வெற்றிக்கும்
விழிப்புணர்வுக்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு தொழுகையில் கவனம் உள்ளவன் இறைவனைப் பெற்றுக் கொள்கிறான். தொழுகையில் கவனம் உள்ளவன் இறைவனை பெற்றுக்கொள்கிறான். போர்களத்தில் கவனமாக இருப்பவன் எதிரியை வெற்றிக்கொள்வான். வகுப்பறையில் கவனமாக இருந்தவன் எதிர்காலத்தில் சாதனை படைப்பான். திருமண பருவத்தில் தங்கள் குழந்தைகளுக்கு ஸாலிஹான ஜோடிகளை சேர்த்துவைப்பதில் கவனம் செலுத்தியிருந்தால் இல்லற வாழ்க்கையில் ஜெயிப்பார்கள். இவ்வாறு கவனுத்துடன் செய்யப்படுகிற ஒவ்வொரு காரியத்திலும் மனிதன் வெற்றியை அடைந்துகொள்கின்றான்.
கொஞ்சம்
கவனமின்மையால் ஏற்பட்ட இழப்பு
فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ
لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِن سَوْآتِهِمَا وَقَالَ مَا نَهَاكُمَا
رَبُّكُمَا عَنْ هَٰذِهِ الشَّجَرَةِ إِلَّا أَن تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا
مِنَ الْخَالِدِينَ
وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ.
فَدَلَّاهُمَا بِغُرُورٍ
ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ
عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ ۖ وَنَادَاهُمَا رَبُّهُمَا أَلَمْ أَنْهَكُمَا
عَن تِلْكُمَا الشَّجَرَةِ وَأَقُل لَّكُمَا إِنَّ الشَّيْطَانَ لَكُمَا عَدُوٌّ مُّبِينٌ
எனினும் அவ்விருவருக்கும்
மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான்
அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள்
புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.
நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து
கூறினான்.
. இவ்வாறு, அவன் அவ்விருவரையும்
ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான்
- அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள்
அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின்
இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள்
இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை
விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான்
உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.
கவனமின்மியால் ஈமான் கிடைக்காமல் போனது
ابن جرير عن محمد بن قيس
قال : قالت امرأة فرعون { قرة عين لي ولك لا تقتلوه } قال فرعون : قرة عين لك ، أما
لي فلا قال محمد
விழிப்புணர்வு இல்லாமையால்
அழிந்த பிர்அவ்னிடமும் அவனுடைய மனைவியான ஆசியாவிடமும் நைல் நதியில் மிதந்து வந்த குழந்தையான மூஸா நபியை கொடுத்த பொழுது பிர்அவ்ன் சொன்னான்
உனக்கு வேண்டுமானால் கண் குளிர்ச்சி அந்த குழந்தையில் கிடைக்கலாம் எனக்கு அந்த குழந்தையிடம் எனக்கு எந்த தேவையும் இல்லை அது எனக்கு கண் குளிர்ச்சியாக அமையப்போவதும் இல்லை என்று சொன்னான்.
: قال رسول الله صلى الله عليه وسلم « لو قال فرعون قرة
عين لي ولك لكان لهما جميعا
நபி(ஸல்)
அவர்கள் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன் மூஸா நபியால் தனக்கு கண் குளிர்ச்சி கிடைப்பதை மனைவி ஒப்புக் கொண்டதைப் போல் பிர்அவ்னும் ஒப்புக் கொண்டிருந்தால் அவர் மனைவிக்கு அல்லாஹ் ஹிதாயத் வழங்கியதைப் போன்று பிர்அவ்னுக்கும் ஹிதாயத் வழங்கியிருப்பான் பிர் அவ்ன் கவனமில்லாமல் இந்த குழந்தையால் எனக்கு கண்குளிர்ச்சி கிடைக்காது என்று சொன்னதால் அவனுக்கு ஈமானின் பாக்கியம் கிடைக்கவில்லை என்பதுடன் அவன் நைல் நதியில் அழிந்து போக வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
عن أبي هريرة قال : قال
رسول الله صلى الله عليه وسلم : " لا يلدغ المؤمن من جحر مرتين " . متفق
عليه
ஒரு
முஃமின் ஒரே பொந்தில் இரண்டு தடவை கொட்டப்படமாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல். புகாரி.
முஸ்லிம்
தொழுகையில் கவனம்.
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
. அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்
وقال النبي صلى الله عليه
وسلم " من صلى ركعتين لم يحدث نفسه فيهما بشيء من الدنيا غفر له ما تقدم من ذنبه
உலக
விஷயம் எதுவும் தன் உள்ளத்தில் தோன்றாத நிலையில் எந்த மனிதன் இரண்டு ரகஅத் தொழுகின்றானோ அவனின் கடந்தகால பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்.
இஹ்யா
قال صلى الله عليه وسلم
" لا ينظر الله إلى صلاة لا يحضر الرجل فيها قلبه مع بدنه
எந்த
தொழுகையில் மனிதன் உடலுடன் உள்ளத்தை ஆஜராக்கவில்லையோ அந்த தொழுகையை அல்லாஹ் பார்க்கவும் மாட்டான். ஏற்கவும் மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்.
இஹ்யா.
ويروى عنه أنه كان يصلي
يوماً في جامع البصرة فسقطت ناحية من المسجد فاجتمع الناس لذلك فلم يشعر به حتى انصرف
من الصلاة
முஸ்லிம்
இப்னு யஸார் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் பஸராவில் உள்ள ஜூம்ஆ மஸ்ஜிதில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்பொழுது பழமையான அந்த பள்ளியின் சுவற்றில் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது. அந்த சப்தம் கேட்டு மக்கள் எல்லோரும் அங்கே ஒன்று சேர்ந்துவிட்டார்கள். ஆனால் முஸ்லிம்(ரஹ்) அவர்களோ தொழுதுமுடிக்கும் வரை அதை உணரவில்லை.
நூல். இஹ்யா.
விழிப்புணர்வும் நபியின் வெற்றியும்.
قَالَ ابْنُ إسْحَاقَ :
ثُمّ رَجَعَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ إلَى أَصْحَابِهِ فَلَمّا
أَمْسَى بَعَثَ عَلِيّ بْنَ أَبِي طَالِبٍ ، وَالزّبَيْرَ بْنَ الْعَوّامِ ، وَسَعْدَ
بْنَ أَبِي وَقّاصٍ ، فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ إلَى مَاءِ بَدْرٍ يَلْتَمِسُونَ
الْخَبَرَ لَهُ عَلَيْهِ - كَمَا حَدّثَنِي يَزِيدُ بْنُ رُومَانَ ، عَنْ عُرْوَةَ
بْنِ الزّبَيْرِ - فَأَصَابُوا رَاوِيَةً لِقُرَيْشٍ فِيهَا أَسْلَمَ ، غُلَامُ بَنِي
الْحَجّاجِ وَعَرِيضٌ أَبُو يَسَارٍ ، غُلَامُ بَنِي الْعَاصِ بْنِ سَعِيدٍ فَأَتَوْا
بِهِمَا فَسَأَلُوهُمَا ، وَرَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ قَائِمٌ
يُصَلّي ، فَقَالَا : نَحْنُ سُقَاةُ قُرَيْشٍ ، بَعَثُونَا نَسْقِيهِمْ مِنْ الْمَاءِ
. فَكَرِهَ الْقَوْمُ خَبَرَهُمَا ، وَرَجَوْا أَنْ يَكُونَا لِأَبِي سُفْيَانَ فَضَرَبُوهُمَا
. فَلَمّا أَذْلَقُوهُمَا قَالَا : نَحْنُ لِأَبِي سُفْيَانَ فَتَرَكُوهُمَا . وَرَكَعَ
رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ [ ص 617 ] وَسَجَدَ سَجْدَتَيْهِ ثُمّ
سَلّمَ وَقَالَ إذَا صَدَقَاكُمْ ضَرَبْتُمُوهُمَا ، وَإِذَا كَذَبَاكُمْ تَرَكْتُمُوهُمَا
، صَدَقَا ، وَاَللّهِ إنّهُمَا لِقُرَيْشِ أَخْبِرَانِي عَنْ قُرَيْشٍ ؟ قَالَا :
هُمْ وَاَللّهِ وَرَاءَ هَذَا الْكَثِيبِ الّذِي تَرَى بِالْعُدْوَةِ الْقُصْوَى -
وَالْكَثِيبُ الْعَقَنْقَلُ - فَقَالَ لَهُمَا رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ
وَسَلّمَ كَمْ الْقَوْمُ ؟ قَالَا : كَثِيرٌ قَالَ مَا عِدّتُهُمْ ؟ قَالَا : لَا نَدْرِي
؛ قَالَ كَمْ يَنْحَرُونَ كُلّ يَوْمٍ ؟ قَالَا : يَوْمًا تِسْعًا ، وَيَوْمًا عَشْرًا
، فَقَالَ رَسُولُ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ الْقَوْمُ فِيمَا بَيْنَ
التّسْعِ مِئَةٍ وَالْأَلْفِ
அலி
(ரலி) அவர்கள் சொன்னார்கள். நாங்கள் நபியுடன் பத்ரு போருக்கு சென்ற போது அங்கே குரைஷி காபிரான ஒருவரையும். உகபதிப்னு அபீமுயீதின் அடிமை ஒருவரையும் பெற்றுக்கொண்டோம் அவர்களிடம் நாங்கள் எதிர்படையின் எண்ணிக்கையை விசாரித்தோம்.( அதற்கு ஏற்ப போர்திட்டம் வகுத்துக்கொள்வதற்காக) அவர்களோ எண்ணிக்கையை சொல்ல மறுத்தனர். நபியும் கேட்டுபார்த்தார்கள் சொல்லமறுத்தனர். இறுதியாக நபியவர்கள் இவ்வாறு கேட்டார்கள். நீங்கள் உங்கள் படையின் எண்ணிக்கையை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் படைவீரர்களின் உணவுக்காக ஒரு நாளைக்கு எத்தனை ஒட்டகம் அறுக்கப்படுது அதையாவது சொல்லுங்கள். அவர்கள் சொன்னார்கள். ஒன்பது. அல்லது பத்து ஒட்டகம் அறுக்கப்படுது என்று சொன்னார்கள். உடனே நபியவர்கள் அவர்களை அனுப்பிவிட்டு தோழர்களிடம் கூறினார்கள்.ஒரு ஒட்டகத்தை நூறு நபர்கள் சாப்பிடலாம் அதை கவனித்தால் 900 அல்லது 1000 நபர்கள் இருக்கலாம் என்றார்கள்.
நூல்.
சீரத் இப்னு ஹிசாம்.
துஆவும் விழிப்புணர்வும்.
இன்று
நம்முடைய பல நாட்டங்கள் நிறைவேறாமல் போவதற்கும் அல்லது எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக நடப்பதற்கு
துஆவின் கவனக்குறைவு ஒரு முக்கிய காரணம்.
பனீ
இஸ்ராயீல் காலத்தில் இரு மனிதர்கள் வணக்கசாலியாகவும் இருவரும் வணக்கத்தில் சமநிலையைப் பெற்றவர்களாகவும் இருந்தார்கள் இருவரும் மரணித்த பொழுது அவர்கள் சொர்க்கத்தில் நுழைக்கப்பட்டார்கள் இருவரில் ஒருவருக்கு சொர்க்கத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தும் மற்றொருவருக்கு சாதாரண அந்தஸ்தும் வழங்கப்பட்டது அப்பொழுது சாதாரண அந்தஸ்து வழங்கப்பட்டவர் அல்லாவிடம் கேட்டார் இறைவா இந்த மனிதர் என்னை விடவும் அதிகமாக ஒன்றும் வணங்கவில்லைஇந்த நிலையில் நீ அவருக்கு மட்டும் علين என்ற
சொர்க்கத்தை கொடுத்திருக்கின்றாயே என்ன காரணம் என்று கேட்ட பொழுது அல்லாஹ் சொன்னான் அவர் என்னிடம் துஆ செய்த பொழுது உயர்ந்த அந்தஸ்தை கேட்டார் ஆனால் நீ துஆ கேட்கும் பொழுது நரக விடுதலை தந்தால் போதும் என்று தான் துஆ கேட்டாய்
ஒவ்வொரு நபருக்கும் கேட்டதை கொடுத்தேன் என்றான்
நூல். இஹ்யா. பாகம். 4
தஹஜ்ஜத் தொழுகையும் விழிப்புணர்வும் மற்ற தொழுகையை விட தஹஜ்ஜத்திற்கு கூடுதல் சிறப்பு கிடைக்கும் காரணம் அது
விழிப்புணர்வின் உச்சநிலை என்பதால் தான்
وقال صلى الله عليه وسلم
" عليكم بقيام الليل فإنه دأب الصالحين قبلكم. فإن قيام الليل قربة إلى الله عز
وجل وتكفير للذنوب ومطردة للداء عن الجسد ومنهاة عن الإثم
இரவு
தொழுகையை (தஹஜ்ஜத்) பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு முன்னர் வாழ்ந்த நல்லவர்களின் பழக்கமாகும் நிச்சயமாக இரவு தொழுகை அல்லாஹ்வின் நெருக்கம் தரும் பாவங்களின் பரிகாரமாகும்.. நோயை விரட்டக் கூடியதாகவும் பாவங்களை தடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
நூல். இஹ்யா
أنه كان على عهد النبي صلى
الله عليه وسلم رجل إذا أخذ الناس مضاجعهم وهدأت العيون قام يصلي ويقرأ القرآن ويقول:
يا رب النار أجرني منها، فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال: إذا كان ذلك فآذنوني
فأتاه فاستمع فلما أصبح قال: يا فلان هلا سألت الله الجنة؟ قال: يا رسول الله إني لست
هناك ولا يبلغ عملي ذاك فلم يلبث إلا يسيراً حتى نزل جبرائيل عليه السلام وقال: أخبر
فلاناً أن الله قد أجاره من النار وأدخله الجنة
நபியின் காலத்தில் வாழ்ந்த ஒரு ஸஹாபி மக்கள் படுக்க ஆரம்பித்து விட்டால் அவர்களின் கண்கள் உறங்கி விட்டால் அவர் தொழ ஆரம்பித்து விடுவார். குர்ஆன் ஓதுவார் காலைவரை வணக்கத்தில் ஈடுபட்டுவிட்டு அல்லாஹ்விடம் நரகத்தின் ரப்பே என்னை நரகத்தைவிட்டும் காப்பாற்று என்று துஆ கேட்பார் இந்த செய்தியை ஸஹாபாக்கள் நபியிடம் சொன்னபோது நபியவர்கள் அவர் தொழுதால் என்னிடம் தெரியப்படுத்துங்கள் என்று ஸஹாபாக்களிடம் சொன்னார்கள். அவ்வாரு ஒரு நாள் அறிவித்தபோது நபியவர்கள் அவரிடம் வந்து அவரை கவனித்தார்கள். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் அல்லாஹ்விடம் சொர்க்கத்தை கேட்கவில்லையே ஏன். அவர் சொன்னார் அந்த தகுதி எனக்கு இல்லை. எனது அமலும் அந்த நிலையை அடையவில்லை என்றார். சற்று நேரத்தில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வருகை தந்து சொன்னார்கள். நபியே இந்த மனிதருக்கு தாங்கள் அறிவித்துவிடுங்கள் அவரை அல்லாஹ் நரகைவிட்டும் காப்பாற்றி சொர்க்கத்தில் நுழைத்திவிட்டான் என்று.
நூல்.
இஹ்யா.
தஹஜ்ஜத்துக்கு
விழிக்க நபி சொன்ன இழகுவான வழி
وفى الحديث « اللهم لا تؤمنا
مكرك ولا تنسنا ذكرك ولا تهتك عنا سترك ولا تجعنا من الغافلين » وعنه عليه السلام
« من قال عند منامه هذا الدعاء بعث الله اليه ملكا فى احب الساعات اليه فيوقظه
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் اللهم لا تؤمنا مكرك ولا تنسنا ذكرك ولا تهتك عنا
سترك ولا تجعنا من الغافلين »
இந்த துஆவை தூங்கும்போது ஓதிக்கொள்கிறார்களோ அவரை விரும்பிய நேரம்
விழிக்க வைப்பதற்காக ஒரு மலக்கை அல்லாஹ் அனுப்பிவைக்கிறான் அந்த மலக்கானவர் அவரை எழுப்பிவிடுவார்
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல். தப்ஸீர் ரூஹுல் பயான்.
அருமையான ப்பதிவு அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteஅருமையான ப்பதிவு அல்ஹம்துலில்லாஹ்
ReplyDeleteSpr
ReplyDelete