Wednesday, 16 January 2013

அண்ணலார்-ஒரு அழகிய உபகாரி


ரபீஉல் அவ்வல் மாதம்-மனித சமூகம் மறக்க முடியாத மாதம்.
இதுவரை உலக வரலாறு சந்தித்திராத ஒருமனிதரை சந்தித்தது.ஆம்  அவரின் பிறப்பின் ஓசையில் ரோம் பேரரசும்,பாரசீக வல்லரசும் சப்தமின்றி சரிந்து போனது.
விரல் வைத்து எண்ணிக்கொண்டிருந்த அந்த அரேபிய கூட்டத்தை மூக்கில் விரல் வைத்து உலகமே பேசியது அவரின் மகத்தான சாத  னையாகும்.
மிகப்பெரும் வரலாற்றுக்குச் சொந்தாக்காரரான அவர் –வாழ்கையின் அத்துனை துறைகளுக்கும் வழிகாட்டிச்சென்றார்.
கல்வி,பொருளாதாரம்,அரசியல்,இலக்கியம்,தத்துவம் என அவர் பேசாத எந்த துறையியும் இல்லை என்று கூறுமளவு நிறைவாக வாழ்ந்துவிட்டுச்சென்றார்.
ஹாதமின் கொடையை வரலாறு பார்த்திருக்கிறது,லபீதின் இலக்கியத்தை பார்த்திருக்கிறது,கைஸின் பொருமையை பார்த்திரு  க்கிறது,அந்தராவின் வீரத்தை பார்த்திருக்கிறது,இவை அனைத்தும் ஒருங்கே அமையைப்பெற்ற மாமனிதராக அண்ணல் எம்பெருமான் கண்மணி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மட்டுமே பார்த்தது.
அவர் பிறக்கும் வரை அவரின் பெயரும் கூட அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டது.
அவர் விரும்பியபடி அவர் பிறந்தார்.அவரின் விருப்பத்தின் படியே மரணிக்கவும் செய்தார்.
அவரைப்பற்றி பேசிய அனைத்தும் தனித்துறையானது,தனிக்கலை  யானது.
நாயகம் ஸல் அவர்களின் ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் பற்றி எத்தைனையோ நூட்கள் எழுதப்பட்டு விட்டன,அது அஸ்மாஉர் ரிஜால் எனும் தனிக்கலை அந்தஸ்து பெற்றது.இந்த துறையில் மட்டும் சுமார் ஐந்து இலட்சம் அறிவிப்பாளர்கள் உள்ளனர்.
குறைந்த சொல்லும் நிறைந்த பொருளும் கொண்ட அவரின் ஹதீஸ்களுக்கு விளக்கம் எழுதுவதில் பல்லாயிரக்கணக்கான முஹத்திஸீன்கள் தம்முடைய முழு வாழ்நாளையும் அர்ப்பணித்தும் கூட யாரும் முழுமையாக விளக்கத்தை எழுதி முடிக்கவில்லை.
அவ்வாறே,நாயகத்தின் சொல்லிலிருந்து பல சட்டங்களை எடுப்பதில் ஈடுபட்டிருந்த பல்லாயிரம் இமாம்கள் இதுவரை முடிவு காணவி  ல்லை.
70 ஹதீஸ்களையே மனனம் வைத்திருக்கும் இமாம் அபூஹனீபா ரஹ் ஆறு லட்சம் மார்க்கச்சட்டங்களை இந்த உம்மத்துக்கு தந்திருக்  கிறார்களென்றால் அண்ணலாரின் ஆளமான வரிகளின் விசாலத்த  ன்மையை புரிந்துகொள்ளமுடியும்.
அவரைப்பற்றிய அத்துனை கோனமும் அலசப்பட்டது,அவரின் அங்க அடையாளங்கள் பற்றிய துல்லியமான பதிவும் கூட அவரின் அப்பழுக்கற்ற வாழ்க்கைக்கு சான்றாகும்.
உலகில் எந்த தலைவரின் வாழ்வும் இவ்வளவு திறந்த புத்தகமாக பார்க்க முடியாது
அவருக்கும் அல்குர்ஆனுக்கும் இருக்கும் தொடர்பு மிகவும் நெருக்கமா  னது.
ஆதனால் தான் அன்னாரைப்பற்றி அன்னை ஆயிஷா ரலி அவர்களிடம் கேட்கப்பட்டபோது –அண்ணலாரின் குணம் குர்ஆன் என ஒற்றைவரியில் பதில் சொன்னார்கள்.அதாவது குர்ஆன் கூறும் அனைத்து தன்மைகளையும் உங்கள் நாயகம் ஒருங்கே பெற்று இருந்தார்கள்.
கடலை விட ஆளமான அவர்களின் வாழ்விலிருந்து பண்பாடுகள் எனும் பாட்த்தின் கீழ் ஒரு சில தகவல்களை மட்டும் தெரிந்து கொள்வோம்.
நபி ஸல் அவர்களிடம் இருந்த பண்புகள் குறித்து அல்லாஹ் பல்வேறு இடங்களில் புகழ்ந்து கூறுகிறான்.
உச்சகட்டமாக/நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின்மீது இருக்கிறீர் என்றான்.
நபித்துவத்தின் முதல் ஆதாரமாக தன் குணத்தையே முன் வைக்கிறார்கள்.ஆம்!
இதற்கு முன் 40 ஆண்டுகாலம் உங்களுடன் தானே வாழ்ந்தேன் என் நடத்தையில் ஏதேனும் குறை கண்டீர்களா?என கேட்டார்கள்.
அபூ ஜஹ்லும் கூட –முஹம்மதே!நீர் பொய்யர் என்று நான் சொல்ல மாட்டேன்,உம் கொள்கை எனக்கு ஒத்துவரவில்லை என்று தான் கூறினான்.
இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்த அபூசுப்யான்=சிரியா சென்றபோது ரோமின் ஹிர்கல் மன்னர் சபையில் நாயகம் குறித்து
، ولما سأل هرقل أبا سفيان عن النبي عليه الصلاة والسلام -وقد كان حينها عدوه- أثنى عليه أبو سفيان بجميل الصفات، وعظيم الخلال، وقال معللا ذلك:(وأيم الله لَوْلَا مَخَافَةُ أَنْ يُؤْثَرَ عَلَيَّ الْكَذِبُ لَكَذَبْتُ) رواه الشيخان.
அவரின் நற்குணம் குறித்து புகழ்ந்து கூறினார்கள்,அதற்கு அவர் காரணமும் சொன்னார்-அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவரைப்பற்றி பொய் பேசினால் அது எனக்கு எதேனும் ஆபத்தை கொண்டுவந்துவிடும் என்ற பயம் இல்லாவிட்டால் தைரியமாக நான் பொய் சொல்லியிருப்பேன் என்கிறார்கள்.
நபி ஸல் அவர்களிடம் இருந்த நற்பண்புகளில் –இஹ்சான் எனும் ஒரு பண்பு உண்டு.
கan style="font-family: 'Times வது போல,
நபி ஸல் அவர்கள் தம் வாழ்நாளில் யாருக்கு கடமை பட்டாலும் அதற்கு பரிகாரம் செய்து விடுவார்கள்.
ஒரு சின்ன உதவி யார் செய்தாலும் அதற்கும் பதில் உதவி செய்து விடுவது அண்ணலாரின் மகத்தான குணமாகும்.
அல்லாஹ் தன் திருமறையில்-உபகாரத்திற்கு பதில் உபகாரமே கூலி என்று கூறுவது போல அண்ணாரின் வாழ்வு அமைந்தது.
நான் யாருக்கும் கடன்படவில்லை,கடமைப்பட்டவனில்லை என்று உலகில் யாரும் சொல்ல முடியாது.
மக்காவின் நெருக்கடியான கால கட்டத்தில் நபி ஸல் அவர்களுக்கு மிகவும் பலமாகவும் பாதுகாப்பாகவும் இருந்த மூன்று நபர்கள்-அபூதாலிப்-முத்இம் இப்னு அதி-அன்னை கதீஜா ரலி.
இவர்கள் செய்த உபகாரத்திற்கு நாயகம் எப்படி பதில் உபகாரம் செய்தார்கள்?
ومن وفائه عليه الصلاة والسلام لعمه أبي طالب أنه شفع فيه عند الله تعالى حتى خفف عنه العذاب؛ كما قال العباس رضي الله عنه: "يا رَسُولَ الله، هل نَفَعْتَ أَبَا طَالِبٍ بِشَيْءٍ فإنه كان يَحُوطُكَ وَيَغْضَبُ لك؟ قال: نعم، هو في ضَحْضَاحٍ من نَارٍ لَوْلَا أنا لَكَانَ في الدَّرَكِ الْأَسْفَلِ من النَّارِ" متفق عليه، وفي رواية لمسلم قال صلى الله عليه وسلم: "وَجَدْتُهُ في غَمَرَاتٍ من النَّارِ فَأَخْرَجْتُهُ إلى ضَحْضَاحٍ".
அபூதாலிப் அவர்களுக்கு ஷபாஅத் மூலம் வேதனையை குறைத்தார்கள்
அல்லாஹ்வின் தூதரே!உங்களுங்கு பாதுகாப்பு வழங்கிய,உங்களுக்காக கோப்ப்படும் அபூதாலிப் அவர்களுக்கு நீங்கள் எப்படி பதில் உபகாரம் செய்தீர்கள்?என அப்பாஸ் ரலி அவர்கள் நாயகத்திடம் கேட்ட போது-ஆம் அவர் நரகத்தின் மேல் புறத்தில் வேதனைசெய்யப்படுகிறார்,நான் மட்டும் இல்லையென்றால் நரகத்தின் அடிபாகத்தில் இருப்பார் என பதில் கூறினார்கள்.
கதீஜா ரலி அவர்கள் நபி ஸல் அவர்களுக்கு எவ்வளவு பெரும் உபகாரம் செய்தார்கள் என்பதை நாமறிவோம்,அன்னாருக்கு நபி ஸல் அவர்களின் பதில் உபகாரம் இப்படி அமைந்தது.

أما في حياتها فلم يتزوج عليها؛ وفاء لها، واعترافا بجميلها، وحفظا لحقها، قالت عَائِشَةَ رضي الله عنها: "لم يَتَزَوَّجْ النبي صلى الله عليه وسلم على خَدِيجَةَ حتى مَاتَتْ" رواه مسلم.
அவர்கள் உயிருடன் இருந்தவரை இன்னொரு திருமணம் நபி ஸல் அவர்கள் செய்யவில்லை.என அன்னை ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்

وأما بعد وفاتها رضي الله عنها فكان يذكرها، ويتعاهد بالهدايا صواحبها؛ حتى غارت عائشة رضي الله عنها منها
அவர்களின் மரணத்திற்கு பின்பு அவர்களை பற்றி அதிகமாக நினைவு கூறிக்கொண்டே இருப்பார்கள்,கதீஜா ரலி அவர்களின் தோழிகளுக்கு அன்பளிப்புக்களை அனுப்பி வைப்பார்கள்.
இன்னொரு அறிவிப்பில்,ஆடு அறுத்தால் முதலில் கதீஜாவின் தோழிகளுக்கு கொடுத்தனுப்புங்கள் என்று கூறுவார்கள் என்று வருகிறது.

كان المطعم بن عدي من سادة قريش ولما حُصرت بنو هاشم في الشعب كان يحنو عليهم ويصلهم في السر، وشارك في نقض صحيفة المقاطعة، ولما أوذي النبي صلى الله عليه وسلم في الطائف وعاد منها إلى مكة أجاره المطعم، وذبَّ عنه المشركين، فما نسي النبي صلى الله عليه وسلم له ذلك؛ إذ قال في أُسَارَى بَدْرٍ: (لو كان الْمُطْعِمُ بن عَدِيٍّ حَيًّا ثُمَّ كَلَّمَنِي في هَؤُلَاءِ النَّتْنَى لَتَرَكْتُهُمْ له) رواه البخاري.
முத்யிம் இப்னு அதிய் இவர் குறைஷி தலைவர்களில் ஒருவர்.நபி ஸல் அவர்களின் குடும்பத்தினர்கள் மக்காவாசிகளால் வஞ்சிக்கப்பட்டு ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டு,ஒரு கனவாயில் தங்கினர்.
யாருடைய ஆதரவும் இல்லாத அந்த கால கட்ட்த்தில்-இந்த முத்யிம் இரகசியமாக நபியின் குடும்பத்திற்கு உதவி செய்தார்.ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சட்டத்தை உடைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
மேலும் தாயிபில் நபி ஸல் அவர்கள் வேதனைக்குள்ளாக்கப்பட்டு கவலையுடன் மக்கா திரும்பிய சமயம்-மக்காவில் நுழைவதற்கும் தடை விதித்தனர்,இந்த நெருக்கடியான கால கட்டத்தில் முத்யிம் தன் பாதுகாப்பில் நபி ஸல் அவர்களை மக்காவுக்கு உள்ளே அழைத்து வந்தார்கள்.
இந்த உபகாரத்தை மறக்காத பெருமானார் ஸல் அவர்கள்-
பத்ரின் கைதிகளை பார்த்து இப்போது முத்யிம் உயிருடன் இருந்து,இந்த கைதிகள் விஷயத்தில் என்னிடம் பேசினால்-இவர்களிடம் எந்த ஈட்டுத்தொகையும் பெறாமல் விடுதலை செய்துவிடுவேன் என்றார்கள்
ஒரு சின்ன உதவியானாலும் அதை திருப்பிச்செய்வதில் அதிக அக்கரை எடுத்துக்கொள்வார்கள்.
روى الطبراني في معجمه أن النبي -صلى الله عليه وسلم- رجع مرة من بعض أسفاره فنزل على أعربي في الصحراء فأكرم النبي -عليه الصلاة والسلام-، فقال له النبي -صلوات ربي وسلامي عليه-: "إذا جئت المدينة فأْتِنا".

فلم تمض أيام حتى أقبل ذلك الأعرابي إلى المدينة فنزل على رسول الله -صلى الله عليه وسلم-، فلما أراد أن ينصرف قال له النبي -صلى الله عليه وسلم-: "سَلْني"، يعني اطلب مني حاجة، فقال الرجل في هذا المقام الذي يسأله النبي -صلى الله عليه وسلم- أن يسأله حاجة، وكان حرياً به أن يسأله الجنة أو الشهادة في سبيل الله أو أن يكون مستجاب الدعوة، فإذا بذلك الرجل يقول: "أسألك دابة أركبها"، فوهب النبي -صلى الله عليه وسلم- دابة.

ثم قال له النبي -صلى الله عليه وسلم-: "سلني"، فقال الرجل: وأسألك كلباً يحرس غنمي، فأمر النبي -صلى الله عليه وسلم- أن يوهب إليه كلب يحرس غنمه؛ ثم قال له -صلى الله عليه وسلم-: "سلني"، فقال: وأسألك جارية تخدم أهلي، فوهب له جارية.

ثم سكت الرجل، فقال النبي -عليه الصلاة والسلام- للرجل لائما معنفا على قصور همته وعلى عدم علوها، قال له: "أعَجزتَ أن تكون كعجوز بني إسرائيل؟!"، فقال الصحابة -رضي الله عنهم- يارسول الله! وما عجوز بني إسرائيل؟.

فقال -عليه الصلاة والسلام-: إن موسى لما أراد أن يرتحل بقومه قال له قومه: إن يوسف -عليه السلام- (يعنون النبي الذي قبله) أمرنا ألا نجاوز المكان، وألا نرحل منه حتى نحمله معنا، قال لهم: فأين قبر يوسف -عليه السلام-؟ قالوا لا يعرفه منها أحد إلا عجوز منا. فجيء إليه بهذه العجوز، فإذا عجوز قد كبر سنها، ورق عظمها، وتقدم بها السن، حتى هي تترقب الموت وتودع الحياة، فقال لها موسى -عليه السلام-: أين قبر يوسف -عليه السلام-؟ قالت المرأة: والله لا أدلك عليه حتى تعطيني سؤلي! قال لها: وما سُؤلك؟ قالت: أن أرافقك في الجنة.
நபி ஸல் அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பியபோது ஒரு பாலைவனத்தில் வசித்த ஒரு கிராமவாசியின் இல்லத்தில் தங்கினார்க ள்,அந்த கிராமவாசி நாயகத்தை கண்னியப்படுத்தி உணவளித்தார்.அவரி  டமிருந்து விடைபெறும்போது நீங்கள் மதீனா வந்தால் நம்மிடம் வாருங்கள் என்று நபி சல் அவர்கள் கூறினார்கள்.
சிலநாட்கள் கழித்து அந்த கிராமவாசி மதீனா வந்தார்.அண்ணலாரை சந்தித்தபோது அவரை கண்ணியப்படுத்தி உணவளித்தார்கள்.
பின்பு எதேனும் கேளுங்கள் தருகிறேன் என்றார்கள்,அவர் சுவனத்தை கேட்டிருக்கலாம்,அல்லது ஷஹாதத்தை கேட்டிருக்கலாம்,அல்லது மக்பூலான துஆவை கேட்டிருக்கலாம் ஆனால் அவரோ-எனக்கு வாகனம் வேண்டும் என்றார்.
அவருக்கு வாகனம் கொடுங்கள் என நாயகம் உத்தரவிட்டார்கள்,
மீண்டும் வேறு ஏதேனும் கேளுங்கள் தருகிறேன் என்றார்கள்.
அவரோ-என் ஆடுகளை பாதுகாக்க நாய் வேண்டும் என்றார் அதையும் கொடுத்துவிட்டு வேறு ஏதேனும் கேளுங்கள் என்றார்கள்.
அந்த கிராமவாசியோ-என் குடும்பத்திற்கு பணிவிடை செய்ய வேலைப்பெண் வேண்டும் என்றார்கள்,
அதை கொடுக்க உத்தரவிட்ட நபி ஸல் அவர்கள் அந்த கிராமவாசியை நோக்கி,பனீஇஸ்ராயீலின் கிழவியை விட நீர் இயலாமல் ஆகிவிட்டீர் என்றார்கள்.
அது என்ன கிழவி? என ஸஹாபாக்கள் விளக்கம் கேட்டபோது,யூசுப் நபியின் கப்ர் தெரிந்த ஒரேபெண்ணான அவளிடம் அதை அறிவித்து தரும்படி நபி மூஸா அலை அவர்கள் கேட்க-அதை அறிவிக்கவேண்டு மானால் நான் கேட்பதை கொடுக்க வேந்தும் என்றாள்.
என்ன வேண்டும்?என்றபோது உங்களுடன் சுவனத்தில் இருக்க வேண்டும் என்றாள்,இறுதியில் அவளின் ஆசை நிறைவேரியது என்று நபி ஸல் அவர்கள் கூரினார்கள்.

روى البخاري في صحيحه : عن أنس :
أن غلاما يهوديا كان يضع للنبي صلى الله عليه وسلم وضوءه ويناوله نعليه فمرض فاتاه النبي صلى الله عليه وسلم فدخل عليه وأبوه قاعد عند رأسه فقال له النبي صلى الله عليه وسلم يا فلان قل لا إله الا الله فنظر إلى أبيه فسكت أبوه فأعاد عليه النبي صلى الله عليه وسلم فنظر إلى أبيه فقال أبوه : أطع أبا القاسم فقال الغلام أشهد ان لا إله الا الله وانك رسول الله فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي أخرجه بي من النار.
நபி ஸல் அவர்களுக்கு ஒழுச்செய்ய தண்ணீர் வைத்தல்,அவர்களின் செருப்பை பராமரித்தல் போன்ற பணிகளை செய்து வந்த ஒரு யூத சிறுவர் நோய்வாய்பட்டபோது-அவரை நலம் விசாரிக்கச்சென்ற நபி ஸல் அவர்கள்,அச்சிறுவருக்கு கலிமா சொல்லிக்கொடுத்த்தர்கள்.அச்சி    றுவனோ தன் தலைமாட்டில் இருந்த தன் தந்தையை பார்த்தார்-நபி ஸல் அவர்கள் மீண்டும் கலிமா சொல்லிக்கொடுக்க அச்சிறுவனோ தன் தந்தையை மீண்டும் பார்த்தார்-
அப்போது அவனின் தந்தை –முஹம்மதுக்கு (ஸல்) கட்டுப்படு என்றார்.
உடனே அச்சிறுவன் கலிமாசொல்ல உயிரும் பிரிந்தது.
என் காரணத்தால் அச்சிறுவனை நரகிலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று புகழ்ந்தார்கள்.


في تهذيب الكمال وفي تهذيب التهذيب لابن حجر في ترجمة أبي سفيان عن جعفر بن سليمان الضبعي عن ثابت البناني أنه قال: إنما قال النبي صلى الله عليه وسلم: "من دخل دار أبي سفيان فهو آمن"، لأنه أوذي في الجاهلية فدخل داره
மக்கா வெற்றியில் அபூ ஸுப்யான் வீட்டில் நுழந்தவர் பாதுகாப்பு பெற்றார் என நாயகம் சொன்னதற்கு காரணம்-ஆரம்ப நாட்களில் மக்காவில் தான் துன்புறுத்தப்பட்டபோது அவரின் வீடு அடைக்கலம் தந்ததின் நன்றிகடனாக தான் இவ்வாறு அறிவிப்புச்செய்த்தாக அல்லாமா ஸாபிதுல் பன்னானி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

مَن صَنَعَ إِليكُم مَعرُوفًا فَكَافِئُوه ، فَإِن لَم تَجِدُوا مَا تُكَافِئُوا بِهِ فَادعُوا لَهُ حَتَّى تَرَوا أَنَّكُم قَد كَافَأتُمُوهُ ) رواه أبو داود (1672) وصححه الألباني .
உங்களுக்கு உபகாரம் செய்தவர்களுக்கு பதில் உபகாரம் செய்யுங்கள்.
முடியாவிட்டால் அவருக்காக துஆ செய்யுங்கள்.












3 comments: