Wednesday, 10 April 2013

காலத்தில் கஞ்சனாய் இரு!


பள்ளிகளுக்கு விடுமுறை தொடங்கி விட்டது.

விடுமுறை காலங்களை எப்படி கழிக்கலாம்?என்பதை திட்டமிடும் முன் கொஞ்சம் நிதானமாக சிந்திக்கவேண்டும்.

இன்றைய அவசர உலகில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் ஓய்வு என்பது அறிதான ஒன்றாகும்.கணிணியை விடவும் வேகமான அவசர வாழ்வை தான் இன்றைய மில்லேனிய உலகம் நமக்கு கற்றுத்தந்துள்ளது. 

 மகனுடன் அல்லது மகளுடன் அமர்ந்து, அவர்கள் என்ன படிக்கிறார்கள்? யாருடன் பழகுகிறார்கள்?அவர்களின் தேவைகள் என்ன?விருப்பங்கள் என்ன? பிரச்சனைகள் என்ன? என்றெல்லாம் காதுகொடுத்துக்கேட்க தந்தைக்கு நேரமில்லை.

தாயை பொருத்தவரையில் தன் கணவனையும்,குழந்தைகளையும் தயார் செய்து அனுப்புவதற்கே நேரம் சரியாக இருக்கிறது.குழந்தைகளுடன் கொஞ்சம் கனிவாக உரையாடுவதற்கு எங்கே நேரம் இருக்கப்போகிறது?

இப்படிப்பட்ட சூழலில் கோடைக்கால விடுமுறை என்பது வேகத்தடை போல நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள பயன்படுத்தும் பெரும் பாக்கியமாகும்.

ஆரோக்கியமும் ஓய்வும் இறைவன் அளிக்கும் மகத்தான அருட்கொடைகள்.
அவற்றை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஓய்வான காலங்கள் கிடைப்பதற்கறிய பொக்கிஷமாகும்.
நேரங்களை வீணடிப்பது ஈடு செய்யமுடியாத இழப்பாகும்.
அல்லாஹ்விடத்தில் காலங்கள் அவன் சத்தியமிட்டு பேசும் அளவுக்கு கண்ணியமானதாகும்.

திருக்குர்ஆனில் அல்லாஹுத்தஆலா 92 இடத்தில் சத்தியமிட்டு சொல்கிறான்.அதில் 18 இடங்களில் காலத்தின் மீது சத்தியமிட்டு பேசுகிறான்.

அதிகாலை நேரத்தின் மீது சத்தியமாக!
ழுஹா நேரத்தின் மீது சத்தியமாக!
அஸர் நேரத்தின் மீது சத்தியமாக!
பகலின் மீது சத்தியமாக! இரவின் மீது சத்தியமாக!  இப்படி காலத்தின் அத்துனை பகுதிகள் மீதும் அல்லாஹ் சத்தியமிட்டு கூறுவது காலத்தின் மதிப்பை புரிந்துகொள்ள போதுமானது.

அல்லாஹுத்தஆலா நம் மீது விதியாக்கிய கடமைகள் கூட காலத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டது.

தொழுகை,நோன்பு,ஜகாத்,ஹஜ் இவையனைத்தும் காலத்தின் கடமைகள் என்பதை நாமறிந்தே வைத்துள்ளோம்.

Time is gold காலம் பொன்போன்றது என்பார்கள்.
Time is many.காலம் பணத்தின் மதிப்புடையது என்பார்கள்,ஆனால் இஸ்லாம் Time is life காலம் தான் வாழ்க்கை என்று சொல்கிறது.

இழந்து விட்டால் பெறமுடியாத பொருள் காலமாகும்.

காலத்தின் மதிப்பை உணராமல் வாழ்ந்தவன் தன் மரணதருவாயிலும்,மரணித்த பின்னும் அல்லாஹ்விடம் காலத்தை மீட்டிக்கேட்பான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

فَيَقُولُ الَّذِينَ ظَلَمُوا رَبَّنَا أَخِّرْنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ

அநியாயம் செய்தவர்கள்; "எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்" என்று சொல்வார்கள்


حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ


لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّا ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا
அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!" என்று கூறுவான்.
"நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை)


رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ

இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்; "எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்" என்று கூறிக் கதறுவார்கள்.

நேரங்கள் அல்லாஹ்விடமிருந்து மனிதன் பெற்றுக்கொண்ட அமானிதமாகும்.   ஒரு நாள் அந்த அமானிதத்துக்கு முழுமையாக பொருப்பு ஒப்படைக்க வேண்டும்.

காலத்தின் அருமை பற்றி சான்றோர்களின் அறிவுரைகள்:

قال عمر -رضي الله تعالى عنه-: "إني لَأكره أن أرى الرجل سبهللا - فارغا- ليس في شيء من أمر دينه ولا من أمر دنياه

தீனுக்கும் துன்யாவுக்கும் பயனற்றதாக காலத்தை கழிக்கிற மனிதனை நான் பார்க்கவே வெறுக்கிறேன் என்று ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

قال ابن مسعود -رضي الله تعالى عنه-:إني لا أحزن على شيء حزني على يوم تغرب عليه فيه شمسه فينقص فيه عمري، ولا يزيد فيه عملي
என் வாழ்நாளில் ஒருநாள் குறைந்து,அதில் என் அமல் அதிகமாகவில்லையானால் அந்தநாள் எனக்கு கவலை தரும் நாள்.என இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

يقول الحسن البصري -رحمه الله تعالى-: "يا ابن آدم، انما أنت أيام"، تعيش في هذه الدنيا ألف يوم، الفي يوم، عشرة آلاف يوم، بقدر ما يقدر الله -تعالى- لك في الحياة، قال: "يا ابن آدم، إنما أنت أيام، كلما مضى يوم ذهب بعضك"

ஆதமின் மகனே! நீ உலகில் சில நாட்கள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறாய்.  ஆயிரம் நாட்கள்,இரண்டாயிரம் நாட்கள்,பத்தாயிரம் நாட்கள் என்று குறிப்பிட்ட சிலநாட்கள் உனக்கு தரப்பட்டிருக்கிறது.     ஒருநாள் கழிந்தாலும் உன் இருப்பில் ஒரு நாளை இழந்துவிட்டாய்  என்பதை புறிந்து கொள் என ஹஸனுல் பஸரி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
காலத்தை பயன்படுத்து

روى الطبراني في الكبير، عن عمارة ابن خزيمة ابن ثابت -رضي الله عنهم-، أنه قال: مر عمر بن الخطاب بأبي وهو في أرضه، فقال له: ما يمنعك أن تغرس في أرضك؟ أي: ما الذي يمنعك أن تغرس نخلاً في هذه الارض بدل ما تدعها هكذا أرضا بوارا؟ فقال له: إني رجل قد شبت، ولا أدرك نتيجة الغرس. أنا أحدث نفسي أن أغرس النخل؛ لكن هذا النخل إذا غرسته فإنما يظهر الثمر بعد زمن وأنا رجل شيبة كبير، ماذا أستفيد إذا غرست النخل ثم لم أر ثمره، ولم أستفد من التمر، ولم آكل من الرطب؟ ما الفائدة؟ أغرس هكذا وأتعب؟!.

ஹழ்ரத் இப்னு குஸைமா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் என் தந்தையை கடந்து சென்றார்கள்.அப்போது என் தந்தை அவருக்கு சொந்தமான ஒரு நிலத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்.  உன் நிலத்தில் எந்த மரங்களும் நடாமல் ஏன் காலியாக வைத்துள்ளீர்? இந்த பூமியில் பேரித்தமரம் நடலாமே?என என் தந்தைக்கு உமர் ரலி அவர்கள் ஆலோசனை கூறினார்கள்.
அதற்கு என் தந்தையோ,நான் வயோதிகமானவன்.இப்போது நான் மரத்தை நட்டினாலும் நீண்டகாலத்திற்கு பின்புதான் அது பலன் தரும்.மேலும் அதனால் எனக்கு எந்த பயன்பாடும் இல்லையே? என்றார்கள்.

فقال له عمر -رضي الله تعالى عنه-: "بل افعل؛ لعله أن يكتب لك أجره، وأن يستفيد منه مَن بعدك"،. يقول عمارة عن أبيه: فتكاسل أبي، كأنه لم يتحمس، فقام عمر بنفسه إلى النخل، فجعل يحفر، قال: فقام أبي معه، قال: فوالله! كأني أرى عمر -رضي الله تعالى عنه- بين يدي يغرسها بيده.

அவ்வாறு எண்ணாதீர்.நீங்கள் மரம் நடுங்கள்.அதன் மூலம் மற்றவர்கள் பலன் பெற்றாலும் அதற்கான கூலி உங்களுக்கு கிடைக்கும் என்று உமர் ரலி அவர்கள் என் தந்தையிடம் கூறினார்கள்.
இப்னு குஸைமா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தளவு வலியுறுத்திச்சொன்னபின்னும் என் தந்தை சோம்பேறித்தனத்தால் அதை பொற்படுத்தவில்லை.அப்போது உமர் ரலி அவர்கள் தாங்களே எழுந்து சென்று ஒரு பேரித்த மர கன்றை எடுத்து குழி தோண்டி நட்டினார்கள்.

قال -عليه الصلاة والسلام-: "إذا قامت الساعة، وبيد أحدكم فسيلة، واستطاع ألّا تقوم حتى يغرسها"، إذا استطاع أن يحفر ويغرس هذه النخلة، مع أن السماء تفجّر، والجبال تُسَيّر، قال: "إذا قامت الساعة، وبيد أحدكم فسيلة، واستطاع ألَّا تقوم حتى يغرسها، فلْيَغْرِسْها".

ما الفائدة أن يغرسها يا رسول الله؟ والأرضُ تُبدَّلُ غير الارض، والسماوات، وقد قامت الساعة، وينفخ في الصور، والناس يموتون ويبعثون، وهذه الارض تفنى، ما الفائدة أن يغرسها؟ قال: "فَلْيَغْرِسْهَا؛ فإنَّ له بذلك أجراً"، ليستثمر هذا الوقت بدل أن يصيح ويصرخ، يستثمر هذا الوقت عملاً يكون له إلى رب العالمين.

கியாமத்தின் அழிவு ஏற்படும்போது உங்களில் ஒருவரின் கரத்தில் பேரித்தமர கன்று இருந்து,அதை பூமியில் நடமுடியுமானால் உடனே அதை நட்டி விடுங்கள்.என்று நபி ஸல் அவர்கள் கூறியபோது-அல்லாஹ்வின் தூதரே! உலகமே அழியப்போகிறது,வானமும்  பூமியும் அழிந்து விடும்,மக்களும் மரணித்து விடுவார்கள்.இந்நிலையில் மரம் நடுவதால் யாருக்கு என்ன பயன்? என நபித்தோழர்கள் வினவியபோது, அந்த நேரத்தை வீணாக்காமல் பலனுள்ளதாக ஆக்கிய காரண்த்தால் உங்களுக்கு மகத்தான கூலி வழங்கப்ப டும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
உலக அழிவின் கடைசி நேரத்தையும் வீணாக்க கூடாது என்பதை தம் தோழர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.

كما ذكر عن الإمام أبو الوفاء بن عقيل -رحمه الله- الذي فارق الدنيا وقد ألف كتابه الفنون في ثمانمائة مجلد، وإن كان المجلد عندهم لا يتعدى عشرين صفحة، لكنه مع ذلك مؤلف عظيم، وقد وُصل الآن إلى بعضه فطبع، ولا يزال منه ما هو مخطوط، ومنه ما هو مفقود، هذا الإمام العظيم أبو الوفاء يقول: بلغ من حرصي على وقتي أني أختار سف الكعك، يعني إذا أراد أن يأكل! يأكل الكعك وراءه الماء حتى لا يحتاج إلى مضغ! يقول: أختار أكل الكعك على أكل الخبز حتى أوفر الوقت، فإذا أراد أن يأكل الخبز علم أنه يحتاج إلى مضغ كثير
قال: وكان لي حذاءان عند كل باب من أبواب بيتي حتى لا أصرف الوقت في الذهاب لأخذ الحذاء من هذا الباب إلى الباب الآخر.

அபுல் வபா ரஹ் அவர்கள் தங்களின் வாழ்நாளில் பலநூட்களை எழுதியுள்ளார்கள்.பல துறைகள் பற்றி சுமார் 800 வால்யூம்கள் எழுதியுள்ளார் கள்.அவர்கள் எழுதிய சில நூட்கள் தான் அச்சு வடிவம் பெற்றுள்ளது.பல நூட்கள் அச்சுக்கு வராமலேயே காணாமல் போய்விட்டது.
இவ்வளவு நூட்களை எழுத அவர்களால் எப்படி சாத்தியமானது என்பதை பற்றி அவர்கள் கூறுகிறார்கள்.
நான் என் நேரத்தின் மீது அதிக பேராசை உள்ளவன்.அதாவது அதிகமாக கவனம் எடுத்துக்கொள்வேன்.எந்த நேரமும் வீணாக கழியாமல் பார்த்துக்கொள்வேன்.
ரொட்டி தயார் செய்யவும், சாப்பிடவும் அதிக நேரம் எடுக்கிறது என்ற காரணத்தால் நான் ரொட்டியே சாப்பிடுவதில்லை.தண்ணீரில் மாவை குழைத்து வெறும் மாவை தான் சாப்பிடுகிறேன்.அதன் மூலம் எனக்கு நேரம் மிச்சமாகிறது.
அதைப்போலவே, என் வீட்டில் இரண்டு வாசல்கள் உண்டு.நான் அந்த வாசலையும் பயன்படுத்தலாம் என்ற காரணத்தால் இரண்டு வாசலிலும் ஒரு ஜோடி செருப்பை வைத்துள்ளேன்.செருப்பை தேடி என் விலைமதிப்பில்லா காலத்தை கொடுக்கமுடியாது என்று கூறுகிறார்கள்.


أخرج البخاري عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: (( يَقُولُونَ إِنَّ أَبَا هُرَيْرَةَ يُكْثِرُ الْحَدِيثَ وَاللَّهُ الْمَوْعِدُ وَيَقُولُونَ مَا لِلْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ لَا يُحَدِّثُونَ مِثْلَ أَحَادِيثِهِ وَإِنَّ إِخْوَتِي مِنْ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمْ الصَّفْقُ بِالْأَسْوَاقِ وَإِنَّ إِخْوَتِي مِنْ الْأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمْ عَمَلُ أَمْوَالِهِمْ وَكُنْتُ امْرَأً مِسْكِينًا أَلْزَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مِلْءِ بَطْنِي فَأَحْضُرُ حِينَ يَغِيبُونَ وَأَعِي حِينَ يَنْسَوْنَ

அபூஹுரைரா அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கிறார்கள்.முஹாஜிரீன்க ளும் அன்ஸாரிகளும் அந்தளவு ஹதீஸ்களை அறிவிக்க முடியவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.காரணம் என்ன வென்றால் என் சகோதரர்க ளான முஹாஜிர்கள் தங்களின் நேரத்தில் பெரும்பகுதியை வியாபாரத்தில் கழித்தனர்.அன்ஸார்கள் விவசாயத்தில் கழித்தனர்,நான் என் பெரும்பகுதி நேரத்தை இந்த தீனுக்கு கொடுத்தேன்.எனவே எப்போதும் பெருமானாருடன் இருப்பேன்.என்று அபூஹுரைரா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த தீனுக்காக அபூஹுரைரா ரலி அவர்கள் மட்டும் தங்களின் நேரத்தை தியாகம் செய்யாவிட்டால் இத்தனை ஹதீஸ்கள் கிடைத்து இருக்குமா?

கோடை விடுமுறையை எப்படி பயனுள்ளதாக ஆக்கலாம்?
கோடையில் விசேஷமாக நடத்தப்படும் தீனிய்யாத் மதரஸாக்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆண்டு முழுவதும் நடைபெறும் மக்தப் மதரஸாக்களில் மார்க்க கல்வியை கற்றுக்கொள்வதற்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருக்கிறது.       காலையில் சீக்கிரமாக பள்ளி செல்லவேண்டிருப்பதாலும்,மாலையில் டியூஷன் செல்லவேண்டிருப்பதாலும் மதரஸாக்கள் செல்ல முடிவதில்லை.
ஒரு குழந்தைக்கு பெற்றோர் கொடுக்கும் அன்பளிப்புக்களில் மார்க்க கல்வியை கொடுப்பதைவிடவும் சிறப்பானது வேறெதுவும் இல்லை.

قد شكا أحد الآباء إلى أمير المؤمنين عمر بن الخطَّاب عقوق ابنه، فقال عمر للابن: "ما حملك على عقوق أبيك"؟ فقال الابن: يا أمير المؤمنين ما حق الولد على أبيه؟ قال: "أن يحسن اسمه، وأن يحسن اختيار أمه، وأن يعلمه الكتاب"، فقال: يا أمير المؤمنين إن أبى لم يفعل شيئاً من ذلك، فالتفت عمر للأب وقال له: "عققت ولدك قبل أن يعقَّك
உமர் ரலி அவர்களிடம் ஒருவர் தன் மகனைப்பற்றி முறையிட்டார்.அப்போது உமர் ரலி அவர்கள் மகனை அழைத்து உன் தந்தைக்கு ஏன் நோவினை தருகிறாய்?என கேட்டபோது, அமீருல் முஃமினீன் அவர்களே!ஒரு தந்தை மகனுக்கு செய்யவேண்டிய கடமை என்ன?என மகன் கேட்டார்.அதற்கு உமர் ரலி அவர்கள் மூன்று கடமைகளைச்சொன்னார்கள்.
1.அழகான பெயர் சூட்டுவது  2.ஒழுக்கமுள்ள பெண்ணை தன் வாழ்க்கை துணையாக தேர்வு செய்வது.
3.தன் மகனுக்கு வேதத்தை கற்றுக்கொடுப்பது என்றார்கள்.அதை கேட்ட மகன் என் தந்தை எனக்கு இவற்றில் எதையும் செய்யவில்லை என்றார்.உடனே உமர் ரலி அவர்கள் தந்தையின் பக்கம் திரும்பி முதலில் நீர் சரியாக உன் கடமையை நிறைவேற்று பிறகு உன் மகனிடம் கடமையை எதிர்பாரும் என்று கூறி அனுப்பினார்கள்,


2 comments:

  1. arumai zajakallath pudukai jalathudeen yusufi & pudukai ualama

    ReplyDelete
  2. super super alhamdu lilah by habeeb noori

    ReplyDelete