Wednesday 23 October 2013

தடம்புரளும் சமுதாய தூண்கள்


மனித வாழ்வின் மிக முக்கியமான பகுதி இளமை.. பிற்காலம் சுகமாக அமைவதும்.சுமையாக மாறுவதும் இளமையை பயன்படுத்தும் விதத்தை வைத்துதான். அதன் வலிமை மகத்தானது என்பதால்தான் எல்லா கட்சிகளும் அமைப்புகளும் தங்களின் சேவைகளில் இளைஞர்களை இணைக்க பகீரத முயற்சி எடுக்கின்றன. இளமையை குறித்து அல்லாஹ்விடம் தனி விசாரணை உண்டு. வீட்டுக்கும் சமுதாயத்திற்கும் ஏதாவது சேவை செய்ய விரும்பக்கூடிய ஒவ்வொரு மனிதனும் அதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டிய களம் இளமை. அந்த இளமைக்கு வழிகாட்டுவதுதான் இந்த வார பயானின் நோக்கம்.

إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آَتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

ஒரு சில இளைஞர்கள் குகையினுல்(அபயத்தை நாடி)ஒதுங்கியபோது அவர்கள் எங்கள் இரட்சகனே உன்னிடமிருந்து அருளை எங்களுக்கு அளிப்பாயாக. நீ எங்களுக்காக எங்கள் காரியத்தில் நேர்வழியை அமைத்து தருவாயாக.என்று கூறினார்கள்.
وعن
 أنس قال : قال رسول الله صلى الله عليه وسلم : " ما أكرم شاب شيخا من أجل سنه إلا قيض الله له عند سنه من يكرمه " . رواه الترمذي

அனஸ்(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி(ஸல்)கூறியதாக.

எந்த வாலிபர் தன்னை விட வயது முதிர்ந்த பெரியவரை கண்ணியப்படுத்துகின்றானோ அவ்வாழிபருக்கு வயோதிகம் வரும்போது அல்லாஹ் அவனுக்கு கண்ணியம் செய்யக்கூடியவர்களை ஏற்படுத்துவான்
நூல். திர்மிதி
வாழிபர்களே உங்கள் வாழ்க்கை சீராக பெற்றோர்கள், ஆசிரியர்கள், மார்க்க அறிஞர்கள், பெரியோர்கள், இவர்களிடம் கண்ணியத்துடனும். நன்றியுடனும் நடந்துகொள்ளுங்கள். உங்களின் பிந்திய வாழ்க்கை சந்தோஷம் அல்லது துக்கமாக அமைவது இவர்களால்தான் ஆகவே இவர்களோடு நல்ல முறையில் நடந்து கொள்வது உங்கள் மீது கடமையாகும். ஆனால் இன்று எப்படி வாழ்கின்றீர்கள். உங்களின் அன்னையை அனாதையாக்கி முதியோர் இல்லத்துக்கு அனுப்புகின்றீர்கள். சகோதரனே உனக்கு கருவரையில் இடம்கொடுத்த உன் தாயிக்கு உன்வீட்டில் ஒரு அறை கூட இல்லையா ? இதுவா உனக்கு உன் வகுப்பறை கற்றுக்கொடுத்த பாடம்.
 உனக்காக இரவு பகலாக உழைத்து  உன்னை உருவாக்கிய உன் தந்தையை நிந்தனை செய்வது உன் சிந்தனைக்கு சரியாக படுகிறதா ? பெற்றோருக்கு உபகாரம் செய்ததால் ஒருவரின் வாழ்வு சொர்க்கமாக ஆனதே அத்தகைய பாக்யவானின் வாழ்வை எண்ணிப்பாருங்கள்.

وعن عائشة
 قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " دخلت الجنة فسمعت فيها قراءة فقلت : من هذا ؟ قالوا : حارثة بن النعمان كذلكم البر كذلكم البر " . وكان أبر الناس بأمه . رواه في " شرح السنة " . والبيهقي في " شعب الإيمان "
 وفي رواية : قال : " نمت فرأيتني في الجنة " بدل " دخلت الجنة

நபி(ஸல்) கூறினார்கள். நான் கனவுலகில் சொர்க்கம் சென்றேன். அங்கு ஒருவர் குர்ஆன் ஓதும் சப்தம் கேட்டு விசாரித்தேன். அப்போது வானவர்கள் என்னிடம் அவர் உங்கள் தோழர் ஹாரிஸா(ரலி) என்றார்கள். இதனைத் தொடர்ந்து நபி (ஸல்) ஸஹாபாக்களிடம் பெற்றோருக்கு உபகாரம் செய்வதால் உங்களுக்கும் இது போன்ற அந்தஸ்து கிடைக்கும் என்று கூறிவிட்டு ஹாரிஸா(ரலி) தன் தாயிக்கு அதிகம் உபகாரம் செய்யக்கூடியவராக இருந்தார் என்று கூறினார்கள். நூல்: பைஹகி.
இந்த நிகழ்வு நடைபெற்றபோது ஹாரிஸா(ரலி) உலகில்தான் இருந்தார்கள். உலகில் வாழும்போதே அவ்வாலிபருக்கு சொர்க்கத்தின் தொடர்பை தாயின் உபகாரம் பெற்றுக்கொடுத்தது.

இரண்டாவதாக
இந்த பூமியில் நான்கு பேருக்கு கூட தெரியாமல் இருந்த உன்னை நாலாபுறமும் தெரியும்படி உயர்த்திய உன் ஆசிரியர்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்.
கல்வி போதிக்கும் ஆசிரியர்களை கொலைசெய்யும்.இன்னும் அவர்களை கேலிசெய்து உள்ளத்தின் நிம்மதியை காலிசெய்யும் தீய மாணவர்களிடம் சகவாசம் கொள்ளாதேசட்டமேதை அம்பேதகரின் வரலாறு உனக்கு தெரியாதா? அவரின் அசல் பெயர் அம்பேத்கர் அல்ல. அவருக்கு அக்கறையோடு கல்விபோதித்த ஆசிரியரின் பெயர்தான் அம்பேத்கர். அவரின் பெயர் பீமாராவ் என்பதுதான். ஆனால் தன் ஆசிரியர் மறைந்துவிட்டாலும் அவரின் புகழ் உலகம் உள்ளவரை வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தன் ஆசிரியரின் பெயரை தனது பெயராக மாற்றிக்கொண்ட டாக்டர் அம்பேத்கரின் வரலாறு நீ வரலாறு படைக்க உதவும்.
சகோதரனே. கொள்கை கெட்ட மூடர்களின் சொல்கேட்டு மூத்தவர்களை அவமதிக்காதே நான் மேலே குறிப்பிட்ட நபிமொழியை மீண்டும் படித்துப்பார். பெரியவர்களுக்கு கண்ணியம் செய்யும் வாழிபனுக்கு வயோதிகம் வருகின்ற போது என்று நபி சொன்னதின் மூலம் பெரியவர்களை மதித்தால் உன் ஆயுள் அதிகமாகும் என்ற கருத்து ஒளிர்கிறது.
வாலிபர்களே ஆலிம்களை மதித்து நடங்கள். அவர்கள் தங்களையும். தங்கள்குடும்பத்தையும் விட அதிகம் நேசிப்பது உங்களைத்தான்.

நாயகம்(ஸல்) கூறினார்கள். என் உம்மத்துக்கு ஒரு காலம்வரும் அப்போது மக்கள் ஆலிம்களை புறக்கணிப்பார்கள் அந்த சமயத்தில் அல்லாஹ் அவர்களை மூன்று விஷயங்களை கொண்டு சோதிப்பான்.

முதலாவது. அவர்களின் வருமானத்திலிருந்து பரக்கத் உயர்த்தப்பட்டுவிடும்.இரண்டாவது அநீதி செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் அவர்கள் மீது சாட்டப்படுவார்கள். மூன்றாவதாக ஈமானில்லாமல் உலகை விட்டும் வெளியேருவார்கள். நூல்: துர்ரதுன்னாஸிஹீன்.

வாலிபர்களுக்கு கண்காணிப்பும் கண்டிப்பும் தேவை.

பெற்றோர்களே நீங்கள் உங்களின் பிள்ளைகளை. வாலிபர்களை கண்காணியுங்கள்.கண்டியுங்கள். நீங்கள் அவர்களுக்கு வழங்கும் செல்லம் அவர்களை வாழ்வில் செல்லாகாசுகளாக ஆக்கிவிடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவர்கள் மீது காட்டும் கவனம் நாளை பிற்காலத்தில் உலகின் கவனத்தை அவர்கள் மீது திருப்பும் சக்திகொண்டது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். அன்றொரு நாள் ஒரு சிறுவனிடம் இவன் ஒரு முட்டாள் இவனுக்கு கல்வி கிடைக்க சாத்தியமில்லை இவனை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என்று எழுதப்பட்ட கடிதம் அவனிடம் கொடுக்கப்பட்டு அவன் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டான்.ஆனாலும் அவனுடைய தாய்.. தான் பெற்ற அறிவைக்கொண்டு அவனுக்கு கல்வி புகட்டினால் வழிகாட்டினால் அவன்தான் பிற்காலத்தில் உலகை வெளிச்சமாக்கிய மின்சாரம் உள்ளிட்ட பல நவீன கண்டுபிடிப்புகளை நமக்கு வழங்கிய தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார்..
ஜமாஅத் தலைவர்களிடமும் பெரியவர்களிடமும் ஓர் அன்பான வேண்டுகோள். வாலிபகோலாரின் காரணமாக இளைஞர்கள் உங்களிடம் அவமாரியதையுடன் நடந்துகொண்டாலும்கூட அல்லாஹ். ரசூலுக்காக மன்னித்து சிறந்த அனுபவம் கொண்ட உங்களின் அறிவார்ந்த ஆலோசனையை அன்புடன் சொல்லுங்கள். அவர்களை விட்டும் நீங்கள் ஒதுங்கினால் அவர்களுக்கு மாத்திரமல்ல. அவர்களுக்கும் சமுகத்திற்கும் அவர்களுடன் நண்பர்களாக பழகும் நம் வீட்டு இளைஞர்களையும் சீரழித்துவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இளைஞர்களுக்கு வழிகாட்டுவதில் நபித்தோழர்களின் ஆர்வம்.

وَجَاءَ رَجُلٌ شَابٌّ فَقَالَ أَبْشِرْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بِبُشْرَى اللَّهِ لَكَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدَمٍ فِي الْإِسْلَامِ مَا قَدْ عَلِمْتَ ثُمَّ وَلِيتَ فَعَدَلْتَ ثُمَّ شَهَادَةٌ قَالَ وَدِدْتُ أَنَّ ذَلِكَ كَفَافٌ لَا عَلَيَّ وَلَا لِي فَلَمَّا أَدْبَرَ إِذَا إِزَارُهُ يَمَسُّ الْأَرْضَ قَالَ رُدُّوا عَلَيَّ الْغُلَامَ قَالَ يَا ابْنَ أَخِي ارْفَعْ ثَوْبَكَ فَإِنَّهُ أَبْقَى لِثَوْبِكَ وَأَتْقَى لِرَبِّكَ

பஜ்ரு தொழுகையை இமாமாக நின்று தொழவைத்துக்கொண்டிருந்த நீதியின் திரு உருவமான ஹஜ்ரத் உமர்(ரலி) அவர்கள்  அபூலுஃலு என்பனால் விஷம் தேய்த்த கத்தியினால் குத்தப்பட்டு தன் வீட்டில் வேதனையின் உச்சத்திலும் மரணத்தின் விளிம்பிலும் இருந்த நிலையில் கூட தன்னை நலம் விசாரிக்க வந்த வாலிபரின் கீழாடை கரண்டைக்கால் கீழ் இருக்க கண்டு அவர்திரும்ப செல்லும்போது அந்நேரத்திலும் சப்தமிட்டு அவரை அழைக்க முடியாமல் அருகிலுல்லவர்களின் துணை கொண்டு அழைத்து அவரிடம் சொன்னார்கள் சகோதர மகனே உன் ஆடையை உயர்த்திக்கொள் அது உன் ஆடைக்கு மிகுந்த சுகாதரத்தை தருவதுடன் உன் இறைவனிடம் உனக்கு இறையச்சமிகுந்தவன் என்ற பெயரையும் தரும் என்றார்கள். நூல்: புகாரி

வாலிபர்களின் ரோல்மாடல்கள் இன்னும் .முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் யார்?

நபி(ஸல்)அவர்களும்.இறைவனால் பின்பற்றும்படி சொல்லப்பட்ட அவர்களின் தோழர்களும். நபியினால் சிறந்தகாலம் உடையவர்கள் என்று புகழப்பட்ட இமாம்களும் இறைநேசர்களும் காலத்தால் போற்றப்படும் விஞ்ஞானிகளுக்தான் உங்களின் வழிகாட்டிகள். அவர்களை நீங்கள் பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும். உங்கள் புகழ் உலகம்முழுவதும் பறக்கும். நீங்கள் இந்த பெருமக்களை புறக்கணித்துவிட்டு நரகத்திற்கு ஆள் பிடிக்கும் ஷைத்தான்களின் ஏஜண்டுகளான நடிகர்களையும். விளையாட்டு வீர்ர்களையும் பின்பற்றினால் உங்களின் ஈருலக வாழ்க்கையும் வீணாகிவிடும்.

 நம் இஸ்லாமிய சமுகத்திற்கு ஈடுஇனையற்ற சேவைபுரிந்த இளைஞர்களின் ரோல்மாடர்களை சிலரை பார்ப்போம்.

وعن زيد بن ثابت قال : أرسل إلي أبو بكر رضي الله عنه مقتل أهل اليمامة . فإذا عمر بن الخطاب عنده . قال أبو بكر إن عمر أتاني فقال إن القتل قد استحر يوم اليمامة بقراء القرآن وإني أخشى إن استحر القتل بالقراء بالمواطن فيذهب كثير من القرآن وإني أرى أن تأمر بجمع القرآن قلت لعمر كيف تفعل شيئا لم يفعله رسول الله صلى الله عليه وسلم ؟ فقال عمر هذا والله خير فلم يزل عمر يراجعني فيه حتى شرح الله صدري لذلك ورأيت الذي رأى عمر قال زيد قال أبو بكر إنك رجل شاب عاقل لا نتهمك وقد كنت تكتب الوحي لرسول الله صلى الله عليه وسلم فتتبع القرآن فاجمعه فوالله لو كلفوني نقل جبل من الجبال ما كان أثقل علي مما أمرني به من جمع القرآن قال : قلت كيف تفعلون شيئا لم يفعله النبي صلى الله عليه وسلم . قال هو والله خير فلم أزل أراجعه حتى شرح الله صدري للذي شرح الله له صدر أبي بكر وعمر . فقمت فتتبعت القرآن أجمعه من العسب واللخاف وصدور الرجال حتى وجدت من سورة التوبة آيتين مع أبي خزيمة الأنصاري لم أجدها مع أحد غيره ( لقد جاءكم رسول من أنفسكم )

நபியின் காலத்தில் ஒரே நூல் வடிவில் ஒன்று சேர்க்கப்படாத குர்ஆன் முதலாம் கலிபா அபூபக்கர்(ரலி) அவர்களின் காலத்தில் ஒரே நூலாக வடிவமைக்கப்பட்டது. சஹாபாக்களின் சவாலான சாதனையான இந்த புனிதபனியை தலைமையேற்று செய்தவர் வாலிபரான ஜைதுப்னுஸாபித்(ரலி) என்ற ஸஹாபிதான்.

அல்லாஹ்வின் அர்ஷால் வரவேற்கப்பட்ட வாலிபர். 30 வயதில் இஸ்லாத்தை ஏற்று. 37 வயதுவரை சுமார் ஏழு வருடங்கள் மட்டுமே நபியுடன் உலகில் வாழும் பாக்கியம் பெற்று பத்ரு உஹத் போன்ற பல யுத்தங்களில் பங்கேற்று இறுதியாக ஹிஜ்ரி 5ம் ஆண்டு நடைபெற்ற கன்தக் போரில் கலந்து எதிரிகளால் தாக்கப்பட்டு அதற்குப்பின் ஒருமாதம்கழித்து ஷஹீதான ஸஃதிப்னுமுஆத்(ரலி) என்ற தீரமிக்க வாலிபரின் சரித்திரத்தை நினைத்துபார்க்க வேண்டும்.

سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " اهتز عرش الرحمن لموت سعد بن معاذ
وقال سعد بن أبي وقاص، عن النبي صلى الله عليه وسلم أنه قال: " لقد نزل من الملائكة في جنازة سعد بن معاذ سبعون ألفاً ما وطئوا الأرض قبل، وبحق أعطاه الله تعالى ذلك

ஸஃது(ரலி) அவர்களின் ஜனாஸாவில் கலந்துகொண்ட நபி(ஸல்)அவர்கள் குதிங்காலை உயர்த்தி தன் முன்னாங்காலை ஊன்றிநடந்தபோது சொன்னார்கள். இது வரை பூமிக்குவராத எழுபதாயிரம் மலக்குகள் இவரின் ஜனாஸாவில் கலந்து கொண்டார்கள். நூல்: ஹயாதுஸ் ஸஹாபா. பாகம்.4

அல்லாஹ்வின் அர்ஷ் ஸஃதை(ரலி) வரவேற்கும் மகிழ்ச்சியில் அவரின் மரணத்திற்காக குழுங்கியது. நூல்.மிஸ்காத்
.
ஏழு வருடங்கள் மட்டுமே இஸ்லாத்திற்கு சேவைசெய்யும் பாக்கியம்பெற்ற ஸஃது(ரலி) அவர்களுக்காக இறைவனின் சிம்மாசனம் குழுங்கியது என்றால் அவர் எந்தளவிற்கு தன் வாலிபவலிமையை சமுகத்தின் வளர்ச்சிக்காகவும் இறைவணக்கத்திற்காகவும் பயன் படுத்தியிருக்க வேண்டும் இளைஞர்களே சிந்தித்து பாருங்கள்..

உலகத்தின் எல்லா ஆலிம்களாலும் அங்கீகரிக்கப்பட்ட தப்ஸீர் ஜலாலைன் என்ற நூலை எழுத துவங்கிய இமாம் ஜலாலுத்தீன் மஹல்லீ(ரஹ்) அவர்கள் பாதியை (அதாவது குர் ஆனில் பிந்திய 15 ஜூஸ்விற்கு விளக்கம் எழுதி முந்திய 15.ல் சூரத்துல்பாத்திஹாவுக்கு ) விளக்கத்தை நிறைவு செய்தபோது  மரணமானாரகள். அவர்கள் விட்ட பணியை அவரின் மாணவரான இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி(ரஹ்) அவர்கள் 17ம் வயதில் 40 நாளில் முந்திய 15 ஜூஸ்வுகளையும் சிறப்பான முறையில் தன் ஆசிரிரியர் போன்றே நிறைவு செய்தாரேஅவர்களை இன்றைய 17 கள் தனது கதாநாயகனாக எடுக்கவேண்டும்.

டூவீலர் ஓட்டுதல் செல்போன் கம்யூட்டர் போன்றவற்றில் போட்டி போட்டு நேரத்தையும் உடலையும் வீணாக்கும் இளைய சமூகமே தன் உயிரை இறைவழியில் மாய்துக்கொள்ள போட்டி போட்ட ஒரு வாலிபசிங்கத்தை எண்ணிப் பாருங்கள்

நபி அவர்கள் பத்ரு போரில் கலந்து கொள்வதற்காக சகாபாக்களை அழைத்த போது ஹைஸமா (ரலி) அவர்களுக்கும் அவர்களின் மகனார் ஸஃதுக்கும் இடையில் யார் போரில் கலந்து கொள்வது என்பதில் விவகாரம் உருவாகி சீட்டு குலுக்கி போட முடிவானது அவ்வாறு சீட்டு குலுக்கிய போது ஸஃதின் பெயர் வந்தது அவர்கள் பந்ரு போரில் கலந்து கொண்டு ஷஹீதானார்கள் இதைப் பார்த்து அவரது தந்தையான ஹைஸமா அவர்களுக்கும் ஷஹீதாகும் ஆசை ஏற்பட்டு அடுத்து நடைபெற்ற உஹத் போர்களத்தில் கலந்து கொள்ள நபியிடம் அனுமதி கேட்டபோது நபி மறுத்தார்கள். அப்போது ஹைஸமா சொன்னார்.

நேற்று இரவில் என்மகன் கனவில் தோன்றி தந்தையே இறைவன் வாக்களித்ததை நான் பெற்றுகொண்டேன்.எனவே நீங்களும் என்னோடு வந்துசேர்ந்துகொள்ளுங்கள் நாம் சொர்க்கத்தில் சேர்ந்து வாழலாம் என்று சொல்லி அழைத்தான். எனவே நான் உஹத் போரில் ஷஹீதாகி சொர்க்கத்தையும் என் ரப்பையும் சந்திக்கு ஆசையில் காலையை அடைந்தேன் என்று கூறியவராக போரில் கலந்து வீரமாக போரிட்டு ஷஹிதானார்நூல்.الف قصة وقصة من حكاياة الصالحين

அன்பு இளைஞர்களே இன்று உங்களைப்போன்ற இளைஞர்களின் விலை மதிப்பற்ற உயிர்கள் காதல் தோழ்வி தேர்வில் தோழ்வி போன்றவற்றின் காரணமாக தற்கொலையில் முடிவதும் .விதிகளை மீறி கட்டுப்பாடற்ற வேகத்தில் வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழப்பதும் (கடந்த பக்ரீத் பெருநாள் அன்று இரவில் இரண்டு வாலிபர்கள் டூவிலர் பந்தயத்தில் மேலப்பாளையத்தில் உயிர் இழந்ததைப்போன்று ) சமுதாய மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திவிட்டதுஉங்களிடம் அன்பான வேண்டுகோள் உங்கள் குடும்பமும் சமுதாயமும் உங்களைத்தான் நம்பியிருக்கிறது. நீங்கள்தான் எங்கள் வாழ்வின் மகிழ்ச்சி நீங்கள் நீண்டகாலம் வாழ்ந்து வீட்டுக்கும் நாட்டுக்கும்
சேவை செய்யவேண்டும் இது எங்களின் பிராத்தனையும் ஆசையுமாகும்.இதை கவனத்தில் கொண்டு இளையசமுகமே நீங்கள் கவனமாகவும். விழிப்புணர்வோடும் இறையச்சத்தோடும் வாழ முயற்சி செய்யுங்கள் கவனமில்லாமல் பொடு போக்காக இருக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு நபி மொழி எச்சரிக்கையாக அமையும்.
وعن
 علي بن شيبان قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من بات على ظهر بيت ليس عليه حجاب - وفي رواية : حجار - فقد برئت منه الذمة " . رواه أبو داود 

யார் தன்மீது எந்த தடுப்பும் இல்லாத நிலையில் வீட்டு முகட்டின்மீது  திறந்த வெளியில்  தூங்குவாரோ அவரை விட்டும் அல்லாஹ்வுடைய பொறுப்பு நீங்கி விடுகிறது. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேற்கூறிய ஹதீஸ் மூலம் நமக்கு உணர்த்தப்படும் செய்தி.
நம் கவனமற்ற எந்த செயல்களுக்கும் இறைவனின் உதவி இருக்காது என்பதை இது உணர்த்துகிறது. சமுதாயத்தின் முதுகெழும்பாக திகழ்ந்து உயர்வு தாழ்வுக்கு பொறுப்பேற்றிருக்கும் சமுகத்தின் சொத்துக்களே பாசமலர்களே நல்லோர்களான நம்முன்னோர்களின் இளமைக்கால வரலாறு அறிந்து அதன்படி நடந்து சமுதாயத்தை தொடர்ந்து வெற்றிபாதையில் அழைத்துச்செல்ல இன்றே இப்பொழுதே புறப்படு இளைஞர்களே தலைவர்களே உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரியட்டும் ஆமீன்



14 comments:

  1. அல்ஹம்து லில்லாஹ்!
    இளைய சமூகம் சீராக தாங்கள் வழங்கியிருக்கும் அறிவுரைகள் அத்துனையும் ஆக்கப்பூர்வமானவை.
    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்கானிக்க தவறியதும்,பெரியவர்கள் தக்க நேரத்தில் நல்ல அறிவுரைகள் வழங்காததுமே இளைஞர்களின் தடம் புரள்வுக்கு காரணம் என்பதை சூசமாக சுட்டிக்காட்டுள்ளீர்கள்.
    இஸ்லாமிய இளவல்கள் தங்களின் ரோல்மாடல்களாக யாரை தேர்வு செய்ய வேண்டும்?நம்முடைய பாரம்பரியம் என்ன?
    17 வயதில் திருக்குர்ஆனின் முந்திய 15 ஜுஸ்வுக்கு விரிவுரை எழுதிய இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி(ரஹ்) அவர்களை என் சம்தாய இளவல்கள் முன்மாதிரியாக எடுக்க வேண்டாமா?
    திருக்குர்ஆனை இந்த உம்மத்துக்காக தொகுத்துந்தந்த 25 வயது வாலிபரான ஜைதுப்னுஸாபித்(ரலி) அவர்களை அல்லவா இந்த சமூகம் முன்மாதிரியாக எடுத்திருக்கவேண்டும்?
    தன் மரணத்தால் அல்லாஹ்வின் அர்ஷை குழுங்கச்செய்த,தன் ஜனாஸாவை வானவர்களை சுமக்கச்செய்த 37 வயது வாலிபர் ஸஃது ரலி அவர்களை இந்த உம்மத் எப்படி மறந்தது?என அடுக்கடுக்கான கேள்விகள் மூலம் இளைஞர்களின் உணர்வுகளைதட்டி எழுப்பிய தங்களின் கட்டுரை முழுமையும் அருமை மாத்திரமல்ல அறிவுரையும்.
    அல்லாஹ் தங்களின் சேவையிலும் ஊக்கத்திலும் பரக்கத் செய்வானாக ஆமீன்!

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை! முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான கட்டுரை! முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. காலத்தின் அவசியம் கருதி எழுதப்பட்டுள்ள பயனுள்ள கட்டுரையாக இதை பார்க்கிறோம்….தொடரட்டும் உங்கள் சமுதாயப்பணி….அல்லாஹ் உதவி செய்வானாக.

    ReplyDelete
  5. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  6. அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  7. ஜஸாகல்லாகஹீ கைரன்....மிக்க நன்றி...அல்லாஹ் நமக்கும் நமது குடும்பத்திற்கும் இறை மண்ணிப்பையும் உடல் ஆரோக்யத்தையும் ....நபி வழி வாழ்கையையும் ....மறுமையில் விசாரனை இல்லாமல் ஜன்னதுல் பிர்தவ்ஸில் தங்குமிடத்தையும் ஆக்குவானாக...ஆமீன்... ஆமீன் யாரப்பல் ஆலமீன்

    ReplyDelete
  8. மிக அற்புதம்

    ReplyDelete