Thursday, 30 October 2014

சத்தியமே வெல்லும்



இன்று உலகில் அநீதிகள் பெருகி விட்டது. கொலை, கொள்ளை, ஊழல், வட்டி, பெண் இனத்துக்கு எதிரான பாலியல் கொடுமைகள் ஆபாசம் வயதான பெற்றோர் புறக்கணிக்கப்படுதல், வரதட்சணை, நேர்மை அற்ற அரசியல், இன்னும் பல. இந்த தீமைகள் அனைத்தையும் ஒழிப்பதில் முஸ்லிம்கள் முன் நின்று போராடுவது கடமையாகும். இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்வதில் யாரும், யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் எவரெல்லாம் தீமை ஒழிப்பில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் அல்லாஹ் உதவி செய்வான். அவ்வாறு உதவி புரிவது உறுதி என்பதற்கு சிறந்த சான்றாக இருக்கும் நாள் தான் ஆசூரா தினமாகும். முன் சென்ற பல நபிமார்களுக்கும் அருள் புரிவதற்கும், அவர்களின் எதிரிகளை அழிப்பதற்கும், அவர்களுக்கு ஆபத்துகளிலிருந்து ஈடேற்றம் கிடைப்பதற்கும் அல்லாஹ் தேர்வு செய்த நாள் இந்த ஆசூரா தான். 


ஆசூராவும் அல்லாஹ்வின் உதவிகளும்.


عن
أبي هريرة رضي الله عنه قال : يوم عاشوراء اليوم الذي تاب الله فيه على آدم ، واليوم الذي استوت فيه سفينة نوح على الجودي ، واليوم الذي فرق الله فيه البحر لبني إسرائيل ، واليوم الذي ولد فيه عيسى ، صيامه يعدل سنة مبرورة



நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

ஆசூரா நாள் அன்று தான் அல்லாஹ் நபி ஆதம் (அலை) அவர்களின் தவ்பாவை ஏற்றான். உலகத்தை அழிக்க வந்த வெள்ள பிரளயத்திளிருந்து மீண்டு 'ஜூத்' என்ற மலையில் நபி நூஹ் (அலை)  அவர்களின் கப்பல் ஒதுங்கியதும் அன்று தான். பிர்அவ்னிடமிருந்து பனூ இஸ்ரவேலர்களை காப்பாற்ற அல்லாஹ்  கடலை பிளந்து பாதை அமைத்து கொடுத்ததும் அன்று தான். நபி  ஈஸா (அலை) அவர்கள் பிறந்த நாளும் அது தான். அன்று நோற்கும் நோன்பு ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு வருடத்தின் நோன்புக்கு சமமாகும். 

நூல் : துர்ருல் மன்ஸீர் 


அநீதிகளை ஒழிப்பதில் அண்ணலாரின் அளப்பரிய உறுதி.


அநீதிகளின் தலைமையான இணைவைப்பை அகற்றுவதில் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இருந்த மன உறுதியை தெளிவுபடுத்தும் ஒரு நபிமொழி ஹதீஸ் நூல்களில் காணப்படுகிறது.

وعند البيهقي أنَّ أبا طالب قال له صلى الله عليه وسلم يا ابن أخي، إِنَّ قومك قد جاؤوني وقالوا كذا وكذا، فأَبْقِ عليَّ وعلى نفسك ولا تحمِّلْني مِنَ الأمر ما لا أطيق أنا ولا أنت، فاكففْ عن قومك ما يكرهون من قولك، فظنَّ رسول الله صلى الله عليه وسلم أنْ قد بَدَا لعمه فيه، وأنَّه خاذلُه ومسلمُه وضَعفُ عن القيام معه، فقال رسول الله صلى الله عليه وسلم «يا عمّ، لو وُضعت الشمسُ عن يميني والقمرُ في يساري ما تركت هذا الأمر حتى يُظهرَهُ الله أو أهلِكَ في طلبه» ؛ ثم استعبر رسول الله صلى الله عليه وسلم فبكى

நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் தனது மரண படுக்கையில் நபி (ஸல்) அவர்களிடம் பிரச்சாரத்தை விட்டு விலகி விடு என்று சொன்ன போது நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். எனது வலது கரத்தில் சூரியனும், இடது கரத்தில் சந்திரனும் வைக்கப்பட்டாலும், நான் இந்த பணியை விடமாட்டேன். எதுவரை என்றால் அல்லாஹ் அதை வெற்றியாக்கும் வரை அல்லது அந்த வெற்றி தேடுவதில் நான் அழியும் வரை (மரணமாகும்  வரை) என்று சொன்னார்கள்.

நூல். ஹயாதுஸ்ஸஹாபா.


அநீதிக்கு எதிராக போராடியவர்களுக்கு அல்லாஹ் உதவியதற்கான சான்றுகள் கீழே இடம் பெற்றுள்ளது

நெருப்பில் இருந்து மீண்ட அபூ முஸ்லிமுல் கவ்லானி

شراحيل بن مسلم الخولاني أن الاسود بن قيس بن ذي الحمار العنسي تنبأ باليمن، فأرسل إلى أبي مسلم الخولاني فأتي به، فلما جاء به قال أتشهد أني رسول الله ؟ قال: ما أسمع، قال: أتشهد أن محمدا رسول الله ؟ قال: نعم، قال: أتشهد أني رسول الله ؟ قال: ما أسمع، قال: أتشهد أن محمدا رسول الله ؟ قال: نعم، قال: فردد عليه ذلك مرارا ثم أمر بنار عظيمة فأججت فألقي فيها فلم تضره، فقيل للاسود: انفه عنك وإلا أفسد عليك من اتبعك، فأمره فأرتحل، فأتى المدينة وقد قبض رسول الله صلى الله عليه وسلم، واستخلف أبو بكر، فأناخ أبو مسلم راحلته بباب المسجد، ثم دخل المسجد وقام يصلي إلى سارية، فبصر به عمر بن الخطاب فأتاه فقال: ممن الرجل ؟ فقال: من أهل اليمن، قال: ما فعل الرجل الذي حرقه الكذاب بالنار ؟ قال: ذاك عبد الله بن أيوب، قال: فأنشدك بالله أنت هو ؟ قال: اللهم نعم، قال: فاعتنقه ثم ذهب به حتى أجلسه بينه وبين أبي بكر الصديق، فقال: الحمد الله الذي لم يمتني حتى أراني من أمة محمد صلى الله عليه وسلم من فعل به كما فعل بإبراهيم خليل الرحمن

எமன் தேசத்தில் வாழ்ந்த தன்னை நபி என்று வாதிட்ட மகா பொய்யன் அஸ்வதுல் அனஸி என்பவன் அப்பகுதியில் வாழ்ந்த தாபிஹான அபூ முஸ்லிமுல் கவ்லானி அவர்களிடம் முஹம்மது இறைதூதர்  என்று சாட்சி சொல்கிறாயா? என்று கேட்ட போது அவர் ஆம் என்றார். என்னை இறை தூதர் என்று சான்று பகருகின்றீரா என்று வினவிய போது நீ சொல்வதை நான் காது கொடுத்து கூட கேட்க்கவில்லை என்றார். இதே  கேள்வியை மீண்டும் கேட்ட போதும் இதே பதிலை தான் சொன்னார். எனவே அவன் பிரமாண்டமான நெருப்பு குண்டத்தை அமைக்க உத்தரவிட்டான். அவ்வாறே அது மூட்டப்பட்டது. அபூ முஸ்லிமுல் கவ்லானி அவர்கள் எறியப்பட்டார்கள் ஆனாலும் நெருப்பு அவருக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. அப்போது அஸ்வதிடம் அவனுடைய ஸகாக்களால் ஒரு கருத்து சொல்லப்பட்டது. இவரை உன்னுடைய இந்த யமனில் வாழ அனுமதித்தால் உனது கொள்கையை நாசமாக்கி விடுவார்.  உடனே அவன் அபூ முஸ்லிமுல் கவ்லானி அவர்களை அந்நிய பூமிக்கு பயணம் செய்யும் படி ஏவினான். எனவே அவர் மதீனாவுக்கு வந்தார். அப்போது மதினாவில் அபூபக்கரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர் மஸ்ஜிதுன்  நபவிக்கு வந்து ஒரு தூணின் அருகில் தொழுது கொண்டிருந்தார். அவரை உமர் (ரலி) அவர்கள் பார்த்தார்கள் பிறகு அவரிடம் நீர் எங்கிருந்து வருகின்றீர் என்று கேட்டார்கள் அவர் யமனிலிருந்து வருவதாக சொன்னார் மீண்டும் அவரிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள் நெருப்பில் எரிக்கப்பட்டு அந்த நெருப்பு எந்த தேங்கும் அவருக்கு தரவில்லையே அந்த நமது தோழரை அல்லாஹ் என்ன செய்தான் என்று கேட்டார்கள். அவரின் பெயர் அப்துல்லாஹ் பின் சவப்   என்பதாகும்  அவர் நலமுடன்  உள்ளார் என்று அபூ முஸ்லிமுல் கவ்லானி கூறினார். உடனே உமர் (ரலி) அவர்கள் அபூ முஸ்லிமுல் கவ்லானி அவர்களிடம் நான் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியமிட்டு கேட்கிறேன். நீங்கள் தான் அந்த மனிதரா என்று கேட்க  அவர் ஆம் என்றார் உடனே உமர் (ரலி) அவர்கள் அபூ முஸ்லிமுல் கவ்லானியின் நெற்றியில் முத்த மிட்டார்கள். பிறகு அவரை அழைத்து சென்று தனக்கும் அபூபக்கர் அவர்களுக்கும் இடையில் உட்கார வைத்தார்கள். பிறகு இப்படி சொன்னார்கள். இப்ராஹிம் அலை அவர்களுக்கு செய்யப்பட்டதை போன்றே செய்யப்பட்ட இந்த உம்மத்தைச் சார்ந்த  ஒருவரை  எனக்கு  காட்டும்  வரை எனக்கு  வாழும்  பாக்கியம்  தந்தானே  அந்த அல்லாவிற்கே  எல்லாப்  புகழும் என்று சொல்லி அல்லாஹ்வை புகழ்ந்தார்கள் 
                 
நூல்  : அல்பிதாயா வந்நிஹாயா.



திருநபிக்கு  நேர்ந்த தீங்கை தடுத்தார் தீனை (இஸ்லாத்தை) பெற்றார்.
   

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது ஹஜ்ஜின் காலாத்தில் பல்வேறு ஊர்களிலும் அறியாமை கால வழக்கப்படி காபிர்கள் கஃபாவுக்கு வருகின்ற போது பல்வேறு இடங்களில் கூடாரம் அடித்து தங்குவார்கள். அந்த மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்பு கொடுப்பார்கள். இந்த அடிப்படையில் கீழ் வரும் சம்பவத்தையும் படியுங்கள்

قال الكلبي: فأخبرني عبد الرحمن المعايري (1) عن أشياخ من قومه قالوا: أتانا رسول الله صلى الله عليه وسلم ونحن بسوق عكاظ، فقال ممن القوم ؟ قلنا من بني عامر بن صعصعة.
قال من أي بني عامر بن صعصعة ؟ قالوا (2): بنو كعب بن ربيعة.
قال كيف المنعة [ فيكم ] ؟ قلنا لا يرام ما قبلنا، ولا يسطلى بنارنا.
قال فقال لهم: " إني رسول الله وآتيكم لتمنعوني حتى أبلغ رسالة ربي
ولا أكره أحدا منكم على شئ " قالوا ومن أي قريش أنت ؟ قال من بني عبد المطلب.
قالوا فأين أنت من عبد مناف ؟ قال هم أول من كذبني وطردني.
قالوا ولكنا لا نطردك ولا نؤمن بك، وسنمنعك حتى تبلغ رسالة ربك قال فنزل إليهم والقوم يتسوقون، إذ أتاهم بيحرة (3) بن فراس
القشيري فقال من هذا الرجل أراه عندكم أنكره ؟ قالوا محمد بن عبد الله القرشي قال فما لكم وله ؟ قالوا زعم لنا أنه رسول الله صلى الله عليه وسلم فطلب إلينا أن نمنعه حتى يبلغ رسالة ربه.
قال ماذا رددتم عليه ؟ قالوا بالترحيب والسعة، نخرجك إلى بلادنا ونمنعك ما نمنع به أنفسنا.
قال بيحرة: ما أعلم أحدا من أهل هذه السوق يرجع بشئ أشد من شئ ترجعون به بدأتم (1) ثم لتنابذوا الناس وترميكم العرب عن قوس واحدة، قومه أعلم به لو آنسوا منه خيرا لكانوا أسعد الناس به، أتعمدون إلى زهيق قد طرده قومه وكذبوه فتؤوونه وتنصرونه ؟ فبئس الرأي رأيتم.
ثم أقبل على رسول الله صلى الله عليه وسلم فقال: قم فالحق بقومك، فوالله لولا أنك عند قومي لضربت عنقك.
قال فقام رسول الله صلى الله عليه وسلم إلى ناقته فركبها، فغمز الخبيث بيحرة شاكلتها فقمصت برسول الله صلى الله عليه وسلم فألقته.


وعند بني عامر يومئذ ضباعة ابنة عامر بن قرط، كانت من النسوة اللاتي أسلمن مع رسول الله بمكة جاءت زائرة إلى بني عمها، فقالت يا آل عامر - ولا عامر لي - أيصنع هذا برسول الله بين أظهركم لا يمنعه أحد منكم ؟ فقام ثلاثة من بني عمها إلى بيحرة واثنين أعاناه، فأخذ كل رجل منهم رجلا فجلد به الارض، ثم جلس على صدره ثم علوا وجوههم لطما، فقال رسول الله صلى الله عليه وسلم: " اللهم بارك على هؤلاء والعن هؤلاء " قال فأسلم الثلاثة الذين نصروه وقتلوا شهداء وهم: غطيف (2) وغطفان ابنا سهل، وعروة - أو عذرة - بن عبد الله بن سلمة رضي الله عنهم.


அப்துர் ரஹ்மான் ஆமிர் (ரஹ்) அவர்கள் தனது சமுகத்தின் பெரியவர்கள் சொன்னதாக சொல்கின்றார்கள் அந்த பெரியவர்கள் கூறினார்கள் நாங்கள் உக்காள் என்ற சந்தையில் இருக்கும் போது நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள் இந்த கூட்டத்தினர் எந்த கூட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று கேட்டார்கள் பனூ ஆமிர் பின் ஸஃஸஆ  என்ற கோத்திரத்தாரத்தார்  என்று நாங்கள் பதில் கூறினோம் எந்த பனூ ஆமிர் என்று கேட்ட போது பனூ கஅப் பின் ரபீஅ  என்பதாக  கூறினோம் அப்போது நபி அவர்கள் எங்களிடம் வலிமை உங்களுக்கு எந்த அளவு உள்ளது என்று கேட்டார்கள் அப்போது நாங்கள் அவரிடம் சொன்னோம்.

நாங்கள் ஒரு செயலை செய்வதற்கு முன்பு வேறு எவரும் அதை செய்ய நாட மாட்டார்கள் எங்களுடைய நெருப்பில் எவரும் குளிர் காயவும் நினைக்க மாட்டார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதராக இருகின்றேன் நான் எனது ரப்பின் தூதுவத்தை எடுத்து கூற உங்களிடம்  வந்ததால்  எனக்கு பாதுகாப்பு  தருவீர்களா? நான் உங்களில் யாரையும் எதற்காக வேண்டியும் வெறுக்கவில்லை என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் நீங்கள் குரைஷியர்களில் எந்த கிளையை சார்ந்தவர் என்று வினவினார்கள். பனூ அப்துல் முத்தலிப் பனூ கிளையைச் சார்ந்தவர் என பதிலளித்தார்கள்  அப்துல் முனாப் கிளையாரிளிருந்து நீர் எங்கு சென்று விட்டீர். நீங்கள் ஏன் அவர்களை விட்டு விட்டீர் என்று கேட்டார்கள். அவர்கள் தான் முதலாவதாக என்னை பொய்படுத்தி விரட்டியவர்கள் என்று நாயகம் (ஸல்) கூறினார்கள்.  இவை அனைத்தையும் கேட்ட அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் உம்மை  விரட்டவும் மாட்டோம் உம்மைக்கொண்டு ஈமான் கொள்ளவும் மாட்டோம் உமது  ரப்பின் தூதுவத்தை எடுத்து சொல்ல உமக்கு நாம் பாதுகாப்பு தருவோம் எனவே தாரளமாக நீங்கள் ஊருக்கு வந்து பிரச்சாரம் செய்யலாம் என்று கூறினார்கள் இதற்கு பின் நபி (ஸல்) அவர்கள் அவர்களிடத்தில் தங்கி இருந்தார்கள் அவர்கள் தங்கள் வியாபார விஷயமாக கொடுக்கல் வாங்கள் செய்து கொண்டிருந்தார்கள் அந்த நேரத்தில் பைஹரா பின் பராஸ் என்பவன் அவர்களிடம் வந்தான் அவன் அவர்களிடம் எனக்கு அறிமுகம் இல்லாத உங்களிடம் நான் காண்கின்ற இந்த மனிதர் யார்? என்று கேட்டான் இவர் குரைஷி குலத்தைச் சார்ந்த  அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று கூறினார்கள் மீண்டும் அவன் அவர்களிடம் உங்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்று கேட்டான் இவர் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று கூறுகிறார் தனது ரப்பின் தூதுவத்தை பிரச்சாரம் செய்ய நாங்கள் அவருக்கு பாதுகாப்பு தரும்படி எங்களிடம் கேட்கின்றார் என்று கூறினார்கள் நீங்கள் அவருக்கு என்ன பதில் அளித்தீர்கள் என்று கேட்டான் அதற்கு அவர்கள் சந்தோஷமாக தாரளமாக நாங்கள் உம்மை எங்கள் ஊருக்கு அழைத்து செல்கிறோம் என்று வாக்களித்துள்ளோம் என்று கூறினார்கள் இதனைக் கேட்ட 'பைஹரா' அவர்களிடம் இந்த சந்தையிலிருந்து மிகத் தீய பொருளை தம்முடைய ஊருக்கு  கொண்டு செல்பவர்களில் உங்களை தவிர வேறு யாரையும் நான் அறியவில்லை மனிதர்கள் விரோதத்தின் காரணமாக கருத்து மாறுப்பட்டு பிரிந்து விட நீங்கள் ஆரம்பம் செய்து விட்டீர்கள் அரபியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் மீது அம்பு அறிய துவங்கி விடுவார்கள் அவருடைய சமூகத்தினர் அவரை நன்கு அறிந்திருக்கின்றனர் அவர்கள் இவரிடமிருந்து நன்மையை விளங்கி இருந்தால் இவரைக் கொண்டு நற்பலன் பெற்றவர்களாக அவர்கள் ஆகி இருப்பார்கள் நீங்கள் ஒரு சமூகத்தின் தீயவரின் பால் நாடுகின்றீர்கள் அந்த சமூகம் அவரை பொய்யாக்கி விட்டார்கள் அப்படிப்பட்டவருக்கு நீங்கள் ஆதரவும் உதவியும் செய்கின்றீர்கள் நீங்கள் முடிவு செய்த இந்த விஷயம் தீயதாகும் என்றெல்லாம் பேசி நபி (ஸல்) அவர்கள் மிகுந்த முயற்சியுடன்  ஏற்படுத்திய அந்த சூழலை அவன் கெடுத்தான் பிறகு அவன் நபி (ஸல்) அவர்களின் பக்கம் திரும்பி இங்கிருந்து கிளம்பி உன் சமூகத்தாரிடம் போய் சேர்ந்து கொள்வீராக நீர் மட்டும் என் சமுத்தாரின் முன்னிலையில் இல்லையெனில் உம்மை நான் உமது கழுத்தை வெட்டி இருப்பேன் என்று  கூறினான். இதனைக் கேட்ட நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து சென்று தன ஒட்டகத்தின் மீது ஏறினார்கள். அப்போது 'பைஹரா' என்ற அந்த தீயவன் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தின் இடுப்பில் குத்தினான் அது மிரண்டு ஓடி நாயகத்தை கீழே தள்ளி விட்டது. அப்போது அந்த கூட்டத்தில் ளபாஹா என்ற பெண்மணி இருந்தார். அப்போது அப்பெண் முஸ்லிமாக இருக்கவில்லை. பிறகு மக்காவில் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றார். அவர் தன்னுடைய சிறிய தந்தையின் மக்களை சந்திப்பதற்காக அங்கு வந்திருந்தார் அப்பெண்மணி ஆமிருடைய குடும்பத்தாரே உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வுடைய தூதருக்கு இவ்வாறு செய்யப்படும் போது அதை தடுப்பதற்கு உங்களில் யாரும் இல்லையா? என்று கேட்டார். 

அப்போது அப்பெண்ணின் சிறிய தந்தை மக்கள் மூன்று பேர் பைஹராவின் பக்கம் பாய்ந்து சென்றார்கள். அப்போது பைஹராவுக்கு உதவ அவனுடைய ஆட்கள் இரண்டு பேர் சென்றார்கள் நபி (ஸல்) அவர்களை காப்பாற்ற சென்ற மூன்று பேரும் அந்த மூன்று பேரையும் பிடித்து தரையில் அடித்து அவர்களின் நெஞ்சில் ஏறி அமர்ந்து கொண்டார்கள் அவர்களின் கன்னத்தில் அறைந்தார்கள் அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்கள் துஆ செய்தார்கள் யா அல்லாஹ் இந்த 3 பேருக்கும் ( எனக்கு உதவிய) கருணை காட்டு. பரக்கத் செய். அந்த 3 பேரையும் சபித்துவிடு என்று வேண்டினார்கள். இதனால் நபி (ஸல்) அவர்களுக்கு உதவிய அநீதியை தட்டி கேட்ட அந்த 3 பேரும் இஸ்லாத்தை ஏற்று போரில் ஷஹீதாகும் பாக்கியம் பெற்றார்கள். அவர்களின் பெயர்கள் கதீப், கத்பான், உர்வா என்பதாகும். நபி (ஸல்) அவர்களை தாக்கிய அந்த 3 பேரும் காபிரான நிலையிலேயே நாசமாகி விட்டார்கள்

நூல் : அல்பிதாயாவன் நிஹாயா.


அநீதிக்கு எதிரான போரும் வானவர்களின் வருகையும்.


عن أنس بن مالك عن أبي طلحة قال « كنا مع رسول الله صلى الله عليه وسلم في غزوة ، فلقي العدوّ فسمعته يقول : يا { مالك يوم الدين إياك نعبد وإياك نستعين } قال : فلقد رأيت الرجال تصرع ، تضربها الملائكة من بين يديها ومن خلفها » .


அனஸ் (ரலி) அவர்கள் சொல்கின்றார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டோம் அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் விரோதிகளை  எதிர் கொண்டார்கள் அந்த நேரம் அவர்கள் يا { مالك يوم الدين إياك نعبد وإياك نستعين }                                               என்று சொல்வதை நான் கேட்டேன் அப்போது நான் எதிரிகளின் தலைகள் கீழே விழுவதை பார்த்தேன் அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் இருந்த மலக்குகள் அவர்களை தாக்கி கொண்டிருந்தார்கள்  

நூல் : துர்ருல் மன்ஸீர்.


அநீதிக்கு எதிராக களம் காணாதவர்களுக்கு கவலை தரும் செய்திகள்.

وسئل حذيفة رضي الله عنه عن ميت الأحياء فقال: الذي لا ينكر المنكر بيده ولا بلسانه ولا بقلبه


ஹுதைபா (ரலி) அவர்களிடம் வாழும் போதே இறந்தவர்கள் யார் என்று கேட்க்கப்பட்டது அவர்கள் சொன்னார்கள் தீமைகளை கையாலோ, நாவாலோ, உள்ளத்தாலோ, யார் தடுக்கவில்லையோ,  வெறுக்கவில்லையோ  அவர்தான் என்றார்கள்.

நூல். இஹ்யா.


திரு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

في رواية مالك من طريق أبي سلمة عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال « والذي نفس محمد بيده ، ليخرجن من أمتي اناس من قبورهم في صورة القردة والخنازير ، داهنوا أهل المعاصي ، سكتوا عن نهيهم وهم يستطيعون
என் உம்மத்தில் சிலர்  கப்ர்களிலிருந்து பன்றியின் உருவத்திலும், குரங்கின் உருவத்திலும் எழுப்படுவார்கள் அவர்களின் தன்மை என்னவென்றால் அவர்கள் உலகில் வாழ்ந்த போது பாவிகளை பாவங்களை விட்டும் தடுக்காமல் அவர்களுக்கு மோசடி செய்தார்கள். சக்தி இருந்தும் தடுக்காமல் மெளனமாக இருந்தார்கள்.                                

 நூல் : துர்ருல் மன்ஸீர்


ஆசூரா நோன்பும் அதனுடைய மாண்பும்.


عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : « من وسع على عياله وأهله يوم عاشوراء وسع الله عليه سائر سنته » قال البيهقي : أسانيدها ، وإن

யார் தனது குடும்பத்தாருக்கு ஆசூரா நாள் அன்று விசாலமாக செலவு செய்கின்றாராரோ அவருக்கு அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் விசாலமாக வழங்குவான்.

நூல். துர்ருல் மன்ஸூர்.


صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود وصوموا قبله يوما وبعده يوما. 

நாயகம் (ஸல்) சொன்னார்கள் ஆசூரா அன்று  நோன்பு வையுங்கள் அதிலே யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்  எனவே ஆசூராவுக்கு முந்திய  நாளிலோ அல்லது அடுத்த நாளிலோ ஒரு நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.
                            
நூல் : மஜ்மவுஸ் ஸவாஹித்.


நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் ஆசூரா தினம் அன்று நபிமார்கள் அனைவரும் நோன்பு நோற்றுள்ளார்கள் எனவே அந்த நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்                  

 நூல் : துர்ருல் மன்ஸீர்.


ஆயிஷா (ரலி சொன்னார்கள்.

إن هذا يوم كان يصومه أهل الجاهلية فمن أحب أن يصومه فليصمه ومن أحب أن يتركه فليتركه يعني يوم عاشوراء.


குறைஷிகள் அறியாமை  காலத்திலயே ஆஷுரா நாளில் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள் பிறகு நபியும் அந்த நோன்பை வைக்கும்படி எங்களுக்கு கட்டளையிட்டார்கள் ரமலான் கடமையாக்க பட்போது ஆஷுரா நோன்பை  விரும்பியவர்கள்  வைக்கட்டும் விரும்பியவர்கள் விடட்டும்  என்றார்கள். 

நூல். கன்சுல் உம்மால்.


وصوم عاشوراء يكفر سنة ماضية.

நபி (ஸல்) அவர்கள்  இடம் ஆஷுரா நோன்பை பற்றி கேட்டபோது சொன்னார்கள் அது ஒரு வருட பாவத்தின் பரிகாரம் என்றார்கள்.

நூல். கன்சுல் உம்மால்.


 حكى ان الحجاج ) أرسل عبد الله الثقفى الى انس بن مالك رضى الله عنه يطلبه فقال اجب امير المؤمنين فقال له اذله الله فان العزيز من اعتز بطاعة الله والذليل من ذل بمعصيته ثم قام معه فلما حضر قال انت الذى تدعو علينا قال نعم قال ومم ذلك قال لانك عاص لربك تخالف سنة نبيك تعز أعدآء الله وتذل اولياءه فقال اقتلك شرق قتلة فقال انس لو علمت ان ذلك بيدك لعبدتك قال ولم ذلك قال لان رسول الله صلى الله عليه وسلم علمنى دعاء وقال من دعا به كل صباح لم يكن لاحد عليه سبيل اى لم يضرّ به سم ولا سحر ولا سلطان ظالم وقد دعوت به فى صباحى فقال الحجاج علمنيه فقال معاذ الله ان أعلمه ما دمت حيا وانت حى فقال الحجاج خلوا سبيله فقيل له فى ذلك فقال رأيت على عاتقيه اسدين عظيمين


ஈராக்கின் ஆட்சி பொறுப்பில் இருந்த ஹஜ்ஜாஜ். அனஸ் (ரலி) அவர்கள் தனது அதிகாரி அப்துல்லா பின் சகபீ என்பவரின் மூலம் அழைத்தான் .அவர் அனஸ்(ரலி) அவர்களிடம் வந்து அவரை அழைத்தார் அப்போது அனஸ் (ரலி) அவர்கள் அப்துல்லா இடம் சொன்னார்கள் அல்லாஹ் ஹஜ்ஜாஜை  இழிவுபடுத்துவானாக எவன் அல்லாஹ்வுக்கு வழிபடுவதை  கொண்டு கண்ணியத்தை தேடினாரோ அவர் தான் கண்ணியமானவர் எவன் அவனுக்கு மாறு செய்தானோ அவன் இழிவானவன் தான் என்று கூறினார்கள் அதற்கு பின் அவருடன் அனஸ் (ரலி) சென்றார்கள் ஹஜ்ஜாஜ். அனஸ் (ரலி) அவர்களிடம் நீர் நமக்கு எதிராக துஆ செய்தீரா என்று கேட்டான். அனஸ் ஆம் நான் தான் துஆ செய்தேன் எதற்காக அவ்வாறு செய்தீர்கள் என்று ஹஜ்ஜாஜ் கேட்டான் அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள் நீ உனது ரப்புக்கு மாறு செய்கின்றாய்  நபியின் சுன்னதிற்கு முரணாக நடக்கின்றாய் இன்னும் அல்லாஹ்வின் எதிரிகளை கண்ணியப்படுத்துகின்றாய்  அவனுடைய  நேசர்களை இழிவுபடுத்துகின்றாய் இதைக்  கேட்டு பொங்கிய அவன் அனஸே உம்மை மிக மோசமாக நான் கொன்று விடுவேன் என்றான். அப்போது அனஸ் (ரலி) சொன்னார்கள் என் மரணம் உன் கையில் இருப்பதாக நான் அறிந்தால் உன்னை அல்லவா வணங்குவேன் என்றார்கள். நீர் எந்த  தைரியத்தில் இப்படி பேசுகின்றீர்கள் என்று ஹஜ்ஜாஜ் கேட்டான் அனஸ் (ரலி) சொன்னார்கள் நாயகம் எனக்கு ஒரு துஆவை கற்றுத் தந்தார்கள் யார் தினமும் காலையில் அதை ஓதுவாரோ யாராலும் அவருக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது அவருக்கு கொடிய நஞ்ஜோ, சூனியமோ, அநீதியான அரசனோஎந்த தீங்கும் செய்ய முடிவதில்லை. உடனே ஹஜ்ஜாஜ் எனக்கும் அதைக் கற்றுக் கொடுங்கள் என்று கேட்டான். ஆனால் அனஸ் (ரலி) அவர்கள் அவனிடம் உன் போன்ற கொடியவர்களுக்கு அதை கற்றுக் கொடுப்பதை விட்டும் அல்லாஹ் என்னை பாதுகாப்பானாக என்று சொல்லி மறுத்து விட்டார்கள் உடனே ஹஜ்ஜ்ஜாஜ் தன் ஆட்களிடம் அவரை 'அவர் வழியில் விடுங்கள்' என்றான் அனஸ் (ரலி) அவர்கள் சென்று விட்டார்கள் அவனிடம் ஏன்? அனஸ் அவர்களை  விட்டாய் என்று கேட்ட போது அவன் சொன்னான் நான் அவருடைய  தோல் புஜத்தின் இரு பகுதியிலும் பிரமாண்டமான இரு சிங்கங்கள் வாய் பிளந்த நிலையில் நிற்பதை கண்டேன் என்றான். பின்பு அனஸ் (ரலி) அவர்களின் மரணவேளை வந்த போது  தனது பணியாளருக்கு அந்த துஆவை  கற்றுக் கொடுத்தார்கள் 

அந்த துஆ கீழே இடம் பெறுகிறது 

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிரஹீம் 

பிஸ்மில்லாஹி ஹைருள் அஸ்மாயி பிஸ்மில்லா ஹில்லதி லா யலுரு மா அஸ்மஹி ஷய்யின்  பில் அர்லி வலா பிஸ்ஸமாஹி.

நூல். ரூஹுல் பயான்.