மனிதன்
அல்லாஹ்வுடன் நெருக்கம் பெறுவதற்கு இரண்டு வழிகளை மார்க்கம் கற்றுத்தறுகிறது.
ஒன்று:அல்லாஹ்வின்
வேதம்.மற்றொன்று அல்லாஹ்வின் நேசர்கள்.
இறைவேதங்கள்
முழுமையானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லாத ஒன்று,ஆனால் வேதத்தைக்கொண்டு மட்டும் மனிதன்
அல்லாஹ்வை அடைந்துவிட முடியுமா?என்பது
தான் இங்கே கவனிக்கப்பட வேண்டும்.
நபி
மூஸா அலை அவர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் வேதத்தை பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது
تَفْصِيلًا لِّكُلِّ شَيْءٍ அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்தும்
என்று கூறுகிறான்.ஆனால் அச்சமுதாய மக்களை நபி மூஸா அலை அவர்களை தான்
பின்பற்
றச்சொன்னான்.
எனவே
அவ்வேதத்தில் எல்லாமும் இருந்தாலும் இங்கே நபி மூஸா அலை அவர்களின் துணை
தேவைப்படுகிறது.
அவ்வாறே
நபி ஸல் அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் பற்றி அல்லாஹ்
குறிப்பிடும்போது تِبْيَانًا
لِّكُلِّ شَيْءٍ அனைத்து
வஸ்துக்கள் பற்றிய விரிவுரை என்று புகழ்ந்து கூறுகிறான்.ஆனாலும் இச்சமூகத்தை நபி
முஹம்மத் ஸல் அவர்களை தான் பின்பற்றி நடக்கச்சொன்னான்.
அல்லாஹ்வின்
வேதமான அல்குர்ஆன் முழுமையானது,அதேசமயம்
அதை விளங்கிக்கொள்வதற்கும்,விளக்கிக்கொடுப்பதற்கும்,அதை வாழ்க்கையாக வடிவமைத்து
க்காட்டுவதற்கும்
நபி ஸல் அவர்கள் தேவைப்ப டுகிறார்கள்.அதனால்
தான் நபி ஸல் அவர்களின் பணி குறித்து-
بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ ۗ وَأَنزَلْنَا
إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ
يَتَفَكَّرُونَ
தெளிவான
அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை
நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு
இவ்வேதத்தை நாம் அருளினோம். என்று கூறுகிறான்.
இதன்
அடிப்படையில் நாயகம் ஸல் அவர்கள் இன்றி குர்ஆனை விளங்கிக்கொள்ள முடியாது.அதை அமல்
செய்யவும் முடியாது என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.
தொழுகையை
நிலநிறுத்துங்கள்-ஜகாத்தை நிறைவேற்றுங்கள்.
என்று மட்டுமே குர்ஆனில் உண்டு.
எத்தனை
வேலை தொழ வேண்டும்?எத்தனை இரக்கஅத் தொழ வேண்டும்?எந்த நேரத்தில் தொழ வேண்டும்?எப்படி தொழனும்?போன்ற முறைகளை நபி ஸல் அவர்கள் தான்
கற்றுத்தறுகிறார்கள்,அவ்வாறு ஜகாத் யார் கொடுக்க கடமைப்பட்டவர்?யாருக்கு கொடுக்க வேண்டும்?
எவ்வளவு கொடுக்க வேண்டும்? பொன்ற சட்டங்களை நபி ஸல் அவர்கள் தான் நமக்கு சொல்லிந்தந்தார்கள்.
மனிதனுக்கும்
மற்ற உயிரிணங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மனிதன் சுயமாக தன்னை
நிலைநிறுத்திக்கொள்ள முடியாது. ஆனால் மற்ற
உயிரிணங்கள் அப்படியல்ல!
மீன்
குஞ்சு பிறந்தவுடன் நீரில் நீந்துகிறது.கோழிக்குஞ்சு பிறந்தவுடன் தானாக நடக்கிறது, இரை தேடச்செல்கிறது.
அதனால்
தான் அல்ல்ஹுத்தஆலா மனிதன் பலஹீனமாக படைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறான்.
திருக்குர்ஆன்
ஒரு ஒளி என்றால் அதை நமக்கு கற்றுத்தருகிற நபி ஸல் அவர்களும் ஒளிதான்.எனவே தான்
அல்லாஹுத்தஆலா இரண்டையும் நூர் என்றே கூறுகிறான்.
ஒரு
பொருளை பார்க்க இரு ஒளி தேவைப்படுகிறது
1.கண்
ஒளி 2.வெளி ஒளி.
கண் ஒளி இருந்தும் வெளியே
ஒளியின்றி இருளாக இருந்தால் பார்க்க முடியாது,அவ்வாறு வெளியே வெளிச்சம் இருந்தும்
கண்ணில் பார்வை இல்லாமலிருந்தாலும் ஒரு பொருளை பார்க்க முடியாது.
இறைவேதத்திற்கு
பின் நல்லோர்களின் தொடர்பு ஒரு முஃமினை சீர்திருத்தம் செய்வதற்கு அவசியமாகும்.
உலக
வரலாற்றில் மிக மோசமான பழக்கங்களை கொண்ட அறியாமை கால அரபியர்கள் உலகத்து
உத்தமர்களாக அடையாளம் காணப்பட்டது நபி ஸல் அவர்களின் தொடர்பினால் தான் என்பதை
மறக்க முடியாது.
மதுவும்
மாதுவும் தான் அவர்களின் அன்றாட வாழ்க்கை!
கெளரவத்திற்காக
வாழ்ந்த கூட்டம்.
உயர்ந்த
இலட்சியத்திற்காகவும் அல்லாஹ்வின் திருப்திக்காகவும் அவர்களின் வாழ்வு மாறியது
நாயகத்தின் தொடர்புக்கு பின்னால்தான்.
நாங்கள்
எழுத,படிக்க
தெரியாத உம்மி சமுதாயம் என ஸஹாபாக்கள் தங்களை பற்றி
சொல்வார்கள்.அப்படிப்பட்டவர்கள் உலகத்தின் கணித மேதைகளானது எப்படி?
உலகத்தின்
அரசியலை மாற்றியமைத்தது யாரால்?
ஒரு
மனிதனின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் சக்தி மூன்று விஷயங்களுக்கு உண்டு.
1.அவன்
படிக்கும் கல்வி 2.அவன் பார்க்கும்
உலகம் 3.அவன் பழகும் நட்பு.
நல்ல
நட்பை தேர்ந்தெடுக்காமல் தீய நட்பை தேர்வு செய்தவன் நாளை அல்லாஹ்விடம்
يَا وَيْلَتَىٰ لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا
"எனக்கு
வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க
வேண்டாமா?"
என்று
கைசேதப்படுவான்.
இறைநேசர்களின்
தோழமைபெற்றவர்கள் வாழ்வில் வழிகெட்டுப் போகமாட்டார்கள் என்று ஒரு ஹதீஸில்
வருகிறது.
கண்
திருஷ்டி ஒருவனை கப்ரில் நுழைத்துவிடும் என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு
தீயபார்வைக்கு ஒருவனை மவ்தாக்கும் சக்தி இருக்குமானால் இறைநேசம் பெற்ற
இறைநேசர்களின் அன்புப்பார்வைக்கு அவன் வாழ்வை சீர்த்திருத்தம் செய்யும் ஆற்றல்
இருக்காதா?
சுவனம்
செல்ல கலிமா அவசியம்,வணக்கம் அவசியம்-
கலிமாவும் இல்லை!அமலும் இல்லை!அவ்வளவு
ஏன்?மனித இணமே இல்லாத ஒரு நஜீஸான நாய் குகைவாசிகளின் நட்பால் சுவனம் செல்லும்
அந்தஸ்தை பெறவில்லையா?
பூவுடன்
சேர்ந்தால் நார் மணக்கும் என்பார்கள்,ஆனால் இங்கு நாய் மணக்கிற
து,நஜீஸ் மணக்கிறது.
குதிரை,ஒட்டகம்,ஆடு
இவைகளுடன் பழகும் மனிதனிடம் இவைகளின்
சுபாவம் வருவது இயற்கையே!
குதிரை
வளர்ப்பவரிடம் பெருமை இருக்கும்.ஆட்டுடன் பழகுபவரிடம் பணிவும்,பொருமையும்
இருக்கும்.அதனால் தான் நபிமார்கள் அனைவர்களையும் அல்லாஹ் ஆடுமேய்க்கச்செய்தான்.
எனவே
எவ்வளவு கற்றாலும் நல்லோர்களின் தொடர்பு இல்லையெனில் கரைசேர முடியாது.
இமாம்
சுப்யான் ஸவ்ரி ரஹ் அவர்கள் மிகப்பெரும் ஹதீஸ் கலை வல்லுனர்.அவர்கள்
கூறுகிறார்கள்.
அபூ
ஹாஷிம் சூபி ரஹ் அவர்களின் தொடர்பு எனக்கு கிடைக்காவிட்டால் முகஸ்துதியின் நுனுக்கங்களை பற்றி
நான் தெரிந்திருக்க முடியாது.
இமாம்
அபூ ஹனீபா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்
இமாம்
ஜஃபர் ஸாதிக் ரஹ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்பில் இருக்கும் பாக்கியம்
எனக்கு கிடைத்தது.அது மட்டும் கிடைக்காவிட்டால் நான் அழிந்திருப்பேன் என்று
கூறுகிறார்கள்.
இமாம்
அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ் அவர்கள் இமாம் பிஷ்ர் ஹாஃபி ரஹ் அவர்களின் தோழமையில்
பலகாலம் கழித்தார்கள்.
பிஷ்ர்
ரஹ் மக்களிடம் சாதாரணமான மனிதர் தான்.
இமாம்
அஹ்மத் ரஹ் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது அவ்வழியாக இமாம்பிஷ்ர் ரஹ் அவர்கள்
வருவதை பார்த்து இமாம் அஹ்மத் ரஹ் எழுந்து நின்றார்கள்.
மாணவர்கள்
காரணம் கேட்ட போது-
நான்
வேதம் படித்த ஆலிம்.அவர் அல்லாஹ்வை படித்த ஆரிஃப் என்று பதில் சொன்னார்களாம்.
அவ்வளவு
ஏன்?இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்கள் தங்களின் கிதாபில் -
நான்
கவாஜா பூ அலி ரஹ் அவர்களின் தொடர்பில் ஆண்மீக பயிற்சி பெற்றேன். என்று
கூறுகிறார்கள்.
இறைநேசர்களின்
அடையாளம் கண்டு கொள்வது எப்படி?
அவர்களை
பார்த்தால் அல்லாஹ்வின் ஞாபகம் வர வேண்டும்.
عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ
الأَنْصَارِيَّةِ . قالت: قَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم: أَلاَ
أُخْبِرُكُمْ بِخِيَارِكُمْ ؟ قَالُوا: بَلَى , قال : فَخِيَارُكُمُ الَّذِينَ
إِذَا رُؤُوا ذُكِرَ الله تَعَالَى
أخرجه أحمد 6/ 459
உங்களில்
மிகச்சிறந்தவர் யார்?என்று சொல்லட்டுமா? என
நபி ஸல் அவர்கள் கேட்டபோது-ஆம்!சொல்லுங்கள்
ஸஹாபாக்கள் சொன்னார்கள்.
அப்போது
நபி ஸல் அவர்கள்-அவர்களை கண்டால் அல்லாஹ்வின் ஞாபகம்
வரவேண்டும் என்றார்கள்.
அதாவது
அல்லாஹ்,ரஸூலின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு
பேனுதலுடன் வாழவேண்டும்.
அவ்வாறின்றி
கராமத்கள் மட்டும் ஒரு இறைநேசரின் அடையாளம் அல்ல.
அதனால்
தான் இமாம் அபூ எஸீத் பிஸ்தாமி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
وقال البسطامي : لَوْ رَأَيْتُمْ الرَّجُلَ
يَطِيرُ فِي الْهَوَاءِ أَوْ يَمْشِي عَلَى الْمَاءِ فَلَا تَغْتَرُّوا بِهِ
حَتَّى تَنْظُرُوا وُقُوفَهُ عِنْدَ الْأَمْرِ وَالنَّهْيِ . مجموع فتاوى شيخ
الإسلام (1/83).
காற்றில்
பறக்கும் ஒரு மனிதனை பார்த்து அல்லது தண்ணீரில் நடக்கும் ஒரு மனிதனை பார்த்து அவர்
இறைநேசர் என்று ஏமாந்து விட வேண்டாம்.
அல்லாஹ்வின்
கட்டளையை நிறைவேற்றுபவராகவும்,அல்லாஹ்
தடுத்ததை தவிழ்ந்து கொள்பவராகவும்
இருக்க வேண்டும் என்றார்கள்.
அது
மட்டுமின்றி ஒரு இறைநேசர் அவர் அடையாளம் காணப்படுவதை விரும்ப மாட்டார்.
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ، أَنَّهُ
خَرَجَ يَوْمًا إِلَى مَسْجِدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَوَجَدَ
مُعَاذَ بْنَ جَبَلٍ قَاعِدًا عِنْدَ قَبْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم
يَبْكِي ، فَقَالَ : مَا يُبْكِيكَ ؟ قَالَ : يُبْكِينِي شَيْءٌ سَمِعْتُهُ مِنْ
رَسُولِ اللهِ صلى الله عليه وسلم ، سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم
يَقُولُ:إِنَّ يَسِيرَ الرِّيَاءِ شِرْكٌ ، وَإِنَّ مَنْ عَادَى ِللهِ وَلِيًّا ،
فَقَدْ بَارَزَ اللهَ بِالْمُحَارَبَةِ ، إِنَّ اللهَ يُحِبُّ الأَبْرَارَ
الأَتْقِيَاءَ الأَخْفِيَاءَ ، الَّذِينَ إِذَا غَابُوا لَمْ يُفْتَقَدُوا ،
وَإِنْ حَضَرُوا لَمْ يُدْعَوْا وَلَمْ يُعْرَفُوا ، قُلُوبُهُمْ مَصَابِيحُ
الْهُدَى ، يَخْرُجُونَ مِنْ كُلِّ غَبْرَاءَ مُظْلِمَةٍ.
أخرجه ابن ماجة (3989) .
நபி
ஸல் அவர்களின் வஃபாத்திற்கு பின்னர் ஹழ்ரத் உமர் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களின்
கப்ரை ஸியாரத் செய்ய சென்றார்கள்.
அங்கு
ஹழ்ரத் முஆவியா ரலி அவர்கள் கப்ருக்கு அருகே அமர்ந்து அழுதுகொண்டிருக்க
கண்டார்கள்.
ஏன்
அழுகிறீர்?என உமர் ரலி அவர்கள் கேட்டபோது-
நபி
ஸல் அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்
முகஸ்துதியில்
மிக இலேசானதும் இணைவைப்பில் கொண்டு சேர்த்து விடும்.
இறை
நேசரை யார் நோவினை செய்வாரோ அவருடன் அல்லாஹ் போர் பிரகடனம் செய்கிறான்.
அல்லாஹுத்தஆலா
நல்லோர்களை,இறையச்சமுள்ளவர்களை,அறி
முகமில்லாதவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்.
யார்
அவர்கள்?அவர்கள் ஊரில் இல்லாவிட்டால் மக்கள் தேட மாட்டார்கள்.
ஒரு
சபையில் அவர்கள் இருந்தால் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.
அவர்களின்
உள்ளங்கள் நேர்வழியின் விளக்குகள்.என்றார்கள்.
ஒரு
நபி அடையாளம் காணப்படவேண்டும்,ஒரு இறைநேசர் அடையாளம் காணப்பட வேண்டிய
அவசியமில்லை.அதனால் தனக்கே தெரியாத எத்தனையோ இறைநேசர்கள் உண்டு.
இதன்
அடிப்படையில் அல்லாஹ்வினால் இந்த உம்மத்துக்கு அடையாளம் காட்டப்பட்ட மாபெரும்
இறைநேசர்-இறைநேசர்களின் தலைவராக குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர்
ஜீலானி ரஹ் அவர்கள் விளங்கினார்கள்.
யார்
அந்த மகான்?
وكان عبد القادر رحمه الله تعالى حسني نسبة إلى
الحسن بن علي رضي الله تعالى عنهما ونشأ في منطقة جيلان هذه وولد سنة 471
قرية تاريخية قرب
المدائن 40 كيلو متر جنوب بغداد
ஹழ்ரத்
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரஹ் அவர்கள்
இமாம் ஹஸன் ரலி அவர்களின் வம்சத்தில் வருகிறார்கள்.
ஜீலான்
எனும் நகரத்தில் ஹிஜ்ரி 471 ல் பிறக்கிறார்கள்.
இது
பக்தாத் நகரத்திலிருந்து 40 கிலோமீட்டரில் உள்ளது.
لما صار صبيا وقارب البلوغ أراد أن يرتحل إلى بغداد من أجل طلب
العلم وبغداد آن ذاك عاصمة الدنيا
لما وصل إلى بغداد عاش في بغداد 73 سبحان الله
العظيم هو قد عاش 90 سنة ولد سنة 470 أو 471 وتوفي سنة 561 قرابة 90 سنة لكن مع
ذلك عاش في بغداد 73 سنة مدة طويلة وطويلة جدا
தங்களின்
சிறு வயதில் கல்வியை தேடி பக்தாதுக்கு பயணம் செய்தார்கள்
பக்தாது நகரம் அன்று உலகின் தலைநகரமாக விளங்கியது.
73 ஆண்டு காலம் பக்தாதிலேயே வாழ்ந்து ஹிஜ்ரி 561 ல் தங்களின் 90 வது வயதில் அங்கேயே மரணித்தார்கள்.
73 ஆண்டு காலம் பக்தாதிலேயே வாழ்ந்து ஹிஜ்ரி 561 ல் தங்களின் 90 வது வயதில் அங்கேயே மரணித்தார்கள்.
كان العهد الذي قدم فيه الشيخ الجيلاني إلى بغداد تسوده الفوضى التي عمت كافة
أنحاء الدولة العباسية، حيث كان الصليبيون يهاجمون ثغور الشام، وقد تمكنوا من الاستيلاء
على أنطاكية وبيت المقدس وقتلوا فيهما خلقا كثيرا من المسلمين ونهبوا أموالاً كثيرة
அவர்கள்
பக்தாதுக்கு வந்த சமயம் அப்பாஸிய கிலாபத் வீழ்ச்சியடைந்து சிலுவை தீவிரவாதிகளின்
அட்டூழியங்கள் சிரியா முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்ட காலம்.
பைத்துல்
முகத்தஸ் கிருஸ்துவர்களின் பிடியில் மோசமான விளைவுக ளை சந்தித்தது .
ஒரு
பெரும் கூட்டம் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதுடன் அவர்களின் பொருட்களும்
கொள்ளையடிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட
காலக்கட்டத்தில் அவர்களின் தாவா புரட்சி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
كان الشيخ عبد القادر يطلب العلم في بغداد، وتفقه على مجموعة من شيوخ الحنابلة
ومن بينهم الشيخ أبوسعيد المُخَرِمي، فبرع في المذهب والخلاف والأصول وقرأ الأدب وسمع
الحديث على كبار المحدثين. وقد أمضى ثلاثين عاما يدرس فيها علوم الشريعة أصولها وفروعها.
பக்தாதில்
கல்விப்புரட்சி செய்தார்கள்.ஹன்பலி மத்ஹப் இமாம்களிடம் மார்க்கச்சட்டங்களை
கற்றார்கள்.
சுமார்
முப்பது வருடம் மார்க்கக் கல்வியை கற்றார்கள்.
عقد الشيخ أبو سعيد المُخَرِمي لتلميذه عبد القادر مجالس الوعظ في مدرسته بباب
الأزج في بداية 521 هـ، فصار يعظ فيها ثلاثة أيام من كل أسبوع، بكرة الأحد وبكرة الجمعة
وعشية الثلاثاء. واستطاع الشيخ عبد القادر بالموعظة الحسنة أن يرد كثيراً من الحكام
الظالمين عن ظلمهم وأن يرد كثيراً من الضالين عن ضلالتهم، حيث كان الوزراء والأمراء
والأعيان يحضرون مجالسه، وكانت عامة الناس أشد تأثراً بوعظه، فقد تاب على يديه أكثر
من مائة ألف من قطاع الطرق وأهل الشقاوة، وأسلم على يديه ما يزيد على خمسة الآف من
اليهود والمسيحيين. وبحسب بعض المؤرخين، فإن الجيلاني قد تأثر بفكر الغزالي حتى أنه
ألف كتابه "الغنية" على نمط كتاب "إحياء علوم الدين
குத்புல்
அக்தாப் ரஹ் அவர்களின் உஸ்தாத் அபூ ஸயீத் ரஹ் அவர்கள் தங்களின் மாணவரான ஜீலானி ரஹ்
அவர்கள் மக்களுக்கு மார்க்க உபதேசம் செய்வதற்காக ஒரு இடத்தை ஒதுக்கினார்கள்.
வாரத்தில்
மூன்று தினங்கள் ஞாயிறு,வெள்ளி,புதன் ஆகிய தினங்கள் உபதேசம் செய்வார்கள்.
அவர்களின்
அறிவுரைகளை கேட்டு எத்தனையோ அநியாயக்காரர்கள் திருந்தியுள்ளனர்,வழிகெட்டவர்கள்
நேர்வழி பெற்றுள்ளனர்.
ஆட்சியாளர்களும்,அமைச்சர்களும்
அவர்களின் உபதேசத்தை கேட்க அங்கு வருவார்கள்.
பொது
மக்களிடம் ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தினார்கள்.
ஐந்தாயிரத்திற்கும்
மேற்பட்ட யூத,மற்றும் கிறுஸ்துவர்கள் அவர்களின் கரம் பிடித்து இஸ்லாத்தை
தழுவியுள்ளனர்.
அல்லாமா
ஜீலானி ரஹ் அவர்கள் இமாம் கஸ்ஸாலி ரஹ் அவர்களின் சிந்தனையால் கவரப்பட்டு,இஹ்யா
உலூமுத்தீன் நூலை தழுவி குன்யா எனும் நூலை எழுதியதாக சில வரலாற்றாசியர்கள்
குறிப்பிடுகின்றர்.
وكان عبد القادر الجيلاني بقي إلى 35 سنة لم
يتزوج سبحان الله إلى 35 سنة ما تزوج ما عنده مال ليتزوج من أين فبعد 35 يقول
رزقني الله سبحانه وتعالى بأربعة نسوة
ورزقه الله تعالى بتسعة وأربعين ولدا ما بين ذكر وأنثى لكن مات
منهم أربعة عشرة ذكرا وأحدى وعشرون أنثى
வறுமையின்
காரணமாக 35 வயதுவரை திருமணம் செய்யவில்லை.
35
வயதுக்கு பின்னர் அல்லாஹ் எனக்கு நான்கு மனைவியையும் 49 பிள்ளைகளையும் கொடுத்ததாக
ஹழ்ரத் அப்துகாதிர் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
قال عنه الإمام الذهبي رحمه الله : الشيخ الإمام
العالم الزاهد العارف القدوة شيخ الإسلام علم الأولياء .
"
سير أعلام النبلاء " ( 20 / 439 )
.
அவர்களை
பற்றி இமாம் ஸஹபி ரஹ் அவர்கள்
அவர்
பெரிய ஷைக்,இமாம்,ஆலிம்,பற்றற்றவர்.ஷைகுல் இஸ்லாம்.
قال الإمام ابن حجر العسقلاني : كان الشيخ عبد
القادر متمسكاً بقوانين الشريعة, يدعو إليها وينفر عن مخالفتها
அல்லாமா
இப்னு ஹஜர் ரஹ் அவர்கள் கூறுகிரார்கள்.
ஆண்மீகத்தில்
உச்சத்தை அடைந்தபோதிலும் ஷரீஅத்தின் நெறியிலிருந்து தவறாதவர்கள்.
ஷரீஅத்திற்கு
மாற்றம் செய்பவர்களை கடுமையாக வெறுத்தார்கள்.
அவர்களின்
உபதேசத்தில் ஒன்று:
كان الشيخ عبد القادر يقول : الخلق حجابك عن
نفسك ، ونفسك حجابك عن ربك
படைப்பினங்கள்
உன் நப்ஸுக்கு திரயிடும்.உன் நப்ஸ் உன் ரப்பை திரையிடும்.அதாவது உன் ரப்பை நீ அறிய
விடாமல் தடை செய்யும்.
عاش الشيخ عبد القادر تسعين سنة وانتقل إلى الله
في عاشر ربيع الآخر سنة إحدى وستين وخمس مائة وشيعه خلق لا يحصون ، ودفن بمدرسته -رحمه
الله تعالى.
தங்களின்
90 வது வயதில்ஹிஜ்ரி 561 ரபீஉல் ஆகிர்
பிறை 10 வஃபாத்தானார்கள்.அவர்களின் மத்ரஸாவில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
இறுதியாக:
இறைநேசர்களாக
வாழுங்கள்! அல்லது
இறைநேசர்களுடன் வாழுங்கள்.
migavum arumai. nalla thalaippu
ReplyDeletealhamdu lillah
ReplyDeleteAlhamdu LILLAAH, tangalin tedalukku ALLAH kooli kodukka podumanavan.
ReplyDeleteInsha ALLAH thangalukku talaipin mudal padiyayum, idai padippavargalukku kurandapatcham irandavadu padiyayavadu naseeb akkuvanaga,..Irai nesargal,sardar RASULULLAH (sallallahu alaihi wasallam) waseela...AMEEN