மனிதர்கள் ஒருவரை
ஒருவர் சந்திக்கும் போது பல்வேறு வகையில் வாழ்த்து கூறிக் கொள்கின்றனர். இந்த வாழ்த்துகளில்
இஸ்லாம் கூறும் வாழ்த்து பல வகையில் சிறந்து விளங்குவதைப் பிற மதத்து நடுநிலையாளர்களும்
ஏற்றுக் கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது வணக்கம் என்றும் நமஸ்தே என்றும்
மற்றும் இந்தப் பொருளில் அமைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியும் வாழ்த்து கூறுகின்றனர்.
நாம் சிந்திக்கும் போது இதில் பல குறைபாடுகள் உள்ளதைக் காணலாம்.
வணக்கம் என்றால்
வணங்குதல், அது போல் ஆங்கிலக்
கலாச்சார ஊடுறுவல் காரணமாக நல்ல காலை. நல்ல பகல், நல்ல மாலை, நல்ல இரவு என்றெல்லாம்
கூறும் வழக்கம் பரவிவிட்டது. இது எல்லா நேரத்திலும் சொல்ல முடியாத வாழ்த்தாகவுள்ளது.
மனிதர்கள் நல்ல நிலையில் இருப்பது பாதி என்றால் கவலை துன்பம் போன்ற கெட்ட நிலை பாதியாக
உள்ளது. மரண வீட்டிலோ நோயாளியிடமோ, பெரும் நட்டமடைந்தவரிடமோ பரீட்சையில் ஃபெயிலானவனிடமோ நல்ல காலை, நல்ல மாலை என்று கூற முடியாது. அது பொருத்தமாக
இருக்காது. ஆனால் இஸ்லாம் கூறும் அஸ்ஸலாமு அலை(க்)கும் வாழ்த்து பொய் கலப்பில்லாததாகவும்
எல்லா நேரத்துக்கும் ஏற்றதாகவும் அமைந்துள்ளது.
அஸ்ஸலாமு அலை(க்)கும்
என்றால் 'உங்கள் மீது சாந்தி
உண்டாகட்டும்' என்று பொருள். திருமண
வீட்டுக்கும் சாந்தி தேவை. மரண வீட்டுக்கும் சாந்தி தேவை. இலாபம் அடைந்தவனுக்கும் சாந்தி
தேவை. நட்டம் அடைந்தவனுக்கும் சாந்தி தேவை. மனித வாழ்வின் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும்
அனைவரிடமும் பயன்படுத்தத் தக்க ஒரே வாழ்த்து ஸலாம் கூறுதல் மட்டுமே.
ஸலாம்
சொர்க்கத்தில் உருவானது.
عن أبي هريرة قال : قال رسول الله صلى
الله عليه وسلم : " خلق الله آدم على صورته طوله ذراعا فلما خلقه قال اذهب فسلم
على أولئك النفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحية ذريتك
فذهب فقال : السلام عليكم فقالوا : السلام عليك ورحمة الله " قال : " فزادوه
ورحمة الله " . قال : " فكل من يدخل الجنة على صورة آدم وطوله ستون ذراعا
فلم يزل الخلق ينقص بعده حتى الآن "
அல்லாஹ் ஆதமை அவருக்குரிய (அழகிய) உருவில் படைத்தான்.
அப்போது அவரது உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது நீங்கள்
சென்று அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள்.
அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில்
அதுதான் உங்களது முகமனும் உங்களது சந்ததிகளின் முகமனும் ஆகும். என்று இறைவன்
சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று) அஸ்ஸலாமு அலைக்கும்
என்று முகமன் சொன்னார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (சாந்தியும் இறைவனின்
கருணையும் உங்கள் மீது நிலவட்டும்) என்று வானவர்கள் பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்
: அபூஹுரைரா (ரலி)
நூல்
: புகாரி (6227)
ஸலாம்
கூறுவதால் அன்பு உண்டாகும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَدْخُلُونَ
الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ
عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ
'நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. ஒருவரை ஒருவர் நேசிக்காமல்
நம்பிக்கை கொண்டவர்களாக முடியாது. ஒரு செயலைச் செய்தால் நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பீர்கள்.
அச்செயலை நான் உங்களுக்குக் கூறட்டுமா?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு 'உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்' என்றனர்.
நூல் : முஸ்லிம்
81
عبد الله بن سلامٍ رضي الله
عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: يا أيها الناس أفشوا السلام، وأطعموا
الطعام، وصلوا الأرحام، وصلوا والناس نيامٌ، تدخلوا الجنة بسلامٍ رواه الترمذي وقال:
حديثٌ حسنٌ صحيحٌ.
’மனிதர்களே! ஸலாம்
கூறுவதை பரப்புங்கள். பசித்தவனுக்கு உணவளியுங்கள். உறவினர்களை ஆதரியுங்கள். மக்கள்
தூங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் தொழுங்கள். ’ஸலாம் கூறுவது மூலம் சொர்க்கத்தில் நுழையுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர் : அப்துல்லா
இப்னு ஸலாம்(ரலி)
ஆதாரம் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 849
வீட்டிற்குள்
நுழையும் போது சலாம்
வீட்டிற்குள் நுழையும் போது சலாம் கூறி நுழையும் வழக்கம்
நம்மில் அதிகமானோரிடத்தில் இல்லை.. நாகரீகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இக்காலகட்டத்தில் இந்த ஒழுங்கு
பேணப்படுவதில்லை. தன்னுடைய சொந்த வீடாக இருந்தாலும் சலாம் சொல்லியே வீட்டிற்குள்
நுழைய வேண்டும் என நம்மார்க்கம் பணிக்கிறது.
ஒருவருடைய வீட்டிற்கு நாம்
செல்லும் போது அவர் எந்த நிலையில் இருப்பார் என்பதை நாம் அறிந்திருக்கமாட்டோம்.
பெண்கள் பெரும்பாலும் வெளியே தங்களுடைய உடல்களை மறைக்கும் அளவுக்கு வீட்டில்
மறைக்கமாட்டார்கள். தன்னுடைய வீடு என்பதால் ஆடை விஷயத்தில் கவனக்குறைவாக
இருப்பார்கள். வருபவர் சலாம் கூறி அனுமதி பெற்று நுழைந்தால் யாரோ ஒருவர் வருகிறார்
என்று அவர்கள் புரிந்து கொண்டு எச்சரிக்கையாக நடந்துகொள்வார்கள்.
பிறரது வீட்டில் அனுமதியின்றி
நுழைவது ஒழுக்கக் கேடான செயலாகவும் உள்ளது. மனிதனுக்கு ஒழுக்க மாண்புகளை
கற்றுத்தருகின்ற இஸ்லாம் இந்த ஒழுங்குமுறையை மிகவும் வலியுறத்திச் சொல்கிறது. சலாம்
கூறாமலும் அனுமதி பெறாமலும் வீட்டிற்குள் நுழைவதை தடை செய்கிறது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ
حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ
تَذَكَّرُونَ
நம்பிக்கை கொண்டோரே! உங்கள்
வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம்
கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.
அல்குர்ஆன்
24:27
فَإِنْ لَمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ
لَكُمْ وَإِنْ قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ بِمَا
تَعْمَلُونَ عَلِيمٌ
அங்கே எவரையும் நீங்கள்
காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்!
"திரும்பி விடுங்கள்!'' என்று
உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது.
நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.
அல்குர்ஆன் (24 : 28)
عَنْ أَنَسٍ أَوْ غَيْرِهِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَأْذَنَ
عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ فَقَالَ
سَعْدٌ وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَلَمْ يُسْمِعْ النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى سَلَّمَ ثَلَاثًا وَرَدَّ عَلَيْهِ سَعْدٌ ثَلَاثًا
وَلَمْ يُسْمِعْهُ فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاتَّبَعَهُ
سَعْدٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي مَا سَلَّمْتَ تَسْلِيمَةً
إِلَّا هِيَ بِأُذُنِي وَلَقَدْ رَدَدْتُ عَلَيْكَ وَلَمْ أُسْمِعْكَ أَحْبَبْتُ أَنْ
أَسْتَكْثِرَ مِنْ سَلَامِكَ وَمِنْ الْبَرَكَةِ ثُمَّ أَدْخَلَهُ الْبَيْتَ فَقَرَّبَ
لَهُ زَبِيبًا فَأَكَلَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا
فَرَغَ قَالَ أَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمْ الْمَلَائِكَةُ
وَأَفْطَرَ عِنْدَكُمْ الصَّائِمُونَ
நபி (ஸல்) அவர்கள் ஒருவருடைய
இல்லத்திற்குச் செல்லும் போது மூன்று முறை சலாம் கூறி அனுமதி கோருவார்கள். பதில்
வந்தால் வீட்டின் உள்ளே செல்வார்கள். இல்லெயென்றால் திரும்பச் சென்றுவிடுவார்கள்.
عَنْ أَنَسٍ أَوْ غَيْرِهِ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَأْذَنَ
عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ فَقَالَ
سَعْدٌ وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَلَمْ يُسْمِعْ النَّبِيَّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى سَلَّمَ ثَلَاثًا وَرَدَّ عَلَيْهِ سَعْدٌ ثَلَاثًا
وَلَمْ يُسْمِعْهُ فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاتَّبَعَهُ
سَعْدٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ بِأَبِي أَنْتَ وَأُمِّي مَا سَلَّمْتَ تَسْلِيمَةً
إِلَّا هِيَ بِأُذُنِي وَلَقَدْ رَدَدْتُ عَلَيْكَ وَلَمْ أُسْمِعْكَ أَحْبَبْتُ أَنْ
أَسْتَكْثِرَ مِنْ سَلَامِكَ وَمِنْ الْبَرَكَةِ ثُمَّ أَدْخَلَهُ الْبَيْتَ فَقَرَّبَ
لَهُ زَبِيبًا فَأَكَلَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا
فَرَغَ قَالَ أَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمْ الْمَلَائِكَةُ
وَأَفْطَرَ عِنْدَكُمْ الصَّائِمُونَ
நபி (ஸல்) அவர்கள் சஃத் பின்
உபாதா அவர்களிடம் (வீட்டின் உள்ளே வர) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று
சலாம் கூறி அனுமதி கோரினார்கள். சஃத் நபி (ஸல்) அவர்களுக்குக் கேட்காதவாறு
(வேண்டுமென்றே) வஅலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹ் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்
மூன்று முறை சலாம் சொல்ல சஃதும் மூன்று முறை பெமானாருக்குக் கேட்காதவாறு
பதில்சலாம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் திரும்பிவிட்டார்கள். சஃத் அவர்களை
பின்தொடர்ந்து சென்று அல்லாஹ்வின் தூதரே என்தாயும் தந்தையும் தங்களுக்கு
அற்பணமாகட்டும். நீங்கள் கூறிய சலாம் அனைத்தும் என்காதில் விழாமல் இருக்கவில்லை.
உங்களுக்குக் கேட்காதவாறு உங்களுக்கு நான் பதில் கூறினேன். உங்களது சலாத்தையும்
பரகத்தையும் நான் அதிகம் பெற விரும்பினேன் என்று கூறினார்.
அறிவிப்பவர்
: அனஸ் (ரலி)
நூல்
: அஹ்மத் (11957,14928)
وعن أنسٍ رضي الله عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم: يا
بني، إذا دخلت على أهلك، فسلم، يكن بركةً عليك، وعلى أهل بيتك رواه الترمذي وقال: حديث
حسن صحيح.
”மகனே! உன் குடும்பத்தாரிடம்
நீ சென்றால், நீ ஸலாம் கூறு! அது
உனக்கும், உன் வீட்டில் இருப்போருக்கும்
அபிவிருத்தியாக இருக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்
: அனஸ் (ரலி)
நூல் : திர்மிதீ, ரியாளுஸ்ஸாலிஹீன்: 861
ஆள்இல்லா
வீட்டில் நுழையும் போது
வீட்டில் யாரும் இல்லையென்றால்
நம்முடைய வீடாகஇருந்தாலும் சலாம் சொல்லிய நுழைய வேண்டும். இந்நேரத்தில் நாம்
நமக்காகவே சலாம் சொல்லிக் கொள்கிறோம். வீட்டிற்குள் வந்துவிட்டதால் எந்த தீங்கும்
நமக்கு நேரிடாது யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை என்று நாம் விளங்கிக் கொள்ளக்
கூடாது. சொகுசு அறையில் படுத்து உறங்குபவனுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆகையால்
எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் சாந்தி நமக்குத் தேவைப்படுகிறது. பின்வரும் வசனம்
நாம் நமக்கே சலாம் கூறிக்கொள்ள வேண்டும் என கட்டளையிடுகின்றது.
فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا
فَسَلِّمُوا عَلَى أَنْفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِنْدِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً
كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
வீடுகளில் நுழையும் போது
அல்லாஹ்விடமிருந்து பாக்கியமிக்க தூய்மையான காணிக்கையாக உங்கள் மீதே ஸலாம் கூறிக்
கொள்ளுங்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறே உங்களுக்கு வசனங்களை அல்லாஹ்
தெளிவு படுத்துகிறான்.
அல்குர்ஆன்
(24 : 61)
கணவன்
மனைவிக்குள் சலாம்
பலர் நண்பர்களிடத்தில் சலாம்
கூறிக்கொள்வார்கள். ஆனால் தன்னுடைய வீட்டார்களை அல்லது உறவினர்களை சந்திக்கும்
போது சலாம் கூறமாட்டார்கள். புதிதாக சலாம் கூறுவதற்கு கூச்சமும் உறவும்
அவர்களுக்கு தடையாக அமைந்துவிடுகின்றது. கணவன் மனைவியாக இருந்தாலும் தந்தை மகனாக
இருந்தாலும் சலாம் கூறுவதற்கு தயங்கக்கூடாது. பேசக்கூடாத பேச்சுக்களை பேசுவதற்கு
வெட்கப்படாத நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வழிமுறையை கடைபிடிக்க ஏன்
வெட்கப்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் மனைவி
ஆயிஷா (ரலி) அவர்கள் பெருமானாரை விட அதிக வயது குறைந்தவர்கள். ஆனாலும் நபி (ஸல்)
அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வரும்போது சலாம் கூறி நுழையும் பழக்கம்
கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். குறிப்பாக ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி கயவர்கள்
அவதூறுகளைப் பரப்பியதால் நபி (ஸல்) அவர்கள் அவர்களின் மீது சந்தேகம் கொண்ட
நேரத்திலும் சலாம் சொல்வதை கைவிடவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் என்னிடம் வந்து சலாம் கூறிவிட்டு நீங்கள் எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்
: ஆயிஷா (ரலி)
நூல்
: புகாரி (2661)
நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு
ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்குச் சென்று வீட்டாலே அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மதுல்லாஹ் (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.)
என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ் (தங்கள்
மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்.) தங்களின் (புதிய)
துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்?பாரகல்லாஹ்
(அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்) என்று (மணவாழ்த்துச்) சொன்னார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் தங்களின் துணைவியர் அனைவரின் இல்லங்களையும் தேடிச் சென்று
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு சொன்னது போன்றே (முகமன்) சொல்ல அவர்களும் ஆயிஷா
(ரலி)அவர்கள் சொன்னது போன்று (பிரதிமுகமனும் மணவாழ்த்தும்) கூறினார்கள்.
அறிவிப்பவர்
: அனஸ் (ரலி)
நூல்
: புகாரி (4793)
பலமுறை
சலாம் கூறுதல்
ஒருவரை
நாம் சந்திக்கும் போது சலாம் கூறிவிட்டோம். பிறகு மீண்டும் அவர் நம் கண்ணில்
தென்படும் போது மறுபடியும் சலாம் கூறிக்கொள்வதில் தவறேதும் இல்லை. நபி (ஸல்)
அவர்களுக்கு சஹாபாக்கள் பலமுறை சலாம் கூறியுள்ளார்கள்.
ஒரு மனிதர் பள்ளிவாசலில்
நுழைந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில்
அமர்ந்திருந்தார்கள். (பள்ளிக்குள் நுழைந்த அவர்) தொழுதார். பிறகு அவர் (நபி (ஸல்)
அவர்களிடம் வந்து) அவர்களுக்கு சலாம் கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் வஅலைக்கஸ் ஸலாம் திரும்பச் சென்று தொழு. ஏனெனில் நீ முறையாகத் தொழவில்லை
என்றார்கள். ஆகவே அவர் திரும்பிச் சென்று தொழுதார். பிறகு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு
சலாம் சொன்னார். அப்போதும் அவர்கள் வஅலைக்கஸ்
ஸலாம் திரும்பச் சென்று தொழு. ஏனெனில் நீ முறையாகத் தொழவில்லை என்றார்கள்.
இரண்டாம் தடைவையிலோ அல்லது அதற்குப் பின்போ அவர் அல்லாஹ்வின் தூதரே! எனக்குத்
(தொழுகை முறையைக்) கற்றுத்தாருங்கள் என்றார்.
அறிவிப்பவர்
: அபூஹுரைரா (ரலி)
நூல்
: புகாரி (6251)
யூதர்களைப் போல் ஸலாம்
கூறுதல் கூடாது
وعن
عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهم أن رسول
الله صلى الله عليه وسلم قال : " ليس منا من تشبه بغيرنا لا تشبهوا باليهود ولا
بالنصارى فإن تسليم اليهود الإشارة بالأصابع وتسليم النصارى الإشارة بالأكف "
. رواه الترمذي
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள் ” யூதர்கள் மற்றும்
கிறிஸ்தவர்கள் ஸலாம் கூறுவதைப் போல் நீங்கள் ஸலாம் கூறாதீர்கள். அவர்களுடைய ஸலாம் கூறுதலாகிறது
(வார்தைகள் இல்லாமல்) முன்கைகள் மூலமும், தலை (தாழ்த்துவதின்) மூலமும். சைக்கினையின் மூலமும் ஆகும்.
அறிவிப்பவர் : ஜாபிர்
பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : அஸ் ஸýனனுல் குப்ரா பாகம் : 6 பக்கம் : 92
தூரத்தில்
உள்ளவர்களுக்கு கைகளால் சைக்கினை செய்து மெதுவாக ஸலாம் கூறுதல்
سَمِعْتُ
أَسْمَاءَ بِنْتَ يَزِيدَ تُحَدِّثُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ فِي الْمَسْجِدِ
يَوْمًا وَعُصْبَةٌ مِنْ النِّسَاءِ قُعُودٌ فَأَلْوَى بِيَدِهِ بِالتَّسْلِيمِ وَأَشَارَ
عَبْدُ الْحَمِيدِ بِيَدِهِ
பெண்களில் சிறுகூட்டத்தினர்
பள்ளிவாசல் அமர்ந்திருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் அவர்களைக் கடந்து சென்றார்கள்.
அப்போது அவர்களுக்கு ஸலாம் கூறி தன்னுடைய கைகளை அசைத்தார்கள்.
அறிவிப்பவர் : அஸ்மா
பின்த் யஸீத் (ரலி)
நூல் : திர்மிதி
(2621
தூரத்தில்
இருப்பவருக்கு சலாத்தை எத்திவைக்கும் முறை
தூரத்தில் இருக்கும் நம்முடைய
உறவினர்களுக்காக அவர்களை சந்திக்கச் செல்பவர்களிடத்தில் தன்சார்பில் சலாத்தை
சொல்லி அனுப்புவதற்கு அனுமதியுள்ளது. ஆயிஷா (ரலி) அவர்களுக்காக ஜிப்ரீல் (அலை)
அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சலாம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இதை ஆயிஷா
(ரலி) அவர்களிடம் கூறிய போது வஅலைஹிஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹþ (அவர்கள் மீதும் சாந்தியும் அல்லாஹ்வின் அருளும்
அபிவிருத்தியும் உணிடாகட்டும்) என்று ஆயிஷா (ரலி) அவர்கள் பதில் சலாம்
கூறினார்கள். கண்முன்னே நபர்
இல்லாதகாரணத்தினால் சலாம் சொல்லும் போது வஅலைஹி (அவர் மீது) என்று படர்க்கையாக கூற
வேண்டும். வெகுதொலைவில் இருப்பவர்களை நம்மால் நேரடியாக சந்திக்க முடியாவிட்டாலும்
மார்க்கம் காட்டித்தந்துள்ள இந்த வழிமுறையை கடைபிடித்தால் உறவுகள் நட்புகள்
தொடர்பு அறுந்துவிடாமல் பாசமும் அன்பும் நீண்டகாலம் நீடிக்க வழிவகை ஏற்படும்.
إِنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا يَا
عَائِشَ هَذَا جِبْرِيلُ يُقْرِئُكِ السَّلَامَ فَقُلْتُ وَعَلَيْهِ السَّلَامُ وَرَحْمَةُ
اللَّهِ وَبَرَكَاتُهُ تَرَى مَا لَا أَرَى تُرِيدُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) ஆயிஷே இதோ ஜிப்ரீல் உமக்கு சலாம் கூறுகிறார் என்று கூறினார்கள். அதற்கு
நான் வஅலைஹிஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு (அவர்கள் மீதும் சாந்தியும் அல்லாஹ்வின் அருளும்
அபிவிருத்தியும் உணிடாகட்டும்) என்று கூறிவிட்டு (அல்லாஹ்வின் தூதரே) நான்
காணாததையெல்லாம் நீங்கள் காணுகிறீர்கள் என்று கூறினேன்.
அறிவிப்பவர்
: ஆயிஷா (ரலி)
நூல்
: புகாரி (3768)
இது
போன்று அன்னை கதீஜா (ரலி) அவர்களுக்கும் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் சலாம்
கூறியுள்ளார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ
رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
أَتَى جِبْرِيلُ النَّبِيَّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ خَدِيجَةُ قَدْ
أَتَتْ مَعَهَا إِنَاءٌ فِيهِ إِدَامٌ أَوْ طَعَامٌ أَوْ شَرَابٌ فَإِذَا هِيَ أَتَتْكَ
فَاقْرَأْ عَلَيْهَا السَّلَامَ مِنْ رَبِّهَا وَمِنِّي وَبَشِّرْهَا بِبَيْتٍ فِي
الْجَنَّةِ مِنْ قَصَبٍ لَا صَخَبَ فِيهِ وَلَا نَصَبَ
(ஒரு முறை) நபி (ஸல்)
அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே இதோ கதீஜா
தன்னுடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு
உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய
இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில்
கூச்சல் குழப்பமோ களைப்போ காணமுடியாத முத்துமாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக
நற்செய்தி சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்
: அபூஹுரைரா (ரலி)
நூல்
: புகாரி (3820)
பிறர் இடம் ஸலாம் சொல்லி
விடுவது
நபி
(ஸல்) அவர்களுக்கு சஹாபாக்கள் ஆட்களின் மூலம் சலாத்தை சொல்லி அனுப்பியுள்ளார்கள்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
تَزَوَّجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَدَخَلَ
بِأَهْلِهِ قَالَ وَصَنَعَتْ أُمِّي أُمُّ سُلَيْمٍ حَيْسًا قَالَ فَذَهَبَتْ بِهِ
إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ إِنَّ أُمِّي تُقْرِئُكَ
السَّلَامَ
நபி (ஸல்) அவர்கள் திருமணம்
முடித்து தனது மனைவியுடன் உடலுறவு கொண்டுவிட்டார்கள். (அப்போது) எனது தாய் உம்மு
சுலைம் அவர்கள் ஹைஸை (பால் நெய் பேரித்தம்பழம் ஆகியவற்றால் ஆன உணவை) தயாரித்து
வைத்திருந்தார்கள். நான் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று எனது தாய்
உங்களுக்கு சலாம் கூறினார்கள் எனக் கூறினேன்.
அறிவிப்பவர்
: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்
: நஸயீ (3334)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
إِنِّي لَأَرْجُو إِنْ طَالَتْ بِي حَيَاةٌ أَنْ أُدْرِكَ عِيسَى ابْنَ
مَرْيَمَ عَلَيْهِ السَّلَام فَإِنْ عَجِلَ بِي مَوْتٌ فَمَنْ أَدْرَكَهُ فَلْيُقْرِئْهُ
مِنِّي السَّلَامَ
எனது வாழ்நாள் நீடிக்குமேயானால்
மர்யமின் மகன் ஈஸாவை நான் சந்திக்க வேண்டும் என ஆசைப்படுவேன். எனக்கு மரணம்
விரைவில் சம்பவித்துவிட்டால் உங்களில் யார் அவரை சந்திக்கிறாரோ அவர்
என்புறத்திலிருந்து அவருக்கு சாலம் சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பாளர்
: அபூஹுரைரா (ரலி)
நூல்
: அஹ்மத் (7629,7630)
நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களுக்கு சலாத்தை எத்திவைக்கும் படி
கூறியிருக்கிறார்கள்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ فَتًى مِنْ الْأَنْصَارِ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ
الْجِهَادَ وَلَيْسَ لِي مَالٌ أَتَجَهَّزُ بِهِ فَقَالَ اذْهَبْ إِلَى فُلَانٍ الْأَنْصَارِيِّ
فَإِنَّهُ قَدْ كَانَ تَجَهَّزَ وَمَرِضَ فَقُلْ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ يُقْرِئُكَ السَّلَامَ وَيَقُولُ لَكَ ادْفَعْ إِلَيَّ مَا تَجَهَّزْتَ
بِهِ فَقَالَ لَهُ ذَلِكَ فَقَالَ يَا فُلَانَةُ ادْفَعِي إِلَيْهِ مَا جَهَّزْتِنِي
بِهِ وَلَا تَحْبِسِي عَنْهُ شَيْئًا فَإِنَّكِ وَاللَّهِ إِنْ حَبَسْتِ عَنْهُ شَيْئًا
لَا يُبَارِكُ اللَّهُ لَكِ فِيهِ قَالَ عَفَّانُ إِنَّ فَتًى مِنْ أَسْلَمَ
அன்சாரிகளில் ஒரு இளைஞர்
அல்லாஹ்வின் தூதரே நான் ஜிஹாத் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். தயார்
செய்வதற்கென்று என்னிடத்தில் எந்தப் பொருளும் இல்லை என்று கூறினார். அதற்கு நபி
(ஸல்) அவர்கள் (அவரிடம்) அன்சாரிகுலத்தைச் சார்ந்த இந்த நபரிடம் செல். அவர்
(போருக்கான ஏற்பாடுகளை) தயார்செய்து வைத்திருந்தார். பிறகு நோய்வாய்ப்
பட்டுவிட்டார். ஆகையால் நீ (அவரிடம் சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
உங்களுக்கு சலாம் கூறினார்கள். இன்னும் நீங்கள் தயார் செய்துவைத்திருந்ததை
என்னிடத்தில் ஒப்படைக்கும் படி கூறினார்கள் என்று சொல் என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்
: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்
: அஹ்மத் (12684)
சலாம்
சொல்லக்கூடாத நேரங்கள்
عَنْ نَافِعٍ عَنْ ابْنِ
عُمَرَ
أَنَّ رَجُلًا سَلَّمَ
عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَبُولُ فَلَمْ يَرُدَّ
عَلَيْهِ
قَالَ أَبُو عِيسَى هَذَا
حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَإِنَّمَا يُكْرَهُ هَذَا عِنْدَنَا إِذَا كَانَ عَلَى الْغَائِطِ
وَالْبَوْلِ وَقَدْ فَسَّرَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ ذَلِكَ وَهَذَا أَحَسَنُ شَيْءٍ
رُوِيَ فِي هَذَا الْبَابِ قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَاب عَنْ الْمُهَاجِرِ بْنِ
قُنْفُذٍ وَعَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ وَعَلْقَمَةَ بْنِ الْفَغْوَاءِ وَجَابِرٍ
ஒருவர் மலம் ஜலம் கழிக்கும்
போது அவருக்கு சலாம் சொல்லக்கூடாது. அப்படியே ஒருவர் கூறினாலும் நாம் அந்த
நேரத்தில் பதில் சலாம் சொல்லக்கூடாது. ஏனென்றால் இந்நேரங்களில் சலாம்மட்டுமல்ல
பொதுவாக எந்தப் பேச்சையும் பேசக்கூடாது. சாதாரண பேச்சுகளையே தவிர்ந்துகொள்ள
வேண்டும் என்கிறபோது பிரார்த்தனையாக இருக்கக்கூடிய சலாத்தை எப்படி அந்நேரத்தில்
கூறமுடியும்?. எனவே
நபி (ஸல்) அவர்கள் இதை தடைசெய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருக்கும் நிலையில் ஒருமனிதர் அவர்களை
கடந்து சென்றார். அப்போது அவர் (பெருமானருக்கு) சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள்
அவருக்கு பதில் சலாம் கூறவில்லை.
அறிவிப்பவர்
: இப்னு உமர் (ரலி)
நூல்
: முஸ்லிம் (555) திர்மிதி (83)
இயற்கைத் தேவையை நிறைவேற்றியதற்குப் பின்னால் சலாம்
சொன்னவருக்கு பதில் சலாம் கூற வேண்டும்.
عَنْ ابْنِ عُمَرَ قَالَ
أَقْبَلَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْغَائِطِ فَلَقِيَهُ رَجُلٌ عِنْدَ بِئْرِ
جَمَلٍ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَقْبَلَ عَلَى الْحَائِطِ فَوَضَعَ يَدَهُ عَلَى الْحَائِطِ
ثُمَّ مَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ رَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ عَلَى الرَّجُلِ السَّلَامَ
அசுத்தமான நிலையில் இருக்கும் போதோ அல்லது அசுத்தமான
இடங்களில் இருக்கும் போதோ சலாம் சொல்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். பின்வரும்
ஹதீஸ் அசுத்தமான இடங்களில் சலாம் சொல்லக்கூடாது என கூறுகிறது. வணக்கவழிபாடுகள் செய்யும் போது
ஒழுவுடன் செய்வது சிறப்பிற்குரியது என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிந்துகொள்ளலாம்
நபி (ஸல்) அவர்கள் இயற்கைத்
தேவையை நிறைவேற்றிவிட்டு வந்துகொண்டிருந்த போது ஒரு மனிதர் ஜமல் என்ற கிணற்றுக்கு
அருகே அவர்களை சந்தித்து சலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் சுவற்றுக்கு அருகே
வந்து கைகளை சுவற்றில் வைத்து பிறகு அதை தன் முகத்திலும் கைகளிலும்
தடவிக்கொண்டார்கள். பிறகு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
பதில்சலாம் கூறினார்கள்..
அறிவிப்பவர்
: அபூ ஜýஹைர்
(ரலி), இப்னு உமர் (ரலி)
நூல்
: அபூதாவுத் (280) புகாரி (337)
ஆரம்பக்காலக்கட்டங்களில்
நபித்தோழர்கள் தொழுகையில் இருக்கும் ஒருவருக்கு சலாம் கூறிக்கொண்டு இருந்தார்கள்.
தொழுபவரும் தொழுகையில் இருந்து கொண்டே பதில் சலாம் கூறுவார். பிறகு இந்த வழிமுறை
மாற்றப்பட்டுவிட்டது.
عَنْ سُفْيَانَ عَنْ الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ عَنْ كُلْثُومٍ عَنْ
عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَهَذَا حَدِيثُ الْقَاسِمِ قَالَ
كُنْتُ آتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي
فَأُسَلِّمُ عَلَيْهِ فَيَرُدُّ عَلَيَّ فَأَتَيْتُهُ فَسَلَّمْتُ عَلَيْهِ وَهُوَ
يُصَلِّي فَلَمْ يَرُدَّ عَلَيَّ فَلَمَّا سَلَّمَ أَشَارَ إِلَى الْقَوْمِ فَقَالَ
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَعْنِي أَحْدَثَ فِي الصَّلَاةِ أَنْ لَا تَكَلَّمُوا
إِلَّا بِذِكْرِ اللَّهِ وَمَا يَنْبَغِي لَكُمْ وَأَنْ تَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
நபி (ஸல்) அவர்கள்
தொழுதுகொண்டிருக்கும் நிலையில் நான் அவர்களிடம் வந்து சலாம் சொல்வேன். எனக்கு
பதில் சலாம் சொல்வார்கள். (ஒருமுறை) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது
அவர்களுக்கு சலாம் கூறினேன். எனக்கு பதில் சலாம் அவர்கள் கூறவில்லை. அவர்கள்
(தொழுது முடித்து) சலாம் கொடுத்தபோது மக்களை நோக்கி கண்ணியத்திற்குரிய
மகத்துவமிக்க அல்லாஹ் தொழுகையில் அல்லாஹ்வின் திக்ருகளைத் தவிர வேறெதையும் நீங்கள்
மொழியக்கூடாது என (புதிதாக) ஏற்படுத்தியுள்ளான். நீங்கள் அல்லாஹ்விற்கு
கட்டுப்பட்டு நிற்பதற்கு உங்களுக்கு என்ன (சிரமம்)? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்
: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்
: நஸயீ (1205)
தெரிந்தவருக்கு
மட்டும் ஸலாம் சொல்வது நல்லோரின் பண்பாடு அல்ல
தெரிந்தவருக்கு மட்டும்
ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
This comment has been removed by the author.
ReplyDeleteAssalamu alaikkum va rahmatullahi va barakattuhu.
ReplyDelete