Wednesday, 30 January 2013

கருத்துச்சுதந்திரத்தின் அளவுகோல் என்ன?



கருத்துச்சுதந்திரம் என்ற சொல்லாடல் இன்று அதிகமாக மீடியாக்கள் வழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கு சொல்லப்படும் இலக்கணம் மிகவும் ஆபத்தானதும்,ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் தன்மை கொண்டதாகும்.

உங்களின் சுதந்திரத்தின் எல்லையில் மற்றவர்களின் சுதந்திரம் உள்ளது என்பதை ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.

முதலில் விமர்சனங்கள் என்பது வரைமுறைக்குட்பட்டது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.இல்லையெனில் யார் வேண்டுமானால் யாரைப்பற்றியும் எப்படியும் கருத்துச்சொல்ல்லாம் என்று தவறான கருத்தாக்கம் உருவாகி விடும்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இந்த கருத்துச்சுதந்திரத்திற்கு கொஞ்சம் கூடுதலான உரிமை தரப்பட்டுள்ளது என்பது உண்மையே.   ஆனால் அந்த சுதந்திரம் பொய்யை மக்களுக்கிடையே பரப்புவதற்கும்,இல்லாத ஒன்றை இட்டுக்கட்டுவதற்கும்,ஒரு தனிமனிதனை அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுமேயானால் அதை தடுப்பதும் கருத்துச்சுதந்திரத்தை பாதுகாப்பதாகவே அமையும்.

இங்கே நாம் கேட்பதெல்லாம் பொய்யான கருத்துக்கு எதற்கு சுதந்திரம்?

கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் காவிச்சிந்தனையை பரப்புவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை அல்லது பிரச்சாரத்தை அப்பட்டமாக படம்பிடித்து காட்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இப்படம் அமெரிக்காவின் பண உதவியுடன் கருத்துச்சுதந்திரம் எனும் முகமுடியுடன் வெளிவந்திருக்கிறது.

ஒரு தனிமனிதனின் கற்பனைக்கு,பொய்யாக புணையப்பட்டதிற்கு உருவம் கொடுத்து,அதை மீடியாக்களின் துணையுடன் மக்கள் மன்றத்தில் வைக்கும்போது-180 கோடி மக்கள் தொகையை கொண்ட ஒரு சமூகத்தின் உணர்வுகள் காயப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளாமல், இதனால் சட்டஒழுங்கு சீர்குழைந்துவிடும் என்ற அரசின் கருத்தையும் பொருட்படுத்தாமல் 'கருத்துச்சுதந்திரம்; என்ற ஒற்றை வரியை மட்டும் முன்னிலைப்படுத்தி தீர்ப்பளித்திருப்பது மிகவும் வேதனைக்குறியது

கருத்துச்சுதந்திரத்தின் அளவுகோல் என்ன?

முல்லைப்பெரியாறு அணைபற்றி அண்மையில் எடுக்கப்பட்ட திரைப்படம் உண்மைக்கு புறம்பானது,இதை வெளியிட்டால் சட்டஒழுக்குக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்ட கருத்தை ஏற்று கோர்ட்டும் தீர்ப்பளித்தபோது இது கருத்துச்சுதந்திரத்தை பாதிக்கிறது என யாரும் வாய்திறக்கவில்லையே ஏன்?

அப்படியானால் இங்கே கருத்துச்சுதந்திரம் என்பது இஸ்லாத்திற்கும்,இஸ்லாமியர்களுக்கும் எதிராக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு ஜனநாயகத்தை பாதுகாக்கவேண்டிய நீதிமன்றம் அது கடமை தவறிவிட்டது.

இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நீதித்துறையும்,ஊடகமும் இங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது.

ஓரு நாட்டின்  நாகரிகம், அது தனது சிறுபான்மை மக்களை எப்படி நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது. சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்கு அரணாக நிற்கவேண்டிய பொருப்பும் கடமையும் குறிப்பாக நீதித்துறைக்கு உண்டு.

அதைப்போல "இஸ்லாமிய பயங்கரவாதம்', "முஸ்லிம் பயங்கரவாதி' போன்ற அவச்சொற்கள் நம் நாட்டின்  முதன்மை ஊடகங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதால், இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் ஒரு தவறான கண்ணோட்டத்தை மக்களிடம் ஏற்படுத்தியதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாத சிறுபான்மைச் சமுதாயம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும், அவர்களைத் தொடர்ந்து இஸ்லாமியப் பேரரசின் குடியரசுத் தலைவர்களாய் இருந்த கலீபாக்களும் மிகச்சிறந்த  முன் மாதிரிகளை தந்து சென்றுள்ளனர்.

ஒரு பெரும்பான்மை சமூகத்தின் கீழ் வசிக்கும் சிறுபான்மையர்களின் உரிமைகளும் உணர்வுகளும் எவ்வளவு பாதுகாக்கப்படவேண்டும் என்பதை எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.

قُلِ اللَّـهَ أَعْبُدُ مُخْلِصًا لَّهُ دِينِي

فَاعْبُدُوا مَا شِئْتُم مِّن دُونِهِ

இன்னும் கூறுவீராக "என் மார்க்கத்தில் அந்தரங்க சுத்தியாக அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன். ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்." கூறுவீராக.(அல் குர்ஆன் 39:14,15)

தன் கொள்கையை அழுத்தமாக பதிவு செய்யும் அதே நேரத்தில் பிறமத வழிபாடுகளுக்கு பூரண சுதந்திரம் தரப்பட்டது என்பதை மிகவும் துல்லியமாக விளக்குகிறது.

அவ்வாறே என் மார்க்கக்காரியங்களை செயல்படுத்துவதில் எனக்கு இருக்கும் முழு சுதந்திர உரிமையை போலவே உங்களுக்கும் உண்டு என இன்னொரு வசனம் கூறுகிறது.

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."   .(அல் குர்ஆன் 109:6)

இங்கே கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விஷயம் என்னவெனில், தன் கொள்கையை,அல்லது மார்க்கத்தை எடுத்துச்சொல்லும் முழு சுதந்திரம் உண்டு என்று கூறும் அல்குர்ஆன்- அது பிறமத மக்களின் உணர்வுகளை காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் கண்டிப்புடன் கூறுகிறது.


 وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّـهِ فَيَسُبُّوا اللَّـهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்.(அல் குர்ஆன் 6:108)

நபி ஸல் அவர்கள் ஆட்சி செய்த அன்றைய மதீனாவில் யூதர்களும் கிருஸ்துவர்களும் சிறுபான்மை சமுதாயமே.
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த அந்த சிறுபான்மை சமுதாயம் எப்படி நடத்தப்பட்டார்கள்?

ما رواه البخاري عن جابر بن عبد الله: أن جنازة مرت على النبي - صلى الله عليه 

وسلم - فقام لها واقفًا، فقيل له: يا رسول الله، إنها جنازة يهودي! فقال: (أليست 

نفسًا)؟!. بلى، ولكل نفس في الإسلام حرمة ومكان

நபி ஸல் அவர்களை கடந்து சென்ற ஒரு யூத ஜனாஸாவுக்காக பெருமானார் எழுந்து நின்றார்கள்.

தோழர்கள் காரணம் கேட்டபோது-ஆம்!அதுவும் ஒரு உயிரில்லையா? என்றார்கள்.

மனித உரிமையும்,மரியாதையும் மதிக்கப்பட்ட காலம்.
ஒருமனிதனின் சடலத்தை கூட அவமரியாதை செய்யக்கூடாது எனும் உயர்ந்த தத்துவத்தை இவ்வுலகிற்கு சொன்னார்கள்.

ذكر ابن إسحق في السيرة: أن وفد نجران ـ وهم من النصارى ـ لما قدموا على الرسول 

- صلى الله عليه وسلم - بالمدينة، دخلوا عليه مسجده بعد العصر، فكانت 

صلاتهم، فقاموا يصلون في مسجده، فأراد الناس منعهم، فقال رسول الله - صلى 

الله عليه وسلم -: "دعوهم" فاستقبلوا المشرق فصلوا صلاتهم.

நஜ்ரான் தேசத்து கிருஸ்துவக்கூட்டம் பெருமானாரை சந்தித்து விவாதம் செய்ய மதீனா வந்தபோது அது அஸர் தொழுகையின் நேரம் என்பதால் மஸ்ஜித் நபவியில் தங்களின் வணக்கத்தை நிறை வேற்ற பெருமானார் ஸல் அவர்களிடம் அனுமதி கேட்டனர்.

அவர்களை தடுக்க முனைந்த தம் தோழர்களை தடுத்துவிட்டு-அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் தங்களின் வணக்கத்தை நிறைவேற்றட்டும் என்றார்கள்.

கிழக்கு திக்கை முன்னோக்கி அவர்கள் தங்களின் மதவழிபாட்டை செய்ததாக இப்னு இஸ்ஹாக் தங்களின் ஸீரத் நூலில் குறிப்பிடுகிறார்.

இதுவே இஸ்லாம் வழங்கிய மத சுதந்திரம்!

أن أبا هريرة رضي الله عنه قال استب رجل من المسلمين ورجل من اليهود فقال 

المسلم والذي اصطفى محمدا صلى الله عليه وسلم على العالمين في قسم يقسم به 

فقال اليهودي والذي اصطفى موسى على العالمين فرفع المسلم عند ذلك يده فلطم

 اليهودي فذهب اليهودي إلى النبي صلى الله عليه وسلم فأخبره الذي كان من أمره

 وأمر المسلم فقال لا تخيروني على موسى فإن الناس يصعقون فأكون أول من

 يفيق فإذا موسى باطش بجانب العرش فلا أدري أكان فيمن صعق فأفاق قبلي أو 

كان ممن استثنى الله

فتح الباري شرح صحيح البخاري

நபி ஸல் அவர்களின் காலத்தில் ஒரு இஸ்லாமியருக்கும் யூதருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதலில் ஒருவரையொருவர் திட்டிக்கொள் கின்றனர்.அப்போது அந்த முஸ்லிம்,உலக மக்களில் முஹம்மத் ஸல் அவர்களே சிறந்தவர்கள் என்று கூறினார்.உடனே அந்த யூதரோ,மூஸா அலை அவர்களே சிறந்தவர்கள் என்று கூற கோபம் கொண்ட அந்த முஸ்லிம் அவரை கன்னத்தில் அறைந்துவிடுகிறார்.

இந்த வழக்கை அந்த யூதர் அருமை நாயகம் ஸல் அவர்களின் சபைக்கு கொண்டு செல்ல விஷயத்தை கேட்டு அறிந்துகொண்ட நாயகம் ஸல் அவர்கள்-அந்த முஸ்லிமை கண்டித்ததுடன், தன்னை மூஸாவை விட சிறந்தவர் என கூற வேண்டாம் எனவும்,நாளை மறுமையில் மக்கள் எழுப்படும்போது நான் முதலாவது எழுப்பப்படுவேன்,அப்போது மூஸா அலை அவர்கள் அர்ஷின் ஓரத்தில் நிற்பார் என்றும் கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நீதிபதிக்கும் சரியான பாடத்தை கற்பிக்கிறது.

உம் தலைவரை உயர்வாக பேச உமக்கு உரிமை இருப்பது போலவே அவரின் மத தலைவரை உயர்வாக பேச அவருக்கும் உரிமை உண்டு என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

சிறுபான்மையினரான அந்த யூதருக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தை சார்ந்த முஸ்லிமை கண்டித்ததுடன்,அவர் மதிக்கிற அவரின் மத தலைவரின் மரியாதையை எடுத்துச்சொல்லி அவரை மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள்.

தன் மத தலைவர் இழிவுபடுத்தப்பட்டுவிட்டார் என நியாயம் தேடி நீதியின் படியேறிய ஒரு சிறுபான்மை சமூகத்தின் குரல் அங்கீகரிக்கப்பட்டு தீர்வும் காணப்பட்டது.

இதுவே உண்மையான கருத்துச்சுதந்திரமாகும்.

இந்தியாவப்போன்ற நாடுகளில் இஸ்லாமியருக்கு எதிரான எந்த கருத்தும் கருத்துச்சுதந்திரத்தின் பின்னனியில் தான் பார்க்கப்படுகிறது.

ஒரு குடிமகன் தன் உரிமையை பெற்றுக்கொள்ள இறுதி நம்பிக்கையுடன் நீதிமன்ற படியேறுகிறான்.

இது போன்ற நிலைபாடுகள் தொடருமேயானால் நீதிமன்றங்களின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.


சர்ச்சைக்குறிய படம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகளாக சித்தரித்து இழிவுபடுத்தியுள்ளனர்,எனவே தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம்களின் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதத்திற்கு எந்த பதிலையும் சொல்லாத நீதிபதி,அரசு தரப்பு வழக்கறிஞர் சட்ட ஒழுங்கை காரணம் காட்டியபோது-முதலில் வெளியிடலாம்,பின்பு பிரச்சனை ஏற்பட்டால் பின்பு அது பற்றி பேசலாம் என பஞ்சாயத்து பேசுகிறது நீதிமன்றம்.

வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதுபற்றி கருத்துச்சொல்வதில் இத்துனை கெடுபிடி காட்டும் உங்களின் சட்டத்திற்கு அப்போது எங்கே போனது உங்களின் கருத்துச்சுதந்திரம்?

அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத உங்களின் சட்டங்களுக்கு ஆண்மா இல்லை என்றே சொல்லவேண்டும்.

பிறரை புண்படுத்தி கருத்துச்சொல்லும் சுதந்திரம் உனக்கில்லை என்று உலகிற்கு உரக்கச்சொன்ன எங்கள் உத்தமநபியின் வார்த்தையை கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்.

தன் தோழர்கள் பற்றிய தவறான கருத்தை தன் சபையில் வைக்கக்கூடாது  என்று தம் தோழர்களுக்கு கட்டளையிட்டிருந்த எங்களின் பெருமானாரின் வாழ்வை கொஞ்சம் படித்துவிட்டு நீதிமன்ற இருக்கையில் அமருங்கள்.

சிறுபான்மையர் விஷயத்தில் நபி ஸல் அவர்கள் எந்த நிலைபாட்டை கடைபிடித்தார்களோ அதேநிலைபாட்டையே அவர்களின் தோழர்களும் கடைபிடித்து வந்தனர்.

அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும்,உணர்வுகளை மதிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தினர்.
இஸ்லாமியர்களின் கை ஓங்கியபொழுதெல்லாம் அல்லாஹ்வுக்கு பயந்து அவர்களை அரவணைத்தார்கள்.

ஜெரூஸலத்தை முஸ்லிம்கள் கைப்பற்றிய போது சிறுபான்மையினரான கிருஸ்துவர்களுக்கு இஸ்லாமிய இரண்டாம் கலிபா உமர் ரலி அவர்கள் செய்து கொடுத்த ஒப்பந்தம் இது.

هذا ما أعطى عبد الله عمر أمير المؤمنين أهل إيلياء من الأمان ، أعطاهم أماناً لأنفسهم وأموالهم ، ولكنائسهم وصلبانهم وسقيمها وبريئها وسائر ملتها، أن لا تُسكن كنائسهم، ولا تُهدم، ولا يُنتقص منها ولا من حيزها ، ولا من صليبهم، ولا من شيء من أموالهم .
ولا يكرهون على دينهم، ولا يُضار أحد منهم ..

تاريخ الطبري (4/449)
இது அல்லாஹ்வின் அடிமையான முஃமின்களின் தலைவரான உமர் எழுதிக்கொடுக்கும் நம்பிக்கை பத்திரம்,
இங்குள்ள சிறுபான்மை மக்களின் உயிரும் பொருளும்,அவர்களின் ஆலயங்களும்,நோயாளிகளும்,ஆரோக்கியமானவர்களும் பாதுகாக்கப்படு  வர்.அவர்களின் மார்க்கத்தை பின்பற்றுவதில் அவர்கள் பூரண சுதந்திரம் தரப்பட்டவர்கள்.ய்ராலும் அவர்கள் துன்புறுத்தப்படமாட்டர்.  என எழுதி 

கொடுத்தார்கள்.

وقد خاف عمر من انتقاض عهده من بعده فلم يصل في كنيسة القمامة[17]حين 

أتاها وجلس في صحنها، فلما حان وقت الصلاة قال للبترك: أريد الصلاة. فقال له 

البترك: صل موضعك. فامتنع عمر رضي الله عنه وصلى على الدرجة التي على باب

 الكنيسة منفرداً، فلما قضى صلاته قال للبترك: (لو صليتُ داخل الكنيسة أخذها 

المسلمون بعدي، وقالوا: هنا صلى عمر).


تاريخ ابن خلدون (1/435).

தொழுகையின் நேரம் வந்தபோது ஆலயத்தின் உள்ளே ஒரு இடத்தில் தொழச்சொல்லி கிருஸ்துவர்கள் நிர்பந்தம் செய்தனர்,ஆனாலும் உமர் ரலி அவர்கள் ஆலயத்தின் உள்ளே தொழாமல் படிக்கட்டில் தொழுதார்கள்.காரணம் கேட்டபோது-நான் உள்ளே தொழுதிருந்தால் எனக்கு பின்னால் வரும் சமுதாயம் உமர் தொழுத இடம் என்று கூறி அதை கைப்பற்றிக்கொள்ளக்கூடாது.என்றார்கள்.

أخذ الوليد بن عبد الملك كنيسة "يوحنا" من النصارى، وأدخلها في المسجد . فلما 

اسْتُخْلِفَ عمر بن عبد العزيز شكا النصارى إليه ما فعل الوليد بهم في كنيستهم، 

فكتب إلى عامله برد ما زاده في المسجد عليهم، لولا أنهم تراضوا مع الوالي على 

أساس أن يُعوَّضوا بما يرضيهم . (فتوح البلدان ص 171 172 . وقصة هذه 

الكنيسة كما يحكيها البلاذري أن خلفاء بني أمية منذ عهد معاوية، ثم عبد الملك، 

حاولوا أن يسترضوا النصارى ليزيدوا مساحتها في المسجد الأموي، واسترضوهم 

عنها، فرفضوا، وفي أيام الوليد، جمعهم وبذل لهم مالاً عظيمًا على أن يعطوه إياها 

فأبوا، فقال: لئن لم تفعلوا لأهدمنها فقال بعضهم: يا أمير المؤمنين، إن مَن هدم 

كنيسة جُنَّ وأصابته عاهة! فأغضبه قولهم، ودعا بمعول وجعل يهدم بعض حيطانها 

بيده، ثم جمع الفعلة والنقاضين، فهدموها . وأدخلها في المسجد، فلما اسْتُخْلِف عمر 

بن عبد العزيز شكا إليه النصارى ما فعل بهم الوليد في كنيستهم . فكتب إلى عامله

 يأمره برد ما زاده في المسجد عليهم! (أي بهدمه وإعادته كنيسة) فكره أهل دمشق

 ذلك وقالوا: نهدم مسجدنا بعد أن أذَّنَّا فيه وصلينا دبر نبيه 

பனீ உமைய்யாக்களின் ஆட்சியாளர் வலீதின் ஆட்சிக்காலத்தில் கிருஸ்துவர்களின் ஆலயம் ஒன்று பள்ளிவாசலை விரிவுபடுத்தும்  போது அதுவும் சேர்த்து கட்டப்பட்டு விட்டது.

பின்னர் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ் அவர்களின் ஆட்சியில் கிருஸ்துவர்கள் முறையிட்டனர்.

உடனே கலீபா அவர்கள் அந்த இடத்தை இடித்து அவர்களிடம் ஒப்படைக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

நாங்கள் பாங்கு சொல்லி தொழுத இடத்தை எப்படி இடிப்பது என்று அன்றைய திமிஷ்க் மக்கள் வெறுத்தபோதும் சிறுபான்மையான கிருஸ்துவ சமுதாயத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன என்பதே வரலாறு.

இன்றைக்கு சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்த பிரச்சனையை முஸ்லிம்கள் அறிவுப்பூர்வமாக அனுகவேண்டுமே தவிர உணர்ச்சிப்  பூர்வமாக அனுகக்கூடாது,காரணம் அது சரியான தீர்வை நோக்கி இழுத்துச்செல்லாது.

கடந்த காலங்களில் இஸ்லாமிய எதிரிகள் முஸ்லிம்களை உணர்ச்சிவசப்படுத்தி நிறைய காரியங்களை சாதித்துக்கொண்டனர்.

இப்போது முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?
முதலாவது: 

இந்த பிரச்சனையை உற்றுநோக்கிக்கவனிக்கிறபோது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பலகீனப்படுத்த ஒரு பெரிய கூட்டமே தயாராக இருக்கிறது என்பது வெளிச்சமாகியிருக்கிறது.

இதுவரை தன்னை நடுநிலையான நாளிதழாக காட்டிக்கொண்ட தினமணியின் உண்மை முகம் வெழுத்திருக்கிறது,தமிழக ஆட்சியா? தாலிபான் ஆட்சியா? என்ற கட்டுரையை வெளியிட்டு தன் சுயரூபத்தை காட்டியது.

அதைப்போல அப்ஸல் குரு போன்றவர்களை மக்கள் பார்த்தபின்னும் உங்களை போன்றவர்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் 
என ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் தலைவரை கொச்சைப்படுத்தி புதிய தலைமுறை தொலைக்காட்சி தன் பாஸிஸ வெறியை காட்டியது.

எனவே முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்கும் காலம்.

இரண்டாவது:  இஸ்லாம் என்றைக்கும் தோற்காது,முஸ்லிம்கள் சில கட்டங்களில் பின்னடைவை சந்திக்கலாம்.அது நிறந்தரமில்லை

இந்த நேரத்தில் ஹிஜ்ரி 5 ல் நடைபெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கையை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இஸ்லாத்தின் குரல் ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்டு திருப்பியனுப்ப பட்ட போது உலகமே அதை இஸ்லாத்தின் தோல்வி என்றது.   ஆனால் அல்லாஹ் அதை மகத்தான வெற்றி என்று புகழ்கிறான்.

அதுவே ஹிஜ்ரி 8ல் மக்காவின் வெற்றியை பெற்றுத்தந்தது.

மூன்றாவது:இஸ்லாமியர்களின் ஒற்றுமையை மக்கள் பார்க்கும் ஒரு சந்தர்ப்பமாக இதை நாம் ஏற்பபடுத்தினோம் என்று பெருமைப்படலாம். இது ஆரம்பமே, முடிவல்ல.

முஃமின்க்களே!நீங்கள் உயர்ந்தவர்கள்-காரணம் நீங்கள் முஃமின்கள்.  என்ற அல்லாஹ்வின் வார்த்தையை ஆறுதலாக சொல்லி,இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் ஒருநாள் வெல்லும்.எனும் முழக்கத்துடன் நிறவு செய்கிறேன்.











Tuesday, 22 January 2013

நபியே! அல்லாஹ் உங்களை பாதுகாப்பான்.



அல்லாஹுத்தஆலா மனித சமுதாயத்திற்கு கோடானகோடி அருட்கொடைகளை வழங்கியிருந்தாலும் அதையெல்லாம் பொதுவாக திருக்குர்ஆன் கூறுகிகிறது,ஆனால் நபி ஸல் அவர்களை முஃமின்களுக்கு தூதராக வழங்கிய அருட்கொடையை குறித்து தனியாக பேசுகிறது.

لَقَدْ مَنَّ اللَّـهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். (அல் குர்ஆன் 3:164)

உண்மையில் பூமான் நபியை இந்த உம்மத் பெற்றதைகாட்டிலும் ஒரு பெரும் சந்தோஷம் வேறுஎதுவும் இருக்க முடியாது என்பதை ஈமானிய உணர்வுள்ள ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

அதனால் தான் அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் நாயகம் ஸல் அவர்கள் நமக்கு கிடைத்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாட சொல்கிறான்
  
قُلْ بِفَضْلِ اللَّـهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

அல்லாஹ்வின் அருட்கொடையினைக்கொண்டும் அவனுடைய பெருங்கிருபையைக்கொண்டும்  அவர்கள் மகிழ்ச்சிடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது" என்று (நபியே!) நீர் கூறும்.  (அல் குர்ஆன் 10:58 )

எந்த அருளை அல்லாஹ் வழங்கினாலும் அதைப்பற்றி புரிந்து கொள்வதும்,அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதும்,அதை பாதுகாப்பதும் நம் மீது கடமையாகும்.

திருக்குர்ஆனை இறக்கியருளிய ரப்புல் ஆலமீன் அதை தானே பாதுகாக்கப்போவதாக வாக்களித்துள்ளான்,திருமறை பாதுகாக்கப்படுவதி  ன் பின்னனியில் நபி ஸல் அவர்களும் பாதுகாக்கப்படுகிறார்கள்.

ஆம்!அல்குர்ஆனையும் அருமை நாயகத்தையும் எங்கேயும் பிரித்துப்பார்க்க முடியாது.இன்னும் சொல்வதால் திருமறைக்கு ஒளியாக நாயகமே அமைகிறார்கள்.அதனால் தான் அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனை நூல் என்றும் அதை படிக்கும் ஒளி பெருமானார் எனவும் புகழ்ந்து கூறுகிறான்.

قَدْ جَاءَكُم مِّنَ اللَّـهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ

நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. (அல் குர்ஆன் 5:15)

அல்லாஹ்வின் வஹி இருவகைப்படும்

ஒன்று:ஓதப்படுவது-மற்றொன்று பார்க்கப்படுவது.அதாவது அல்லாஹ்வின் வஹ்யை வார்த்தையாக திருக்குர்ஆனை பார்க்கலாம்,வாழ்க்கையாக அண்ணல் நபி ஸல் அவர்களை பார்க்கலாம்.

எனவே திருநபியை தவிர்த்துவிட்டு திருக்குர்ஆனையோ,அல்குர்ஆனை தவிர்த்துவிட்டு அருமை நாயகத்தையோ பார்க்கவே முடியாது.

குர்ஆன் பாதுகாக்கப்படும்வரை நாயகத்தின் வாழ்வும் பாதுகாக்கப்படும்.

பூமானின் பிறந்த பூமியும் பாதுகாக்கப்பட்டது.

நபி ஸல் அவர்கள் பிறந்த மண்ணான மக்கா மாநகரம் வரலாற்றில் எத்தைனையோ சோதனைகளை கடந்து வந்திருக்கிறது.யாராலும் அந்த பூமியை தீய எண்ணத்துடன் நெருங்கமுடியா அளவுக்கு அதை அல்லாஹ் பாதுகாத்து வருகிறான்.

வரலாற்றில் ஒருநாள்:

கராமிதாக்கள் என்ற பயங்கரவாத கும்பல் மஸ்ஜித் ஹராமில் நுழைந்து பல முஸ்லிம்களை கொன்றுகுவித்து, கஃபாவின் திரைகளை கிழித்து, அதன் சுவர்களை இடித்து தள்ளி கஃபா உள்ளே நுழந்த அந்த வெறிப்பிடித்த கூட்டம்-

எங்கே அபாபீல் பறவை?

 எங்கே யானைப்படையை அழித்த கற்கள்?   என்று ஓலமிட்டதுடன் ஹஜ்ருல் அஸ்வத் கல்லை பெயர்த்தெடுத்து கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இருபது ஆண்டுகாலம் ஹஜ்ருல் அஸ்வத் இல்லாத கஃபாவை இஸ்லாமிய சமூகம் பார்த்தது.

அதுவே முடிவில்லையே!

அல்லாஹ் வரலாற்றை மாற்றினான்,மீண்டும் முஸ்லிம்கள் ஆதிக்கம் பெற்று அக்கல்லை மீட்டனர்.

நபி ஸல் அவர்களின் பிறந்த அந்த பூமியை அவன் வாக்களித்தது போலவே பாதுகாத்தான்.இன்ஷா அல்லாஹ் கியாமத் வரை பாதுகாப்பான்.

இறுதிநாளில் தஜ்ஜால் மக்கா உள்ளே நுழையாமல் மலக்குகளை அல்லாஹ் பாதுகாப்பிற்கு நிறுத்துவான் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

பூமானின் புனித உடலை சுமந்து நிற்கும் மதீனாவையும் அல்லாஹ் பாதுகாத்தான்.

மக்காவைப்போலவே மதீனாவும் பல்வேறு தாக்குதல்களுக்கு முகம் கொடுத்தது.

உச்சகட்டமாக- மஸ்ஜித் நபவியில் மூன்று தினங்கள் பாங்கு சொல்லப்படவில்லை.

தீய எண்ணத்துடன் மதீனாவில் நுழைந்தவர்களை  மதீனாவே வெளியேற்றி விடும் என பெருமானார் ஸல் அவர்கள் கூறினார்கள்.

நாயகம் ஸல் அவர்களின் உடலையும் அல்லாஹ் பாதுகாத்தான்.

வரலாற்றில் ஒரு நாள்:

بل وحتى بعد موته -صلى الله عليه وسلم-، أراد بعض الحاقدين أن ينالوا من عرضه وشخصه، وقام عدد من المفترين والمستشرقين بمحاولة تشويه سنته، بل هم بعض الصليبيين أن يعتدوا على جسده عدة مرات، ومن أشهر هذه الحوادث، ما تواتر عند المؤرخين والمحدثين في أحداث عام 557هـ، فبعد ضعف الدولة العباسية، وغزو النصارى، وتعدد الدول الإسلامية وتفككها، كحال الأمة اليوم، قام النصارى بإرسال رجلين خبيثين إلى المدينة المنورة، في زي أهل المغرب، ونزلا في دار قرب الحجرة الشريفة، وأظهرا التقوى والصلاح، والإنفاق على الفقراء والمساكين، وزيارة البقيع والقبر النبوي، حتى أمنهما الناس، بدءا يحفران سردابًا من الأسفل إلى الحجرة النبوية، وينقلان التراب، قليلاً قليلاً، في محافظ من جلد، ثم يلقيانه في مقابر البقيع، واستمرا على هذه الحالة فترة طويلة حتى اقتربا من القبر الشريف وأصبحا يفكران في نقل الجسد الشريف الطاهر, وهناك في الشام، يرى السلطان العادل والملك الصالح نور الدين محمود زنكي، يرى النبي -صلى الله عليه وسلم- في المنام، وهو يشير إلى رجلين أشقرين ويقول: أنجدني يا محمود، أنقذني من هذين، فاستيقظ فزعًا منزعجًا، ثم توضأ وصلى ونام، فرأى نفس الرؤيا،فلما استيقظ في الثالثة دعا وزيره الصالح جمال الدين الموصلي، وحدثه بما رأى، فقال: هذا أمر حدث بالمدينة المنورة، وما قعودك؟، اخرج فورًا إلى المدينة النبوية، واكتم ما رأيت، خرج السلطان في عشرين نفر من رجاله، ووصل المدينة ومعه مال كثير، فدخل المسجد النبوي الشريف، وصلى بالروضة الشريفة وسلم على النبي -صلى الله عليه وسلم-،وصاحبيه -رضي الله عنهما-، ثم جلس لا يدري ماذا يصنع؟ فقال له الوزير: أتعرف الشخصين إذا رأيتهما؟ قال: نعم, قال الوزير للناس: إن السلطان قد أحضر معه أموالاً كثيرة فليحضر الجميع ليأخذ نصيبه، وكان السلطان يتأمل الناس، فلم ير الرجلين، فقال: هل بقي أحد؟ قالوا: لا، فقال: تفكروا وتأملوا: فقالوا: لم يبق أحد إلا رجلان مغربيان من الصالحين، لا يأخذان من أحد شيئًا، ففرح في نفسه وقال: عليّ بهما فورًا، فلما أحضرا له فإذا هما الرجلان اللذان أشار النبي -صلى الله عليه وسلم- إليهما في نومه، فقال: من أين أنتما؟ فقالا: من بلاد المغرب جئنا حاجين فاخترنا المجاورة في هذا العام عند رسول الله -صلى الله عليه وسلم-، وشدد عليها فأصرا على قولهما، فقال: أين منزلهما؟ فأخبر بأنهما في رباط قرب الحجرة الشريفة، دخل المنزل فرأى فيه مالاً كثيرًا، ومصحفين، وكتابًا فوق الأرفف، ثم بدأ يطوف ويتجول في البيت، حتى ألهمه الله سبحانه فرفع حصيرًا في البيت، فإذا بلوح من الخشب فرفعه فرأى سردابًا محفورًا باتجاه الحجرة الشريفة، مخترقًا جدار المسجد، فارتاع الناس لذلك، فجيء بالرجلين فاعترفا أنهما نصرانيان بعثهما النصارى في زي حجاج مغاربة، وأعطوهما أموالاً كثيرة وعظيمة لسرقة الجسد الشريف، ونقله إلى بلادهم، عند ذلك بكى السلطان نور الدين بكاءًا شديدًا، ثم أمر بعد ذلك بضرب عنقهما فقتلا تحت الشباك بجوار الحجرة النبوية الشريفة، ثم أمر السلطان بإحضار رصاص عظيم، وأمر بحفر خندق عظيم حول الحجرة الشريفة كلها ثم أذاب الرصاص وملأ به هذا الخندق حماية للقبر الشريف.. رحمك الله يا محمود.

نزهة الناظرين في تاريخ مسجد سيد الأولين والآخرين

الحجرات الطاهرات بيت النبوة
عبد الرحيم محمود الخولي

ஹிஜ்ரி 557 ம் ஆண்டு.அப்பாஸிய கிலாபத் பலஹீனமடைந்திருந்த காலக்கட்டம்.உலகில் கிருஸ்துவ பலம் ஓங்கிருந்தது.இன்றைய காலம் போலவே அன்றும் இஸ்லாமிய நாடுகள் பிரிந்துகிடந்தது.

அப்போது கிருஸ்துவர்கள்- மதீனாவுக்கு மேற்கத்தியர்களின் தோற்றத்தில் இரண்டு மனிதர்களை அனுப்பி வைத்தனர்.

இவர்களின் நோக்கம் பூமானின் உடலை தோண்டியெடுத்து அதை கிருஸ்துவர்களிடம் ஒப்படைப்பது.

அவ்விருவரும் பெருமானின் முபாரக்கான அறைக்கு அருகே தங்கினர்.   இவர்கள்  இறையச்சமுடையவராகவும்,சீர்திருத்தவாதிகளாகவும்,ஏழைகளுக்கு உதவி செய்பவர்களாகவும் தங்களை காட்டிக்கொள்வதுடன்,தவறாமல் ஜன்னதுல் பகீஃயான முஸ்லிம்களின் பொது கப்ருஸ்தானுக்கும்   பெருமானார் ஸல் அவர்களின் ரவ்லா ஷரீபுக்கும் ஸியாரத் செய்து வந்தனர்.

அதன் மூலம் தங்களின் திட்டத்தை நிறைவேற்ற நோட்டமிட்டனர்.

இவர்களின் வெளித்தோற்றத்தைப்பார்த்து மக்களும் இவர்களை நம்பினர்.இவர்கள் தங்களின் திட்டத்தை செயல்படுத்தும் வேலையில் இறங்கினர்,இவர்கள் தங்கிருந்த வீட்டில் பெரும் குழிதோண்டி அதன்வழியாக  நாயகத்தின் ரவ்லாவை அடைய முயற்சித்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக நீண்டகாலம் யாருக்கும் சந்தேகம் வராமல் தோண்டி-இறுதியில் நபி ஸல் அவர்களின் கப்ரை அடைந்து விட்டனர்இது ஒரு புறமிருக்க-

மறு பக்கத்தில்: சிரியாவில் இஸ்லாமிய அரசரான நூருத்தீன் சன்கி ரஹ் அவர்கள் தங்களின் கனவில் நபி ஸல் அவர்களை கண்டார்கள்.

அதில் நபி ஸல் அவர்கள் அந்த இரு திருடர்களின் பக்கம் சுட்டிக்காட்டி இவர்களிட
மிருந்து தன் உடலை பாதுகாக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

திடுக்கிட்டு விழித்த சுல்தான் அவர்கள்-
  
ஒழுச்செய்து,தொழுதுவிட்டு மீண்டும் தூங்கினார்கள்.அப்போதும் அதே கனவை கண்டார்கள்.இப்படி மூன்று தடவை கண்டு இக்கனவில் ஏதோ உண்மை இருப்பதாக அறிந்து தன் அமைச்சர் ஜமாலுத்தீன் அவர்களிடம் தான் கனவை பற்றி கூறினார்கள்.

அதைக்கேட்ட அமைச்சர் ஜமாலுத்தீன் அவர்கள்-கலீபா அவர்களே!   மதீனாவில் ஏதோ ஆபத்து சூழ்ந்திருப்பதாக தெரிகிறது,எனவே தாங்கள் இரகசியபயணமாக யாரிடமும் கூறாமல் உடனடியாக மதீனா புறப்படுங்கள்.என்றார்.

இருபது நபர்களுடன் நிறையபொருள்களுடன் சுல்தான் மதீனா வந்து சேர்ந்தார். மஸ்ஜித் நபவியில் நுழைந்து,ரவ்லாஷரீபில் தொழுது விட்டு,நபி ஸல் அவர்களுக்கும் அன்னாரின் அருமை தோழர்களான அபூபக்கர்,உமர் ரலி ஆகியோருக்கும் சலாம் உரைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்கள்.

இப்போது என்ன செய்வது?
எப்படி அவ்விருவரை கண்டுபிடிப்பது?

எதுவும் தெரியவில்லை-அப்போது அமைச்சர் சுல்தானிடம்,கனவில் நீங்கள் கண்ட அவ்விருவரை நேரில் கண்டால் அடையாளம் கண்டு கொள்வீர்களா?என கேட்க-ஆம் என்று சுல்தான் பதில் கூறினார்.

உடனே, அரசர் தன்னுடன் நிறையபொருள்களை கொண்டுவந்துள்ளார் ஆகவே தாங்கள் வந்து அதை பெற்றுச்செல்லுங்கள் என மக்களுக்கு அமைச்சர் அறிவிப்புச்செய்தார்.

மக்கள் எல்லோரும் வந்தனர்,ஆனால் சுல்தான் எதிர்பார்த்த அவ்விருவர் வரவில்லை.

வேறுயாரும் மீதமிருக்கிறார்களா?என கேட்கமக்கள் இல்லை என்று கூறினர்.

நன்றாக யோசித்துச்சொல்லுங்கள் என சுல்தான் சொன்னபோது-மேற்குலகைச்சேர்ந்த இரு ஸாலிஹீன்கள் வரவில்லை.அவர்கள் யாரிடமும் எதுவும் தேவையாக மாட்டார்கள்
.என்றபோது,அரசர் சந்தோஷப்பட்டார்.

உடனே அவ்விருவரை தன்னிடம் அழைத்துவரும்படி உத்தரவிட்டார்.
அவ்விருவரும் வந்தபோது நபி ஸல் அவர்கள் கனவில் சுட்டிக்காட்டிய அதே இருவர்கள் தான்.

நீங்கள் எங்கிருந்து வந்துள்ளீர்கள்?அரசர் கேட்டார்.

நாங்கள் மேற்குலக நாடுகளிலிருந்து ஹஜ்ஜுக்கு வந்தோம்,பின்னர் மதீனாவந்த நாங்கள் இவ்வாண்டு முழுவதும் நாயகத்தின் அருகில் தங்கிவிடலாம் என்று முடிவு செய்து தங்குகிறோம்.என்றனர்.

இவர்கள் இருவரின் வீடு எங்கே இருக்கிறது?என சுல்தான் அவர்கள் கேட்க மக்கள் அதைக்காட்டினர்,வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபோது-உள்ளே நிறைய பொருட்கள்,இரண்டு குர்ஆன்,நிறையநூட்கள் இருந்தன.

அங்கே ஒரு இடத்தில் பாய் விரிக்கப்பட்டிருந்தது,அதற்கு கீழே ஒரு பலகை போடப்பட்டிருந்தது.அந்த இடத்தில் சுல்தான் அவர்களுக்கு சந்தேகம் வரவே அதை எடுத்துப்பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
   
காரணம், பலகைக்கு கீழே நபி ஸல் அவர்களின் அறையின் பக்கமாக
ஒரு பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.
அதைக்கண்ட மக்களும் கடும் அதிர்ச்சியுற்றனர்.பின்னர் அவ்விருவரையும் கொண்டு வந்து கடுமையாக விசாரிக்கப்பட்டபோது-

தாங்கள் கிருஸ்துவர்கள் என்றும், மேற்கத்திய ஹாஜிகளுடன் தங்களை கிருஸ்துவர்கள் அதிகமான பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர் எனவும், முஹம்மதின் உடலை திருடி அங்கு கொண்டு செல்லவேண்டும் என தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் கூறினர்.

அதை செவியுற்ற சுல்தான் நூருத்தீன் அவர்கள் கடுமையாக அழுதார்கள்.

பின்னர் அவ்விருவரின் தலையை நாயகத்தின் அறைக்கு அருகே துண்டிக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

அவ்வாரே நிறைவேற்றப்பட்டது.

      பின்பு சுல்தானின் உத்தரவுக்கிணங்க-நபி ஸல் அவர்களின் புனித ரவ்லாவை சுற்றி பள்ளமாக தோண்டி சுற்றிலும் ஈயத்தை காய்ச்சி ஊற்றி ஒரு பாதுகாப்புச்சுவர் அமைத்தனர்.

அல்லாஹுத்தஆலா சுல்தான் நூருத்தீன் ரஹ் அவர்களின் மண்ணரை
யை வெளிச்சமாக்கிவைப்பானாக,

நபி ஸல் அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்திலும் அவர்களை எதிர்த்த எதிரிகள் நாயகத்தை தவறான எண்ணத்துடன் நெருங்கிவிடாமல் அல்லாஹ் பாதுகாத்தான்.

وَاللَّـهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ

அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்   என்று அல்லாஹ் நபிக்கு வாக்களித்துள்ளான். (அல் குர்ஆன் 5:67)



كما روى ابن عباس رضي الله عنهما قال: "لما نزلت تبت يدا أبي لهب جاءت امرأة أبي لهب إلى النبي صلى الله عليه وسلم ومعه أبو بكر، فلما رآها أبو بكر قال: يا رسول الله، إنها امرأة بذيئة وأخاف أن تؤذيك فلو قمت، قال: إنها لن تراني، فجاءت فقالت: يا أبا بكر، إن صاحبك هجاني، قال: لا وما يقول الشعر قالت: أنت عندي مصدق، وانصرفت، فقلت: يا رسول الله، لم ترك؟ قال: لا، لم يزل ملك يسترني عنها بجناحه" رواه أبو يعلى وصححه ابن حبان

தன்னைப் பற்றியும் தனது கணவனைப் பற்றியும் குர்ஆனின் வசனம் இறங்கியதை அறிந்த அபூலஹபின் மனைவி  நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது நபி (ஸல்) அவர்களும் அபூபக்ரும் (ரழி) கஅபத்துல்லாஹ்விற்கு அருகில் உட்கார்ந்திருந்தார்கள். அவளைப் பார்த்த அபூபக்கர் ரலி அவர்கள்-அல்லாஹ்வின் தூதரே!தீயவள் வருகிறாள்,அவள் தங்களை வேதனை செய்துவிடுவாளோ என நான் அஞ்சுகிறேன்,எனவே நீங்கள் எழுந்து சென்றுவிடுங்கள் என்றார்.

அப்போது நபி ஸல் அவர்கள் –அவள் தன்னை பார்க்கமாட்டாள் என கூறினார்கள்.

அபூபக்ரைப் பார்க்க முடிந்த அவளால் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க முடியவில்லை.

அவள் அபூபக்ரிடம் வந்து அபூபக்ரே! உங்கள் தோழர் என்னை கவிதையில் திட்டுகிறார்
என்றாள். அதற்கு அபூபக்ர் (ரழி) இந்த வீட்டின் இறைவனின் மீது சத்தியமாக! அவருக்கு கவிதை பாடத் தெரியாதுஎன்று கூறினார்கள். ஆம்!
 நீங்கள் சரியாகத்தான் கூறினீர்கள்என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பின்னர் அபூபக்கர் ரலி அவர்கள் பெருமானாரிடம்-அல்லாஹ்வின் தூதர் அவர்களே!அவள் தங்களை பார்க்கவில்லையா?
என ஆச்சரியமாக கேட்க ,ஆம்! ஒரு வானவர் தன் இறக்கையால் என்னை மறைத்து  விட்டார் என்று பதில் கூறினார்கள்.



كان رأس الكفر أبو جهل أكثر الناس عداوة للنبي عليه الصلاة والسلام، وحاول قتله غير مرة، فحال الله تعالى بينه وبين نيته الخبيثة، وذات مرة قال أبو جَهْلٍ: "هل يُعَفِّرُ مُحَمَّدٌ وَجْهَهُ بين أَظْهُرِكُمْ؟ فَقِيلَ: نعم، فقال: وَاللَّاتِ وَالْعُزَّى لَئِنْ رَأَيْتُهُ يَفْعَلُ ذلك لَأَطَأَنَّ على رَقَبَتِهِ أو لَأُعَفِّرَنَّ وَجْهَهُ في التُّرَابِ قال فَأَتَى رَسُولَ الله صلى الله عليه وسلم وهو يُصَلِّي زَعَمَ لِيَطَأَ على رَقَبَتِهِ، قال: فما فَجِئَهُمْ منه إلا وهو يَنْكُصُ على عَقِبَيْهِ وَيَتَّقِي بِيَدَيْهِ، فَقِيلَ له: مالك؟ فقال: إِنَّ بَيْنِي وَبَيْنَهُ لَخَنْدَقًا من نَارٍ وَهَوْلًا وَأَجْنِحَةً، فقال رسول الله صلى الله عليه وسلم: "لو دَنَا مِنِّي لَاخْتَطَفَتْهُ الْمَلَائِكَةُ عُضْوًا عُضْوًا" رواه مسلم من حديث أبي هريرة رضي الله عنه.

ஒரு சமயத்தில் மடமையின் தந்தை அபூ ஜஹ்ல் கஃபாவினுள் நுழைந்தான் அங்கே கூடியிருந்த மக்களிடம் அபூ ஜஹ்ல் இவ்வாறு கேட்டான்

உங்கள் முன்னால் வைத்து முஹம்மத் அவருடைய முகத்தை இங்கே.இந்த மண்ணில் வைக்கிறாரா?''அந்த மக்கள் '' ஆம்'' என்று சொன்னார்கள்

அபூஜஹ்ல் கடுப்பாகி இவ்வாறு சொன்னான் ''லாத்தும் உஸ்ஸாவும் மட்டும்தான் உண்மையான கடவுள்கள் முஹம்மத் அப்படிச் செய்வதை நான் கண்டால் அவருடைய பிடரியில் மிதிப்பேன் அவருடைய முகத்தில் மண்ணைப் பூசுவேண்.

பெருமானார் ஸல் அவர்கள் கஃபாவில் தொழுதுகொண்டிருக்கும்போது அவர்களை தாக்கும் எண்ணத்துடன் நெருங்கிவந்தான்.

மிகவேகமாக வந்தவன் யாரும் எதிர்பாராத விதத்தில் திடுக்கிட்டவனாக தன் கையா
ல் எதையோ தடுத்தவனாக
 பின்னோக்கி ஓடினான்.

உமக்கு என்ன நேர்ந்தது?என மக்கள் கேட்டபோது-
எனக்கும் முஹம்மதுக்கும் இடையில் ஒரு பெரிய தீக் குண்டம் இருப்பதை நான் காண்கிறேன்.திடுக்கமும் நிறைய இறக்கைகளும் இருக்கக் காண்கிறேன் என்றான்.

அப்போது நபி ஸல் அவர்கள்-அவன் என்னை நெருங்கியிருந்தால் வானவர்கள் அவனை பிடித்து கொன்றிருப்பார்கள் என கூறினார்கள்.

ஏகத்துவத்தை எடுத்துச்சொன்னக்காலத்தில் ஏந்தல் நபிக்கு யூதர்கள்,கிருஸ்துவர்கள்,நயவஞ்சகர்கள்,இறைமறுப்பாளர்கள் என்று எத்தனையோ எதிரிகள் இருந்தனர்.பல்வேறு சூழ்ச்சிகளை செய்தனர்.

   அவையனைத்து சோதனைகளிலிருந்தும் அல்லாஹ் அவர்களையும் அவர்களின் புகழையும் பாதுகாத்தான்,இன்றும் பாதுகாக்கிறான்.

எந்த ஐரோப்பிய உலகிலிருந்து நாயகத்தப்பற்றிய விமர்சனங்கள் வருகிறதோ அதே பூமியில் அவரின் புகழும் பாதுகாக்கப்படுகிறது.

எதிரிகளின் களத்தில் தனக்கான சாதகத்தை உருவாக்கிக்கொள்வது அண்ணலாரின் தனிச்சிறப்பாகும்.

يقول مايكل هارت في كتابه الخالدون المائة: "لقد اخترت محمدًا  في أوّل هذه القائمة ـ بعد أن ذكر مائة رجل ـ لأنه هو الإنسان الوحيد في التاريخ الذي نجح نجاحًا مطلقًا على المستوى الديني والدنيوي
، دعا إلى الإسلام وأصبح قائدًا سياسيًا وعسكريًا ودينيًا

உலகில் நூறு தலைவகளை பொறுக்கியெடுத்து அதில் முதல் இடத்தை கண்மணி முஹம்மத் ஸல் அவர்களுக்கு வழங்கிய மைக்கேல் ஹார்ட் நாயகம் குறித்து இப்படிச்சொன்னார்.
முஹம்மத் வரலாற்றில் தனித்து விளங்குகிறார்,உலகம் சமயம் என அனைத்து துறைகளிலும் அவர் மகத்தான வெற்றிவாகை சூடினார்.
இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்த அவர்-அரசியல்,இராணுவம்,   சமயம் என அனைத்திற்கும் தன்னை வழிகாட்டியாக நிலைநிறுத்தினார்


". ويقول الأديب العالمي تُولُسْتْوِي: "يكفي محمدًا فخرًا أنه خلص أمة ذليلة دموية من مخالب شياطين العادات الذميمة، وفتح على وجوههم طريق الرقي والتقدم، وإن شريعة محمد ستسود العالم لانسجامها مع العقل والحكمة

உலகில் மிகச்சிறந்த எழுத்தாளரான டால்ஸ்டாய் பெருமானாரைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்.
அநாகரீகமான,மற்றும் ஷைத்தானிய சிந்தனைகளுக்கு ஆட்பட்டிருந்த அந்த மக்களை மகத்தான சமுதாயமாக மாற்றியதே அவரின் பெருமைக்கு போதுமானது.
அவரின் அறிவையும்,ஞான கருத்துக்களையும் பார்க்கும் போது அவரின் மார்க்கம் ஒருநாள் உலகத்திற்கு தலைமை ஏற்கும்.


ويقول الإنجليزي توماس كارليل الحائز على جائزة نوبل في كتابه الأبطال: "لقد أصبح من أكبر العار على أي فرد متحدث في هذا العصر أن يُصغي إلى ما يُقال من أن دينَ الإسلام كذب، وأن محمدا خداع مزور، وقد رأيناه طول حياته راسخَ المبدأ، صادق العزم، كريمًا برًا رؤوفًا، تقيًا فاضلاً حرًا، رجلاً شديد الجد مخلصًا

நோபல் பரிசு பெற்ற மிகச்சிறந்த சிந்தனையாளர் தாமஸ் கார்லைல் வள்ளல் நபியை பற்றி இப்படி வார்த்தையால் வடிக்கிறார்.

இஸ்லாம் பொய்யானது,முஹம்மத் ஒரு மோசடிக்காரர் என்று ஒரு பெரிய பொய் மக்களுக்கு பரப்படுகிறது,ஆனால் உண்மையில் முஹம்மத் நபியின் வாழ்க்கை உண்மை நிறைந்தது.இறக்க குணமும் பரிசுத்த தன்மையும் கண்ணியமும் நிறைந்தது.என்றார்.

பூமானே! எங்கள் உயிரில் கலந்த சீமானே!

மாற்றான் தோட்டத்திலும் உங்கள் மணம் கமழுகிறது.

என் வார்த்தையால் உம்மை புகழ நினைத்தேன்,அந்த அருகதை என் வார்த்தைக்கு இல்லை எனவே உம்மை புகழ்ந்து என் வார்த்தைக்கு புகழ் சேர்த்துக்கொண்டேன் என்றார் ஒரு கவிஞர்.

அத்தஹிய்யாத்தை தவிர வேறு எப்போதும் நீங்கள் لا (இல்லை) என்று சொன்னதில்லையாமே என்றார் ஒரு கவிஞர்.

உம்மை புகழ்ந்து எழுதி பேனாவின் மை தீர்ந்தது,பக்கங்கள் முடிந்தது,   என் ஆயுளும் கரைந்தது,ஆனால் உங்களின் புகழ் முற்றுப்பெறவில்லை என ஒரு கவிஞர் கூறினார்.

உங்களை என்னால் புகழத்தான் முடியும் என்று நினைத்தேன்.

மன்னித்துவிடுங்கள்.

புகழே!உம்மை புகழ்வதெப்படி? என்று நீங்களே சொல்லிக்கொடுங்கள்.