ஒரு
வாரகாலமாக காஸாவின் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நடத்திய மூர்க்கமான தாக்குதல்
முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 162 பலஸ்தீனர்கள் கொல்லபட்டுள்ளனர். 1200 க்கும்
அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகளும், பெண்களும் என்று பலஸ்தீன்
தகவல்கள் தெரிவிக்கிறது.
எகிப்து
ஜனாதிபதி முர்ஷி துருக்கி ,மற்றும் கட்டார் துணையுடன் முன்னெடுத்த யுத்த
நிறுத்த நடவடிக்கை தற்போதைக்கு வெற்றி பெற்றுள்ளது
இந்த
யுத்தத்தில் காஸா மக்களுக்கு ஆயுத ரீதியிலும் , பொருளாதார ரீதிலும் பங்களிப்பை செய்த ஈரானுக்கு ஹமாஸ் அரசியல்
பொறுப்பாளர் காலித் மிஷால் தமது நன்றிகளை
தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு
இஸ்ரேலின் அசுரத்தனமான தாக்குதலுக்கு எதிராக
முஸ்லிம் நாடுகளில் எகிப்து, துருக்கி,கத்தார்
ஆகிய மூன்று நாடுகள் ஒன்றிணைந்து எடுத்த
உறுதியான நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.
அமெரிக்காவுடன்
நெருக்கமான உறவை பேணிவரும் துருக்கி , தற்போது இஸ்ரேலுக்கு எதிரான
நிலைப்பாட்டில் கடுமையை கடைபிடித்து வருகிறது. துருக்கி இஸ்தான்புலில்
இடம்பெற்ற ஐரோப்பிய இஸ்லாமிய கவுன்சில் மாநாட்டில் உரையாற்றிய துருக்கி பிரதமர்
அர்துக்கான், இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு’, ‘யார் பயங்கரவாதத்துடன்
இஸ்லாத்தை தொடர்புபடுத்துகிறார்களோ அவர்கள் பெருந்தொகையான முஸ்லிம்ககள்
கொல்லப்படும் போது தங்கள் கண்களை மூடிகொள்கிறார்கள். அவர்கள் காஸாவில் சிறுவர்கள்
படுகொலை செய்யப்படும்போது தங்கள் தலையை மறுபக்கம் திருப்பிக்கொள்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன்
பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இஸ்லாத்தின் கடந்த கால முகவரி.எதிர்கால
நிலைப்பாடு.
மத்திய
கிழக்கில் அமைந்துள்ள பலஸ்தீனம் தான் எதிர்காலத்தில் உலகத்தின் போங்கையே
தீர்மாணிக்கப்போகிறது.
யூதர்களுக்கு
இஸ்லாத்தைப்பற்றிய பயம் எப்போதெல்லாம் தொற்றிக்கொள்ளுமோ அப்போதெல்லாம் இப்படி ஒரு போரை அரங்கேற்றுவது
அவர்களின் வாடிக்கையாகும்.
قال
عنها مؤسِّس دولة إسرائيل (ابن جوريون): "نحن لا نخشى الاشتراكيَّات ولا
القوميَّات ولا الملكيَّات في العالم، وإنما نخشى الإسلام، هذا المارد الذي نام
طويلاً، وبدأ يَتَمَلْمَل في المنطقة.. إنني أخشى أن يظهر محمدٌ من جديد في
المنطقة"!
நாங்கள்
உலகில் சோஷலிசத்தையோ.தேசியவாதத்தையோ.மன்னராட்சியையோ பயப்படமாட்டோம்.ஆனால் இஸ்லாம்
என்றால் எங்களுக்கு பயம்.இந்த பூமியில் முஹம்மத் மீண்டும் எழுச்சிபெற்று விடுவாரோ
என்று நாங்கள் பயப்படுகிறோம்.இதைச்சொன்னவன் சாதாரண யூதன் அல்ல.ஆக்கிரமிப்பு
இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்த டேவிட் பென் குரியன் என்பவன்.
யூதர்களின்
பயமே இஸ்லாத்தின் பலம்!
பலஸ்தீன
மக்கள் ஒரு நூற்றாண்டு காலமாக தொடர்ந்து அநீதம் இழக்கப்படும் சமுதாயமாகும்.
இரண்டாம்
உலகப்போருக்குப்பின் உலகில் இரண்டு பிரச்சனை முக்கியத்துவம்
பெற்றது.1.தென்னாப்பிரிக்காவின் நிறவெறிப்பிரச்சனை.2.பலஸ்தீன மக்களின்
சுதந்திரப்பிரச்சனை.இதில் தென்னாப்பிரிக்காவின் பிரச்சனை 1994 ல் முடிவுக்கு
வந்தது.ஆனால் 1940 ல் தொடங்கிய பலஸ்தீன் பிரச்சனை இன்றும் தொடர்கிறது.
காஸாவின்
மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரும் இழப்புக்களை பலஸ்தீன
முஜாஹிதீன்கள் சந்தித்திருந்தாலும் இது ஒன்றும் அவர்களுக்கு புதிதல்ல,கடந்த ஒரு
நூற்றாண்டுகாலமாக போர்ப்படுக்கைகளில் புரள்பவர்கள் அவர்கள்.
எனவே
போர் தொடக்கமும் போர் நிறுத்தமும் பலஸ்தீன் மக்களைப் பொருத்த வரையில் அன்றய
செய்திகளில் ஒன்று அவ்வளவே.
ஆனால்
இந்த தடவை எகிப்து, பலஸ்தீன் மக்களுக்காக மிகுந்த உற்சாகத்துடன் களம்
இறங்கியது இஸ்லாமிய உலகை ஒருங்கிணைப்பதில் ஒரு மைல் கல்லாகும்.வீழ்ச்சியடைந்த
இஸ்லாமிய கிலாபத்தை மறுசீரமைப்புச்செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது.
அரபுலகம்
ஒன்றுபடுவதற்கான இச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடக்கூடாது.
கடந்த
காலங்களில் நாம் செய்த அதே வரலாற்றுத் தவறை இனியொரு தடவை செய்துவிடக்கூடாது,அப்படி
மட்டும் நடந்தால் நிச்சயம் அது பலஸ்தீன மக்களின் வாழ்வில் நீங்கா துயரை
ஏற்படுத்திவிடும்.
நமக்கிடையில்
உள்ள கருத்துவேறுபாடுகளை முன்னிலைப்படுத்தி கடந்த காலங்களில் நாம் இழந்தது
போதும்.பாபர் மஸ்ஜித் முதல் பலஸ்தீனம் வரை பட்டியல் நீளம்.
கருத்துவேறுபாடுகளுக்கு
நாம் நிறையவே காவு கொடுத்துள்ளோம்.
இப்போது
நமக்கு முன்னால் இருக்கும் பிரச்சனை கருத்துவேறுபாடுகளை கடந்து நாம்
ஒன்றுபடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
நபி ஸல்
அவர்கள் அரேபிய தீபகற்பத்தில் ஒரு விஷயம் குறித்து அதிகமாக பயந்திருக்கிறார்கள்.அந்த
ஒரு விஷயம் இணைவைப்பைபற்றியோ,வறுமையைபற்றியோ அல்ல!
فَوَ
الله لَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ وَلَكِنْ أَخَشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ
عَلَيْكُمْ الدُّنْيَا كما بُسِطَتْ على من كان قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كما
تَنَافَسُوهَا وَتُهْلِكَكُمْ كما أَهْلَكَتْهُمْ" رواه الشيخان
அல்லாஹ்வின்
மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்ச வில்லை. மாறாக, உங்களுக்கு முன்
வாழ்ந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும்
அதிகமாக கொடுக்கப்பட்டு அவர்கள்
போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட்டு,அது அவர்களை
அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்"
என்று கூறினார்கள்.
இன்னொரு
ஹதீஸில்
إني
لست أخشى عليكم أن تشركوا بعدي، ولكن أخشى عليكم الدنيا؛ أن تنافسوا فيها،
وتقتتلوا، فتهلكوا كما هلك من كان قبلكم
صحيح
مسلم
எனக்கு
பின்னால் நீங்கள் இணைவைத்துவிடுவீர்கள் என்று நான் அஞ்சவில்லை.துன்யாவை தான்
அஞ்சுகிறேன்,என்றார்கள்.
இணைவைப்பையும்,வறுமையையும்
பயப்படாத நபி ஸல் அவர்கள் இந்த அரபுலகத்தின் மீது பிரிவினைவாதத்தை அதிகமாக
பயந்திருக்கிறார்கள்.
முஸ்லீம்கள்
ஒன்றுபடுவதில் தடையாக இருக்கும் ஒரே பிரச்சனை நமக்குள் எழும்
கருத்துவேறுபாடுகளே.அதுவே முதலும் முடிவுமான பிரச்சனை.
என்ன
செய்யலாம்? கருத்துவேறுபாடுகள் இல்லாத
சமூகத்தை உருவாக்குவது சாத்தியமில்லை.
மூக்கிருக்கும்
வரை சலி இருக்கத்தான் செய்யும் என்பார்கள்.
அல்லாஹ்வின்
படைப்பில் உருவ அமைப்பின் மாற்றங்களை நாம் ஜீரணித்து கொண்டோம்.எத்தனை வகை முகங்கள்!எத்தனை வகையான
நிறங்கள்! எத்தனை மொழி பேசுபவர்கள்!
அவ்வாரே
மனிதர்களின் குண மாறுதல்களையும் நாம் புரிந்து கொண்டோம். ஆனால் சிந்திப்பதில் மட்டும் ஒரேமாதிரியான நிலை
வேண்டும் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?
எல்லோருடைய
சிந்தனை திறனும் ஒரேமாதிரி அமைய வேண்டுமென்றும், என்
கருத்துக்கு இன்னொருவரின் கருத்து எந்தவகையிலும் மாறுபடக்கூடாது என்று கூறுவதும்
அபத்தமானதாகும்.
ஒரே தாய்
வயிற்றில் பிறந்த இரு சகோதரர்களுக்கிடையில் எத்தனை வேறுபாடுகள்?முகத்தால்,நிறத்தால்,அளவால்,குணத்தால்,சிந்தனையால் இருவரும் வேறு வேறு தன்மை கொண்டவர்கள்.
முஸ்லீம்களுக்கிடையில்
எழுந்த கருத்துமோதல்கள் பிரிவுச்சட்டங்களின் பிரதிபலிப்புக்கள் தானே தவிர
அடிப்படையான ஈமானிய,கொள்கைச்சார்ந்த விஷயமல்ல.எனவே கருத்துவேறுபாடுகளை
கண்ணியமாக பார்க்க பழக வேண்டும்.நிச்சயமாக அது இன்னொரு முஸ்லிமின் உணர்வுக்கும்,சிந்தனைக்கும் கொடுக்கும் மரியாதையாகும்.
நபித்தோழர்களுக்கு
மத்தியில் மலைபோல் எழுந்த நூற்றுக்கணக்கணக்கான கருத்துவேறுபாடுகள் உண்டு,ஆனால்
அவைகள் அவர்களின் உறவில் எந்த விரிசலையும் ஏற்படுத்தவில்லை.
ஹழ்ரத்
அபூபக்கர் ரலி அவர்களுக்கும் ஹழ்ரத் உமர் ரலி அவர்களுக்கும் நூற்றுக்கணக்கான
மஸ்அலாக்களில் கருத்து வேறுபாடு உண்டு.
கனீமத்தாக
கிடைக்கும் நிலத்தை என்ன செய்ய வேண்டும்?
முஸ்லீம்களுக்கு
பங்கு வைத்துவிட வேண்டும் இது அபூபக்கர் ரலி நிலைப்பாடு.இல்லை, பைத்துல்
மாலில் சேர்க்க வேண்டும். இது உமர் ரலி நிலைப்பாடு.
பைத்துல்மாலிலிருந்து
ஊதியம் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். இது அபூபக்கர் ரலி அவர்களின்
அபிப்ராயம்.இல்லை, தகுதிக்கு தக்கவாறு வழங்கப்பட வேண்டும். இது உமர்
ரலி அவர்களின் அபிப்ராயம்.
، فقد روى البخاري (1400) ومسلم (20) عن أَبي هُرَيْرَةَ رَضِيَ
اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ
الْعَرَبِ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ
النَّاسَ حَتَّى يَقُولُوا لا إِلَهَ إِلا اللَّهُ فَمَنْ قَالَهَا فَقَدْ عَصَمَ
مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ فَقَالَ
وَاللَّهِ لأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلاةِ وَالزَّكَاةِ فَإِنَّ
الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا (شاة صغيرة)
كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَ
நபி ஸல்
அவர்களின் வபாத்திற்கு பின் ஒரு கூட்டம் ஜகாத்தை மறுத்தது. இவர்களின் மீது என்ன
நடவடிக்கை எடுக்கலாம்?
உமர்
ரலி:=லாயிலாக இல்லல்லாஹ் என்று சொன்னவருடன் நான் போர் செய்ய மாட்டேன்,அவர் தன்
பொருளுக்கும்,உயிருக்கும் பாதுகாப்பு பெற்றார். என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்,எனவே
அவர்களின் கேள்விகணக்கு அல்லாஹ்விடம் இருக்கிறது.அவர்கள் விஷயத்தில் கொஞ்சம்
மிருதுவான அனுகுமுறையை கடைபிடிக்கலாம்.
அபூபக்கர்
ரலி:=அல்லாஹ்வின் மீது சத்தியமாக தொழுகையையும்,ஜகாதையும் பிரித்துபார்ப்பவனுடன்
நான் போர் செய்வேன்.ஏனெனில் ஜகாத், பொருளின் ஹக்காகும். நபி
ஸல் அவர்களின் காலத்தில் ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஜகாத் கொடுத்தவர் இப்போது அதை தர
மறுத்தால் நான் அவருடன் சண்டையிடுவேன்.
இது
போன்று இன்னும் நூற்றுக்கணக்கான சட்டப்பிரச்சனைகளில் கருத்து மாறுபட்டார்கள்,ஆனால் அது
அவர்களின் ஒற்றுமையில்,உறவில் அனுவளவும் பாதிப்பை
ஏற்படுத்தவில்லை.
ويقول
عمر رضي الله عنه في أبي بكر حينما قال أحد الناس : أنت خير من أبي بكر، فأجهش عمر
بالبكاء وقال : والله لليلة من أبي بكر، خير من عمر وآل عمر
رواه
الحاكم والبيهقي في دلائل النبوة
ஹழ்ரத்
உமர் ரலி அவர்களிடம் ஒருவர்,நீங்கள் அபூபக்கர் ரலி அவர்களை
விடச் சிறந்தவர் என்று ஒரு வார்த்தை கூறியபோது தேம்பி தேம்பி அழுதார்கள்.பின்பு
சொன்னார்கள்.
அபூபக்கரின்
ஒரு இரவு அமல் உமரை விடவும் உமரின் குடும்பத்தினர் செய்த அமலைவிடவும் சிறந்தது.
فالصديق
يقول في عمر رضي الله عنه؛ حينما استخلفه : (اللهم إني استخلفت عليهم خير أهلك
அதைப்போல,அபூபக்கர்
ரலி தங்களின் வபாத் நேரத்தில் அடுத்த கலீபாவாக உமரை தேர்வு செய்ததை சிலர்
விமர்சனம் செய்தபோது அபூபக்கர் ரலி அவர்கள்,யா அல்லாஹ்!இந்த
மக்களுக்கு கலீபாவாக உன்னிடம் மிகச் சிறந்தவரை தேர்வு செய்துள்ளேன்.என்றார்கள்.
என்ன
கண்ணியமான சிந்தனை?
ذكر
ابن القيم في "إعلام الموقعين " أن المسائل الفقهية التي خالف فيها ابن
مسعود عمر رضي الله عنهما بلغت مائة مسألة وذكر منها
وكان
ابن مسعود يرى في قول الرجل لامرأته: "أنت عَلَيَّ حرام " أنه يمين،
وعمر يقول: هي طلقة واحدة.
وكان
ابن مسعود يقول في رجل زنى بامرأة ثم تزوجها: لا يزالان زانيين ما اجتمعا، وعمر لا
يرى ذلك، ويعتبر أوله سفاحاً وآخره نكاحاً
அல்லாமா
இப்னுல் கய்யிம் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
ஹழ்ரத்
இப்னு மஸ்வூத் ரலி அவர்களுக்கும் உமர் ரலி அவர்களுக்கும் நூறு சட்டங்களில்
கருத்துவேற்றுமை இருந்தது என்று கூறி சில உதாரணங்களை
முன் வைக்கிறார்கள்.
1.ஒருவன்
தன் மனைவியை பார்த்து நீ எனக்கு ஹராம் என்று சொன்னால் அது சத்தியம் என்ற
சட்டத்தின் கீழ் வரும் என்பது இப்னு மஸ்வூத் ரலி அவர்களின் நிலைப்பாடு.
இல்லை
அது ஒரு தலாக்காக ஆகும் இது உமர் ரலி அவர்களின் நிலைப்பாடு.
2.ஒரு
பெண்ணை விபச்சாரம் செய்த ஒருவன் பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்தாலும்
அவர்களின் உறவு விபச்சார உறவுதான்.இது இப்னு மஸ்வூத் ரலி அவர்களின் அபிப்ராயம்.
இல்லை, அதன் முதல்
பகுதி விபச்சாரமாக இருந்தாலும் திருமணம் செய்துவிட்டதால் பிற்பகுதி திருமண
உறவாகும் இது உமர் ரலி அவர்களின் அபிப்ராயம்.
இவ்வளவு
இருந்தும் இருவரின் அன்பில் எந்த குறைபாடும் ஏற்படவில்லை.
ويقبل
ابن مسعود يوماً وعمر جالس فلما رآه مقبلاً قال: "كنيّف مُلئ فقهاً أوعلما
حلية
الأولياء 1 \ 129 ومسند الإمام أحمد 1 \ 421 وصفة الصفوة 1 \ 401
இப்னு
மஸ்வூத் ரலி அவர்களை குறித்து உமர் ரலி அவர்கள்,மார்க்க
அறிவின் கனவாய் என்று புகழ்வார்கள்.
كان للإسلام حصناً حصيناً
رواه الحاكم في المستدرك
அவ்வாறு
ஹழ்ரத் உமர் ரலி அவர்களை பற்றி இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் இஸ்லாத்தை பாதுகாத்த
கோட்டை என்று கூறுவார்கள்.
மிஃராஜில்
நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வை கண்ட விஷயத்திலும்,கப்ரில்
உள்ளவர்கள் செவியேர்ப்பார்கள் எனும் பிரச்சனையிலும் மிகுதியான ஸஹாபாக்களின்
கருத்துக்கு அன்னை ஆயிஷா ரலி அவர்கள் எதிரான கருத்தை கொண்டிருந்தார்கள்,ஆனாலும் யாரும் ஆயிஷா ரலி அவர்களை விமர்சித்ததில்லை.கருத்து வேறுபாடுகள்
ஆரோக்கியமானது ஆபத்தானதல்ல.
ஸஹாபாக்களைப்பற்றி அனஸ் ரலி
அவர்கள் இப்படி கூறுகிறார்கள்.
عن
أنس رضي الله عنه قال: (إنا معشر أصحاب رسول الله صلى الله عليه و سلم كنا نسافر،
فمنا الصائم ومنا المفطر، ومنا المتم ومنا المقصر، فلم يعب الصائم على المفطر، ولا
المفطر على الصائم، ولا المقصر على المتم، ولا المتم على المقصر) . رواه البيهقي
في السنن .
நாங்கள்
நாயகத்தின் தோழர்கள்.நாங்கள் பயணம் செய்வோம்.பயணத்தில் எங்களில் சிலர் நோன்பு
வைப்பர்,சிலர் வைக்கமாட்டர்.சிலர் தொழுகையை கஸ்ர் செய்வர்,சிலர் முழுமையாக நிறைவேற்றுவர்.ஆனால் யாரும் யாரையும்
பழித்துக்கொள்ளமாட்டோம்.
எத்தனையோ
சட்டப்பிரச்சனைகளில் ஸஹாபாக்கள் மாறுபட்டார்கள்,ஆனால் அது
விரோதத்தையோ,பிரிவினையையோ உருவாக்கவில்லை என ஷாதிபி
கூறுகிறார்கள்.
இதே
நிலையே இமாம்களின் வாழ்விலும் பார்க்க முடிகிறது.
ويقول
يونس الصدفي: ( ما رأيت أعقل من الشافعي، ناظرته يوماً في مسألة ثم افترقنا ولقيته
فأخذ بيدي ثم قال: يا أبا موسى ألا يستقيم أن نكون إخواناً وإن لم نتفق في
مسألة
நாம் ஒரு
மஸ்அலாவில் மாறுபட்டாலும் நாம் சகோதரர்கள் தான் இது இமாம் ஷாபி ரஹ் அவர்கள், யூனுஸ்
என்ற அறிஞரைப்பர்த்து சொன்னது.
ويقول
الشافعي:(الناس في الفقه عيال على أبي حنيفة ) [سير أعلام النبلاء 6/403]
மக்கள்
அனைவரும் மார்க்க சட்டத்தில் அபூஹனீபாவின் குடும்பத்தினர்கள் என்று ஷாபி ரஹ்
கூறுகிறார்கள்.
صلى
الشافعي الصبح في مسجد أبي حنيفة ــ وكان يرى القنوات في صلاة الصبح ، ويرى الجهل
بالبسملة ـــ فلم يقنت ولم يجهر ببسم الله تأدباً مع أبي حنيفة رحمهما الله .
[طبقات الحنفية 1/433]
இமாம்
ஷாபி ரஹ் அவர்கள் அபூஹனீபா ரஹ் அவர்களின் மஸ்ஜிதில் பஜ்ர் தொழ வைத்தபோது
குனூத்தும் ஓதவில்லை,பிஸ்மியை சப்தமிட்டும் ஓதவில்லை,இதுவே அபூஹனீபா ரஹ் அவர்களின் கருத்துக்கு இமாம் ஷாபி கொடுக்கும்
கண்ணியமாகும்.
எத்துனை
அழகான வழிகாட்டுதல்?
எங்கே
அந்த ஆரோக்கியமான சகோதரத்துவம்?
وبات
-عليه الصلاة والسلام- ليلة الاثنين وقد بدأه الموت، ورأى ذلك منه عمه العباس
وزوجه عائشة -رضي الله عنهما-، فلما أصبح وحضرت صلاة الفجر وجد من نفسه -عليه
الصلاة والسلام- خفة ونشاطًا، فأرخى ستر حجرته ينظر إلى أصحابه -رضي الله عنهم-
وهم صفوف في الصلاة، فتبسم فرحًا بما رأى من عبادتهم لربهم، واجتماع أمرهم، وتآلف
قلوبهم، وفرحوا هم -رضي الله عنهم- برسول الله -صلى الله عليه وسلم-، وظنوا أنه
خارج إليهم، فتأخر أبو بكر في الصف، فأومأ إليه النبي -صلى الله عليه وسلم- أن
يبقى، ثم أرخى -عليه الصلاة والسلام- الستر.
நபி ஸல்
அவர்கள் மரணமான திங்கள் கிழமை காலை பஜ்ர் தொழுகைக்கு ஸஹாபாக்கள் சப்பில்
அணிவகுத்து நிற்கிறார்கள்.நபி சல் அவர்கள் கொஞ்சம் தெளிச்சலடைந்தபோது தன் அறையின்
திரையை நீக்கி தன் தோழர்கள் சப்பில் அணிவகுத்து உள்ளங்களால் இணக்கமாகி உடலால்
ஒன்றுபட்டவர்களாக தன் ரப்பை வணங்கும் காட்சியை பார்த்து மகிழ்ச்சி அடைந்து புன்முறுவல்
பூத்தார்கள்.அல்லாஹ்வின் தூதர் வரப்போகிறார்கள் என்றெண்ணி சப்பிலிருந்து அபூபக்கர்
ரலி பின் வாங்கியபோது அங்கேயே நில்லுங்கள் என நாயகம் சைகை செய்துவிட்டு திரையை
மூடினார்கள்.
எங்கே
அந்த காட்சி?எங்கே அந்த கூட்டம்?ஓரணியில் நிற்கிறோம்
ஓராயிரம் கருத்துவேறுபாடுகளுடன்.
இஸ்லாம்
வேற்றுமையில் வெற்றி கண்ட மார்க்கமாகும்.ஒரு அரேபிய குரைஷியுடன் அபீஸினிய பிலாலும்,ரோமானிய
சுஹைபும்,பாரசீக சல்மானும் கைகோர்க்க முடியும் என்று
உலகிற்கு காட்டியது.
இஸ்லாமிய
கிலாபத் சாம்ராஜ்யத்தில் யூதர்களின் சதியால் அரபியர்,துர்க்கியர்
என்று இரு பிரிவு உண்டானது.அதுவே கிலாபத் வீழ்ச்சிக்கு காரணமானது.
யூதர்கள்
மிகவும் சாதுர்யமாக முஸ்லீம்களை கூறுபோட்டு தங்களின் திட்டத்தை
நிறைவேற்றிக்கொண்டனர்.
மூன்று
பேர்கள் இருக்கும் ஒரு சபையில் ஒரு தலமையை தேடுகிறது இஸ்லாம்.
நம்முடைய
ரப்பு ஒருவன்,நம்முடைய வேதம் ஒன்று,நம்முடய
நபி ஒருவர்,நம்முடய கிப்லா ஒன்று என நம்மை இணைக்கும்
பாலங்கள் நிறையவே இருக்கிறது.
ஒரு
காலத்தில் அரசியல் பெயரால் பிரிந்தோம்,மொழியை முன்னிலப்படுத்தி
பிரிந்தோம்,தேசத்தை காரணம் காட்டி பிரிந்தோம் இன்று
மார்க்கத்தின் பெயரால் பிரிந்து கிடக்கிறோம்.
போதும்
பிரிந்ததும் இழந்ததும்,வாருங்கள் ஒன்று படுவோம்.
தமிழகத்தில்
நபி ஸல் அவர்களின் அவமதிப்பு விவகாரத்தில் கருத்து வேறுபாடுகளை மறந்து 24 இயக்கங்கள் (யூதர்களை போல
எந்த நியதிக்கும் கட்டுப்படாத தறுதல ஜமாத்தை தவிர)ஒன்றுபட்டு களம் கண்டது நம்முடைய
பிரமாண்ட வெற்றி இல்லையா?
وَأَطِيعُوا
اللَّـهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ ۖ
وَاصْبِرُوا ۚ إِنَّ اللَّـهَ مَعَ الصَّابِرِينَ
இன்னும்
அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும்
கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள்
பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன்
இருக்கின்றான்.(அல் குர்ஆன் 8:46)
ஒன்றுபடுவோம்!உலகை
வெற்றிகொள்வோம்!
masha allah maga arumaiyana sindhanai allah qabul seiya vendum aamin
ReplyDeleteஒற்றுமையை பேணுவோம் என்று தலைப்புக்கு பெயர் வைத்திருக்கலாம்.பாலஸ்தீனம், பாபர் மசூதி என்று தலைப்பின் பெயர் தான் உள்ளதே தவிர அவ்விரண்டும் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.தற்போதைய பாலஸ்தீன போர் தொடர்பாக நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் பத்திரிக்கைகள் மற்றும் முகநூலில் வந்தவையே.24 அமைப்புகள் இணைய வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் அது ஏற்கனவே இணைந்து விட்டன. தயவு செய்து தீர்வுகளை கூறுங்கள். அரைத்த மாவை அரைக்க வேண்டாம்.
ReplyDeleteமரியாதைக்குரிய உஸ்மான் யூசுஃபி அவர்களே!
Deleteகருத்து சொல்வதற்கு தங்களுக்கு பரிபூரண உரிமை உண்டு. கட்டுரைய வாசிக்கின்ற எத்தனையோ பேர் கருத்து சொல்லாமல் நைசாக நழுவி விடுவதும் உண்டு. ஆனால் தாங்கள் நேரம் ஒதுக்கி கருத்துரையிட்டிருக்கிறீர்கள். அல்ஹம்து லில்லாஹ். ஆனால் கருத்துரையிடுவதற்கு முன் கொஞ்சம் நிதானித்து கருத்து எழுதுங்கள். எத்தனையோ உலமாக்கள் இண்டெர்நெட் என்றாலே ஒரு வைரஸ் கிருமி போல நினைத்து ஒதுங்கி இருக்கும்போது ஒரு சில உலமாக்கள் இண்டெர்நெட்டின் அவசியத்தை உணர்ந்து அதைக் கற்றுக்கொண்டு ஒரு வலைப்பதிவை உருவாக்கி அல்லும் பகலும் பாடுபட்டு தகவல் சேகரித்து அதை தொகுத்து நேரத்தை ஒதுக்கி அதை உலகத்தின் பாரவையில் வைக்கிறார்கள். ஒரு காலம் இருந்தது. அதிகமான ஆலிம்கள் ஜும்ஆ பயானுக்காக மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே தகவல்களைத் தேடி நூல்களைப் புரட்டிக்கொண்டிருப்பார்கள். ஒரு வகையான பதட்டம் இருந்துகொண்டே இருக்கும் இப்போதெல்லாம் பல உலமாக்கள் என்னிடம் தொலைபேசியிலும் கருத்துரையிலும் தெரிவிப்பது யாதெனில் எங்களுக்கு இப்பொழுது இந்த டென்ஷன் இல்லை. பல மணி நேரம் பக்கங்களை புரட்டவேண்டிய அவசியமில்லை. ஒரு 'க்ளிக்' தான். அருமையான தகவல்கள் நொடிப்பொழுதில். ஜும்ஆ குறிப்புகளை வாரந்தோறும் வழங்க பல வலைப்பதிவுகள் வந்துவிட்டன. எங்கள் வேலையும் நேரமும் மிச்சமாகிவிட்டன'' என்று எத்தனையோ ஆலிம்கள் கூறிக்கொண்டு இருக்கும்போது,
தாங்கள் மட்டும் எப்போதுமே எதிர்மறையான கருத்துக்களையே எழுதிவருவது ஏற்புடையதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வலைப்பதிவை உருவாக்கி அதில் தகவல்களை வாரந்தோறும் வழங்குவது எத்தனை சிரமம் என்று எனக்கு ஓரளவு புரியும். சில நேரங்களில் கம்யூட்டருக்குமுன் அதிக நேரம் அமர்ந்து கண்களெல்லாம் வலிக்கும். சில நேரம் உடலெல்லாம் அசதியாகும். இன்னும் பல உபாதைகளை சந்திக்க நேரிடும் இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் இதைத் தொடர்ந்து செய்வது என்பது பெரிய காரியம்தான்.
எனவே இந்த பணிகளை செவ்வனே செய்வோரை ஒன்று மனம் திறந்து பாராட்டுங்கள்; அல்லது கண்டன உரை எழுதி காயப்படுத்தாமல் அமைதியாக இருங்கள். அரைத்த மாவையே அரைக்கவேண்டாம் என்கிறீர்களே.. உங்கள் கருத்துப்படி இது அரைத்த மாவு என்றால் தாங்களாவது அரைக்காத மாவைத் தாருங்களேன்.
நன்றி வஸ்ஸலாம்.
மரியாதைக்குறிய உஸ்மான் யூசுபி அவர்களே! என் கட்டுரைக்கு தாங்கள் எழுதியிருக்கும் விமர்சனத்தை இஸ்லாமிய சமுதாயத்தின் ஒற்றுமையில் தங்களுக்கு இருக்கும் ஆதங்கமாகவே பார்க்கிறேன். என் கட்டுரையின் கருப்பொருளே தலைப்பாக வைக்கப்பட்டது,முஸ்லீம்களுக்கிடையே தோன்றிய பிளவால் நாம் இழந்த இழப்புக்களில் பாபர் மஸ்ஜிதும்,பலஸ்தீனமும் பேரிழப்பு இல்லையா?தாங்கள் சொல்வது போல பாபர் மஸ்ஜிதின் வரலாற்றை எழுதுவதற்கும் பலஸ்தீனத்தின் வரலாற்றை எழுதுவதற்கும் நான் ஒன்றும் நூல் எழுதவில்லை.மாறாக உலமாக்களின் ஜும்ஆ பயன்பாட்டிற்காக ஒரு சில தகவல்களை பரிமாறிக்கொள்கிறேன்.மேலும் நான் இக்கட்டுரையில் தமிழகத்தில் 24 இஸ்லாமிய அமைப்புகள் இணையவேண்டும் என்று அறைகூவலிடவில்லை,அவ்வாறு இணைந்ததால் நாம் பெற்றுவருகிற கண்ணியத்தையே சுட்டிக்காட்டினேன்.தாங்கள் தீர்வை சொல்லச்சொல்கிறீர்கள். கருத்துவேறுபாடுகளை கண்ணியமாக பார்க்க பழக வேண்டும்.நிச்சயமாக அது இன்னொரு முஸ்லிமின் உணர்வுக்கும்,சிந்தனைக்கும் கொடுக்கும் மரியாதையாகும்.இது தீர்வு இல்லையா? மூன்று பேர்கள் இருக்கும் ஒரு சபையில் ஒரு தலைமையை தேடுகிறது இஸ்லாம்.முஸ்லீம்களுக்கிடையில் தலைமையின் அவசியத்தை உணர்த்துகிற இந்த வாசகம் நான் சொல்லவரும் தீர்வாக தெரியவில்லையா?மற்றபடி அரைத்த மாவை அரைப்பதாக சொன்னீர்கள்,மாவு அரவை சரியில்லாவிட்டால் இன்னொரு தடவை அரைப்பது தவறில்லையே?.உலமாக்களின் ஆக்கங்களை ஊனப்படுத்தாமல் ஊக்கப்படுத்தும் அருமை நண்பர் சதக் மஸ்லஹி அவர்களுக்கும்,நண்பர் அப்பாஸ் அவர்களுக்கும் என் துஆவும் நன்றியும்.வஸ்ஸலாம்.
DeleteALHAMDHU LILLAH! ARUMAYANA KATTURAI HAJRATH!
ReplyDeleteganniyam niraidha yusufi avargale ondru naam sevaigal seiya vendum. alladhu sevaigal seibavargalai urchaga padutha vendum. inndha valai thalam mulam niraya aalimgal payan perugirargal dhayavu kurndhu adhai kedukka vendam.(nuuh (alih)yin samugam kappal kettum bodhu ippadi daan vimarchitthu viinaga ponargal)
ReplyDeleteஉஸ்மான் யூஸூபிக்கு அப்துர் ரஹ்மான் யூஸூபி ஸலாமுடன் (கூடவே வேதனையுடன்)எழுதுவது.அரைத்த மாவு என்ற உங்கள் கருத்து பலரின் கோபங்களையும் சிலரின் வேதனைகளையும் சுமந்து நிற்கிறது. எவ்வளவு அற்புதமான கட்டுரை. ரசிக்கும் பண்பு இல்லையே! இந்த வாரம் என் பள்ளியில் அமோக வரவேற்பை பெற்ற பயான் இது. 500 பேருக்கு பிடித்தது உங்களுக்கு அரைத்த மாவு என்றால்!.!.....!? ஒரு சின்ன உபதேசம் ; இதே வலைப்பதிவில் நீங்கள் எழுதியதற்கு வருத்தம் தெரிவியுங்கள் ! அது பலரின் மகிழ்வையும் சிலரின் துஆக்களையும் உங்கள் கருத்திற்கு பெற்றுத் தரும் . வஸ்ஸலாம் !
ReplyDeleteமனம் திறந்து பாராட்டி ஊக்கப்படுத்தும் 'தில்' அவர்களே! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
Deleteஅப்துர் ரஹ்மான் யூசுபிக்கு..விமர்சனத்தை ஏற்காத விஷயத்தில் பொது மக்களைப் போன்று ஆகிவிட்டிருக்கிறீர்கள்.இமாமத் பணியில் ஒன்றும் தெரியாதவர்கள் விமர்சனம் செய்தாலோ அல்லது ஆலோசனை கூறினாலோ நாம் அலட்சியம் செய்வதில்லை. கோபப்படுவதில்லை.அதற்கெல்லாம் நாம் பழகியவர்கள்.500 நபருக்கு பிடித்தது என்றால் 500 பொதுமக்களின் ரசனையும், ஒரு ஆலிமின் விமர்சன அறிவும் ஒன்றா? புரியவில்லை.கட்டுரையாளருக்கு நான் வருத்தம் தெரிவித்து விட்டேன். உங்களைப் போன்றவர்களின் குறுக்கீடு தான் வேதனையை தருகிறது. நன்றி ..வஸ்ஸலாம்..
Deleteமரியாதைக்குரிய Sadhak Maslahi அவர்களே..ஐந்து வரிகளில் கொடுக்கப்பட்ட விமர்சனத்திற்கு அரை பக்கம் பதில் தந்துள்ளீர்கள்.விமர்சனங்களையும், எதிர்கருத்துக்களையும் நேர்மறையாக பார்க்க பழகுங்கள்.எதிர்மறையாக கருதுவது ஆரோக்கியமல்ல..புகழ்வதும், பாராட்டுவதும் ஊக்கப்படுத்துவதாக இருந்தாலும் விமர்சனங்களே மனிதனை செம்மைப்படுத்தும்.‘அரைத்த மாவு’என்ற சொல் கடுமையாக இருந்தாலும் நிச்சயம் இனிவரும் காலத்தில் நல்ல கருத்துக்களையும், பலனையும் தரும். தயவு செய்து பொதுத்தளத்தில் இயங்குபவர்கள் விமர்சனங்களை சகிக்க பழகுங்கள். நன்றி வஸ்ஸலாம்..
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete//பொதுத்தளத்தில் இயங்குபவர்கள் விமர்சனங்களை சகிக்க பழகுங்கள்//
Deleteதாராளமாக விமர்சியுங்கள். தப்பில்லை தாங்கிக்கொள்கிறோம். ஆனால் விமர்சிப்பதற்கு முன் ஒரு பதிவு எழுத பதிவர்கள் படும் கஷ்டங்களையும் நினைத்துப் பாருங்கள் என்றுதான் கூறுகிறேன்.
//அரைத்த மாவு’என்ற சொல் கடுமையாக இருந்தாலும் நிச்சயம் இனிவரும் காலத்தில் நல்ல கருத்துக்களையும், பலனையும் தரும்//
உங்கள் தீர்க்க தரிசனம் பலிக்கட்டும். ஆமீன்
மரியாதைக்குரிய Sadhak Maslahi அவர்களே.. எனது விமர்சனத்தை கல்லடி என்கிறீர்கள். தாங்கிக் கொண்டு தருகிறோம் என்கிறீர்கள்.உஸ்மானிகள் பேரவை சார்பில் கட்டுரை தரப்பட்டது.நான் விமர்சனம் செய்தேன்.கட்டுரையாளர் கண்ணியமான முறையில் விளக்கம் தந்தார். நான் வருத்தம் தெரிவித்தேன்.என்னமோ நீங்கள் தந்தது போன்று தருகிறோம் என்கிறீர்களே..உங்கள் கட்டுரையா? எனக்கும் கட்டுரையாளருக்கும் உள்ள விஷயம். அது முடிந்து விட்டது.நன்றி. வஸ்ஸலாம்..
Deleteமரியாதைக்குரிய usmanihal paeravai இயக்குனரே.. நல்ல எண்ணத்துடன் தான் நான் விமர்சனம் செய்திருந்தேன். அதனால் தங்களின் மனது புண் பட்டிருந்தால் வருந்துகிறேன். துஆ செய்யவும். நன்றி ..வஸ்ஸலாம்..
ReplyDeleteஉஸ்மான் யூஸூபி அவர்களுக்கு! விமர்ச் சனங்களை ஏற்க வேண்டும் என்று கூறும் நீங்களே உங்களைப் பற்றிய விமர்ச் சனங்களுக்கு ஏன் இவ்வளவு பதில் பேச வேண்டும்? பழகியவர்கள்.500
ReplyDeleteநபருக்கு பிடித்தது என்றால் 500
பொதுமக்களின் ரசனையும், ஒரு ஆலிமின்
விமர்சன அறிவும் ஒன்றா?500 நபர்கள் எனறால் எல்லோருமே பொது மக்களாகத்தான் இருக்க வேண்டுமா? நீங்கள் எழுதியது வறுத்தம் தருகிறது எனறால் நான் எழுதியதறகு வறுத்தம் தெரிவிக்கிறீர்கள்!அமலில்லாத உபதேசங்கள் அடி மனதில் எந்த பாதிப்பையும் யாருக்கும் ஏற்படுத்தாது;எனவே ஏறகும் மனதை நீங்கள் தான் பெற வேண்டும். உங்களைப் போன்றவர்களின்
குறுக்கீடு தான் வேதனையை தருகிறது. சுவற்றில் எறியப்பட்ட பந்து மீண்டும் வரத்தானே செய்யும்!
assalamu amaikkum.vlmarsanangai athigam irunthalum miga arumayana saithigal jazakallahu khair .vassalam.
ReplyDeleteஅல்ஹம்து லில்லாஹ்!அறிவு தளத்தில் உலமாபெருமக்களின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும்,விமர்சனக்குறுக்கீடுகளும் இக்கட்டுரைக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரமாக நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ألا يستقيم أن نكون إخواناً وإن لم نتفق في مسألة என்ற இமாம் ஷாபிஈ ரஹ் அவர்களின் ஆளமான கருத்தை நினவுபடுத்தி உங்கள் அனைவருக்கும் துஆச்செய்ய கடமைப்பட்டுள்ளேன்.நிச்சயமாக ஆலிம்களால் மட்டும் தான் இவ்வளவு கண்ணியமாக தங்களுக்கிடையில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்று நினக்கிறேன்.கருத்து வேறுபாடுகளை பகிர்ந்து கொள்ளும்போது கண்ணியமிக்க ஆலிம்களின் உள்ளம் காயப்பட இக்கட்டுரை காரணமாக இருக்குமானால் அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்து துஆ செய்யுங்கள்.என்றும் உங்களின் விமர்சனத்தை எதிநோக்கி:உஸ்மானிகள் பேரவை.வஸ்ஸலாம்
ReplyDelete