Tuesday 5 February 2013

சுய மரியாதை மார்க்கம் இஸ்லாம்!



முஸ்லிம்களை தவறாக சித்தரித்து  எடுக்கப்பட்ட ஒரு திரைப்படத்திற்கெதிராக முஸ்லிம்கள் ஓரணியில் நின்று எதிர்ப்புக்குரல் எழுப்பியபோது தமிழக அரசால் உடனடியாக அதை கவனிக்கப்பட்டு தற்காலிகமாக தடைசெய்யப்பட்டது.

முஸ்லிம் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி,முஸ்லிம்களை புண்படுத்தும் காட்சிகளை நீக்குவதின் மூலம் சுமூக தீர்வு காணப்படுமேயானால் அப்படம் வெளியாக அரசு ஒத்துழைக்கும் என்று தமிழக அரசு உறுதியாகசொல்லிவிட்டது.

அதன் விளைவாக சர்ச்சைக்குறிய காட்சிகள் நீக்கப்பட்டதின் மூலம் இஸ்லாமியர்களின் கோரிக்கைகள் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

இந்தப்பிரச்சனையில் முஸ்லிம்களுக்கெதிராக ஒரு பெரும் கூட்டமே களம் இறங்கியபோதும் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு பலம் அதிகம் என்பதை கண்கூடாக கண்டு வருகிறோம்.

இந்த நிகழ்வின் மூலம் முஸ்லிம்கள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்ளவேண்டும்.

இஸ்லாமிய சமுதாயம் தங்களின் சுயமரியாதையையும்,கண்ணியத்தையும் நிலைநிறுத்திக்கொள்ளும் காலம் இது.

முஸ்லிம்கள் தங்களின் சுயமரியாதை உரிமைகளை கேட்கிறபோதும்,அவமரியாதைக்கெதிராக குரல் எழுப்புகிற
போதும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் பதட்டமான சூழலுக்கும் ஆட்படுவது வழமையே.

அதை தைரியத்துடனும்,துணிவுடனும்,மனஉறுதியுடனும் எதிர்கொள்ள வேண்டுமே தவிர,எக்காரணம் கொண்டும் பயந்து பின்வாங்கக்கூடாது. ஏனெனில் இஸ்லாம் சுயமரியாதை மார்க்கம்!

உலகில் மரியாதையும்,கண்ணியமும் அல்லாஹ்வுக்கு சொந்தமானது. அவனது இறைத்தூதருக்குச்சொந்தமானது,அல்லாஹ்வையும்,அவனது இறைத்தூரையும் சார்ந்துவாழ்கிற முஸ்லிம்களுக்குச்சொந்தமானது.இந்த உண்மையை நயவஞ்சகர்களும்,இறைமறுப்பாளர்களும் புரிந்து கொள்ளாவிட்டாலும் முஸ்லிம்கள் புரிந்து வாழவேண்டும்.என அல்குர்ஆன் வலியுறுத்துகிறது.

{وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ} [المنافقون: 8].

ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது,


جاء رجل إلى رسول الله، فقال: يا رسول الله، أرأيت إن جاء رجل يريد أخذ مالي؟ قال: "فَلاَ تُعْطِهِ مَالَكَ". قال: أرأيت إن قاتلني؟ قال: "قَاتِلْهُ". قال: أرأيت إن قتلني؟ قال: "فَأَنْتَ شَهِيدٌ". قال: أرأيت إن قتلته؟ قال: "هُوَ فِي النَّارِ
مسلم: كتاب الإيمان

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் வந்து-அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் என் பொருளை அபகரிக்க வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?என கேட்டார்.

உன் பொருளை அவன் கைப்பற்றிவிடாமல் நீ பாதுகாக்கவேண்டும் என்று பதில் கூறினார்கள்.

நான் அவனை தடுக்கிறபோது அவன் என்னிடம் சண்டையிட்டால் இப்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மீண்டும் கேட்கிறார்.

அதற்கு நபி ஸல் அவர்கள்-நீ அவனுடன் சண்டையிட்டேனும் உன் உரிமையை மீட்க வேண்டும் என்றார்கள்.

அப்படி அவனிடம் சண்டையிட்டு அவன் என்னை கொலை செய்துவிட்டால் இப்போது என் நிலை என்ன?என்று அவர்கேட்டபோது-நீ மார்க்கப்போராளி எனும் ஷஹீது அந்தஸ்தை பெறுவீர்.என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

சரி!நான் அவனை கொலை செய்து விட்டால் இப்போது என்ன சொல்கிறீர்கள்?என்று அவர் கேட்டதும்- அப்போதும் அவன் நரகவாதியே.என்று பதில் கூறினார்கள்.

இந்த செய்தியில் நபி ஸல் அவர்கள் தங்களின் தோழர்களுக்கு சுய மரியாதையையும்,தைரியத்

தையும் கற்றுக்கொடுக்கிறார்கள்

உன் உரிமையை மீட்க நீ போராடுவது அதுவும் மார்க்கப்போரே எனும் உண்மையை அழுத்தமா
 பதிவு செய்கிறது.

அதனால் தான் ஒரு அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன் உன் உரிமையை தைரியமாக கேட்பது ஜிஹாதில் மிகச்சிறந்தது என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

முஸ்லிம்கள் தங்களின் உயிர்,பொருள் பாதுகாப்பதில் எந்தளவு கடமை  ப்பட்டுள்ளனரோ அதைவிடவும் அதிகமாக தங்களின் சுய மரியாதை மற்றும் கண்ணியம் பாதுகாப்பதில் கடமைப்பட்டுள்ளனர்.காரணம் ஒரு முஸ்லிம் கண்ணியப்படுத்தப்படும் இடத்தில் இஸ்லாம் கண்ணியம் பெறுகிறது.அவ்வாறே,ஒரு முஸ்லிம் அவமரியாதை செய்யப்படும்  சபையில் இஸ்லாம் அவமதிக்கப்படுகிறது.

في غزوة أحد عصا الرماة أمر رسول الله صلى الله عليه وسلم، فانقلبت الدائرة على المسلمين، وصعد رسول الله صلى الله عليه وسلم فوق جبل أحد، وأشرف أبو سفيان فقال: أفي القوم محمد؟ فقال الرسول صلى الله عليه وسلم: «لا تجيبوه». فقال: أفي القوم ابن أبي قحافة؟ قال: «لا تجيبوه». فقال: أفي القوم ابن الخطاب؟ فقال: إن هؤلاء قتلوا، فلو كانوا أحياء لأجابوا.

فلم يملك عمر نفسه، فقال: كذبت يا عدو الله، أبقى الله عليك ما يخزيك. قال أبو سفيان: اُعْلُ هُبَل. فقال النبي صلى الله عليه وسلم: «أجيبوه». قالوا: ما نقول؟ قال: «قولوا الله أعلى وأجل». قال أبو سفيان: لنا العزى ولا عزى لكم. قال النبي صلى الله عليه وسلم: «أجيبوه». قالوا: ما نقول؟ قال: «قولوا الله مولانا ولا مولى لكم». قال أبو سفيان: يوم بيوم بدر، والحرب سجال، وتجدون مُثْلةً لم آمر بها ولم تسؤني(

صحيح البخاري

உஹது போர்க்களத்தில் ஒரு காட்சி:

நபி ஸல் அவர்களின் கட்டளைக்கு சஹாபிகளில் ஒரு சின்ன கூட்டம் மாறு செய்தபோது போரின் போங்கு முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பி  விட்டது.

நபி ஸல் அவர்களும் அவர்களின் தோழர்களும் உஹது மலைக்குமேல் ஏறி,ஒரு பாறைக்கு பின் மறைந்திருந்தார்கள்.

இப்போது எதிரிகளின் தலைவரான அபூஸுப்யான் அவர்கள்-
முஹம்மத் இருக்கிறாரா?என்று சப்தமிட்டார்.நபி ஸல் அவர்கள் பதில் சொல்ல வேண்டாம் என தம் தோழர்களுக்கு கூறினார்கள்.

அபூ குஹாபாவின் மகன் அபூபக்கர் இருக்கிறாரா?என அபூ ஸுப்யான் மீண்டும் குரல் கொடுத்தார்.

இப்போதும் பதில் சொல்ல வேண்டாம் என நபி ஸல் அவர்கள் தடுத்து விட்டார்கள்.

கத்தாபின் மகன் உமர் இருக்கிறாரா?என மூன்றாவது சப்தமிட்டார்.  இதற்கும் பதில் இல்லாத போது –இவர்கள் அனைவரும் மரணித்துவிட்  டார்கள்,இவர்கள் உயிருடன் இருந்தால் பதில் சொல்லி இருப்பார்கள் என அபூ ஸுப்யான் அவர்கள் இறுமாப்புடன் கத்தியதும்-

பொறுக்க முடியாத உமர் ரலி அவர்கள்,

அல்லாஹ்வின் விரோதியே!நீ பொய் சொல்கிறாய்.நாங்கள் மடிந்துபோ  கவில்லை.அல்லாஹ் உம்மை இழிவுபடுத்த எங்களை உயிருடன் தான் வைத்துள்ளான் என சப்தமிட்டார்கள்.

ஹுபல் எனும் தெய்வம் உயர்ந்துவிட்டது.என அபூ ஸுப்யான் சப்தமிட்டார்.அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள்-இப்போது அவருக்கு பதில் சொல்லுங்கள் என்று தம் தோழர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

எப்படி பதில் சொல்வது?என ஸஹாபாக்கள் கேட்டார்கள்.

அல்லாஹ்வே உயர்ந்தவன்,கண்ணியமானவன் என்று கூறுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

அவ்வாறு கூறியதும்-எங்களுக்கு உஸ்ஸா எனும் தெய்வம் இருக்கிறது உங்களுக்கு இல்லை என அபூ ஸுப்யான் சொன்னார்.

இதைக்கேட்ட நபி ஸல் அவர்கள் அவருக்கு பதில் சொல்லுங்கள் என மீண்டும் தம் தோழர்களுக்கு உத்தரவிட்டபோது-எப்படி பதில் சொல்வது  என ஸஹாபாக்கள் கேட்டனர்.

எங்களுக்கு அல்லாஹ் மவ்லாவாக இருக்கிறான்,உங்களுக்கு இல்லை என்று சொல்லுங்கள் என கூறினார்கள்.

அவ்வாறு சொன்னதும் அபூஸுப்யான்,

இது பத்ருக்கு பகரமாக பழி தீர்க்கும் நாள்,போர் என்பது இருபக்கமும் சாதகமான தன்மை கொண்டது,மேலும் இந்த போரில் எங்கள் தொண்டகள் உங்களின் தோழர்களை சித்திரவதை செய்தனர், அவ்வாறு செய்யச்சொல்லி நான் உத்தரவிடவில்லை.இதில் என்னை தவறாக எண்ணவேண்டாம் என கூறினார்.

இதன் மூலம் ஒரு செய்தியை அழுத்தமாக முஸ்லிம்கள் தங்களின் மனங்களில் பதிய வைக்கவேண்டும்.அது என்னவெனில்,
உஹது போரில் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கடியானநிலை ஏற்பட்டபோதும்-அல்லாஹ்வின் கண்ணியத்திற்கு அவமையாதை செய்யப்படுவதை முஸ்லிம்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ளகூடாது என தம் தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள்,

தம் உயிரை கொடுத்தேனும் அல்லாஹ்,ரஸூலின் கண்ணியத்தை காப்பது முஸ்லிம்களின் மீது கடமையாகும்.

மரணத்தை கண்டு அஞ்சுகிற கூட்டங்களுக்கிடையே மறுமைக்காக வாழும் கூட்டம் முஸ்லிம்கள்.

قال أبو بكر الصديق لخالد بن الوليد - رضي الله عنهما -: "احرِص على الموتِ، تُوهب لك الحياة"

மரணத்தை ஆசைப்படு.வாழ்க்கை உனக்கு அன்பளிப்பாக கிடைக்கும் என அபூபக்கர் ரலி அவர்கள் காலித் இப்னு வலீத் ரலி அவர்களுக்கு செய்த வீர உபதேசமாகும்.

சத்தியத்தை நிலைநிறுத்தும் யுத்தகளத்தில் மரணத்திற்கு முகம் கொடுக்க தயக்கம் காட்டாத ஒரு கூட்டம் உலகில் உண்டு என்றால் அது முஸ்லிம்கள் தான் என கடந்தகால வரலாறு சொல்லும் பாடம்.

பத்ர் களத்தில்:

ويقول علي بن أبي طالب - رضي الله عنه - وهو من أبطال الأمة وشُجعانها: "لقد رأيتُنا يوم بدر ونحن نلُوذ برسول الله - صلى الله عليه وسلم - وهو أقربُنا إلى العدو، وكان من أشد الناس يَومئذ بأسًا"؛ مسند أحمد، رقم (654).

பத்ர் போரில் நாங்கள் நபி ஸல் அவர்களை விட்டும் வெகுதூரத்தில் நின்றோம்,ஆனால் எங்கள் பெருமானோ எதிரிகளுக்கு மிகவும் சமீபமாக நின்றுகொண்டிருந்தார்கள்.அன்று மிகச்சிறந்த வீர்ராக எங்கள் நாயகத்தை பார்த்தோம் என்று ஹழ்ரத் அலி ரல் அவர்கள் கூறுகிறார்கள்.

ஹுனைன் களத்தில்:

قال البخاري: حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن أبى إسحاق سمع البراء بن عازب - وسأله رجل من قيس: أفررتم عن رسول الله صلى الله عليه وسلم يوم حنين ؟ - فقال: لكن رسول الله صلى الله عليه وسلم لم يفر، كانت هوازن رماة وإنا لما حملنا عليهم انكشفوا فأكببنا على الغنائم فاستقبلتنا بالسهام.
ولقد رأيت رسول الله صلى الله عليه وسلم على بغلته البيضاء وإن أبا سفيان آخذ بزمامها وهو يقول
: أنا النبي لا كذب * أنا ابن عبدالمطلب

ஹுனைன் போரில் எதிரிகளின் திடீர் தாக்குதல்களை சமாளிக்க முடியாத ஸஹாபிகள் ஆரம்பத்தில் கொஞ்சம் பின்வாங்கினார்கள்.

அந்த நிகழ்வை குறித்து ஒருவர் பர்ரா இப்னு ஆஸிப் ரலி அவர்களிடம்-  ஹுனைன் போரில் அல்லாஹ்வின் தூதரை விட்டுவிட்டு நீங்கள் ஓடிவிட்டீர்களா?என கேட்டதும்-
ஆம்!நாங்கள் ஓடினோம்,ஆனால் எங்கள் நாயகம் வீரத்துடன் களத்தில் நின்றார்கள்.

எதிரிகளை நாங்கள் தாக்கியபோது அவர்கள் ஓட ஆரம்பித்தனர்.அப்போ  து நாங்கள் ஙனீமத் பொருளை கைப்பற்றியபோது எதிரிகள் திடீரென மறு தாக்குதல் நட்த்தினர்.

அதில் சுதாரித்துக்கொள்ள முடியாமல் தினறி ஓட ஆரம்பித்தோம்.

அப்போது நபி ஸல் அவர்கள் தங்களின் வாகனத்தில் நின்றவர்களாக
நான் நபி.இதில் எந்த பொய்யும் இல்லை.நான் அப்துல்முத்தலிபின் மகன்.என வீர முழக்கமிட்டார்கள்.

உரிமைக்காக போராடும்போது எப்படிப்பட்ட சோதனைகள்,நெருக்கடிகள் வந்தபோதிலும் அதை எதிர்கொள்ளும் துணிவும்,தைரியமும் வேண்டும்.
எனவேதான், உங்களில் யாரும் தன்னை இழிவாக எண்ணவேண்டாம் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

ஒரு முஸ்லிம் தன்னுடைய சுயமரியாதையை யாருக்கு முன்னும் விட்டுக்கொடுத்து வாழக்கூடாது.

பணம்,ஆட்சி,அதிகாரம்,செல்வாக்கு என எதற்கு முன்னாலும் ஒரு முஸ்லிம் தலைநிமிர்ந்து நிற்கச்சொல்லி வலியுறுத்துகிறது இஸ்லாம்.

مَنْ جَلَسَ إِلَى غَنِيٍّ فَتَضَعْضَعَ لَهُ لِدُنْيَا تُصِيبُهُ، ذَهَبَ ثُلُثَا دِينِهِ، وَدَخَلَ النَّارَ
البيهقي: شعب الإيمان

ஒரு பணக்காரனுக்கு முன்னால் ஒருவர் -அவரின் பணத்திற்காக தன் சுமரியாதையை இழந்துவிட்டால் அவர் தன் தீனில் மூன்றில் இரண்டு பகுதியை இழந்துவிட்டார்.மேலும் அவர் நரகம் செல்வார் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

أخرج الحاكم في "المستدرك" (1/61 ـ 62)عن طارق بن شهاب قال:خرج عمر بن الخطاب إلى الشام، ومعنا أبو عبيدة بن الجراح، فأتوا على مخاضة وعمر على ناقة، فنزل عنها وخلع خفيه فوضعهما على عاتقه، وأخذ بزمام ناقته فخاض بها المخاضة، فقال أبو عبيدة: يا أمير المؤمنين، أأنت تفعل هذا؟! تخلع خفيك وتضعهما على عاتقيك، وتأخذ بزمام ناقتك وتخوض بها المخاضة؟! ما يسرني أن أهل البلد استشرفوك! فقال عمر: أوه لو يقل ذا غيرك يا أبا عبيدة جعلته نكالاً لأمة محمد !
إنا كنا أذل قوم فأعزنا الله بالإسلام، فمهما نطلب العز بغير ما أعزنا الله به أذلنا الله.

ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் சிரியாவுக்கு புறப்பட்டார்கள்.அவர்களுடன் அபூ உபைதா ரலி அவர்களும் சென்றார்கள்.செல்லும் வழியில் ஒரு நீர் தடாகத்தை கடந்து செல்லவேண்டியதிருந்தது.அப்போது ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் தங்களின் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கி,தங்களின் இரு காலுறையையும் கழட்டி தங்களின் தோழ்புஜத்தில் வைத்துக்  கொண்டு,ஒட்டகத்தின் கயிற்றை பிடித்துக்கொண்டு தண்ணீரில் இறங்கி னார்கள்.

இந்த காட்சியை பார்த்த அபூஉபைதா ரலி அவர்கள்-முஃமின்களின் தலைவரே!நீங்களா இவ்வாறு செய்கிறீர்கள்?நீங்கள் ஏன் ஒட்டகத்திலி ருந்து இறங்கினீர்?அது உங்களின் மரியாதைக்கு சரியில்லையே என்றார்.மேலும் நாட்டு மக்களெல்லாம் உங்களை காண ஆவலாக இருக்கின்றனர்.என்றார்கள்.

அதை செவியுற்ற ஜனாதிபதி உமர் ரலி அவர்கள்-கடும் கோபமுற்று உம்மை தவிர வேறுயாரும் இதை சொல்லியிருந்தால் கடுமையாக தண்டித்திருப்பேன்.

கண்ணியத்தை மக்களிடமா எதிர்ப்பார்ப்பது?

நாம் இழிவாக இருந்தோம், அல்லாஹ் இஸ்லாத்தைக்கொண்டு நம்மை கண்ணியப்படுத்திவிட்டான்.எனவே அல்லாஹ் கண்ணியம் செய்த இஸ்லாத்தை தவிர்த்து வேறு ஒரு கண்ணியத்தை தேடினால் அது இழிவையே தரும் என்றார்கள்.

இதுவே ஒரு உண்மை முஸ்லிமின் பண்பாகும்.சுயமரியாதையாகும்.    அடுத்தவர்களை திருப்திபடுத்துவதற்வாக இஸ்லாத்தை விட்டுக்கொடுக்க வேண்திய அவசியமில்லை.

ஈமானின் கண்ணியத்தையும்,இஸ்லாத்தின் மரியாதையையும் நம் மனதில் நிலைநிறுத்தி வாழும் காலமெல்லாம் இந்த உலகம் முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்கு மண்டியிடும்.


دخل ربعي بن عامر على رستم، وقد زيَّنوا مجلسه بالنمارق المذهَّبة والزَّرَابِيِّ الحرير، وأظهر اليواقيت واللآلئ الثمينة، والزينة العظيمة، وعليه تاجه، وغير ذلك من الأمتعة الثمينة، وقد جلس على سرير من ذهب.
ودخل ربعي بثياب صفيقة، وسيف، وترس، وفرس قصير
فقالوا له: ضع سلاحك.
فقال: إني لم آتكم، وإنما جئتكم حين دعوتموني، فإن تركتموني هكذا وإلا رجعت.
فقال رستم: ائذنوا له. فأقبل يتوكَّأ على رمحه فوق النمارق، فخرق عامتها، فقالوا له: ما جاء بكم؟ فقال: الله ابتعثنا لنخرج من شاء من عبادة العباد إلى عبادة الله، ، فمن قَبِلَ ذلك قبلنا منه ورجعنا عنه،
فقال رستم: قد سمعت مقالتكم، فهل لكم أن تؤخِّروا هذا الأمر حتى ننظر فيه وتنظروا؟ قال: نعم، كم أحبّ إليكم؟ يومًا أو يومين؟ قال: لا، بل حتى نكاتب أهل رأينا ورؤساء قومنا.
فقال: ما سَنَّ لنا رسول الله  أن نؤخِّرَ الأعداء عند اللقاء أكثر من ثلاث، فانظر في أمرك وأمرهم، واختر واحدة من ثلاث بعد الأجل. فقال: أسيدهم أنت؟ قال: لا، ولكن المسلمين كالجسد الواحد يجير أدناهم على أعلاهم.
فاجتمع رستم برؤساء قومه فقال: هل رأيتم قط أعزَّ وأرجح من كلام هذا الرجل؟].
ابن كثير: البداية والنهاية

பாரஸீக தலபதி ருஸ்துமின் அரசபைக்கு நபித்தோழர் ஹழ்ரத் ரிப்ஈ இப்னு ஆமிர் ரலி அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பாட்டார்கள்.
 
அரசபை தங்கத்தால்,பட்டால்,முத்து பவளங்களால் அழங்கரிக்கப்பட்டிருக்கிறது.தங்க ஆசனத்தில் ருஸ்தும்,மிக எளிமையான உடையுடன் ரிப்ஈ ரலி அவர்களும்-
பாரசிக அரசபையின் வழமைப்படி ஆயுதத்தை கொடுத்துவிடும்படி வாசல் காவலாளி கேட்டபோது-

நானாக வரவில்லை.நீங்கள் அழைத்து வந்துள்ளேன்,எனக்கு எந்த பிரச்சனையும் இன்றி விட்டு விட்டால் சரி.இல்லையானால் என்னை காப்பாற்ற இந்த வாள் எனக்கு தேவை எனக்கூறி கொடுக்க மறுத்து விடுகிறார்கள்.

பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்.

அன்றைய உலகின் சூப்பர் பவர் என்று போற்றப்படும் ஒரு வல்லரசு தர்பாரில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை:

ருஸ்தும்: உங்களின் விஷயம் என்ன?

நபித்தோழர்: படைப்புக்களை வணங்குவதை விட்டுவிட்டு படைத்தனை வணங்கச்சொல்லி அல்லாஹ் ஒரு நபியை அனுப்பினான்,அந்த நபியின் தூதர்களாக நாங்கள் வந்திருக்கிறோம்.

இதை ஏற்றால் உங்களை நாங்கள் ஏற்போம்,இல்லாவிட்டால் யோசித்து முடிவெடுக்க கால அவகாசம் தருவோம்.

ருஸ்தும்:சரி,கால அவகாசம் தாருங்கள்.என்றார்

ரிப்ஈ:எத்தனை நாள் அவகாசம் ?ஒரு நாள்,அல்லது இரண்டு நாள்.?
ருஸ்தும்:குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றதும்-

எதிரிகளை களத்தில் சந்திக்கும்போது மூன்றுநாட்கள் மட்டுமே அவர்களுக்கு அவகாசம் தருவது எங்கள் பெருமானின் வழிமுறை,எனவே மூன்று வழிமுறைகள் உங்களுக்கு தரப்படுகிறது-ஒன்று: இந்த தீனை ஏற்பது.அல்லது சரணடைந்து எங்களின் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஜிஸ்யா வரி கட்டி வாழ்வது அல்லது போர் செய்வது என்றார்கள்.

நீர் அவர்களின் தலைவரா? என பாரசீக தலபதி கேட்டபோது-இல்லை, முஸ்லிம்கள் ஓர் உடலை போன்றவர்கள்.அவர்களில் உயர்வு தாழ்வு பேதமில்லை.என்றார்கள்.

பின்னர் ருஸ்தும் தன் அரசபை சஹாக்களிடம்-

பார்த்தீர்களா?என்ன கண்ணியமான,துனிவான வார்த்தை,இதுவரை இவரைப்போல் யாரும் அரசபையில் தைரியமாக பேசியதில்லை,  எத்துனை உறுதியான மன தைரியம் என ருஸ்தும் மெய்சிலிர்த்துப்போ னார்.

இதுவே ஈமானின் கண்ணியம்.

திருக்குர்ஆனில் முஃமின்களின் அடையாளங்கள் பற்றியும்,ஸஹாபாக்க  ளின் பண்புகள் பற்றியும் குறிப்பிடும்போது-

அவர்கள் முஃமின்களிடம் பணிவாகவும் இறைமறுப்பாளர்களிடம் கடுமையாகவும் (அதாவது அவர்களின் ஈமானுக்கு கண்ணியக்குறைவு ஏற்படாமல்) நடந்து கொள்வார்கள்.

எனவே தமிழகத்தில் 24 இஸ்லாமிய அமைப்புக்களின் ஒன்றுபடுதல் வெறும் ஒற்றுமைக்குமட்டுமின்றி உரிமைகளை பெறுவதற்கும்,இஸ்லாத்தின் சுய மரியாதையை பாதுகாக்கவும் தொடர்ந்து துணிவுடன் போராட வேண்டும்.

தொடர்ந்து வாருங்கள்!இலக்கை தொட்டுவிடலாம் இன்ஷா அல்லாஹ்!



ஒரு முக்கிய அறிவிப்பு:

உஸ்மானிகள் பேரவை சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரபீஉல் அவ்வல் பிறை 27  09.02.2013 சனிக்கிழமை மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து மாபெரும் மீலாது விழா நடைபெறவுள்ளது.

               முதல் அமர்வு:                                                   


உஸ்மானிகள் பங்கு பெறும் மாபெரும் கருத்தரங்கம்:

இடம்:புதுமனை குத்பா பள்ளிவாசல்,மேலப்பாள/span>

நேரம்:அஸர் தொழுகை தொடர்ந்து

                  கருத்துரையாற்றுவோர்


மவ்லவி:ஹுமாயூன் கபீர் உஸ்மானி

மவ்லவி:ஹயாதுத்தீன் உஸ்மானி

மவ்லவி:காஜா ஹுஸைன் உஸ்மானி

மவ்லவி:ஜஃபர் அலி உஸ்மானி

மவ்லவி:அபூபக்கர் உஸ்மானி


இரண்டாம் அமர்வு:

இடம்:பஜார் திடல்,மேலப்பாளையம்

தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்கள் உரையாற்றுகிறார்கள்.

உஸ்மானியாவின் முதல்வர் மரியாதைக்குறிய மவ்லவீ,அல்ஹாஜ்.ஹைதர் அலி ஹழ்ரத் அவர்களும்,உஸ்மானியாவின் பேராசிரியர் மரியாதைக்குறிய மவ்லவீ,அல்ஹாஜ் காஜா ஹழ்ரத் அவர்களும்,மரியாதைக்குறிய மவ்லவீ,அல்ஹாஜ் கோவை அப்துல் அஜீஸ் ஹழ்ரத் அவர்களும்,மற்றும் உஸ்மானிகள் பேரவையின் தலைவர் மவ்லவீ ஜலீல் ஹழ்ரத் அவர்களும்,உஸ்மானிகள் பேரவையின் கெளரவத்தலைவர் மவ்லவீ இல்யாஸ் ஹழ்ரத் அவர்களும் உரையாற்றுகிறார்கள்.






7 comments: