ர்! உமக்கு என்ன (நேர்ந்தது)?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! "உட்கார்ந்து தொழுபவருக்கு, (நின்று தொழுபவரின்) தொழுகையில் பாதி (நன்மை)யே உண்டு' எனத் தாங்கள் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது; ஆனால் தாங்களே உட்கார்ந்து தொழுதுகொண்டிருக்கிறீர்களே?'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; ஆயினும் நான் உங்களில் ஒருவரைப் போன்றவன் அல்லன்'' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் (1338)

நபிக்கும் நமக்கும் உடல் உறுப்புகளின் வலிமையில் உள்ள வித்தியாசங்கள்.
அவர்களின் கண்களும் நமது கண்ணும் ஒன்றல்ல. நமது கண்கள் முன்னால் பொருட்களை பார்க்கும் பின்னால் பார்க்கமுடியாது. ஆனால் நபியின் கண்கள் முன்னும் பின்னும் ஒளியிலும் இருளிலும் உள்ளதையும் பார்க்கும்.

ஆயிஷா (ர-) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல்  உன் மீது சலாமுரைக்கின்றார்'' என்று கூறினார்கள். நான், " "வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு - அவர் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (அல்லாஹ் வின் தூதரே!) நான் பார்க்க முடியாததை யெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்'' என்று கூறினேன்.
ஆயிஷா (ர-) அவர்கள்  "நீங்கள்' என்று நபி (ஸல்) அவர்களையே குறிப் பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.
நூல்: புகாரி (3217)

நீங்கள் பார்க்காததை நான் பார்க்கிறேன். நீங்கள் கேட்காதவற்றையும் நான் கேட்கிறேன் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல்; திர்மிதி (2234)

அவர்களின் கரமும் நமது கரமும் ஒன்றல்ல.நமது கரம் சாதாரணகாரியங்களை மட்டுமே செய்யும் அவர்களின் பரகத்தான கரங்களோ சாதனை படைக்கும்.

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
عَطِشَ النَّاسُ يَوْمَ الْحُدَيْبِيَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ يَدَيْهِ رَكْوَةٌ فَتَوَضَّأَ مِنْهَا ثُمَّ أَقْبَلَ النَّاسُ نَحْوَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَكُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ لَيْسَ عِنْدَنَا مَاءٌ نَتَوَضَّأُ بِهِ وَلَا نَشْرَبُ إِلَّا مَا فِي رَكْوَتِكَ قَالَ فَوَضَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فِي الرَّكْوَةِ فَجَعَلَ الْمَاءُ يَفُورُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ كَأَمْثَالِ الْعُيُونِ قَالَ فَشَرِبْنَا وَتَوَضَّأْنَا فَقُلْتُ لِجَابِرٍ كَمْ كُنْتُمْ يَوْمَئِذٍ قَالَ لَوْ كُنَّا مِائَةَ أَلْفٍ لَكَفَانَا كُنَّا خَمْسَ عَشْرَةَ مِائَةً
.
ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் தோல் குவளை ஒன்று இருந்தது. (அதிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். மக்கள் நபி(ஸல்) அவர்களை நோக்கி ஓடிவந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கென்ன ஆயிற்று?' என்று கேட்டார்கள். மக்கள், 'தங்கள் முன்னாலுள்ள தண்ணீரைத் தவிர நாங்கள் உளூச் செய்வதற்கும் குடிப்பதற்கு வேறு தண்ணீர் எங்களிடம் இல்லை" என்று பதிலளித்தனர். உடனே, நபி(ஸல்) அவர்கள் தம் கையைத் தோல் குவளையினுள் வைத்தார்கள். உடனே, அவர்களின் விரல்களுக்கிடையேயிருந்து ஊற்றுகளைப் போன்று தண்ணீர் பொங்கி வரத் தொடங்கியது. நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) அருந்தினோம்; மேலும் உளூச் செய்தோம்.
அறிவிப்பாளர் சாலிம் இப்னு அபில் ஜஅத்(ரஹ்) கூறினார்:
நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்?' என்று கேட்டேன். அவர்கள், 'நாங்கள் ஒரு லட்சம் பேர் இருந்திருந்தாலும் கூட அது எங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐந்நூறு பேர் தாம் இருந்தோம்" என்று பதிலளித்தார்கள்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார் . நூல். புகாரி. 3576.

நமது நாவும் அவர்களின் நாவும்.

நமது நாவு ருசி மட்டுமே அரியும் அவர்களின் நாவு ருசியையும் அறியும். அதையும் தாண்டி ஹலால் ஹராமையும் அறியும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
لَمَّا فُتِحَتْ خَيْبَرُ أُهْدِيَتْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فِيهَا سُمٌّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اجْمَعُوا إِلَيَّ مَنْ كَانَ هَا هُنَا مِنْ يَهُودَ فَجُمِعُوا لَهُ فَقَالَ إِنِّي سَائِلُكُمْ عَنْ شَيْءٍ فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْهُ فَقَالُوا نَعَمْ قَالَ لَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَبُوكُمْ قَالُوا فُلَانٌ فَقَالَ كَذَبْتُمْ بَلْ أَبُوكُمْ فُلَانٌ قَالُوا صَدَقْتَ قَالَ فَهَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُ عَنْهُ فَقَالُوا نَعَمْ يَا أَبَا الْقَاسِمِ وَإِنْ كَذَبْنَا عَرَفْتَ كَذِبَنَا كَمَا عَرَفْتَهُ فِي أَبِينَا فَقَالَ لَهُمْ مَنْ أَهْلُ النَّارِ قَالُوا نَكُونُ فِيهَا يَسِيرًا ثُمَّ تَخْلُفُونَا فِيهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْسَئُوا فِيهَا وَاللَّهِ لَا نَخْلُفُكُمْ فِيهَا أَبَدًا ثُمَّ قَالَ هَلْ أَنْتُمْ صَادِقِيَّ عَنْ شَيْءٍ إِنْ سَأَلْتُكُمْ عَنْهُ فَقَالُوا نَعَمْ يَا أَبَا الْقَاسِمِ قَالَ هَلْ جَعَلْتُمْ فِي هَذِهِ الشَّاةِ سُمًّا قَالُوا نَعَمْ قَالَ مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ قَالُوا أَرَدْنَا إِنْ كُنْتَ كَاذِبًا نَسْتَرِيحُ وَإِنْ كُنْتَ نَبِيًّا لَمْ يَضُرَّكَ

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) நபி(ஸல்) அவர்கள், 'இங்கேயுள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே, அவர்கள் ஒன்று திரட்டி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மையைச் சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள், 'சரி (உண்மையைச் சொல்கிறோம்)" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் தந்தை யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இன்னார்" என்று பதிலளித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார் தான்" என்று கூறினார்கள். அவர்கள், 'நீங்கள் சொன்னது உண்மை தான்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள், 'சரி சொல்கிறோம், அபுல்காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்ததைப் போன்றே அதையும் அறிந்து கொள்வீர்கள்" என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நரகவாசிகள் யார்?' என்று கேட்டார்கள். அவர்கள், 'நாங்கள் அதில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு, எங்களுக்கு பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள்" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அதில் நீங்கள் இழிவுபட்டுப் போவீர்களாக! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒருபோதும் புக மாட்டோம்" என்று கூறினார்கள். பிறகு, 'நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மையைச் சொல்வீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள், 'சரி, அபுல் காசிமே!" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அவர்கள், 'ஆம் (கலந்திருக்கிறோம்)" என்று பதில் சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். அவர்கள், 'நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத் தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது" என்று பதிலளித்தார்கள்.

முஹம்மது (ஸல்)  அவர்களின் பிறப்பு  ஷைத்தானுக்கு வெறுப்பை கொடுத்த்து.

حكى السهيلي عن تفسير بقى بن مخلد الحافظ، أن إبليس رن أربع رنات: حين لعن، وحين أهبط، وحين ولد رسول الله صلى الله عليه وسلم، وحين أنزلت الفاتحة.
1. இறைவனால் சபிக்கப்பட்ட போது
2. சுவர்க்கத்தில் இருந்து விரட்டப்பட்ட போது
3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த போது

4. ஸுரத்துல் பாத்திஹா அருளப்பட்ட போது

இமாம் இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சீறத்துன் நபவிய்யா பாகம் - 1 , பக்கம் – 212

இப்னு ஸெய்யதுன் நாஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி உயூனுல் அதர் பாகம் - 1 , பக்கம் – 27


7 comments:

  1. சிறப்பான பதிவு ....அல்ஹம்துலில்லா

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்..

    கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புகளில்
    நிறைய தொகுத்து தந்துள்ளீகள்
    ஜஸாகல்லாஹு கைர்.

    ReplyDelete
  3. ரூஹீ பிதாக அஹ்லீ வமாலீ உம்மீ வ அபீ.யா செயிதீ யா ரசூலல்லாஹ்!உங்கள் கட்டுரை வஹாபிகளுக்கு சாட்டையடி! தறுதலைகளுக்கு மரண அடி !!மஹ்லரி .மதரசா அந்நூர் மலேசியா

    ReplyDelete
  4. Masha Allah
    May allah accept your hard work
    By cumbum faizy

    ReplyDelete
  5. கடுமையாக முயற்சித்து செய்திகளை தொகுத்தளித்தர்க்காக எமது கோடானு கோடி நன்றிகள் ஹஸ்ரத் !
    இந்த தியாகத்திற்கு எமது ஊக்கப் படுத்தலே சிறந்த அங்கீகாரம் எனும் போது அதை செய்யத் தவறுவது மிகப் பெரும் பிழை என்றே கருதுகிறேன் !
    தவறாமல் படிக்கிறேன் ! கருத்திட மட்டுமே சில போது தவறுகிறேன் ! முயற்சியை விட்டு விடாதீர்கள் ! தொடருங்கள் ஹஸ்ரத் ! அல்லா ரப்புல் ஆலமீன் தங்களின் பொருளாதார தேவைகளையும் பூர்த்தி செய்து அறிவுத் தேடலை நிரப்பைமாக்கித் தருவானாக !

    ReplyDelete
  6. May allah blessing for you hardworking
    ماشاءاللہ

    ReplyDelete