Wednesday 27 February 2013

ஸஹாபாக்களை விமர்சிக்க கூடாது



நபிமார்களுக்குப்பின்னர் இந்த உலகில் வாழ்ந்த மனிதர்களில் மிகச்சிறந்த மனிதர்கள் ஸஹாபாக்கள் தான்.

அவர்கள் வாழ்ந்த காலங்கள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட புனித காலங்களாகும்.

இந்த தீனுக்கு உரமாக தங்களையே தந்துவிட்ட தலைவர்கள்.

கொண்டகொள்கையில் உயிர்மூச்சு உள்ள வரையும் உறுதியாக நின்றவர்கள்.

வாழும் காலங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெற்ற உத்தமசீலர்கள்.

தோழர்கள் எனும் புனிதச்சொல்லால் அழைக்கப்பட்ட அவர்கள்-தோழமையின் அத்தனை இலக்கணத்தையும் நிலைநிறுத்தியவர்கள்.

தலமைக்கு கட்டுப்படுவதை உலகம் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஸஹாபி என்றால் யார்?

كل من لقي محمد صلى الله عليه وسلم مؤمناً به ومات على ذلك

நபி ஸல் அவர்களை ஈமானுடன் சந்தித்து,அதிலேயே நிலைத்திருந்து மரணம டைந்தவர்.

இதில் மூன்று விஷயங்கள் பிரதானமானவை:

முதலாவது:  நபியின் சந்திப்பு.

இரண்டாவது: ஈமான் கொள்வது.

மூன்றாவது: அதேநிலையில் மரணிப்பது.

. فمن لم يلقى النبي صلى الله عليه وسلم فليس بصحابي. ومن لقيه حال كفره أو نفاقه أو ارتد بعد ذلك فهو لا يدخل في أصحاب النبي صلى الله عليه وسلم

நபி ஸல் அவர்களின் காலத்தில் வாழ்ந்தும்,ஈமான் கொண்டும்,நாயகத்தை சந்திக்காவிட்டால் அவர் ஸஹாபி அல்ல.

உதாரணமாக-உவைஸுல் கர்னீ ரஹ் அவர்கள் நபி ஸல் அவர்களின் காலத்தில் யமன் தேசத்தில் வாழ்கிறார்கள்.நாயகத்தை ஈமான் கொண்டார்கள் ஆனாலும் உடல் நிலை சரியில்லாத தன் தாயின் பணிவிடைக்காக அவர்களால் மதீனாவந்து அண்ணலாரை சந்திக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.

உவஸை பிற்காலத்தில் நீங்கள் சந்தித்தால் உங்களுக்காக பாவமன்னிப்பு தேடச்சொல்லுங்கள் என ஹழ்ரத் உமர் ரலி அவர்களுக்கு நபி ஸல் அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

இத்துனைபெரும் சிறப்புப்பெற்றிருந்தும் அவர்கள் ஸஹாபி எனும் அந்தஸ்தை பெறவில்லை.

அதைப்போலவே-நாயகத்தின் காலத்தில் வாழ்ந்தும்,நாயகத்தை சந்தித்தும் ஈமான் கொள்ளவில்லையானால்,அல்லது நயவஞ்சகராக வாழ்ந்தால்,அல்லது ஈமான் கொண்டு பின்பு மதம் மாறிவிட்டால் இவரும் ஸஹாபி அல்ல.

அவர்களின் கண்ணியமான வாழ்கைக்கு குர்ஆன் சான்று:

الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأَمْوَالِهِمْ

இந்த தீனுக்காக தங்களின் வீடுகளை விட்டும் சொத்துக்களை விட்டும் வெளி  யேற்றப்பட்டவர்கள்.


يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا

அல்லாஹ்வின் அருளையும் அவன் பொருத்தத்தையும் தேடுவார்கள்

وَيَنْصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ
நபி ஸல் ibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-language: AR-SA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">
அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் உதவி செய்பவர்கள்.

أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ

அவர்கள் உண்மையாளர்கள்.

تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا

ருகூவு செய்பவர்களாகவும் ஸுஜூது செய்பவர்களாகவும் அவர்களை காண்பீர்.

سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ

அவர்களின் முகங்களில் ஸுஜூதின் அடையாளமிருக்கும்.

இப்படி அல்லாஹுத்தஆலா அவர்களின் அடையாளங்கள் பற்றியும்,குணங்கள் பற்றியும் பல இடங்களில் கூறுகிறான்.

அந்த புனிதர்களை பற்றி நபித்தோழர் ஹழ்ரத் இப்னு மஸ்வூத் ரலி அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

. أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فاعرفوا لهم فضلهم واتبعوهم على آثارهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم . رواه رزين

நபி ஸல் அவர்களின் தோழர்கள் இந்த உம்மத்தின் மிகச்சிறந்த சமுதாயம்.

நல்ல உள்ளம் கொண்டவர்கள்-ஆளமான அறிவாற்றல் பெற்றவர்கள்-அல்லாஹுத்தஆலா தன் நபியின் நட்புக்காகவும்,அவனின் தீனை நிலைநிறுத்தவும் அவர்களை தேர்ந்தெடுத்தான்.

ஆகவே அவர்களின் தகுதியை விளங்கிக்கொள்ளுங்கள்-அவர்களின் வழிமுறையை பின்பற்றுங்கள்-அவர்களின் குணங்களையும்,வரலாறுகளையும் உங்களால் முடிந்தமட்டும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.அவர்கள் நேர்வழி பெற்ற கூட்டமாகும்.

உண்மை தான்!அவர்கள் இந்த தீனின் சாட்சியாளர்கள்.அவர்கள் மூலம் தான் நமக்கு குர்ஆன் கிடைத்தது.அவர்கள் மூலம் தான் நபி ஸல் அவர்களின் ஹதீஸும் கிடைத்தது.

எனவே அவர்களை குறை காண்பவர்கள் இந்த தீனின் ஆதாரத்தை அழிக்கப்  பார்ப்பவர்கள்.
அவர்கள் வழிகெட்டவர்கள் மாத்திரமின்றி அல்லாஹ் ரஸூலின் சாபத்திற்குறியவர்கள்.
ஸஹாபிகளை விமர்சிக்க கூடாது


وقال الرسول صلى الله عليه وسلم :" لا تسبوا أصحابي، فلو أن أحدكم أنفق مثل أُحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفة"
رواه البخاري

என் தோழர்களை திட்டாதீர்கள்,அவர்கள் கையளவு செய்த தர்மத்தின் அந்தஸ்தை நீங்கள் உஹது மலையளவு செய்தாலும் அடைய முடியாது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

وعن ابن عباس _رضي الله عنهما_ قال : قال رسول الله -صلى الله عليه وسلم- ( مَن سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين
رواه الطبراني في الكبير

என் தோழர்களை திட்டுபவர்கள் மீது அல்லாஹ்,மலக்குகள்,மக்கள் அனைவரின் சாபம் உண்டாகும்.என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

قال ابن عمر _رضي الله عنهما_ " لا تسبوا أصحاب محمد صلى الله عليه وسلم فلمقام أحدهم ساعة خير من عمل أحدكم عُمره
رواه أحمد في الفضائل

நபி ஸல் அவர்களின் தோழர்களை திட்டாதீர்,காரணம் அவர்கள் ஒருவரின் ஒருமணிநேர வாழ்நாள் உங்கள் ஆயுளை விடவும் சிறப்பானது.என இப்னு உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

وجاء رجل إلى عبد الله بن المبارك وسأله أمعاوية أفضل أو عمر بن عبد العزيز فقال " لتراب في منخري معاوية مع رسول الله -صلى الله عليه وسلم- خير وأفضل من عمر بن عبد العزيز
رواه ابن عساكر 59/208 وانظر : منهاج السنة 6/227 .

ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ் அவர்களிடம் ஒருவர் வந்து நபித்தோழர் முஆவியா ரலி அவர்கள் சிறந்தவரா?அல்லது உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்கள் சிறந்தவரா?என கேட்டபோது-
நபி ஸல் அவர்களுடன் ஹழ்ரத் முஆவியா ரலி அவர்கள் கலந்துகொண்ட போரில் அவர்களின் வாகனம் கிளப்பும் புழுதிமண் ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரஹ் அவர்களை விட சிறந்ததாகும் என்று பதில் கூறினார்கள்.


وقال الإمام أحمد -رحمه الله تعالى- " إذا رأيت رجلا يذكر أصحاب رسول الله -صلى الله عليه وسلم- بسوء فاتهمه على الإسلام
لا يجوز لأحد أن يذكر شيئا من مساويهم ولا يطعن على أحد منهم بعيب ولا نقص فمن فعل ذلك فقد وجب على السلطان تأديبه وعقوبته ليس له أن يعفو عنه بل يعاقبه ويستتيبه فان تاب قبل منه وإن ثبت أعاد عليه العقوبة وخلده الحبس حتى يموت أو يراجع
شرح أصول الاعتقاد للالكائي

நபித்தோழர்களை குறைகூறும் ஒரு மனிதனை நீ பார்த்தால் அவனின் இஸ்லாம் சந்தேகத்திற்குறியது.

அவர்கள் மீது குறைகூறுபவனுக்கு இஸ்லாமிய சட்டப்படி அவனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

وقال بشر بن الحارث _رحمه الله تعالى_ " مَن شتم أصحاب رسول الله -صلى الله عليه وسلم- فهو كافر وإن صام وصلى وزعم أنه من المسلمين
رواه ابن بطة في الإبانة

நபித்தோழர்களை எவன் திட்டுகிறானோ அவன் தொழுதாலும்,நோன்பு வைத்தாலும் அவன் காபிர் தான் என ஹழ்ரத் பிஷ்ர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال أبو زرعة _رحمه الله تعالى_ " إذا رأيت الرجل ينتقص أحدا من أصحاب رسول الله -صلى الله عليه وسلم- فاعلم أنه زنديق وذلك أن الرسول حق والقرآن حق وإنما أدى إلينا هذا القرآن والسنة أصحابُ رسول الله -صلى الله عليه وسلم- وإنما يريدون أن يجرحوا شهودنا ليُبطلوا الكتاب والسنة والجرح بهم أولى وهم زنادقة
تاريخ بغداد 38/132 والكفاية /97

ஸஹாபாக்களை குறைபடுத்தும் ஒருவனை பார்த்தால் அவன் வழிகெட்டவன் என்று விளங்கிக்கொள்.ஏனெனில் நாம் பெற்றுள்ள குர்ஆனும் தூதரும் உண்மை.அந்த வேதத்தையும்,தூதரின் வழிமுறைகளையும் நம் வரை கொண்டு வந்து சேர்த்தது அந்த ஸஹாபாக்கள் தான்.அவர்களை குறைபடுத்து வது இந்த தீனின் சாட்சியை மறைக்கப்பார்ப்பதாகும் என அபூ ஸர்ஆ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.

قال الإمام محمد بن صُبيح بن السماك _رحمه الله تعالى_ لمن انتقص الصحابة " علمتَ أن اليهود لا يسبون أصحاب موسى -عليه السلام- وأن النصارى لا يسبون أصحاب عيسى -عليه السلام- فما بالك ياجاهل سببت أصحاب محمد -صلى الله عليه وسلم
رواه المعافي في الجليس الصالح 2/392

இமாம் முஹம்மத் ரஹ் அவர்கள் ஸஹாபாக்களை விமர்சனம் செய்பவர்கள் விஷயத்தில் இப்படி ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள்.
யூதர்கள் மூஸா அலை அவர்களின் தோழர்களை திட்டுவதில்லை.
கிருஸ்துவர்கள் ஈஸா அலை அவர்களின் தோழர்களை திட்டுவதில்லை
மடையா!உனக்கு மட்டும் என்ன வந்து விட்டது?நபித்தோழர்களை விமர்சனம் செய்கிறாய்.

இஸ்லாமியர்களில் ஸஹாபாக்களை திட்டுகிற கூட்டம் இரண்டு.

ஒன்று. ஷியாக்கள்.இரண்டாவது:தவ்ஹீத்வாதிகள் என தங்களுக்கு பெயர் சூட்டிக்கொள்ளும் தவறிப்போன கூட்டம்.

இந்த போலிவாதிகள் சமீபகாலங்களில் நபித்தோழர்களை குறித்து மிகவும் தரக்குறைவாக எழுதியும் பேசியும் வருகின்றனர்.

இவர்களின் ஈமானும் அதன் முடிவும் சந்தேகத்திற்குறியது,காரணம் ஸஹாபாக்கள் குறித்து அவர்கள் பேசிய வார்த்தைகளை எந்த முஸ்லிமாலும் சகித்துக்கொள்ள முடியாது.
ஸஹாபாக்கள் மீது அவர்கள் கூறும் விமர்சனங்கள்:
1.நாங்கள் ஸஹாபாக்களை மதிப்போம் ஆனால் பின்பற்ற மாட்டோம்.

ஸஹாபாக்களை பின்பற்றச்சொல்லி வலியுறுத்தும் திருக்குர்ஆன்

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّـهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்;

2.ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் பற்றி கொள்கை குழப்பவாதி.இவர் பித்அத்வாதி.

யார் அந்த உமர் ரலி?

இந்த தீனுக்கு கண்ணியம் தேடி தந்தவர்.உமர் ரலி அவர்களை பார்த்தால் ஷைத்தான் பயப்படுவான் என்று நபி ஸல் அவர்கள் சொன்னார்கள்.

அப்படிப்பட்ட உமர் ரலி அவர்கள் பற்றி இந்த நவீனவாதி சொன்னதை பார்த்தால் ஷைத்தானே பயப்படுவான்.  (இவன் நம்மை மிஞ்சிய பெரிய ஷைத்தான் போல என்று.)


عن أبي هريرة، عن النبي صلى الله عليه وسلم قال: " إن الله تعالى عز وجل جعل الحق على لسان عمر وقلبه.
حلية الاولياء

உமர் ரலி அவர்களின் நாவிலும் உள்ளத்திலும் அல்லாஹ் சத்தியத்தை வைத்துவிட்டான் என்றும்,

هذا عمر بن الخطاب، وليس من الباطل في شيء
حلية الاولياء

இவரிடத்தில் அசத்தியம் இல்லை என்றும் புகழ்ந்து நபி ஸல் அவர்கள் கூறினார்கள்


3.அலி ரலி அவ்ர்களை பற்றி எடுப்பார் கைப்பிள்ளை என்றும்,போர் வெறியை தூண்டியவர் என்றும் கூறுகிறார்.

யார் அந்த அலி ரலி அவர்கள்?

சின்ன வயதில் ஈமானை சொந்தமாக்கிக்கொண்டவர்கள்.

فقال لهم: " يامعشر الأنصار ألا أدلكم على ما إن تمسكتم به لن تضلوا بعده أبداً؟ " قالوا: بلى يا رسول الله قال: " هذا علي فأحبوه بحبي، وأكرموه بكرامتي، فإن جبريل أمرني بالذي قلت لكم عن الله عز وجل.
حلية الاولياء

அன்ஸாரிகளே!நீங்கள் வழிதவறிவிடாமல் இருக்க ஒரு வழி சொல்லட்டுமா? என்று நபி ஸல் அவர்கள் சொன்ன போது அவசியம் சொல்லுங்கள் என்றார்கள்.
அப்போது நபி ஸல் அவர்கள்-அலியை நேசியுங்கள் அவருக்கு கண்ணியம் செய்யுங்கள் இது அல்லாஹ் ஜிப்ரயீல் மூலம் எனக்கு சொல்லியது என்றார்கள்.

عن علي قال: " والله ما نزلت أية إلا وقد علمت فيما أنزلت، وأين أنزلت، وإن ربي وهب لي قلباً عقولاً، ولساناً سؤولاً
حلية الاولياء

திருக்குர்ஆனின் எந்த வசனமும் எதற்காக இறக்கப்பட்டது?எங்கே இறக்கப்பட்டது? என்று எனக்கு தெறியும்.என்று அலி ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

4.அம்ர் இப்னுல் ஆஸ் ரலி அவர்கள் பற்றி-இவர் ஒரு கிரிமினல்.

யார் அம்ர் இப்னுல் ஆஸ் ரலி அவர்கள்?

يقول والله ما كنت أستطيع أن أرفع عيني إليه هيبة وإجلالاً له ثم قال عمرو: ولو طلبتم مني أن أصفه لكم اليوم ما استطعت ذلك.لأني ما حفظت شكله.
حلية الاولياء

என் வாழ்நாளில் பெருமானின் மீது நான் வைத்திருக்கும் கண்ணியத்தால் அவர்களை தலைநிமிர்ந்துகூட பார்த்த்தில்லை என்று கூறுகிறார்கள்.

அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று என்னிடம் வர்ணிக்கச்சொன்னால் என்னால் முடியாது என்று அம்ர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

5.முஹம்மத் இப்னு அபீபக்ர் ரலி அவர்கள் பற்றி-இவர் ஒரு ரவுடி

6.ஹுஸைன் ரலி அவர்களை பற்றி-இவர் பதவி ஆசை பிடித்தவர்.

7.நபி ஸல் அவர்களின் வபாத்திற்கு பின் அண்ணன் எப்ப போவார் திண்ணை எப்ப காலியாகும் என்று பதவிக்காக அடித்துக்கொண்டார்கள்என்று கூறுகிறார்.

இப்படி இவர்கள் அருமை தோழர்கள் குறித்து பேசிய,அல்லது எழுதிய விமர்சனங்கள் பதிவுசெய்வதற்கு கூட கூசும் அளவுக்கு தகுதியற்றவை.

இந்த தீனுக்கு அரனாக நின்று பாதுகாத்த அந்த உத்தம தோழர்களின் வழியை பின்பற்றி நடப்போமாக.

11 comments:

  1. Poli TowheedVaadhikalin Mukat Thiraiyai Kilittha Jumua Urai

    ReplyDelete
  2. அன்புச்சகோதரரே சஹாபிகளை தவறாக விமர்சிப்பது தவறான செயலாகும்.
    அத்{9;100}. சுட்டிகாட்டிய வசனம் அஸ்ஹாப்களின் உயர்வை கூறுகிறது

    ReplyDelete
  3. saattai adi- kolgai kuzappavaathigalukku putthi vanthal sari

    ReplyDelete
    Replies
    1. சகோதரா முதலில் உங்கள் சூரத்தை மாற்ங்கள்=

      Delete
    2. அன்புள்ள நன்பர் அஹ்மத் உஸ்மானிக்கு,தாங்கள் யாரை சொல்கிறீர்கள்?எந்த சூரத்தை சொல்கிறீர்கள்?என்று தெளிவாக எழுதினால் நலம்.

      Delete
    3. சகோதரர் அபூதாஹிர் அவர்களுக்கு,ஒரு தாழ்மையான வேண்டுகோள்.உங்களின் லோகோவில் உள்ள உருவம் கொஞ்சம் நெருடலாக உள்ளது.அதை மாற்றி விடலாமே!

      Delete
  4. jazakkumullah logo marttapattu vittathu

    ReplyDelete
  5. மிக்க நன்றி

    ReplyDelete
  6. தௌிவற்று குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும் சகோதரர் அபூதாகிரைதான் குறிப்பிட்டேன்

    ReplyDelete
  7. சஹாபாக்களின் கண்ணியத்தை விளக்கம் இல்லாதவர்களுக்கு அல்லாஹ் தஆலா விளங்கச்செய்வானாக.

    ReplyDelete