Wednesday, 30 January 2013

கருத்துச்சுதந்திரத்தின் அளவுகோல் என்ன?



கருத்துச்சுதந்திரம் என்ற சொல்லாடல் இன்று அதிகமாக மீடியாக்கள் வழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கு சொல்லப்படும் இலக்கணம் மிகவும் ஆபத்தானதும்,ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் தன்மை கொண்டதாகும்.

உங்களின் சுதந்திரத்தின் எல்லையில் மற்றவர்களின் சுதந்திரம் உள்ளது என்பதை ஞாபகத்தில் கொள்ளவேண்டும்.

முதலில் விமர்சனங்கள் என்பது வரைமுறைக்குட்பட்டது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.இல்லையெனில் யார் வேண்டுமானால் யாரைப்பற்றியும் எப்படியும் கருத்துச்சொல்ல்லாம் என்று தவறான கருத்தாக்கம் உருவாகி விடும்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இந்த கருத்துச்சுதந்திரத்திற்கு கொஞ்சம் கூடுதலான உரிமை தரப்பட்டுள்ளது என்பது உண்மையே.   ஆனால் அந்த சுதந்திரம் பொய்யை மக்களுக்கிடையே பரப்புவதற்கும்,இல்லாத ஒன்றை இட்டுக்கட்டுவதற்கும்,ஒரு தனிமனிதனை அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுமேயானால் அதை தடுப்பதும் கருத்துச்சுதந்திரத்தை பாதுகாப்பதாகவே அமையும்.

இங்கே நாம் கேட்பதெல்லாம் பொய்யான கருத்துக்கு எதற்கு சுதந்திரம்?

கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் காவிச்சிந்தனையை பரப்புவதை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை அல்லது பிரச்சாரத்தை அப்பட்டமாக படம்பிடித்து காட்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இப்படம் அமெரிக்காவின் பண உதவியுடன் கருத்துச்சுதந்திரம் எனும் முகமுடியுடன் வெளிவந்திருக்கிறது.

ஒரு தனிமனிதனின் கற்பனைக்கு,பொய்யாக புணையப்பட்டதிற்கு உருவம் கொடுத்து,அதை மீடியாக்களின் துணையுடன் மக்கள் மன்றத்தில் வைக்கும்போது-180 கோடி மக்கள் தொகையை கொண்ட ஒரு சமூகத்தின் உணர்வுகள் காயப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ளாமல், இதனால் சட்டஒழுங்கு சீர்குழைந்துவிடும் என்ற அரசின் கருத்தையும் பொருட்படுத்தாமல் 'கருத்துச்சுதந்திரம்; என்ற ஒற்றை வரியை மட்டும் முன்னிலைப்படுத்தி தீர்ப்பளித்திருப்பது மிகவும் வேதனைக்குறியது

கருத்துச்சுதந்திரத்தின் அளவுகோல் என்ன?

முல்லைப்பெரியாறு அணைபற்றி அண்மையில் எடுக்கப்பட்ட திரைப்படம் உண்மைக்கு புறம்பானது,இதை வெளியிட்டால் சட்டஒழுக்குக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்ட கருத்தை ஏற்று கோர்ட்டும் தீர்ப்பளித்தபோது இது கருத்துச்சுதந்திரத்தை பாதிக்கிறது என யாரும் வாய்திறக்கவில்லையே ஏன்?

அப்படியானால் இங்கே கருத்துச்சுதந்திரம் என்பது இஸ்லாத்திற்கும்,இஸ்லாமியர்களுக்கும் எதிராக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு ஜனநாயகத்தை பாதுகாக்கவேண்டிய நீதிமன்றம் அது கடமை தவறிவிட்டது.

இந்தியாவின் இறையாண்மையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நீதித்துறையும்,ஊடகமும் இங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது.

ஓரு நாட்டின்  நாகரிகம், அது தனது சிறுபான்மை மக்களை எப்படி நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது. சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளுக்கு அரணாக நிற்கவேண்டிய பொருப்பும் கடமையும் குறிப்பாக நீதித்துறைக்கு உண்டு.

அதைப்போல "இஸ்லாமிய பயங்கரவாதம்', "முஸ்லிம் பயங்கரவாதி' போன்ற அவச்சொற்கள் நம் நாட்டின்  முதன்மை ஊடகங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதால், இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் ஒரு தவறான கண்ணோட்டத்தை மக்களிடம் ஏற்படுத்தியதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.

இஸ்லாமிய நாட்டில் முஸ்லிமல்லாத சிறுபான்மைச் சமுதாயம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதற்கு இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும், அவர்களைத் தொடர்ந்து இஸ்லாமியப் பேரரசின் குடியரசுத் தலைவர்களாய் இருந்த கலீபாக்களும் மிகச்சிறந்த  முன் மாதிரிகளை தந்து சென்றுள்ளனர்.

ஒரு பெரும்பான்மை சமூகத்தின் கீழ் வசிக்கும் சிறுபான்மையர்களின் உரிமைகளும் உணர்வுகளும் எவ்வளவு பாதுகாக்கப்படவேண்டும் என்பதை எங்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.

قُلِ اللَّـهَ أَعْبُدُ مُخْلِصًا لَّهُ دِينِي

فَاعْبُدُوا مَا شِئْتُم مِّن دُونِهِ

இன்னும் கூறுவீராக "என் மார்க்கத்தில் அந்தரங்க சுத்தியாக அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன். ஆனால், நீங்கள் அவனையன்றி, நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள்." கூறுவீராக.(அல் குர்ஆன் 39:14,15)

தன் கொள்கையை அழுத்தமாக பதிவு செய்யும் அதே நேரத்தில் பிறமத வழிபாடுகளுக்கு பூரண சுதந்திரம் தரப்பட்டது என்பதை மிகவும் துல்லியமாக விளக்குகிறது.

அவ்வாறே என் மார்க்கக்காரியங்களை செயல்படுத்துவதில் எனக்கு இருக்கும் முழு சுதந்திர உரிமையை போலவே உங்களுக்கும் உண்டு என இன்னொரு வசனம் கூறுகிறது.

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."   .(அல் குர்ஆன் 109:6)

இங்கே கவனத்தில் கொள்ளப்படவேண்டிய விஷயம் என்னவெனில், தன் கொள்கையை,அல்லது மார்க்கத்தை எடுத்துச்சொல்லும் முழு சுதந்திரம் உண்டு என்று கூறும் அல்குர்ஆன்- அது பிறமத மக்களின் உணர்வுகளை காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் கண்டிப்புடன் கூறுகிறது.


 وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّـهِ فَيَسُبُّوا اللَّـهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ
அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்.(அல் குர்ஆன் 6:108)

நபி ஸல் அவர்கள் ஆட்சி செய்த அன்றைய மதீனாவில் யூதர்களும் கிருஸ்துவர்களும் சிறுபான்மை சமுதாயமே.
இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த அந்த சிறுபான்மை சமுதாயம் எப்படி நடத்தப்பட்டார்கள்?

ما رواه البخاري عن جابر بن عبد الله: أن جنازة مرت على النبي - صلى الله عليه 

وسلم - فقام لها واقفًا، فقيل له: يا رسول الله، إنها جنازة يهودي! فقال: (أليست 

نفسًا)؟!. بلى، ولكل نفس في الإسلام حرمة ومكان

நபி ஸல் அவர்களை கடந்து சென்ற ஒரு யூத ஜனாஸாவுக்காக பெருமானார் எழுந்து நின்றார்கள்.

தோழர்கள் காரணம் கேட்டபோது-ஆம்!அதுவும் ஒரு உயிரில்லையா? என்றார்கள்.

மனித உரிமையும்,மரியாதையும் மதிக்கப்பட்ட காலம்.
ஒருமனிதனின் சடலத்தை கூட அவமரியாதை செய்யக்கூடாது எனும் உயர்ந்த தத்துவத்தை இவ்வுலகிற்கு சொன்னார்கள்.

ذكر ابن إسحق في السيرة: أن وفد نجران ـ وهم من النصارى ـ لما قدموا على الرسول 

- صلى الله عليه وسلم - بالمدينة، دخلوا عليه مسجده بعد العصر، فكانت 

صلاتهم، فقاموا يصلون في مسجده، فأراد الناس منعهم، فقال رسول الله - صلى 

الله عليه وسلم -: "دعوهم" فاستقبلوا المشرق فصلوا صلاتهم.

நஜ்ரான் தேசத்து கிருஸ்துவக்கூட்டம் பெருமானாரை சந்தித்து விவாதம் செய்ய மதீனா வந்தபோது அது அஸர் தொழுகையின் நேரம் என்பதால் மஸ்ஜித் நபவியில் தங்களின் வணக்கத்தை நிறை வேற்ற பெருமானார் ஸல் அவர்களிடம் அனுமதி கேட்டனர்.

அவர்களை தடுக்க முனைந்த தம் தோழர்களை தடுத்துவிட்டு-அவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் தங்களின் வணக்கத்தை நிறைவேற்றட்டும் என்றார்கள்.

கிழக்கு திக்கை முன்னோக்கி அவர்கள் தங்களின் மதவழிபாட்டை செய்ததாக இப்னு இஸ்ஹாக் தங்களின் ஸீரத் நூலில் குறிப்பிடுகிறார்.

இதுவே இஸ்லாம் வழங்கிய மத சுதந்திரம்!

أن أبا هريرة رضي الله عنه قال استب رجل من المسلمين ورجل من اليهود فقال 

المسلم والذي اصطفى محمدا صلى الله عليه وسلم على العالمين في قسم يقسم به 

فقال اليهودي والذي اصطفى موسى على العالمين فرفع المسلم عند ذلك يده فلطم

 اليهودي فذهب اليهودي إلى النبي صلى الله عليه وسلم فأخبره الذي كان من أمره

 وأمر المسلم فقال لا تخيروني على موسى فإن الناس يصعقون فأكون أول من

 يفيق فإذا موسى باطش بجانب العرش فلا أدري أكان فيمن صعق فأفاق قبلي أو 

كان ممن استثنى الله

فتح الباري شرح صحيح البخاري

நபி ஸல் அவர்களின் காலத்தில் ஒரு இஸ்லாமியருக்கும் யூதருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதலில் ஒருவரையொருவர் திட்டிக்கொள் கின்றனர்.அப்போது அந்த முஸ்லிம்,உலக மக்களில் முஹம்மத் ஸல் அவர்களே சிறந்தவர்கள் என்று கூறினார்.உடனே அந்த யூதரோ,மூஸா அலை அவர்களே சிறந்தவர்கள் என்று கூற கோபம் கொண்ட அந்த முஸ்லிம் அவரை கன்னத்தில் அறைந்துவிடுகிறார்.

இந்த வழக்கை அந்த யூதர் அருமை நாயகம் ஸல் அவர்களின் சபைக்கு கொண்டு செல்ல விஷயத்தை கேட்டு அறிந்துகொண்ட நாயகம் ஸல் அவர்கள்-அந்த முஸ்லிமை கண்டித்ததுடன், தன்னை மூஸாவை விட சிறந்தவர் என கூற வேண்டாம் எனவும்,நாளை மறுமையில் மக்கள் எழுப்படும்போது நான் முதலாவது எழுப்பப்படுவேன்,அப்போது மூஸா அலை அவர்கள் அர்ஷின் ஓரத்தில் நிற்பார் என்றும் கூறினார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நீதிபதிக்கும் சரியான பாடத்தை கற்பிக்கிறது.

உம் தலைவரை உயர்வாக பேச உமக்கு உரிமை இருப்பது போலவே அவரின் மத தலைவரை உயர்வாக பேச அவருக்கும் உரிமை உண்டு என நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

சிறுபான்மையினரான அந்த யூதருக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தை சார்ந்த முஸ்லிமை கண்டித்ததுடன்,அவர் மதிக்கிற அவரின் மத தலைவரின் மரியாதையை எடுத்துச்சொல்லி அவரை மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள்.

தன் மத தலைவர் இழிவுபடுத்தப்பட்டுவிட்டார் என நியாயம் தேடி நீதியின் படியேறிய ஒரு சிறுபான்மை சமூகத்தின் குரல் அங்கீகரிக்கப்பட்டு தீர்வும் காணப்பட்டது.

இதுவே உண்மையான கருத்துச்சுதந்திரமாகும்.

இந்தியாவப்போன்ற நாடுகளில் இஸ்லாமியருக்கு எதிரான எந்த கருத்தும் கருத்துச்சுதந்திரத்தின் பின்னனியில் தான் பார்க்கப்படுகிறது.

ஒரு குடிமகன் தன் உரிமையை பெற்றுக்கொள்ள இறுதி நம்பிக்கையுடன் நீதிமன்ற படியேறுகிறான்.

இது போன்ற நிலைபாடுகள் தொடருமேயானால் நீதிமன்றங்களின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.


சர்ச்சைக்குறிய படம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தை தீவிரவாதிகளாக சித்தரித்து இழிவுபடுத்தியுள்ளனர்,எனவே தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம்களின் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதத்திற்கு எந்த பதிலையும் சொல்லாத நீதிபதி,அரசு தரப்பு வழக்கறிஞர் சட்ட ஒழுங்கை காரணம் காட்டியபோது-முதலில் வெளியிடலாம்,பின்பு பிரச்சனை ஏற்பட்டால் பின்பு அது பற்றி பேசலாம் என பஞ்சாயத்து பேசுகிறது நீதிமன்றம்.

வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதுபற்றி கருத்துச்சொல்வதில் இத்துனை கெடுபிடி காட்டும் உங்களின் சட்டத்திற்கு அப்போது எங்கே போனது உங்களின் கருத்துச்சுதந்திரம்?

அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாத உங்களின் சட்டங்களுக்கு ஆண்மா இல்லை என்றே சொல்லவேண்டும்.

பிறரை புண்படுத்தி கருத்துச்சொல்லும் சுதந்திரம் உனக்கில்லை என்று உலகிற்கு உரக்கச்சொன்ன எங்கள் உத்தமநபியின் வார்த்தையை கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்.

தன் தோழர்கள் பற்றிய தவறான கருத்தை தன் சபையில் வைக்கக்கூடாது  என்று தம் தோழர்களுக்கு கட்டளையிட்டிருந்த எங்களின் பெருமானாரின் வாழ்வை கொஞ்சம் படித்துவிட்டு நீதிமன்ற இருக்கையில் அமருங்கள்.

சிறுபான்மையர் விஷயத்தில் நபி ஸல் அவர்கள் எந்த நிலைபாட்டை கடைபிடித்தார்களோ அதேநிலைபாட்டையே அவர்களின் தோழர்களும் கடைபிடித்து வந்தனர்.

அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதிலும்,உணர்வுகளை மதிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தினர்.
இஸ்லாமியர்களின் கை ஓங்கியபொழுதெல்லாம் அல்லாஹ்வுக்கு பயந்து அவர்களை அரவணைத்தார்கள்.

ஜெரூஸலத்தை முஸ்லிம்கள் கைப்பற்றிய போது சிறுபான்மையினரான கிருஸ்துவர்களுக்கு இஸ்லாமிய இரண்டாம் கலிபா உமர் ரலி அவர்கள் செய்து கொடுத்த ஒப்பந்தம் இது.

هذا ما أعطى عبد الله عمر أمير المؤمنين أهل إيلياء من الأمان ، أعطاهم أماناً لأنفسهم وأموالهم ، ولكنائسهم وصلبانهم وسقيمها وبريئها وسائر ملتها، أن لا تُسكن كنائسهم، ولا تُهدم، ولا يُنتقص منها ولا من حيزها ، ولا من صليبهم، ولا من شيء من أموالهم .
ولا يكرهون على دينهم، ولا يُضار أحد منهم ..

تاريخ الطبري (4/449)
இது அல்லாஹ்வின் அடிமையான முஃமின்களின் தலைவரான உமர் எழுதிக்கொடுக்கும் நம்பிக்கை பத்திரம்,
இங்குள்ள சிறுபான்மை மக்களின் உயிரும் பொருளும்,அவர்களின் ஆலயங்களும்,நோயாளிகளும்,ஆரோக்கியமானவர்களும் பாதுகாக்கப்படு  வர்.அவர்களின் மார்க்கத்தை பின்பற்றுவதில் அவர்கள் பூரண சுதந்திரம் தரப்பட்டவர்கள்.ய்ராலும் அவர்கள் துன்புறுத்தப்படமாட்டர்.  என எழுதி 

கொடுத்தார்கள்.

وقد خاف عمر من انتقاض عهده من بعده فلم يصل في كنيسة القمامة[17]حين 

أتاها وجلس في صحنها، فلما حان وقت الصلاة قال للبترك: أريد الصلاة. فقال له 

البترك: صل موضعك. فامتنع عمر رضي الله عنه وصلى على الدرجة التي على باب

 الكنيسة منفرداً، فلما قضى صلاته قال للبترك: (لو صليتُ داخل الكنيسة أخذها 

المسلمون بعدي، وقالوا: هنا صلى عمر).


تاريخ ابن خلدون (1/435).

தொழுகையின் நேரம் வந்தபோது ஆலயத்தின் உள்ளே ஒரு இடத்தில் தொழச்சொல்லி கிருஸ்துவர்கள் நிர்பந்தம் செய்தனர்,ஆனாலும் உமர் ரலி அவர்கள் ஆலயத்தின் உள்ளே தொழாமல் படிக்கட்டில் தொழுதார்கள்.காரணம் கேட்டபோது-நான் உள்ளே தொழுதிருந்தால் எனக்கு பின்னால் வரும் சமுதாயம் உமர் தொழுத இடம் என்று கூறி அதை கைப்பற்றிக்கொள்ளக்கூடாது.என்றார்கள்.

أخذ الوليد بن عبد الملك كنيسة "يوحنا" من النصارى، وأدخلها في المسجد . فلما 

اسْتُخْلِفَ عمر بن عبد العزيز شكا النصارى إليه ما فعل الوليد بهم في كنيستهم، 

فكتب إلى عامله برد ما زاده في المسجد عليهم، لولا أنهم تراضوا مع الوالي على 

أساس أن يُعوَّضوا بما يرضيهم . (فتوح البلدان ص 171 172 . وقصة هذه 

الكنيسة كما يحكيها البلاذري أن خلفاء بني أمية منذ عهد معاوية، ثم عبد الملك، 

حاولوا أن يسترضوا النصارى ليزيدوا مساحتها في المسجد الأموي، واسترضوهم 

عنها، فرفضوا، وفي أيام الوليد، جمعهم وبذل لهم مالاً عظيمًا على أن يعطوه إياها 

فأبوا، فقال: لئن لم تفعلوا لأهدمنها فقال بعضهم: يا أمير المؤمنين، إن مَن هدم 

كنيسة جُنَّ وأصابته عاهة! فأغضبه قولهم، ودعا بمعول وجعل يهدم بعض حيطانها 

بيده، ثم جمع الفعلة والنقاضين، فهدموها . وأدخلها في المسجد، فلما اسْتُخْلِف عمر 

بن عبد العزيز شكا إليه النصارى ما فعل بهم الوليد في كنيستهم . فكتب إلى عامله

 يأمره برد ما زاده في المسجد عليهم! (أي بهدمه وإعادته كنيسة) فكره أهل دمشق

 ذلك وقالوا: نهدم مسجدنا بعد أن أذَّنَّا فيه وصلينا دبر نبيه 

பனீ உமைய்யாக்களின் ஆட்சியாளர் வலீதின் ஆட்சிக்காலத்தில் கிருஸ்துவர்களின் ஆலயம் ஒன்று பள்ளிவாசலை விரிவுபடுத்தும்  போது அதுவும் சேர்த்து கட்டப்பட்டு விட்டது.

பின்னர் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹ் அவர்களின் ஆட்சியில் கிருஸ்துவர்கள் முறையிட்டனர்.

உடனே கலீபா அவர்கள் அந்த இடத்தை இடித்து அவர்களிடம் ஒப்படைக்கச்சொல்லி உத்தரவிட்டார்கள்.

நாங்கள் பாங்கு சொல்லி தொழுத இடத்தை எப்படி இடிப்பது என்று அன்றைய திமிஷ்க் மக்கள் வெறுத்தபோதும் சிறுபான்மையான கிருஸ்துவ சமுதாயத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன என்பதே வரலாறு.

இன்றைக்கு சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்த பிரச்சனையை முஸ்லிம்கள் அறிவுப்பூர்வமாக அனுகவேண்டுமே தவிர உணர்ச்சிப்  பூர்வமாக அனுகக்கூடாது,காரணம் அது சரியான தீர்வை நோக்கி இழுத்துச்செல்லாது.

கடந்த காலங்களில் இஸ்லாமிய எதிரிகள் முஸ்லிம்களை உணர்ச்சிவசப்படுத்தி நிறைய காரியங்களை சாதித்துக்கொண்டனர்.

இப்போது முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?
முதலாவது: 

இந்த பிரச்சனையை உற்றுநோக்கிக்கவனிக்கிறபோது இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பலகீனப்படுத்த ஒரு பெரிய கூட்டமே தயாராக இருக்கிறது என்பது வெளிச்சமாகியிருக்கிறது.

இதுவரை தன்னை நடுநிலையான நாளிதழாக காட்டிக்கொண்ட தினமணியின் உண்மை முகம் வெழுத்திருக்கிறது,தமிழக ஆட்சியா? தாலிபான் ஆட்சியா? என்ற கட்டுரையை வெளியிட்டு தன் சுயரூபத்தை காட்டியது.

அதைப்போல அப்ஸல் குரு போன்றவர்களை மக்கள் பார்த்தபின்னும் உங்களை போன்றவர்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் 
என ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் தலைவரை கொச்சைப்படுத்தி புதிய தலைமுறை தொலைக்காட்சி தன் பாஸிஸ வெறியை காட்டியது.

எனவே முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்கும் காலம்.

இரண்டாவது:  இஸ்லாம் என்றைக்கும் தோற்காது,முஸ்லிம்கள் சில கட்டங்களில் பின்னடைவை சந்திக்கலாம்.அது நிறந்தரமில்லை

இந்த நேரத்தில் ஹிஜ்ரி 5 ல் நடைபெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கையை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இஸ்லாத்தின் குரல் ஒட்டுமொத்தமாக மறுக்கப்பட்டு திருப்பியனுப்ப பட்ட போது உலகமே அதை இஸ்லாத்தின் தோல்வி என்றது.   ஆனால் அல்லாஹ் அதை மகத்தான வெற்றி என்று புகழ்கிறான்.

அதுவே ஹிஜ்ரி 8ல் மக்காவின் வெற்றியை பெற்றுத்தந்தது.

மூன்றாவது:இஸ்லாமியர்களின் ஒற்றுமையை மக்கள் பார்க்கும் ஒரு சந்தர்ப்பமாக இதை நாம் ஏற்பபடுத்தினோம் என்று பெருமைப்படலாம். இது ஆரம்பமே, முடிவல்ல.

முஃமின்க்களே!நீங்கள் உயர்ந்தவர்கள்-காரணம் நீங்கள் முஃமின்கள்.  என்ற அல்லாஹ்வின் வார்த்தையை ஆறுதலாக சொல்லி,இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் ஒருநாள் வெல்லும்.எனும் முழக்கத்துடன் நிறவு செய்கிறேன்.











6 comments:

  1. அழகியசெய்திகள்

    ReplyDelete
  2. Alahamdhu LILLAH NALLA SINADHANAI

    ReplyDelete
  3. payanuula kurippu. masha allah

    ReplyDelete
  4. assalamu alaikkum, jazakallah miga arumayana saithigal jazakallah

    ReplyDelete
  5. assalamu alaikkum, jazakallah miga arumayana saithigal jazakallah

    ReplyDelete

  6. masha allah,

    kalathirku yetra thalaippukalai kalam thavaramal thagavalaga thanthu yengalai pondra ulamakalin kavalaikalai pokki jumma uraiyaiyum suvaiyaga amaiya thunai puriyum ungalin uthavigaluku allah panmadangakha khairaiyum bharkathaiyum irrulagathilum thanarul purivanaga........!

    jazakallah kairan kasiran fitharain.....!

    ReplyDelete