Thursday 16 January 2014

அண்ணலாரின் அறிவார்ந்த அணுகுமுறை.




எல்லாம் வல்ல இறைவன் மனிதனுக்கு வழங்கிய மிகப் பெரிய செல்வம் ஆறாவது அறிவு தான். பெரும்பாலோர் ஆறாவது அறிவுக்கு முடிந்த மட்டிலும் வேலை தராமலிருக்கவே விரும்புகின்றனர். நீண்ட நாள்கள் அதைப் பயன்படுத்தாமல் விட்டதால் பலருக்கு அது துருப்பிடித்து விட்டது எனவே இப்போதைய சமூக விஞ்ஞானிகளின் தலையாயப் பணி மனிதனுக்கு அவன் இழந்து விட்ட ஆறாவது அறிவை மீட்டுத் தருவதே
தலை சிறந்த சமூகவியல் விஞ்ஞானியாக சரித்திரத்தில் தடம் பதித்த இறைவனின் இறுதித் தூதர் அவர்கள் அறிவைத் தொலைத்து மவுட்டீகத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்ட சமூதாயத்தில் களப்பணியாற்றி அவர்களை உலகின்முன்மாதிரி நாயகர்களாக மாற்றிக் காட்டினார்கள் அதுவும் 23 ஆண்டு காலத்திலேயே  இதற்கு காரணம் 
அண்ணலாரின் அறிவார்த்தமான அணுகுமுறைகளே, பிரச்சனைகளை அவர்கள்   அணுகிய விதம், சூழ்நிலைகள் மீது அவர்களுக்கிருந்த பார்வை ஒரே செயலில் ஆயிரமாயிரம் உண்மைகளைப் புரிய வைக்கும் பாங்கு, மனித மனத்தின் அடி ஆழம் வரை சென்று உனர்வுகளைப் புரிந்து போதனைகளைக் கூறும் முறை எடுத்த முடிவுகளை தெரிவிக்கும் போது கையாண்ட நா நயம் இவையாவும் அண்ணல் நபியிடம் பொது வாழ்வில் இருப்போர் பயில வேண்டிய பாடங்கள்

அல்லாஹ் குர்ஆனில் அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பான அணுகுமுறைக்கு அங்கீகாரம் சொல்லும் வகையில் கூறுகிறான்.

فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ

(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டீர்கள். நிங்கள் கடுகடுப்பானவராகவும், கடினஉள்ளம் கொண்ட வராகவும் இருந்தீர்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்.

அல்குர்ஆன். 3:159

குர்ஆனின் விளக்கமாகவே நடந்து காட்டியகோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வசனத்தின் ஒளியில் அன்பின் இலக்கணமாக வாழ்ந்தார்கள். அன்னாரின் சொல்லும் செயலும் சுற்றியுள்ளவர்களை பற்றிஇழுத்து அன்னாரை பாசம் கொள்ளச் செய்தன.
ஏழை, பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், அரபி அரபியில்லாதவன் என்ற எந்த பாகுபாடுமற்ற பரிசுத்தமான அன்னாரின் சமத்துவ நடவடிக்கைகள் அனைவரையும் ஒரே கொடியின் கீழ் கட்டிப்போட்டு ஒரு குடும்பம் என்ற உள்ளார்ந்த அன்பை ஊட்டி செம்மைப்படுத்தியது.

அண்ணலார் தவறு செய்தவர்களை அணுகிய விதம்.


عن أبي أمامة قال: إن فتى شابًا أتى النبي (7) صلى الله عليه وسلم فقال: يا رسول الله، ائذن لي بالزنا. فأقبل القوم عليه فزجروه، وقالوا: مًهْ مَهْ. فقال: "ادنه". فدنا منه قريبًا (8) فقال (9) اجلس". فجلس، قال: "أتحبه لأمك؟" قال: لا والله، جعلني الله فداك. قال: "ولا الناس يحبونه لأمهاتهم" . قال: "أفتحبه لابنتك"؟ قال: لا والله يا رسول الله، جعلني الله فداك. قال: "ولا الناس يحبونه لبناتهم" ، قال: "أتحبه لأختك"؟ قال: لا والله، جعلني الله فداك. قال: "ولا الناس يحبونه لأخواتهم"، قال: "أفتحبه لعمتك"؟ قال: لا والله جعلني الله فداك. قال: "ولا الناس يحبونه لعماتهم" قال: "أفتحبه لخالتك"؟ قال: لا والله، جعلني الله فداك. قال: "ولا الناس يحبونه لخالاتهم" قال: فوضع يده عليه وقال: "اللهم اغفر ذنبه وطهر قلبه وحصن (10) فرجه" قال: فلم يكن بعد ذلك الفتى يلتفت إلى شيء (11) .

அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபி (ஸல்) அவர்களிடம் இளைஞர் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே விபச்சாரம் செய்ய எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டார். மக்கள் அவரை நோக்கி வந்து நிறுத்து என்று கண்டித்தார்கள். நபியவர்கள் அவரை என்னிடம் வரவிடுங்கள் என்று கூறினார்கள்.அவர் நபியவர்களை நெருங்கிவந்தார் நபியவர்கள் அவரை அமரச் சொல்ல அமர்ந்தார்.

நபி(ஸல்) அவர்கள் அவரிடம் உன் தாய்க்கு அது நிகழ்வதை ( அதாவது உன் தாயிடம் வேறொருவர் தவறாக நடப்பதை) ?  நீ விரும்புவாயா என்றார்கள். அவர் அல்லாஹ்வின் மீதாணையாக இல்லை. என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும் மனிதர்கள் (யாரும்) தம் தாயிடம் அதை விரும்பமாட்டார்கள் என்று கூறினார்.
 நபியவர்கள் உன் மகளுக்கு அது நிகழ்வதை ( அதாவது உன் மகளிடம் வேறொருவர் தவறாக நடப்பதை)  நீ விரும்புவாயா அவர் அல்லாஹ்வின் மீதாணையாக இல்லை. என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும் மனிதர்கள் (யாரும்) தம் மகளிடம் அதை விரும்பமாட்டார்கள் என்று கூறினார்.  . நபியவர்கள் உன் சகோதரிக்கு அது நிகழ்வதை  நீ விரும்புவாயா ( அதாவது உன் சகோதரியிடம் வேறொருவர் தவறாக நடப்பதை)? என்றார்கள். அவர் அல்லாஹ்வின் மீதாணையாக இல்லை. என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும் மனிதர்கள் (யாரும்) தம் சகோதரியிடம் அதை விரும்பமாட்டார்கள் என்று கூறினார். . நபியவர்கள் உன் தந்தையின் சகோதரிக்கு அது நிகழ்வதை  நீ விரும்புவாயா ( அதாவது உன் தந்தையின் சகோதரிடம் வேறொருவர் தவறாக நடப்பதை)? என்றார்கள். அவர் அல்லாஹ்வின் மீதாணையாக இல்லை. என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும் மனிதர்கள் (யாரும்) தம் தந்தையின் சகோதரிக்கு அதை விரும்பமாட்டார்கள் என்று கூறினார். . நபியவர்கள் உன் தாயின் சகோதரிக்கு அது நிகழ்வதை( அதாவது உன் தாயின் சகோதரியிடம் வேறொருவர் தவறாக நடப்பதை) நீ விரும்புவாயா? என்றார்கள். அவர் அல்லாஹ்வின் மீதாணையாக இல்லை. என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும் மனிதர்கள் (யாரும்) தம் தாயின் சகோதரிக்கு அதை விரும்பமாட்டார்கள் என்று கூறினார். நபியவர்கள் தமது கையை அவர்மீது வைத்து இறைவா இவரது பாவத்தை மன்னிப்பாயாக. உள்ளத்தை தூய்மை படுத்துவாயாக. கற்பைப் பாதுகாப்பாயாக என்று பிராத்தனை செய்தார்கள். அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறினார்கள். அதன் பின்னர் அந்த இளைஞர் எந்த தீமையின் பக்கமும் திரும்பவே இல்லை.   
 
 நூல். தப்ஸீர் இப்னு கஸீர். முஸ்னத் அஹ்மத்.


عَنِ ابْنِ عَبَّاسٍ
أَنَّ رَجُلًا أَتَى عُمَرَ فَقَالَ امْرَأَةٌ جَاءَتْ تُبَايِعُهُ فَأَدْخَلْتُهَا الدَّوْلَجَ فَأَصَبْتُ مِنْهَا مَا دُونَ الْجِمَاعِ فَقَالَ وَيْحَكَ لَعَلَّهَا مُغِيبٌ فِي سَبِيلِ اللَّهِ قَالَ أَجَلْ قَالَ فَأْتِ أَبَا بَكْرٍ فَاسْأَلْهُ قَالَ فَأَتَاهُ فَسَأَلَهُ فَقَالَ لَعَلَّهَا مُغِيبٌ فِي سَبِيلِ اللَّهِ قَالَ فَقَالَ مِثْلَ قَوْلِ عُمَرَ ثُمَّ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ قَالَ فَلَعَلَّهَا مُغِيبٌ فِي سَبِيلِ اللَّهِ وَنَزَلَ الْقُرْآنُ
{ وَأَقِمْ الصَّلَاةَ طَرَفَيْ النَّهَارِ وَزُلَفًا مِنْ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ }
إِلَى آخِرِ الْآيَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَلِي خَاصَّةً أَمْ لِلنَّاسِ عَامَّةً فَضَرَبَ عُمَرُ صَدْرَهُ بِيَدِهِ فَقَالَ لَا وَلَا نَعْمَةَ عَيْنٍ بَلْ لِلنَّاسِ عَامَّةً فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَ عُمَرُ

ஒருமுறை, தனிமைச் சூழலில் வாழும் ஓர் அந்நியப்பெண்மணி சில பொருட்கள் வாங்குவதற்காக ஓர் அங்காடிக்குத் தனிமையில் சென்றபோதுகடைக்காரர் கண்ணில் அவள் கவர்ச்சியாய்த் தோன்றினாள்! அவள் கேட்ட பொருள் உள்ளே சேமிப்பறையில் இருப்பதாய் அவர்  சொன்னதும் அவள் அங்கு செல்லவே, பின் தொடர்ந்த கடைக்காரர், எதிர்பாராமல் அவள் மேனியை ஸ்பரிசித்தார்! அது மட்டுமின்றி, அவளை முத்தமிட்டார்!

அவளோ அதிர்ச்சியில்  'அட உன் கை சேதமே! உனக்கு என்ன நேர்ந்தது? நான் தனித்து வாழும் ஓர் அந்நியப்பெண் என்பதை நீ அறியமாட்டாயா?" என்றாள்.

கடைக்காரருக்கு அப்போதுதான், தான் செய்தது பெரிய தவறு என்று உரைத்தது! மனம் வருந்தியவர், நேராக உமர் ஃபாரூக் (ரலி) அவர்களிடம் சென்று விபரம் கூறி விடை கேட்டு நின்றார். 'அட உனக்கு நேர்ந்த சோகமே! நீ அபுபக்ரு சித்தீக் (ரலி) அவர்களிடம் செல். ஒருவேளை, உனக்கு அவர்களிடம் உதவி கிடைக்கலாம் என்றார். கடைக்காரர் அபுபக்ரு (ரலி) அவர்களிடம் சென்று விபரம்  சொல்லவே, அவர்களும் 'அவள் தனிமையில் வசிக்கும் பெண்ணா?' என்றார்கள்.

'ஆம்' என்றதும் 'நீ அல்லாஹ்வின் தூதரிடம் செல்' என்று அவரை அனுப்பிவிட்டு, அபுபக்ரு சித்தீக் (ரலி) அவர்களும் உமர் ஃபாரூக் (ரலி) அவர்களும் அண்ணல் நபியைக் காணச் சென்றார்கள்.

இரக்கக் குணம் நிறைந்த இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்த  விவரத்தை கூறினார்:

அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமானார்கள்.  இது விஷயத்தில், அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்திருந்தார்கள்போல் தோன்றியது. அப்போது அண்ணலாருக்கு வழக்கம்போல் வஹீ என்ற அல்லாஹ்வின் அருள் பொழியத் துவங்கியது.

 وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ ۚ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ۚ ذَٰلِكَ ذِكْرَىٰ لِلذَّاكِرِينَ

பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக . நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும். (அல்லாஹ்வை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும் எனும்  இறைவசனம் அருளப்பட்டது. (9)

அதைப் பெற்றுப் புளகாங்கிதம் கொண்ட கடைக்காரர்  'இது எனக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா?' என்று கேட்டதற்கு, அருகே இருந்த உமர் ஃபாரூக் (ரலி) அவர்கள் 'இந்த வசனம்  உனக்கு மட்டுமே பிரத்தியேகமானதாக இருக்கும்படி நீ விரும்பினால், உனக்கு அது செல்லுபடி ஆகாது!   இந்த அருட்கொடை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும்தான்! என்று பதிலளித்தார்கள்.  அருகில் இருந்த அண்ணல்   நபி(ஸல்) அவர்கள், 'உமர் உண்மையே உரைத்தார் ' என்று சொல்லிச் சிரித்தார்கள்.

நூல். தப்ஸீர் இப்னு கஸீர்.

- حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا زَمْعَةُ بْنُ صَالِحٍ قَالَ سَمِعْتُ ابْنَ شِهَابٍ يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبِ بْنِ زَمْعَةَ عَنْ أُمِّ سَلَمَةَ
أَنَّ أَبَا بَكْرٍ خَرَجَ تَاجِرًا إِلَى بُصْرَى وَمَعَهُ نُعَيْمَانُ وَسُوَيْبِطُ بْنُ حَرْمَلَةَ وَكِلَاهُمَا بَدْرِيٌّ وَكَانَ سُوَيْبِطٌ عَلَى الزَّادِ فَجَاءَهُ نُعَيْمَانُ فَقَالَ أَطْعِمْنِي فَقَالَ لَا حَتَّى يَأْتِيَ أَبُو بَكْرٍ وَكَانَ نُعَيْمَانُ رَجُلًا مِضْحَاكًا مَزَّاحًا فَقَالَ لَأَغِيظَنَّكَ فَذَهَبَ إِلَى أُنَاسٍ جَلَبُوا ظَهْرًا فَقَالَ ابْتَاعُوا مِنِّي غُلَامًا عَرَبِيًّا فَارِهًا وَهُوَ ذُو لِسَانٍ وَلَعَلَّهُ يَقُولُ أَنَا حُرٌّ فَإِنْ كُنْتُمْ تَارِكِيهِ لِذَلِكَ فَدَعُونِي لَا تُفْسِدُوا عَلَيَّ غُلَامِي فَقَالُوا بَلْ نَبْتَاعُهُ مِنْكَ بِعَشْرِ قَلَائِصَ فَأَقْبَلَ بِهَا يَسُوقُهَا وَأَقْبَلَ بِالْقَوْمِ حَتَّى عَقَلَهَا ثُمَّ قَالَ لِلْقَوْمِ دُونَكُمْ هُوَ هَذَا فَجَاءَ الْقَوْمُ فَقَالُوا قَدْ اشْتَرَيْنَاكَ قَالَ سُوَيْبِطٌ هُوَ كَاذِبٌ أَنَا رَجُلٌ حُرٌّ فَقَالُوا قَدْ أَخْبَرَنَا خَبَرَكَ وَطَرَحُوا الْحَبْلَ فِي رَقَبَتِهِ فَذَهَبُوا بِهِ فَجَاءَ أَبُو بَكْرٍ فَأُخْبِرَ فَذَهَبَ هُوَ وَأَصْحَابٌ لَهُ فَرَدُّوا الْقَلَائِصَ وَأَخْذُوهُ فَضَحِكَ مِنْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ حَوْلًا

உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

அபூபக்கர் (ரழி) அவர்கள் புஸ்ரா நகரத்திற்கு வியாபார நிமித்தமாகச் சென்றார்கள். பத்ருப் போரில் பங்கேற்ற "நுஅய்மான்' மற்றும் "ஸுவைபித் இப்னு ஹர்மலா' (ரழி) அவர்களையும் உடன் அழைத்துச் சென்றார்கள். அதில் ஸுவைபித் (ரழி) பிரயாண உணவுக்கு பொறுப்பாளராக இருந்தார். அவரிடம் நுஅய்மான் (ரழி) "உணவு கொடுங்கள்'' என்றார். அவர் "அபூபக்கர் (ரழி) வரட்டும்'' என்று மறுத்துவிட்டார். நுஅய்மான் (ரழி) நகைச்சுவையாளராகவும், கிண்டல் செய்பவராகவும் இருந்தார். அவர் ஒட்டகங்களை இழுத்து வந்து கொண்டிருந்த சில மனிதர்களிடம் சென்று, "என்னிடம் சுறுசுறுப்பான அரபு அடிமை ஒருவர் இருக்கிறார். அவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்கிறீர்களா?'' என்றார். அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். நுஅய்மான் (ரழி) கூறினார் "அந்த அடிமை நாவன்மை உடையவர். அவர் தன்னை சுதந்திரமானவன் எனக் கூறலாம். நீங்கள் அதை நம்பி அவரை வாங்க மறுப்பதாக இருந்தால் இப்போதே என்னை விட்டுவிடுங்கள். அவர் விஷயத்தில் எனக்கு இடையூறு செய்யாதீர்கள்'' என்றார். அம்மனிதர்கள் இல்லை, அவரை வாங்கிக் கொள்கிறோம் என்றார்கள். ஸுவைபித் (ரழி) அவர்களை அம்மனிதர்கள் 10 பெண் ஒட்டைகைகளைக் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள்.

    நுஅய்மான் (ரழி) 10 ஒட்டகைகளையும் அம்மனிதர்களையும் அழைத்து வந்து "இதோ இவர்தான் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்றார். ஸுவைபித் (ரழி) "இவர் பொய்யர், நான் சுதந்திரமனிதன்; அடிமையில்லை'' என்றார். வந்தவர்கள் "உம்மைப் பற்றிய எல்லா விஷயத்தையும் இவர் (நுஅய்மான்) கூறிவிட்டார்'' என்று கூறி அவரது கழுத்தில் கயிற்றைப் பிணைத்து அழைத்துச் சென்று விட்டார்கள். அப்போது அபூபக்கர் ஸித்தீக் (ரழி) வந்தார்கள். அவர்களிடம் நடந்த விஷயத்தைக் கூறப்பட்டது. அவர்கள் தமது தோழருடன் சென்று அவர்களது ஒட்டகைகளைக் கொடுத்துவிட்டு அவரை மீட்டு வந்தார்கள். பிறகு இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. சுற்றிலும் தோழர்கள் அமர்ந்திருந்த நிலையில் தோழர்களும் நபி (ஸல்) அவர்களும் ஒரு வருடமாக இதைப் பேசி சிரித்துக் கொண்டார்கள்.

நுல் .(முஸ்னத் அஹ்மத்)  25465

    ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். மஸ்ஜிதுக்குள் நுழைந்து அதன் முற்றத்தில் தனது ஒட்டகையை அமரச் செய்தார். சில நபித்தோழர்கள் நுஅய்மான் (ரழி) அவர்களிடம் "நாம் இறைச்சி சாப்பிட்டு வெகுநாட்களாகி விட்டது. மிகவும் ஆவலாக இருக்கிறது. நீர் இதை அறுத்தால் நாம் சாப்பிடலாம், இறுதியில் நபி (ஸல்) அவர்கள் அதற்கான விலையை பொறுப்பேற்றுக் கொள்வார்கள்'' என்று கூறினார்கள். அப்போது நுஅய்மான் (ரழி) அதை அறுத்துவிட்டார்.

    பின்பு அந்தக் கிராமவாசி தனது ஒட்டகையைப் பார்த்துவிட்டு "முஹ்ம்மதே! அறுத்து விட்டார்களே!'' என்று கூச்சலிட்டார். நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து "இதைச் செய்தது யார்?'' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் "நுஅய்மான்'' என்று கூறினார்கள். அவர் எங்கே இருக்கிறார் என நபி (ஸல்) அவர்கள் தேடிச் சென்றபோது அவர் ளுபாஆ பின்த் ஜுபைர் (ரழி) அவர்களின் வீட்டில் ஒரு குழியினுள் ஒளிந்துக் கொண்டார். அவர் பேரீச்ச மட்டைகளாலும் கீற்றுகளாலும் தன்னை மறைத்துக் கொண்டிருந்தார்.

    ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சப்தமாக "அல்லாஹ்வின் தூதரே! நான் நுஅய்மானைப் பார்க்கவில்லை'' என்று கூறியவராக நுஅய்மானின் பக்கம் சைக்கினை செய்தார். நபி (ஸல்) அவர்கள் அவரை வெளியேறி வரச் செய்தார்கள். அவர்மீது கிடந்த கட்டைகள் முகத்தில் அழுத்தியதால் அவரது முகம் நிறம்மாறி இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவரிடம் "உம்மை இவ்வாறு செய்யத் தூண்டியவர் யார்?'' என்று கேட்டார்கள். நுஅய்மான் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! என்னைப்பற்றி உங்களிடம் கூறினார்களே அவர்கள்தான் என்னைத் தூண்டினார்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரது முகத்தை தடவிக் கொடுத்து சிரித்தார்கள். பின்பு அந்த ஒட்டகைக்கான விலையைக் கொடுத்தனுப்பினார்கள்.

நூல். ஹயாத்துஸ் ஸஹாபா

கிராமாவாசியிடம் அணுகிய விதம்..

அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாஹிர் என்ற கிராமவாசி ஒருவர் நபி (ஸல்அவர் திரும்பும்போது நபி (ஸல்) அவர்களும் அவருக்கென பிரயாண தேவைகளைத் தயார் செய்து தருவார்கள். நபி (ஸல்) அவர்கள், ஜாஹிர் நமக்கு ) அவர்களுக்கு தனது கிராமத்திலிருந்து அன்பளிப்புகளை எடுத்து வருவார். கிராமத்துத் தோழர்; நாம் அவருக்கு பட்டணத்துத் தோழர்கள் என்றார்கள். அவரை மிகவும் நேசிப்பார்கள். அவர் அம்மை நோயால் முகம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தனது பொருள்களை விற்றுக்கொண்டிருந்த பொழுது நபி (ஸல்) அவர்கள் பின்னால் வந்து அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.

 அவரால் யாரென்று திரும்பிப்பார்க்க முடியவில்லை. அவர், "யாரது? என்னை விடுங்கள்'' என்று கூறிவிட்டு, திரும்பிப் பார்த்தபொழுது நபி (ஸல்) அவர்கள் என அறிந்து கொண்டார். உடனே நபி (ஸல்) அவர்களிடமிருந்து விலகாமல் அவர்களது நெஞ்சுடன் தனது முதுகைச் சேர்த்துக் கொண்டார். நபி (ஸல்) அவர்கள், "இந்த அடிமையை வாங்கிக் கொள்பவர் யார்?'' என்று கூறத் தொடங்கினார்கள். அவர், "அல்லாஹ்வின் தூதரே! விற்பதாக இருந்தால் என்னை மிகவும் விலைமதிப்பு குறைந்தவனாகக் கருதுகிறேன்'' என்று கூறினார். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள், "என்றாலும் நீர் அல்லாஹ்விடம் குறைந்த மதிப்புடையவர் அல்லர்'' என்றோ, "எனினும் அல்லாஹ்விடம் நீர் மிகுந்த மதிப்புடையவர்'' என்றோ கூறினார்கள்.

நூல். முஸ்னத் அஹ்மத்

சிறுவர்களை அணுகிய விதம்.

அப்துல்லாஹிப்னு பஷீர் (ரலி) சிறிய வயதில் அவரின் தாய் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு திராட்சைப்பழத்தை அன்பளிப்பாக கொடுத்து வரும்படி ஏவினார்கள்.ஆனால் அவர் வரும் வழியில் அதன்மீதுள்ள ஆசையால் சாப்பிட்டுவிட்டார். இதுயாருக்கும் தெரியாது.  சில தினங்கள் சென்று வி­ஷயம் வெளியானது.  அப்துல்லாஹ் (ரலி), நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன் செல்கையில் அண்ணலார் அவரை அழைத்து அவரின் காதைப் பிடித்து செல்லமாக கேட்கிறார்கள். ஏ! ஏமாற்றும் பையனே! என்னை ஏமாற்றி விட்டாயே! ஏமாற்றும் பையனே! எனக்கூறி வேடிக்கையாக சிரிக்க வைத்தார்கள்

மனைவியை அணுகிய விதம்.

وعن
 عائشة أنها قالت : وا رأساه قال رسول الله صلى الله عليه وسلم : " ذاك لو كان وأنا حي فأستغفر لك وأدعو لك " فقالت عائشة : واثكلياه والله إني لأظنك تحب موتي فلو كان ذلك لظللت آخر يومك معرسا ببعض أزواجك فقال النبي صلى الله عليه وسلم : " بل أنا وا رأساه لقد هممت أو أردت أن أرسل إلى أبي بكر وابنه وأعهد أن يقول القائلون أو يتمنى المتمنون ثم قلت : يأبى الله ويدفع المؤمنون أو يدفع الله ويأبى المؤمنون " . رواه البخاري

அபூபக்கர்(ரலி) அவர்களது மகன் காசிம் (ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரர்) அறிவிக்கின்றார்கள்;

(ஒருமுறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா(ரலி), “என் தலை(வலி)யே!என்று சொல்ல, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டு விட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காக (மறுமை நலன் கோரிப்) பிரார்த்திப்பேன்என்று கூறினார்கள். 

ஆயிஷா(ரலி), “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (புன்னகைத்து விட்டு) இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது.) நான்தான் (இப்போது) என் தலை(வலி)யே!என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும், உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவேதான் உன் தந்தை) அபூபக்ருக்கும், அவரின் புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநியாகச் செயல்படும்படி) அறிவித்து விட விரும்பினேன். (தாம் விரும்பியவரைக் கலீஃபா என) யாரும் சொல்லி விடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டு விடவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூ பக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க மாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்க மாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (எனவேதான் அறிவிக்கவில்லை)என்று கூறினார்கள்.

 (புகாரி 5666)

கணவன்-மனைவிக்கிடையில் நடைபெறும் சில உரையாடல்களும், பேச்சுக்களும் மறுதரப்பால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஒருவன் பாவிக்கும் ஒரு வார்த்தை, அதை அவன் உச்சரிக்கும் தொணி, பேசும் நேரம், அதன் போது அவன் வெளியிடும் உணர்வு என்பவற்றுக்கு ஏற்ப அர்த்தம் மாறுபடும். இது இயல்பானதுதான். ஆனால் கணவன் அல்லது மனைவி பேசும் போது அவர் பேசும் பேச்சுக்கு அல்லது வார்த்தைக்குத் தவறான அர்த்தத்தை ஒருவர் எடுக்கும் போது இல்லறத்தில் கலவரம் மூழ்குகின்றது அதை நளினமாக பெருமானார்(ஸல்) அவர்கள் கையாண்டார்கள்.


ஏமாற்ற நினைப்பரிடம் நாயகம் அணுகிய விதம்.

فَاجْتَمَعَتْ قُرَيْشٌ لِحَرْبِ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ حِينَ فَعَلَ ذَلِكَ أَبُو سُفْيَانَ [ ص 61 ] أَطَاعَهَا مِنْ قَبَائِلِ كِنَانَةَ وَأَهْلِ تِهَامَةَ . وَكَانَ أَبُو عَزّةَ عَمْرُو بْنُ عَبْدِ اللّهِ الْجُمَحِيّ قَدْ مَنّ عَلَيْهِ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ يَوْمَ بَدْرٍ وَكَانَ فَقِيرًا ذَا عِيَالٍ وَحَاجَةٍ وَكَانَ فِي الْأُسَارَى فَقَالَ إنّي فَقِيرٌ ذُو عِيَالٍ وَحَاجَةٍ قَدْ عَرَفْتَهَا فَامْنُنْ عَلَيّ صَلّى اللّهُ عَلَيْك وَسَلّمَ فَمَنّ عَلَيْهِ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ . فَقَالَ لَهُ صَفْوَانُ بْنُ أُمَيّةَ : يَا أَبَا عَزّةَ إنّك امْرُؤٌ شَاعِرٌ ، فَأُعِنّا بِلِسَانِك ، فَاخْرُجْ مَعَنَا ؛ فَقَالَ إنّ مُحَمّدًا قَدْ مَنّ عَلَيّ فَلَا أُرِيدُ أَنْ أُظَاهِرَ عَلَيْهِ قَالَ ( بَلَى ) فَأَعِنّا بِنَفْسِك ، فَلَك اللّهُ عَلَيّ إنْ رَجَعْتُ أَنْ أُغْنِيَك ، وَإِنْ أُصِبْتَ أَنْ أَجَعَلَ بَنَاتِك مَعَ بَنَاتِي ، يُصِيبُهُنّ مَا أَصَابَهُنّ مِنْ عُسْرٍ وَيُسْرٍ .

பத்ரு போரில் கைதிதியாகப் பிடிக்கப்பட்ட எதிரிகளிடம் ஈட்டுத் தொகை பெற்று அவர்களை விடுதலை செய்தார்கள் நபியவர்கள் மக்கா நகரின் புகழ் மேவிய கவிஞர்களின் ஒருவரான அபூ இஸ்ஸா என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார் அவரிடம் பணயத் தொகை கேட்ட போது நான் ஒரு ஏழை எனவெ என்னால் எதுவும் தர இயலாது உங்களின் கைதியாகவே இங்கேயே இருங்திடவும் இயலாது ஏனெனில் எனக்கு பெண் குழந்தைகள் அதிகம் உள்ளனர் ஒரு தந்தை என்ற முறையில் அவர்களைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று கவித் திறமையின்துணையோடு இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் வாதாடி கெஞ்சி விடுதலை பெற்றிட முயன்றார் ஏழ்மையோடும் பெண்மக்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை கஷ்டப் படுத்த நபி(ஸல்) அவர்கள்  விரும்பவில்லை ஆனாலும் இவரை மட்டும் சும்மா விடுதலை செய்திடவும் முடியாது    எனவே ஒரு நிபந்தனையின் பேரில் அபூ இஸ்ஸாவை விடுவித்திட நபி(ஸல்) அவர்கள் முன் வந்தார்கள் இனி முஸ்லிம்களுக்கு எதிரான படையில் சேர்ந்து கொண்டு போர்களத்துக்கு வரக் கூடாது எதிரிகளுக்கு உதவவும் கூடாது என்பதே அந்த நிபந்தனை அவர் ஒப்புக் கொண்டார் விடுதலை செய்யப் பட்டார் ஆனால் வாக்கு மீறினார் அபூ இஸ்ஸா மறுவருடம் நடந்த உஹதுப் போரில் மீண்டும் முஸ்லீம்களைத் தாக்கிட எதிர்களோடு களத்துக்கு வந்துருந்தார் இப்போதும் கைது செய்யப்பட்டார் நமது நாவன்மையால் முஹம்மதை ஏமாற்றி நம்ப வைத்து இப்போதும் விடுதலை  பெற்று விட முடியும் என்று எஅம்பிக் கொண்டிருந்தார் கருணை நபி(ஸல்) அவர்கள் உறுதியான குரலில் கூறினார்கள் அபூ இஸ்ஸாவே மக்காவின் வீதிகளில் நீநடந்து செல்லும் போது எதில் வந்து போவோரிடம் நான் முஹம்மதை இரண்டு தடவை ஏமாற்றி விட்டேன் என்று கூறிக் கொண்டு அலைவதை நான் அனுமதிக்கவே மாட்டேன் ஏனெனில் ஒரு இறை நம்பிக்கையாளன் ஒரே பொந்தில் இரண்டு தடவை தீண்டப்பட மாட்டான்

இப்படிக் கூறிய இறைத் தூதர் (ஸல்) அவர்கள் அங்கே நின்று கொண்டிருந்த்ன ஆஸிம் (ரலி) என்ற தோழரை அழைத்து ஏமாற்றுக்காரக் கவிஞன் அபூ இஸ்ஸாவின் தலையை வெட்டிவிட உத்தரவிட்டார்கள்  (நூல்  சீரத் இப்னு ஹிஷாம்) இரக்கம் காட்டுவது வேறு ஏமாளித்தனம் வேறு இவ்விரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை துல்லியமாக தெரிந்து வைத்திருந்தார்கள் இறைத்தூதரவர்கள் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டமைத்துக் கொண்டிருந்த காலத்தில் வஞ்சக வலை விரிக்கும் எதிரிகளிடம் உடன்படிக்கையை மீறும் உன்மத்தர்களிடம் மென்மை காட்டிவது இறையாட்சிக்கே குந்தகம் ஏற்படுத்தும் குறை மதிச் செயலாகும் எனவே அந்த கடுமையான ஆனால் அறிவார்த்தமான முடிவுக்கு உடனே வந்தார்கள் நபியவர்கள்

பிரச்சனைக்குரிய விஷயத்தை நாயகம் அணுகிய விதம்
.
           
- حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى عَنْ إِسْرَائِيلَ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذِي الْقَعْدَةِ فَأَبَى أَهْلُ مَكَّةَ أَنْ يَدَعُوهُ يَدْخُلُ مَكَّةَ حَتَّى قَاضَاهُمْ عَلَى أَنْ يُقِيمَ بِهَا ثَلَاثَةَ أَيَّامٍ فَلَمَّا كَتَبُوا الْكِتَابَ كَتَبُوا هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَقَالُوا لَا نُقِرُّ بِهَا فَلَوْ نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ مَا مَنَعْنَاكَ لَكِنْ أَنْتَ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ أَنَا رَسُولُ اللَّهِ وَأَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ ثُمَّ قَالَ لِعَلِيٍّ امْحُ رَسُولُ اللَّهِ قَالَ لَا وَاللَّهِ لَا أَمْحُوكَ أَبَدًا فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكِتَابَ فَكَتَبَ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ لَا يَدْخُلُ مَكَّةَ سِلَاحٌ إِلَّا فِي الْقِرَابِ وَأَنْ لَا يَخْرُجَ مِنْ أَهْلِهَا بِأَحَدٍ إِنْ أَرَادَ أَنْ يَتَّبِعَهُ وَأَنْ لَا يَمْنَعَ أَحَدًا مِنْ أَصْحَابِهِ أَرَادَ أَنْ يُقِيمَ بِهَا فَلَمَّا دَخَلَهَا وَمَضَى الْأَجَلُ أَتَوْا عَلِيًّا فَقَالُوا قُلْ لِصَاحِبِكَ اخْرُجْ عَنَّا فَقَدْ مَضَى الْأَجَلُ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَبِعَتْهُمْ ابْنَةُ حَمْزَةَ يَا عَمِّ يَا عَمِّ فَتَنَاوَلَهَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَخَذَ بِيَدِهَا وَقَالَ لِفَاطِمَةَ عَلَيْهَا السَّلَام دُونَكِ ابْنَةَ عَمِّكِ حَمَلَتْهَا فَاخْتَصَمَ فِيهَا عَلِيٌّ وَزَيْدٌ وَجَعْفَرٌ فَقَالَ عَلِيٌّ أَنَا أَحَقُّ بِهَا وَهِيَ ابْنَةُ عَمِّي وَقَالَ جَعْفَرٌ ابْنَةُ عَمِّي وَخَالَتُهَا تَحْتِي وَقَالَ زَيْدٌ ابْنَةُ أَخِي فَقَضَى بِهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِخَالَتِهَا وَقَالَ الْخَالَةُ بِمَنْزِلَةِ الْأُمِّ وَقَالَ لِعَلِيٍّ أَنْتَ مِنِّي وَأَنَا مِنْكَ وَقَالَ لِجَعْفَرٍ أَشْبَهْتَ خَلْقِي وَخُلُقِي وَقَالَ لِزَيْدٍ أَنْتَ أَخُونَا وَمَوْلَانَا

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். உம்ராவை முடித்துவிட்டு நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா(ரலி) அவர்களின் (அனாதை) மகள், 'என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!" என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ(ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களிடம், 'இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்" என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ(ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களும், ஜஅஃபர்(ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், 'அவளை நானே வளர்ப்பேன்' என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ(ரலி), 'நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்" என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), 'இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மணபந்தத்தின்) கீழ் இருக்கிறாள்" என்று கூறினார்கள். ஸைத்(ரலி), '(இவள்) என் சகோதரரின் மகள்" என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர்(ரலி) அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், 'சிற்றன்னை தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்" என்று கூறினார்கள். அலீ(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்" என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்" என்றார்கள். மேலும், ஸைத்(ரலி) அவர்களை நோக்கி, 'நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)" என்று கூறினார்கள்.

நூல். புகாரி.      2699.


பெண்கள்பாவப் பிறவிகள். அவர்களுக்கு தந்தையாக இருப்பது பெரும் இழுக்கு அதன் பரிகாரம் அவர்களை உயிரோடு புதைப்பதேஎன்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்த மக்காவில்ஒரு பெண் குழந்தையை வளர்ப்பதற்காக மூன்று பேர் போட்டியிட்டுக் கொண்டனர் என்பது அற்புத  அழகிய மாற்றம் அநாதைச் சிறுமியை வளர்ப்பதற்கு அவளின் சிற்றன்னைக்கே முதல் உரிமை உண்டு என்று கூறியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை நாயகம் (ஸல்) அவர்கள் இதன் பிறகு நமக்கு அக்குழந்தையை வளர்க்கும் போது கிடைக்க வில்லையே என்று மூவரும் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது என்பதற்காக அம்மூவரின் சிறப்பியல்புகளைப் பாராட்டி அவர்களின் மனக் கவலையைப் போக்கினார்கள் கோமான் நபியவர்கள் அண்ணல் நபியால் அருல் வாயால் பாராட்டுக்களைக் கேட்ட மூவரும் கவலையை மறந்து சென்றிருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை

வணக்க வழிபாடு விஷயத்தில் நாயகம் அணுகிய விதம்.

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ بُسْرِ بْنِ مِحْجَنٍ عَنْ أَبِيهِ وَعَبْدُ الرَّزَّاقِ قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ بُسْرِ بْنِ مِحْجَنٍ عَنْ أَبِيهِ قَالَ
أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُقِيمَتْ الصَّلَاةُ فَجَلَسْتُ فَلَمَّا صَلَّى قَالَ لِي أَلَسْتَ بِمُسْلِمٍ قُلْتُ بَلَى قَالَ فَمَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ مَعَ النَّاسِ قَالَ قُلْتُ صَلَّيْتُ فِي أَهْلِي قَالَ فَصَلِّ مَعَ النَّاسِ وَلَوْ كُنْتَ قَدْ صَلَّيْتَ فِي أَهْلِكَ

நபி (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார்.  அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது.  நபி (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள்.  மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார்.  "நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  அதற்கு மிஹ்ஜன் (ரலி), "அப்படியில்லை!  நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்'' என்று கூறினார்.  "நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புஸ்ர் பின் மிஹ்ஜன்

 நூற்கள்: நஸயீ 848, அஹ்மத் 15799

அண்ணாரின் அறிவார்த்தமான அணுகுமுறைகள் மீது ஒரு விஞ்ஞானப்பார்வையை வீசினால் ஏராளமான வழிகாட்டுதல்கள் மனித சமுதாயத்துக்கு கிடைக்கும். அணுகுண்டுகளையும் பேரழிவு ஆயுதங்களையும் பயன் படுத்தித்தான் உலகத்தில் அமைதியை நிலை நாட்ட முடியும் என்று நம்புகிற உலகத்தில் அறிவார்த்தமான அணுகுமுறைகள் மூலம் உலகத்தில் அமைதியை நிலை நிறுத்தி காட்டிய மிகப்பெரும் சாதனையாளர் நாயகம்(ஸல்) அவர்கள்தான்.
                


4 comments:

  1. ஏழாம் அறிவை பயன் படுத்தி படைக்கப்பட்ட அற்புத பதிஉ.வாழ்த்துக்கள், துஆக்கள்.

    ReplyDelete
  2. ஏழாம் அறிவை பயன் படுத்தி படைக்கப்பட்ட அற்புத பதிஉ.வாழ்த்துக்கள், துஆக்கள்.

    ReplyDelete